கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இன்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இன்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் சரவணபவன் எம்.பி காட்டம்

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இன்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கொண்டுவர அதனை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் உடனடியாக வடமாகாணக் கட்டளைத் தளபதிக்கும் பிரதமருக்கும் எழுத்துமூலம் அனுப்புமாறு பிரதேச செயலருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை வளாகத்திற்குள் கடற்படையினர் முகாம் அமைக்க அனுமதிக்க முடியாது எனவே அவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் பாடசாலைக்குச் சொந்தமான காணியினைப் பாடசாலைக்கு மீள வழங்க வேண்டும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில் பொலிஸ் நிலையம் அமைக்க முடியுமே தவிர கடற்படை முகாம் அமைக்க முடியாது எனவே கடற்படையினரை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காரைநகர் மடத்துவெளிப் பகுதியில் வாழ்ந்த 40 குடும்பங்கள் அகதிகளாக உள்ளன அவர்களது காணிகள் கடற்படை வசம் உள்ளது அதனையும் மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதிப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வடகடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரனும் எமது பகுதிக்கு வருகைதந்த போது இப்பகுதியை உடனடியாக விடுவித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள்.இச் செய்தி பத்திரிகைகளிலும் வந்தது ஆனால் இதுவரை எமது பகுதி விடுவிக்கப்படாமையால் தொடர்ந்தம் 40 குடும்பங்கள் ஏதிலிகளாக வாழவேண்டிய அவல நிலை காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டினார்கள்.

காரைநகர் பிரதேசத்தில் உள்ள நன்னீர்க் கிணறுகளில் இருந்து கடற்படையினர் தண்ணீர் எடுப்பதைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது இணைத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்த போது இங்குள்ள கிணறுகளில் எவளவு அளவு நீரினைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் கேட்டுக் கொண்டனர்.அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் 90 களிற்கு முன்னர் காரைநகரில் நாற்பதாயிரம் மக்கள் வாழ்ந்தனர் அப்போது குடிநீர்ப் பிரச்சினை வரவில்லை தற்போது நிலத்தடி நீர் வகை தொகையின்றி எடுக்கப்படுவதால் தற்போது வசிக்கும் பத்தாயிரம் மக்களுக்கே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்திச் சபை பவுஸர்கள் உட்பட இன்று 6 பவுசர்கள் வெளியிடங்களில் இருந்து குடிநீரினை எடுத்து வந்து மக்களுக்கு விநியோகிக்கின்றது. மக்கள் குடிநீரினைப் பெறுவதற்குப் பெருந் தொகைப் பணத்தினைச் செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே இங்குள்ள குடிநீரினை எமது மக்கள் பாவிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஊர்காவற்றுறையில் கடற்படையினரால் கடல் நீர் நன்னீராக்கப்பட்டு தமது தேவைக்கு மாத்திரமன்றி மக்களுக்கும் வழங்குகின்றனர் ஆனால் இங்கு மக்களின் தண்ணீரை அபகரிக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டன.