Tag: காரைச் செய்திகள்

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20/05/2018) மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20/05/2018) மாலை 3.00 மணிக்கு பாடசாலை நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து பழையமாணவர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் தவறாது சமூகம் தருமாறு வேண்டுகின்றோம்.

 

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 18/05/2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி உற்சவம்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கண்பார்வைக் குறைபாடுடைய 11 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபை அலுவலகத்தில் வைத்து மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கண்பார்வைக் குறைபாடுடைய 11 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபை அலுவலகத்தில் வைத்து மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு

 

காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு

காரைநகர் மக்களின் ஒப்பற்ற  உயர் நிலைக்கு  இந்துக்  கல்லூரியின் பணி  அருணாச்சல உபாத்தியாயர்  காலத்திலிருந்து இன்றுவரை அளப்பரியது. பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மடத்துக்கரை அம்மன் அருளாட்சியும், கல்லூரி மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தாயின் அருட்கடாட்ச்சமும் மாணவர்களை தொடர்ந்து  அதிஉன்னத நிலைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு  தீவக வலயத்தில் சிறந்த பாடசாலையாக சகல துறைகளில் திகழ்வதும்  மற்றும்  மாணவர்களின்  சிறந்த  பெறுபேறுகளும் சான்று பகர்கின்றன. இக்கல்லூரிக்கு ஊரவர்கள் மட்டுமல்லாது  மூளாய், அராலி, சுழிபுரம், வட்டுக்கோட்டை  போன்ற அயற்பிரசேதங்களில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் படித்தும், படிப்பித்தும்  பயன்பெறுகின்ற சிறப்பும் அனைவரும் அறிந்ததே.

மண்ணின் மகத்தான பாடசாலை அண்மித்த பாடசாலை திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, அபிவிருத்தி பணிகள் தொடங்ககூடிய  நிலையில்இருந்தன.  இத்தகைய சூழ் நிலையில் பாடசாலை வளாகத்தில் கடற்படையினர்  அத்துமீறி  முகாமிட்டுருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  முகாமை  அகற்றி கல்விசார் சமூகத்தினதும்,  ஊரவர்கள் அனைவரதும் பீதியற்ற  நிலைமையை  உருவாக்க பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தவிர்க்கமுடியாததொன்றாகும்.  மன்றத்தின்  தலைவரும் கடற்படையினரின் முகாமை அகற்றுவதற்காக   தொடர்ச்சியாக பிரதேச  செயலாளர்,  பாடசாலை நிர்வாகம் மற்றும் உரிய அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்புகளை பேணி வருகின்றார்.  மேற்கொண்டு விரைவில் அரச அதிபர், மாவட்ட  கட்டளை அதிகாரி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் மகஜர் அனுப்பப்படவுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு விரைவில் தொழில்நுட்ப பீடம்

 

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு விரைவில் தொழில்நுட்ப பீடம்

காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் ஒன்றினை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்  ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.

சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியம் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்குரிய பணிகள் முன்னெடுப்பது தாமதமாகி வருகின்றது.

இதனால் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் பெருமளவு மாணவர்கள் தொழில்நுட்பக் கற்கைக்காக யாழ் நகரப் பாடசாலைகளுக்கே செல்லவேண்டி உள்ளது.எனவே காரைநகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விரைவில் தொழில் நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இந்த மாணவர்களை இணைத்து கற்பிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

எனினும் இப் பாடசாலைக்கு மாணவர்கள் இரு பஸ்களில் சென்றே கற்கமுடியும் இது மாணவர்களுக்குக் கடினமானதாக அமையும் எனச் சுட்டிக்காட்டியதை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

அத்துடன் காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.

வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்றி இருப்பதுடன் வீதிகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பில் மேலிடத்தில் ஆராயப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மைதான சீர் செய்தல் சம்மந்தமான கலந்துரையாடல் கூட்டம் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மைதான சீர் செய்தல் சம்மந்தமான கலந்துரையாடல் கூட்டம் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு போதியளவு வருகையின்மை காரணமாகவும் மற்றும் முதல்கட்டமாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டு மீண்டும் 2ம் கட்டமாக எதிர்வரும் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நிர்வாக மற்றும் பொதுக்கூட்டம் கூடி தீர்க்கமான முடிவினை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இன்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இன்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் சரவணபவன் எம்.பி காட்டம்

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இன்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கொண்டுவர அதனை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் உடனடியாக வடமாகாணக் கட்டளைத் தளபதிக்கும் பிரதமருக்கும் எழுத்துமூலம் அனுப்புமாறு பிரதேச செயலருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை வளாகத்திற்குள் கடற்படையினர் முகாம் அமைக்க அனுமதிக்க முடியாது எனவே அவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் பாடசாலைக்குச் சொந்தமான காணியினைப் பாடசாலைக்கு மீள வழங்க வேண்டும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில் பொலிஸ் நிலையம் அமைக்க முடியுமே தவிர கடற்படை முகாம் அமைக்க முடியாது எனவே கடற்படையினரை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காரைநகர் மடத்துவெளிப் பகுதியில் வாழ்ந்த 40 குடும்பங்கள் அகதிகளாக உள்ளன அவர்களது காணிகள் கடற்படை வசம் உள்ளது அதனையும் மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதிப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வடகடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரனும் எமது பகுதிக்கு வருகைதந்த போது இப்பகுதியை உடனடியாக விடுவித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள்.இச் செய்தி பத்திரிகைகளிலும் வந்தது ஆனால் இதுவரை எமது பகுதி விடுவிக்கப்படாமையால் தொடர்ந்தம் 40 குடும்பங்கள் ஏதிலிகளாக வாழவேண்டிய அவல நிலை காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டினார்கள்.

காரைநகர் பிரதேசத்தில் உள்ள நன்னீர்க் கிணறுகளில் இருந்து கடற்படையினர் தண்ணீர் எடுப்பதைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது இணைத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்த போது இங்குள்ள கிணறுகளில் எவளவு அளவு நீரினைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் கேட்டுக் கொண்டனர்.அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் 90 களிற்கு முன்னர் காரைநகரில் நாற்பதாயிரம் மக்கள் வாழ்ந்தனர் அப்போது குடிநீர்ப் பிரச்சினை வரவில்லை தற்போது நிலத்தடி நீர் வகை தொகையின்றி எடுக்கப்படுவதால் தற்போது வசிக்கும் பத்தாயிரம் மக்களுக்கே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்திச் சபை பவுஸர்கள் உட்பட இன்று 6 பவுசர்கள் வெளியிடங்களில் இருந்து குடிநீரினை எடுத்து வந்து மக்களுக்கு விநியோகிக்கின்றது. மக்கள் குடிநீரினைப் பெறுவதற்குப் பெருந் தொகைப் பணத்தினைச் செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே இங்குள்ள குடிநீரினை எமது மக்கள் பாவிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஊர்காவற்றுறையில் கடற்படையினரால் கடல் நீர் நன்னீராக்கப்பட்டு தமது தேவைக்கு மாத்திரமன்றி மக்களுக்கும் வழங்குகின்றனர் ஆனால் இங்கு மக்களின் தண்ணீரை அபகரிக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டன.

காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும்

காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும்

காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது

இக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் குழாய் நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. அதற்கான வேலைத்திட்டத்தில் 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளது. பிரதான வீதிகள் ஊடாக குழாய்கள் பொருத்தும் பணிகளும் தண்ணீர் தாங்கி அமைக்கும் பணிகளும் நிறைவுக்கு வருகின்றது.

உள்ளக வீதிகளில் குழாய் பொருத்துவதற்காகக் கேள்வி கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே விரைவில் அப்பணியும் ஆரம்பிக்கப்படும் தாளையடியில் இருந்து கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

 

பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன.

பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக் கூட்டத்திற்கு வருகைதந்து தமது திணைக்களப் பிரச்சினைகளை முன்வைப்பது கட்டாயமானது

பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன. இக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இக் கூட்டத்திற்கு வருகைதந்து தமது திணைக்களப் பிரச்சினைகளை முன்வைப்பது கட்டாயமானது. எனவே இக் கூட்டத்திற்கு வருகை தரவேண்டிய தீவக வலயக் கல்வி அதிகாரிகள் வருகை தரவில்லை கடந்த கூட்டத்திற்கும் வருகை தரவில்லை எனவே இதற்கான நடவடிக்கையை உடன் எடுக்குமாறு வலியுறுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் எழுத்துமூலம் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையினை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

பிரதேச அபிவிருத்தியில் கல்விக்கான இடம் மிக முக்கியமானது அது தொடர்பாக ஆராய்வதற்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும் கல்வி அதிகாரிகள் இங்கு சமூகம் கொடுக்க வேண்டும் என்றார்.

காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மை மற்றும் வீதிகள் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

எனினும் கூட்டம் முடிவுறும் தறுவாயில் தீவக வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எதுவித ஆயத்தமும் இன்றி கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தார் அதனால் அவரால் உரிய பதில்கள் மற்றும் தரவுகளை சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் மைதானம் சீர்செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 06.05.2018 காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை (05.05.2018)

 

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை (05.05.2018)

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இக் கூட்டத்தில் காரைநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயப்பட உள்ளதுடன் மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கான அங்கீகாரங்களும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இக் கூட்டத்திற்கு அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள்.அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இக் கூட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி விவகாரம்,கடும் வரட்சியினால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு, முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விவகாரம்,உள்ளிட்ட விடயங்கள் கடுமையாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 30.04.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் (திருக்கல்யாணம்) திருவிழா காணொளி!

காரைநகர் தங்கோடை திருவருள்மிகு புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் ஆலயத்தில் 30.04.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற மஹா கும்பாபிஷேக காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 30.04.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் (திருக்கல்யாணம்) திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் விளம்பி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் – 2018

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலய (2018) திருவிழாக்களில் இடம்பெற்ற காவடி காணொளி!

காரைநகர் தங்கோடை திருவருள்மிகு புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று 30.04.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற மஹா கும்பாபிஷேக காட்சிகள்!

IF

IF

IF

திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய “சந்திர வழிபாடு” நூல் வெளியீடு 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை துருவாசர்பிட்டி,காரைநகரில் நடைபெற்றது!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காவடி காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 28.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் தங்கோடை திருவருள்மிகு புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகம் 30.04.2018 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 28.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 28.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காவடி காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 24.04.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 5ம் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 24.04.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 5ம் பகல் திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 24.04.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 5ம்நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 24.04.2018 செவ்வாய்க்கிழமை 5ம்நாள் இடம்பெற்ற மாம்பழத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 3ம் இரவு திருவிழா காட்சிகள்

 

 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 3ம் பகல் திருவிழா காட்சிகள்

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காவடி காட்சிகள்!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி தேவஸ்தான திவ்விய மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2018