சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொங்கல் செய்தி!

swiss logo

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொங்கல் செய்தி!


2016ஆம் ஆண்டு தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையின் பரிந்துரைக்கு அமைவாகவே அனைத்து நிதிப்பங்களிப்புகளும் நடைமுறைப்படுத்தப்படும். 10.01.2016இல் நிர்வாகசபை கூட்டத்தில் முடிவு.

பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை வாழ் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களை எமது சபை சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.


          எமது சபையின் நாட்காட்டி வெளியீடும் பரிசளிப்பும் கருத்துப்பரிமாற்றமும்,மக்கள் சந்திப்பும் மலர்ந்த புத்தாண்டின் நாளாம் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை  St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich.  மண்டபத்தில்  மங்களவிளக்கேற்றலுடன் மங்களகரமாக தொடங்க, தேவார இசையினை செல்விகள் சாரங்கி லிங்கேஸ்வரன், கஜலக்ஷி உருத்திரர் இருவரும் இசைத்திட, மறைந்தோர்க்கு மௌன அஞ்சலி தொடர்ந்திட, வளமான சபையின் மன்ற கீதம் ஒலி நாடாவில் இசைத்திட வந்தோர் மனமெல்லாம் காரை மணம் பரப்பி சொல்ல முடியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

        நிகழ்வுக்கு தலைமைதாங்கிய சபையின் தலைவர் பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் சமூகம் தந்தவர்களை சமூகமாய் வரவேற்று சிறப்பரை நிகழ்த்தினார். ஆசியுரையினையும், நாட்காட்டி விமர்சனயுரையினையும் சிவஸ்ரீ இராம.சசிதரக்குருக்கள் அவர்கள் தனது உரையில் நாட்காட்டியானது பிரசித்தி பெற்ற ஆலயங்களையும், பல தரப்பட்ட விடயங்களை உள்வாங்கி மிகச் சிறந்த முறையில் சுவிஸ் நாட்டில் மலர்ந்துள்ளது என்று கூறினார்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2016ஆம் ஆண்டு நாட்காட்டியை இராம.சசிதரக்குருக்கள் அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை தெய்வீகத்திருப்பணிஅரசு¸ அறக்கொடை அரசு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் இவர்கள் 24.12.2015 வியாழக்கிழமை அன்று காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்திலும் சிறப்பு பிரதியை பெற்றுக்கொண்டது சிறப்பான விடயம் சiயின் நல் வாழ்த்துக்கள். அடுத்தாக சபையில் இருந்தோர்கள்  நாட்காட்யை பெற்றுக் கொண்டார்கள். அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுதல்களும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர் கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்கள் தனது சிறப்புரையில் மூன்றாவது ஆண்டாக மலர்ந்துள்ள நாட்காட்டி இம்முறை பல அரிய விடயங்களை தன்னகத்தே கொண்டு சிறந்த முறையில் வெளியாகியுள்ளது. மகிழ்ச்சியான விடயம் என்றார். கட்டுரைப்போட்டி விடயமாக கருத்து தெரிவிக்கும் போது மாணவர்களின்  அறிவாற்றலை வளர்க்கும் செயல் இது மேலும் வளமாக வேண்டும் என்றும் இம் முறை சுவிஸ் நாட்டில் இருவர் மட்டுமே பங்குபற்றியிருந்தார்கள். இனிவரும் காலங்களில் அதிகமான மாணவர்கள் பங்ககொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென சபையோரைக் கேட்டுக்கொண்டார். சபைசார்பாக கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய செல்விகள் நிதாஞ்சலி லிங்கேஸ்வரன்,  கஜவதனா உருத்திரர் இருவரையும் பாராட்டி நற்சான்றிதலும், பரிசும் வழங்கி மகிழ்வித்தார்கள்.

மக்களுடன்  கருத்துப்பரிமாற்ற நிகழ்வில் சபையில் இருந்தோர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். 04.12.2004 ஆண்டு மலர்ந்த எங்கள் சபை இன்று மெல்ல,மெல்ல தேய்ந்து போகின்றது என்றும் வேலைகள் அதிகம், நேரமின்மையினால் சபை பணிகள் செய்வது கஸ்ரம் எனவும் தெரிவித்தார்கள். மனமுன்டானால் இடமுண்டு. விரும்பி செயற்பட்டால் வெற்றி நமக்கே என்றும், நாட்காட்டி வெளியீட்டுக்கு மக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என்று சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து இனிவரும் காலங்களில் இப்படியான தவறுகள் தவிர்க்கப்பட்டு எல்லா சுவிஸ் வாழ் காரை மக்களும் நாம் எல்லோரும் ஓர் ஊரே என்பதை உணர்ந்து உண்மையாக செயற்பட்டு ஊரையும், உறவுகளையும் உம் மாணவச் செல்வங்களையும் வளர்த்து வளம்பெற வைப்போம் என்றும், ஒற்றுமையாய் செயற்படுவதுடன் வேலையையும் பகிர்ந்து செயற்பட்டால் எங்கள் சபையானது மாணவரது கல்வியில், தாய்மொழி வளர்ச்சியில் எம்மூர் அபிவிருத்திபோன்ற இன்னோரன்ன பணிகளில் வீறுநடை போடும் என்ற கருத்தில் கருத்துப்பரிமாற்றம் நிறைவு பெற்றது.

நிர்வாக சபைக் கூட்டமும் அதே மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைமுறையில் இருக்கும் பாடசாலைகளின் ஆசிரியருக்கான வேதனம், பிரத்தியேக மாணவருக்கான கொடுப்பனவுகளும், 2016ஆம் ஆண்டு காரை அபிவிருத்திச் சபையால் முன் வைக்கப்பட்ட விடங்களுக்கான நிதிப்பங்களிப்பு அனைத்தும் தாய் சங்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என எமது சபையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் 18.00 நிறைவு பெற்றது.


 
                                                                      நன்றி

                                       "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"

 

                                                                                                                                                                                                                                                              இங்ஙனம்.
                                                                                                                                                                                                                                          சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                                                                                                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                                                                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                       15.01.2016