க. பொ. த சாதாரண தரம் 2014 பரீட்சைப் பெறுபேறுகளில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொண்டது.

flaganimation2

இன்று (30-03-2015) வெளியான க. பொ. த சாதாரண தரப் பரீட்சை 2014க்கான பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பான பெறுபேறுகளை (5A உம் அதற்கு மேற்பட்ட) 6 மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். அம்மாணவர்களின் விபரம்.


1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S

2. குகநேசன் கோபிதா 7A 1S

3. தியாகராஜா சயந்தன் 6A 3B

4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C 

5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S

6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S

 

மேலும் 

 

7. கருணேஸ்வரன் ஜெயமதுசன் 4A 3B 2S

8. தயாபரன் திருமகள் 4A 3B 1C 1S

9. பாலேந்திரன் கவிதா 3A 1B 3C 2S

10. கிருபானந்தன் அஜந்தன் 3A 1B 2C 2S


க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் 5A உம் அதற்குக் கூடிய பெறுபேறுகளையும் 6 மாணவர்கள் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று 74.07% ஆன மாணவர்கள் க. பொ. த உயர்தரம் கற்பதற்குப் பூரணமான தகைமையைப் பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 12% இனால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது கல்லூரியின் நீண்ட கால இடைவெளியின் பின்னர் க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பெற்றுக் கொண்ட ஒரு வெற்றியாகும். இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார்.

 

2014ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையிலும் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்தமையை இவ்விணையத்தளம் மூலம் பார்த்திருப்பீர்கள்.