கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு இன்று புதன்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான என்.சுந்தா,எஸ்.திலீபன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன்,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

முதலாவது கருத்தரங்கு கடந்த மாதம் இடம்பெற்ற போது வட மாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவ்வாண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் கல்விக் கருத்தரங்குகளை நடாத்தி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

1DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00022 (Copy) DSC00023 (Copy) DSC00024 (Copy)