Tag: காரைச் செய்திகள்

2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கல்விக் கோட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரியின் பெறுபேறுகள் முன்னணியில்

இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ற்றன் கல்லூரியில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து காரைநகர் கோட்டத்தில் முன்னணி பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலையாகத் திகழ்கிறது.இம் மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களான திருமதி.த.அகிலன் செல்வி.இ.சுபத்திரா தேவி ஆகியோர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

 

சித்தியடைந்த மாணவர் பெயர்                பெற்ற புள்ளிகள்


1.ஜெயக்குமார் புவியரசன்                                     172


2.வரதராசா கோபிகா                                               171


3.பாலச்சந்திரன் அனிதா                                         162


4.யோகநாதன் கிருத்திகா                                        158


5.யோகலிங்கம் கிருத்திகா                                      155


6.திருச்செல்வம் கம்சிகா                                         153

 

YARLTON GR 5 PHOTO

கோவளம் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த தீபாவளி மென்பந்து சுற்றுத்தொடர் 2015

B

கோவளம் விளையாட்டுக்கழகத்தால் ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு மென்பந்து சுற்றுத்தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது.இத்தொடரானது பல வருடங்களாக கழக உறுப்பினர்களின் முயற்சியால் தொடர்ந்தும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கான பண உதவியினை காரைநகர் வர்த்தகர்கள் சிலரிடமும் முன்னால் கழக உறுப்பினர்கள் மூலமும் சேகரித்து பெற்றுக்கொள்கின்றனர் அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு 2010 ம் ஆண்டு மரதன் ஓட்டம்,சைக்கிளோட்டம்,கரப்பந்தாட்டம் போன்ற நிகழ்வுகளை கழகம் நடாத்திய போதிலும் பின்னர் போதிய வசதி இன்மையால் அவை கைவிடப்பட்டு துடுப்பாட்ட போட்டியைமட்டும் தொடர்ந்து நடத்திவருகின்றது கோவளம் விளையாட்டுக்கழகம்.

கடந்த கால வெற்றியாளர்களான  2008ம் ஆண்டு சிவகௌரி விளையாட்டுக்கழகமும், 2009,2010,2013 ஒளிச்சுடர் விளையாட்டுக்கழகமும் ,2011 கோவளம் விளையாட்டுகழகமும், 2014ம் ஆண்டு நல்லநண்பர்கள் விளையாட்டுக்கழகமும், 2015ம் ஆண்டு இளஞ்சோலை விளையாட்டுக்கழகமும் திகழ்கின்றன. 2012ம் ஆண்டு சில காரணங்களிற்காக போட்டிகள் இடம்பெற வில்லை 2008 இற்கு முன்னைய பதிவுகள் சரியாக இல்லை.

  2015ம் ஆண்டிற்கான போட்டிகள் யாவும் 24-09-2015, 26-09-2015, 27-09-2015 ஆகிய தினங்களில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 பந்துப்பரிமாற்றங்களைக்கொண்டதாகவும் 3 பந்து பரிமாற்றங்கள் power-play  ஆனதாகவும் இடம்பெற்றது. 2015ம்  ஆண்டிற்கான சுற்றுப்போட்டியில் கோவளம் A, கோவளம் B, கலாநிதி, ஒளிச்சுடர், இளஞ்சோலை, காரைசலரஞ்சஸ், நல்லநண்பர்கள், பிறட்மன் பலே ஆகிய 8அணிகள் பங்குபற்றின இவை இரண்டு குழுக்களாக பிரித்து குழு A யில் கோவளம் A,கலாநிதி,காரைசலர்ஞ்சஸ்,பிறட்மன்பலே ஆகிய அணிகளும் குழு B யில் கோவளம் B,ஒளிச்சுடர்,நல்லநண்பர்கள், இளஞ்சோலை ஆகிய அணிகளும் இடம்பெற்றது. இவற்றில் புள்ளிகள் அடிப்படையில்  கோவளம் A,கலாநிதி,ஒளிச்சுடர்,இளஞ்சோலை ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இவற்றில் கலாநிதி,இளஞ்சோலை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இளஞ்சோலை அணி வெற்றியை பெற்றுக்கொண்டதுடன் கோவளம் அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக இளஞ்சோலை விளையாட்டுக்கழகத்தின் பிரசாந்தனும் போட்டி தொடரின் ஆட்டநாயகனாக இளஞ்சோலை விளையாட்டுக்கழகத்தின் நிமலதாஸ் உம் போட்டித்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கலாநிதி அணியின் சங்கரும் போட்டித்தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக இளஞ்சோலை அணியின் நிமலதாஸ் உம் தெரிவானார்கள்.

ABAB

 

 

முதலாவது இடத்தை பெற்றுக்கொண்ட இளஞ்சோலை விளையாட்டுக்கழகம்

imageimage_1image_2

 

 

2ம் இடத்தை பெற்றுக்கொண்ட கலாநிதி விளையாட்டுக்கழகம்

imageimage_1

 

 

3ம் இடத்தை பெற்றுக்கொண்ட கோவளம் அணி,இறுதிப்போட்டிக்கு விருந்தினராக்கலந்து கொண்ட தீவக வலயகல்வி ஆலோசகர் இளங்கோவன் ஆசிரியருடன்.

imageimage_1image_2image_3

 

 

 

12 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

123

யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2015

யாழ்ற்ரன் கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகளமாக ஆரம்பமாகியது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்;. மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வு நிலை ஆரம்ப பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும் , இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியில்பகுதி உதவி முகாமையாளர் திரு.தி.ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    வருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ் விழாவின் அனுசரணையாளராக செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் பிராத்தனை மண்டபம் நீடிக்க படவேண்டும் என்ற கோரிக்கையையும் அதிபர் அவர்கள் செயலாளரிடம் முன்வைத்தார்.

    பிரதமவிருந்தினர் கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் உயர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் தனது உரையில் கல்லூரி அதிபரால் பிராத்தனை மண்டபத்தை நீடிக்கபட வேண்டும் என்ற கோரிகையை தான் அடுத்த ஆண்டு நிறைவேற்றி தருவதாகவும் உறுதி அளித்தார்.

    2014ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதி கூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ் விழாவில் பதக்கங்கள் அணிவித்தும்,நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2015

யாழ்ற்ரன் கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகளமாக ஆரம்பமாகியது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வு நிலை ஆரம்ப பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும் , இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியில்பகுதி உதவி முகாமையாளர் திரு.தி.ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    வருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ் விழாவின் அனுசரணையாளராக செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

    2014ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதி கூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ் விழாவில் பதக்கங்கள் அணிவித்தும்,நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

IMG

IMG_0002 IMG_0003 IMG_0004 IMG_0005 IMG_0006 IMG_0007 IMG_0008 IMG_0009 IMG_0010 IMG_0011

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015

SWISS LOGO

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2015

                    யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
                             சாந்துணையுங் கல்லாத வாறு
                                                                                   திருக்குறள்- அதிகாரம் – கல்வி


எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி  (26.09.2015) பிற்பகல் 3.00மணி யிலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  கன்னி முயற்சியாக கட்டுரைப் போட்டி  –2014 இலத்திரனியல் மூலமாக நடாத்தப்பட்டது. இதில் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணாக்கர் எண்மரும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவரொருவரும் பங்குபற்றியிருந்தனர். அவர்கள் மணிவாசகர் விழாவில் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டமை யாவரும் அறிந்ததே!

இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்தது. அதற்கமைய கட்டுரைப் போட்டி  இயற்திறன் முறையில் பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்பட்டன

(அ) கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.

(ஆ) மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள.

(இ) மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், இவ்வாண்டு    பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்கள்

கட்டுரைப்போட்டி- 2015 எமது சபையினால் உருவாக்கப்பட்டுள்ள  கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவின் உறுபினர்களாகிய ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை, ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம், சுவிஸ் சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா, கலாநிதி கென்னடி விஜயரத்தினம் (எதியோப்பியா), வவுனியா, சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன். ஆகியோரின் முயற்சியினாலும், காரைநகர் அபிவிருத்தித் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் அளப்பரிய முயற்சியினாலும்,   யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதிஅதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன்  ஆகியோர்களது ஓத்துழைப்புடனும், பரீட்சைக்கான வேலைத்திட்டங்கள் வெகுசிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டன.


யா/கலாநதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்,  யா/காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லாரி, யா/வேம்படிமகளீர் கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து காரைநகரைப் பூர்விகமாகக் கொண்ட மாணாக்கர் போட்டியிலன்று 14.30மணிக்கு தத்தமது பாடசாலைச் சீருடையில்  மண்டபத்திற்கு சமூகமளித்திருந்தனர். ஏக கால நேரத்தில் சூரிச் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் இருவர் பரீட்சைக்குத் தயாராகியிருந்தனர்.

கட்டுரைப் போட்டியின் தலைமை மேற்பார்வையாளாராக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், ஒய்வு நிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், கட்டுரைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகக் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களும் கணணித் தொழில்நுட்ப இணைப்பாளராகத் திரு. சிவகுருநாதன் பிரபாகரன் அவர்களும், மேற்பார்வையாளார்களாகப் பின்வருவோரும் சிறப்புறச் சேவையாற்றினார்கள்.
1.    ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை அவர்கள்
2.    ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம்  அவர்கள்
3.    யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள்
4.    கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள்  
5.    சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயப் பிரதி அதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள்
6.    வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலயப் பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன் அவர்கள்
7.    வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திருமதி பராசக்தி வரதராஜன் அவர்கள்
8.     யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு.ந.கிருஷ்ணபவான் அவர்கள்    
9.    மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்கள்
10.    கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர் திரு.ச.லிங்கேஸ்வரன் அவர்கள்
11.    செல்வி றேனுகா செல்வராஜா அவர்கள்  
12.    சுவிற்சர்லாந்தில் சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்கள்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு மண்டபம் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர்,  அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மாணக்கர் என நூற்றுக் கணக்கானோரால் நிறைந்திருந்தது. முதல் நிகழ்ச்சியாகக் தேவாரம். அடுத்ததாகச் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் நீத்தாருக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையைப் பூர்த்தி செய்தபின் போட்டி பிற்பகல் 3.00மணிக்கு ஆரம்பமாகி 5.00மணிக்கு நிறைவுபெற்றது. எல்லோரும் குளிர்பானம் அருந்தியபின் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் அகத்திலும், புலத்திலும் உள்ள மாணாக்கரை ஒன்றிணைத்து இக் கட்டுரைப்போட்டியை நடாத்தியமை காரைநகரின் நீண்ட நெடிய கல்வி வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பது மிகையில்லை.

நிகழ்வின் நிழற்படங்களை  கிழேகாணலாம்.
வினாக்கொத்தினையும் கிழேகாணலாம்

                                                                         நன்றி
                             "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                                     இங்ஙனம்,
                                                                              சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                  செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                      28.09.2015

 

       DSC07357 (Copy)DSC07358 (Copy) DSC07359 (Copy) DSC07361 (Copy) DSC07362 (Copy) DSC07363 (Copy) DSC07364 (Copy) DSC07365 (Copy) DSC07366 (Copy) DSC07367 (Copy) DSC07368 (Copy) DSC07369 (Copy) DSC07370 (Copy) DSC07371 (Copy) DSC07372 (Copy) DSC07374 (Copy) DSC07375 (Copy) DSC07376 (Copy) DSC07377 (Copy) DSC07379 (Copy) DSC07384 (Copy) DSC07389 (Copy) DSC07391 (Copy) DSC07396 (Copy) DSC07398 (Copy) DSC07406 (Copy) DSC07407 (Copy) DSC07409 (Copy) DSC07410 (Copy) DSC07426 (Copy) DSC07433 (Copy) DSC07444 (Copy) image1 (Copy) karaipoddi (Copy)

 

                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
                                             கட்டுரைப் போட்டி – 2015
                                                               26.09.2015

                                                            வினாக் கொத்து

                                                          அ.    கீழ்ப்பிரிவு

பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் கட்டுரை வரைக.
 
1.    சமய குரவர் நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் சைவ சமயத்திற்கு ஆற்றிய தொண்டைப் பற்றி கட்டுரை வரைக.

2.    "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு". இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.  

3.    இசைக் கலை அல்லது நடனக் கலையின் முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை வரைக.

4.     நீர் விரும்பும் காரைநகர்ப் பெரியார் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக.

5.    காரைநகர் மணிவாசகர் சபை குறித்துக் கட்டுரை வரைக.


                                                                  வினாக் கொத்து

                                                                  ஆ. மத்தியபிரிவு

பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் கட்டுரை வரைக.  

1.    காரைநகர் அபிவிருத்திச் சபை அல்லது நீரறிந்த ஓர் சமூக மேம்பாட்டு நிறுவனம் பற்றிக் கட்டுரை வரைக.

2.    பின்வரும் காரைநகர்ப் பெரியார்களுள் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக:
 அ. வைத்தீசுவரக்குருக்கள்
 ஆ. கலாநிதி ஆ. தியாகராசா
 இ. சயம்பு வாத்தியார்
   
    3. ஊரின் சீரிய வளர்ச்சியில் ஆன்மீகத்தின் பங்கு பற்றிக்   கட்டுரை  வரைக.   
 
4. திருக்குறளின் மகத்துவம் அல்லது பாரதியாரின் பாடல்கள் குறித்துக் கட்டுரை வரைக.

5. "பிச்சை புகினும் கற்கை நன்றே". இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.


                                                            வினாக் கொத்து
                   

                                                               இ. மேற்பிரிவு

பின்வரும் தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து தெளிவான கையெழுத்தில் நான்கு அல்லது ஆறு பக்கங்களில் கட்டுரை வரைக.  
      
1.    தமிழர் திருமண சம்பிரதாயத்தில் "சீதனம்" பற்றிய உமது கருத்து யாது?

2.    காரைநகர் மேம்பட நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதல் ஐந்து விடயங்கள் யாவை? விளக்குக.

3.    "அறிவே அனைத்து ஆற்றலும்" இக்கூற்றை விளக்கிக் கட்டுரை வரைக.

4.    பின்வரும் காரைநகர்ப் பெரியார்களுள் ஒருவர் பற்றிக் கட்டுரை வரைக:
 அ. அருணாசல உபாத்தியாயர்
ஆ. சங்கநூற் செல்வர் பண்டிதர் சு. அருளம்பலவனார்
இ. அலன் ஏபிரகாம்

5.    புலம் பெயர் மக்கள் மத்தியில் தமிழ் மொழியின் எதிர்காலம்.    

 

 

 


 

 

 

 

 

 

களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற பூங்காவனத் திருவிழாக் காட்சிகள்

களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி அன்று இடம்பெற்ற 12ம் திருவிழா அலங்கார உற்சவக் காட்சிகள்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

p.g.94ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஜுலை 4, 2015 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும், ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும் ஆகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் விருப்பத்திற்குரிய மாணவனும் நாற்பது ஆண்டுகள் எம் கல்லூரியில் நல்லாசிரியராகப் பணியாற்றி இன்றும் அபிமானத்துடன் நினைவுகூரும் மாணவர்களைக் கொண்டவருமான அமரர்.ஆர்.கந்தையா மாஸ்டர் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நினைவுப் பேருiரையை பரிசளிப்பு விழாவில் சமூகமளித்திருந்த பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் உட்பட்ட அனைவரும் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்திய முழுமையான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை இங்கே தருகின்றோம்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும்
நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

இன்றைய விழாவிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே, 
பிரதம விருந்தினர் பேராசிரியர் வை. பரமேஸ்வரன் அவர்களே, 
கௌரவ விருந்தினர் ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.ராசேந்திரன் அவர்களே, 
சிறப்பு விருந்தினர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே,

இக்கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர்களே! அயல் பாடசாலை அதிபர்களே! பழைய மாணவர் சங்கச் செயலாளர் அவர்களே, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் அவர்களே, கல்லூரிக்கு வளஞ்சேர்க்கும் ஆசிரிய மணிகளே, கல்லூரிக்குப் பலமாக விளங்கும் பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே, கல்லூரியை மறவாது வெளியூரிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருக்கும் பழைய மாணவர்களே, பிறந்த மண்ணில் வாழ்ந்து எமது ஊருக்கும் பாடசாலைக்கும் உரமாக இருக்கும் பெற்றோர்களே! கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் மாணவச் செல்வங்களே, அனைவருக்கும் எனது இனிமையான காலை வணக்கம்.

நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் அன்பிற்குரிய மாணவனாக இப்பாடசாலையில் கல்வி கற்று சயம்பு உபாத்தியாயர் அவர்களினாலேயே இப்பாடசாலையில் 1915 ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு நாற்பது ஆண்டு காலமாக மூன்று தலைமுறையினருக்கு நல்லாசியராகப் பணியாற்றி இன்றும் அவர் நாமம் மறவாத மாணவர்களைக் கொண்ட எனது தந்தையார் அமரர்.ஆர்.கந்தையா மாஸ்ரர் அவர்களின் இளைய மகளாக நானும் இக்கல்லூரியிலேயே கல்வி கற்று இக்கல்லூரியிலேயே ஆசிரியப்பணி செய்த காரணத்தினாலோ என்னவோ எனது அன்புக்கும் ஆசிக்குமுரிய எனது மாணவியாகிய இக்கல்லூரியின் அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்கள் இந்த நிறுவுனர் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு என்னை வேண்டிக் கொண்டார் என்று கருதுகிறேன். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரையைத் தொடங்குகின்றேன்.

ஈழமணித்திருநாட்டின் கல்விச் சிந்தனை உலகில் இரண்டு நூற்றாண்டுகளாகச் சைவசமயம் அந்நிய சக்திகளின் அசுரப்பிடியில் அகப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஒரு தலைவன் இன்றி இருளில் தவித்துக் கொண்டிருந்தது. இவ்வேளையில் விடிவெள்ளியாக உதித்தவரே நல்லூரின் நாவலர் பெருமான ஆவார். நாவலரின் காலம் 1822–1879 வரை ஆகும். ‘யாழ்ப்பாணச் சமய நிலை’ என்ற நூலில் நாவலரின் கருத்துக்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. “கல்வி அறிவொழுக்கங்களினாற் சிறப்புற்ற மேலோர்களையே உங்களுக்குக் குருமாராக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” “ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் தாபித்து உங்களுள்ளே கல்வி அறிவொழுங்கங்களிற் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவைகளை நடத்துவியுங்கள். உங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக் கூடங்களிலேயே அனுப்பி லௌகிக நூல்களையும் நீதி நூல்களையும் சைவசமய நூல்களையும் படிப்பியுங்கள்.”

இவ்வாறான நாவலரின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பெற்றவர் காரைநகர் மடந்தை செய்த தவம் வாய்த்ததென வந்த கர்ம வீரன் ஸ்ரீமான் சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள். இவர் மல்லிகை என்னும் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் குட்டிப்புலம்(குமிழங்குளி) என்னும் குறிச்சியில் வாழ்ந்தவரும் ஆவார். இச்செயல்வீரன் ச.அருணாசலம் அவர்களின் காலம் 1864-1920 வரையாகும். சைவம் நீறுபூத்த நெருப்பாக மூடியிருந்த காலத்தில் எங்கள் காரைநகர் மகான் அருணாசலம் அவர்கள் சைவத்தை மூடியிருந்த அழுக்குச் சாம்பலை அகற்றி விட்டார்கள். இச்செயலை உலகம் அறியவில்லை. “இச்சரித்திர நாயகராகிய ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் சிந்தனைகளுக்கும் இந்த நூற்றாண்டின் சைவ எழுச்சிக்கும் இடையில் அமைந்ததொரு சேதுபந்தனம” என்று அவரை நேரில் அறிந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். நாவலரையன்றி மற்றெவரையும் மதித்துப் பேசி அறியாத நாவலரின் தமையனார் மகன் ஸ்ரீமத். த.கைலாசபிள்ளை அவர்களோ “நாவலருக்குப்பின் ஒரேயொரு மனிதர் அருணாசலந்தான்” என்று வர்ணிக்கின்றார்.

ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள் சைவப்பெற்றோரின் பிள்ளைகள் தம் மதம் மாறி ஆங்கிலக் கல்வி கற்று அரச உத்தியோகம் என்ற மாய வலைக்குள் சிக்குவது கண்டு நெஞ்சம் பொறுக்காது புறப்பட்டார். தாம் தமக்கென வாழாது தம் சைவத்திற்கும் தமிழுக்குமாய் வாழத் துணிந்தார். தமது எண்ணத்தை ஸ்ரீமத் த.கைலாசபிள்ளை, சு.இராசரத்தினம் போன்ற பெரியாருடன் பகிர்ந்து அவர்களின் யோசனைகளையும் ஏற்று செயலாற்றினார். இப்பெரியார்களைக் காண்பதற்காக அதிகாலையில் காரைநகரில் இருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் செல்வார். செல்லும் வழியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைப் பார்த்து காரைநகர் மாணக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறி இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி கற்று மலாய் நாட்டுக்கு சென்று செல்வம் ஈட்டுவது பற்றிச் சிந்தித்து கவலையுற்றார்.

சைவமாணவர்கள் கற்பதற்காக ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரில் அமைக்க வேண்டும என்ற எண்ணம் அருணாசல மகானின் மனதில் கருக்கொண்டது. தமது எண்ணத்தை மாப்பாணவூரி கந்தப்பர் இலட்சுமண பிள்ளைக்கும் சிதம்பரப்பிள்ளை கந்தப்புவுக்கும் அயலவர் கோவிந்தபிள்ளைக்கும் கருத்தேற்றம் செய்யத் தொடங்கினார். இவரின் கருத்தினால் உற்சாகமடைந்த திரு.கோவிந்தபிள்ளை அவர்கள் தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியை பாடசாலை அமைக்க வழங்கி உதவினார். யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியைச் சேர்ந்த சயம்பு என்னும் சைவப்பற்றும் ஆங்கிலப் புலமையும் நிறைந்த ஆசானை அழைத்து வந்தார். திரு.கந்தர் லட்சுமணர் அவர்களின் மனைவியின் மூத்த சகோதரியின் மகனே நல்லாசிரியர் சயம்பர் ஆவார்.

இக்கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆங்கிலப் புலமை மிக்க பத்திரிகை ஆசிரியரும், ஆசிரியர் சங்க சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றியவருமான திரு.N.சபாரத்தினம் அவர்கள் குறிப்பிடும் போது “சைவப்பாடசாலைகளை அமைப்பதற்காகத் தனது செல்வம் அனைத்தையும் இழந்தவர் காரைநகர் பெருமகன் ச.அருணாசலம் அவர்கள். நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் இப்பெருமகனும் அவருக்கு உதவியாக இருந்த இரு சைவப்பெரியவர்களும் ஸ்ரீமான் சயம்பு அவர்களை சைவத்தின் பாதுகாவலராகக் கண்டனர். ஸ்ரீமான் சயம்பு அவர்கள் இன்று இந்த உன்னத கல்வி நிறுவனத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்” என்று குறிப்பிடுகின்றார். (Chief among those who heard the clarion call of Navalar was the late S.Arunasalam of Karainagar who is still immortalized as No.2 to Navalar in founding Hindu School for Hindu Children all over the peninsula spending all his wealth and becoming a pauper in the process. It was he with the assistance of the Late.K.Ledchumananpillai and S.Kandappar two benefactors of the area that founded the School in 1888. The beginnings of the school are yet misty, but the founders, the great Trinity met their man in Saymboo, a Saiva Savant who is now regarded as the Father of this great enterprise.)

சைவப் பாரம்பரியமிக்க எமது ஊர் மக்கள் பரவசப்பட, மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க இவ்வித்தியாசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் ஆசிரியராக இருந்து பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தாம் வேறு வித்தியாசாலை வேறு என்று நினைத்ததில்லை. சைவ சமய பண்பாட்டிற்கு அமையாத பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் தடைசெய்து சைவசமயக் கலாசாரத்தை மேலோங்கச் செய்யும் திறன்மிகு மாணவர்களை உருவாக்கினார். காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை எனத்தொடங்கிய இப்பாடசாலை காலப்போக்கில் திருஞானசம்பநதமூர்த்தி நாயனார் ஆங்கில வித்தியாலயம் என்ற பெயரைப் பெற்று விளங்கியது.

இயம்பிடு ஆங்கிலக் கல்வியை
வியன்மிகு காரைநகரதனில்
நயம்பெற உரைத்த நல்லாசான்
சயம்பர் என்று போற்றுகிறார் வித்துவான் F.X.C நடராசா

சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தன்னலங்கருதாது பொதுநல நோக்கோடு ஆங்கிலக் கல்வியைப் போதித்து வந்தார். சயம்புச் சட்டம்பியார் கல்வியை மாத்திரம் மாணக்கருக்கு ஊட்டினவரல்லர். ஒழுக்கத்தையும் கவனித்து வந்தார். சைவாசார முறைப்படி நெற்றியில் திருநீறு பொட்டுடன் மாணாக்கரை வரும்படி கட்டளையிடுவர். வெள்ளிக்கிழமை தோறும் மாணக்கரைக் காலையில் சிவன்கோயிலுக்கு வரவழைத்து கூட்டுவழிபாடு செய்வார்.

ஆங்கிலக் கல்வியைச் சயம்புச் சட்டம்பியார் கவனித்துவர அவருக்கு உறுதுணையாக அம்பலச்சட்டம்பியார் தமிழ்க்கல்வியைப் போதித்து வந்தார். தமிழ் இலக்கியத்தில் திறமைசாலியான அம்பலச் சட்டம்பியார் கணிதத்திலும் வல்லுநர். இந்த ஆங்கில பாடசாலையிற் கற்றுத் தேறிய யாவரும் தமிழிலும் சிறந்த அறிவுடையவர்களாக இருந்தனர். வித்தியாலயம் படிப்படியாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஊர்மக்கள் உற்சாகமடைந்து ஒரு மண்டபத்தையும் இரண்டு அறைகளையும் நிர்மாணித்துக் வழங்கினர். அவை யாழ் அரச அதிபராகக் கடமையாற்றிய Sir.W.Twynham அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

‘சயம்புச்சட்டம்பியார் என்பவர் காரைநகருக்கு வந்திலரேல் இப்போது காரைநகரிற் பெருங்குடிமக்களாகத் திகழும் மலாய்நாட்டு பெஞ்சனியர்மார் தோன்றியிருக்கவே மாட்டார்கள்.’ என்று காரைநகர் மான்மியம் என்ற நூலில் வித்துவான் F.X.C நடராசா அவர்கள் குறிப்பிடுகின்றார். சயம்பு உபாத்தியாயரிடம் ஆங்கிலக் கல்வி கற்ற மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று அரச உயர்பதவிகளை வகித்து பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்தனர். காலப்போக்கில் வெளியூர் மாணவர்களும் வந்து கற்கத் தொடங்கினர். மாணவர் தொகை கூடியது. வித்தியாலயத்தின் மனேஜராக திரு.வி.காசிப்பிள்ளை அவர்களும் உள்ளுர் மனேஜராக பெரியார் முத்து சயம்பு அவர்களும் பணியாற்றினர்.

125 ஆண்டுகளைக் கடந்து தளர்வின்றித் தன்னிகரற்ற கல்விப்பணியாற்றி ஒளிவீசிக்கொண்டிருக்கின்றது காரை இந்து என்று அனைவராலும் அழைக்கப்படும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம். இப்பெருமைமிகு கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் இதுவரை காலமும் 25 நல்லதிபர்கள் தமது தடங்களைப் பதித்துள்ளனர்.

இக்கல்லூரியின் வளர்ச்சிப்படிகளை நோக்கும்போது

1. இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக சிவத்திரு.ஈ.கே.சிவசுப்பிரமணிய ஐயர்B.A அவர்களின் காலத்தில் பாடசாலையின் கல்வித்தரம் உயர்வடைவதைக் கண்ட அரசினர் 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக ஆக்கினர்.

2. பாடசாலையின் வெள்ளி விழா 07.09.1912 அன்று மனேஜர் திரு.வி.காசிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

3. பெரியார் முத்து சயம்பு அவர்கள் 1918 ஆம் ஆண்டில் பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையிடம் ஒப்படைத்தார். எனினும் அவரே உள்ளுர் மனேஜராகத் தொடர்ந்து இருந்தார்.

4. நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இக்கல்லூரியின் ஆசிரியராக, தலைமையாசிரியராக, மனேஜராக பெரும்பணியாற்றி தம்மை இக்கல்லூரிக்கு அர்ப்பணித்த ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

5. முதன் முதலாக எமது காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திருவாளர் பொ.வேலுப்பிள்ளை (பொன்னுடையார் வேலுப்பிள்ளை) அவர்கள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். (இவர் யாழ்ப்பாணம், சிங்கப்பூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய மருத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் இ.கனகசுந்தரம், கனடா பல்கலைக்கழக இரசாயனவியல்துறைப் பேராசிரியர் தி.சிவகுமாரன் ஆகியோரின் பேரன் ஆவார்)

6. சிவத்திரு அ.சீதாராமஐயர் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் 1934 ஆம் ஆண்டு J.S.C பரீட்சைக்குத் தோற்றிய 15 மாணவர்களுள் 13மாணவர்கள் இரண்டாம் பிரிவிலும் ஒருவர் வடமாகாணத்திலேயே முதற்பிரிவிலும் சித்தியெய்தினர். இதே காலத்தில் இப்பாடசாலையிலிருந்து திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகிய இருவரும் அகில இலங்கை விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றனர். இதனால் பாடசாலையின் புகழ் மேலோங்கியது.

7. திரு A .கனகசபை B.A அவர்கள் அதிபராகப் பத்து ஆண்டுகள் (1936-1946)பதவி வகித்த காலத்தில் இப்பாடசாலை சிரேஸ்ட வித்தியாசாலையாகி காரைநகர் இந்துக் கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது. இக்காலத்தில் S.S.C வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர் தொகையும் ஐந்நூறைத் தாண்டிவிட்டது.

8. அதியுயர் அதிபர்தர பதவியைப் பெற்ற காரைநகரின் முதன்மைப் பேராசானாக அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா வலம் வந்தார். இப்பெருமகன் சேவையாற்றிய காலத்தையே கல்லூரியின் ‘பொற்காலம’; எனப்போற்றலாம் என்று மூதறிஞர் தத்துவக்கலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஐந்து ஆண்டுகள்(1941-1945) ஆசிரியராகவும் இருபத்தைந்து ஆண்டுகள்(1946-1970) அதிபராகவம் சேவையாற்றிய இவர் ‘வெள்ளிவிழா அதிபர்’ எனவும் போற்றப்படுகின்றார். இவரின் காலத்திலேயே இக்கல்லூரியின் வைரவிழா 1950.09.19, 20, 21 ம் திகதிகளிலும் பவளவிழா 1963 ஆம் ஆண்டும் முத்துவிழா 1968 ஆம் ஆண்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. மலேசியா சிங்கப்பூர் வாழ் பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வுகூடம், தங்கம்மா நடராஜா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்நிலையம், நடாராஜா ஞாபாகார்த்த மண்டபம் அதனை அண்டிய நிலம் என்பன அதிபர் ஆ.தியாகராசா காலத்தில் பெறப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பது அரிதான அக்காலத்தில் விஞ்ஞான ஆங்கிலப்புலமைமிக்க பட்டதாரி ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தார். இவ்வாசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் கல்வித்தரம் உயர்ந்து கல்லூரியின் புகழ் எங்கும் பரவியது. H.S.C எனும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதிபர் ஆ.தியாகராசா பாடசாலையை கல்லூரி என்ற உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பி என திரு.N.சபாரட்ணம் குறிப்பிடுகின்றார். (Principal Thiyagarajah M.A. M.Lit (Later. Ph.d) was the architect of its collegiate status)

9. அதிபர் திரு P.S குமாரசாமி அவர்கள் குறுகிய காலத்தில் (1970-1971) சீரிய முறையிலும் அதிபர் திரு A.நடராஐh அவர்கள் காலத்தில்(1971-1973) சமயவிழாக்களை நடத்தியும் கல்வி, விளiயாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்றும் கல்லூரி விளங்கியது.1971 இல் இவ் வித்தியாலத்தின் கனிஸ்ட பிரிவாக சுப்பிரமணிய வித்தியாசாலை இணைத்துக் கொள்ளப்பட்டது. திரு.K.சுப்பிரமணியம் அவர்கள் காலத்தில் (1973-1974)கணிதம், பௌதீகவியல் பாடங்களைக் கற்பித்துக்கொண்டே அதிபர் கடமையையும் செய்து கணித விஞ்ஞானத்துறையை மிளிரச்செய்தார்.

10. அதிபர் திரு.K.K.நடராஜா அவர்கள் சிறந்த கணித ஆசிரியராகவம் சிறந்த நிர்வாகியாகவும் சேவையாற்றிய காலத்தில் (1974-1978) 120 வரையான மாணவர்கள் உயர்தரவகுப்பில் கல்வி கற்றனர். இவ்வகுப்புகளுக்கு சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களின் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்குத் தெரிவாகச் செய்து கல்லூரியின் புகழை உயர்த்தினார். இவர்காலத்தில் வடக்குப்பகுதி இரண்டு மாடி நிர்வாக மையக் கட்டிடம், நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம், மைதான சுற்று மதில், நீர் சேகரிப்புத்தாங்கி என்பனவும், மைதான புனரமைப்பு என்பனவற்றையும் செய்து கல்லூரியின் பௌதிக வளம் அதிகளவில் விருத்தி கண்டது. 1976 இல் காரைநகர் முத்தமிழ் மன்றம் பெரியார் முத்து சயம்பு அவர்களுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்து திறப்பு விழா செய்து கௌரவம் வழங்கியது.

11. அதிபர் திரு.வே.தர்மசீலன் அவர்கள் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியாராகவும் மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்புடனும் பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தார். இவர் காலத்தில்(1978-1980) சிறப்பாகப் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

12. அதிபர் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் குறுகிய காலத்தில் (1981) அதிபர் பதவியை அணிசெய்தாலும் தனது முத்திரையைப் பதித்தவர். பன்மொழிப்புலமை மிக்க சிறந்த ஆசிரியர். எழுத்தாளர், நாடறிந்த கவிஞருமாவார்.

13. அதிபர் திரு.S.பத்மநாதன் இரு தடவைகள்(1981-1983,1985-1988) இக்கல்லூரியின் அணிசெய் தலைவராகச் சேவையாற்றினார். இவர்காலத்தில் தமிழக அறிஞர்களை அழைத்து பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நடாராசா மண்டபத்தில் சரஸ்வதி கருவறை கோயில் முகப்புத் தோற்றம் உருவாக்கப்பட்டது.

14. கல்லூரியில் 25 ஆண்டுகள் அதிபராகவும் பின்னர் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கலாநிதி. ஆ.தியாகராஜா அவர்கள் மரணத்திரைக்குள் மறைய அவரின் சேவையைக் கௌரவித்து அப்போதயை அரசாங்கம் 1983 இல் இக்கல்லூரிக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்தது.

15. அதிபர் சிவஸ்ரீ A.K சர்மா அவர்கள் 1983-1985 வரை அதிபராகப் பணியாற்றினார். புன்னகையும் வசீகர வாக்கும் கொண்ட இவர் அன்பினால் மாணவரைக் கவர்ந்தார்.

16. அதிபர் திரு.மு.திருநீலகண்டசிவம் அவர்களின் காலத்தில் (1988-1991) இக்கல்லூரி கொத்தணித் தலைமைப் பாடசாலையாக்கப்பட்டது. காரைநகரின் 14பாடசாலைகளின் கொத்தணி அதிபாராக திரு.மு.திருநீலகண்டசிவம் விளங்கினார். பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைப்புச் செய்து கல்லூரியின் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

17. அதிபர் திரு.S.R.S.தேவதாசன் அவர்கள் கல்லூரியின் அதிபராகவும் காரைநகர் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் சேவையாற்றினார். இவரது காலத்தில்(1991-1993) போர்ச்சூழலில் காரைநகருக்கு வெளியே பாடசாலை இடம்பெயர்ந்து இயங்கவேண்டி நேரிட்டமையால் தளர்வு ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும்.

18. கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை காரைநகர் களபூமியைச் சேர்ந்த திருமதி. தேவநாயகி பாலசிங்கம் பெறுகின்றார். இவர் காலத்தில்(1993-1998) இடம்பெயர்ந்த சூழலில் ஏனைய பாடசாலைகள் போன்று கல்லூரியைத் தளரவிடாது கட்டிக் காத்து 1996 இல் மீண்டும் சொந்த மண்ணில் கல்லூரியை இயங்க வைத்த பெருமை இவரையே சாரும்.

19. அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் காலத்தில் (1998-2005)கல்லூரியின் வடக்கு வளாக பௌதிக வளர்ச்சியை தேவைக்கேற்றவாறு திட்டமிட்டு வளப்படுத்தினார். கல்விச்செயற்பாடுகள் வளர்ச்சிப்பாதையில் பயணித்தது. ஆங்கிலக்கல்விக்கும், கணனிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும,; கல்வியியல் கல்லூரிக்கும் அனுமதி பெற்றனர். கல்லூரி தீவக வலயத்தில் முன்னணிப் பாடசாலையாக விளங்கியது.

20. அதிபர் திரு.கா.குமாரவேலு காலத்தில் (2005-2008) கனிஷ்ட பாடசாலையில் கட்டிடங்களைப் புனரமைத்ததோடு கிணறு அமைக்கப்பட்டு குழாய்நீர் விநியோகம் செய்யப்பட்டது. இவர்காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்நிலையில் இருந்தன.

21. அதிபர் திரு.A.குமரேசமூர்த்தி இக்கல்லுரியின் அதிபராக (2008-2010) சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டார்.

22. அதிபர் திரு.பொன் சிவானந்தராசா அதிபராகக் கடமையாற்றிய காலத்தில்(2010-2012) கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கு கனடாவில் கிளை அமைக்கப்பட்டது. இதனால் கல்லூரியின் அபிவிருத்திப் பாதையில் ஒரு ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது.

23.  2012 இல் ஆயிரம் பாடசாலை செயற்றிட்டத்தில் இக்கல்லூரி சேர்வதற்காக இதன் கனிஷ்ட பிரிவாகிய சுப்பிரமணிய வித்தியாசாலை மீண்டும் தனியாக இயங்கும் ஆரம்ப பாடசாலையாகியது.

24. இரண்டாவது பெண் அதிபராகிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் கல்லூரியின்125 ஆவது ஆண்டு விழா, நாட்டின் மேதகு ஜனாதிபதி வருகை ஆகிய வரலாற்று நிகழ்வுகளை குறுகிய காலத்தில் எதிர்கொண்டு சிறப்பாக நிறைவேற்றினார். பௌதீக வளவிருத்திகளாக மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம், பல்லூடக மண்டப விருத்தி, நிறுவுநர் சயம்பு சிலை புனரமைப்பு, துவிச்சக்கரவண்டி தரிப்பிடம், சிற்றுண்டிச சாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மிகவும் பாதுகாப்பும் அழகும் அமைதியும் ஒழுக்கமும் நிறைந்த சூழலாக மாறியுள்ளது. மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதுடன் பரீட்சைகளில் சித்திபெறும் சதவீதமும் அதிகரித்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கு இணையான ஆளுமை விருத்திச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் வல்லவர்களாக திகழ்கின்றனர். புலம்பெயர் பழையமாணவர்களின் பார்வை எம் கல்லூரியின் பக்கம் திரும்பியுள்ளது. பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக 1 மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை, கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்காக 1.5 மில்லியன் ரூபா கனடாவில் வதியும் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்களால் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை இவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும். தீவகவலயத்தில் தொடர்ந்து முன்னணி வகித்துவரும எம்கல்லூரி விரைவில் ஒரு தேசியபாடசாலையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

அறுகுபோல் வேரூன்றி ஆல் போல் தளைத்து காரைநகரின் கலங்கரை விளக்கமாக அறிவொளி வீசும் பழமையும் பாரம்பரியமும் மிக்க இக்கல்லூரியில் பணியாற்றிய நல்லதிபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லரென இக்கல்லூரியைத் தேசிய மட்டங்களில் கூட போட்டிபோடக் கூடிய நிலைக்கு மாபெரும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

மாணவர்களே! உங்கள் வாழ்நாளில் பாடசாலைக் காலம் பொன்னானது. அன்பு, அடக்கம், நேர்மை ஆகிய அணிகலன்களை அணிந்து மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி உயர்ந்த எண்ணங்களை எண்ணி விடாமுயற்சியுடன் உழைத்து உங்கள் கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கனிவாக வேண்டுகின்றேன்.

ஆசிரியர்களே! உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கற்பித்தலில் உங்களுக்கு உள்ள ஈடுபாடும் இக்கல்லூரியில் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது. மேலும் இவ்வாறு சாதனை படைத்து கல்லூரிக்கு வளஞ்சேர்க்க உங்களை வாழ்த்துகின்றேன். பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே! நீங்கள் ஒவ்வொருவரும் இக்கல்லூரியை மறவாது உங்கள் ஆதரவை வழங்கி வருவது இக்கல்லூரிக்கு மேலும் வலுச் சேர்க்கின்றது. உங்கள் விலைமதிப்பற்ற ஆதரவினை நான் போற்றுகின்றேன்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே! குறுகிய காலத்தில் எதிர்பாராத பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற உங்கள் ஆற்றலையும் ஆளுமையையும் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கல்லூரியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர நடராசப்பெருமானை வேண்டி வாழ்த்துகின்றேன்.

To Thine own self be True.
உனக்கு நீயே உண்மையாய் இரு.

சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 
நன்றி 
வணக்கம்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா 
ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் 
ஆங்கிலத்துறை 
காரைநகர்

காரைநகர் களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலய 7ம்,8ம்,9ம்,10ம்,11ம் திருவிழா அலங்கார உற்சவக் காட்சிகள்

IMG_5531 (Copy)

காரைநகர் களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலய 7ம் திருவிழா அலங்கார உற்சவக் காட்சிகள்

 

காரைநகர் களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலய 8ம் திருவிழா அலங்கார உற்சவக் காட்சிகள்

 

காரைநகர் களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலய 9ம் திருவிழா அலங்கார உற்சவக் காட்சிகள்

 

காரைநகர் களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலய 10ம் திருவிழா அலங்கார உற்சவக் காட்சிகள்

 

காரைநகர் களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலய 11ம் திருவிழா அலங்கார உற்சவக் காட்சிகள்

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா 19.09.2015 இன்று இடம்பெற்றது.இன்றைய மண்டலாபிஷேகக் காட்சிகள்.

DSCN0878 (Copy)

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் (தரம் 8) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

be the first photo of web

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் (தரம் 8) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் என்ற மாணவனால் இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 10-09-2015 அன்று கல்லூரி முத்தமிழ் மன்றத்தினரால் நடாத்தப்பட்டது. அன்றைய தினம் முற்பகல் 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்களின் தலைமையில் விழா ஆரம்பமாகியது.

பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் பிரதிச்செயலாளர் திரு. ப. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பல அறிஞர்களின் வாழ்த்துரைகளுடன், பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களினால் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. முதற்பிரதியை காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் சிவா. T. மகேசன் அவர்கள் பெற்று கௌரவித்தார். கல்லூரி வரலாற்றில் மாணவர்களின் ஆக்கம் வெளியிடப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

be the first photo of web

DSC00054

DSC00064DSC00065 DSC00066 DSC00067 DSC00068 DSC00069 DSC00070 DSC00071 DSC00072 DSC00073 DSC00074 DSC00075 DSC00078 DSC00080 DSC00083 DSC00084 DSC00085 DSC00088 DSC00092 DSC00093 DSC00094 DSC00096 DSC00098

காரைநகர் தங்கோடை நாகபூசணி அம்பாள் 10ம் நாள் அலங்கார உற்சவம்15.09.2015

IMG_0524

காரைநகா் மண்ணின் மைந்தனும் பல தா்மகாாியங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவருமான சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவரது 25 வது திருமணநாளை முன்னிட்டு கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமத்தில் 27.08.2015 அன்று ஒரே தருணத்தில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்த்தி வைத்தாா்.

காரைநகா் மண்ணின் மைந்தனும் பல தா்மகாாியங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவருமான சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவரது 25 வது திருமணநாளை முன்னிட்டு கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமத்தில்  27.08.2015 அன்று ஒரே தருணத்தில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்த்தி வைத்தாா்.

இவரது முன்மாதிாியான சிந்தனைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.அதுமட்டுமல்ல தனது சொந்த செலவில் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் முத்துமாாி அம்பாள் ஆலயத்தினையும் கிருஸ்ணபுரம் கிராமத்தில் சிவன் ஆலயத்தினையும் பல லட்ச ரூபா செலவில் அமைத்து 27.08.2015 அன்று ஒரே நேரத்தில் குடமுழுக்கை இரு ஆலயங்களிலும் நிகழ்த்தி அந்தந்த கிராமமக்களிடம் கையளித்துள்ளாா்.

இதனால் அந்த கிராம மக்கள் மிகச்சந்தோசமடைந்துள்ளதுடன் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் தம்பதிகளுக்கு பொன்னாடை போா்த்தியும் நினைவுப் பாிசுகளை வழங்கியும் கௌரவித்துள்ளனா்.

1 2 3 4 5 6 7 8

யாழ்ற்றன் கல்லூரி மாணவன் செ.கஜரூபனின் அரும்பும் மலரும் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

IMGIMG_0001

காரைநகர் ஆலங்கன்று வைரவர் அலங்கார உற்சவம் 21.08.2015 நடைபெற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இன்றைய கும்பாபிஷேகக் காட்சிகள்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்மன்கோவில் கும்பாபிஷேகம் 27.08.2015 இன்று காலை 8.30இற்கு நடைபெற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.கும்பாபிஷேக நிகழ்வுகளை நாளை (27.08.2015) வியாழக்கிழமை காலை 7.00 மணிதொடக்கம் KARAINAGAR.COM இல் நேரடியாகக் கண்டுகளிக்கலாம். நாளை வியாழக்கிழமை காலை 8.20 மணி தொடக்கம் 9.20 மணி வரை உள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.

மேற்படி ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி பத்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமையும் , புதன்கிழமையும் இடம்பெற்று நாளை வியாழக்கிழமை காலை 8.20 மணி தொடக்கம் 9.20 மணி வரை உள்ள சுப வேளையில் மகா கும்பாபிஸேகம் இடம்பெற உள்ளது.

Ponnalai Notic - 032 (Copy)

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில்;; நடைபெற்றது.
நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி மருத்துவர் கே.இந்திரமோகனும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரனும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணனும் கலந்துகொண்டனர்

அமரர். மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியில் 20 வருடங்களிற்கு மேலாக நல்லாசிரியையாக, செயற்றிறன்மிக்க நல்லதிபராக கடமையாற்றிய திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவர் திரு மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எம்கல்லூரிச் சமூகம் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில் தனது வேலைப் பழுவின் மத்தியிலும் திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியை திறம்பட நிர்வகிப்பதில் உறுதுணை புரிந்தவர். திருமதி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் மாத்திரமன்றி, செயற்றிறன்மிக்க துணிச்சலான அதிபர் என்றே கூறலாம். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும், சரளமாகவும் பேசும் பண்புமிக்கவர். அர்ப்பணிப்புமிக்க சேவையாளர். எமது கல்லூரி இடம்பெயர்ந்திருந்த மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கல்லூரியை மீளவும் சொந்த இடத்திற்குக் கொண்டுவந்து செயற்படுத்துவதில் அயராது உழைத்து வெற்றி கண்டவர். அவ்வகையில் அவருடைய சேவையை கல்லூரிச் சமூகத்தால் என்றென்றும் மறக்க முடியாது. பிற்காலத்தில் அவரது செயற்றிறமையால் பதவி உயர்வு பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக பரீட்சைத் திணைக்களத்தில் கடமையாற்றினார். ஓய்வின் பின்னரும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்வியியற் துறையில் நிபுணத்துவ ஆலோசகராக பணியாற்றுவது எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றது. இத்தகைய பெருமைமிகு எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் தனது அன்புக் கணவரை இழந்து துன்புற்றிருப்பது கண்டு நாமும் துயரடைகின்றோம்.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கல்லூரி சமூகம் சார்பாக கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்குவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

திருமதி வாசுகி தவபாலன்
அதிபர் 
(கல்லூரிச் சமூகம் சார்பாக)

முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.

Tribute from School Mr.Balasingam-page-001

 

14.08.2015 வெள்ளிக்கிழமை ஆடிஅமவாசை தினத்தை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் பிதிர்கடன்களை நிறைவேற்ற கசூரினா தீர்த்தக்கரைக்கு வந்திருந்தனர் அதன் சில காட்சிகள் இங்கே எடுத்துவரப்பட்டிருக்கின்றது.

பரோபகாரி சுப்ரமணியம் கதிர்காமநாதனின் பூரணஅனுசரணையில் 90 லட்ச ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலையின் இரண்டு மாடிக்கட்டடத்தின் நிர்மாணப்பணிகளை திரு.கதிர்காமநாதன் பார்வையிடுகின்றார். இவரது ஆரம்பப்பள்ளி இப்பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய தேர்த்திருவிழா நேரலை

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 5ம் திகதி புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்த உற்சவத்தின்
தேர்த்திருவிழாக் காட்சிகளை 13.8.2015 இன்று வியாழக்கிழமை இலங்கை நேரம் காலை 8.00 மணிதொடக்கம்  நேரடியாகக் கண்டுகளிக்கலாம்.


 

காரை இந்து மாணவர்கள் சென்ற கல்விச் சுற்றுலா

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற (காரைநகர் இந்துக் கல்லூரி) மனித மேம்பாட்டுக் கல்வித் தொடரில் இணைந்து கொண்ட 30 மாணவர்களும் அண்மையில் யாழ் நகரின் பிரதான இடங்களிற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.

கல்லூரியில் எட்டு மாதங்களாக நடைபெற்று கடந்த ஏப்பிரலில் நிறைவு பெற்ற மனித மேம்பாட்டுக் கல்வித் தொடரின் பிரதான வளவாளரான திரு.த.மேகநாதன் அவர்கள் இக்கல்விச் சுற்றுலாவிற்கான பிரதான அநுசரணையை வழங்கியிருந்தார். அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பகுதித் தலைவர் திரு.தெ.லிங்கேஸ்வரன் ஆகியோரும் இச்சுற்றுலாவில் உடன் சென்றிருந்தனர்.

சுற்றுலாவின் முதல் நிகழ்வாக மாணவர்கள் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சத்திய சேவா நிலையத்திற்குச் சென்று அங்கே நடைபெற்ற கூட்டு வழிபாடுகளில் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் காரை இந்து மாணவர்களின் “ சேவை ஒரு யோகம்” எனும் நாடகமும் மேடையேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகம், யாழ் பொது நூலகம், யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம் தொடரூந்து நிலையம், யாழ் கோட்டை, யரழ் கச்சேரி, பழைய பூங்கா வீதியிலுள்ள பூங்கா ஆகிய இடங்களையும் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் பாடசாலை சமூக நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அன்றைய தினம் நடைபெற்ற சிங்கள பௌத்தமத பிரதான சமய நிகழ்வான பொசன் பண்டிகையிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளையில், கடந்த ஆண்டில்(2014) விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை நகருக்கும், பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக மன்னார் திருக்கேதீஸ்வரம், மடு தேவாலயம், சென் சேவியர் மகா வித்தியாலயம், கேரதீவு, சங்குப்பிட்டி ஆகிய இடங்களிற்கும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித மேம்பாட்டு கல்வி மாணவர்களின் யாழ்நகர சுற்றுலாவின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

Trip01 Trip02 Trip03 Trip04 Trip05Trip06 Trip07 Trip08 Trip10 Trip11 Trip12 Trip13 Trip14 Trip15 Trip16 Trip17 Trip18 Trip19 Trip20 Trip21

 

ஈழத்துச் சிதம்பரம் ஆடித் திருவிழா விஞ்ஞாபனம்

New_Doc_12_1

மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) அண்மையில் மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடாராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய சத்தியசாயி இணைப்புக் குழுவின் ஆலோசகர் மருத்துவகலாநிதி இ.கணேசமூர்த்தி அவர்களும், மனித மேம்பாட்டுக் கல்வி இணைப்பாளர் திரு.வி.சிவனேசன் அவர்களும், பலவிகாஷ் கல்வி இணைப்பாளர் திருமதி.க.மேகநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியை திருமதி.பாலாம்பிகை இராசநாயகம், பிருத்தானியாவிலிருந்து கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.சுப்பிரமணியம் சர்வானந்தன், திருமதி.சித்திரா சர்வானந்தன் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கலை நிகழ்வுகளில் மனித மேம்பாட்டுப் பாடல்கள் குழுக்களாகவும், “சேவை ஒரு யோகம்” என்னும் நாடகமும், பேச்சு, கதைகூறல், மற்றும் மாணவர்களின் அநுபவப்பகிர்வும் இடம்பெற்றிருந்தன.

அதிபர் உரை, விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து பிரதேசக் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆய்வினூடாக இனங்காணப்பட்ட பிரதேச மிருதங்கக் கலைஞர் என்ற வகையில் ஓய்வுநிலை கிராம சேவையாளர் கலாபூசணம் திரு.தி. சண்முகசுந்தரம் அவர்களை ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுற்றாடல் முன்னோடிக்குழு 1, குழு 11 ஆகியனவற்றிற்கு முறையே பச்சை, மஞ்சள் வர்ணப் பதக்கங்களும், சாரணர்களுக்கான பதக்கங்களும் அணிவிக்கபட்டன. சாரணர்கள், St. Johns Ambulance படையணியினர், மற்றும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைப்புக் குழு, சுகாதாரக்குழு, உற்பத்தித் திறன் விருத்திக் குழு ஆகியனவற்றிற்கான சீருடைகளும் வழங்கப்பட்டன.
மேற்படி விருதுகள் தின நிகழ்வுகளை ஆசிரியர் திரு.இ.இராஜகோபால் சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை 5ம் திகதி புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது.

கொடியேற்ற திருவிழாக் காட்சிகளை 5.8.2015 புதன்கிழமை இலங்கை நேரம் காலை 8.00 மணிதொடக்கம் நேரடியாகக் கண்டுகளிக்கலாம்


 

தேசிய மட்டப் போட்டியில் காரை இந்து இரண்டாம் இடம் பெற்று சாதனை

இலங்கை “வாழ்வின் எழுச்சி” திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த கெக்குல சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தனிப்பாடல் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தை (காரைநகர் இந்துக் கல்லூரி) சேர்ந்த செல்வி.அமிர்தா ஆனந்தராசா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசியமட்டத்தில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞான புத்தாக்கப் போட்டியில் கல்லூரி அணியும், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட்போட்டியில் செல்வி.சி.விதுஷா அவர்களும் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிறிலங்கா இளைஞர் தேசிய விருதுப் போட்டியில் செல்வி.அமிர்தா ஆனந்தராசாவும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் மேற்படி கெக்குல சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற அறிவிப்பாளர் போட்டியில் செல்வன் K.விநோதன்  இவ்வாண்டு பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலத்திற்கு பின்னர் காரை இந்துவிற்கு கிடைத்த தேசிய மட்ட சாதனையாக மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசாவின் சாதனை பதிவாகியிருக்கின்றது.

1990 களின் தொடக்கம் வரை காரைநகரில் வாழ்ந்த மக்கள் தொகையின் ஏறத்தாழ 25 சதவீதமான மக்களே இன்று காரைநகரில் வாழ்ந்து வரும் நிலையில் அன்றைய கல்லூரி மாணவர் தொகையின் 50 சதவீத எண்ணிக்கையிலான மாணவர்களே இன்று எமது பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வாறான தேசிய மட்ட சாதனைகளை வென்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்க்கும் மாணவர்கள், சேவையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

சாதனையாளர் செல்வி.அமிர்தாவும் அவருக்கு பயிற்சி அளித்த கல்லூரியின் இசைத்துறை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோரும் கல்லூரியை வழிநடத்திவரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்

காரை இந்துவில் நடைபெற்ற உலக சுற்றாடல் தினமும் மரம் நடுகையும்

pasu

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில்(காரைநகர் இந்துக் கல்லூரி) அண்மையில் உலக சுற்றாடல் தினம் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக்குழுவின் தலைவர் செல்வன் அ.பிரணவரூபன் தலைமையில் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள சுற்றாடல் ஒருங்கிணைப்பாளர் திரு.K.A.சிவனருள்ராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் திரு.பொ.சண்முகதேவன் அவர்களும் கௌரவ விருந்தினராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் ஓய்வுநிலை மருத்துவ அதிகாரி க.நடராஜா அவர்களும் பிரதேச சுற்றாடல் அலுவலர் திருமதி.வி.கல்யாணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இத்தினத்தையொட்டி கல்லூரியின்; ‘சுற்றாடல் முன்னோடிக் குழு’ சுற்றாடலைப் பாதுகாப்போம் சுகமாக வாழ்வோம் என்னும் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டபின் ‘இயற்கை எனும் அன்னையைத் தேடி” என்னும் நாடகம் உட்பட மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. சுற்றாடால் முன்னோடிக்குழுவினால் “பசுமை” என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் உலக சுற்றாடல் தினத்தையொட்டி பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றது.

கல்லூரியின் ‘சுற்றாடல் முன்னோடிக்குழு’ இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுவிற்கு பொறுப்பாசிரியர்களாக திருமதி.சிவந்தினி வாகீசன், திருமதி.அற்புதமலர் இராஜசிவம் திருமதி.பா.சிவாஜினி ஆகியோர் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.