Category: SKDB செய்திகள்

காரைத்தென்றல் -2014இல் வாத்திய பிருந்தா

swiss logo

காரைத்தென்றல் -2014இல் வாத்திய பிருந்தா


              சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபையின் பத்தாவது ஆண்டுவிழாவான காரைத்தென்றல்-2014இல் பிரான்ஸ் வாழ் காரை  மாணவ, மாணவிகள் மிக அற்புதமாக வழங்கிய இசைக்கோலங்களுக்கு  பிரான்ஸ் நலன்புரிச்சங்கத்தினர் ஆதரவு வழங்கி இருந்தார்கள். நிகழ்வின் வீடியோப்பதிவை கீழே காணலாம்.


           பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்தின் பத்தாவது ஆண்டுவிழா 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற இருப்பதால் நிகழ்வில் சுவிஸ் வாழ் காரை மாணவ, மாணவிகள் இணைந்து அரைமணிநேர சிறப்பான கலை நிகழ்வை  நடாத்துவதற்கு பெற்றோரை உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                                                                                                                                                       நன்றி


                 "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"
                                                                                                                                                                                                                                                              

                                                                                                இங்ஙனம்.
                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                  செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                  சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                08.03.2016

2016ஆம் ஆண்டு சுவிஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறுவிருக்கும் கலைவிழா பற்றிய அறிவித்தல்கள்.

 

swiss logo

2016ஆம் ஆண்டு சுவிஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறுவிருக்கும் கலைவிழா பற்றிய அறிவித்தல்கள்.


 அன்புடையீர் வணக்கம்!


 "பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்கு இணங்க   எமது சகோதர அமைப்பான பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் தனது பத்தாவது ஆண்டு விழாவை வெகு சிறப்பாக  நடாத்துவதற்கு நிகழ்ச்சிகளை ஒழுங்குகமைத்து வருவது யாவரும் அறிந்ததே!


எமது சபையின் பத்தாவது ஆண்டுவிழாவான "காரைத்தென்றல்-2014" நிகழ்வில்  பிரான்ஸ் வாழ் காரை மாணவ,மாணவிகள் இசைச்சங்கமம் என்ற நிகழ்வின் மூலம் எங்கள் மேடையை அலங்கரித்திருந்தார்கள். இந் நிகழ்விற்கு பிரதியிடாக சுவிஸ் வாழ் காரை  மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து அரைமணிநேரம் தங்களால் இயன்ற சிறப்பான கலைநிகழ்வினை முன்கூட்டியே பதிவு செய்து பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின்  பத்தாவது ஆண்டு விழாவான "காரைஸ்வரங்கள்-2016" மேடையை அலங்கரிக்கும் வண்ணம் பெற்றோர்களை உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற  மொழிக்கிணங்க எதிர்வரும் 27.03.2016 ஞாயிற்றக்கிழமை மதியம் 14.00மணிக்கு நடைபெறஇருக்கும்  பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் "காரைஸ்வரங்கள்-2016" நிகழ்விற்கு வர விரும்புவோர்கள் தமது ஆசனப்பதிவுகளையும், பெயர்களையும் பதிவு செய்து கொள்வதற்கு கீழ் காணும்  தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


எமது சபையின் பன்ரெண்டாவது ஆண்டுவிழாவான "காரைத்தென்றல்-2016"  எதிர்வரும் 15.05.2016ஞாயிற்றுக்கிழமை 13.00மணிக்கு Zürcher Gemeinschaftszentren,GZ Seebach, Hertensteinstrasse-20, 8052 Zürich இல் நடைபெறஇருப்பதால் விழா ஒழுங்குகள் பற்றிய நிர்வாக சபைக்கூட்டம் 13.03.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் சுவிஸ் வாழ் காரை பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் தங்கள் கருத்துக்களை தபால்மூலமாகவோ, தொலைபேசியின் ஊடாகவோ 10.03.2016 முன்பதாக தெரிவித்துக்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம். தங்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். 


எமது காரைத்தாயை ஈழ மண்ணின் முன்னுதாரணமான கிராமமாக மாற்ற அத்திவாரம் இடுவோம். பார்வையாளர்களாயிருந்தது போதும். பங்காளிகளாவோம் வாருங்கள். ஒன்றிணைந்து வாருங்கள்.


தொலைபேசிஇலக்கங்கள்:-  034 423 04 05,  061 301 60 32, 044 865 53 18


                                                               நன்றி


                    "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"


                                                                                                   இங்ஙனம்.
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                    செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்
 
                                                                                                 29.02.2016

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/02/swisskarai29-02-2016.pdf

பூமிப்பந்தில் பரந்து வாழும் காரைநகர் மக்களுக்கு ஓர் வேண்டு கோள்!

   swiss logo            

  பூமிப்பந்தில் பரந்து வாழும்
 காரைநகர் மக்களுக்கு ஓர் வேண்டு கோள்!

கடந்த காலங்களில் காரைநகரின் பல அபிவிருத்தி மற்றும் தனிநபர் வாழ்வாதார குறைபாடுகளுக்கு பல வழிகளிலும் தனிநபர் மூலமோ,சபைகள்,பழைய மாணவர் அமைப்புக்கள் மூலமோ போதியளவு உதவிகள்,பணிகள் சேவைகள் செய்யப்பட்டிருக்கின்றன, செய்யப்பட்டன.

ஆனால் இனிவரும் காலங்களில் காரைநகருக்கான எவ்விதமான உதவியாயினும், சேவையாயினும், பணிகளாயினும், காரைநகர் அபிவிருத்திச் சபைக் கூடாக நிறைவேற்றுவது மிகச் சிறந்ததும் ஒழுங்கு அமைக்கப்பட்ட வேலைத் திட்டமாகும். அதனால் தனிநபர் நிதி சேகரிப்பு பாரிய குழப்ப நிலையை சந்தேக நிலையை உருவாக்கும் என்பதால் "சபை"  சார்ந்து செயல்படுதல் ஒர் குடும்ப ஒழுக்கமாகும். மேலும் காரைநகரிலுள்ள பாடசாலைகள், பொதுப்பணி அமைப்புக்கள் அனைவருக்கும் இவ்அறிவித்தல் பொருத்தமாகும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.

இனிவரும் காலாமாவது நாம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒழுக்கத்துக்குள் இணைந்து கொள்வது எமது காலத்தின் கட்டாயமாகும். பல தேசங்களில் பரவி பரந்து வாழும் காரைநகர் மக்கள் தங்கள் அனுபவ வாழ்வை படிக்கல்லாகக் கொண்டு இவ் செயல்பாட்டினை முன்னெடுத்தால் ஒரு வேலை எமது நிதி மற்றும் இதரபணிகள் சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைந்து மிகச் சிறந்த சிகரத்ததை எட்டமுடியும் என்பதை அறிவீர்கள்.


                                                                நன்றி

                   "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                                                இங்ஙனம்.
                                                                                     சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                            27.02.2016

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் யா/காரைநகர் இந்துக்கல்லூரி சயம்பு மண்டபத்திற்கு மின்இனணப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் யா/காரைநகர் இந்துக்கல்லூரி சயம்பு மண்டபத்திற்கு மின்இனணப்பு வழங்கப்பட்டுள்ளது.

SKD

அன்பான சுவிஸ் வாழ் காரைமக்களே!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பதினொராவது ஆண்டுவிழா காரைத்தென்றல்-2015

சுவிஸ் வாழ் காரை மக்களின் உன்னதமான நாற்பத்தாறு குடும்ப அங்கத்தவரின்  நிதிப்பங்களிப்பினால் வெகு சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே!

 

காரைத்தென்றல்-2015 ஆண்டுவிழாவின் செலவுகள் தவிர்த்து மிகுதிப்பணம் எதற்கு பயன்பட்டது என்பதை அகமகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.

 

எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி  (26.09.2015) பிற்பகல் 3.00மணி யிலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப் பரீட்சை நடாத்தும் பொழுது மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக அவர்களின் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்த மண்டபத்திற்கான மின்சாரக் குறைபாட்டினை நிவர்த்தி செய்துதரும்படி காரை அபிவிருத்திச்சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் ஊடாக பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களால் எமது சபையிடம் முன்வைக்கப்பட்டது. இதனை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து மண்டபத்திற்கு பதின்மூன்று மின்விளக்குகள், ஏழு மின் விசிறிகள் இவற்க்கான தனியான பிரதானஅழுத்தி என்பன 90375.00ரூபா.செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

 

எமது சபையின் நாட்காட்டி 2016  காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் 24.12.2015 வியாழக்கிழமை அன்று 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்ட நாட்காட்டி 150 பிரதிகளில் 50பிரதிகள் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்திடம் கையளிகப்பட்டது. மிகுதி 100 பிரதிகள் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் 10.01.2015 ஞாயிற்றுக்கிழமை St. Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich. மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நாட்காட்டி அச்சுப்பிரதிக்கான செலவு 133750.00 ரூபாய்;கள் என்பதனையும் காரைநகரில் வெளியிடப்பட்ட நாட்காட்டியின் வருமானங்கள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

 

அன்பான சுவிஸ் வாழ் காரைமக்களே! உங்களின் உன்னதமான பங்களிப்பின் ஊடாகத்தான் எமது சபையால் பல நற்காரியங்களை செய்ய முடிகின்றது. தொடர்ந்தும் உங்கள் உதவியை  சபை நாடி நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு கட்டுரைப்போட்டி அ,ஆ,இ பிரிவுகளில்; தெரிவான 31மாணவர்களின் கட்டுரைகள் வாரம் ஒன்றும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2004 இல் இருந்து 2015வரை பணிகளும் சேவைகளும் இணையத்தில் பிரசுரிக்கப்படும். என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றோம்.

                                                                  நன்றி

                  "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                                    இங்ஙனம்,

                                                                             சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                                                                                  செயற்குழு உறுப்பினர்கள்,

                                                                                சுவிஸ் வாழ் காரை மக்கள்.

                                                                                                        01.02.2016

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கண்ணீர் வணக்கம் ( சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை )

கண் திறப்பாயோ முதலியாரே !!!

TP

பிறப்பு: 29.09.1945                    இறப்பு: 28.01.2016

 

பனி படரும்  மலைகளின் ஊடே

கனி காய்க்கும் மரங்களின் கீழே

இனி எங்கு காண்போம் எம்மதிப்பு

தனிப்புலி சிங்கத்தாரே முதலியாரே

நல்லதோ கெட்டதோ அற்றதோ உள்ளதோ

வல்லதோ ஓடிந்ததோ சொல்லதோ சொல்லாததோ

மெல்லதோ விரைவதோ கூறுவதோ கூறாததோ

கல்லதோ கல்லாததோ கூறினாய் கேட்டோம்

கேட்டோம் செய்தி உற்றோம் துயர்

மாட்டோம் நேரில்வர வரம்

கேட்டோம் தில்லைச்சிவனிடம் வர

மாட்டோம் உன்னிடம் நாம்

மீசைக்கார ஜயா நின்

ஒசையை எங்கு கேட்போம்

பாசமுடன் குடும்பத்துயர் கேட்டோம்

நேசமுடன் பிராத்திக்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்கள், 

நண்பர்கள் அனைவருக்கும் தில்லைக்கூத்தனின் திருப்பாதம் பணிந்து எமது ஆழந்த துயர் 

செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.

இங்ஙனம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                     செயற்குழு உறுப்பினர்கள்

                              சுவிஸ் வாழ் காரை மக்கள்.

31.01.2016

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொங்கல் செய்தி!

swiss logo

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொங்கல் செய்தி!


2016ஆம் ஆண்டு தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையின் பரிந்துரைக்கு அமைவாகவே அனைத்து நிதிப்பங்களிப்புகளும் நடைமுறைப்படுத்தப்படும். 10.01.2016இல் நிர்வாகசபை கூட்டத்தில் முடிவு.

பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை வாழ் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களை எமது சபை சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.


          எமது சபையின் நாட்காட்டி வெளியீடும் பரிசளிப்பும் கருத்துப்பரிமாற்றமும்,மக்கள் சந்திப்பும் மலர்ந்த புத்தாண்டின் நாளாம் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை  St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich.  மண்டபத்தில்  மங்களவிளக்கேற்றலுடன் மங்களகரமாக தொடங்க, தேவார இசையினை செல்விகள் சாரங்கி லிங்கேஸ்வரன், கஜலக்ஷி உருத்திரர் இருவரும் இசைத்திட, மறைந்தோர்க்கு மௌன அஞ்சலி தொடர்ந்திட, வளமான சபையின் மன்ற கீதம் ஒலி நாடாவில் இசைத்திட வந்தோர் மனமெல்லாம் காரை மணம் பரப்பி சொல்ல முடியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

        நிகழ்வுக்கு தலைமைதாங்கிய சபையின் தலைவர் பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் சமூகம் தந்தவர்களை சமூகமாய் வரவேற்று சிறப்பரை நிகழ்த்தினார். ஆசியுரையினையும், நாட்காட்டி விமர்சனயுரையினையும் சிவஸ்ரீ இராம.சசிதரக்குருக்கள் அவர்கள் தனது உரையில் நாட்காட்டியானது பிரசித்தி பெற்ற ஆலயங்களையும், பல தரப்பட்ட விடயங்களை உள்வாங்கி மிகச் சிறந்த முறையில் சுவிஸ் நாட்டில் மலர்ந்துள்ளது என்று கூறினார்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2016ஆம் ஆண்டு நாட்காட்டியை இராம.சசிதரக்குருக்கள் அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை தெய்வீகத்திருப்பணிஅரசு¸ அறக்கொடை அரசு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் இவர்கள் 24.12.2015 வியாழக்கிழமை அன்று காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்திலும் சிறப்பு பிரதியை பெற்றுக்கொண்டது சிறப்பான விடயம் சiயின் நல் வாழ்த்துக்கள். அடுத்தாக சபையில் இருந்தோர்கள்  நாட்காட்யை பெற்றுக் கொண்டார்கள். அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுதல்களும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர் கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்கள் தனது சிறப்புரையில் மூன்றாவது ஆண்டாக மலர்ந்துள்ள நாட்காட்டி இம்முறை பல அரிய விடயங்களை தன்னகத்தே கொண்டு சிறந்த முறையில் வெளியாகியுள்ளது. மகிழ்ச்சியான விடயம் என்றார். கட்டுரைப்போட்டி விடயமாக கருத்து தெரிவிக்கும் போது மாணவர்களின்  அறிவாற்றலை வளர்க்கும் செயல் இது மேலும் வளமாக வேண்டும் என்றும் இம் முறை சுவிஸ் நாட்டில் இருவர் மட்டுமே பங்குபற்றியிருந்தார்கள். இனிவரும் காலங்களில் அதிகமான மாணவர்கள் பங்ககொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென சபையோரைக் கேட்டுக்கொண்டார். சபைசார்பாக கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய செல்விகள் நிதாஞ்சலி லிங்கேஸ்வரன்,  கஜவதனா உருத்திரர் இருவரையும் பாராட்டி நற்சான்றிதலும், பரிசும் வழங்கி மகிழ்வித்தார்கள்.

மக்களுடன்  கருத்துப்பரிமாற்ற நிகழ்வில் சபையில் இருந்தோர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். 04.12.2004 ஆண்டு மலர்ந்த எங்கள் சபை இன்று மெல்ல,மெல்ல தேய்ந்து போகின்றது என்றும் வேலைகள் அதிகம், நேரமின்மையினால் சபை பணிகள் செய்வது கஸ்ரம் எனவும் தெரிவித்தார்கள். மனமுன்டானால் இடமுண்டு. விரும்பி செயற்பட்டால் வெற்றி நமக்கே என்றும், நாட்காட்டி வெளியீட்டுக்கு மக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என்று சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து இனிவரும் காலங்களில் இப்படியான தவறுகள் தவிர்க்கப்பட்டு எல்லா சுவிஸ் வாழ் காரை மக்களும் நாம் எல்லோரும் ஓர் ஊரே என்பதை உணர்ந்து உண்மையாக செயற்பட்டு ஊரையும், உறவுகளையும் உம் மாணவச் செல்வங்களையும் வளர்த்து வளம்பெற வைப்போம் என்றும், ஒற்றுமையாய் செயற்படுவதுடன் வேலையையும் பகிர்ந்து செயற்பட்டால் எங்கள் சபையானது மாணவரது கல்வியில், தாய்மொழி வளர்ச்சியில் எம்மூர் அபிவிருத்திபோன்ற இன்னோரன்ன பணிகளில் வீறுநடை போடும் என்ற கருத்தில் கருத்துப்பரிமாற்றம் நிறைவு பெற்றது.

நிர்வாக சபைக் கூட்டமும் அதே மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைமுறையில் இருக்கும் பாடசாலைகளின் ஆசிரியருக்கான வேதனம், பிரத்தியேக மாணவருக்கான கொடுப்பனவுகளும், 2016ஆம் ஆண்டு காரை அபிவிருத்திச் சபையால் முன் வைக்கப்பட்ட விடங்களுக்கான நிதிப்பங்களிப்பு அனைத்தும் தாய் சங்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என எமது சபையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் 18.00 நிறைவு பெற்றது.


 
                                                                      நன்றி

                                       "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"

 

                                                                                                                                                                                                                                                              இங்ஙனம்.
                                                                                                                                                                                                                                          சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                                                                                                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                                                                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                       15.01.2016

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் 2016ஆம் ஆண்டு நாட்காட்டி வெளியீடும், செயற்பாடுகள் பற்றிய கருத்துப்பரிமாற்றமும், மக்கள் சந்திப்பும்.

                                                                                             உ
                                                                சிவமயம்

    "பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே"


சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின்  2016ஆம் ஆண்டு நாட்காட்டி வெளியீடும், செயற்பாடுகள் பற்றிய கருத்துப்பரிமாற்றமும், மக்கள் சந்திப்பும்.

 

இடம்;:- St. Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich. 

திகதி:- 10.01.2015 ஞாயிற்றுக்கிழமை 

நேரம்:- 15.00 மணி முதல் 18.00 வரை. 

 

சுவிஸ் வாழ் காரை மக்களுக்கு ஒர் நற்செய்தி! 

எமது சபை தனது பன்னீரெண்டாவது அகவையில் உங்களின் இல்லங்களில் இருக்கவேண்டிய, சுவிஸ் நேரப்படி கணிக்கப்பட்ட திருக்கணித வாக்கிய பஞ்சாங்கக்கலண்டர் ஒன்றினை வெளியிடவுள்ளது. 

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இந்த நாட்காட்டியை "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற கூற்றிக்கிணங்க வாரிவளவுபிள்ளையார், ஈழத்துசிதம்பரம், மணற்காட்டுஅம்மன், பாலாவோடைஸ்ரீ முத்துமாரிஅம்மன், கருங்காலி முருகன், திக்கரை முருகமூர்த்தி ஆகிய திருத்தலங்களின் கோபுர முகப்புதோற்றங்களை உள்ளடக்கிய அழகிய வர்ணங்களுடன்  தயாரித்துள்ளது. இதனை வெளியீடு செய்து வைத்து அதன் பின்னர்  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2016ஆம் ஆண்டின் செயற்பாடுகள் பற்றிய விளக்கவுரையும் அளிக்கவுள்ளோம்.

                                                             நிகழ்ச்சிநிரல்

மங்களவிளக்கேற்றல், தேவாரம், அகவணக்கம், ஆசியுரை, வாழ்த்துரை, வரவேற்புரை, தலைமையுரை, நாட்காட்டி வெளியீடு, செயற்பாடுகள் பற்றிய சிறப்புரைகள்;, எமது சபையின் 2015;ஆம் ஆண்டு கட்டுரைப்போட்டியில்   பங்குபற்றிய மாணவிகளுக்கான பரிசில் வழங்கல், நன்றியுரை. 

எமது சபையின் இந்த நிகழ்வானது வெகுசிறப்பாக நடைபெற இருப்பதால் தாங்களும் தங்கள்குடும்பசகிதம் வருகை தந்து எமது சபை சார்பாக கலந்து கொண்டு வைபவத்தினை சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

                                                                நன்றி


                                                                                                              இங்ஙனம்
                                                                                        சுவிஸ் காரை அபிவிருத்தி சபை 
                                                                                             செயற்குழு உறுப்பினர்கள், 
                                                                                            சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                            05.01.2016

 

 

 

காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

DSC_9629 (Copy)

காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக பழைய மாணவன் தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் கலந்து கொணடு சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன்,வடமாகாண பாடசாலை வேலைகள் பணிப்பாளர் தே.சுரேஸ்குமார் தீவக வலய முன்னாள் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ்,காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச் சபைப் பொருளாளர் க.பாலச்சந்திரன் வட கடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இருமாடிக் கட்டடத்தினை சுமார் ஒரு கோடி ரூபா செலவில் சுவிஸ் நாட்டில் வதியும் இப்பாடசாலையின் பழைய மாணவரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் அமைக்கப்பட்டடு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

                           கைத்தொலைபேசியில் படங்களைப் பார்ப்பதற்கு
                                                          இங்கே அழுத்தவும்

https://picasaweb.google.com/109143386914539225429/December242015?authuser=0&feat=directlink

 

காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தின் கோலாகலதிறப்பு விழாவின் நிகழ்வுகளும் காரை அபிவிருத்திச்சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்திய முப்பெரும் விழாவும் இன்று 24.12.2015 வியாழக்கிழமை நடைபெற்றது. மேலதிக படங்கள் பின்னர் எடுத்துவரப்படும் .

IMG_0132 IMG_0133 IMG_0134 IMG_0135 IMG_0136 IMG_0137 IMG_0138 IMG_0139 IMG_0140 IMG_0141 IMG_0142 IMG_0143

தவறுக்கு வருந்துகிறோம். சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை கட்டுரைப் போட்டி-2015 ஆ பிரவில் வெற்றியீட்டியவர்கள் விபரங்கள்

SWISS LOGO

தவறுக்கு வருந்துகிறோம்.
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை
கட்டுரைப் போட்டி-2015
ஆ பிரவில் வெற்றியீட்டியவர்கள் விபரங்கள் 

கடந்த 26–9-2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் மூன்று பிரிவுகளிலும் கலந்துகொண்டு வெற்றியீட்டியர்களது விபரங்களைப் போட்டியாளர்களுக்கும் காரை மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் இதே இணையத்தில் அறிவித்திருந்தோம். அவற்றில் ஆ பிரிவில் வெற்றியீட்டியவர்களின் விபரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தவறுகள் இடம் பெற்றுள்ளதை நடுவர்குழு அவதானித்ததன் பிரகாரம் சரியான முடிவுகளை மீண்டும் அறிவிக்கின்றோம். ஏற்பட்ட சங்கடங்களுக்கு மனம்வருந்துகிறோம். சரியான முடிவுகள் கீழே தரப்படுகின்றன.


                                                           பிரிவு ஆ -2015
 

இல

சுட்டெண்

பெயர்

பாடசாலை /  நிலை

 

01     

    080

       S.கஜந்தன்

        16.02.1999

 

யா/யாழ்ற்ரன் கல்லூரி
முதலாமிடம்

02    

    079

         ரோகினி
      சண்முகரத்தினம் 

          08.11.1999

யா/யாழ்ற்ரன் கல்லூரி
இரண்டாமிடம்

 

03    

    066

         சிந்துஜா
     பரமேஸ்வரன்

        02.05.2000

யா/கலாநிதிஆ.
தியாகராசாமத்திய மகாவித்தியாலம்            மூன்றாமிடம்

 

04    

     053

     யோகேஸ்வரன் கோபிகா

             18.02.2000

யா/யாழ்ற்ரன் கல்லூரி
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

 

   05    

     073

        தே.ரொபின்சியா

              07.02.1999

யா/யாழ்ற்ரன் கல்லூரி
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

  06    

     057

    துவாரகா பரமேஸ்வரன்

             14.04. 1999

யா/யாழ்ற்ரன் கல்லூரி
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

 

 

07    

     082

            கிருத்திகா 
          இராசலிங்கம்

             24.08.2000

யா/கலாநிதிஆ.
தியாகராசாமத்திய
மகாவித்தியாலம்
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

08     

     077

           சிவப்பிரியா  
     ஸ்ரீமகேஸ்வரலிங்கம்

              19.06.2000

யா/யாழ்ற்ரன் கல்லூரி
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

09     

     059

      மகேந்திரன் லயவாணி

                04.01.2001

யா/யாழ்/ இந்துக்கல்லூரி
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

10     

     074

           கிர்சிகா
       மோகநாதன்

          29.07.1999

யா/யாழ்ற்ரன் கல்லூரி
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

11     

     078

    சரவணபவானந்தசர்மா
           பிரசன்னசர்மா

                 09.06.2000

யா/கலாநிதிஆ.
தியாகராசாமத்திய மகாவித்தியாலம்
திறமைச் தேர்ச்சி சான்றிதழ்

                                         

                                                                          நன்றி 

                                                                                                             இங்ஙனம்
                                                                                       சுவிஸ் காரை அபிவிருத்தி சபை, 
                                                                                               செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                  22.12.2015

  •  
  •  

                          

       

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல் அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

swiss logo

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல்
அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்  நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள்  மூன்றாவது ஆண்டாக தயாரித்த  நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா வெகுவிமரிசையாக இடம்பெறவிருக்கிறது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகிறோம்.


24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00மணிக்கு ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய இரு மாடிக் கட்டிடத்தித் திறப்புவிழாவைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்கு பரிசளிப்பும், கௌரவிப்பும். நடைபெறும். விழாவிற்கு கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய  அனைத்து மாணாக்கரும் தமது பாடசாலை சீருடையில் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் இவ் விழாவிற்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், புலம்பெயர் காரையூர்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வருக, வருகவென வரவேற்கின்றோம். 

இவ் நிகழ்விற்கு ஆதரவு "அறக்கொடை அரசு" திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். நிகழ்வுகள் அனைத்தும் karainagar.co, karainagar.com ஆகிய இணையத்தள தொலைக்காட்சியில்  இலங்கை நேரம் காலை 9.00மணியில் இருந்து மதியம் 2.00மணிவரை  காண்பிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மூதறிஞர்களையும் கலைஞர்களையும் கௌரவித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

                        நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்
                                        ஆளுயர்வே ஊருயர்வு

                                                                               சுவிஸ் காரை அபிவிருத்தி சபை, 
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              22.12.2015

 

 


 

 

 

2016ஆம் ஆண்டு காரைநகரின் அபிவிருத்திதிட்டவரைபும், செயற்பாடுகளும் – சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

SWISS-LOGO

2016ஆம் ஆண்டு காரைநகரின் அபிவிருத்திதிட்டவரைபும், செயற்பாடுகளும்.
 அன்புடையீர் வணக்கம்!


 "பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்கு இணங்க கடந்த பல வருடங்களாக  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணந்து புலம்பெயர் அமைப்புக்களான  கனடா  காரை கலாச்சாரமன்றம், லண்டன் காரை நலம்புரிச்சங்கம், பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம்,  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை, அவுஸ்திரேலியா காரை நலன்புரிச்சங்கம் மற்றும் கிராம நலன்விரும்பிகளும் சேர்ந்து பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துவருவது யாவரும் அறிந்ததே!
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையால்
31.01.2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாய்ச் சங்கமான காரைநகர் அபிவிருத்திச்சபையை திறம்படச் செயல்படுத்துவதற்கு எமது சபையின் திட்டமிடல் ஓருங்கிணைப்பு உறுப்பினராகிய அறக்கொடை அரசு திருவாளர். சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள்  கடந்த மாதம் காரைநகர் சென்று அங்குள்ள சில அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அத்துடன் காரைநகர் அபிவிருத்திச்சபை நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி  மார்கழிமாதம் 24.12.2015  வியாழக்கிழமை மாலை 2.00 மணிக்கு காரைநகர் மாணவர் நூலகத்தில் எமது கிராமத்தின் அனைத்துப் பன்னாட்டு   நலன்புரி அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஒரு  கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளார். 

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற மொழிக்கிணங்க எமது கிராமத்தின் 2016ஆம் ஆண்டிற்கான கல்வி,சுகாதாரம், சுற்றுச்சூழல் பொதுவிடயம், கைத்தொழில் எனப்பல விடயங்கள் கலந்துரையாட இருப்பதாலும் ஒவ்வொரு துறைக்குமான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் பட்சத்தில் தங்களுடைய துறைசார் நிபுணத்துவம் ஊரின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதாலும் அனைத்துப் பன்னாட்டு   நலன்புரி அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறைந்தது இரண்டுபேர் வரை  பங்குகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
1991ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் புலம்பெயர்வு இடம்பெற்றது தற்பொழுது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையில் எமது கிராமத்து குடிப்பரம்பலை அதிகரிக்கச் செய்வதற்கும் நேரிய முறையில் காரை மண்ணின் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவை.  பூமிப்பந்தில் பரந்து வாழ்கின்ற எமது கிராமத்து உறவுகளின் பங்களிப்பைச்
சிறுதுளி பெருவெள்ளம்போலப் பெற்று 2016ஆம் ஆண்டு எமது காரைத்தாயை ஈழ மண்ணின் முன்னுதாரணமான கிராமமாக மாற்ற அத்திவாரம் இடுவோம். பார்வையாளர்களாயிருந்தது போதும். பங்காளிகளாவோம் வாருங்கள். ஒன்றிணைந்து வாருங்கள்.


நன்றி
'நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்'
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                     செயற்குழு உறுப்பினர்கள்,
                              சுவிஸ் வாழ் காரை மக்கள்.

 19.11.2015

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி-2015 இறுதிச் சுற்று மதிப்பீட்டுக்குத் தெரிவான போட்டியாளர்களின் சுட்டெண்கள்.

   swiss logo      

                       கட்டுரைப் போட்டி-2015

       இறுதிச் சுற்று மதிப்பீட்டுக்குத் தெரிவான

            போட்டியாளர்களின் சுட்டெண்கள்.

 

     எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

கடந்த 26–9-2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் ஆ.இரண்டாம் பிரிவு மற்றும் இ.மூன்றாம் பிரிவுகளில் கலந்துகொண்டவர்களில் முறையே 11 மற்றும் 8 போட்டியாளர்களின் கட்டுரைகள் இறுதிச் சுற்று மதிப்பீட்டிற்காக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதைப் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். 

கட்டுரைகளின் மதிப்பீடு சுட்டெண்களின் அடிப்படையிலேயே தற்போது இடம்பெறுகின்றது. தீர்ப்பின் தராதரம் மற்றும் ஒருபாற்க் கோடாத நிலையை உறுதிசெய்யும் முகமாகவும் நடுவர்களதும் ஒருங்கிணைப்பாளரதும் தீர்மானத்திற்கு அமையப் போட்டியாளர்களின் பெயர்கள் இறுதி முடிவுகளின் போதே அறிவிக்கப்படும். முதற்பிரிவில் (அ) இறுதிச் சுற்று மதிப்பீட்டிற்குத் தெரிவான முதற் பத்துக் கட்டுரையாளர்களின் சுட்டெண்கள் மிக விரைவில் அறியத்தரப்படும். பிரிவு வாரியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களின் சுட்டெண்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆ. இரண்டாம் பிரிவு

இ. மூன்றாம் பிரிவு

053

101

057

102

059

104

066

110

073

112

074

113

077

117

078

118

079

 

080

 

082

 

 

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை எமது சபையினர் நூலாக வெளியிடும் எண்ணம் கொண்டுள்ளதால் மேற்படி சுட்டெண்களுக்குரிய கட்டுரையாளர்கள் தமக்கு அணுக்கமான ஆசிரியர்கள், அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்விமான்கள் ஆகியோரின் உதவியோடு தத்தம் ஆக்கங்களை மொழி, கருத்தாளம், மேற்கோள், உரைநடை, வாதத்திறன், எடுத்துரைப்பு முறை, தகவற் செறிவு ஆகிய தளங்களில் செழுமைப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். தங்களுக்கு இவ்விடயத்தில் உதவி தேவைப்படின் எமது மின்னஞ்ஞலுக்கு அறியத்தரவும். மகிழ்ச்சியுடன் உதவத்தயாராக உள்ளோம். செழுமைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் 27-11-2015 வெள்ளிக்கிழமைக்கு முன்பதாக எமது karaithenral2014@gmail.com   என்ற மின்னஞ்ஞல் முகவரிக்கு அனுப்பவும். பதிப்புக்கான செழுமைப் படுத்தப்பட்ட கட்டுரைகள் பாமினி எழுத்துருவில் 14 எழுத்தளவில் 1.5 எழுத்திடைவெளியில் நான்கிலிருந்து எட்டுப் பக்கங்களுள் அடங்கியனவாக இருத்தல் வேண்டும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.  

                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                                                                                   செயற்குழு உறுப்பினர்கள்,

                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்.

                                                                                                    21. 10. 2015

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015- நன்றிக்குரியோர்.

SWISS LOGO

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015- நன்றிக்குரியோர்.

 

                       எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
                                          செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 

கடந்த 26–9-2015 அன்று காரை அபிவிருத்தி மற்றும் கல்வி வரலாற்றில் முக்கியமான நாள்களிலொன்றாகப் பதியப்பெறும். ஏறத்தாள நூறு மாணவர்கள் காரைநகரிலும் சூரிக் நகரிலும் ஏககாலத்தில் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டார்கள். இம்முறை மூன்று பிரிவுகளாகப் போட்டி இடம்பெற்றதும் போட்டிக்கான தலைப்புக்கள் மண்டபத்திலேயே மாணாக்கருக்கு வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள். எதிர்காலத்தில் இலண்டன், பாரிஸ், ஒஸ்லோ, ரொரன்ரோ, சிட்னி ஆகிய நகரங்களிலும் உள்ள காரை மாணவச் செல்வங்களை சிறியளவிலேனும் இணைத்து இப்போட்டியை நடாத்துவதற்கு அவ்வந்நாட்டு காரையூர்ச் சங்க நிர்வாகிகளைத் தாழ்மையுடனும் உறவின்பாற்பட்ட உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம். 

எமது சபை மாணாக்கரின் தொழில்சார் நிபுணத்துவம், மொழித்திறன், கலை, கல்வி, விளையாட்டுத்துறை போன்ற விடயங்களை மேம்படுத்தும் முகமாகக் கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கி ஊக்கமளித்து வருகின்றது. இக் குழு இரண்டாவது வருடமாக உலகில் பரந்துவாழும் காரைநகர் மாணக்கருக்கான கட்டுரைப் போட்டியை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்திலும், சுவிஸ் சரஸ்வதி வித்தியாலயத்திலும் வெகுசிறப்பாக நடாத்தி முடித்துள்ளது. 

கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவின் உறுபினர்களாகிய ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும், சுவிஸ் சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து மேற்பார்வையாளராக கடமையாற்றிய திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்களுக்கும், போட்டி ஓருங்கிணைப்பாளராக யேர்மனியில் இருந்து செயற்பட்ட கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களுக்கும், வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன் அவர்களுக்கும். கட்டுரைப் போட்டியின் தலைமை மேற்பார்வையாளார்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களுக்கும், காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களுக்கும், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்களுக்கும், சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதிஅதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்களுக்கும், காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய  ஆசிரியர் திரு.  ச. லிங்கேஸ்வரன் அவர்களுக்கும், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்களுக்கும், வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திருமதி பராசக்தி வரதராஜன் அவர்களுக்கும், யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு.கிருஷ்ணபவான் அவர்களுக்கும், செல்வி. றேனுகா செல்வராஜா அவர்களுக்கும், தொடர்பாடல் இணைப்பாளரான யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர்  திரு. சிவகுருநாதன் பிரபாகரன் ஆகியோருக்கும் எமது சபையினர் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். 

இக்கட்டுரைப் போட்டியைச் சிறப்பாக நடாத்துவதற்கு காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தை தந்துதவிய அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினருக்கும், மாணக்கர் எழுதுவதற்கான தாள்களையும், அனுமதி அட்டையையும் உருவாக்கி தந்த வவுனியா வாணி அச்சகத்தாருக்கும், மாணக்கரை ஊக்கமளித்து போட்டியில் பங்குபற்றச் செய்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், இன்னும் பல வழிகளில் பிரதி பலன் எதிர்பாராது உதவிகள் செய்த அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக.

                                                                              சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள், 
                                                                                            சுவிஸ் வாழ் காரை மக்கள். 
                                                                                                     14. 10. 2015

DSC07356 (Copy)DSC07361 (Copy) DSC07371 (Copy) DSC07389 (Copy) DSC07391 (Copy) DSC07407 (Copy) DSC07409 (Copy) DSC07410 (Copy) DSC07426 (Copy) DSC07433 (Copy) image1[1] (Copy) karaipoddi (Copy)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015

SWISS LOGO

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015

                    யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
                             சாந்துணையுங் கல்லாத வாறு
                                                                                   திருக்குறள்- அதிகாரம் – கல்வி


எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி  (26.09.2015) பிற்பகல் 3.00மணி யிலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  கன்னி முயற்சியாக கட்டுரைப் போட்டி  –2014 இலத்திரனியல் மூலமாக நடாத்தப்பட்டது. இதில் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணாக்கர் எண்மரும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவரொருவரும் பங்குபற்றியிருந்தனர். அவர்கள் மணிவாசகர் விழாவில் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டமை யாவரும் அறிந்ததே!

இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்தது. அதற்கமைய கட்டுரைப் போட்டி  இயற்திறன் முறையில் பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்பட்டன

(அ) கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.

(ஆ) மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள.

(இ) மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், இவ்வாண்டு    பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்கள்

கட்டுரைப்போட்டி- 2015 எமது சபையினால் உருவாக்கப்பட்டுள்ள  கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவின் உறுபினர்களாகிய ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை, ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம், சுவிஸ் சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா, கலாநிதி கென்னடி விஜயரத்தினம் (எதியோப்பியா), வவுனியா, சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன். ஆகியோரின் முயற்சியினாலும், காரைநகர் அபிவிருத்தித் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் அளப்பரிய முயற்சியினாலும்,   யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதிஅதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன்  ஆகியோர்களது ஓத்துழைப்புடனும், பரீட்சைக்கான வேலைத்திட்டங்கள் வெகுசிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டன.


யா/கலாநதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்,  யா/காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லாரி, யா/வேம்படிமகளீர் கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து காரைநகரைப் பூர்விகமாகக் கொண்ட மாணாக்கர் போட்டியிலன்று 14.30மணிக்கு தத்தமது பாடசாலைச் சீருடையில்  மண்டபத்திற்கு சமூகமளித்திருந்தனர். ஏக கால நேரத்தில் சூரிச் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் இருவர் பரீட்சைக்குத் தயாராகியிருந்தனர்.

கட்டுரைப் போட்டியின் தலைமை மேற்பார்வையாளாராக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், கட்டுரைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகக் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களும் கணணித் தொழில்நுட்ப இணைப்பாளராகத் திரு. சிவகுருநாதன் பிரபாகரன் அவர்களும், மேற்பார்வையாளார்களாகப் பின்வருவோரும் சிறப்புறச் சேவையாற்றினார்கள்.
1.    ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை அவர்கள்
2.    ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம்  அவர்கள்
3.    யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள்
4.    கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள்  
5.    சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயப் பிரதி அதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள்
6.    வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலயப் பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன் அவர்கள்
7.    வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திருமதி பராசக்தி வரதராஜன் அவர்கள்
8.     யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு.ந.கிருஷ்ணபவான் அவர்கள்    
9.    மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்கள்
10.    கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர் திரு.ச.லிங்கேஸ்வரன் அவர்கள்
11.    செல்வி றேனுகா செல்வராஜா அவர்கள்  
12.    சுவிற்சர்லாந்தில் சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்கள்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு மண்டபம் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர்,  அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மாணக்கர் என நூற்றுக் கணக்கானோரால் நிறைந்திருந்தது. முதல் நிகழ்ச்சியாகக் தேவாரம். அடுத்ததாகச் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் நீத்தாருக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையைப் பூர்த்தி செய்தபின் போட்டி பிற்பகல் 3.00மணிக்கு ஆரம்பமாகி 5.00மணிக்கு நிறைவுபெற்றது. எல்லோரும் குளிர்பானம் அருந்தியபின் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் அகத்திலும், புலத்திலும் உள்ள மாணாக்கரை ஒன்றிணைத்து இக் கட்டுரைப்போட்டியை நடாத்தியமை காரைநகரின் நீண்ட நெடிய கல்வி வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பது மிகையில்லை.

நிகழ்வின் நிழற்படங்களை  கிழேகாணலாம்.
வினாக்கொத்தினையும் கிழேகாணலாம்

                                                                         நன்றி
                             "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                                     இங்ஙனம்,
                                                                              சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                  செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                      28.09.2015

 

       DSC07357 (Copy)DSC07358 (Copy) DSC07359 (Copy) DSC07361 (Copy) DSC07362 (Copy) DSC07363 (Copy) DSC07364 (Copy) DSC07365 (Copy) DSC07366 (Copy) DSC07367 (Copy) DSC07368 (Copy) DSC07369 (Copy) DSC07370 (Copy) DSC07371 (Copy) DSC07372 (Copy) DSC07374 (Copy) DSC07375 (Copy) DSC07376 (Copy) DSC07377 (Copy) DSC07379 (Copy) DSC07384 (Copy) DSC07389 (Copy) DSC07391 (Copy) DSC07396 (Copy) DSC07398 (Copy) DSC07406 (Copy) DSC07407 (Copy) DSC07409 (Copy) DSC07410 (Copy) DSC07426 (Copy) DSC07433 (Copy) DSC07444 (Copy) image1 (Copy) karaipoddi (Copy)

 

                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
                                             கட்டுரைப் போட்டி – 2015
                                                               26.09.2015

                                                            வினாக் கொத்து

                                                          அ.    கீழ்ப்பிரிவு

பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் கட்டுரை வரைக.
 
1.    சமய குரவர் நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் சைவ சமயத்திற்கு ஆற்றிய தொண்டைப் பற்றி கட்டுரை வரைக.

2.    "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு". இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.  

3.    இசைக் கலை அல்லது நடனக் கலையின் முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை வரைக.

4.     நீர் விரும்பும் காரைநகர்ப் பெரியார் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக.

5.    காரைநகர் மணிவாசகர் சபை குறித்துக் கட்டுரை வரைக.


                                                                  வினாக் கொத்து

                                                                  ஆ. மத்தியபிரிவு

பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் கட்டுரை வரைக.  

1.    காரைநகர் அபிவிருத்திச் சபை அல்லது நீரறிந்த ஓர் சமூக மேம்பாட்டு நிறுவனம் பற்றிக் கட்டுரை வரைக.

2.    பின்வரும் காரைநகர்ப் பெரியார்களுள் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக:
 அ. வைத்தீசுவரக்குருக்கள்
 ஆ. கலாநிதி ஆ. தியாகராசா
 இ. சயம்பு வாத்தியார்
   
    3. ஊரின் சீரிய வளர்ச்சியில் ஆன்மீகத்தின் பங்கு பற்றிக்   கட்டுரை  வரைக.   
 
4. திருக்குறளின் மகத்துவம் அல்லது பாரதியாரின் பாடல்கள் குறித்துக் கட்டுரை வரைக.

5. "பிச்சை புகினும் கற்கை நன்றே". இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.


                                                            வினாக் கொத்து
                   

                                                               இ. மேற்பிரிவு

பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் நான்கு அல்லது ஆறு பக்கங்களில் கட்டுரை வரைக.  
      
1.    தமிழர் திருமண சம்பிரதாயத்தில் "சீதனம்" பற்றிய உமது கருத்து யாது?

2.    காரைநகர் மேம்பட நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதல் ஐந்து விடயங்கள் யாவை? விளக்குக.

3.    "அறிவே அனைத்து ஆற்றலும்" இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.

4.    பின்வரும் காரைநகர்ப் பெரியார்களுள் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக:
 அ. அருணாசல உபாத்தியாயர்
ஆ. சங்கநூற் செல்வர் பண்டிதர் சு. அருளம்பலவனார்
இ. அலன் ஏபிரகாம்

5.    புலம் பெயர் மக்கள் மத்தியில் தமிழ் மொழியின் எதிர்காலம்.    

 

 

 


 

 

 

 

 

 

சுவிற்சலாந்தில் நடைபெற்ற ‘சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்அவர்கள்’ நூல் அறிமுகம்

சுவிற்சலாந்து காரை அபிவிருத்தி சபையின் பதினோராவது ஆண்டு கலை விழாவாகிய "காரை தென்றல் – 2015" கடந்த செப்டம்பர் 13, 2015 அன்று சுவிற்சலாந்தில் வாழும் காரை குடும்பங்களின் பேராதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

காரை தென்றல்-2015 விழாவிற்கு பிரதம விருந்தினராக காரைநகரிலிருந்து வருகை தந்திருந்த எதியோப்பியா பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கலாநிதி.ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். நிகழ்வில் சுவிஸ் வாழ் வளர்ந்து வரும் இளம் சிறார்களின் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன. காரை தவில், நாதஸ்வர கலைஞர்கள் மங்கள இசை வழங்கி சிறப்பித்திருந்தனர்.  

இவ்விழாவில் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்கள் பற்றிய சரித்திர நூலாகிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்'என்ற நூலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருந்தது. 

காரைநகர் சைவ மகா சபையினால் 1971 ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட இந்நூல் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜூலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நூல் பற்றிய அறிமுக உரையை காரைநகர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான முன்னாள் ஆசிரியரும், விளையாட்டு ஆர்வலரும், சமூகத் தொண்டரும், பிரான்ஸ் காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமாகிய திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்ரர்) அவர்கள் நிகழ்த்தியிருந்தார். 

அவர் தனது உரையில் காரைநகரில் சைவ மகா சபையின் முதல் வெளியீட்டுக்கு பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் அரும்பணியாற்றினார். தற்பொழுது கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்களின் அதீத உழைப்பினால் இந்நூல் மறுபிரசுரமாக வெளிவந்துள்ளது. அருணாசலம் உபாத்தியார் வடமாகாணத்தில் சைவத் தமிழ் பாடசாலைகளை நிறுவுவதற்கு அரும்பணியாற்றினார், அவர்கள் இல்லாதவிடத்து காரைநகரில் சைவமும் தமிழும் தளைத்தோங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பணியை அவருக்குப் பின் அருணாசலம் உபாத்தியார் முன்னெடுத்து வந்தார். இந்நூலினை அவருடைய பேரனார் பேராசிரியர் சிவபாதம் பரமசிவம் அவர்கள் கனடாவில் வெளியிட்டு வைத்தார். அருணாசலம் உபாத்தியார் சைவத்திற்கும் தமிழுக்கும் செய்த அரும்பணிகள் நிறையவே உண்டு. நேரத்தினை கருத்தில் கொண்டு நிறைவு செய்கின்றேன் எனவும் இந் நூல் எல்லோர் இல்லங்களிலும் இருக்கவேண்டிய அரும் காப்பியம் என்றும் குறிப்பிட்டார். 

நூலினை சூரிச் விஸ்ணு துர்க்கை அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ . த. சரவணபவானந்த குருக்கள் அவர்கள் வெளியிட்டு வைத்தார். நூலின் முதல் பிரதியை சைவசமய ஆர்வலரும், சமூகத் தொண்டரும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமாகிய திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

தொடர்ந்து பிரதிகளை சூரிச் நகரிலிருந்து தொலைதூரம் வாழ்ந்தாலும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபைக்கு தொடர்ச்சியாக தனது ஆதரவினை வழங்கி வரும் திரு. சிவசுப்பிரமணியம் திரவியபவான் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

அடுத்து சைவத் தமிழ் பாரம்பரியத்தை காத்த எமது ஊர்ப் பெருமகன் அருணாசலம் அவர்களின் சரிதத்தை எமது அடுத்த தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவி செல்வி சுபாஜினி சற்குணராஜா அவர்கள் நூலின் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 

ஈழமணித்திருநாட்டின் சைவக் கல்விப் பாரம்பரியத்தை அந்திய சக்திகளின் ஆதிக்கத்தில் அழிந்து போகாமல் பாதுகாத்த கடமை வீரர் காரைநகர் மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களுக்கு தமது நன்றிக் கடனைச் செலுத்தி இவ்வாண்டு சூரிச் நகரில் வீசிய காரைத் தென்றலை சுவிற்சலாந்து வாழ் காரை மக்கள் அர்த்தமுள்ளதாக்கியிருந்தனர் என்று கூறலாம். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

karaithenral 2015 01 154 (Copy) karaithenral 2015 01 162 (Copy) karaithenral 2015 01 163a (Copy) karaithenral 2015 01 166 (Copy) karaithenral 2015 01 168 (Copy) karaithenral 2015 01 238 (Copy) karaithenral 2015 01 241 (Copy)

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி- 2015 காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும்.

SWISS LOGO

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி- 2015
காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய
நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும்.

இடம்: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயம்.
திகதி;: 26.09.2015ம் திகதி சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 3.00மணி இலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை

இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.

(அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.

(ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள்.

(இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், இவ்வாண்டு     பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்களும்,

அனைத்து மாணக்கரும் பரீட்சை மண்டபத்திறு;கு  பிற்பகல் 2.45 மணிக்கு சமூகமளித்தல் வேண்டும்.

போட்டி இயற்திறன் முறையில் அமைவதால் கட்டுரைத் தலைப்புக்கள் போட்டியின் போது மண்டபத்திலே அறிவிக்கப்படும்.

சமூகப் பிரச்சனைகள், காரைநகர் அபிவிருத்தி, கற்றல் அல்லது அறிவின் முக்கியத்தும், சமயம், இலக்கியம், கலைகள், ஊர் அறிஞர்கள், காரை சமய மற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி ஏறத்தாள ஐந்து தலைப்புக்கள் வழங்கப்படும். மாணவர்கள் மேற்கூறிய தளங்களில் விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசித்தும் தகவல் திரட்டியும் தம்மைத் தயார்செய்து கொள்ளலாம். 

கட்டுரைகளில் தகவற் செறிவும், மொழித்திறனும், கற்பனையும், புதிய கருத்துக்களும், ஊர் மேம்பாடு பற்றிய ஆழங்காற்பட்ட அக்கறையும், துரநோக்கும் அவசியம்.

கட்டுரைகள் சாதாரண கையெழுத்தில் அண்ணளவாக 
அ. பிரிவு இரண்டிலிருந்து  மூன்று பக்கங்களிலும், 
ஆ. பிரிவு மூன்றிலிருந்து நான்கு பக்கங்களிலும் மற்றும் 
இ. பிரிவு நான்கிலிருந்து ஆறு பக்கங்களில் அமையவேண்டும்.

கட்டுரைப் போட்டியிலன்று மாணவர்கள் தத்தம் பாடசாலைக்குரிய சீருடையில் சமுகம் தரவேண்டும். தேவையேற்படின் மாணாக்கர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.


எமது சபையினால் உருவாக்கப்பட்டுள்ள  கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவின் உறுபினர்களாகிய ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை, ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம், வவுனியா, சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன். ஆகியோர் பரீட்சையின் மேற்பார்வையாளார்களாக செயலாற்றுவார்கள்.


கட்டுரை எழுதுவதற்கான விடைத்தாள்கள், சுட்டெண்கள் அனைத்தும் மாணக்கருக்க மண்டபத்தில் வழங்கப்படும் என்பதை மாணவரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.


மேற்படி கட்டுரை போட்டி சம்பந்தமாக மேலதிகதகவல் தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை:-           0 77 667 94 04
ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம்:-    024 222 16 05
வவு/சி/வி/வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன்.:-   077 614 35 26

கனடா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இப் போட்டி ஏககாலத்தில் இடம்பெறும்.

வெற்றியாளர்களுக்கான பரிசுகள் எதிர்வரும் மார்கழி மாதம் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவைத் திருவிழாவின் – ஆதிரைநாள் அன்று மணிவாசகர் விழாவில் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும். வெற்றியாளர்கள் நேரில் சமூகமளிக்க முடியாவிடின் தங்கள் சார்பாகப் பரிசு பெற்றுக்கொள்பவரின் பெயரை மேற்படி இணைய அஞ்சல் மூலம் எமக்கு அறியத்தரலாம். 

 

திறமைச்சித்தி மதிப்பளிப்பு -2014


2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தர (சாதாரண பரீட்சையில் O/L) இலங்கை பூராகவும் உள்ள காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட 5A தரத்திலான சித்திகளுட்பட மொத்தமாக  ஒன்பது பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.  சு.கா.அ.சபையின் பரிசிலும் சிறப்பும் பெறவிரும்பும் மேற்படி தகமையுள்ள மாணாக்கர் தம் விபரங்களையும் பாடசாலை அதிபரினால் உறுதியளிக்கப்பட்ட பெறுபேற்று விபரங்களையும் எமது மின்அஞ்சலுக்கு karaithenral2014@gmail.com 

அனுப்பலாம்.

                                                                  நன்றி

                           "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                                      இங்ஙனம்,
                                                                             சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                   செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                    சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                  22.09.2015

 

 

 


                                           

மங்கள வாத்திய இசையோடு மலர்ந்த காரைத்தென்றல்-2015

SWISS LOGO

 மங்கள வாத்திய இசையோடு மலர்ந்த  

             காரைத்தென்றல்-2015

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பதினொராவது ஆண்டுவிழா சுவிஸ் வாழ் காரைக்குடும்ப அங்கத்தவர்களின் உன்னதமான பேராதரவுடன்  ஆவணி திங்கள் 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00 மணிக்கு  Kirchgemeindehaus Pfarrhausstrasse 2, 8424 Embrach மண்டபத்தில் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. நிகழ்வுகளை திரு கனகசபை சிவபாலன், திரு சக்திவேல் சத்தியரூபன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதலாவதாக மங்கள வாத்திய கலைஞர்கள்  மங்களகரமாக பிள்ளையார் துதி இசைக்க மண்டப வாசலிலுள்ள மங்கள விளக்கினை திருமதி வாசுகி திரவியபவன், திருமதி சொர்ணம் சண்முகராஜா, திருமதி வதனி சற்குணராஜா, ஆகியமூவரும் மண்டபத்தின் மேடையிலுள்ள விளக்கை திருமதி க.சிவனேயன், திருமதி  மனோரஞ்சிதம் கணேஸ், திருமதி  சந்திரவதனி நந்தகுமார், திருமதி. வதனா லோகதாஸன்  திருமதி தனலட்சுமி விஜயானந்தன் ஆகியோர் சுடரேற்றி வைக்க நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

கடவுள் வணக்கம் செல்விகள் சாரங்கி சற்குணராஜா, கவிதா திருவருள்நாதன், கஜலக்ஷி உருத்திரர், பாரதி லோகதாஸன், ஆர்த்தி நகுலேஸ்வரன் ஆகியோரால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மன்ற கீதம் இறுவெட்டில் இசைக்கப்பட்டது. நிகழ்வில் "கல்வியின் சொத்து" என வர்ணிக்கப்படும் அமரர் க. வைத்திஸ்வரக்குருக்கள், கிழவன்காடு கதிர்காமசாமி கோவில் பிரதமகுரு அமரர் ஆறுமுகக்குருக்கள், எமது மன்றத்துக்கு நீண்ட காலமாக சேவைகள் பல புரிந்த அமரர் சுப்பிரமணியம் உருத்திரர், காரைத் தென்றல் நிகழ்வுகளை ஒளி,ஒலிப்பதிவு செய்த சுதா விடியோ நிறுவனர் திரு பாஸ்கரன் (சுதா) மற்றும் காரைநகர் மாணவர்களுக்கு சேவை செய்த திரு.சீவரட்ணம் நவரட்ணம் மற்றும் நாட்டின் அசாதரண சூழ்நிலைகளால் உயிரிழந்த பொதுமக்களையும்  நினைவுறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

காரையம்பதி மூத்த நாதஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன்  தவில் வித்துவான் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) குழுவினரின் "இசைக் கச்சேரி" இசையால் வசமாகஇதயம் ஏது என்ற கூற்றுக்கு கிணங்க ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. மிகவும் அற்புதமாக தவில், நாதஸ்வரக் கலைஞர்கள்  கானமழை பொழிந்தார்கள். அதனைத்தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு SKT நாதன் கடை உரிமையாளர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் அனுசரணை வழங்கினார்கள்.


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் தவில், நாதஸ்வரக் கலைஞர்களை விருது வழங்கி கௌரவித்தனர். இவ் விழாவின் பிரதமவிருந்தினர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் வாழ்த்திசைக்க சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள், திரு,சிவனேயன். கோபி,  கலாநிதி  கென்னடி விஜயரத்தினம் SKT நாதன் கடை உரிமையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் ஆகியோர்கள் பொன்னாடைபோத்தி சந்தனமாலை அணிவித்து வாழ்த்துப்பாக்களை வழங்கி கௌரவித்தனர். அதனை தொடர்ந்து ஆசியுரையை சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் வழங்கினார்.


வரவேற்பு நடனத்தினை செல்வி சகானா திரவியபவன் வழங்கினார்       சிறுவர்களின் பேச்சுப் போட்டியில் "நான் விரும்பும் கவிஞர் பாரதி" என்ற தலைப்பில் செல்வன் நவின் நகலேஸ்வரன், செல்வி கஜலக்ஷி உருத்திரர், செல்வி அபிராமி சிவகுமார்,  "திருவள்ளுவர்" என்ற தலைப்பில் செல்வி சராங்கி லிங்கேஸ்வரன் ஆகியோர்கள் பங்குபற்றினர். போட்டியின் நடுவர்களாக ஆசிரியர் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (பிரான்ஸ்) கலாநிதி கென்னடி விஜயரத்தினம் (எதியோப்பியா), ஆசிரியர் திருமதி சுகந்தி ரவிந்திரன் (சுவிஸ்) ஆகியோர்கள் பணியாற்றினார்கள்.


  அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல், வயலின் இசையை செல்வி ஆர்த்தி நகுலேஸ்வரன் நிகழ்த்தினார். பேச்சு செல்வன் ஆர்வலன் சரவணப்பெருமாள் நிகழ்த்தினார் பாட்டு நிகழ்வை செல்வி பாரதி லோகதாஸன் இனிமையாக பாடினார். ஜீவயோகாசனத்தினை செல்வன் தினா சண்முகநாதன் மிக அற்பதமாக செய்து காட்டினார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரை சபையின் பொருளாளர் திரு முருகேசு பாலசுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டது.


நூல் அறிமுகங்களில் முதலாவதாக "அர்த்தமுள்ள இந்து ஆலய வழிபாடு" என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தார் சிவஸ்ரீ இராம சசிதரக்குருக்கள். அவர்கள் தனது உரையில் இந் நூலின் அவசியம் பற்றியும், இளையோருக்கு இந்து ஆலயத்தின் வழிபாட்டு முறைகள் இலகுவான முறையில் அறிந்து கொள்வதற்கு பயன்படக்கூடியது என்றும் கூறியிருந்தார். இந் நூலின் மூன்று பிரதிகளை திரு.சுப்பிரமணியம் விமலநாதன், திரு.கோபாலசாமி ஸ்ரீசங்கர் திரு பொன்னம்பலம் தயானன் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.


"அருணாசலம் உபாத்தியார்" அவர்களின் வரலாற்று நூலினை திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்கள் அறிமுகம் செய்து உரைநிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில் காரைநகரின் சைவவமகாசபையின் முதல் வெளியீட்டிக்கு செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் அரும்பணியாற்றினார் தற்பொழுது சைவசித்தாந்த மன்றம்  கனடா  அதன் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்களின் அதீத உழைப்பினாலும். திருமதி கிருஷணவேணி சோதிநாதன் அவர்களின் முயற்சியினாலும் இந்நூல் மறு பிரசுரமாக வெளிவந்துள்ளது. அருணாசலம் உபாத்தியார் வடமாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கு அரும்பணியாற்றினார், அவர்கள் இல்லாதவிடத்து காரைநகரில் சைவமும் தமிழும் தலைத்தோங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.   ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பணியை அவருக்குப்பின் அருணாசலம் உபாத்தியார் முன்னெடுத்து வந்தார். இம் மலரினை அவருடைய பேரனார் திரு. சிவபாதம் பரமசிவம் அவர்கள் கனடாவில் வெளியிட்டு வைத்தார். அருணாசலம் உபாத்தியார் சைவத்திற்கும் தமிழுக்கும் செய்த அரும்பணிகள் நிறையவே உண்டு நேரத்தினை கருத்தில் கொண்டு நிறைவு செய்கின்றேன் எனவும் இந் நூல் எல்லோர் இல்லங்களிலும் இருக்கவேண்டிய அரும்காப்பியம் என்றும் கூறியிருந்தார் முதல் மூன்று பிரதிகளை சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்கள் வெளியிட்டு வைக்க திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள், செல்வி சுபாஜினி சற்குணராஜா திரு. சுப்பிரமணியம் திரவியபவான் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.


ஊரில் இருந்து  காணொளிமூல வாழ்த்துரைகளை பண்டிதை, கலாபூசணம் யோகலட்சுமி சோமசுந்தரம், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி, பிரதி அதிபர் வவுனியா, சித்தி விநாயகர் வித்தியாலயம் திரு.அருணாசலம் வரதராஜன்  ஆகியோர்கள் வழங்கியிருந்தார்கள். ஏடு நிறுவனத்தின் சேவைகள், பணிகள் தொடர்பாக காணொளிமூலம் காண்பிக்கப்பட்டது. இதனை சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் தொகுத்து வழங்கினார்.


 புலம் பெயர் மன்றங்களின் பணிகள், ஒற்றமையின் முக்கியத்துவம் பற்றி  கவிதை வடிவில் கருத்தரைத்தார் திரு.முருகேசு பாலசுந்தரம் அவர்கள்.


வினோத உடை நிகழ்வில் செல்வன் சிறோசன் ருசியந்தன், செல்வன் நாவின் தயாபரன் செல்வி மகிழினி நவரட்ணம் ஆகியோர் பங்குபற்றினார் இந் நிகழ்வினை செல்விகள் சுபாஜினி சற்குணராஜா, பானுஜா பாலசுந்தரம் ஆகியோர்கள் தொகுத்தளித்தனர். வயலின் இசையை செல்வி பைரவி லோகதாஸன் வழங்கினார். 


செல்வி சாம்பவி விவேகானந்தா அவர்களின் பரதநாட்டியம் மிகத் திறமையான நடன அபிநயம் பார்வையாளரின் கண்களுக்கு விருந்து அளித்திருந்தது.


தேனீர் இடைவேளையை தொடர்ந்து சபைத் தலைவர் திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்களின் தலைமையுரை நிகழ்த்தினார் அவர் தம் உரையில் இவ் விழாக்களை நடத்துவதன் மூலம் எமது இளம் சிறார்களுக்கு எம் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடுகளை உணர்த்திக் கொள்ளலாம், வளர்த்துக் கொள்ளலாம் என்று கருத்துரைத்தார்.


கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்களின்; தலைமையில்  இளையோர் கலந்துரையாடல்  நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு சுவிஸ் நாட்டின் கல்வி எதை நோக்கி? திறமை? பழக்கவழக்கம்? தன்னம்பிக்கை? ஆகிய எண்ணக் கருத்துக்களை கருத்திற் கொண்டு பத்து சுவிஸ் வாழ் காரை மாணவர்கள் பங்குபற்றினர். இந் நிகழ்வு அரங்கத்தில் எல்லோரையும் கவர்ந்து கொண்டது. இதில் பங்குபற்றிய மாணவர்களை கௌரவித்து கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களும் திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன் அவர்களும்  பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கினார்கள். கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா அம்மணியை திருமதி வாசுகி திரவியபவான் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலையணிவித்து கௌரவித்தார்.

கனடாவிலிருந்து "எனது ஊர் காரைநகர்" சஞ்சிகையின் ஊடகவியலாளர்  தீசன் திரவியநாதன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. இவர்களை சபையின் போஷகர் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

உலகசைவப் பேரவைத் தலைவர் திரு ச.பற்குணராஜா யோகானந்த அடிகள் (பிரான்ஸ்) அவர்களின் வாழ்த்து செய்தியினையும், கௌரவவிருந்தினர் உரையையும் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார் இவர்களை திரு. முருகேசு சற்குணராஜா சபைசார்பாக பொன்னாடை போர்த்தி மாலையணிவித்து கௌரவித்தார்.

பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கலாநிதி கென்னடி விஜயரத்தினம் தனது உரையில் புலம் பெயர் வாழ் நம் உறவுகள் தம் தாய் ஊரை நேசிக்கவேண்டும். எமது ஊரின் முன்னேற்றத்திற்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டும். இளையோரிடம் சபைநடத்த பெரியோர்கள் வழிப்படுத்த வேண்டும். என்று கூறியிருந்தார். பிரதம விருந்தினரை திரு.நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

காரைநகர் அபிவிருத்திச்சபைத் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், ஒய்வுநிலை அதிபர் மு.சு. வேலாயுதபிள்ளை, கலாநிதி ஆ.தியாகராஜாம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் ஆகியோரது காணொளிமூல வாழ்த்துரைகள் திரையில் காண்பிக்கப்பட்டன.

திரு.துரைராஜா ஈஸ்வரன், அவர்களும், திரு சக்திவேல் சத்தியரூபன் அவர்களும் எல்லோரையும் மெய் மறந்து வயறு குலுங்க, குலங்க "சிரிப்பு வைத்தியம்" செய்தார்கள். வைத்தியத்தின் இறுதியில் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் இவர்களின் திறமையை வெகுவாக பாராட்டி தொடர்ந்து பங்குபற்ற வேண்டும் என்று வாழ்த்தினார். இவர்கள் இருவருக்கும் திரு.சுப்பிரமணியம் விமலநாதன் அவர்கள் நினைவுப்பரிசும் மாலையும் அணிவித்து கௌரவித்தார்.

சுவிஸ் வாழ் காரை மாணவர்கள்  "இலங்கையில் இருந்து இறக்குமதி" என்ற  நாடகத்தை வெகு சிறப்பாக ஒழுங்கமைத்து நடித்தனர்.  இந்நாடகம் சபையினரை நன்றாக கவர்ந்திருந்தது. நாடகத்திற்கான இறுதியில் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்கள் நாடகத்திற்கான கருத்துரை வழங்கி பாராட்டினார். நாடகத்தில் பங்குபற்றியவர்களுக்கு திரு, திருமதி கணபதிப்பிள்ளை நந்தகுமார் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர். 


அதனைத்தொடர்ந்து சபையின் செயலாளர் தம்பையா தயாபரன் நன்றியுரை வழங்கினார்கள். 
               நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
               அன்றே மறப்பது நன்று – திருக்குறள்

 இவர் தனது உரையில் தாயகத்திலிருந்து காணொளிமூல வாழ்த்துரை வழங்கியோருக்கும், வாழ்த்துப்பாக்களை எழுத்துருவாக்கி அச்சுப்பதிவு செய்தும் காணொளிமூலம் வாழ்த்துரைகளை ஒளி,ஒலிப்பதிவு செய்ய அரும்பணியாற்றிய கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களுக்கும், கலைஞர் கௌரவிப்புக்கு அனுசரணை வழங்கிய SKT உரிமையாளர் சுப்பரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கும், இலங்கை சென்று வருவதற்கான விமானச்சீட்டுக்கு அனுசரணை வழங்கிய  Siva Travel உரிமையாளர் திரு.கனகசுந்தரம் சிவநேயன் அவர்களுக்கும், வர்ண துண்டுப்பிரசுரங்களை வடிவமைத்த திருமதி மலர் குழந்தைவேலு கனடா அவர்களுக்கும் விழாவினை விளம்பரப்படுத்திய காரைநகர்.கொம், காரைநகர்.கோ லங்காஸ்ரீ நிறுவனத்தினருக்கும், மேடை அலங்காரம் செய்த  திரு.நவம், ஒலிபெருக்கியை ஏற்பாடுசெய்த திரு.தெய்வேந்திரன், இன்னும் பலவழிகளில்   விழா சிறப்புற ஓத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் சபை சார்பாக தெரிவித்தார்.


மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களில் முதலாமிடம் செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன் இரண்டாமிடம் கஜலக்ஷி உருத்திரர், மூன்றாமிடம் செல்வி அபிராமி சிவகுமார் ஆகியோருக்கும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் நினைவுப் பரிசில்களை பிரதம விருந்தினர்  கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள், திரு. சுப்பிரமணியம் 
கதிர்காமநாதன் அவர்கள், திரு.நல்லதம்பி சரவணப்பெருமாள் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். 

உன்னதமான பேராதரவுடன் காரைத்தென்றல்-2015 நிகழ்வை மிகச்சிறப்பாக நாடத்துவதற்கு ஒத்தழைப்பு வழங்கிய சுவிஸ் வாழ் காரைக் குடும்ப அங்கத்தவரின்  பெயர்கள் செல்வன் தினா சண்முகநாதனால் அதிஷ்டம் பார்க்கப்பட்டவேளை திரு. கந்தசாமி சிவபாலன் தெரிவுசெய்யப்பட்டார்; இரவு 11.00மணிக்கு இராப்போசனத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
    
                                    "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"

  நிகழ்வின் நிழற்படங்களை  கிழேகாணலாம்.


                                                             நன்றி

                                                                                                           இங்ஙனம்,
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                            21.09.2015
                            

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் தொழில் அதிபருக்கு மதிப்பளிப்பு

      SWISS LOGO

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் 
           தொழில் அதிபருக்கு மதிப்பளிப்பு

எமது சபை தோன்றிய காலத்தில் இருந்து தொழில்சார் நிபுணத்துவம், கலை, கல்வி, மருத்துவம் விளையாட்டுத்துறை போன்ற ஊர் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தி ஊக்கமளித்து வருகின்றது. அதன் பிரதியீடாக கடந்த 13.09.2015இல் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  பதினொராவது ஆண்டுவிழாவான காரைத்தென்றல்-2015 நிகழ்வில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக  சுவிற்சர்லாந்தில் பிரபல வர்த்தக நிறுவனமான திகழும் SKT நாதன் கடை உரிமையாளரான திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு மதிப்பளித்திருந்தது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தோற்றத்திற்கு முக்கிய பங்காற்றியவரும் சபையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு, கூடிய அணுசரனை வழங்கி வருபவரும்,  ஊரின் ஆன்மிகம், கல்வி, மருத்துவம், பொதுத்துறை போன்ற விடயங்களின் வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருபவருமாகிய தொழில் அதிபர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு எமது சபையின் தலைவர் திரு. பூபாலபிள்ளை விவேகானந்தா "அறக்கொடை அரசு" என்னும் விருது வழங்கி வாழ்த்து இசைக்க திரு,திருமதி தம்பிராஜா சற்குணராஜா அவர்கள் பொன்னாடைபோத்தி சந்தனமாலை அணிவித்து வாழ்த்துப்பாக்களை வழங்கி கௌரவிப்பதில் எமது சபை பெருமிதம் கொள்கின்றது.

                                 தள்ளா விளையளும் தக்காரும் தாழ்விலாச்
                                           செல்வரும் சேர்வது நாடு – குறள்


      நிகழ்வின் நிழற்படங்களையும் வாழ்த்துமடல்களையும் கிழே காணலாம்.


                                                                  நன்றி
                                                                                                                                                                                                                                                                               இங்ஙனம்,
                                                                                   சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              20. 09. 2015

 

 

karaithenral 2015 01 109 (Copy)karaithenral 2015 01 110 (Copy)swisskaarai_vaalthuppa1 copy (Copy)

karaithenral 2015 01 112 (Copy) karaithenral 2015 01 113 (Copy) karaithenral 2015 01 116 (Copy) karaithenral 2015 01 119 (Copy) karaithenral 2015 01 122 (Copy) karaithenral 2015 01 123 (Copy) karaithenral 2015 01 124 (Copy)

காரைத் தென்றல் -2015இல் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை சுவிஸ் குடும்பம் கௌரவித்தது.

SWISS LOGO

காரைத் தென்றல் -2015இல் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை சுவிஸ் குடும்பம் கௌரவித்தது.


புலம்பெயர் வாழ்வியலில் கனடாக்குடும்பம், லண்டன்குடும்பம், பிரான்ஸ்குடும்பம், சுவிஸ்குடும்பம் என எமது கிராமத்து உறவுகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைத்தேடி தவில் நாதஸ்வரக்கலைஞர்கள் வருகைதந்துள்ளார்கள்.


சுவிஸ் வாழ் காரை குடும்ப அங்கத்தவர்களின் உன்னதமான பேராதரவுடன்1 ஆவணி திங்கள் 13.09.2015இல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 அளவில் நடைபெற்ற காரைத்தென்றல்- 2015 நிகழ்வில் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை சுவிஸ் குடும்பம் கௌரவித்தது.


காரையம்பதி மூத்த நாதேஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன் தவில் வித்துவான் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) குழுவினரின் "இசைக் கச்சேரி" இசையால் வசமாகஇதயம் ஏது என்ற கூற்றிற்கிணங்க ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டது. மிகவும் அற்புதமாக தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் இசை வழங்கியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்விற SKT நாதன் கடை உரிமையாளர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அணுசரனை வழங்கியிருந்தார்கள்.


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் தவில், நாதஸ்வரக் கலைஞர்களை விருது வழங்கி கௌரவித்தனர். இவ் விழாவின் பிரதமவிருந்தினர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் விருது வழங்கி வாழ்த்து இசைக்க நாதஸ்வர வித்துவான் திருமலை முத்துலிங்கம் யோகேஸ்வரன் அவர்களுக்கு "ஸ்வரஞான வேந்தன்" விருதும், தவில் வித்துவான உடுப்பிட்டி பத்மநாதன் செந்தூரன் அவர்களுக்கு "சிவநாத லயவாரதி" விருதும் நாதஸ்வர வித்துவான் சுதுமலை நாகராசா மதுசூதனன் அவர்களுக்கு "சுவிஸ் நாதச் சாரல்" விருதும் காரையம்பதி மூத்த நாதஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன் தவில் வித்துவான் கோவில்குளம் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) அவர்களுக்கு "லயகேசரி" விருதும் வழங்கி சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள், திரு.சிவனேயன் கோபி, கலாநிதி கென்னடி விஜயரத்தினம் SKT நாதன் கடை உரிமையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் ஆகியோர் பொன்னாடைபோத்தி சந்தனமாலை அணிவித்து வாழ்த்துப்பாக்களை வழங்கி கௌரவித்திருந்தனர்.


நிகழ்வின் நிழற்படங்களையும் வாழ்த்துமடல்களையும் கிழேகாணலாம்.


                                                                நன்றி
                                                                                                                       இங்ஙனம்,
                                                                                       சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                                      செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                     20. 09. 2015

 

karaithenral 2015 01 057 (Copy)

karaithenral_2015_01_067 (Copy) karaithenral_2015_01_069 (Copy) karaithenral_2015_01_127 (Copy) karaithenral_2015_01_096 (Copy) karaithenral_2015_01_085 (Copy) karaithenral_2015_01_081 (Copy) karaithenral_2015_01_078 (Copy) yokeswaran1 (Copy) senthuran 1 (Copy) Mathusuthanan 1 (Copy) karan1 (Copy) karaithenral_2015_01_148 (Copy)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி- 2015 நேரமாற்றம்

                       சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்
                                   கட்டுரைப் போட்டி- 2015 நேரமாற்றம்
  

மேற்படி கட்டுரைப்போட்டி  26.09.2015  காலையில் ஒழுங்கு செய்யப்பட்டது  அனைவரும் அறிந்ததே. அன்றையதினம் காலையில் இலங்கையில் நாடளாவிய ரீதியில்  இந்துசமய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்; இந்து சமயப் பொது அறிவுப் பரீட்சை  நடத்தப்பட உள்ளது. இதனால் எமது சபையால் நடாத்தப்படவுள்ள கட்டுரைப்போட்டி அதே தினம் அதேபாடசாலையில் பிற்பகல் மூன்றுமணியிலிருந்து ஐந்து மணிவரை இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம். போட்டியாளர்கள் பதினைந்துநிமிடங்கள் முன்பதாக(14.45) பாடசாலைக்கு சமுகம் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் மேலதிக தகவல்களுக்கு இதே இணையத்தில் முன்னைய பதிவினை பார்வையிடவும்.
கனடா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இப் போட்டி ஏககாலத்தில் இடம்பெறும்.
                                                                நன்றி

                 "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                                            இங்ஙனம்,
                                                                                 சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                     15.09.2015

 

காரைத் தென்றல் 11வது விழா சிறப்புடன் நடைபெற எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

                                      புதிய காரைஒளி
                                    15,Rutland Road,London E7 8PQ


                                                 வாழ்த்துச்செய்தி

IT-Sampanthan

பிறந்தமண்ணின் வாசனையை மறவாது ஆண்டுதோறும் கலை கலாச்சார விழாவை நடத்தி சுவிஸ் வாழ் காரை மக்களிடையே தமிழ் உணர்வையும் கலாச்சார விழுமியங்களையும் வளர்த்து வருவது பாராட்டத்தக்கது


புலமபெயர் நாட்டில்வாழும் இளம் சந்ததியினரை இவ்விழாவில் பங்கு கொள்ளவைத்து அவர்களுக்கு உற்சாகமளித்து வருகிறீர்கள். பாராட்டத்தக்கது.


காரை மக்கள் எங்கு வாழந்தாலும் பிறந்த மண்ணை மறவாது அங்கு வாழம் உறவுகளுக்கும் ஊரின் அபிவிருத்திக்கும் உதவி வருவது போற்றத்தக்கது.


காரைத் தென்றல் 11வது விழா சிறப்புடன் நடைபெற எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.


ஓற்றுமையுடன் ஊரை முன்னேற்றுங்கள்


அன்புடன்
ஐ.தி.சம்பந்தன்
ஆசிரியா. புதிய காரை ஒளி
5-09-2015

காரைத் தென்றல் -2015இல் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கௌரவிப்பு

சுவிஸ் வாழ் காரை குடும்ப அங்கத்தவர்களின் உன்னதமான பேராதரவுடன் எதிர்வரும் 13.09.2015இல் பிற்பகல் 13.00 அளவில் நடைபெற இருக்கின்ற காரைத்தென்றல்- 2015 நிகழ்வில் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட இருக்கின்றார்கள். 


சுவிற்சர்லாந்துக்கு வருகைதந்துள்ள காரையம்பதி மூத்த நாதஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன்  தவில் வித்துவான்  "லய ஞான மணி" கோவில்குளம் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) அவர்களும்,  தவில் வித்துவான் "தாள லய இளவரசு"  உடுப்பிட்டி பத்மநாதன்  செந்தூரன் அவர்களும், நாதஸ்வர வித்துவான்  "நாத காண மணி" சுதுமலை நாகராசா மதுசூதனன் அவர்களும், நாதஸ்வர வித்துவான் "மதுர கான ஜோதி"  திருமலை முத்துலிங்கம் யோகேஸ்வரன் அவர்களும் சுவிஸ்காரை அபிவிருத்திச் சபையினரால் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். இசைபிரியர்கள் அனைவரும் நிகழ்வில்; கலந்து சிறப்பிக்கமாறு  அன்புடன் அழைக்கின்றோம். 


இவ் விழாவின் ஆரம்பத்தில் மேற்குறித்த புகழ்பூத்த குழுவினரின் மங்களவாத்திய கச்சேரி இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.


கலைஞர்களின் நிழற்படங்களை கிழே காணலாம்.


                                                                  நன்றி
                                                                                                              இங்ஙனம்,
                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                                  செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                                  சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              02. 09. 2015

  வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்)

karan

 

பத்மநாதன்  செந்தூரன்

senthuiran

 

நாகராசா மதுசூதனன்

mathusuanan

 

முத்துலிங்கம் யோகேஸ்வரன்

yogeswaranJPG

காரைத்தென்றல் 2015, சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை பெருமையுடன் வழங்கும் பதினொராவது ஆண்டு விழா

KT_Flyer_2015

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் இம் மாதம் 29.08.2015இல் நடாத்தப்படவிருந்த கட்டுரைப்போட்டி மாணவ,மாணவியர்,பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 26.09.2015இல் சனிக்கிழமைக்கு பின் போடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டுக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களும் இப் போட்டியில் பங்குபெற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் இம் மாதம் 29.08.2015இல் நடாத்தப்படவிருந்த கட்டுரைப்போட்டி மாணவ,மாணவியர்,பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 26.09.2015இல் சனிக்கிழமைக்கு பின் போடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டுக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களும் இப் போட்டியில் பங்குபெற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
   
SWISS LOGO

                                 
     "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
                       பேரரறி வாளன் திரு"

   

 


                           

 

 

                 உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக
                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்
                                           மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015 

   
இவ்வருடத்திற்கான கட்டுரைப் போட்டி விபரங்களையும் விண்ணப்பபடிவத்தையும்; பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்,பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.


எமது சபையால் இம் மாதம் 29.08.2015இல் நடாத்தப்படவிருந்த கட்டுரைப்போட்டி சில காரணங்களினால் செற்றம்பர் மாதம் 26.09.2015க்கு பின் போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். ஊரில் நடைபெறுகின்ற A/L பரீட்சை காரணமாக கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயத்தின் நடராஜா மண்டபத்தில் இக் கட்டுரைப் போட்டியை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதாலும், 2015ஆம் ஆண்டு A/L பரீட்சை எடுக்கும் மாணவர்களும் இப் போட்டியில் பங்குபெற்ற விரும்புவதாலும், வெளிநாடுகளில் இருக்கும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தயார் படுத்தலுக்கு காலஅவகாசம் தேவை என்பதாலும், இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களும் விடுமுறையில் சென்று உள்ளதாலும் இக் கட்டுரைப் போட்டியை வரும் ஆங்கில மாதம் புரட்டாதி  26ம் திகதி சனிக்கிழமையன்று நடாத்த தீர்மானித்துள்ளோம்.

பூமிப் பந்தில்  ஊரின் உறவுகள் எங்கும் பரவி வாழ்ந்தாலும் அன்புகூர்ந்து இப்போட்டியில் மாணவ,மாணவியர்களை இணைத்துக்கொள்ளும்படி, பாடசாலைஅதிபர்கள், ஆசிரியர்கள், கல்விநிறுவன அதிபர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்காக நடாத்தப்படும் இக் கட்டுரைப் போட்டியை வரும் ஆங்கில மாதம் புரட்டாதி  26ம் திகதி சனிக்கிழமையன்று காரைநகரிலும்   ரொறொன்ரோ, பாரிஸ், லண்டன், சிட்னி, சூரிக் ஆகிய நகரங்களிலும் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.  கொழும்பு மற்றும் வவுனியாவிலும் கட்டுரைப் போட்டியை நடாத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் தங்களது ஆதரவினை நாடுகின்றோம். 


இம்முறை போட்டி மூன்று பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கட்டுரைப் போட்டியை மிகத்திறமையாக நடாத்துவதற்கு எமது சபையால் கலை,கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் எமது சபையின் கோரிக்கைக்கிணங்க பரீட்சைக்கான வேலைத்திட்டங்களை செய்வதற்கு செயல்படுவார்கள். எமது சபையால் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கான  மூன்று பிரிவுகளுக்குமான பரிசுத்தொகை சுவிஸ் பிராங்குகளில் விரைவில் அறியத்தரப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு தங்கள் நகரங்களிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் காரைநகரைப் பிறப்பிடமாகவோ அல்லது பூர்விகமாகவோ கொண்ட மாணவ மாணவிகளை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்கள் நிறுவனம், பாடசாலை, ஊரபிவிருத்திச் சங்கம் என்பவற்றிற்கு ஊடாக மாணவர்களுக்கு இவ்வறிவித்தலை விளம்பரப்படுத்தி பங்கு பற்ற விரும்புவோரின் பெயர், பிரிவு, ஆகிய விவரங்களை மட்டும் முதலில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியூடாக ஆகஸ்ட் 10ம் திகதிக்கு முன்பாக எமக்கு அறியத்தரவும். கணிசமான மாணவர்கள் வௌ;வேறு பாடசாலைகளிலிருந்து பங்குபற்ற விரும்பும் பட்சத்தில் வவுனியாவிலும் கொழும்பிலும் போட்டி நிலையங்களை ஒழுங்கு செய்ய விரும்புகிறோம். 
   
மூன்று பிரிவுகளில் இடம் பெறவுள்ள இப்போட்டிக்கான தலைப்புக்கள் அனைத்துப் போட்டி நிலையங்களுக்கும் ஏக காலத்தில் எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 


இதுபற்றிய தங்களது பதில் கிடைக்கப் பெற்ற பின்னர் இப்போட்டிக்கான சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை செயற்குழு உறுப்பினர்கள் அல்லது இலங்கையிலுள்ள எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரில் ஒருவர் தங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வாரகள்.


எம் மண்ணின் மாணவச் செல்வங்களின் அறிவு விருத்தியை நோக்காகக் கொண்ட மேற்படி திட்டத்திற்கு தங்களது மேலான உதவியைக் கோரி நிறகின்றோம். 


எமது ஊரின் கல்வி வளர்ச்சியையே சிரமேற்கொண்டு தொண்டாற்றும் அதிபர்களாகிய, ஆசிரியர்களாகிய உங்களுடைய ஊக்குவித்தலோடும், பெற்றோர்களுடைய ஆதரவோடும் நம் மாணவச் செல்வங்களைப் புலமையாளர்களாக்கும் இக்கடினமான முயற்சியில் எம்மோடு கைகோர்த்து உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஒற்றுமை, தன்நம்பிக்கை, நல்லெண்ணம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மக்கள் சேவை என்பனவே இன்றைய எமது தேவைகள். 

காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடுகளில் பிறந்து வாழும் காரை மாணவச் செல்வங்களும் இப்போட்டியில் பங்கு பற்ற வேண்டும் என்பது எமது அவா.
   
            கட்டுரைப் போட்டிக்கான விபரங்களும் விதிமுறைகளும்

 இடம்: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயம்.
 திகதி;: ஆங்கில மாதம் 26.09.2015ம் திகதி சனிக்கிழமை
 நேரம்: காலை 10 இலிருந்து நண்பகல் 12 வரை

இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.

(அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள். 

(ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள்.
 
(இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், இவ்வாண்டு     பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்களும்,  


    போட்டியில் பங்குபற்றும் மாணக்கர் கீழ்காணும் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து தங்களது பாடசாலை அதிபர்களிடமோ, அல்லது தரவேற்றம் செய்து karaithenral2014@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ 15.08.2015க்கு முன்பதாக அனுப்பி வைக்கவும்.

 

    போட்டி இயற்திறன் முறையில் அமைவதால் கட்டுரைத் தலைப்புக்கள் போட்டியின் போது மண்டபத்திலே அறிவிக்கப்படும்.


     சமூகப் பிரச்சனைகள், காரைநகர் அபிவிருத்தி, கற்றல் அல்லது அறிவின் முக்கியத்தும், சமயம், இலக்கியம், கலைகள், ஊர் அறிஞர்கள், காரை சமய மற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி ஏறத்தாள எட்டுத் தலைப்புக்கள் வழங்கப்படும். மாணவர்கள் மேற்கூறிய தளங்களில் விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசித்தும் தகவல் திரட்டியும் தம்மைத் தயார்செய்து கொள்ளலாம். 

    கட்டுரைகளில் தகவற் செறிவும், மொழித்திறனும், கற்பனையும், புதிய கருத்துக்களும், ஊர் மேம்பாடு பற்றிய ஆழங்காற்பட்ட அக்கறையும், துரநோக்கும் அவசியம்.

    கட்டுரைகள் சாதாரண கையெழுத்தில் அண்ணளவாக 
அ. பிரிவு மூன்று பக்கங்களிலும், 
ஆ. பிரிவு நான்கு பக்கங்களிலும் மற்றும் 
இ. பிரிவு ஆறு பக்கங்களில் அமையவேண்டும்.

    கட்டுரைப் போட்டியிலன்று மாணவர்கள் தத்தம் பாடசாலைக்குரிய சீருடையில் சமுகம் தரவேண்டும்.

    தேவையேற்படின் மாணாக்கர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

    வெற்றியாளர்களுக்கான பரிசுகள் எதிர்வரும் மார்கழி மாதம் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவைத் திருவிழாவின் – ஆதிரைநாளின் போது மணிவாசகர் சபையினரால் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும். வெற்றியாளர்கள் நேரில் சமூகமளிக்க முடியாவிடின் தங்கள் சார்பாகப் பரிசு பெற்றுக்கொள்பவரின் பெயரை மேற்படி இணைய அஞ்சல் மூலம் எமக்கு அறியத்தரலாம். 

    இவ்வருடம் மேலதிகமான மாணவர் ஊக்குவிப்புத் திட்டமாக 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கான கௌரவிப்பும், பரிசளிப்பும் மார்கழித் திங்கள் திருவெம்பாவை விழாவின் ஆதிரைநாளில் செய்ய இருக்கின்றோம். இது காரை இளம் சமுதாயத்தினரை எம் ஊரின் எதிர்கால அபிவிருத்திக்காக ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாகவும் அமையும் என்பது எமது எண்ணம். 

    இலங்கை பூராகவும் உள்ள காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட 5A தரத்திலான சித்திகளுட்பட மொத்தமாகப்  ஒன்பது பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். சு.கா.அ.சபையின் பரிசிலும் சிறப்பும் பெறவிரும்பும் மாணாக்கர் தம் விபரங்களையும், பெறுபேற்று விபரங்களையும் எமது மின்அஞ்சலுக்கு karaithenral2014@gmail.com அனுப்பலாம்.

    மேற்குறித்த பரிசு பெறுவதற்கான இரண்டாவது தகுதியாக அவர்கள் சு.கா.அ.சபையின் 2015 ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியிலும் பங்கு பற்றுதல் வேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான பரிசுத்தொகை விபரம்  சுவிஸ் பிராங்குகளில் பின்பு அறியத்தரப்படும். 


    விண்ணப்பங்களை எதிர் வரும் 10-09-2015 க்கு முன்பதாக பாடசாலை அதிபர்கள் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது கீழே காணப்படும் விண்ணப்ப வாயிலூடாகவோ அனுப்பமுடியும்.

   பின் குறிப்பு: மாணவர்கள் காரைநகர்.கோ, காரைநகர்.கொம் என்ற இணைய தளத்தினூடாக தனிதனியாக விண்ணப்பங்களைத் தரவேற்றம் செய்ய வேண்டும். மிக இலகுவான முறையில் செய்யமுடியும். விண்ணப்பங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினராலும், எமது சபை நிர்வாகத்தினராலும் மேற்கொள்ளப்படும். முழுமையான விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கையைப் பார்கவும்.

                                                                          நன்றி

                              "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                                                  இங்ஙனம்,
                                                                                         சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                                 செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                                சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                   07. 08. 2015

    

 

SKWS_Essay_Form-2015

 

 

சுவிஸ் வாழ் காரை மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு

swiss logo

சுவிஸ் வாழ் காரை மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு


                           " கற்க கசடறக் கற்பவை கற்றபின்
                                                     நிற்க அதற்குத் தக"


  அன்புடையீர் வணக்கம்!
                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி ஆங்கில மாதம் 29ம் திகதி சனிக்கிழமை கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயத்தில் காலை 10 இலிருந்து நண்பகல் 12 வரை போட்டிப் பரீட்சை கலை,கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரால் நடாத்தப்பட இருக்கின்றது என்பது நீங்கள் அறிந்ததே!

           இம்முறை போட்டிப் பரீட்சையை சம காலத்தில் சுவிற்சர்லாந்திலும் நடாத்தவதற்கு பரிட்சை குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய சவிஸ் சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா தலைமையில் சுவிஸ் வாழ் காரை மாணவ, மாணவியர்களுக்கான  கட்டுரைப் போட்டி நடைபெற இருக்கின்றது.

                      பரிட்சைநிலையம் : சரஸ்வதி வித்தியாலயம் சூரிக்
                      காலம்: 29-08.2015 சனிக்கிழமை
                      இலங்கைநேரம்: 10.00-12.00மணி
                      சுவிஸ்நேரம்: 15.00-17.00மணி

       இவ் வருடம் போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.

          (அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.
          (ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள.;
           (இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.

       அன்பான சுவிஸ் வாழ் காரை பெற்றோர்களே!  எம் மண்ணின் மாணவச் செல்வங்களின் அறிவு விருத்தியை நோக்காகக் கொண்ட மேற்படி திட்டத்திற்கு தங்களது மேலான உதவியைக் கோரி நிறகின்றோம். தங்களது பிள்ளைகளை இப் போட்டிப் பரீட்சையில் பங்கு கொள்ள வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மாணவர்கள் மேலதிகமான விபரங்களை பெறுவதற்கு காரைநகர்.கோ, காரைநகர்.கொம் என்ற இணைய தளத்தினூடாக அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.  அ) 044 423 04 05, ஆ) 043 321 35 63, இ) 043 305 26 77 
                             
           இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு தங்கள் நகரங்களிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் காரைநகரைப் பிறப்பிடமாகவோ அல்லது பூர்விகமாகவோ கொண்ட மாணவ மாணவிகளை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்கள் நிறுவனம், பாடசாலை, ஊரபிவிருத்திச் சங்கம் என்பவற்றிற்கு ஊடாக மாணவர்களுக்கு இவ்வறிவித்தலை விளம்பரப்படுத்தி பங்கு பற்ற விரும்புவோரின் பெயர், பிரிவு, ஆகிய விவரங்களை மட்டும் முதலில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியூடாக ஆகஸ்ட் 10ம் திகதிக்கு முன்பாக எமக்கு அறியத்தரவும். சுவிற்சர்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தை முன்மாதிரியாக கொண்டு புலம்பெயர் தேசத்து உறவுகள்  பாடசாலைகள் சபைகள், சங்கங்கள் பரீட்சை நிலயத்தை தெரிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 
                                                                     நன்றி


                                        "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"


                                                                                                 இங்ஙனம் 
                                                                         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                           கலை,கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு
                                                                                                   ஆடி 2015

 

     

உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015

 
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரரறி வாளன் திரு”

swiss logo

உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்
    மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015
               

இவ்வருடத்திற்கான கட்டுரைப் போட்டி விபரங்களையும் விண்ணப்பபடிவத்தையும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்,பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

 

                     எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்காக நடாத்தப்படும் இக் கட்டுரைப் போட்டியை வரும் ஆங்கில மாதம் ஆவணி 29ம் திகதி சனிக்கிழமையன்று காரைநகரிலும் ரொறொன்ரோ, பாரிஸ், லண்டன், சூரிக் ஆகிய நகரங்களிலும் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.  கொழும்பு மற்றும் வவுனியாவிலும் கட்டுரைப் போட்டியை நடாத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் தங்களது ஆதரவினை நாடுகின்றோம். 

                         இம்முறை போட்டி மூன்று பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கட்டுரைப் போட்டியை மிகத்திறமையாக நடாத்துவதற்கு எமது சபையால் கலை,கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் எமது சபையின் கோரிக்கைக்கிணங்க பரீட்சைக்கான வேலைத்திட்டங்களை செய்வதற்கு செயல்படுவார்கள்.   .         

       இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு தங்கள் நகரங்களிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் காரைநகரைப் பிறப்பிடமாகவோ அல்லது பூர்விகமாகவோ கொண்ட மாணவ மாணவிகளை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்கள் நிறுவனம், பாடசாலை, ஊரபிவிருத்திச் சங்கம் என்பவற்றிற்கு ஊடாக மாணவர்களுக்கு இவ்வறிவித்தலை விளம்பரப்படுத்தி பங்கு பற்ற விரும்புவோரின் பெயர், பிரிவு, ஆகிய விவரங்களை மட்டும் முதலில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியூடாக ஆகஸ்ட் 10ம் திகதிக்கு முன்பாக எமக்கு அறியத்தரவும். கணிசமான மாணவர்கள் வௌ;வேறு பாடசாலைகளிலிருந்து பங்குபற்ற விரும்பும் பட்சத்தில் வவுனியாவிலும் கொழும்பிலும் போட்டி நிலையங்களை ஒழுங்கு செய்ய விரும்புகிறோம். 

        மூன்று பிரிவுகளில் இடம் பெறவுள்ள இப்போட்டிக்கான தலைப்புக்கள் அனைத்துப் போட்டி நிலையங்களுக்கும் ஏக காலத்தில் எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

        இதுபற்றிய தங்களது பதில் கிடைக்கப் பெற்ற பின்னர் இப்போட்டிக்கான சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை செயற்குழு உறுப்பினர்கள் அல்லது இலங்கையிலுள்ள எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரில் ஒருவர் தங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வாரகள்.

 

             எம் மண்ணின் மாணவச் செல்வங்களின் அறிவு விருத்தியை நோக்காகக் கொண்ட மேற்படி திட்டத்திற்கு தங்களது மேலான உதவியைக் கோரி நிற்கின்றோம். 

 

       எமது ஊரின் கல்வி வளர்ச்சியையே சிரமேற்கொண்டு தொண்டாற்றும் அதிபர்களாகிய, ஆசிரியர்களாகிய உங்களுடைய ஊக்குவித்தலோடும், பெற்றோர்களுடைய ஆதரவோடும் நம் மாணவச் செல்வங்களைப் புலமையாளர்களாக்கும் இக்கடினமான முயற்சியில் எம்மோடு கைகோர்த்து உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஒற்றுமை, தன்நம்பிக்கை, நல்லெண்ணம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மக்கள் சேவை என்பனவே இன்றைய எமது தேவைகள். 

         காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடுகளில் பிறந்து வாழும் காரை மாணவச் செல்வங்களும் இப்போட்டியில் பங்கு பற்ற வேண்டும் என்பது எமது அவா.

 

            கட்டுரைப் போட்டிக்கான விபரங்களும் விதிமுறைகளும்

  இடம்: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயம்.

  திகதி: ஆங்கில மாதம் 29ம் திகதி சனிக்கழமை

  நேரம்: காலை 10 இலிருந்து நண்பகல் 12 வரை

     இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.

(அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள். 

(ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள.;

(இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் கல்வியாண்டு மாணவர்கள். 

    போட்டியில் பங்குபற்றும் மாணக்கர் கீழ்காணும் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து தங்களது பாடசாலை அதிபர்களிடமோ, அல்லது தரவேற்றம் செய்து karaithenral2014@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ 15.08.2015க்கு முன்பதாக அனுப்பி வைக்கவும்.

    போட்டி இயற்திறன் முறையில் அமைவதால் கட்டுரைத் தலைப்புக்கள் போட்டியின் போது மண்டபத்திலே அறிவிக்கப்படும்.

     சமூகப் பிரச்சனைகள், காரைநகர் அபிவிருத்தி, கற்றல் அல்லது அறிவின் முக்கியத்தும், சமயம், இலக்கியம், கலைகள், ஊர் அறிஞர்கள், காரை சமய மற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி ஏறத்தாள எட்டுத் தலைப்புக்கள் வழங்கப்படும். மாணவர்கள் மேற்கூறிய தளங்களில் விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசித்தும் தகவல் திரட்டியும் தம்மைத் தயார்செய்து கொள்ளலாம். 

    கட்டுரைகளில் தகவற் செறிவும், மொழித்திறனும், கற்பனையும், புதிய கருத்துக்களும், ஊர் மேம்பாடு பற்றிய ஆழங்காற்பட்ட அக்கறையும், துரநோக்கும் அவசியம்.

    கட்டுரைகள் சாதாரண கையெழுத்தில் அண்ணளவாக 

அ. பிரிவு மூன்று பக்கங்களிலும், 

ஆ. பிரிவு நான்கு பக்கங்களிலும் மற்றும் 

இ. பிரிவு ஆறு பக்கங்களில் அமையவேண்டும்.

    கட்டுரைப் போட்டியிலன்று மாணவர்கள் தத்தம் பாடசாலைக்குரிய சீருடையில் சமுகம் தரவேண்டும்.

    தேவையேற்படின் மாணாக்கர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

    வெற்றியாளர்களுக்கான பரிசுகள் எதிர்வரும் மார்கழி மாதம் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவைத் திருவிழாவின் – ஆதிரைநாளின் போது மணிவாசகர் சபையினரால் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும். வெற்றியாளர்கள் நேரில் சமூகமளிக்க முடியாவிடின் தங்கள் சார்பாகப் பரிசு பெற்றுக்கொள்பவரின் பெயரை மேற்படி இணைய அஞ்சல் மூலம் எமக்கு அறியத்தரலாம். 

    இவ்வருடம் மேலதிகமான மாணவர் ஊக்குவிப்புத் திட்டமாக 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கான கௌரவிப்பும், பரிசளிப்பும் மார்கழித் திங்கள் திருவெம்பாவை விழாவின் ஆதிரைநாளில் செய்ய இருக்கின்றோம். இது காரை இளம் சமுதாயத்தினரை எம் ஊரின் எதிர்கால அபிவிருத்திக்காக ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாகவும் அமையும் என்பது எமது எண்ணம். 

    இலங்கை பூராகவும் உள்ள காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட 5A தரத்திலான சித்திகளுட்பட மொத்தமாகப்  ஒன்பது பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். சு.கா.அ.சபையின் பரிசிலும் சிறப்பும் பெறவிரும்பும் மாணாக்கர் தம் விபரங்களையும், பெறுபேற்று விபரங்களையும் எமது மின்அஞ்சலுக்கு karaithenral2014@gmail.comஅனுப்பலாம்.

    மேற்குறித்த பரிசு பெறுவதற்கான இரண்டாவது தகுதியாக அவர்கள் சு.கா.அ.சபையின் 2015 ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியிலும் பங்கு பற்றுதல் வேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான பரிசுத்தொகை   (சுவிஸ் பிராங்குகளில்) விபரம் பின்பு அறியத்தரப்படும். 

    விண்ணப்பங்களை எதிர் வரும் 15-08-2015 க்கு முன்பதாக பாடசாலை அதிபர்கள் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது கீழே காணப்படும் விண்ணப்ப வாயிலூடாகவோ அனுப்பமுடியும்.

   பின் குறிப்பு: மாணவர்கள் காரைநகர்.கோ, காரைநகர்.கொம் என்ற இணைய தளத்தினூடாக தனிதனியாக விண்ணப்பங்களைத் தரவேற்றம் செய்ய வேண்டும். மிக இலகுவான முறையில் செய்யமுடியும். விண்ணப்பங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினராலும், எமது சபை நிர்வாகத்தினராலும் மேற்கொள்ளப்படும். முளுமையான விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கையைப் பார்கவும்.

                                                                    நன்றி

                     ‘நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்’

                                                                        இங்ஙனம்,

                                                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                                                                                                   செயற்குழு உறுப்பினர்கள்,

                                                                                                   சுவிஸ் வாழ் காரை மக்கள்.

ஆசிரியர் சோமாஸ்கந்தன் அவர்களுக்கு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பிறந்தநாள் வாழ்த்து

babu17-07-2015

திரு.ச. அருணாசலம் அவர்களின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்புற சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் வாழ்த்துரை

swiss logo
 
                                                   உ
                                            சிவமயம்
"தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி"

SWISS
சைவசித்தாந்த மன்றம் கனடா
தலைவர்: சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம்


அன்புடையீர் வணக்கம்


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வானொடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடியாகும். அப்பெருங்குடியினர் பண்பாட்டுடன் சமயச் செந்நெறியிலும் சிறந்து விளங்கினர். இவர்கள் மேற்கொண்ட சமயநெறி சிவநெறியாகும். 
ஈழமணித்திருநாட்டின் யாழ்ப்பாணத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் பின்பற்றிய வழியில் கிராமங்கள் தோறும் கால்நடையாக சென்றும்இ அரிக்கன் லாம்புடன் மாட்டுவணடியிலும் சென்று அர்ததமுள்ள வைசவசித்தாந்த கருத்துக்களையும், சமயச்சொற்பொழிவுகளையும் பரப்புரை செய்து அதில் வெற்றியும் கண்டவர் காரைநகரைச் சேர்ந்த அருணாசல உபாத்தியார் என்ற மகான் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.


வைசமும் தமிழும் கண்ணெனக் கொண்டு அருளியல், வாழ்வியல் வழிபாடுகள் சிறக்கவும், எமது கிராமத்திலும், யாழ்ப்பாணத்திலும் பல பாடசாலைகள் உருவாகுவதற்கும் தனது செல்வங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அயராது தொண்டாற்றிய பெரிய மகான் என்பதில் பூரிப்படைகின்றோம்.


                     "அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்
                          தோற்றிய திதியே ஓடுங்கி மலத்தளதாம்
                                   அந்தமாதி என்மனார் புலவர்"


சைவப் பாடசாலைகளை நிறுவவும், சைவ ஆசிரிய கலாசாலையை உருவாக்கவும், சைவ ஆசிரியர்களை தோற்றிவிக்கவும் அயாரது தொண்டாற்றிய பெரிய மகான் திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் மீளவும் வெளிவருவதையிட்டு பெருமகிழ்ச்சயடைகின்றோம்.


சைவசித்தாந்த மன்றம் கனடா எடுத்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும். இவர்கள் இதனோடு நின்றுவிடாது புலம்பெயர் தேசத்து இளம் சமூதாயத்திற்கு தேவையான சைவசமயத்தவரின் உணவுப் பயன்பாடுகள், சமயஅறிவு போன்ற நூல்கள் தொடர்ந்து வெளிவருதல் வேண்டும் என்றும், திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ்த்துகின்றோம்.


                     "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"


                                                                   நன்றி


                                                                                                         இங்ஙனம்.
                                                                                 சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                          செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                        சுவிஸ் வாழ் காரை மக்கள்

                                                                                                        24.07.2015

swisskarai24-07-2015-page-001

செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A,M.Phil அவர்களின் இன்னிசைக்கச்சேரி வெற்றிபெற சுவிஸ்-காரை அபிவிருத்தி சபையின் வாழ்த்துரை

                                                              உ
                                           சிவமயம்

photo

தலைவர்/செயலாளர்/நிர்வாகசபை
யா/தியாகராஜா ம.ம.வி,( காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா

          இலங்கையின் தலையாக விளங்குகின்ற யாழ்ப்பாணமாவட்டத்தின் கற்றோர் நிறைந்த, பண்பாடு மலிந்த, பாரம்பரிய விழுமியங்களை கண்போல காப்பாற்றிவருகின்ற சிவபூமி எனப் போற்றப்படும் காரைநகர் திரு நிறைந்த தெய்வீக பூமியாகும். இங்கு வாழும் சான்றோர்கள் சைவசமய சீலர்களாக பக்தி உள்ளத்துடன் வாழ்கின்றனர்.

         சிவநெறி தலைத்தோங்கும் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் நாதஸ்வர வித்துவான் காரையம்பதி திரு.N.K. கணேசன் கைலாயக்கம்பர், அவர்களின் புதல்வி இராகசுரபி செல்வி பரமேஸ்வரி M.A,M.Phil (இசைக்கல்வி விரிவுரையாளர். யாழ் பல்கலைக்கழகம்) அவர்கள் யா/தியாகராஜா ம.ம.வி,( காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக நாளை (27.06.2015) நடாத்தவிருக்கும் இன்னிசைக் கச்சேரிக்கு எமது  வாழ்த்துக்கள்.

      "இசையால் வசமாக இதயம் ஏது". என்ற கூற்றுக்கிணங்க காலத்தின் தேவைகருதி  தற்பொழுது புலம்பெயர் தேசங்களில் எமது கிராமத்து இளம் சமூதாயத்தினர் இசைத்துறையில் கூடுதல் ஆர்வத்துடன் சங்கீதம் பயிலுகின்றனர். அவர்களுக்கு ஓரு உறவுப்பாலத்தை ஏற்பாடு செய்த  பழைய மாணவர் சங்கம்-கனடாக்கிளைக்கு எமது வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

       "இன்னிசைக் கச்சேரி"  சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ்த்துகின்றோம்.

                        "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"
                                                  நன்றி
                                                                                                    இங்ஙனம்.
                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                 செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                      26.06.2015

swisskarai26-06-2015