மனிதாபிமான நிதியுதவி கோரல்

 

மனிதாபிமான நிதியுதவி கோரல்

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் செய்கின்ற அறம் சார்ந்த  மனிதாபிமான உதவிகள் மகத்தானவையாக கருதப்படுகின்றன. அந்த வகையில், காரைநகர்  காமாட்சி கேணியடியை  சேர்ந்த திருமதி. லதாரணி  என்பவர் ஏழு வயதுக்குழந்தையுடனும் , வயோதிப  தாயாருடனும் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகின்றார்.  பிழைப்பு ஏதுமற்ற நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில்  கூலி வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வருகின்றார். இவர்கள் வாழ்ந்து   வருகின்ற  தகரக்  கொட்டில்,  மழைக்காலத்தில்  ஒழுக்குகள் நிறைந்ததாகவும் , தண்ணீர் தேங்கி  நிற்பதாகவும் காணப்படுகின்றது.  அதனால்,  மழைக்காலத்தில்  அயலவர்கள்  வீட்டில் தங்கி வருகின்றனர்.

இத்தகைய நெருக்கடியான  சூழ்நிலையில் வீட்டினுள் மழைநீர் தேங்காதவாறும், பொருத்தமான முறையில் கூரை வேலைகளை திருத்தியமைக்கவும் ரூபா மூன்று  இலட்சம்   தேவைப்படுகின்றது.  உதவி செய்யக்கூடிய நிலையில் யாருமேஇல்லாத நிலையில்  நிதியுதவியினை  குடும்பத்தினர் கோரி நிற்கின்றனர்.  காரை  அபிவிருத்தி சபை நல்கிய கடிதமும்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அன்பளிப்பு வழங்க விரும்பும் கருணை உள்ளங்கள்  647 818 7443 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அன்றி  மன்ற karainagar@gmail.com என்ற  மின்னஞ்சல்  மூலமாகவோ  தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

 

நிதியுதவி செய்தோர் விபரம்

 

No                            Name Amount Receipt No
1 Sabaratnam Balachandran $100.00
2 Pirabakaran Paramalingam $  50.00
3 Thambiaayah Paramantharajah $  50.00
4 Thambirajah Jeyachandran $  50.00
5 Thevakumar Sellathurai $  50.00
6  k.Sivapathasundram $500.00
7
8
9