Category: நூல் வெளியீடு

S.K.சதாசிவம் அவர்கள் எழுதிய “வரலாற்றில் காரைநகர்” என்ற நூல் வெளியீட்டு விழா 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி திரைப்படத்தின் கதை சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களினால் ஆங்கில நூலாக எழுதப்பட்டு நாளைய தினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

 

கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி திரைப்படத்தின் கதை சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களினால் ஆங்கில நூலாக எழுதப்பட்டு நாளைய தினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்களின் கதை வசனம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப் பெற்று ரசிகர்களின் பேராதரவினைப் பெற்ற ஒருத்தி-2 திரைப்படத்தின் கதையினை ரொறன்ரோவின் உயர்தரப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்ற சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களினால் ஆங்கில வடிவத்தில் எழுதப்பட்ட நூல் நாளைய தினம் 15-04-2023 சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்நூலினை எழுதிய சபிதா அவர்கள் காரை.மண் தந்த மற்றொரு வானொலிக் கலைஞரான திரு.கோகுலன் அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்:

 

 

காரைநகரைச் சேர்ந்த திரு.சபாரட்ணம் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய Dare to Differ நூல் வெளியீடு 26.02.2022 சனிக்கிழமை பிற்பகல் 2.45மணிக்கு Glen Waverley Community Centre, 692 – 724 Waverley Road, Glen Waverley 3150, அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் அவரால் எழுதப்பட்டடு வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலின் வெளியீடும் வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதிப்புக்குரிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும், அவரால் கடந்த காலங்களில் எழுதப்பட்டு வந்த சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பின் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வாழ்த்துகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மன்றத்திற்கான கீதத்தை இயற்றியவரும் “முத்தமிழின் இலக்கிய வித்தகருமான” ஜயா தமிழ்மணி அகளங்கன் தலைமையில் பல தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ், சமய உணர்வாளர்கள் கலந்து சிறப்பிக்கும் மதிப்புக்குரிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும், அவரால் கடந்த காலங்களில் எழுதப்பட்டு வந்த சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பின் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வாழ்த்துகின்றது.

பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் நூல் வெளியீடும் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

” 200 ஆவது ஆண்டு நிறைவு குறித்த கார்த்திகேயப் புலவர் மலர்” நூல் அறிமுக விழா அழைப்பிதழ் , ஆகஸ்ட் 11, 2019 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 2:30 -5:30 மணி வரை Scarborough Civic Centre commitee Room # 2(150, Borough Drive, Scarborough, Ontario. M1P 4N7) இல் நடைபெறவுள்ளது.

Karthikeyapulavarmalarvelyyedu-11.08.2019

பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் “கார்த்திகேயப் புலவர் மலர்” நூல் வெளியீடு 31.05.2019 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Karthikeyapulavar Malar veliyeedu-correction

29.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை துருவாசர்பிட்டி,காரைநகரில் நடைபெற்ற திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய “சந்திர வழிபாடு” நூல் வெளியீடு காணொளி!

திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் எழுதிய “சந்திர வழிபாடு” நூல் வெளியீடு 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை துருவாசர்பிட்டி,காரைநகரில் நடைபெற்றது!

கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்களின் “இலண்டனில் தமிழர் திருமணங்கள்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

எழில்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் நந்திவர்மனுடனான பேட்டி

சுவிஸ் வாழ் இளையோருடன் “எழில் பூக்கள்”

சுவிஸ் வாழ் இளையோருடன் “எழில் பூக்கள்”

காரை கவிஞர் த. நந்திவர்மன் எழுதிய “எழில் பூக்கள்” என்ற கவிதை நூல் இதுவரை சிட்னி, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, டொரொண்டொ, வன்கூவர், ஒக்லண்ட், மதுரை, லண்டன் பத்தாவது நகரமாக சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் (31.03.2018) இல்  ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

 

தமிழரின் பாரம்பரியத்தில் சிறப்பு வாய்ந்த கவிதைக் கலைகள் மெல்லச் சிதைந்து வருகின்றது பண்டைய மரபு வழியில் கவிதை எழுதுபவர்கள் அருகிப் போய் விட்டார்கள் மரபுக்கவிதையின் அழகையும் சுவையையும் இன்றைய தமிழர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தி வைக்கும் முகமாக “எழில் பூக்கள்” என்ற கவிதை நூல் சிட்னியல் வெளிவந்திருந்தது.

 

காரை கவிஞர் த. நந்திவர்மன் அவர்கள் இந் நூலினை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அதன் மூலமாகக் கவிதை நயத்துடன் அறியப்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இதிலே இளைய சந்ததியினரையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் அவர்களுக்கும் தமிழ் கவிதைகளில் ஓர் ஈடுபாட்டையும் ஏற்படுத்திவருகிறார் நூலாசிரியர்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் சிவத்தமிழ் காவலர் திரு. ஆறுமுகம் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற “எழில் பூக்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா  மங்களவிக்கேற்றல், பிள்ளையார் வழிபாடு, தேவாரம், வரவேற்பு நடனம், ஆசியுரைகள், வரவேற்புரை, வாழ்த்துரைகள், ஆய்வுரைகள், இசைப்பாடல்கள், மதிப்பளிப்புக்கள் எனப் பல நிகழ்வுகள் மகிச்சிறப்பாக மேடையேற்றப்பட்டு இருந்தன.

 

நிகழ்ச்சிகளுக்கு நடுவே நூலாசிரியர் கவிஞர் த. நந்திவர்மன் அவர்கள் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினரும், சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முகநாதக்குருக்கள் அவர்களின் மாணவர்களுக்கான  கவிதை வரிகளுக்கான பாடல்களை மூன்று பிரிவாக இனிமையான குரலிலும், எளிமை மிகுந்த அமைதியாகவும், மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி  மாணவர்களுக்கு நினைவுச் சான்றிதழ்களும் வழங்கி  சிறப்பித்தார்கள் காரை கவிஞர் த. நந்திவர்மன் அவர்கள். இந் நிகழ்வு விருந்தினர்கள் எல்லோரையும் ஈர்ந்திருந்தது என்பது மிகையல்ல.

மாணவர்கள் திமையான முறையில் கவிதைப் பாடல்களை பாடுவதற்கு பயிற்சியளித்த சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினரும,; சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முகநாதக்குருக்கள் அவர்களுக்கு எமது சபையின் நன்றிகளும் பாராட்டுதல்களும். மிகச்சிறப்பாக கவிதை பாடிய மாணவர்களின் பெயர் விபரமும் நிகழ்வின் நிழற்படங்களை கீழே காணலாம்.

 

இல        கவிதை                  பெயர்

1. வணக்கஞ் சொல்வோம்  செல்வி பூமிசா துவியநாதன்

2. வாருங்கள் தமிழ் படிப்போம்   செல்வி விதுசியா துவியநாதன் , செல்வி சாருதிகா சிவநேசன்

3. கலைவாணி   செல்வி கர்ணிகா செல்வகுமாரன்

4. நம்பிக்கை வெல்லும்     செல்வன் ஜெய்சன் நவேந்திரகாந்தன்

5. ஊக்கம் உயர்த்தும்    செல்வன் அகிலாஸ் சிவகுமார் ,செல்வன் சுவேதன் ரவீந்திரன்

6. சுத்தத்தமிழ் பேசுவோம்    செல்வி சுஜேனி ரவீந்திரன் ,செல்வி சதுர்னா கிருபாகரன்

7.  நம்பிக்கை வேண்டும்      செல்வன் சஞ்சய் பாஸ்கரலிங்கம்

8. கல்வி கற்றிடு   செல்வன சாத்வீகன் சிவசண்முதநாதக்குருக்கள்

9. வள்ளுவ! நீ வாழ்க! செல்வி துர்க்கா செல்வகுமாரன்

10. அன்னையின் அன்பு  செல்வி விஷ்ணுகா செல்வகுமாரன்

11. எழுவாய் தமிழா!   செல்வி சுஜேனி ரவீந்திரன், செல்வி சதுர்னா கிருபாகரன்

12. கலைவாணி  செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன் ,செல்வி கஜலக்ஷி உருத்திரர்

13. காலம் பொன்  செல்வன் ஆர்வலன் சரவணப்பெருமாள்

14. வாருங்கள் தமிழ் படிப்போம்   செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன் , செல்வி கஜலக்ஷி உருத்திரர்

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

01.04.2018

 

 

 

 

 

‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் நிகழ்ச்சி நிரல்

எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் நிகழ்ச்சி நிரல்

சுவிஸ் நாட்டில்  சூரிச் மாநிலத்தில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் (31.03.2018) இல் நடைபெறுகின்ற ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினரும் சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முதநாதக்குருக்கள் அவர்கள் நூலின் ஆய்வுரையும், எமது சபையின் வாழ்த்துரையையும் வழங்கவுள்ளார்கள். அத்துடன் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின்  கவிதை வரிகளுக்கான பாடல்களும் இடம்பெறும்.

கவிஞர் பற்றிய சில குறிப்புக்கள் காரைநகர், இடைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் கொழும்பில் பிறந்து வளர்ந்து பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்விபயின்றவர். அவுஸ்ரேலியா சிட்னியில் வாழ்ந்துவரும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கியல்துறை முகாமையாளராகப் பணியாற்றி வருகின்றார்.

மரபுக் கவிதைகள் எழுவதில் வல்லவரான நந்திவர்மன் எங்கு பிறந்து வளர்ந்தாலும் வாழ்ந்தாலும் தன் தாய்,  தந்தையரின்  மண்ணாகிய காரை மண்ணை என்றும் மறவாமல் போற்றி எமது சபையால் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்ட காரைநிலா 2014 நூலிற்கு “ஊர் வெண்பா- காரைநகர் நேரிசை வெண்பா”  மரபுக் கவிதையை எழுதியுள்ளார்.

இவரின் தந்தை திரு.சோ.க.தம்பிப்பிள்ளை இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தவர். தாயார் திருமதி.சரசுவதி தம்பிப்பிள்ளை கொழும்பில் ஆசிரியையாகப் பணி புரிந்ததுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியரும், விழாக்குழுவினரும் இணைந்து வழங்கும் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் வாழ் காரை மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட கவிதைபாடும் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின்  பெயர்விபரம்.

இல கவிதை பெயர்
1. வணக்கஞ் சொல்வோம் செல்வி பூமிசா துவியநாதன்
2. வாருங்கள் தமிழ் படிப்போம் செல்வி விதுசியா துவியநாதன்
செல்வி சாருதிகா சிவநேசன்
3. கலைவாணி செல்வி கர்ணிகா செல்வகுமாரன்
4. நம்பிக்கை வெல்லும் செல்வன் ஜெய்சன் நவேந்திரகாந்தன்
5. ஊக்கம் உயர்த்தும் செல்வன் அகிலாஸ் சிவகுமார்
செல்வன் சுவேதன் ரவீந்திரன்
6. சுத்தத்தமிழ் பேசுவோம் செல்வி சுஜேனி ரவீந்திரன்
செல்வி சதுர்னா கிருபாகரன்
7. நம்பிக்கை வேண்டும் செல்வன் சஞ்சய் பாஸ்கரலிங்கம்
8. கல்வி கற்றிடு ! செல்வன் சாத்வீகன் சிவசண்முதநாதக்குருக்கள்
9. வள்ளுவ! நீ வாழ்க! செல்வி துர்க்கா செல்வகுமாரன்
10. அன்னையின் அன்பு செல்வி விஷ்ணுகா செல்வகுமாரன்
11. எழுவாய் தமிழா! செல்வி சுஜேனி ரவீந்திரன்
செல்வி சதுர்னா கிருபாகரன்
1.2கலைவாணி செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன்
செல்வி கஜலக்ஷி உருத்திரர்
13.காலம் பொன் செல்வன் ஆர்வலன் சரவணப்;பெருமாள்
14. வாருங்கள் தமிழ் படிப்போம் செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன்

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

30.03.2018

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காரை.கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதைகள் நூல், இறுவெட்டு ஆகியனவற்றின் அறிமுக விழா

தம்பிப்பிள்ளை .நந்திவர்மனின் எழில் பூக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா சுவிஸ் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 31.03.2018 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

த.நந்திவர்மனின் எழில் பூக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா சுவிஸ் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 31.03.2018 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

Ezhil Pookkal Notice 20.03.2018

ஐரோப்பாவில் எழில் பூக்கள் கவிதை நூல் அறிமுக விழா

ஐரோப்பாவில் எழில் பூக்கள் கவிதை நூல் அறிமுக விழா NAN-001 – A5 invite இலண்டன் Page 1 NAN-001 – A5 invite Swiss Page 1

யா/யாழ்ற்ரன் கல்லூரி அதிபரின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் அழைப்பிதழ்

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் மாதவி சிவலீலனின் இமைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் 11.11.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது!

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் மாதவி சிவலீலனின் இமைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் 11.11.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.


அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் மாதவி சிவலீலனின் இமைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் 11.11.2017 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது!