Tag: காரைநகர் அபிவிருத்தி சபை

அமரர்.ஞானேஸ்வரன் அனோஜன் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் காணிக்கை.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 5A மற்றும் அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெற்ற காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களுக்கான கொடுப்பனவாக ரூபா 5000 வீதம் விஜயதசமி நன்நாளில் வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 5A மற்றும் அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெற்ற காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களுக்கான கொடுப்பனவாக ரூபா 5000 வீதம் விஜயதசமி நன்நாளில் வழங்கப்பட்டது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில்

வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திருமதி கிருபாராணி அவர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் கணவர் இறந்த நிலையில் தாம் கட்ட ஆரம்பித்த வீட்டிற்கு கதவுகள் யன்னல்கள் இன்றி தமது வயது வந்த இரு பெண் பிள்ளைகள்,ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் தமது அன்றாட தேவைகளுக்காக தற்போது கமநல சேவைகள் திணைக்களத்தின் அம்மாச்சி உணவகத்தில் உணவு தயாரித்து விற்று தனது குடும்பத்தை பராமரித்து வருகிறார். காலை 8மணிமுதல் மாலை 6மணிவரை இங்கு இருப்பதால் வீட்டிற்கு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என காரை அபிவிருத்திச் சபை பரிந்துரைப்பின்பேரில் மன்ற உபதலைவர் திரு பாலச்சந்திரன் அண்மையில் நேரில் பார்வையிட்டு செயற்குழுவிற்கு வழங்கிய அறிக்கையின் படி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இவர்கள் வீட்டுக்கு தேவையான யன்னல்கள் கதவுகளும் ரூபா 225,000.00 செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருமதி கிருபாராணி அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கீழ் காணும் படங்கள் முன்பிருந்ததையும் வீடுமுடித்தபின் குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படுவதையும் காணலாம்.

படங்கள்: சிந்துஜா வீடியோ

அமரர் விஸ்வலிங்கம் கனகரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

Kanagaradnam KDS

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

 

சிவமயம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்

தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

 

    குஞ்சி யழகுங் கொடுத்தானைக் கோட்டழகும்

    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

    கல்வி அழகே அழகு

                                                                                                                                            நாலடியார்

 

அமரர் ஆ.தியாகராசா அவர்களின் பணியை நினைவுகூரும் வகையில் காரை அபிவிருத்திச்சபையின் “ஆளுயர்வே ஊருயர்வு” என்னும் மகுட வாசகத்திற்கிணங்க மொழி, கல்வி, கலை, மேம்பாட்டுச் சுவிஸ் குழுவினரின் ஒழுங்கமைப்பும் காரைநகர் அபிவிருத்திச்சபையின் தெரிவுக் குழுவினரும் சேர்ந்து வருடாவருடம் நடத்தி வரும் போட்டியாகும். இப்போட்டி மாணவச் செல்வங்களின் ஆளுமைத்திறன், மொழித்திறன், கலைத்திறன் என்பவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகும். போட்டிகளாவன (2019)

 

  1. பேச்சுப்போட்டி
  2. கட்டுரைப்போட்டி
  3. திருக்குறள் மனனப் போட்டி
  4. இசைப்போட்டி – தனி, குழு
  5. பொதுஅறிவு வினாடி வினாப்போட்டி
  6. நாடகப்போட்டி

 

போட்டிப் பிரிவுகளாவன:

  1. ஆரம்பப்பிரிவு     – தரம் 03,04,05 மாணவர்கள்
  2. கீழ்ப்பிரிவு– தரம் 06,07,08 மாணவர்கள்
  3. மத்தியபிரிவு– தரம் 09,10,11 மாணவர்கள்
  4. மேற்பிரிவு– தரம் 12,13 மாணவர்கள்

 

போட்டிகளுக்கான பொது விதிகள்

  1. காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் எப்பாடசாலையிற் கற்றாலும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தேவை ஏற்படின் ஊராளன் என்பதை ஏற்பாட்டாளருக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
  2. விண்ணப்பிப்போர் காரைநகர்ப் பாடசாலை மாணவராயின் பாடசாலை அதிபர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  3. ஏனைய மாணவர்கள் விண்ணப்பிப்பதாயின் விண்ணப்பப் பத்திரத்தை காரை அபிவிருத்திச்சபை அல்லது மாணவர் நூலகத்திடம் பெற்றுப் பூரணப்படுத்தி தான் கற்கும் கல்லூரி அதிபரிடம் கற்கும் தரம் பற்றி உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
  4. விண்ணப்பிப்போர் மென் பிரதியாயின் Swisskarai2004@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் காகிதப் பிரதியாயின் தலைவர், காரைநகர் அபிவிருத்திச்சபை, தியாகத்திறன் வேள்வி–2019, மணற்காட்டு அம்மன் வீதி, காரைநகர் என்ற முகவரிக்கு 09.20ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
  5. மாணவர் ஒருவர் நாடகம் தவிர்ந்த 04 போட்டிகளில் பங்கு கொள்ளலாம். இசைப் போட்டியில் தனியும் குழுவும் ஒன்றாகக் கருதப்படும்.
  6. போட்டிகளுக்கான காலம்ää நேர அட்டவணைகள் கல்லூரி அதிபர் ஊடாகவும் இணையத்தளத்தினூடாகவும் அறிவிக்கப்படும்.
  7. மாணவர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்;களுக்கு முன்னதாகச் சமுகமளிக்க வேண்டும்.
  8. போட்டியாளர்கள் பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது.
  9. போட்டிகள் காரைநகர் இந்துக்கல்லூரி அல்லது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெறும்.
  10. போட்டியில் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் ஐவருக்கு முதல் ஐந்து பரிசு வழங்கப்படும்.
  11. போட்டிகளில் 75 புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கிக் கௌரவிக்கப்படும்.
  12. போட்டிகளில் அதிகூடிய புள்ளி 65இற்குக் குறைவாக எடுக்கும் மாணவர்கள் போட்டியினின்றும் புறந்தள்ளப்படுவார்கள்.
  13. போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  14. போட்டிகள் யாவும் திருவுளச்சீட்டின் மூலம் பெற்ற தலைப்பில் பங்கு கொள்ளல் வேண்டும்.

 

இங்ஙனம்

தியாகத்திறன் வேள்விப் போட்டிக்குழுவினர்

காரைநகர் அபிவிருத்தி சபையின் புதிய நிர்வாக சபையினருக்கான வாழ்த்துக்களும் கடந்த நிர்வாக சபையினருக்கான நன்றியறிவிப்பும்

 

காரைநகர் அபிவிருத்தி சபையின்

புதிய நிர்வாக சபையினருக்கான வாழ்த்துக்களும்

கடந்த நிர்வாக சபையினருக்கான நன்றியறிவிப்பும்

காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாகத்திற்கு 11.08.2019 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தெரிவு ஆகியுள்ள திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாகசபையினருக்கு கனடா காரை கலாச்சார மன்றம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

கனடா வாழ் காரைநகர் மக்களின் சார்பாகவும், கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகத்தின் சார்பாகவும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த நிர்வாகசபையினருக்கு மன்றத்தினதும் கனடா வாழ் காரை மக்களினதும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

காரை மண்ணிற்காக சிறப்புற சேவையாற்றி கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாகவும் நேரடி தொடர்புகளை பேணி முறையே காரை மக்களிற்கு சேவையாற்றியதுடன், சிறப்புற செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்கறிக்கையினை சமர்ப்பித்து காரை மக்களினதும் பேராதரவினை பெற்றுள்ளதை அறிந்து பெருமிதம் கொள்கின்றோம்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் வளர்ச்சியிலும் மண்ணின் சேவையிலும் மேலும் சிறப்புற பணியாற்றவும் நிர்வாக சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, ஒற்றுமை நிலைத்து மண் வளம்பெறவும் எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்தான் தாழ் பணிந்து வாழ்த்துகின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

 

நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

காரை அபிவிருத்திச்சபையின் “சமூக சேவைக்காக இளைஞர்களை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று கோவளம் விளையாட்டுக் கழகம் மற்றும் காரை.சலச்சர்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் இணைந்து சிரமதான பணியினை முன்னெடுத்தனர்.

காரை அபிவிருத்திச்சபையின் “சமூக சேவைக்காக இளைஞர்களை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று கோவளம் விளையாட்டுக் கழகம் மற்றும் காரை.சலச்சர்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் இணைந்து சிரமதான பணியினை முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் பிராந்திய வைத்திய அதிகாரி திரு. பரா நந்தகுமார் , ஆதார வைத்தியசாலை வைத்தியர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி, காரை.அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மனிதாபிமான நிதியுதவி கோரல்

 

மனிதாபிமான நிதியுதவி கோரல்

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் செய்கின்ற அறம் சார்ந்த  மனிதாபிமான உதவிகள் மகத்தானவையாக கருதப்படுகின்றன. அந்த வகையில், காரைநகர்  காமாட்சி கேணியடியை  சேர்ந்த திருமதி. லதாரணி  என்பவர் ஏழு வயதுக்குழந்தையுடனும் , வயோதிப  தாயாருடனும் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகின்றார்.  பிழைப்பு ஏதுமற்ற நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில்  கூலி வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வருகின்றார். இவர்கள் வாழ்ந்து   வருகின்ற  தகரக்  கொட்டில்,  மழைக்காலத்தில்  ஒழுக்குகள் நிறைந்ததாகவும் , தண்ணீர் தேங்கி  நிற்பதாகவும் காணப்படுகின்றது.  அதனால்,  மழைக்காலத்தில்  அயலவர்கள்  வீட்டில் தங்கி வருகின்றனர்.

இத்தகைய நெருக்கடியான  சூழ்நிலையில் வீட்டினுள் மழைநீர் தேங்காதவாறும், பொருத்தமான முறையில் கூரை வேலைகளை திருத்தியமைக்கவும் ரூபா மூன்று  இலட்சம்   தேவைப்படுகின்றது.  உதவி செய்யக்கூடிய நிலையில் யாருமேஇல்லாத நிலையில்  நிதியுதவியினை  குடும்பத்தினர் கோரி நிற்கின்றனர்.  காரை  அபிவிருத்தி சபை நல்கிய கடிதமும்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அன்பளிப்பு வழங்க விரும்பும் கருணை உள்ளங்கள்  647 818 7443 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அன்றி  மன்ற karainagar@gmail.com என்ற  மின்னஞ்சல்  மூலமாகவோ  தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

 

நிதியுதவி செய்தோர் விபரம்

 

No                            Name Amount Receipt No
1 Sabaratnam Balachandran $100.00
2 Pirabakaran Paramalingam $  50.00
3 Thambiaayah Paramantharajah $  50.00
4 Thambirajah Jeyachandran $  50.00
5 Thevakumar Sellathurai $  50.00
6  k.Sivapathasundram $500.00
7
8
9

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கண்பார்வைக் குறைபாடுடைய 11 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபை அலுவலகத்தில் வைத்து மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கண்பார்வைக் குறைபாடுடைய 11 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபை அலுவலகத்தில் வைத்து மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச்சபையின் கண் படர் சத்திர சிகிச்சை பயணம் 06.04.2018

காரைநகர் அபிவிருத்திச்சபையின் கண் படர் சத்திர சிகிச்சை பயணம் 06.04.2018

வருடாந்தம் காரை அபிவிருத்திச் சபையினால் இம்முறையும் பதிவு செய்யப்பட்ட 34 கண்நோயாளர்களுக்கான ஆரம்பகட்ட கண் சிகிச்சை யாழ் போதன வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 11 பேருக்கு பார்வை குறைபாட்டிற்காக மூக்குக் கண்ணாடி வழங்கவும், 21 பேருக்கு கண்சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளவும், 2 பேருக்கு கண் கிளினிக்கிற்கு செல்லவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்கள் எம்மால்
பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டு மதியபோசனமும் வழங்கப்பட்டது. மீளவும் சபைக்கு அழைத்து வரப்பட்டது. இவர்களை சபை உறுப்பினர்களான உப தலைவரான திரு ந.பாலகிருஷ்ணன் உப செயலாளர் திரு க.நாகராசா அலுவலக உதவியாளர் ச.தெய்வசக்தி அழைத்து சென்றார்கள்.

இவ் நோயாளர்களுக்கு சிகிச்சையினை வழங்கிய யாழ் போதன வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் சக ஊழியர்களுக்கும் எமது சபையின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

செயலாளர்

 

தமிழ் பற்றாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையின் கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலி

தமிழ் பற்றாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் திடீர் மறைவு காரைநகர் மக்களுக்கு மீயாத் துயரினையும் அதிர்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவை அளப்பெரியது.

சிறந்த கல்விமானான அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா தில்லைக் கூத்தன் திருவடி நிழலில் சேர ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசப் பெருமைனைப் பிரார்த்திக்கின்றோம்.

காரைநகர் அபிவிருத்திச் சபை,
காரைநகர்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட / வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்

Scan_circular re mtgs – 24-11-17

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி!

Greetings to CKCA Committee – Scanned copy

கனடா காரை கலாசார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை நன்றியும், பாராட்டும் தெரிவிப்பு!

     canada 10001                                                                                                                       

                                                                                                                          20.04.2017.

தலைவர்,
கனடா காரை கலாசார மன்றம்,
கனடா.

                              நன்றியும், பாராட்டும் தெரிவித்தல்

27.03.2017 அன்று காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட எமது நிர்வாக சபைக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கு முதலில் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

             தொடர்ச்சியாக ஊரிற்கு தாங்கள் அளித்து வரும் பேராதரவிற்கு எமது சபையின் சார்பான நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் ஊரிற்கான தங்கள் சேவை மென்மேலும் தொடரவும் சபையின் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                      அடுத்து புதிதாக அமையவிருக்கின்ற தங்கள் சபையின் புதிய நிர்வாகசபையினருக்கு எம்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஆ.யோகலிங்கம்                                                                                  சிவா.தி.மகேசன்    
செயலாளர்                                                                                               தலைவர்
       

 

canada 1

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள் 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள்  24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக் கணணிகள் அண்மையில் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மேலதிக இரு கணணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி,பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரிடம் இந்த மடிக் கணணிகள் கையளிக்கப்பட்டது.

அண்மையில் காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை  என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணணிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணணி வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கணணிகள் காரைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8
 

காரைநகர் அபிவிருத்தி சபை வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்!

                                  காரைநகர் அபிவிருத்தி சபை

                           வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்


மேற்படி எமது சபையின்  வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27.03.2017  திங்கட்கிழமை அன்று  காரைநகர் அபிவிருத்திச்  சபையின் நூலகத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும்.அன்றைய தினமே புதிய நிர்வாகசபை தெரிவும் நடைபெறும். 

சபையின் யாப்பின்படி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் சபையின் வருடாந்த அங்கத்துவ பணத்தையோ அல்லது ஆயுட்கால அங்கத்துவ பணத்தையோ 25.03.2017 க்கு முன்னர் சபையின் காரியாலத்தில் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளவும்.
 
குறிப்பு:- பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 
                தலைவர்

 காரை அபிவிருத்தி சபை 

 

 

KDS GM NOTICE

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளராக  கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தயானந்தன் கலந்துகொணடார்;.

DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00021 (Copy) DSC00022 (Copy)

 

 

 

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான வே.அன்பழகன்,எஸ்.நிமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இறுதிக் கருத்தரங்கு எதிர்வரும் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

DSC00160 (Copy) DSC00161 (Copy) DSC00162 (Copy) DSC00163 (Copy) DSC00164 (Copy) DSC00165 (Copy) DSC00166 (Copy) DSC00167 (Copy) DSC00168 (Copy) DSC00169 (Copy) DSC00170 (Copy) DSC00171 (Copy) DSC00172 (Copy) DSC00173 (Copy) DSC00174 (Copy) DSC00175 (Copy) DSC00176 (Copy) DSC00177 (Copy) DSC00178 (Copy) DSC00179 (Copy) DSC00180 (Copy) DSC00181 (Copy) DSC00182 (Copy) DSC00183 (Copy) DSC00184 (Copy) DSC00185 (Copy) DSC00186 (Copy) DSC00187 (Copy) DSC00188 (Copy) DSC00189 (Copy) DSC00190 (Copy) DSC00191 (Copy) DSC00192 (Copy)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு இன்று புதன்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான என்.சுந்தா,எஸ்.திலீபன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன்,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

முதலாவது கருத்தரங்கு கடந்த மாதம் இடம்பெற்ற போது வட மாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவ்வாண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் கல்விக் கருத்தரங்குகளை நடாத்தி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

1DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00022 (Copy) DSC00023 (Copy) DSC00024 (Copy)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!


கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016  ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்டச் சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசச் செயலாளர் திருமதி ச.பரமானந்தம்,காரைநகர் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ.நிதர்சன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியதுடன் காரைநகர் பிரதேசத்தில் உள்ள விதவைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுமார் நூறு பயனாளிகளுக்குத் தென்னம் பிள்ளைகளும் இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காரைநகர்அபிவிருத்திச்சபைஉறுப்பினர்கள்,அங்கத்தவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

FullSizeRender(1) FullSizeRender(2) FullSizeRender(3) FullSizeRender(4) FullSizeRender(5) FullSizeRender(6) FullSizeRender(7) FullSizeRender(8) FullSizeRender(9) FullSizeRender(10) FullSizeRender(11) FullSizeRender IMG_9811 IMG_9845 IMG_9852 IMG_9855

இன்று 25.03.2016 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்  அனுசரணையில் காரை அபிவிருத்திசபையினரால் வறிய மக்களுக்கான கண் அறுவைசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட  பயனாளர்களுக்கு இன்று 25.03.2016 மூளாய் கூட்டுறவு  வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 FullSizeRender_5 IMG_5732 IMG_5734 IMG_5736

 

காரைநகா் அபிவிருத்திச்சபையினாின் ஏற்பாட்டில் இலவசமாக 500 தென்னங்கன்றுகள் விநியோகம்

காரைநகா் அபிவிருத்திச்சபையினாின் ஏற்பாட்டில் இலவசமாக 500 தென்னங்கன்றுகள் இன்று  20.11.2015 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் காரைநகா் அபிவிருத்திச்சபையின் புதுவீதி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டது.

பயனாளிகள் தென்னங்கன்றுகள் பெறுவதனையும் காரைநகா் அபிவிருத்திச்சபையின் தலைவா் திரு.விக்கினேஸ்வரன்,பொருளாளா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் ஆகியோா் தென்னங்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்குவதனையும் படங்களில் காணலாம்

.அடுத்தகட்ட தென்னங்கன்றுகள் விநியோகம் 2016 மாசி மாத நடுப்பகுதியில் நடைபெறும் என சபையின் பொருளாளா் அறியத்தருகின்றாா்.

DSC_0799 DSC_0801 DSC_0804 DSC_0807 DSC_0811 DSC_0814 DSC_0821 DSC_0826 DSC_0827 DSC_0829 DSC_0831 DSC_0832 DSC_0835 DSC_0837 DSC_0838 DSC_0844 DSC_0845 DSC_0848

சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபை கண்ணீர் அஞ்சலி

                                 கண்ணீர் அஞ்சலி

IMG_0399

                      சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி

                      கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள்
 
 
என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பரடிகளின் வாக்கிற்கிணங்க தம் வாழ்நாள் முழுவதும் சைவப்பணியும்,தமிழ்ப்பணியும் ஆற்றிய பெருமகனார் இறையடி சேந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகின்றோம். அன்னாரின் மறைவு தமிழ் உலகிற்கும்,சைவ மக்களுக்கும், பெரிதும் காரை வாழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
நூற்றாண்டு விழாவைக் காண இன்னும் சில மாதங்கள் இருக்கும் வேளையில் சிதம்பரேஸ்வரப் பெருமானின் திருவடிகளை அடைந்த அன்னாரது ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்.அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
காரைநகர் அபிவிருத்திச் சபை,
காரைநகர்.
 
 
 
 
 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்களுக்கு

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்களுக்கு

24-02-2013 அன்று தங்கள் மன்றத்தின்; நிர்வாகக் குழுவினைத் தெரிவு செய்யவுள்ளீர்கள். வேட்பாளர்கள் பட்டியலைப் பார்க்கும் பொழுது அனைவரும் தகுதியும் பொறுப்புணர்ச்சியும்; உள்ளவர்களாக அறியக்கூடியதாகவுள்ளது. அவர்களில் தாங்கள் தெரிவு செய்பவர்கள் நமது ஊர் செழிக்க, நம்மவர்கள் நலமுடன் வாழக் கனடா காரை கலாச்சார மன்றம் மூலமாக தத்தம் சேவைகளை வழங்க வேண்டும் என வாழ்த்தி வரவேற்கவுள்ளோம்.

இங்ஙனம்
காரைநகர் அபிவிருத்திச் சபை சார்பாக
அதன் நிர்வாக சபை(2013)

காரைநகர் அபிவிருத்திச் சபையின் மாணவர் கௌரவிப்பு விழா – 2012

கனடா காரை கலாசார மன்றம், இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றும் காரைநகர் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா.

Continue reading

காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012

காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012
காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 9.00மணிக்கு நடைபெறவுள்ளது. க.சோமசேகரம் தலமையில் நடைபெறும் இன்நிகழ்வில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளதால் அனைத்து அங்கத்தவர்களையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு காரைநகர் அபிவிருத்திச்சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்