கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டமும் புதிய தேர்தல் முறையும் பற்றி திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல் • 

 

  • பொதுக் கூட்ட திகதி பெப்ரவரி 24,2013 இற்கு பிற்போடப்பட் காரணத்தினால், புதிய நிர்வாக சபையின் பதவிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி பெப்பிரவரி 20, 2013 நள்ளிரவு 12:00 மணி வரை பிற்போடப்பட்டுள்ளது.
  • • பொதுக் கூட்டத்தில் பங்குபற்றும் விண்ணப்பதாரிகளும், வாக்காளர்களும் பொதுக் கூட்டத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அங்கத்துவ பணம் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். (யாப்பு விதி. 2.001-2.0010, 3.001)

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 2013-2014 காலப்பகுதிக்காகத் தெரிவு செய்யப்படும் புதிய நிர்வாக சபை, ஜனநாயக வழியிலும், ஒவ்வொரு உறுப்பினரும் தமது பூரண சுயவிருப்பத்துடனும் தமது சேவையை வழங்க முன்வருவதற்கும் வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியே திட்டமிடல் போசகர் சபையினால் காரைநகருடன் தொடர்புடைய கனடா வாழ் பொதுமக்களிடமிருந்து புதிய நிர்வாக சபையின் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை நீங்கள் அறிந்ததே.

 

இந்தப் புதிய தேர்தல் முறை திட்டமிடல் போசகர் சபையினால் முன்மொழியப்பட்டு நடப்பு நிர்வாக சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முதன் முறையாக இந்த ஆண்டு பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு வருகின்றது. இது பற்றிய உங்கள் கருத்துக்கள் ckcapatron@gmail.com மின்னஞ்சலிலோ (416)754 2669 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக வரவேற்கப்படுகின்றன.

 

புதிய தேர்தல் முறையில் உள்ள நன்மைகள்

 

  1.  மக்களாட்சி விழுமியங்களை மதித்து ஆர்வமும், தகுதியும் உள்ள எவரும் பங்குபற்றக் கூடிய ஒரு திறந்த வழிமுறையாகும்.
  2. சேவையாற்ற முன்வரும் ஒவ்வொருவரும் தமது பூரண சுயவிருப்பத்துடன் விண்ணப்பிக்கும்; சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
  3. பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் போது தம்மைத் தெரிவு செய்யமாட்டார்கள் என்ற ஏமாற்றத்தையும், தம்மைத் தெரிவு செய்து விடுவார்கள் என்ற அச்சத்தையும் தவிர்க்கலாம்.
  4.  இந்த அமைதியான தேர்தல் முறையினால் கூடுதலான மக்கள் பொதுக் கூட்டங்களில் பங்கு பற்றும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அந்த வகையில், மன்ற யாப்பின் சரத்து 3.003 இற்கு அமைவாக தலைவர், உப-தலைவர், செயலாளர், உப-செயலாளர், பொருளாளர், உப-பொருளாளர்,; ஐந்து நிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்;து தயார்நிலை உறுப்பினர்கள், மற்றும் மூன்று திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. குறித்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் காரைநகருடன் தொடர்புடைய கனடா வாழ் பொதுமக்களிடமிருந்து கோரப்படுகின்றன.

 

விண்ணப்பதாரிக்கு இருக்கவேண்டிய தகமைகள்:

  1.  கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் பொதுக் கூட்டத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் மன்ற அங்கத்துவ பணம் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். (யாப்பு விதி. 2.001-2.0010, 3.001)
  2. மன்ற யாப்புவிதி ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டவராகவும், மன்றத்தை மதித்து நடந்து கொள்பவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்பு விதி. 2.009)
  3. மன்ற யாப்பின் வழிகாட்டலின் படி மன்றத்திற்குக் களங்கம், தேவையற்ற பொருட்செலவு ஏற்படாவண்ணம், மன்றத்தின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மன்றத்தை வழிநடத்துபவாராக இருத்தல் வேண்டும். (யாப்பு விதி 3.003)
  4. மன்றத்தின் திட்டமிடல் போசகர் சபையை மதித்து அச்சபை வழங்கும் ஆலோசனைகளை செவிமடுத்து கேட்கும் மனப்பக்குவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்பு விதி 4.005)
  5. சேவை மனப்பான்மையும், நம்பகத்தன்மையும், ஒருவரை மதித்து நடந்து கொள்ளும் பண்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.
  6. மன்ற வழமைகளையும், எமது ஊரின் பெருமையையும் பேணி நடந்து கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.
  7. மன்றத்தின் கொள்கைகளும் நோக்கம்களும் கண்டிப்பாக பின்பற்றும் கடப்பாடு உடையவராக இருத்தல் வேண்டும். (யாப்பு விதி 1.001- 1.0012)

தேர்தல் விதி முறைகள்:

குறிப்பிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள் கீழ்க் காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பெப்ரவரி 20, 2013 நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னர் ckcaelection2013@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கத்தக்கவாறு அனுப்பி வைத்தல் வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி இல்லாதவர்கள் (416)754 2669 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

  1. விண்ணப்ப முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களோ,  வேறு மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்களோ, பொதுக் கூட்டத்தின் போது நேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  2. விண்ணப்பதாரி பொதுக் கூட்டத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அங்கத்துவ பணம் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். (யாப்பு விதி. 2.001-2.0010, 3.001)குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.
  3. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
  4. மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.
  5. விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து விண்ணப்பதாரிக்கு அறியத்தரப்படும். அல்லாதவிடத்து கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளவும்.
  6. விண்ணப்ப முடிவு திகதிக்குப் பின்னர் விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் மன்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

 

ஏற்கனவே கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் குறித்து விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுடன் ஜனநாயக வழியில் பயணிக்க உங்கள் சுயவிருப்பத்துடன் முன்வந்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் எமது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

மேலதிக தொடர்புகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்: ckcapatron@gmail.com

(416)754 2669

 

நன்றி திட்டமிடல் போசகர் சபை

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பினைப் பார்வையிட இங்கே அழுத்துக.

1 comments

    • முகுந்தன் on February 14, 2013 at 7:26 am

    CKCAயின் போசகர்சபை தேர்தல் மூலம் இனிவரும்காலங்களில் கனடாகாரைமக்கள் கலந்து நல்லதொரு நிர்வாகம் அமைய சந்தர்ப்பம் வழங்கி உள்ளார்கள்

Comments have been disabled.