சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல் அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

swiss logo

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல்
அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்  நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள்  மூன்றாவது ஆண்டாக தயாரித்த  நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா வெகுவிமரிசையாக இடம்பெறவிருக்கிறது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகிறோம்.


24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00மணிக்கு ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய இரு மாடிக் கட்டிடத்தித் திறப்புவிழாவைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்கு பரிசளிப்பும், கௌரவிப்பும். நடைபெறும். விழாவிற்கு கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய  அனைத்து மாணாக்கரும் தமது பாடசாலை சீருடையில் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் இவ் விழாவிற்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், புலம்பெயர் காரையூர்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வருக, வருகவென வரவேற்கின்றோம். 

இவ் நிகழ்விற்கு ஆதரவு "அறக்கொடை அரசு" திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். நிகழ்வுகள் அனைத்தும் karainagar.co, karainagar.com ஆகிய இணையத்தள தொலைக்காட்சியில்  இலங்கை நேரம் காலை 9.00மணியில் இருந்து மதியம் 2.00மணிவரை  காண்பிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மூதறிஞர்களையும் கலைஞர்களையும் கௌரவித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

                        நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்
                                        ஆளுயர்வே ஊருயர்வு

                                                                               சுவிஸ் காரை அபிவிருத்தி சபை, 
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              22.12.2015