சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

 

சிவமயம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்

தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

 

    குஞ்சி யழகுங் கொடுத்தானைக் கோட்டழகும்

    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

    கல்வி அழகே அழகு

                                                                                                                                            நாலடியார்

 

அமரர் ஆ.தியாகராசா அவர்களின் பணியை நினைவுகூரும் வகையில் காரை அபிவிருத்திச்சபையின் “ஆளுயர்வே ஊருயர்வு” என்னும் மகுட வாசகத்திற்கிணங்க மொழி, கல்வி, கலை, மேம்பாட்டுச் சுவிஸ் குழுவினரின் ஒழுங்கமைப்பும் காரைநகர் அபிவிருத்திச்சபையின் தெரிவுக் குழுவினரும் சேர்ந்து வருடாவருடம் நடத்தி வரும் போட்டியாகும். இப்போட்டி மாணவச் செல்வங்களின் ஆளுமைத்திறன், மொழித்திறன், கலைத்திறன் என்பவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகும். போட்டிகளாவன (2019)

 

  1. பேச்சுப்போட்டி
  2. கட்டுரைப்போட்டி
  3. திருக்குறள் மனனப் போட்டி
  4. இசைப்போட்டி – தனி, குழு
  5. பொதுஅறிவு வினாடி வினாப்போட்டி
  6. நாடகப்போட்டி

 

போட்டிப் பிரிவுகளாவன:

  1. ஆரம்பப்பிரிவு     – தரம் 03,04,05 மாணவர்கள்
  2. கீழ்ப்பிரிவு– தரம் 06,07,08 மாணவர்கள்
  3. மத்தியபிரிவு– தரம் 09,10,11 மாணவர்கள்
  4. மேற்பிரிவு– தரம் 12,13 மாணவர்கள்

 

போட்டிகளுக்கான பொது விதிகள்

  1. காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் எப்பாடசாலையிற் கற்றாலும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தேவை ஏற்படின் ஊராளன் என்பதை ஏற்பாட்டாளருக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
  2. விண்ணப்பிப்போர் காரைநகர்ப் பாடசாலை மாணவராயின் பாடசாலை அதிபர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  3. ஏனைய மாணவர்கள் விண்ணப்பிப்பதாயின் விண்ணப்பப் பத்திரத்தை காரை அபிவிருத்திச்சபை அல்லது மாணவர் நூலகத்திடம் பெற்றுப் பூரணப்படுத்தி தான் கற்கும் கல்லூரி அதிபரிடம் கற்கும் தரம் பற்றி உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
  4. விண்ணப்பிப்போர் மென் பிரதியாயின் Swisskarai2004@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் காகிதப் பிரதியாயின் தலைவர், காரைநகர் அபிவிருத்திச்சபை, தியாகத்திறன் வேள்வி–2019, மணற்காட்டு அம்மன் வீதி, காரைநகர் என்ற முகவரிக்கு 09.20ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
  5. மாணவர் ஒருவர் நாடகம் தவிர்ந்த 04 போட்டிகளில் பங்கு கொள்ளலாம். இசைப் போட்டியில் தனியும் குழுவும் ஒன்றாகக் கருதப்படும்.
  6. போட்டிகளுக்கான காலம்ää நேர அட்டவணைகள் கல்லூரி அதிபர் ஊடாகவும் இணையத்தளத்தினூடாகவும் அறிவிக்கப்படும்.
  7. மாணவர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்;களுக்கு முன்னதாகச் சமுகமளிக்க வேண்டும்.
  8. போட்டியாளர்கள் பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது.
  9. போட்டிகள் காரைநகர் இந்துக்கல்லூரி அல்லது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெறும்.
  10. போட்டியில் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் ஐவருக்கு முதல் ஐந்து பரிசு வழங்கப்படும்.
  11. போட்டிகளில் 75 புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கிக் கௌரவிக்கப்படும்.
  12. போட்டிகளில் அதிகூடிய புள்ளி 65இற்குக் குறைவாக எடுக்கும் மாணவர்கள் போட்டியினின்றும் புறந்தள்ளப்படுவார்கள்.
  13. போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  14. போட்டிகள் யாவும் திருவுளச்சீட்டின் மூலம் பெற்ற தலைப்பில் பங்கு கொள்ளல் வேண்டும்.

 

இங்ஙனம்

தியாகத்திறன் வேள்விப் போட்டிக்குழுவினர்