Category: யா/ யாழ்ற்ரன் கல்லூரி

தீவக வலய மட்டத்திலான 2014 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான ஆய்வுகூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி Best Laboratory Award விருதினைப் பெற்றுக் கொண்டது

தீவக வலயத்திலுள்ள இடைநிலைப் பாடசாலைகளிலுள்ள (தரம் 6-13) விஞ்ஞான ஆய்வுகூடங்களை சிறந்த முறையில் பேணும் பாடசாலைகள் 10 இனை தீவக வலயக் கல்விப்பணிமனை தெரிவு செய்துள்ளது.

அப்பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரியும் சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பேணுவதற்கும் மாணவர்கள் சிறந்த முறையில் அதனைப் பயன்படுத்துவதற்குமான Best Laboratory Award விருதினை (2014 ஆம் ஆண்டுக்கான) பெற்றுக்கொண்டது.

V. Murugamoorthy

Principal

Yarlton College

Award

 

க. பொ. த சாதாரண தரம் 2014 பரீட்சைப் பெறுபேறுகளில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொண்டது.

flaganimation2

இன்று (30-03-2015) வெளியான க. பொ. த சாதாரண தரப் பரீட்சை 2014க்கான பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பான பெறுபேறுகளை (5A உம் அதற்கு மேற்பட்ட) 6 மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். அம்மாணவர்களின் விபரம்.


1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S

2. குகநேசன் கோபிதா 7A 1S

3. தியாகராஜா சயந்தன் 6A 3B

4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C 

5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S

6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S

 

மேலும் 

 

7. கருணேஸ்வரன் ஜெயமதுசன் 4A 3B 2S

8. தயாபரன் திருமகள் 4A 3B 1C 1S

9. பாலேந்திரன் கவிதா 3A 1B 3C 2S

10. கிருபானந்தன் அஜந்தன் 3A 1B 2C 2S


க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் 5A உம் அதற்குக் கூடிய பெறுபேறுகளையும் 6 மாணவர்கள் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று 74.07% ஆன மாணவர்கள் க. பொ. த உயர்தரம் கற்பதற்குப் பூரணமான தகைமையைப் பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 12% இனால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது கல்லூரியின் நீண்ட கால இடைவெளியின் பின்னர் க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பெற்றுக் கொண்ட ஒரு வெற்றியாகும். இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார்.

 

2014ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையிலும் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்தமையை இவ்விணையத்தளம் மூலம் பார்த்திருப்பீர்கள்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா பகல் நிகழ்வுகளும், யாழ்ற்ரன் கல்லூரி அலங்கார வளைவு திறப்புவிழா வைபவமும்

DSC_0247

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா 21.02.2015 சனிக்கிழமை  வெகு விமரிசையாக பக்தி பூா்வமாக1008 கலசாபிஷேகம் மூலஸ்தான அம்பாளுக்கும்,1008 சங்காபிஷேகம் எழுந்தருளி அம்பாளுக்கும் வடஇலங்கை பிரபல நாதஸ்வர தவில் வித்துவான்கள்  நாதஸ்வரகான மழை பொழிய பெரும்திரளான பக்தா்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது.

மண்டல பூா்த்தி விழாவின் உபயகாரா் தெய்வீகதிருப்பணிஅரசு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது .தொடா்ந்து மாலை  3.30 மணிக்கு ஆலயத்தின் கிழக்குப்புறமாக உள்ள திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களின் நிலத்தில் கலை, கலாச்சார வகுப்புக்களை நடாத்துவதற்கான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இம்மண்டபத்திற்கான அனுசரணையாளா் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அதனைத் தொடா்ந்து 4.30 மணிக்கு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களால் யாழ்ற்ரன் கல்லூரிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பிரதான நுழைவாயில் அலங்கார வளைவும், துவிச்சக்கரவண்டி பாதுகாப்புக் கொட்டகையும்  ஆலய முன்றலிலிருந்து பாடசாலை மாணவா்களின் பான்ட் வாத்தியத்துடன் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன்  பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் உட்பட பிரமுகா்கள் அழைத்துச்செல்லப்பட்டு திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் வைபவத்தில் தனது மகளின் பிறந்ததின நினைவாக வசதி குறைந்த திறமையான 18 மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்புச் செய்தார்.

மாகாண மட்டப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி 3ம் இடம்.

GIZ/ESC நிறுவனத்தினால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட இயற்கை அனர்த்தப்
பாதுகாப்புக்கல்வி கண்காட்சிப்போட்டியில் யா/யாழ்ற்ரன் கல்லூரி 3ம் இடத்தைப்
பெற்றுள்ளது. படத்தில் மாணவர்களுடன் அதிபரும் பொறுப்பாசிரியரும் காணப்படுகின்றனர்.
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி
மனோரஞ்சிதம் ராதாகிருஷ;ணன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.


      இப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர் விபரம்.

சி.ராகுலன்                                                         ப.யாழினி
செ.பிரசாந்தன்                                                  தே.வேணுப்பிரியா
லோ.குருபரன்                                                   ந.ஜெயந்தினி
க.அருட்குமரன்                                                இ.தயாநிதி
ச.ஜீவதாஸ்                                                       நே.சுபனா
ம.கலைச்செல்வன்                                          க. கீர்த்தனா
க.காண்டீபன்                                                     சி.சிவப்பிரியா
யோ.கோபிகா                                                   த.வயூரி
செ.கீர்த்தனா                                                      த.வினோ
த.சங்கவி                                                            சு.தர்மினி

DSC01752

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

DSC_0096 (Copy)

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி  15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தாவும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக்கல்விப் பணிப்பானர் இ.ஜெனால்ட்அன்ரனி,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார்,வர்த்தகர் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் 06/02/2015 வெள்ளிக்கிழமை பி.ப. 2 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் தபாலகத்தின் தபாலதிபர் திரு.தி. சக்திதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

flaganimation2

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினராக வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தாவும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக்கல்விப் பணிப்பானர் இ.ஜெனால்ட்அன்ரனி,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார்,வர்த்தகர் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆண், பெண் இருபாலாருக்குமான  மரதன் ஓட்டப்போட்டிகள் 31-01-2015 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றன.

 

2014 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களுக்கான பாராட்டு விழா 29/01/2015 வியாழக்கிழமை மு.ப. 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

2014 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களுக்கான பாராட்டு விழா 29/01/2015 வியாழக்கிழமை மு.ப. 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்பாராட்டு விழாவுக்கான பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கிக்கிளையின் முகாமையாளர் திரு. வி. விஜயகுமார் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக தீவகக்கல்வி வலய ஆரம்பக்கல்வி சேவைக்கால ஆலோசகர் திரு.மு.கேசவன் அவர்களும், கல்லூரியின் முதல் அதிபர் அமரர் கருணானந்தன் அவர்களின் புத்திரி திருமதி நளாயினி குணநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 மாணவர்களும் நினைவுச்சின்னம்(Momento), மற்றும் புத்தகப்பரிசில் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும் புத்தகப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அதிபர் தனது உரையில் இந்நினைவுச் சின்னங்கள் வழங்குவதற்கு அனுசரணையாளராக இருந்த அமரர். வாரிவளவு கந்தையா கணேசன்(கனடா) அவர்களின் புத்திரி அவர்களுக்கும் புத்தகப் பரிசில் வழங்குவதற்கு அனுசரணையாளராக இருந்த திரு. S. கணநாதன் (உரிமையாளர் – Quency Distributers) அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

DSC01151 DSC01159 DSC01177 DSC01179 DSC01181 DSC01182 DSC01183 DSC01184 DSC01185 DSC01186 DSC01187 DSC01188 DSC01191 DSC01276 DSC01278 DSC01280 DSC01281 DSC01284 DSC01286 DSC01288 DSC01290 DSC01292 DSC01294

 

 

யாழ்ற்ரன் கல்லூரியின் (கோவிந்தர் பாடசாலை) புதிதாகச் சேருகின்ற தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் புதிதாகச் சேருகின்ற தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரியின் ஆரம்பப் பிரிவில்(கோவிந்தர் பாடசாலை) 19-01-2015 அன்று மு.ப. 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கல்லூரியின் ஒய்வுபெற்ற ஆரம்பப்பிரிவு தலைவர் செல்வி. சகுந்தலாதேவி நடராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அண்மையில் வெளியான 2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம்

flaganimation2

1. செல்வி. பிருந்தா அம்பலவாணர்  – கலைப்பிரிவு – 2A 1C

2. செல்வி. கிரிசா இராசநாயகம் – கலைப்பிரிவு – 1A 2B

3. செல்வன் நடேஸ் சோபிதன் – கலைப்பிரிவு – 1A 1B 1C

4. செல்வி அம்பிகா திருலோகநாதன் – கலைப்பிரிவு – 1A 2C

5. செல்வி. சௌமியா யோகராஜா – கலைப்பிரிவு – 1A 1B 1S

6. செல்வி. கல்பனா விஜயரட்ணம் – கலைப்பிரிவு – 1B 2C

7. செல்வி. கிருசாந்தி தியாகராஜா – கலைப்பிரிவு – 1B 1C 1S

8. செல்வி. தெய்வசக்தி கதிர்காமநாதன் – கலைப்பிரிவு – 1B 1C 1S

9. செல்வன். இரட்னராஜா தனுசாந்த் – வர்த்தகப்பிரிவு – 2C 1S

10. செல்வி. கணேஸ்குமேரி பரமநாதன் – வர்த்தகப்பிரிவு – 2C 1S

11. செல்வி. ஜெயவீரலட்சுமி யோகராஜ் – வர்த்தகப்பிரிவு – 2C 1S


26 மாணவர்கள் பரீடசைக்குத் தோற்றி 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகைமை பெற்றுள்ளனர் (69.2%). எனினும் வெட்டுப்புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர் விபரம் இவ்விணையத்தளம் மூலம் வெளியிடப்படும். கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு கூடுதலான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிபர் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் அஞ்சலி, அமரர். கணபதிப்பிள்ளை தில்லையம்பலம்

dff_001

2014 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் (வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டபின்னர்) தீவகவலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னிலையில் திகழ்கின்றது.

flaganimation2

2014 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்மாவட்ட வெட்டுப்புள்ளியை 150ஆக பரீட்சைத் திணைக்களத்தினால் குறைக்கப்பட்ட பின்னர் யாழ்ற்ரன் கல்லூரியில் 9 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாகத் திகழ்ந்து சாதனை படைத்துள்ளது. 

இப்பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் அவர்களைக்கற்பித்த ஆசிரியர்களான திரு.மு.சுகந்தன் திருமதி.வி.புவேந்திரன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.

    2012ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் 2013ஆம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்திலேயே முன்னணியில் இருந்தமையை இவ்விணையத்தளம் மூலம் அறிந்திருப்பீர்கள்.

2014 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் விபரம்

1.    புஸ்பராசா கஜதீபன்                    176
2.    மனோகரன் சுகிர்தா                    163
3.    நவரத்னம் துளசி                          162
4.    அரிகரன் கார்த்திகா                    160
5.    தவராசாஅருண்குமார்               156
6.    சுரேஸ்குமார் கம்சிகா                156
7.    சந்திரசேகரன் அமிர்தா              156
8.    பாலச்சந்திரன் யுவராஜ்             151
9.    பிரபாகரன் ரேந்தினி                   150

OLYMPUS DIGITAL CAMERA

யாழ்ற்ரன் கல்லூரியில் கோலாகலமாக நடந்த பரிசளிப்பு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் 2013ஆம் ஆண்டிற்கான பரிசுத்தினம் 08.10.2014 புதன்கிழமை மு.ப 9.00மணிக்கு  கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில்

 ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதமவிருந்தினராக கொழும்பு நிலஅளவைத்திணைக்கள சிரேஷ்ட நிலளவை அத்தியட்சகர்  yarltonian  திரு.சு.சிவாணந்தராஜா அவர்களும் கௌரவ விருந்தினராக இ.போ.ச கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர்  yarltonian  திரு தி. ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பரிசில் பெறும் மாணவர்களின்பெற்றோர்கள்,பழையமாணவர்கள்,சமூகப்பெரியோர்கள்,வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் மேலும் கலந்து சிறப்பித்தனர். 2013ற்கான அதிபர் அறிக்கை விருந்தினர் உரை மாணவர்களுக்கான பரிசில் வழங்கல்,தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் அணிவித்தல் ஆகியவற்றுடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடனும் 2014ஆம் ஆண்டிற்குரிய சிறந்த அதிபருக்குரிய இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 'பிரதீபா பிரபா'விருது பெற்ற கல்லூரி அதிபர் திரு.வே .முருகமூர்த்தி அவர்கள்; பாரியார் சகிதம் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது. 

1

 

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா 08.10.2014

p

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கட்கு சிறந்த அதிபருக்கான ‘ஆசிரியர் பிரதீபா பிரபா’ விருது

principal0001

2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகளில் காரைநகர் கல்விக்கோட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னணியில் திகழ்கின்றது.

YARLTON COLLEGE-PHOTO

2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகளில் காரைநகர் கல்விக்கோட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னணியில் திகழ்கின்றது. இதில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர்கள், மற்றும் புள்ளிகள் வருமாறு (இணையதளத்தில் வெளியான புள்ளிகளின் படி)
1. புஷ்பராசா கஜதீபன்  – 176 புள்ளிகள் 
2. மனோகரன் சுகிர்தா – 163 புள்ளிகள் 
3. நவரட்ணம் துளசி – 162 புள்ளிகள் 
4. அரிகரன் கார்த்திகா – 160 புள்ளிகள் 

OLYMPUS DIGITAL CAMERA

யாழ்ற்ரன் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் அண்மையில் வெளியான வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 2 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.

YARLTON COLLEGE-PHOTO

யாழ்ற்ரன் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் அண்மையில் வெளியான வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 2 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.
1. செல்வி. கிரிஷா இராசநாயகம்  – கலைப்பீடம் 
2. செல்வி தரங்கினி மகாதேவன் – நுண்கலைப் பீடம்

2014ஆம் ஆண்டு ஆங்கிலதினப்போட்டிகளில் முதல்மூன்று இடங்களில் யாழ்ற்ரன் கல்லூரி

YARLTON COLLEGE-PHOTO

2014ஆம் ஆண்டு ஆங்கிலதினப்போட்டிகளில் முதல்மூன்று இடங்களில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் தீவக வலயத்தில் மொத்தம் 45 இடங்களைப் பெற்று ஏனைய பாடசாலைகளிலும் முன்னிலையில் காணப்படுகின்றனர். அம் மாணவர்களையும் நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திருமதி ஜெயந்தி சிவகுமார், திருமதி சுஜித்தா கிருபாகரன், செல்வி நிறஞ்சினி ஆறுமுகம் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார். 

Mr. V. Murugamoorthy

Principal

Yarlton College

                                                                   

 

          Zonal Level English Language Day Competition Results – 2014

 

Events

Grade

Full Name

Rank

Copy Writing

8

Kiritharan Kajanthini

1

9

Thavaraja Sangavi

2

Script Writing

11

Kuganesan Kobitha

2

12

Somasuntharam Kayavalli

1

Cursive Writing

12

Yogarasa Karunitha

3

Recitation

5

Manokaran Sugirtha

3

7

Senthilnathan Kajaruban

2

8

Selvakumar Nagatheepa

3

9

Senthilnathan Pirasanthan

3

Dictation

3

Selvaraj Tharsika

1

5

Thavaraj Arunkumar

2

7

 

Chandrasegaram Aboorva

1

Senthilnathan Kajaruban

3

8

Nadesan Sivakajan

1

11

Balendran Kavitha

1

Thijagaraja Sayanthan

2

12

Subramaniam Manogari

1

Tharmalingam Arani

2

Creative Writing

6

Kirubaharan Thuvaragan

2

7

Anantharajah Babysamini

1

 

Somasuntharakkurukkal Kirubalini

2

8

Selvakumar Nagatheepa

2

9

Thavaraj Sangavi

1

Selvaratnam Keerthana

2

10

Sureskumar Kajanthan

1

11

Senthilnathan Kamaleswary

1

Thayaparan Thirumagal

3

12

Somasuntharam Kayavalli

1

12

Tharmalingam Arani

3

Reading Aloud

5

Pirabakaran Renthini

3

6

Kirubaharan Thuvaragan

2

7

Chandrasegaram Aboorva

3

9

Nesabalan Subana

2

11

Balendran Kavitha

2

12

Tharmalingam Arani

3

Story Telling

7

Anantharajah Babysamini

1

 

7

Somasuntharakkurukkal Kirubalini

2

9

Senthilnathan Pirasanthan

1

News Reading

12

Subramaniam Manogari

1

Oratory

12

Subramaniam Manogari

2

Role Play

6

 

1

7

 

2

8

 

2

9

 

1

10

 

3

Senior Drama Dialogue

10-13

 

1

 
OLYMPUS DIGITAL CAMERA

யாழ்ற்ரன் கல்லூரியில் சரஸ்வதிசிலை திறப்புவிழா வைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் முன்னால் உள்ள பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கல்லூரியின் பழைய மாணவரும் சிலையை ஸ்தாபிப்பதற்கு தனது முழுமையான பங்களிப்பைச் செய்தவருமான சுவிஸ்நாதன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் 28.07.2014 மு.ப 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

அவருடன் யாழ்மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரும் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சுவிஸ்நாதன் அவர்களால் கல்லூரி நுழைவாயிலில் அமைக்கப்படவிருக்கும் அலங்காரவளைவிற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக விருந்தினர்கள் கல்லூரியின் மாணவதலைவர்கள் ,கல்லூரியின் பான்ட் இசைக்குழு ஆகியோரால் மணற்காட்டு அம்மன் கோயிலில் நடந்த விசேட பூசையைத் தொடர்ந்து கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இறுதியாக கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி அதிபர் தனது தலைமை உரையில் கல்லூரியின் பழைய மாணவரும் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய சுவிஸ்நாதன் அவர்கள் கல்லூரி அன்னைக்கு ஆற்றிவரும் சேவையை மனதாரப் பாராட்டினார்.

அவரின் குறிப்பிடத்தக்க சேவைகளான கணினிஆய்வு கூடத்தின் அபிவிருத்தி வேலைகள் ஏழைமாணவருக்கான புலமைப்பரிசில் திட்டம் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டி அன்னை சரஸ்வதிக்கு சிலை அமைத்தமைக்கும் அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

கல்லூரியின் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கும் அதிபர் தனது நன்றி உரையில் குறிப்பிட்டார்.
இதனைக் கௌரவிக்கும் முகமாக கல்லூரி அதிபர் அவர்கள், சுவிஸ் நாதன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் கல்லூரியுடன் தொடர்புகளை மேற்கொண்டு இச்சேவைகளை வழங்கி உதவி அளிக்கும் பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் அவர்களையும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் அவர்களையும் அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

சிறப்பு விருந்தினர் பிராந்திய பொலிஸ்மா அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் திரு.சிற்சபேசன் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ,பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் ஆகியோரின் உரைகளுடன் விழா இனிதே நிறைவேறியது.

 

 

யாழ்ற்ரன் கல்லூரிக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தினர் பத்துக் கணினிகள் அன்பளிப்பு

கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணினிகளை வாங்குவதற்காக நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்திற்கு காரைநகரில் உள்ள காரை அபிவிருத்திச்சபையினர் 10 கணினிகளை வாங்கி இன்று அதன் தலைவர் திரு.சிவா.தி.மகேசன் அவர்கள் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களிடம் 10 கணினிகளையும் இன்று கையளிப்புச் செய்துள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட கல்லூரி அதிபர் எமது கல்லூரி மாணவர்களின் கணினி அறிவை பூரணமாக மேற்கொள்வதற்கு இக்கணினிகளை அன்பளிப்புச் செய்த காரை கனடா கலாச்சார மன்றத்தின் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் தனது இதயம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்பொருட்களை வாங்க உதவிய காரைநகர் காரை அபிவிருத்திச்சபையின் தலைவர் திரு.சிவா.தி.மகேசன் அவர்கட்கும் பொருளாளர் ந.பாரதி அவர்கட்கும் அதிபர் தனது நன்றி பாராட்டினை மேலும் தெரிவித்தார்.

கனடா கலாச்சார மன்றத்தினர் காரைநகர் மாணவர்களிற்கு செய்துவரும் கற்றல் மேம்பாட்டிற்கான இப்பணிகளை மாணவர்கட்கும் அதிபர் எடுத்துக்துக்கூறினார்.

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

யாழ்ற்ரன் கல்லூரியில் 2013 ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பாராட்டு வைபவம் மற்றும் நன்கொடையாளிகளை கௌரவிக்கும் வைபவம்

மேற்படி நிகழ்வுகள் 2014-.6-13 ம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 7.30 மணிக்கு காலைக்கூட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றன.

முதலில் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான நன்கொடையாளர் திரு.சிவகுரு கந்தையா( மதவாச்சி கந்தையா) அவர்கள் நன்றி பாராட்டி பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டார்.

அடுத்து பிரதான மண்டபத்தில் மாணவர்கள் இருப்பதற்கான 350 கதிரைகளையும் 5 கணினிகளையும் வழங்கிய காரைநகர் சிதம்பரா மூர்த்தி கேணியடியைச் சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசிப்பவரும் திரு.செல்வராசா சேனாதிராசா அவர்களின் தாயார் திருமதி இராசம்மா செல்வராசா அவர்கள் அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கதிரைகள் மற்றும் கணினிகளை கையளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.இதற்கு நன்றி பாராட்டும் முகமாக சேனாதிராசா அவர்களின் தாயார் திருமதி இராசம்மா செல்வராசா அவர்களும் அவர் மகன் சிவசோதி மருமகள் கெங்கா சிவகுமார் ஆகியோருக்கும் அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தது மட்டுமன்றி அவர்களுக்கு பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டனர்.

கல்லூரிக்கு என்றும் தனது பங்களிப்புக்களையும் நன்கொடைகளையும் செய்து வரும் கொழும்பு Quancy distributers உரிமையாளரும் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரான திரு(தலைப்பா) கணபதிப்பிள்ளை அவர்களின் பேரன் கணநாதன் (நாதன்) அவர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அவருக்கும் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.

அதிபர் தனது உரையில் பிரதான மண்டபத்தில் மாணவர்கள் நிலத்தில் இருப்பதைத் தவிர்த்து கதிரைகளில் இருப்பதற்கு 350 கதிரைகளையும் 5 கணினிகளையும் வழங்கிய லண்டனில் வசிக்கும் திரு.செல்வராசா சேனாதிராசா அவர்களுக்கும் தனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து தனது உரையில் கல்லூரியின் பழைய மாணவனும் கொழும்பு Quincy distributers உரிமையாளர் கணநாதன் அவர்களின் சேவையை நன்றியுடன் பாராட்டினார்.

கல்லூரியின் மூத்த பழைய மாணவன் திரு சிவகுரு கந்தையா கல்லூரிக்கு வழங்கிய சேவைகளையும் அதிபர் நன்றி பாராட்டினார்.

மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களை வழங்கி உதவிய தற்போது கனடாவில் வசிக்கும் வாரிவளவு கந்தையா கணேசன் (தேர்க்கார) அவர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கணினி ஆய்வு கூடத்தை அபிவிருத்தி செய்ய உதவி செய்துகொண்டிருக்கும் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் (சுவிஸ்நாதன்) அவர்கள்,கனடா காரை கலாச்சார மன்றம், லண்டன் காரை நலன்புரிச்சங்கம் ஆகியோர்களையும் அதிபர் நன்றியுடன் நினைவுகூர்ந்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

க.பொ.த (சா/த) மாணவர்களைக்கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்க தனது பங்களிப்பை வழங்கிய திரு.செ. சேனாதிராசா அவர்களுக்கு மேலும் நன்றிகளைத்தெரிவித்தார். மாணவர்களுக்கான பாராட்டு விழாவுடன் நிகழ்வுகள் மு.ப 9.00 மணிக்கு நிறைவுபெற்றன.

DSC_0456

DSC_0457

DSC_0468

DSC_0469

DSC_0470

DSC_0474

DSC_0475

DSC_0478

DSC_0479

DSC_0482

DSC_0483

DSC_0485

DSC_0486

DSC_0487

DSC_0488

DSC_0489

DSC_0490

DSC_0491

DSC_0493

DSC_0494

DSC_0495

DSC_0496

DSC_0497

DSC_0501

DSC_0503

DSC_0505

DSC_0507

DSC_0510

DSC_0512

DSC_0515

DSC_0517

DSC_0518

DSC_0519

DSC_0520

DSC_0525

DSC_0526

DSC_0527

DSC_0528

DSC_0529

DSC_0530

DSC_0531

DSC_0534

DSC_0536

DSC_0537

DSC_0538

DSC_0539

DSC_0541

DSC_0543

DSC_0544

DSC_0546

DSC_0547

DSC_0548

DSC_0549

DSC_0550

DSC_0551

DSC_0552

DSC_0556

யாழ்ற்ரன் கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசண விருந்தும் 08.06.2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப 12.30 மணிக்கு உயர்தர மாணவர் மன்றத்தலைவர் செல்வன்.த.யசோதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக சங்கானைப்பிரதேச செயலாளர் திரு.அ.சோதிநாதன் (Yarltonian) அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்விப்பணிமனைப் கணக்காளர் திருமதி கவிதா சாந்திநாயகம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக Alliancz பிராந்திய முகாமையாளர் G. ஸ்ரீவரதன் (Yarltonian) அவர்களும் தீவக வலயக்கல்விப்பணிமனை நிர்வாக உததியோகத்தர் திரு.S.சற்குணராசா (Yarltonian) அவர்களும் அயல் பாடசாலை ஆசிரியர்கள், அயல்பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

DSC_0166 DSC_0167 DSC_0168 DSC_0169 DSC_0170 DSC_0171 DSC_0172 DSC_0174 DSC_0175 DSC_0176 DSC_0177 DSC_0178 DSC_0179 DSC_0180 DSC_0181 DSC_0182 DSC_0183 DSC_0185 DSC_0186 DSC_0190 DSC_0191 DSC_0193 DSC_0204 DSC_0216 DSC_0220 DSC_0223 DSC_0224 DSC_0225 DSC_0226 DSC_0227 DSC_0230 DSC_0231 DSC_0234 DSC_0235 DSC_0238 DSC_0242

 

2014ம் ஆண்டு கணிதப் புதிர்ப் போட்டியில் தீவக வலய மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 10 இடங்களைத் தக்கவைத்து( அதிகூடிய) முன்னணியில் நிற்கின்றது.

2014ம் ஆண்டு கணிதப் புதிர்ப் போட்டியில் தீவக வலய மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 10 இடங்களைத் தக்கவைத்து( அதிகூடிய) முன்னணியில் நிற்கின்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், போட்டிக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திரு. செ. அருள்செல்வம், திரு. ஆ. யோகலிங்கம், செல்வி. பா. சர்மிளா ஆகியோரையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

                        வகுப்பு                     முழுப்பெயர்                                நிலை

                           6                         தியாகராசா சசிகரன்                          1

                           7                          சிவராயு ஜனுசன்                              1

                           7                     ஆனந்தராசா பேபிசாமினி                     3

                           8                         சக்திவாசன் லக்சன்                            3

                           9                    லோகேஸ்வரன் குருபரன்                      4

                          10                         சிவகுமார் நவநீதன்                           3

                          10                        சுரேஸ்குமார் கஜந்தன்                       4

                          11                            குகநேசன் கோபிதா                        1

                          11                           தியாகராசா சயந்தன்                        2

                          11                           மோகநாதன் துர்சிகா                        4

 

முதல் 3 இடங்களையும் பெற்ற மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகினர்.

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 08/02/2014 அன்று பி.ப. 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக தீவக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. இ.குணநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கல்விக் காருண்யன் திரு.E.ளS.P. நாகரத்தினம் அவர்களும், கௌரவ விருந்தினராக சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கி அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர் திரு. க. சிவகுமார் அவர்களும், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் சகிதம், கல்லூரிக் கொடியை ஏந்திய மாணவத் தலைவர் அணியினாலும், கல்லூரியின் BAND இசைக்குழுவினராலும் கல்லூரி முன்றலிலிருந்து விளையாட்டு மைதானம் வரை அழைத்து வரப்படும் காட்சி மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது.

 மங்கள விளக்கேற்றல், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இல்ல விளையாட்டுப் போட்டி பிற்பகல் 5.30 மணிக்கு இனிதே நிறைவேறியது. இடைவேளையின் போது நடைபெற்ற மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இறுதியாக அதிபர், விருந்தினர்கள் உரை நடைபெற்றது. அதிபர் தனது உரையில் மாணவர்களின் கல்விமட்டம் மிகவும் சிறப்பாக முன்னேறி வரும் அதேவேளை மாணவர்கள் விளையாட்டிலும் இன்னும் முன்னேற வேண்டி இருப்பதை எடுத்துக்கூறினார்.

 பிரதம விருந்தினர் தனது உரையில் விளையாட்டுப் போட்டிகள் நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு நடைப்பெற்றதாகவும் கல்லூரியின் BAND இசைக்குழு தேசிய பாடசாலையின் BAND இசைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்திருந்ததாகவும் வெகுவாகப் பாராட்டினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர் அதீத அக்கறை காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கௌரவ விருந்தினர் தனது உரையில் கல்லூரியின் முன்னேற்றத்தினை வெகுவாகப் பாராட்டினார். கல்லூரியின் பல பழைய, மூத்த மாணவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். பெரும் எண்ணிக்கையான பெற்றோர்களும், பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 அதிபர் தனது உரையில் ஞாபகார்த்தக் கேடயங்களையும், பரிசுப்பொருட்களையும் வழங்கிய பின்வருவோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 1. கந்தையா கணேசன் – வாரிவளவு, காரைநகர் (கனடா) வாரிவளவு நல்லியக்கச் சபை ஸ்தாபகர் அமரர். பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது

 2. வேலுப்பிள்ளை சிற்சபேசன் – சின்னாலடி காரைநகர் இவரது தந்தையாரும் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவருமான அமரர்.செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது

 3. ஆரம்பப்பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு பரிசுப்பொருள் வழங்கி உதவிய திரு.க.சிவநேசன் – கணேசன் டெக்ஸ்டைல்ஸ், யாழ்ப்பாணம் திரு. க. அருள்நேசன் – சிவகணேசன் டெக்ஸ்டைல்ஸ் யாழ்ப்பாணம்

 4. மயூரன் ஸ்டோர்ஸ், ஆலடி, காரைநகர்

 5. இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, காரைநகர்

 6. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பழைய மாணவர்

 7. விளையாட்டுப் பொருட்களை வழங்கிய திரு. S. ஸ்ரீவரதன்

                                        வெற்றி பெற்ற இல்லங்களின் நிலைகள் வருமாறு

 நாவலர் இல்லம் – 1ம் இடம்

 இராமநாதன் இல்லம் – 2ம் இடம்

 விபுலானந்தர் இல்லம் – 3ம் இடம்

யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2014

யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2014

yarlton

யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு பாடசாலை கால்கோள் விழா

1ம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வான கால்கோள் விழா யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு பாடசாலையில் மிகவும் கோலாகலமாக 16.01.2014 வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக முன்னாள் ஆரம்பக்கல்வி சேவைக்கால கல்வி ஆலோசகர் திரு.ஆ.பலராமன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் கலைநிகழ்வுகளோடு இவ்விழா நிறைவு பெற்றது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் -20​13, யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை-2013 இல் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

1.கிரிஷா ராசநாயகம் – கலைப்பிரிவு 1A 1B 1C

2.தரங்கினி மகாதேவன் – கலைப்பிரிவு 2B 1C
3.ஆரணி திருச்செல்வம் – கலைப்பிரிவு 1A 1C 1S

4.கல்பனா விஜயரட்னம்  – கலைப்பிரிவு 1B 1C 1S

5.தயானி சிவசாமி – கலைப்பிரிவு 2C 1S

6.கவிதா கணேசன்  – கலைப்பிரிவு 3C
7.தர்சிகா செந்தில்வேல் – கலைப்பிரிவு 2C 1S

8.தயாளினி பரமநாதன் – கலைப்பிரிவு 2C 1S 

9.பிரிந்தா சிவபாலன் – வர்த்தகப்பிரிவு 1B 2C

மேற்படி பரீட்சைக்கு 17 மாணவர்கள் தோற்றி 9 பேர் பல்கலைகழக அனுமதிக்கு தகமை பெற்றுள்ளனர்.

எனினும் யாழ்ப்பாண மாவட்ட நிலையின்(Rank) பிரகாரம் பின்வரும் மாணவர்கள் இலங்கை பல்கலைகழக நுண்கலை பீடத்திற்கு அனுமதி பெறுவர். ஏனைய மாணவர்களின் பல்கலைகழக அனுமதி வெட்டுப்புள்ளி(Cut-off marks) வெளிவந்த பின்னரே உறுதிப்படுத்த்தப்படும்.
யாழ்ற்ரன் கல்லூரியில் கணித,விஞ்ஞான பிரிவிற்கு எவரும் தோற்றவில்லை.     

நுண்கலை பீடத்திற்கு அனுமதி பெரும் மாணவர்கள்

1.கிரிஷா ராசநாயகம்
2.தரங்கினி மகாதேவன்

யா/யாழ்ற்ரன் கல்லூரி – காரைநகர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா


          யா/யாழ்ற்ரன் கல்லூரி – காரைநகர்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்
சித்திபெற்ற மாணவர்களுக்கான

                                   பாராட்டு விழா  
காலம் : 04.12.2013 புதன்கிழமை மு.ப 8.30 மணி
இடம் : கல்லூரி பிரதான மண்டபம்
தலைவர் : திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் (அதிபர்)
பிரதம விருந்தினர்
   திரு. வி.தனிநாயகம் அவர்கள்
ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர்தீவக வலயம்
சிறப்பு விருந்தினர்
திரு.சிவா.தி.மகேசன் அவர்கள்
தலைவர்,காரைஅபிவிருத்திச்சபை காரைநகர்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

      அதிபர்,ஆசிரியர்கள்,
மாணவர்கள்,கல்விசாரா ஊழியர்கள்                                                                                                                                                     யாழ்ற்ரன் கல்லூரி
 காரைநகர்.