மங்கள வாத்திய இசையோடு மலர்ந்த காரைத்தென்றல்-2015

SWISS LOGO

 மங்கள வாத்திய இசையோடு மலர்ந்த  

             காரைத்தென்றல்-2015

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பதினொராவது ஆண்டுவிழா சுவிஸ் வாழ் காரைக்குடும்ப அங்கத்தவர்களின் உன்னதமான பேராதரவுடன்  ஆவணி திங்கள் 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00 மணிக்கு  Kirchgemeindehaus Pfarrhausstrasse 2, 8424 Embrach மண்டபத்தில் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. நிகழ்வுகளை திரு கனகசபை சிவபாலன், திரு சக்திவேல் சத்தியரூபன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதலாவதாக மங்கள வாத்திய கலைஞர்கள்  மங்களகரமாக பிள்ளையார் துதி இசைக்க மண்டப வாசலிலுள்ள மங்கள விளக்கினை திருமதி வாசுகி திரவியபவன், திருமதி சொர்ணம் சண்முகராஜா, திருமதி வதனி சற்குணராஜா, ஆகியமூவரும் மண்டபத்தின் மேடையிலுள்ள விளக்கை திருமதி க.சிவனேயன், திருமதி  மனோரஞ்சிதம் கணேஸ், திருமதி  சந்திரவதனி நந்தகுமார், திருமதி. வதனா லோகதாஸன்  திருமதி தனலட்சுமி விஜயானந்தன் ஆகியோர் சுடரேற்றி வைக்க நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

கடவுள் வணக்கம் செல்விகள் சாரங்கி சற்குணராஜா, கவிதா திருவருள்நாதன், கஜலக்ஷி உருத்திரர், பாரதி லோகதாஸன், ஆர்த்தி நகுலேஸ்வரன் ஆகியோரால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மன்ற கீதம் இறுவெட்டில் இசைக்கப்பட்டது. நிகழ்வில் "கல்வியின் சொத்து" என வர்ணிக்கப்படும் அமரர் க. வைத்திஸ்வரக்குருக்கள், கிழவன்காடு கதிர்காமசாமி கோவில் பிரதமகுரு அமரர் ஆறுமுகக்குருக்கள், எமது மன்றத்துக்கு நீண்ட காலமாக சேவைகள் பல புரிந்த அமரர் சுப்பிரமணியம் உருத்திரர், காரைத் தென்றல் நிகழ்வுகளை ஒளி,ஒலிப்பதிவு செய்த சுதா விடியோ நிறுவனர் திரு பாஸ்கரன் (சுதா) மற்றும் காரைநகர் மாணவர்களுக்கு சேவை செய்த திரு.சீவரட்ணம் நவரட்ணம் மற்றும் நாட்டின் அசாதரண சூழ்நிலைகளால் உயிரிழந்த பொதுமக்களையும்  நினைவுறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

காரையம்பதி மூத்த நாதஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன்  தவில் வித்துவான் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) குழுவினரின் "இசைக் கச்சேரி" இசையால் வசமாகஇதயம் ஏது என்ற கூற்றுக்கு கிணங்க ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. மிகவும் அற்புதமாக தவில், நாதஸ்வரக் கலைஞர்கள்  கானமழை பொழிந்தார்கள். அதனைத்தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு SKT நாதன் கடை உரிமையாளர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் அனுசரணை வழங்கினார்கள்.


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் தவில், நாதஸ்வரக் கலைஞர்களை விருது வழங்கி கௌரவித்தனர். இவ் விழாவின் பிரதமவிருந்தினர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் வாழ்த்திசைக்க சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள், திரு,சிவனேயன். கோபி,  கலாநிதி  கென்னடி விஜயரத்தினம் SKT நாதன் கடை உரிமையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் ஆகியோர்கள் பொன்னாடைபோத்தி சந்தனமாலை அணிவித்து வாழ்த்துப்பாக்களை வழங்கி கௌரவித்தனர். அதனை தொடர்ந்து ஆசியுரையை சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் வழங்கினார்.


வரவேற்பு நடனத்தினை செல்வி சகானா திரவியபவன் வழங்கினார்       சிறுவர்களின் பேச்சுப் போட்டியில் "நான் விரும்பும் கவிஞர் பாரதி" என்ற தலைப்பில் செல்வன் நவின் நகலேஸ்வரன், செல்வி கஜலக்ஷி உருத்திரர், செல்வி அபிராமி சிவகுமார்,  "திருவள்ளுவர்" என்ற தலைப்பில் செல்வி சராங்கி லிங்கேஸ்வரன் ஆகியோர்கள் பங்குபற்றினர். போட்டியின் நடுவர்களாக ஆசிரியர் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (பிரான்ஸ்) கலாநிதி கென்னடி விஜயரத்தினம் (எதியோப்பியா), ஆசிரியர் திருமதி சுகந்தி ரவிந்திரன் (சுவிஸ்) ஆகியோர்கள் பணியாற்றினார்கள்.


  அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல், வயலின் இசையை செல்வி ஆர்த்தி நகுலேஸ்வரன் நிகழ்த்தினார். பேச்சு செல்வன் ஆர்வலன் சரவணப்பெருமாள் நிகழ்த்தினார் பாட்டு நிகழ்வை செல்வி பாரதி லோகதாஸன் இனிமையாக பாடினார். ஜீவயோகாசனத்தினை செல்வன் தினா சண்முகநாதன் மிக அற்பதமாக செய்து காட்டினார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரை சபையின் பொருளாளர் திரு முருகேசு பாலசுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டது.


நூல் அறிமுகங்களில் முதலாவதாக "அர்த்தமுள்ள இந்து ஆலய வழிபாடு" என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தார் சிவஸ்ரீ இராம சசிதரக்குருக்கள். அவர்கள் தனது உரையில் இந் நூலின் அவசியம் பற்றியும், இளையோருக்கு இந்து ஆலயத்தின் வழிபாட்டு முறைகள் இலகுவான முறையில் அறிந்து கொள்வதற்கு பயன்படக்கூடியது என்றும் கூறியிருந்தார். இந் நூலின் மூன்று பிரதிகளை திரு.சுப்பிரமணியம் விமலநாதன், திரு.கோபாலசாமி ஸ்ரீசங்கர் திரு பொன்னம்பலம் தயானன் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.


"அருணாசலம் உபாத்தியார்" அவர்களின் வரலாற்று நூலினை திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்கள் அறிமுகம் செய்து உரைநிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில் காரைநகரின் சைவவமகாசபையின் முதல் வெளியீட்டிக்கு செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் அரும்பணியாற்றினார் தற்பொழுது சைவசித்தாந்த மன்றம்  கனடா  அதன் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்களின் அதீத உழைப்பினாலும். திருமதி கிருஷணவேணி சோதிநாதன் அவர்களின் முயற்சியினாலும் இந்நூல் மறு பிரசுரமாக வெளிவந்துள்ளது. அருணாசலம் உபாத்தியார் வடமாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கு அரும்பணியாற்றினார், அவர்கள் இல்லாதவிடத்து காரைநகரில் சைவமும் தமிழும் தலைத்தோங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.   ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பணியை அவருக்குப்பின் அருணாசலம் உபாத்தியார் முன்னெடுத்து வந்தார். இம் மலரினை அவருடைய பேரனார் திரு. சிவபாதம் பரமசிவம் அவர்கள் கனடாவில் வெளியிட்டு வைத்தார். அருணாசலம் உபாத்தியார் சைவத்திற்கும் தமிழுக்கும் செய்த அரும்பணிகள் நிறையவே உண்டு நேரத்தினை கருத்தில் கொண்டு நிறைவு செய்கின்றேன் எனவும் இந் நூல் எல்லோர் இல்லங்களிலும் இருக்கவேண்டிய அரும்காப்பியம் என்றும் கூறியிருந்தார் முதல் மூன்று பிரதிகளை சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்கள் வெளியிட்டு வைக்க திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள், செல்வி சுபாஜினி சற்குணராஜா திரு. சுப்பிரமணியம் திரவியபவான் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.


ஊரில் இருந்து  காணொளிமூல வாழ்த்துரைகளை பண்டிதை, கலாபூசணம் யோகலட்சுமி சோமசுந்தரம், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி, பிரதி அதிபர் வவுனியா, சித்தி விநாயகர் வித்தியாலயம் திரு.அருணாசலம் வரதராஜன்  ஆகியோர்கள் வழங்கியிருந்தார்கள். ஏடு நிறுவனத்தின் சேவைகள், பணிகள் தொடர்பாக காணொளிமூலம் காண்பிக்கப்பட்டது. இதனை சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் தொகுத்து வழங்கினார்.


 புலம் பெயர் மன்றங்களின் பணிகள், ஒற்றமையின் முக்கியத்துவம் பற்றி  கவிதை வடிவில் கருத்தரைத்தார் திரு.முருகேசு பாலசுந்தரம் அவர்கள்.


வினோத உடை நிகழ்வில் செல்வன் சிறோசன் ருசியந்தன், செல்வன் நாவின் தயாபரன் செல்வி மகிழினி நவரட்ணம் ஆகியோர் பங்குபற்றினார் இந் நிகழ்வினை செல்விகள் சுபாஜினி சற்குணராஜா, பானுஜா பாலசுந்தரம் ஆகியோர்கள் தொகுத்தளித்தனர். வயலின் இசையை செல்வி பைரவி லோகதாஸன் வழங்கினார். 


செல்வி சாம்பவி விவேகானந்தா அவர்களின் பரதநாட்டியம் மிகத் திறமையான நடன அபிநயம் பார்வையாளரின் கண்களுக்கு விருந்து அளித்திருந்தது.


தேனீர் இடைவேளையை தொடர்ந்து சபைத் தலைவர் திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்களின் தலைமையுரை நிகழ்த்தினார் அவர் தம் உரையில் இவ் விழாக்களை நடத்துவதன் மூலம் எமது இளம் சிறார்களுக்கு எம் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடுகளை உணர்த்திக் கொள்ளலாம், வளர்த்துக் கொள்ளலாம் என்று கருத்துரைத்தார்.


கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்களின்; தலைமையில்  இளையோர் கலந்துரையாடல்  நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு சுவிஸ் நாட்டின் கல்வி எதை நோக்கி? திறமை? பழக்கவழக்கம்? தன்னம்பிக்கை? ஆகிய எண்ணக் கருத்துக்களை கருத்திற் கொண்டு பத்து சுவிஸ் வாழ் காரை மாணவர்கள் பங்குபற்றினர். இந் நிகழ்வு அரங்கத்தில் எல்லோரையும் கவர்ந்து கொண்டது. இதில் பங்குபற்றிய மாணவர்களை கௌரவித்து கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களும் திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன் அவர்களும்  பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கினார்கள். கலையரசி தாரணி சிவசண்முகநாதசர்மா அம்மணியை திருமதி வாசுகி திரவியபவான் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலையணிவித்து கௌரவித்தார்.

கனடாவிலிருந்து "எனது ஊர் காரைநகர்" சஞ்சிகையின் ஊடகவியலாளர்  தீசன் திரவியநாதன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. இவர்களை சபையின் போஷகர் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

உலகசைவப் பேரவைத் தலைவர் திரு ச.பற்குணராஜா யோகானந்த அடிகள் (பிரான்ஸ்) அவர்களின் வாழ்த்து செய்தியினையும், கௌரவவிருந்தினர் உரையையும் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார் இவர்களை திரு. முருகேசு சற்குணராஜா சபைசார்பாக பொன்னாடை போர்த்தி மாலையணிவித்து கௌரவித்தார்.

பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கலாநிதி கென்னடி விஜயரத்தினம் தனது உரையில் புலம் பெயர் வாழ் நம் உறவுகள் தம் தாய் ஊரை நேசிக்கவேண்டும். எமது ஊரின் முன்னேற்றத்திற்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டும். இளையோரிடம் சபைநடத்த பெரியோர்கள் வழிப்படுத்த வேண்டும். என்று கூறியிருந்தார். பிரதம விருந்தினரை திரு.நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

காரைநகர் அபிவிருத்திச்சபைத் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், ஒய்வுநிலை அதிபர் மு.சு. வேலாயுதபிள்ளை, கலாநிதி ஆ.தியாகராஜாம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் ஆகியோரது காணொளிமூல வாழ்த்துரைகள் திரையில் காண்பிக்கப்பட்டன.

திரு.துரைராஜா ஈஸ்வரன், அவர்களும், திரு சக்திவேல் சத்தியரூபன் அவர்களும் எல்லோரையும் மெய் மறந்து வயறு குலுங்க, குலங்க "சிரிப்பு வைத்தியம்" செய்தார்கள். வைத்தியத்தின் இறுதியில் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் இவர்களின் திறமையை வெகுவாக பாராட்டி தொடர்ந்து பங்குபற்ற வேண்டும் என்று வாழ்த்தினார். இவர்கள் இருவருக்கும் திரு.சுப்பிரமணியம் விமலநாதன் அவர்கள் நினைவுப்பரிசும் மாலையும் அணிவித்து கௌரவித்தார்.

சுவிஸ் வாழ் காரை மாணவர்கள்  "இலங்கையில் இருந்து இறக்குமதி" என்ற  நாடகத்தை வெகு சிறப்பாக ஒழுங்கமைத்து நடித்தனர்.  இந்நாடகம் சபையினரை நன்றாக கவர்ந்திருந்தது. நாடகத்திற்கான இறுதியில் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்கள் நாடகத்திற்கான கருத்துரை வழங்கி பாராட்டினார். நாடகத்தில் பங்குபற்றியவர்களுக்கு திரு, திருமதி கணபதிப்பிள்ளை நந்தகுமார் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர். 


அதனைத்தொடர்ந்து சபையின் செயலாளர் தம்பையா தயாபரன் நன்றியுரை வழங்கினார்கள். 
               நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
               அன்றே மறப்பது நன்று – திருக்குறள்

 இவர் தனது உரையில் தாயகத்திலிருந்து காணொளிமூல வாழ்த்துரை வழங்கியோருக்கும், வாழ்த்துப்பாக்களை எழுத்துருவாக்கி அச்சுப்பதிவு செய்தும் காணொளிமூலம் வாழ்த்துரைகளை ஒளி,ஒலிப்பதிவு செய்ய அரும்பணியாற்றிய கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களுக்கும், கலைஞர் கௌரவிப்புக்கு அனுசரணை வழங்கிய SKT உரிமையாளர் சுப்பரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கும், இலங்கை சென்று வருவதற்கான விமானச்சீட்டுக்கு அனுசரணை வழங்கிய  Siva Travel உரிமையாளர் திரு.கனகசுந்தரம் சிவநேயன் அவர்களுக்கும், வர்ண துண்டுப்பிரசுரங்களை வடிவமைத்த திருமதி மலர் குழந்தைவேலு கனடா அவர்களுக்கும் விழாவினை விளம்பரப்படுத்திய காரைநகர்.கொம், காரைநகர்.கோ லங்காஸ்ரீ நிறுவனத்தினருக்கும், மேடை அலங்காரம் செய்த  திரு.நவம், ஒலிபெருக்கியை ஏற்பாடுசெய்த திரு.தெய்வேந்திரன், இன்னும் பலவழிகளில்   விழா சிறப்புற ஓத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் சபை சார்பாக தெரிவித்தார்.


மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களில் முதலாமிடம் செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன் இரண்டாமிடம் கஜலக்ஷி உருத்திரர், மூன்றாமிடம் செல்வி அபிராமி சிவகுமார் ஆகியோருக்கும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் நினைவுப் பரிசில்களை பிரதம விருந்தினர்  கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள், திரு. சுப்பிரமணியம் 
கதிர்காமநாதன் அவர்கள், திரு.நல்லதம்பி சரவணப்பெருமாள் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். 

உன்னதமான பேராதரவுடன் காரைத்தென்றல்-2015 நிகழ்வை மிகச்சிறப்பாக நாடத்துவதற்கு ஒத்தழைப்பு வழங்கிய சுவிஸ் வாழ் காரைக் குடும்ப அங்கத்தவரின்  பெயர்கள் செல்வன் தினா சண்முகநாதனால் அதிஷ்டம் பார்க்கப்பட்டவேளை திரு. கந்தசாமி சிவபாலன் தெரிவுசெய்யப்பட்டார்; இரவு 11.00மணிக்கு இராப்போசனத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
    
                                    "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"

  நிகழ்வின் நிழற்படங்களை  கிழேகாணலாம்.


                                                             நன்றி

                                                                                                           இங்ஙனம்,
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                            21.09.2015