அல்லாதனவற்றை ஆராய்ந்து சொல்லாத குற்றம்!

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்,
பிருத்தானியா.
12.02.2013.

அல்லாதனவற்றை ஆராய்ந்து சொல்லாத குற்றம்!

காரை நியூஸ் அல்லது எனது ஊர் காரைநகர்  இணையத் தளத்தின் அன்பிற்குரிய தீசனுக்கும், தளத்தை வாசித்து வரும் எம் ஊரவர்களுக்கும் வணக்கம்.
கனடா காரைநகர் இணையத் தளத்திற்கு எம்மால் அனுப்பப்பட்ட செய்தியை, ‘காரைக் கதம்பம் 2013 ஒரு பார்வை’ என்ற மகுடத்தின் கீழ், மீள் பிரசுரித்தமைக்கு முதலில் நன்றிகள்.  காரைக் கதம்பத்தில் பங்கேற்காத காரை அன்பர்களுக்கு உங்கள் தளத்தின் ஊடாகவும் செய்திகளை தெரிவித்தமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்! காரைநகர் இணைய தளத்தில் எமது செய்தியின் நிறைவில் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை இணைத்திருந்தோம். அந்த வரியை நீக்கிவிட்டு காரைக் கதம்பத்தை ‘ஒரு’ பார்வை பார்த்திருக்கிறீர்கள். நிற்க!

உங்கள் மீள்பிரசுரத்தின் கீழே வெளியிடப்பட்ட துண்டுச் செய்தி குறித்து உடனடியாகப் பதில் தர வேண்டிய தேவை எமது நிர்வாக சபைக்கு எழுந்திருக்கிறது. அந்தத் துண்டுச் செய்தியை ஒரு விமர்சனமாகவோ கருத்தாகவோ எம்மால் பார்க்க முடியவில்லை.   உங்களுக்கு நெருக்கமான ஒரு தனி மனிதனின் சொறி சிரங்கிற்கு நீங்கள் மருந்து பூசி இருப்பதாவே கருத இடமிருக்கிறது. உங்கள் இணையத் தளத்திற்கு புல்லரிப்புச் செய்திகளை தரக் கூடிய ஒரு லண்டன் வாசிக்கு நீங்கள் இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி? என்று நினைத்திருப்பீர்கள்.

அன்பின் தீசனுக்கு, நீங்கள் வெளியிட்ட அந்தத் ‘துண்டு’ ச் செய்தி தந்தவரை நாம் அறிவோம். மிக ஆழமாகவே அறிவோம். உங்கள் வார்த்தையில் சொல்வதானால் கடும் ஆராய்வுக்குப் பிறகு குறித்த நபரைக் கண்டறிய வேண்டிய தேவை, பிரித்தானியாவில் சமூக வாழ்வில் இருக்கும் யாருக்கும்  கிடையாது.

எமது பொங்கல் விழாவிற்கு நிர்வாக சபையை சேர்ந்த ஒருவர் மட்டுமே சமூகம் அளிக்கவில்லை.  அவர் நிர்வாகத்திற்கு கூறிய காரணத்தையே காரை நியூஸ் இணையத்தளத்திலும் பதிவு செய்துள்ளார் என்பதை கண்கூடாகக் காண முடிகின்றது. அவரைத் தவிர எந்த ஒரு நிர்வாகசபை உறுப்பினரும் தன்னிச்சையாக இங்கு முடிவெடுப்பதும் இல்லை, எதனையும் நடைமுறைப்படுத்துவதும் இல்லை. எமது சபையைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் இதனை அறிவார்கள்.
மேற்குறிப்பிட்ட அல்லது உங்களுக்குச் செய்தி தந்த நிர்வாகசபை உறுப்பினர்,

கடந்த 16 ஆண்டு காலத்துக்கும் மேலாக  அபசகுனம் பிடித்த ஒரே பல்லவி சரணத்தை மனப்பாடமாக பாடி வருகின்றார். அது மட்டுமன்றி மன்றத்தின் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும், பொது நிகழ்வுகளிலும் அவதூறு செய்வதையே தன் பிறவிக் கடனாக ஆற்றி வருகிறார். அதற்குமப்பால்  தனது ஓய்வு நேர உற்சாகத்தில், தொலைபேசி அழைப்புகள் மூலம் மன்றத்திற்கு அவதூறு விளைவிக்கும் பலப்பல நடவடிக்கைகளில் காலம் காலமாக ஈடுபட்டுவருகின்றார். அவற்றில் ஒன்றுதான் காரை நியூசிற்கு இப்போது அவர் தந்திருக்கும் செய்தியும்.

பொதுவாக ஒரு பொது அமைப்பில் ஒருவர் பங்கேற்கும் பொழுது, பொது நலம் கருதிய சுய ஒழுக்கம் மிக முக்கியம். இதனை எந்தஒரு நிர்வாகசபை உறுப்பினரோ, அல்லது அங்கத்தவரோ கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில், குறித்த நிர்வாகங்கள் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை அவர்மேல் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

காரை நியூஸ் இணையத்தளம் ஒருபக்கச்  சார்பானதும் புலம்பெயர் காரை அமைப்புக்களுக்கு எதிரானதுமான செய்திகளைக் குறித்த நிர்வாகத்தோடு கலந்துரையாடாது பிரசுரிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்யத் தவறிய ஒரே ஒரு காரணத்தால்தான், அடிக்கடி பொது மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழலில் காரை நியூஸ் இணையத்தளம் இருக்கிறது என்பதை மிகப் பணிவோடு தெரிவிக்க வேண்டி இருக்கிறது.

‘தன்னிச்சை’ என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாக ‘கனடா காரை கலாசார மன்றத்தனம்’ என்று போடுகிற, உங்கள் எழுத்துமுறைகளை மாற்றாமல், மற்றவர்களின் விதண்டாவாதம் அல்லது பிடிவாதம் மாறாது என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள்?

காரைநகர் மக்களுக்கான உங்கள் சேவை, நல்லவகையில் தொடரவேண்டும் என்றே நாம் மனப்பூர்வமாக விரும்புகிறோம். நீங்களோ கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கலாம் என்று ஆசைப்படுகிறீர்கள்.

நன்றி
பிருத்தானியக் காரை நலன் புரிச்சங்க நிர்வாகத்தினர்.

9 comments

Skip to comment form

    • karaimainthan on March 2, 2013 at 11:20 am

    • பொதுக்குழுவில் பேச்சுரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எமது ஊர் எமது மக்கள் நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். எங்களின் குடும்பத்தின் நடுவே ஏன் காவல் அதிகாரி?

    • siva on February 17, 2013 at 2:36 pm

    ஏன் ஒரு ஊடகத்தோடு அமைப்புக்கள் முரன் படுகிறீர்கள் என்று விளங்கவில்லை.அதில் வரும் செய்திகள் சரியோ தவறோ வாசிப்பவர்கள் முடிவெடுப்பார்கள், உங்கள் ஆதங்களை அந்த இணைய ஆசிரியருக்கே எழுதி தவறுகளை கண்டணத்தோடு வெளியிட சொல்லலாம்.அதை விடுத்து தனிப்பட்ட முறையில் அவரை வசை பாடுவது தவறு. அவர் எழுதி வரும் ஆக்கங்கள் தவறு என்பவர்கள் இன்றுவரை வந்து பதில் சொல்லி அந்த இணைய செய்தியை மறுக்க முன்வரவில்லை.
    எனவே உண்மைகள் இருக்கலாம் இல்லாமல் போகலாம் .விமர்சனங்கள் ஏற்க பட வேண்டும் ..தயவு செய்து தனிப்பட்ட அவரை மதிக்காத செய்கைகள் கூடாது, அவர் தனக்கு சரி என்று தன் கடமையை செய்கிறார், நீங்களும் அது போல் நடந்து கொள்ளுங்கள்

    • Kayalvili on February 16, 2013 at 9:33 pm

    திருவாளர் தீசன் திரவியநாதன் காரை மக்களை ஏமாற்றி கழைத்துவிட்டார் அதனால் தனது இணையத்தளத்தை மூடிக்கொண்டார

    • karai tamil makkl on February 16, 2013 at 7:31 am

    கேனத்தனமான
    கேனத்தனமான
    கேனத்தனமான ராஜபக்சேவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்.நல்ல மரங்கள் நல்ல கனிகளைக் கொடுக்கும்; நல்ல மக்கள் நல்லதையே செய்வார்கள்

  1. படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து தானே துப்புகின்றார்கள். போனால் போகட்டும் விட்டுவிடுங்கள். உங்கள் பெயரைகூட சொல்ல முடியாத உங்களால் எவன் எங்க துப்பினால் உங்களிற்கு என்னவென்று பெருந்தன்மையோடு விட்டுவிடுங்கள். பாவம் அறியாமல் அவன் வானத்துக்கு எங்க முகமிருக்கு எங்க மூளை இருக்கு என்று தெரியாமல் துப்புகிறான்? உங்களிற்கு தெரிந்தால் சொல்லியனுப்புங்கள் அங்கை பார்த்து துப்ப சொல்லலாம்.
    தீசன் திரவியநாதன்

    • காரை அன்பன் on February 15, 2013 at 12:59 pm

    படுத்திருந்து வானத்தைப் பார்த்து துப்புகிறீர்கள்.

  2. செய் அல்ல செத்துமடி -காந்தி —-

    • karainalanvirumy on February 13, 2013 at 11:13 pm

    காரை மக்களே வெளிச்சத்துக்கு வாருங்கள்

    இன்று லண்டன் காரை நலன் புரிச்சங்கத்தினால் காரைநீயூஸ் இணையத்தளத்திற்கு விடுக்கப்பட்ட செய்தியைப் பார்த்தேன். நான் ஒரு காரைநகரான் என்ற வகையில் காரைநகர்.கொம், காரைநீயூஸ் ஆகிய இணையத்தளங்களைப் பார்வையிட்டு வருகின்றேன்.

    இவர்கள் வெளியிட்ட செய்தி நூற்றுக்கு நூறு வீதம் உண்மையென்பதை நான் மட்டுமல்ல இணையத்தளங்களைப் பார்வையிடும் அனைத்துக் காரைநகர் மக்களுக்கும் புரியும் என்பது உண்மை. காரைநகர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் செய்திகள் வெளியிடும் காரைநீயூஸ் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும்.

    அத்துடன் அந்த இணையத்தளத்திற்கு செய்திகளைக் கொடுப்பவர்கள் தாங்கள் காரைநகரில் பிறக்கவில்லை என்பதை மறந்திருக்கும் பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் இதை உணரவேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் காரை மக்கள் ஏதோ ஒருவகையில் காரைநகரில் வாழும் எம் உறவுகளுக்கு உதவவேண்டும் என்ற ஆதங்கத்தில் மன்றங்கள் அமைத்து காரைநகரில் உள்ள தாய்ச்சங்கமான காரை அபிவிருத்திச்சபையூடாக எல்லா உதவிகளையும் செய்து வருகின்றார்கள்.

    ஆனால் காரை நீயூஸ் இணையத்தளமோ தான் தான் படம் காட்டுகிறேன் உண்மை சொல்கின்றேன் என்று கூறி மன்றங்களையும் எம் மக்களையும் குறை கூறுவதினால் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே கனடாவில் இயங்கும் காரை கலாச்சார மன்றம் காரை நீயூஸ் இணையத்தளத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலக காரை மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

    • காரை on February 13, 2013 at 9:39 pm

    வய் திஸ் கொலைவெறி திசனுடன்?

Comments have been disabled.