Category: யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்

காரைநகர் ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சிற்சபேசன் கேசவராம் 185 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.

காரைநகர் ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சிற்சபேசன் கேசவராம் 185 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.

இப்பாடசாலையிலிருந்து 10 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்களில் ஏனைய 9 பேரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பாடசாலை மிக அண்மையிலேயே மீள ஆரம்பிக்கப்பட்டது. மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக இவ்வாண்டே மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

திரு சுப்பிரமணியம் கதிரிகாமநாதன் இப்பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு பல்வேறு வழிகளில் உதவியதுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக இரு மாடிக் கட்டடம் அமைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 24.02.2016 நடைபெற்றது.

ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 24.02.2016 நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.தனலட்சுமி கதிர்காமநாதன் கலந்து சிறப்பித்தார் 

FullSizeRender IMG_4421 IMG_4431 IMG_4437 IMG_4444 IMG_4446 IMG_4454 IMG_4467 IMG_4469 IMG_4473 IMG_4482 IMG_4485 IMG_4488 IMG_4490 IMG_4496 IMG_4504 IMG_4511 IMG_4512 IMG_4513 IMG_4516 IMG_4522 IMG_4526 IMG_4529 IMG_4535 IMG_4537 IMG_4544 IMG_4549 IMG_4571 IMG_4582 IMG_4589 IMG_4599 IMG_4606 IMG_4610

இன்று 18.01.2016 திங்கட்கிழமை நடைபெற்ற ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான பொங்கல்

இன்று 18.01.2016 திங்கட்கிழமை  நடைபெற்ற ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான பொங்கல் நிகழ்வின் போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தாா்.இக்கட்டடம் அண்மையில் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனது பூரண பங்களிப்பில் அமைத்து கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1344 IMG_1345 IMG_1346 IMG_1353 IMG_1354 IMG_1361 IMG_1367 IMG_1369

 

காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

DSC_9629 (Copy)

காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக பழைய மாணவன் தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் கலந்து கொணடு சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன்,வடமாகாண பாடசாலை வேலைகள் பணிப்பாளர் தே.சுரேஸ்குமார் தீவக வலய முன்னாள் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ்,காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச் சபைப் பொருளாளர் க.பாலச்சந்திரன் வட கடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இருமாடிக் கட்டடத்தினை சுமார் ஒரு கோடி ரூபா செலவில் சுவிஸ் நாட்டில் வதியும் இப்பாடசாலையின் பழைய மாணவரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் அமைக்கப்பட்டடு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

                           கைத்தொலைபேசியில் படங்களைப் பார்ப்பதற்கு
                                                          இங்கே அழுத்தவும்

https://picasaweb.google.com/109143386914539225429/December242015?authuser=0&feat=directlink

 

காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தின் கோலாகலதிறப்பு விழாவின் நிகழ்வுகளும் காரை அபிவிருத்திச்சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்திய முப்பெரும் விழாவும் இன்று 24.12.2015 வியாழக்கிழமை நடைபெற்றது. மேலதிக படங்கள் பின்னர் எடுத்துவரப்படும் .

IMG_0132 IMG_0133 IMG_0134 IMG_0135 IMG_0136 IMG_0137 IMG_0138 IMG_0139 IMG_0140 IMG_0141 IMG_0142 IMG_0143

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் நாளை 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் நாளை  24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது


கோலாகலத்திறப்பு விழாவிற்கு தயாராகும் யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம்  திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் பூரண நிதிப்பங்களிப்புடன் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் நாளை  24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது

1910 ஆம் ஆண்டு ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலைக்கு காணியை தருமசாதனம் செய்தவர் முன்னாள் யாழ்ரன் கல்லூரி அதிபர் திரு. மா. வைத்தியநாதன் அவர்களின் பேரனார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலைக்கு முகாமையாளராக காரைநகர் மேற்கு விதானையார் திரு. சண்முகம் அவர்கள் செயற்பட்டார். இவரே புளியங்குளம் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

s_0001 s_0002

 

IMG_0127 IMG_0128 IMG_0129 IMG_0130

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல் அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

swiss logo

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல்
அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்  நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள்  மூன்றாவது ஆண்டாக தயாரித்த  நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா வெகுவிமரிசையாக இடம்பெறவிருக்கிறது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகிறோம்.


24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00மணிக்கு ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய இரு மாடிக் கட்டிடத்தித் திறப்புவிழாவைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்கு பரிசளிப்பும், கௌரவிப்பும். நடைபெறும். விழாவிற்கு கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய  அனைத்து மாணாக்கரும் தமது பாடசாலை சீருடையில் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் இவ் விழாவிற்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், புலம்பெயர் காரையூர்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வருக, வருகவென வரவேற்கின்றோம். 

இவ் நிகழ்விற்கு ஆதரவு "அறக்கொடை அரசு" திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். நிகழ்வுகள் அனைத்தும் karainagar.co, karainagar.com ஆகிய இணையத்தள தொலைக்காட்சியில்  இலங்கை நேரம் காலை 9.00மணியில் இருந்து மதியம் 2.00மணிவரை  காண்பிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மூதறிஞர்களையும் கலைஞர்களையும் கௌரவித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

                        நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்
                                        ஆளுயர்வே ஊருயர்வு

                                                                               சுவிஸ் காரை அபிவிருத்தி சபை, 
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              22.12.2015

 

 


 

 

 

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம் கோலாகலத்திறப்பு விழா எதிா்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம் கோலாகலத்திறப்பு விழா திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் முன்மாதிாிக்கு பலரும் பாராட்டு

திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் பூரண நிதிப்பங்களிப்புடன் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் எதிா்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

s_0001

s_0002

Ay1 Ay2 Ay3 Ay4