Tag: காரைச் செய்திகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 தொடக்கம் 7.15 மணிவரை உள்ள சுப வேளையில் இடம்பெற்ற காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் மணி மண்டப அடிக்கல் நாட்டு வைபவ காணொளி!

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 தொடக்கம் 7.15 மணிவரை உள்ள சுப வேளையில் இடம்பெற்றது!

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 தொடக்கம் 7.15 மணிவரை உள்ள சுப வேளையில் இடம்பெற்றது.

இன்று அதிகாலை 5.30 மணி தொடக்கம் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்று தொடர்ந்து மணி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

IMG_7191 IMG_7194 IMG_7198 IMG_7202 IMG_7213 IMG_7215 IMG_7219 IMG_7221 IMG_7259 IMG_7269 IMG_7273 IMG_7291 IMG_7293 IMG_7295 IMG_7296 IMG_7310 IMG_7312 IMG_7317 IMG_7325 IMG_7327 IMG_7333 IMG_7334 IMG_7342 IMG_7343 IMG_7345 IMG_7349 IMG_7353 IMG_7363 IMG_7366 IMG_7367 IMG_7369 IMG_7376 IMG_7378 IMG_7390 IMG_7400 IMG_7406 IMG_7418 IMG_7422 IMG_7424 IMG_7425 IMG_7428 IMG_7429 IMG_7431 IMG_7432 IMG_7433 IMG_7435 IMG_7440 IMG_7442 IMG_7443

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  4ம் நாள் காலை நிகழ்வு 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  3ம் நாள் மாலை நிகழ்வு 

 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  3ம் நாள் காலை நிகழ்வு 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  2ம் நாள் மாலை நிகழ்வு 

 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  2ம் நாள் காலை நிகழ்வு 

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம் வருடாந்த மகோற்சவம்- 2017

K

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் மணி மண்டப அடிக்கல் நாட்டு வைபவ விஞ்ஞாபனம்-2017

VALANTHALAI AMMAN KOVIL NOTICE

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

கடந்த டிசம்பர் மாதம் 2016 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.

மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச் சிறந்த  8 A, 1 B  என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி கம்சிகா தேவராசா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

                                  மாணவர் பெயர்                                                            பெறுபேறு

1.    செல்வி கம்சிகா தேவராசா                                                                          8A B
2.    செல்வன் சரவணபவானந்தசர்மா பிரசன்னசர்மா                               8A
3.    செல்வன் சோமசுந்தரம் யசிந்தன்                                                              6A 2B S
4.    செல்வன் கோடீஸ்வரன் மிறோஜன்                                                           6A B C
5.    செல்வன் கனகலிங்கம் கமலரூபன்                                                           6A 2B
6.    செல்வி கிருத்திகா இராசலிங்கம்                                                               5A 2B C S

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக  12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம்  நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்றாவது தடவையாக 05.11.2016 அன்று 3ம் கட்ட வட்டிப்பணமாக 10 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 40,218.75 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

அத்துடன் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே 05 /நவம்பர் 05  கிடைக்கப்பெற நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை வங்கிக் கணக்கிற்கு  9,750.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.  அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான 2016 நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/03/CKCA-SCHOOLS-PROJECT-REPORT-3.pdf

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 30.03.2017 இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக கிரியைகள் முதலாம் நாள் காணொளி!

 

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 24.03.2017 இடம்பெற்ற வேட்டைத் திருவிழா காணொளி!

காரைநகர் அம்பாள் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா இன்று 30.03.2017 நடைபெற்றது!

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 IMG_8153 IMG_8161 IMG_8168 IMG_8172 IMG_8176 IMG_8178 IMG_8180 IMG_8205 IMG_8207 IMG_8219 IMG_8245 IMG_8249 IMG_8254 IMG_8261 IMG_8264 IMG_8267 IMG_8268 IMG_8271 IMG_8277 IMG_8284 IMG_8290 IMG_8301 IMG_8304 IMG_8333 IMG_8346 IMG_8353 IMG_8355 IMG_8359 IMG_8373

ஈழத்துச் சிதம்பர பங்குனி மகோற்சவ காலங்களில் (31-03-2017 தொடக்கம் 10-04-2017 வரை) தினமும் பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை ஈழத்துச் சிதம்பர தலபுராணபடனம் இடம் பெறவுள்ளது


காரைநகர்
மணிவாசகர் சபை

MANIVASAGAR SABAI LOGO

 

                   ஈழத்துச் சிதம்பர தல புராண படனம்

ஈழத்துச் சிதம்பர பங்குனி மகோற்சவ காலங்களில் (31-03-2017 தொடக்கம் 10-04-2017 வரை) தினமும் பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை ஈழத்துச் சிதம்பர தலபுராணபடனம் இடம் பெறவுள்ளது

இடம்:- மணிவாசகர் மணிமண்டபம் ஈழத்துச் சிதம்பரம்

தலபுராணங்கள்     1.ஈழத்துச்சிதம்பர புராணம்

                                     2.ஆண்டி கேணி ஐயனார் புராணம்


அடியார்கள் இந்நிகழ்வில் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆ.அம்பலவிமுருகன்                                                                  மணிவாசக சபையினர்
மு.சுந்தரலிங்கம்                                                                                         காரைநகர்
ஆதீனகர்த்தாக்கள்
ஈழத்துச் சிதம்பரம்

 

 

pankuni

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்தும் புரவலர் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் அவர்களின் மணிவிழா 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

3

க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து

YARLTON COLLEGE

க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக 
யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து:-

க.பொ.த சா/த 2016 ம் ஆண்டுக்கான பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை யாழ்ற்ரன் கல்லூரி பெற்றது மட்டுமன்றி அயல் பாடசாலைகளும் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை காரைநகரில் கல்வி மட்டம் சிறந்த நிலையில் இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. க.பொ.த உ.த 2016 பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி 3A சித்தியை பெற்றமை காரைநகர் கல்வி வளர்ச்சியில் அதுவும் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

    1990 ற்கு முன்னர் காரைநகர்ப் பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையில் 8 பாடங்களிலும் 7D,6D பெற்ற மாணவர் எண்ணிக்கை மிக சொற்பளவில் காணப்பட்டமை காரைநகரில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் அறிவர். ஆனால் இன்று தீவக கல்வி வலயத்தில் காரைநகர் கல்விக்கோட்டமே முதன்மையாக இருப்பது பற்றி தீவக வலய கல்வித்திணைக்களத்தினர் அடிக்கடி அதிபர் கூட்டங்களில் கூறிவருகின்றார்கள்.  இதற்கு காரணம் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணமான சேவை மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள காரை அபிவிருத்திச் சபையினர் பாடசாலைகளில் காட்டி வரும் அதீதமான அக்கறையுமென்பதும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. காரைநகர் பாடசாலைகளில் கற்றல் அடைவு மட்டம், பௌதீக வள மட்டம் என்பவற்றினை ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வளர்ப்பதற்கு வெளிநாடுகளிலுள்ள காரைநகர் அபிவிருத்திச் சபைகள் செய்து வரும் உதவிகள் காரைநகர்ப் பாடசாலைகள் தீவக வலயத்தில் முன்னிற்பதற்கு ஒர் உந்து சக்தி எனக் கருதுகின்றேன்.

    உதாரணமாக கனடா காரை கலாச்சார மன்றத்தினர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணனிகளை வழங்கி, கணனி ஆய்வு கூடத்தினை வளம் படுத்தியமையினால் (Computer Lap) எமது கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக   ICT(தகவல் தொடர்பாடல்தொழினுட்பம்) பாடத்திற்கு 100% சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கனடா காரை கலாச்சார மன்றத்தினர் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு நிதி உதவிகள் அளிக்கின்றமை, லண்டன் காரை அபிவிருத்திச் சங்கம் எமது கல்லூரி நூலகத்திற்கு புத்தக இறாக்கைகள் வழங்கி நூலகத்தை வளம்படுத்தியமை  சுவிஸ் காரை அபிவருத்திச்சங்கம் கல்லூரிக்கு போட்டோ கொப்பி மெசின் வழங்கியமை, அவுஸ்த்திரேலியா காரை அபிவிருத்திச்சங்கம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியமை என்பவை வெளிநாடுகளிலுள்ள காரை அபிவிருத்திச்; சங்கங்கள் எமது கல்லூரரிக்கு செய்தமை குறிப்பிடத்தக்கனவாகும். இதைவிட ஒவ்வோர் வெளிநாட்டு காரை அபிவிருத்திச் சபையினர் இன்னும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்கள்.

எனவே தீவக வலயத்தில் காரைநகர் கல்விப் புலத்தின் முன்னேற்றத்திற்கு  காரை அபிவிருத்தியின் அமைப்புக்கள் ஆற்றி வருகின்ற இச் சேவைகள் தேசிய பரீட்சைகளில் எமது மாணவர்களின் அடைவு மட்ட வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை மிகுந்த நன்றியுணர்வுடன் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். தங்கள் சேவைகள் மேலும் தொடர எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

       அதிபர்
வே.முருகமூர்த்தி

 

க.பொ.த (சா/த) – 2016 பெறுபேறுகளில் தீவக கல்வி வலய முதன்மைப் பெறுபேற்று பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரி

க.பொ.த (சா/த) – 2016 பெறுபேறுகளில் தீவக கல்வி வலய முதன்மைப் பெறுபேற்று பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரி

    2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி  அதிகூடிய பெறுபேறான 8A  சித்தியை மாணவன் ஒருவன் பெற்றதன் மூலம் தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் 5A சித்திகளையும் அதிலும் கூடுதலான சித்திகளையும் (வட மாகாண கல்வித்திணைக்களத்திற்கான சிறந்த பெறுபேற்று எதிர்பார்க்கை ) கூடுதலாக 8 மாணவர்கள் பெற்றமையும் 70 சதவீதமான மாணவர்கள் (48 பேர் தோற்றி 34 பேர் தகமை பெற்றனர்) கணிதம், தமிழ் பாடம் உட்பட எல்லாப் பாடங்களிலும் சித்தி பெற்று க.பொ.த உ/த படிப்பதற்கான பூரணமான தகமைகளைப் பெற்று காரைநகர்க் கல்விக் கோட்டத்தில் க.பொ.த (சா/த) சிறப்பு மிக்க பெறுபேற்றினைப் பெற்ற பாடசாலையாக யாழ்ற்றன் கல்லூரி திகழ்கின்றது. இப் பெறுபேறுகள் சென்ற ஆண்டை விட 12 சதவீதத்தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

5A சித்திகளையும் அதனிலும் கூடிய பெறுபேறுகளையும் பெற்ற மாணவர் விபரம்

YARLTON COLLEGE
                                      அதிபருடன் குறித்த மாணவர்கள்

1. லோகேஸ்வரன் குருபரன்        –     8A 1W
2. கோபிகா யோகேஸ்வரன்        –    7A, 1B, 1C
3. வேணுப்பிரியா தேவதாஸ்        –    7A,1B,1S
4. சிவப்பிரியா சிறிமகேஸ்வரலிங்கம்    –     6A,2B,1W
5. கீர்த்தனா செல்வரட்ணம்        –    6A,1B,1C,1W
6.செந்தில்நாதன் பிரசாந்தன்        –    6A,1C,2S
7. சற்குணராசா ஐவதாஸ்        –     6A,2C,1W
8.யாழினி பரமேஸ்வரன்        –    5A,1B,2C,1W

இம் மாணவர்களையும் ஏனைய தகமை பெற்ற மாணவர்களையும் இவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் 01.04.2015 தொடக்கம் 27.03.2017 வரையான செயற்பணி அறிக்கை

 

KDS LOGO

காரைநகர் அபிவிருத்திச் சபையின் 01.04.2015 தொடக்கம் 27.03.2017 வரையான செயற்பணி அறிக்கை

 

01. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன்

 எமது பாடசாலை மாணவர்களின் கல்வியினை கருத்திற் கொண்டும் நீண்டகால நோக்குடன் காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கு நிரந்தரவைப்பு பணமாக தலா பத்து இலட்சம் ரூபா வீதம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டு குறித்த வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியினை ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் பெற்று மாணவர்களின் கல்விக்கு செலவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதிபர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் விபரம்

1.            ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்

2.            வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை

3.            ஊரி அ.மி.த.க பாடசாலை

4.            வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை

5.            யாழ்ற்றன் கல்லூரி

6.            யா.சுப்பிரமணிய வித்தியாசாலை

7.            தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயம்

8.            வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம்

9.            சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

10.          வியாவில் சைவ வித்தியாலயம்

11.          மெய்கண்டான் வித்தியாலயம்

12.          பாலவோடை இ.த.க.பாடசாலை

             புலமைப்பரிசில் பரீட்சைமூலம் மாணவர்கள் காரைநகரில் கணிசமான அளவு சித்தியடைய வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கான முன்னோடி பாடங்களையும் , பரீட்சைகளையும் காரைநகரில் வசிக்கும் தரம் 5 மாணவர்களை ஒருங்கிணைத்து யாழ்ற்றன் கல்லூரியில் 06.07.2015, 19.07.2015, 31.07.2015 ஆகிய தினங்களில் 169 பிள்ளைகளுக்கான மேற்படி பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது.  இம் முன்னோடி நிகழ்வை யாழ் மாவட்டத்தில் உள்ள முன்னோடி ஆசிரியர் குளாம் 16 பேரைக் கொண்ட வளவாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.

அடுத்து காரை முத்தமிழ் பேரவையில் முன்னேற்றத்திற்காக அப் பேரவையின் முதல்வர் ந.இராசமலரிற்கு 262,075/= ரூபா வழங்கப்பட்டது.

அடுத்து நூலகத்தில் வாணி விழாவின் போது காரைநகரில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 2015,2016ம் ஆண்டுக்குரிய மாணவர்களை

  கௌரவித்து பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்தோடு குறித்த ஆண்டுகளில் ஆண்டு 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களின் நடனம், பேச்சு, பாட்டு, கலைநிகழ்வுகளும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி சார்ந்த வளவாளர்களால் சொற்பொழிவும் இடம்பெற்றது.

2016ம் ஆண்டு சர்வதேச விதவைகள் தினத்தையிட்டு யாழ் மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க சமாசத்தின் வேண்டுதலின் பிரகாரம் 2016 யூலை மாதம் காரைநகரில் உள்ள விதவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் நோக்கில், குறித்த பெண்கள் அமைப்புக்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கான கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டு, ஒரு விதவைக்கு 2 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எமது நூலகத்தில் நடாத்தப்பட்டது.

அடுத்து கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் விழாவிற்காக, காரைநகரில் உள்ள 13பாடசாலை அதிபருடனான நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. 2017ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் தோப்புக்காடு மறைஞான சம்மந்த வித்தியாலயம், ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயம், வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாலயம், வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம், பாலாவோடை இ.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகம் மற்றும் எம் சபைக்கும் மடி கணினி வழங்கப்பட்டது. மேலும் த.பரமானந்தராசா(தந்தையின் ஞாபகார்த்தமாக),கனக சிவகுமாரன்(நாகமுத்து புலவர் கவிதை வெளியீட்டின் மூலம்)சு.கதிர்காமநாதன் ஆகியோரின் நிதியைக் கொண்டு ஒவ்வொரு பாடசாலை அதிபர்களின் சிபாரிசுடன்  வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 170  பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் கொண்ட பொதிகள்:-

1.            1ம் கட்டம் யாழ்ற்றன் கல்லூரியில் இடம் பெற்ற சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் அணுசரனையுடன் நடத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட்டது.

2.            2ம் கட்டம் காரைநகர் அபிவிருத்தி சபையின் மாணவர் நூலகத்தில் வழங்கப்பட்டது.

3.            3ம் கட்டம் மணற்காட்டு அம்மன் ஆலயத்தில் நடை பெற்ற கும்பாபிசேக தினத்தில் அன்று நடை பெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

 

02. சுவிஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன்

காரைநகரில் உள்ள 13பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தியாகத்திறன் கேள்வி போட்டி பரீட்சையில் திருக்குறள், மனனப்போட்டி, இன்னிசை, பொது அறிவு, பேச்சு, கவிதை போன்ற விடயங்கள் காரைநகர் இந்துக்கல்லூரியில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு 

                                                               

எதியோப்பிய பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி விஐயரத்தினம் யோன்மனோகரன் கெனடி. அவர்கள் தலைமையில் வளவாளர்களை கொண்டு நடாத்தப்பட்டது.

அத்தோடு நூலகத்திற்கு 9,144/= ரூபாவிற்கான புத்தகங்களும் தரப்பட்டது. மேலும் காரைநகரில் உள்ள கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கண்சத்திரசிகிச்சை இரு தடவைகள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் ரூபா 567,210/= மேற் கொள்ளப்பட்டது. இச் சிகிச்சையின் போது 31  பேர் பங்கு பற்றி பயனடைந்தனர்.

அத்தோடு எமது அலுவலக செயற்பாட்டிற்காகவும் ரூபா 52,000/= நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும் 2016 ம் ஆண்டுக்கான கலண்டர் விற்பனை செய்த வகையிலும் எமது சபைக்கு  ரூபா 41,820/= கிடைத்துள்ளது.

திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் எமது சபையின் மூலமாக பிட்டியெல்லை கிராமத்தில் அமைந்துள்ள பேரம்பலம் முன்பள்ளிக்கும், இலங்கை போக்குவரத்துச் சபை காரைநகர் சாலையின் 50 வது ஆண்டு பொன்விழாவிற்கும் ,சாலையின் கட்டிடதிருத்த வேலைக்கும், தங்கோடை முன்பள்ளி கட்டிட வேலைக்கும் ரூபா 850,000/= நிதி உதவி தரப்பட்டு அவ் வேலைகள் முழுமை பெற்றுள்ளது.

 

03. லண்டன் காரை நலன்புரிச்சங்கதின் அனுசரனையுடன் பின்வரும் உதவிகள் வழங்கப்பட்டது.

01.          தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயத்தின் தேவையினை கருத்திற் கொண்டு நிழல்பிரதி இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக நிதி வழங்கப்பட்டது.

02.          வியாவில் சைவ வித்தியசாலை தொண்டர் ஆசிரியருக்கு 7 மாத உதவி தொகை வழங்கப்பட்டது.

03.          ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்தின் கோரிக்கையின் பிரகாரம் அக் கழகத்திற்கு 325,000/= ரூபா வழங்கப்பட்டது.

04.          காரைநகரில் வறுமை நிலையில் உள்ள கண்பார்வை குன்றியவர்களுக்கு கண்சத்திர சிகிச்சை மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையில் 28 பேருக்கான வைத்திய செலவு வழங்கப்பட்டது.

 ஏற்கனவே லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் வைத்தியசாலையின் செலவுக்காக பத்து இலட்சம் ரூபா இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான வைப்பில் உள்ளது.

 

04. பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன்

01.          முன்பள்ளி ஆசிரியார்களின் மாதச்சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.                                                              

02.          காரைநகரில் உள்ள 13 பாடசாலைகளுக்கும் பிரதேச செயலகத்தால் பால் விநியோகம் நடைபெறுகின்றது. அவ் விநியோகத்தினை மேற் கொள்வதற்கான ஓட்டோ வாகனச் செலவினம் வழக்கப்பட்டது. (2016 மார்கழி)

03.          பாலை எடுத்துச் செல்வதற்கான கொள்கலன் ஒன்றும் குறித்த பால் விநியோகத்திற்கு வாங்கி கொடுக்கப்பட்டது.

 ஏற்கனவே பிரான்ஸ் காரை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் முன்பள்ளிகளின் செயற்பாட்டிற்கு பத்து இலட்சம் ரூபா இலங்கை வங்கியில் நிலையான வைப்பில் உள்ளது.

 

05. அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன்

  அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் மூலம் காரைநகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து பாடசாலை நூலகத்திற்கும் இரண்டு லட்சப் பெறுமதியான புத்தகங்கள் அதிபர்களின் ஆலோசனையின் பிரகாரம் வழங்கப்பட்டது.

 

06. நூல்நிலையம்

யாழ் மாவட்டத்தில் செயற்படும் நூலகங்களில் குறிப்பிடத்தக்க விசாலமான நூலகங்களில் எமது நூலகமும் ஒன்றாகும். இரண்டு நூலக உதவியாளர்களின் செயற்பாட்டுடன் நூலக குழுவின் மேற்பார்வையில் எமது நூலகம் செயற்படுகின்றது. இந் நூலகத்தில் சமயம், சரித்திரம், இலக்கியம், சிறுகதை, சஞ்சிகை, உசாத்துணைநூல்கள், சோதிடம், கவிதை, பாடசாலை பயிற்சி புத்தகங்கள் பொதுஅறிவு, கட்டுரை, வினாவிடை போன்ற இன்னும் பல விடயங்களை கொண்ட 9445 புத்தகங்கள் இருக்கின்றன. அத்தோடு உதயன், வீரகேசரி ஆகிய புதின பத்திரிகைகளும் நாளாந்தம் வாசகர்களின் பாவனைக்கு போடப்பட்டுள்ளது. 2016 மார்கழி வரை இந் நூலக பயன்பாட்டில் 163 மாணவர்கள் அங்கத்தவர்களாக பயன்பாட்டில் உள்ளனர். தினமும் காலை 9.00-1.00 பிற்பகல் 2.30-5.30 மணிவரை நூலக சேவை நடைபெறுகின்றது. மேலும் மாணவர்களின் கணிணி பயன்பாட்டை கவனத்தில் எடுத்து 20.03.2016 தொடக்கம் 16.10.2016 வரை கணிணியின் அடிப்படை பயிற்சி நடைபெற்றது. இப் பயிற்ச்சி வகுப்பில் காரைநகரை சேர்ந்த 17 மாணவர்கள்  பயன் பெற்றனர். இப் பயன்பாட்டிற்கு 10 கணிணிகள் நூலகத்தில் இருக்கின்றது. இக் கற்கை நெறியினை தமது சொந்த பணத்தை  வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் நடராசா அவர்கள் குறித்தி ஆசிரியைக்கு வழங்கியுள்ளார். எமது வெளிநாட்டு உறவுகள் காலத்திற்கு காலம் காரைநகருக்கு வரும் போது எல்லாம் எமது நூலகத்தை பார்வையிட்டு தமது ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கிவருகின்றார்கள். இருப்பினும்                                                                                                      நூலகத்தை தொடர்சியாக பாரமரித்து வருவதற்கு குறிப்பிட்ட திரண்ட நிதி இல்லாது இருப்பது ஒரு குறைபாடக உள்ளது.

 

07. அலுவலகம், குடிநீர் விநியோகம்

  காரைநகரில் உள்ள பொது மக்களின் குடிநீர் பாவனையின் பொருட்டு ஏற்கனவே அறவிட்ட ஒரு லீற்றருக்கான பணம் குறைக்கப்பட்டு பெரிய பவுசர் ஒரு லிற்றர் நாற்பது சதப்படி சிறிய பவுசர் ஒரு லிற்றர் அறுபது சதப்படி சேவை நடைபெறுகின்றது .அதேவேளை விளான் பகுதியில் அமைந்துள்ள நடைமுறையில் இருக்கும் குடிநீர் கிணற்று உரிமையாளர் கடந்த காலத்தில் இலவசமாக குடி நீரை தந்து உதவினார். நாம் மின்சார கட்டணத்தை மாத்திரம் செலுத்தி வந்தோம். தற்போது குடிநீர் கிணற்று உரிமையாளர் மாற்றப்பட்டுள்ளமையால் புதிய உரிமையாளரின் வேண்டுகோளின் பிரகாரம்  யூலை 2016 இல் இருந்து பெரிய பவுசருக்கு ஒரு தடவைக்கு 200/= ரூபாவும் சிறிய பவுசருக்கு ஒரு தடவைக்கு 75/= ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது. மின்சாரக் கட்டணத்தை கிணற்று உரிமையாளரே செலுத்துகின்றார். இதன் காரணமாகவும் எமது வருமானம் குறைவடைந்துள்ளது. அத்துடன் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலைக்கு தற்காலிக கட்டிட புனரமைப்பு வேலைக்கு ரூபா 30,000/= வழங்கப்பட்டது. மருத்துவ செலவுக்கான போக்குவரத்து செலவுக்காக ரவிச்சந்திரன் மல்லிகாதேவி என்பவருக்கு ரூபா 10,000/= வழங்கப்பட்டது. பனை தென்னை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் 500 தென்னங்கன்றுகள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக காரை வாழ் மக்களுக்கு எமது அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஏம்மால் மருத்துவ போக்குவரத்து செலவுக்காக ஊரியை சேர்ந்த சிவலிங்கம் சிவரஞ்சன் என்பவருக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது. 

தண்ணீர் கணக்கில் 36 இலட்சம் ரூபா நிலையான வைப்பில் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் உள்ளது.( 22 இலட்சம் தற்போதை நிர்வாக சபையில்)

 

08. வலந்தலை பஸ் தரிப்பு நிலையம்

வலந்தலை சந்தியில் அமைந்துள்ள பஸ்தரிப்பு நிலையம் பேருந்துகள் இலகுவாக வந்து செல்ல எம்மால் ஒரு பகுதி நிலம் பெற்று விஸ்தரிக்கப் பட்டது. அத்துடன் பஸ்தரிப்பு நிலைய பிரதேசம் கனராக வாகன உதவியுடன் சீர்செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பஸ் தரிப்பிடத்திற்கான மின் கட்டணம் எம்மால் செலுத்தப்படுவதோடு பஸ்நிலைய பகுதி மாதாந்தம் துப்பரவு செய்யப்படுகின்றது.                     

09. வங்கி கணக்குகள் ஒன்றிணைத்தல்

ஆரம்ப காலத்தில் புலம் பெயர்நாடுகளில் இருக்கும் காரை நலன்புரிச் சங்கத்தின் பெயரில் வங்கியில் தனித்தனியான கணக்குகள் பேணப்பட்டு வந்தது. சபையின் கணக்குகள் கணக்காய்வு செய்யப்படும் போது ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக கணக்காய்வு செலவுகள் வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு ஒவ்வொரு நாட்டு கணக்கிலும் நடைமுறைக் கணக்கில் 15000/= ரூபாவுக்கு குறைவாக இருந்தால் வங்கி தனது பாரமரிப்பு செலவு என வருடா வருடம் பணம் கழித்து வருகின்றது. அத்தோடு காசோலை புத்தகத்திற்கு 750/= ரூபா என பல வகையான செலவினங்கள் ஏற்படுவதை கவனத்தில் எடுத்து எமது சபையின் கணக்குகளில் ஒவ்வொரு நாட்டு நலன் புரிச்சங்கத்தின் கணக்குகளை தனித்தனியாக வைத்து பேணுவது எனவும் வங்கியில் எமது சபையின் சார்பாக மாத்திரம் கணக்குகளை வைத்திருப்பது சபையோரால் ஒரு மனதாக திர்மானிக்கப்பட்டு செய்ற்படுத்தப்பட்டு வருகின்றது.

 

10. கூட்டங்கள்

எமது நிர்வாக சபையின் காலப்பகுதியில் 19 நிர்வாக சபைக் கூட்டங்கள் நடாத்தி எமது செயற்பாட்;டினை மேற்கொண்டோம். காலத்துக்கு காலம் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் காரை நலன் புரிச்சங்கங்களின் பிரமுகர்கள் காரைநகருக்கு வருகை தரும் சந்தர்பங்களில் எமது சபை அலுவலகத்தில் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுள்ளோம்.

 

11. நிறைவுரை

 எமது அபிவிருத்திச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 07.06.2015 அன்று நடை பெற்று செயலாளராக திரு.சிவா.தி.மகேசன் தெரிவு செய்யப்பாட்டார். பின்னர் அவரின் தனிப்பட்ட விடயம் காரணமாக பதவி விலகல் கடிதம் சபைக்கு சமர்பித்து அக் கடிதம் 16.07.2015 ஆம் திகதி நிர்வாக சபைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உப செயலாளராக பதவி வகித்த திரு.இ.திருப்புகலூர்சிங்கம் அவர்கள் செயலாளராக பதவி ஏற்றார். எமது நிர்வாக சபையின் காலப்பகுதியில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் எமக்கு கிடைத்த நிதியினை வைத்து எமது செயற்பாட்டினை மேற்கொண்டோம். அத்தோடு எமக்கு முன்னர் இருந்த நிர்வாக சபையினாரால் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் எமது கிளைச் சங்க நலன்புரிச்சங்கங்களின் பெயரில் எமது சபையின் பெயரில் நிரந்தர வைப்பாக வங்கியில் வைக்கப்பட்ட பணத்தில் எமது நிர்வாக சபை காலப்பகுதியில் எத் தேவைக்கும் அப் பணத்தில் இருந்து நாம் எதுவும் மிளப்பெறவில்லை என்பதையும் அப் பணத்தோடு எமது காலப்பகுதியில் குடிநீர் பகுதியில் 22 இலட்சம் நிரந்தர வைப்புச் செய்யப்பட்டது. அப் பணத்தோடு சேர்த்து மொத்தம் 17,500,000/=

 (ஒரு கோடி ஏழபத்தைந்து இலட்சம்) ரூபாவும் அதற்குரிய வட்டியும் நிரந்தர வைப்பில் இருக்கின்றது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு எமது காலப்பகுதியில் சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்த காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், எமது சபையின் நூலகம் உட்பட அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் மற்றும் கல்வி சார் அறிஞர்களுக்கும் மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனைத்து காரை நலன்புரிச்சங்கங்கள் அனைவருக்கும் மற்றும் எமது அபிவிருத்திச் சபை அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது மானமார்ந்த நன்றிகளை தெரிவித்து இச் செயற்பணி அறிக்கையை நிறைவு செய்கின்றோம்.

 

 சபையின் சார்பாக                                  

        செயலாளர்

 

 

 

ஈழத்துச் சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் பங்குனி மகோற்சவம் கொடியேற்றத் திருவிழா

IMG

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டம் இன்று 27ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.


காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டம் இன்று 27ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காரைநகர் அபிவிருத்தி தொடர்பபன கருத்துப் பகிர்வுகளும் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் இடம்பெற்றது.

சபையின் புதிய தலைவராக சிவா தி.மகேசன்,உப தலைவராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலர் ப.விக்னேஸ்வரன் செயலாளராக பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஆ.யோகலிங்கம்,உப செயலாளராக ஓய்வு பெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர் க.நாகராசா,பொருளாளராக ஓய்வுநிலை காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை ஆகியோரும்

நிர்வாக சபை உறுப்பினர்களாக ஓய்வு நிலை கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஆ.சிவசோதி,மருத்துவர் சு.நடராசா,காரைநகர் பிரதேச சபை முன்னாள் தலைவர் வே.ஆணைமுகன்,மற்றும்,ந.பாரதி,சி.குமாரசேகரம்,க.கிருஸ்ணகுமார்,
க.பாலச்சந்திரன்,தி.செந்தூரன்,மு.பரம்தில்லைராசா, ந.பாலகிருஸ்ணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சபையின் காப்பாளர்களாக சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,தியாகராசா பரமேஸ்வரன்,விசுவலிங்கம் பரமானந்தம் ஆகியோர் சபையினரால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உள்ளகக் கணக்காய்வாளர்களாக கனகசுந்தரம் உமைநேசன்,சுந்தரலிங்கம் அகிலன் ஆகியோரும் தெரிவாகினர்.

IMG_3019 (Copy) IMG_3021 (Copy) IMG_3022 (Copy) IMG_3025 (Copy) IMG_3027 (Copy) IMG_3031 (Copy) IMG_3035 (Copy) IMG_3040 (Copy) IMG_3041 (Copy) IMG_3043 (Copy) IMG_3044 (Copy) IMG_3046 (Copy) IMG_3047 (Copy) IMG_3048 (Copy) IMG_3049 (Copy) IMG_3052 (Copy) IMG_3053 (Copy) IMG_3054 (Copy) IMG_3055 (Copy) IMG_3056 (Copy) IMG_3057 (Copy) IMG_3058 (Copy) IMG_3059 (Copy) IMG_3060 (Copy) IMG_3061 (Copy) IMG_3062 (Copy) IMG_3063 (Copy) IMG_3064 (Copy) IMG_3065 (Copy) IMG_3066 (Copy) IMG_3067 (Copy) IMG_3068 (Copy) IMG_3069 (Copy) IMG_3070 (Copy) IMG_3071 (Copy) IMG_3072 (Copy) IMG_3073 (Copy) IMG_3074 (Copy) IMG_3075 (Copy) IMG_3076 (Copy) IMG_3077 (Copy) IMG_3078 (Copy) IMG_3080 (Copy) IMG_3081 (Copy) IMG_3082 (Copy) IMG_3083 (Copy) IMG_3084 (Copy) IMG_3087 (Copy) IMG_3088 (Copy) IMG_3089 (Copy) IMG_3090 (Copy) IMG_3091 (Copy) IMG_3092 (Copy) IMG_3093 (Copy) IMG_3095 (Copy) IMG_3096 (Copy) IMG_3098 (Copy) IMG_3100 (Copy) IMG_3101 (Copy) IMG_3103 (Copy) IMG_3104 (Copy) IMG_3105 (Copy) IMG_3106 (Copy) IMG_3107 (Copy)

 

 

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள் 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள்  24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக் கணணிகள் அண்மையில் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மேலதிக இரு கணணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி,பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரிடம் இந்த மடிக் கணணிகள் கையளிக்கப்பட்டது.

அண்மையில் காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை  என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணணிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணணி வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கணணிகள் காரைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8
 

திரு.திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய “வன வளம் ” நூல் வெளியீட்டு விழா காரைநகர் கோவளம் புகலி சிவசுப்பிரமணிய ஆலயத் தோப்பில் 25.03.2017 சனிக்கிழமை இடம்பெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 26.03.2017 இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 26.03.2017 இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

IMG_6400 IMG_6411 IMG_6430 IMG_6431 IMG_6435 IMG_6456 IMG_6457 IMG_6461 IMG_6464 IMG_6466 IMG_6468 IMG_6471 IMG_6479 IMG_6480 IMG_6490 IMG_6492 IMG_6503 IMG_6524 IMG_6558 IMG_6564 IMG_6583 IMG_6589 IMG_6612 IMG_6616 IMG_6632 IMG_6637 IMG_6640 IMG_6649 IMG_6650 IMG_6652 IMG_6655 IMG_6656 IMG_6664 IMG_6667 IMG_6673 IMG_6674 IMG_6680 IMG_6687 IMG_6692 IMG_6716 IMG_6717 IMG_6722 IMG_6725 IMG_6756 IMG_6757

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று 26.03.2017 இடம்பெற்ற பஞ்சதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா காணொளி!

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய பஞ்சதள இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசம் முழங்கப் பத்திப் பரவசமாக இன்று இடம்பெற்றது.

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய பஞ்சதள இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசம் முழங்கப் பத்திப் பரவசமாக இன்று இடம்பெற்றது.

இன்று அதிகாலை இடம்பெற்ற விஷேட அபிஷேக ஆராதனைகள் பூசை வழிபாடுகளை அடுத்து காலை 7.50 மணியளவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் பூரண அனுசரனையுடன் இடம்பெறும் இராஜகோபுரத் திருப்பணிக்கான முதலாவது அடிக்கல்லினை வைத்தியக் கலாநிதி எஸ். சுவாமிநாதன் அவர்கள் நாட்டிவைத்தார்.

சுமார் 180 இலட்சம் ரூபா செலவில் 55 அடி உயரமான கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

 

IMG_6054 IMG_6057 IMG_6058 IMG_6062 IMG_6066 IMG_6076 IMG_6079 IMG_6089 IMG_6096 IMG_6099 IMG_6105 IMG_6127 IMG_6128 IMG_6132 IMG_6133 IMG_6136 IMG_6137 IMG_6138 IMG_6140 IMG_6145 IMG_6149 IMG_6152 IMG_6155 IMG_6160 IMG_6161 IMG_6164 IMG_6175 IMG_6185 IMG_6192 IMG_6195 IMG_6198 IMG_6206 IMG_6207 IMG_6214 IMG_6217 IMG_6220 IMG_6224 IMG_6227 IMG_6229 IMG_6231 IMG_6233 IMG_6238 IMG_6240 IMG_6243 IMG_6244 IMG_6247 IMG_6248 IMG_6252 IMG_6253 IMG_6255 IMG_6259 IMG_6265 IMG_6267 IMG_6277 IMG_6281 IMG_6284 IMG_6285 IMG_6287 IMG_6290 IMG_6291 IMG_6294 IMG_6295 IMG_6297 IMG_6299 IMG_6301 IMG_6307 IMG_6310 IMG_6313 IMG_6316 IMG_6318 IMG_6320 IMG_6321 IMG_6328 IMG_6331 IMG_6335 IMG_6336 IMG_6339 IMG_6340 IMG_6349 IMG_6353 IMG_6354 IMG_6357 IMG_6358 IMG_6360 IMG_6361 IMG_6362 IMG_6373 IMG_6374 IMG_6376 IMG_6378 IMG_6379 IMG_6380 IMG_6383 IMG_6385 IMG_6388 IMG_6389 IMG_6392 IMG_6394 IMG_6395 IMG_6396

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 24.03.2017 இடம்பெற்ற 12ம் திருவிழா பகல் காட்சிகள்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் ‘செந்தமிழ் சொல்லருவி’ ச.லலீசன் அவர்கள் நிகழ்த்தியிருந்த நூல் ஆய்வுரையின் காணொளி

திரு.திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய “காட்டுவளம்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்!

1

IMG_0785

BOOK.RA

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் பஞ்சதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா விஞ்ஞாபனம்-2017

NOTICE

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்பாளுக்கு பஞ்சதள ராஜ கோபுரம் அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் 21.03.2017 நடைபெற்றது.

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்பாளுக்கு பஞ்சதள ராஜ கோபுரம் அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள்  21.03.2017 நடைபெற்றது. 

இராஜ கோபுரத்திற்கான முழு உபயமும் பரோபகாரி திரு. சுப்ரமணியம் கதிர்காமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

1 FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 FullSizeRender_5 FullSizeRender_6 FullSizeRender_7 FullSizeRender_8 FullSizeRender_9 IMG_7094 IMG_7096 IMG_7099 IMG_7103 IMG_7127 IMG_7129 IMG_7131 IMG_7162 IMG_7188

திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா( 2017.03.19) ஞாயிற்றுக்கிழமை பி.ப 01.30 மணிக்கு திக்கரை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.பரமசிவம்பிள்ளை தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா ( 2017.03.19) ஞாயிற்றுக்கிழமை பி.ப 01.30 மணிக்கு திக்கரை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.பரமசிவம்பிள்ளை தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச செயலக கணக்காளர் திருமதி நி.ராதிகா அவர்கள் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக மழலைகள் விளையாட்டுக்கள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மழலைகளுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது.இவ்வாண்டிற்கான சிறப்புக் கௌரவத்தை ஓய்வு நிலை கிராம சேவையாளரும் ஆசிரியருமான திரு இ.திருப்புகலூர்சிங்கமும் சங்கத்தின் தலைவர் திரு வே.பரமசிவம்பிள்ளையும் பிரபல ஓதுவார் திரு சு.தர்மலிங்கமும் சித்தாந்த வித்தகர் திரு வே.நடராசா ஆகியோர்க்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Image_1 (2) Image_1 Image_2 Image_3 Image_4 Image_5 Image_6 Image_7 Image_8 Image_9 Image_10 Image_11 Image_12 Image_13 Image_14 Image_15 Image_16 Image_17 Image_18 Image_19 Image_20 Image_21 Image_22 Image_23 Image_24 Image_25 Image_26 Image_27 Image_28 Image_29 Image_30 Image_31 Image_32 Image_33 Image_34 Image_35 Image_36 Image_38 (2) Image_38 Image_39 Image_40 Image_41 Image_43 Image_44 Image_45 Image_46 Image_48 (2) Image_48 Image_50 (2) Image_50 Image_51 Image_53 (2) Image_53 Image_54 Image_55 Image_56 Image_57 Image_60 (2) Image_60 Image_61 Image_63 (2) Image_63 Image_64 Image_66 (2) Image_66 Image_67 Image_69 Image_70 Image_72 Image_73 (2) Image_73 Image_75 (2) Image_75 Image_76 Image_77 Image_79 (2) Image_79 Image_81 (2) Image_81 Image_82 Image_84 (2) Image_84 Image_86 (2) Image_86 Image_87 Image_89 (2) Image_89 Image_91 Image_92 Image_93 Image_94 Image_96 (2) Image_96 Image_98 Image_99 Image_101 (2) Image_101 Image_102 Image_103 Image_104 Image_106 (2) Image_106 Image_107 Image_108 Image_110 (2) Image_142 (2) Image_142 Image_143 Image_145 (2) Image_145 Image_147 Image_148 Image_150 (2) Image_150 Image_151 Image_152 Image_154 (2) Image_154 Image_155 Image_157 Image_158 (2) Image_158 Image_161 Image_162 Image_163 Image_164 Image_165 Image_167 (2) Image_167 Image_168 Image_175 Image_176 Image_177 Image_179 (2) Image_179 Image_180 Image_181 Image_182 Image_184 Image_185 (2) Image_185 Image_188 Image_190 (2) Image_190 Image_191 Image_192 Image_193 Image_195 (2) Image_195 Image_196 Image_197 Image_198 Image_200 Image_201 (2) Image_201 Image_202 Image_203 Image_205 (2) Image_205 Image_206 Image_207 Image_208 Image_210 (2) Image_210 Image_211 Image_214 Image_215 Image_216 Image_217 Image_219 Image_220 Image_221 Image_222 Image_223 Image_226 Image_227 Image_230 Image_231 Image_232 Image_233 Image_234 Image_235 Image_236 Image_237 Image_238 Image_239 Image_242 Image_243 Image_244 Image_245 Image_246 Image_247 Image_248 Image_249 Image_250 Image_251 Image_252

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டுப்போட்டி-2017

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டுப்போட்டி-2017

யாழ்ற்ரன் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 19.03.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் புதிதாக விஸ்தரிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றன. பிரதம விருந்தினராக சுவிஸ் நாட்டின் பிரபல வர்த்தகர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் [Yarltonian] அவர்களும் (சுவிஸ்நாதன்), சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சர் திரு.பொ.சிவானந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க. அருள்நேசன் அவர்களும், காரை அபிவிருத்திச் சபை பொருளாளர் திரு.க.பாலச்சந்திரன் அவர்களும் மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி முகாமையாளராக (1960க்குமுன்னர்) சேவையாற்றிய அமரர் K.T.சோமசுந்தரம் அவர்களின் மகள் திருமதி.கா. முருகதாஸ் [Yarltonian,  London] அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

    கல்லூரி முன்றலில் இருந்து விருந்தினர்கள் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், ஆகியோர் கல்லூரியின் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக் குழுவினர், பாரம்பரிய இசைக்குழுவினர் ஜமயிலாட்டம், குதிரையாட்டம், பொம்மலாட்டம், கரகம்ஸ ஆகியோரால் கல்லூரி மைதானம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது.

    முதலில் கல்லூரியின் விளையாட்டு மைதான விஸ்தரிப்பிற்காக 22 பரப்புக் காணியைக் கொள்வனவு செய்து நன்கொடையாக அளித்த திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் சேவையைக் காட்டும் நினைவுக்கல் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களாலேயே திறந்து வைக்கப்பட்டது. பான்ட் இசைக் குழுவினரின் பான்ட் வாத்தியம் முழங்க மாணவர்களின் பலத்த கரகோசம், சங்குநாதம் என்பவை ஒலிக்க நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டமை கல்லூரி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் சம்பிரதாய நிகழ்வுகளான மங்களவிளக்கேற்றல் இறைவணக்கம் கொடியேற்றம் போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினர் விழாவை ஆரம்பித்து வைக்க விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இடைவேளை நிகழ்வின் போது மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்ச்சி தனிச்சிறப்பாக இருந்தமையை பார்வையாளர்கள் பலர் பாராட்டினர்.

    இறுதியாக நடைபெற்ற நிகழ்வில் அதிபர் உரையாற்றும் போது யாழ்ற்ரன் அன்னைக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்த சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் ஒவ்வொரு சேவையையும் எடுத்துக்கூறி நன்றி பாராட்டினார். கதிர்காம நாதன் அவர்கள் 22 பரப்புக்காணியைக் கொள்வனவு செய்து கல்லூரியின் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கு நன்கொடையாக வழங்கியமை கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை எனச் சுட்டிக்காட்டினார். இதனை நினைவுகூருமுகமாக கல்லூரிச் சமூகம் சார்பாக அதிபர் அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி திரு கதிர்காமநாதன் அவர்களைக் கௌரவித்தார். திரு கதிர்காமநாதன் அவர்கள் காணி உறுதியைக் கல்லூரி அதிபரிடம் கையளித்தார்.

    மேலும், அதிபர் தனது உரையில் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக காணிகளை கொன்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய தலைப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரன் திரு.S.கணநாதன் [உரிமையாளர்  Quency Distributers Colombo] அவர்களுக்கும், காரைநகர் ஆலடி திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) ஆகியோருக்கும் நன்றி உணர்வுடன் பாராட்டினார். மேலும் அதிபர் தொடர்ந்து பேசுகையில் யாழ்ப்பாணம் பெரிய கடைவீதி சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு கனகசபை அருள்நேசன் அவர்கள் தனது தந்தையார் அமரர் செல்லப்பா கனகசபை ஞபாகார்த்தமாக இவ்விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதையிட்டு  அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 

வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவேறியது.


                                      புள்ளிகளின் அடிப்படையில் இல்லங்களின் 

                                                            நிலைகள் வருமாறு.

 

                                                முதலாம் இடம் நாவலர் இல்லம்

                                          இரண்டாம் இடம் இராமநாதன் இல்லம்

                                          மூன்றாம் இடம் விபுலானந்தர் இல்லம்

DSC_1981 copy DSC_1982 DSC_1983 DSC_1987 DSC_1989 DSC_1994 DSC_1996 DSC_2004 DSC_2005 DSC_2006 DSC_2007 DSC_2008 DSC_2009 DSC_2010 DSC_2011 DSC_2012 DSC_2013 DSC_2017 DSC_2019 DSC_2021 DSC_2024 DSC_2025 DSC_2027 DSC_2030 DSC_2032 DSC_2035 copy DSC_2036 DSC_2039 DSC_2043 DSC_2047 DSC_2048 DSC_2052 copy DSC_2053 DSC_2054 DSC_2055 DSC_2056 DSC_2057 DSC_2058 DSC_2060 DSC_2061 DSC_2062 DSC_2063 DSC_2065 DSC_2069 DSC_2071 DSC_2074 DSC_2076 DSC_2078 copy DSC_2082 DSC_2083 DSC_2085 copy DSC_2089 DSC_2090 DSC_2092 DSC_2094 DSC_2097 DSC_2098 DSC_2102 DSC_2106 DSC_2109 DSC_2110 copy DSC_2111 DSC_2113 copy DSC_2114 DSC_2115 DSC_2116 DSC_2118 DSC_2120 copy DSC_2121 DSC_2123 DSC_2125 DSC_2126 DSC_2128 DSC_2129 DSC_2132 DSC_2133 DSC_2135 DSC_2136 DSC_2139 DSC_2140 DSC_2142 DSC_2151 copy DSC_2153 DSC_2154 DSC_2159 DSC_2164 DSC_2168 DSC_2210 DSC_2212 DSC_2214 copy DSC_2215 DSC_2219 copy DSC_2222 copy DSC_2223 DSC_2225 DSC_2226 copy DSC_2240 DSC_2252 DSC_2262 DSC_2266 DSC_2273 DSC_2283 DSC_2285