உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015

 
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரரறி வாளன் திரு”

swiss logo

உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்காக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்
    மாபெரும் கட்டுரைப் போட்டி- 2015
               

இவ்வருடத்திற்கான கட்டுரைப் போட்டி விபரங்களையும் விண்ணப்பபடிவத்தையும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்,பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

 

                     எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்காக நடாத்தப்படும் இக் கட்டுரைப் போட்டியை வரும் ஆங்கில மாதம் ஆவணி 29ம் திகதி சனிக்கிழமையன்று காரைநகரிலும் ரொறொன்ரோ, பாரிஸ், லண்டன், சூரிக் ஆகிய நகரங்களிலும் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.  கொழும்பு மற்றும் வவுனியாவிலும் கட்டுரைப் போட்டியை நடாத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் தங்களது ஆதரவினை நாடுகின்றோம். 

                         இம்முறை போட்டி மூன்று பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கட்டுரைப் போட்டியை மிகத்திறமையாக நடாத்துவதற்கு எமது சபையால் கலை,கல்வி மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் எமது சபையின் கோரிக்கைக்கிணங்க பரீட்சைக்கான வேலைத்திட்டங்களை செய்வதற்கு செயல்படுவார்கள்.   .         

       இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு தங்கள் நகரங்களிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் காரைநகரைப் பிறப்பிடமாகவோ அல்லது பூர்விகமாகவோ கொண்ட மாணவ மாணவிகளை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்கள் நிறுவனம், பாடசாலை, ஊரபிவிருத்திச் சங்கம் என்பவற்றிற்கு ஊடாக மாணவர்களுக்கு இவ்வறிவித்தலை விளம்பரப்படுத்தி பங்கு பற்ற விரும்புவோரின் பெயர், பிரிவு, ஆகிய விவரங்களை மட்டும் முதலில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியூடாக ஆகஸ்ட் 10ம் திகதிக்கு முன்பாக எமக்கு அறியத்தரவும். கணிசமான மாணவர்கள் வௌ;வேறு பாடசாலைகளிலிருந்து பங்குபற்ற விரும்பும் பட்சத்தில் வவுனியாவிலும் கொழும்பிலும் போட்டி நிலையங்களை ஒழுங்கு செய்ய விரும்புகிறோம். 

        மூன்று பிரிவுகளில் இடம் பெறவுள்ள இப்போட்டிக்கான தலைப்புக்கள் அனைத்துப் போட்டி நிலையங்களுக்கும் ஏக காலத்தில் எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

        இதுபற்றிய தங்களது பதில் கிடைக்கப் பெற்ற பின்னர் இப்போட்டிக்கான சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை செயற்குழு உறுப்பினர்கள் அல்லது இலங்கையிலுள்ள எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினரில் ஒருவர் தங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வாரகள்.

 

             எம் மண்ணின் மாணவச் செல்வங்களின் அறிவு விருத்தியை நோக்காகக் கொண்ட மேற்படி திட்டத்திற்கு தங்களது மேலான உதவியைக் கோரி நிற்கின்றோம். 

 

       எமது ஊரின் கல்வி வளர்ச்சியையே சிரமேற்கொண்டு தொண்டாற்றும் அதிபர்களாகிய, ஆசிரியர்களாகிய உங்களுடைய ஊக்குவித்தலோடும், பெற்றோர்களுடைய ஆதரவோடும் நம் மாணவச் செல்வங்களைப் புலமையாளர்களாக்கும் இக்கடினமான முயற்சியில் எம்மோடு கைகோர்த்து உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஒற்றுமை, தன்நம்பிக்கை, நல்லெண்ணம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மக்கள் சேவை என்பனவே இன்றைய எமது தேவைகள். 

         காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடுகளில் பிறந்து வாழும் காரை மாணவச் செல்வங்களும் இப்போட்டியில் பங்கு பற்ற வேண்டும் என்பது எமது அவா.

 

            கட்டுரைப் போட்டிக்கான விபரங்களும் விதிமுறைகளும்

  இடம்: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயம்.

  திகதி: ஆங்கில மாதம் 29ம் திகதி சனிக்கழமை

  நேரம்: காலை 10 இலிருந்து நண்பகல் 12 வரை

     இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.

(அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள். 

(ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள.;

(இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் கல்வியாண்டு மாணவர்கள். 

    போட்டியில் பங்குபற்றும் மாணக்கர் கீழ்காணும் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து தங்களது பாடசாலை அதிபர்களிடமோ, அல்லது தரவேற்றம் செய்து karaithenral2014@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ 15.08.2015க்கு முன்பதாக அனுப்பி வைக்கவும்.

    போட்டி இயற்திறன் முறையில் அமைவதால் கட்டுரைத் தலைப்புக்கள் போட்டியின் போது மண்டபத்திலே அறிவிக்கப்படும்.

     சமூகப் பிரச்சனைகள், காரைநகர் அபிவிருத்தி, கற்றல் அல்லது அறிவின் முக்கியத்தும், சமயம், இலக்கியம், கலைகள், ஊர் அறிஞர்கள், காரை சமய மற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி ஏறத்தாள எட்டுத் தலைப்புக்கள் வழங்கப்படும். மாணவர்கள் மேற்கூறிய தளங்களில் விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசித்தும் தகவல் திரட்டியும் தம்மைத் தயார்செய்து கொள்ளலாம். 

    கட்டுரைகளில் தகவற் செறிவும், மொழித்திறனும், கற்பனையும், புதிய கருத்துக்களும், ஊர் மேம்பாடு பற்றிய ஆழங்காற்பட்ட அக்கறையும், துரநோக்கும் அவசியம்.

    கட்டுரைகள் சாதாரண கையெழுத்தில் அண்ணளவாக 

அ. பிரிவு மூன்று பக்கங்களிலும், 

ஆ. பிரிவு நான்கு பக்கங்களிலும் மற்றும் 

இ. பிரிவு ஆறு பக்கங்களில் அமையவேண்டும்.

    கட்டுரைப் போட்டியிலன்று மாணவர்கள் தத்தம் பாடசாலைக்குரிய சீருடையில் சமுகம் தரவேண்டும்.

    தேவையேற்படின் மாணாக்கர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

    வெற்றியாளர்களுக்கான பரிசுகள் எதிர்வரும் மார்கழி மாதம் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவைத் திருவிழாவின் – ஆதிரைநாளின் போது மணிவாசகர் சபையினரால் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும். வெற்றியாளர்கள் நேரில் சமூகமளிக்க முடியாவிடின் தங்கள் சார்பாகப் பரிசு பெற்றுக்கொள்பவரின் பெயரை மேற்படி இணைய அஞ்சல் மூலம் எமக்கு அறியத்தரலாம். 

    இவ்வருடம் மேலதிகமான மாணவர் ஊக்குவிப்புத் திட்டமாக 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கான கௌரவிப்பும், பரிசளிப்பும் மார்கழித் திங்கள் திருவெம்பாவை விழாவின் ஆதிரைநாளில் செய்ய இருக்கின்றோம். இது காரை இளம் சமுதாயத்தினரை எம் ஊரின் எதிர்கால அபிவிருத்திக்காக ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாகவும் அமையும் என்பது எமது எண்ணம். 

    இலங்கை பூராகவும் உள்ள காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட 5A தரத்திலான சித்திகளுட்பட மொத்தமாகப்  ஒன்பது பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். சு.கா.அ.சபையின் பரிசிலும் சிறப்பும் பெறவிரும்பும் மாணாக்கர் தம் விபரங்களையும், பெறுபேற்று விபரங்களையும் எமது மின்அஞ்சலுக்கு karaithenral2014@gmail.comஅனுப்பலாம்.

    மேற்குறித்த பரிசு பெறுவதற்கான இரண்டாவது தகுதியாக அவர்கள் சு.கா.அ.சபையின் 2015 ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியிலும் பங்கு பற்றுதல் வேண்டும்.போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான பரிசுத்தொகை   (சுவிஸ் பிராங்குகளில்) விபரம் பின்பு அறியத்தரப்படும். 

    விண்ணப்பங்களை எதிர் வரும் 15-08-2015 க்கு முன்பதாக பாடசாலை அதிபர்கள் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது கீழே காணப்படும் விண்ணப்ப வாயிலூடாகவோ அனுப்பமுடியும்.

   பின் குறிப்பு: மாணவர்கள் காரைநகர்.கோ, காரைநகர்.கொம் என்ற இணைய தளத்தினூடாக தனிதனியாக விண்ணப்பங்களைத் தரவேற்றம் செய்ய வேண்டும். மிக இலகுவான முறையில் செய்யமுடியும். விண்ணப்பங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் எமது கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவினராலும், எமது சபை நிர்வாகத்தினராலும் மேற்கொள்ளப்படும். முளுமையான விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கையைப் பார்கவும்.

                                                                    நன்றி

                     ‘நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்’

                                                                        இங்ஙனம்,

                                                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                                                                                                   செயற்குழு உறுப்பினர்கள்,

                                                                                                   சுவிஸ் வாழ் காரை மக்கள்.