Category: பாடசாலைகள்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 08/02/2014 அன்று பி.ப. 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக தீவக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. இ.குணநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கல்விக் காருண்யன் திரு.E.ளS.P. நாகரத்தினம் அவர்களும், கௌரவ விருந்தினராக சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கி அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர் திரு. க. சிவகுமார் அவர்களும், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் சகிதம், கல்லூரிக் கொடியை ஏந்திய மாணவத் தலைவர் அணியினாலும், கல்லூரியின் BAND இசைக்குழுவினராலும் கல்லூரி முன்றலிலிருந்து விளையாட்டு மைதானம் வரை அழைத்து வரப்படும் காட்சி மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது.

 மங்கள விளக்கேற்றல், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இல்ல விளையாட்டுப் போட்டி பிற்பகல் 5.30 மணிக்கு இனிதே நிறைவேறியது. இடைவேளையின் போது நடைபெற்ற மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இறுதியாக அதிபர், விருந்தினர்கள் உரை நடைபெற்றது. அதிபர் தனது உரையில் மாணவர்களின் கல்விமட்டம் மிகவும் சிறப்பாக முன்னேறி வரும் அதேவேளை மாணவர்கள் விளையாட்டிலும் இன்னும் முன்னேற வேண்டி இருப்பதை எடுத்துக்கூறினார்.

 பிரதம விருந்தினர் தனது உரையில் விளையாட்டுப் போட்டிகள் நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு நடைப்பெற்றதாகவும் கல்லூரியின் BAND இசைக்குழு தேசிய பாடசாலையின் BAND இசைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்திருந்ததாகவும் வெகுவாகப் பாராட்டினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர் அதீத அக்கறை காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கௌரவ விருந்தினர் தனது உரையில் கல்லூரியின் முன்னேற்றத்தினை வெகுவாகப் பாராட்டினார். கல்லூரியின் பல பழைய, மூத்த மாணவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். பெரும் எண்ணிக்கையான பெற்றோர்களும், பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 அதிபர் தனது உரையில் ஞாபகார்த்தக் கேடயங்களையும், பரிசுப்பொருட்களையும் வழங்கிய பின்வருவோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 1. கந்தையா கணேசன் – வாரிவளவு, காரைநகர் (கனடா) வாரிவளவு நல்லியக்கச் சபை ஸ்தாபகர் அமரர். பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது

 2. வேலுப்பிள்ளை சிற்சபேசன் – சின்னாலடி காரைநகர் இவரது தந்தையாரும் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவருமான அமரர்.செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது

 3. ஆரம்பப்பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு பரிசுப்பொருள் வழங்கி உதவிய திரு.க.சிவநேசன் – கணேசன் டெக்ஸ்டைல்ஸ், யாழ்ப்பாணம் திரு. க. அருள்நேசன் – சிவகணேசன் டெக்ஸ்டைல்ஸ் யாழ்ப்பாணம்

 4. மயூரன் ஸ்டோர்ஸ், ஆலடி, காரைநகர்

 5. இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, காரைநகர்

 6. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பழைய மாணவர்

 7. விளையாட்டுப் பொருட்களை வழங்கிய திரு. S. ஸ்ரீவரதன்

                                        வெற்றி பெற்ற இல்லங்களின் நிலைகள் வருமாறு

 நாவலர் இல்லம் – 1ம் இடம்

 இராமநாதன் இல்லம் – 2ம் இடம்

 விபுலானந்தர் இல்லம் – 3ம் இடம்

யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2014

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி சென்ற புதன்கிழமை (பெப்.5.2014) அன்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 பிரதம விருந்தினராக காரைநகரில் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளைப் படைத்தவரும், வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.க.சத்தியபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

 சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.குணநாதன் அவர்களும், காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.ஏ.விஜயகுமார் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக யோகா ரான்ஸ்போட் உரிமையாளர் திரு.ந.யோகநாதன் அவர்களும், கிராம சேவையாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்களும், அலையன்ஸ் நிறுவன முகாமையாளர் திரு.கோ.சிறிவரதன் அவர்களும் கலந்து கொண்டனர்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில்; இன்றைய இவ்விளையாட்டு நிகழ்வானது பாடசாலையில் கற்கும் சகல மாணவர்களும் மைதானநிகழ்வுகளில பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் 100 வீதம் மாணவர்களும்; கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும் என்று கூறினார்.

 எமது பாடசாலை மாணவர்கள் கடந்த ஆண்டு வலயமட்டத்தில் பல விளையாட்டு சாதனைகளை தடகள நிகழ்வுகள், பெருவிளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்களில் பதிவாக்கி உள்ளனர், அவ்வகையில் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி சாமினி சிவராஐ; அவர்களுக்கு சிறப்புப் பாராட்டைத் தெரிவித்தார்.

 அத்துடன் இவ்வாண்டும் 20 மாணவர்கள் கோட்டமட்ட சதுரங்கப் பொட்டியில் பங்குபற்றி அதில் 10 மாணவர்கள் வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண:டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

 இன்றைய விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற நிதியனுசரணை வழங்கிய பயிரிக்கூடலைச் சேர்ந்த திரு.ஸ்ரீஸ்கந்தராஜா பாஸ்கர்(பிரான்ஸ்), இடைப்பிட்டியைச் சேர்ந்த திரு.சண்முகம் சிவஞானம், கொம்பாவோடை, களபூமியைச் சேர்ந்த திரு.கந்தையா ஆறுமுகம் ஆகியோருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

 மற்றும் இப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை திருமதி. சாமினி சிவராஜ் இடமாற்றம் பெற்றுச் செல்ல இருப்பதால் பொருத்தமான உடற்கல்வி ஆசிரியரைப் பெற்றுத்தருமாறு பிரதிக் கல்விப்பணிப்பாளர், வடமாகாணம், தீவகவலயம் ஆகியோரிடம் வேண்டிக் கொண்டார்.

 பாடசாலையில் ஒரு உள்ளக விளையாட்டு அரங்கம் இல்லாமல் இருப்பதனால் அதனை அமைப்பதற்கு பழைய மாணவர்கள், புலம்பெயர் பழைய மாணவர்கள் உதவியை இப்பாடசாலை வேண்டிநிற்கின்றது என்றும் தெரிவித்தார்.

 மேலும் தனது உரையில் பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளில் கல்லூரியின் பழையமாணவர் சங்கங்கள் புலம்பெயர் காரை அமைப்புகள், நலன்விரும்பிகள், கல்வித்திணைக்களத்தின் இணைப்பாடவிதான செயற்பாட்டு உதவிகள் என்பன பெரும் உதவிகளாக அமைந்தன. மேலும் பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுவதனால் அதனை நிவர்த்தி செய்ய மேற்கூறிய அமைப்புகளின் உதவியைப் பாடசாலை வேண்டி நிற்கின்றது என்றும் கூறினார்.

 பிரதமவிருந்தினர் திரு.க.சத்தியபாலன் அவர்கள் தனது உரையில், இவ்விளையாட்டுப்போட்டி தாம் எதிர்பார்த்ததிற்கு மேலாக மிகவும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது என்றும் பாடசாலை மாணவர்கள் 100 வீதம் கலந்துகொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சம் என்றும் கூறினார்.

 சிறப்புவிருந்தினர் திரு.இ.குணநாதன் தனது உரையில் இவ்விளையாட்டு நிகழ்வில் நேரமுகாமைத்துவம் சிறப்பாகப் பேணப்பட்டமையும் சுற்றாடல் முன்னோடிக்குழு, சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பியல்பாகும் எனக் குறிப்பிட்டார்.

 நான்கு இல்லங்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வில் இவ்வாண்டு சயம்பு இல்லம்( 569 புள்ளிகள்) முதலிடத்தையும், தியாகராசா இல்லம்( 545 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும் நடராசா இல்லம(441 புள்ளிகள்); மூன்றாம் இடத்தையும், பாரதி இல்லம்( 342 புள்ளிகள்) நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

 நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட அணிவகுப்பு அணிகளும் மற்றும் உடற்பயிற்சி அணியின் காட்சிப்படுத்தல் நகரப்பாடசாலையின் தரத்தையும் மிஞ்சியதாகக் காணப்பட்டதாகவும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

 நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.

யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2014

yarlton

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014

a b

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஓர் அங்கமாக வீதியோட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிலோட்ட நிகழ்வு இன்று (ஜன 26)ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

வீதியோட்டப் போட்டியை பாடசாலையின் பகுதித் தலைவர் தெ.லிங்கேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

 வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.

 முதலாமிடம் செல்வன் சி.கோகுலன் (தரம் 11 – தியாகராசா இல்லம்), இரண்டாம் இடம் செல்வன் அ.அஜந்தன் (தரம் 11- சயம்பு இல்லம்), மூன்றாம் இடம் செல்வன் பா.பிரசாந்தன் (தரம் 11 -தியாகராசா இல்லம்),நான்காம் இடம் செல்வன் கோ.அஜித்குமார் (தரம் 11 -நடராசா இல்லம் ) ஜந்தாம் இடம் செல்வன் பே.அலக்சன் (தரம் 10 -சயம்பு இல்லம்)

 பெண்களுக்கான சைக்கிலோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரம் வருமாறு

முதலாமிடம் செல்வி நா.விஜயகுமாரி (தரம் 11 பாரதி இல்லம்) இரண்டாம் இடம் செல்வி லோ.ஜோதிகா (தரம் 10 நடராசா இல்லம்) மூன்றாம் இடம் செல்வி செ.தேனுஜா (தரம் 11 பாரதி இல்லம்)

 வீதியோட்ட நிகழ்வையும்,வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிலோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,விளையாட்டுப் பொறுப்பாசிரியை ஆகியோருடன் நிற்பதனையும் படங்களில் காணலாம்.

 

 

 

 

 

யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு பாடசாலை கால்கோள் விழா

1ம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வான கால்கோள் விழா யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு பாடசாலையில் மிகவும் கோலாகலமாக 16.01.2014 வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக முன்னாள் ஆரம்பக்கல்வி சேவைக்கால கல்வி ஆலோசகர் திரு.ஆ.பலராமன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் கலைநிகழ்வுகளோடு இவ்விழா நிறைவு பெற்றது.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்-2013

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து ஆகஸ்ட் 2013 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
கலைப் பிரிவு
1.    சிதம்பரப்பிள்ளை சோபிகா A, 2B
2.    ஆனந்தா காங்கேயன் A, B, C
3.    குமாரசாமி மிதுனா A, B, C
4.    செல்வராசா கேசினி A, C, S
5.    பாலச்சந்திரன் வதனி A, C, S
6.    யோகராசா விம்சியா A, C, S
7.    முடிராசா சஜீவா 2B, C
8.    சிதம்பரநாதன் சுஜீவா 2B, C
9.    கிருஷ்ணமூர்த்தி சிவநிரஞ்சனா B, 2C
10.    பரமானந்தம் லோகவர்மா B, 2C
11.    நாகேந்திரம் நாகசிந்துஜா B, 2C
12.    ரவீந்திரன் ரஜீவன் B, 2C
13.    தர்சினி நவரட்ணம் B, 2C
வர்த்தகப் பிரிவு
1.    மகாலிங்கம் டிலக்ஷன்  B, C, S
2.    உமாசுகி தர்மலிங்கம் C, 2S
கணிதப் பிரிவு
1.    செல்வராசா கேஜினி C, 2S
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றவர்களில் 30 மாணவர்கள் கலைப்பிரிவுக்கும் 2 மாணவர்கள் வர்த்தகப் பிரிவுக்கும் 1 மாணவர் கணிதப் பிரிவுக்கும் தகமை பெற்றுள்ளனர். 
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு இவ்வாண்டு மொத்தமாக 51 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், மேலே குறிப்பிட்ட 16 மாணவர்கள் உட்பட மொத்தம் 33 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றுள்ளனர்.
அதாவது 65% சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டை விட 11 %சதவீதத்தினால் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

 

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் -20​13, யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை-2013 இல் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

1.கிரிஷா ராசநாயகம் – கலைப்பிரிவு 1A 1B 1C

2.தரங்கினி மகாதேவன் – கலைப்பிரிவு 2B 1C
3.ஆரணி திருச்செல்வம் – கலைப்பிரிவு 1A 1C 1S

4.கல்பனா விஜயரட்னம்  – கலைப்பிரிவு 1B 1C 1S

5.தயானி சிவசாமி – கலைப்பிரிவு 2C 1S

6.கவிதா கணேசன்  – கலைப்பிரிவு 3C
7.தர்சிகா செந்தில்வேல் – கலைப்பிரிவு 2C 1S

8.தயாளினி பரமநாதன் – கலைப்பிரிவு 2C 1S 

9.பிரிந்தா சிவபாலன் – வர்த்தகப்பிரிவு 1B 2C

மேற்படி பரீட்சைக்கு 17 மாணவர்கள் தோற்றி 9 பேர் பல்கலைகழக அனுமதிக்கு தகமை பெற்றுள்ளனர்.

எனினும் யாழ்ப்பாண மாவட்ட நிலையின்(Rank) பிரகாரம் பின்வரும் மாணவர்கள் இலங்கை பல்கலைகழக நுண்கலை பீடத்திற்கு அனுமதி பெறுவர். ஏனைய மாணவர்களின் பல்கலைகழக அனுமதி வெட்டுப்புள்ளி(Cut-off marks) வெளிவந்த பின்னரே உறுதிப்படுத்த்தப்படும்.
யாழ்ற்ரன் கல்லூரியில் கணித,விஞ்ஞான பிரிவிற்கு எவரும் தோற்றவில்லை.     

நுண்கலை பீடத்திற்கு அனுமதி பெரும் மாணவர்கள்

1.கிரிஷா ராசநாயகம்
2.தரங்கினி மகாதேவன்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இப்பொதுக் கூட்டத்திற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உட்பட்ட சுமார் ஐம்பது வரையான பழைய மாணவர்கள் சமூகமளித்திருந்தனர்.
நிர்வாக உறுப்பினர் திரு.க.நாகராசா அவர்களின் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து, கல்லூரியுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணி கல்லூரி வளர்ச்சிப் பணிகளில் உறுதுணையாக இருந்து இந்த ஆண்டு எம்மை விட்டுப்பிரிந்த அமரர். கலாநிதி.ச.சபாரட்ணம், அமரர்.சி.தம்பிராஜா (மாஸ்டர்) ஆகியோருக்கும் ஏனையோருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கப்பட்டது.
பொதுச் சபையில் சமூகமளித்த அனைவருக்கும் அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பவை அடங்கிய பிரதி நூல் வடிவில் வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திய கல்லூரி அதிபரும் சங்கத் தலைவருமான திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைவர் அறிக்கையினை வாசித்தளித்திருந்தார்.
செயலாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்ளினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டு அறிக்கை,  பொருளாளர் திரு.பா.இராமகிருஷ்ணன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாளர் அறிக்கையும் சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்து 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பதவி வழியாக கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைவராக இருப்பார்.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு:
தலைவர்: திருமதி.வாசுகி தவபாலன் (அதிபர்)
உப-தலைவர்: பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை(ஓய்வு நிலை அதிபர்)
செயலாளர்: திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் (தபாலதிபர்)
உப-செயலாளர்: திரு.சண்முகம் சுகந்தன்
பொருளாளர்: திரு.சுந்தரலிங்கம் அகிலன்
உப-பொருளாளர்: திரு.செல்வரத்தினம் அருட்செல்வம்(ஆசிரியர்)

நிர்வாக சபை உறுப்பினர்கள்:
1. திரு.நல்லதம்பி யோகநாதன் (யோகா ரான்ஸ்போட் உரிமையாளர்)
2. திரு.கயிலாபிள்ளை நாகராசா (ஊர்காவற்றுறை நீதிமன்ற அலுவலர்)
3. திரு.வேலாயுதம் ஆனைமுகன் (காரைநகர் பிரதேச சபைத் தலைவர்)
4. செல்வி விமலாதேவி விஸ்வநாதன் (அதிபர் வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை)
5. திரு.குகனேசசர்மா சரவணபவானந்தசர்மா (ஆசிரியர்)
6. திரு.சிவராசா பகீரதன்

உள்ளகக் கணக்காய்வாளர்: திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன்

2011 பொதுக் கூட்டத்தில் பதிதாக உருவாக்கப்பட்ட பதவியணியாகிய போசகர் பதவிக்கு மீண்டும் கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய நிர்வாக சபைத் தெரிவினைத் தொடர்ந்து தலைவர் திருமதி.வாசுகி தவபாலன் தமது உரையில் புதிய நிர்வாகத்தை வரவேற்பதுடன் பழைய நிர்வாகத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்து பழைய மாணவர்கள் ஒரு பாடசாலையில் மதிப்பிடமுடியாத சொத்துகள் எனவும் நாம் தற்போதய கல்விச் செயற்பாட்டில் பாரிய சமூகச் சவால்களைக் குறுகிய காலத்தில் எதிர்நோக்க வேண்டி இருந்ததாகவும், பழைய மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்திற்க ஒத்துழைப்பு வழங்குவதுடன் மாணவர் சமூகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பெரும் பொறுப்பும் பழைய மாணவர்களுக்கு உரியது எனவும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் கூட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறி தனது உரையினை நிறைவு செய்து சபையோர் கருத்துத் தெரிவிக்குமாறு கூறினார்.
பொதுச் சபை உறுப்பினர்கள் திரு.தம்பிப்பிள்ளை சற்குணராசா, காரைநகர் இ.போ.ச.சாலை முன்னாள் முகாமையாளர் திரு.மு.ஊ. கந்தசாமி, ஓய்வுநிலை அதிபர் திரு.க.தில்லையம்பலம், கலாநிதி.திருமதி.வீரமங்கை யோகரட்ணம், லண்டன் காரை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ப.தவராசா, பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, காரைநகர் பிரதேச சபைத் தலைவர் திரு.வே.ஆனைமுகன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ப.தவராசா உரையாற்றும்போது தமது சங்கத்தின் ஆதரவு தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சிப்பாதைக்கு உறுதுணையாக அமையும் என்று உறுதியளித்தார்.
பாடசாலையின் பெயர் மாற்நம் தொடர்பாக திரு.தம்பிப்பிள்ளை சற்குணராசா காரைநகர் இந்துக்கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிய திரு.சபாநடேசன் சிவரூபன் வழிமொழிந்தார். திரு.மு.ஊ.கந்தசாமி பாடசாலையின் கல்வி முன்னேற்றம்தான் தேவை என்றும் பெயர்மாற்றப் பிரேரணையைத் தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தியாகராசா இந்துக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யலாம் எனக் கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து திரு.வேலாயுதம் ஆனைமுகன் கருத்துத் தெரிவிக்கையில் பொது மக்களின் கருத்துகளையும் கேட்டு பெயர்மாற்றம் செய்யப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் சபையினரின் கருத்துகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போது பெயர்மாற்றம் தொடர்பாக பொதுமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் முடிவிற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கலாம் என்று கூறினார். இது தொடர்பாக இன்னொரு பொதுக் கூட்டத்தைக் கூடி ஆராயலாம் என சபையோர் கேட்டுக் கொண்டமைக்கு, அதிபர் இணக்கம்; தெரிவித்தமையைத் தொடர்ந்து புதிய செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசனின் நன்றியுரையுடன் இந்தப் பொதுக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 

 

 

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழையமாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழையமாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் 21-DEC-2013 சனிக்கிழமை பிற்பகல் 2.00மணிக்கு நடைபெற உள்ளது.

பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெற உள்ளது.பழைய மாணவர்களை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு செயலாளர் இ.திருப்புகழுர்சிங்கம் கேட்டுள்ளார்.

பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – 2013 யா/கலாநிதி.ஆ.தியாகராசா.மத்திய.ம.ம.வித்தியாலயம்

பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – 2013
யா/கலாநிதி.ஆ.தியாகராசா.மத்திய.ம.ம.வித்தியாலயம்
(காரைநகர் இந்துக் கல்லூரி)

தலைவர் :-திருமதி.வா.தவபாலன் (அதிபர்)
காலம்   :- 21.12.2013 பி.ப 2.00மணி
இடம்    :- கல்லூரி மண்டபம்

யா/கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் மேலே குறிப்பிட்டவாறு  நடைபெறவுள்ளது. கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

                                                                                நன்றி

திருமதி.வா.தவபாலன்                                                                                     திரு.இ.திருப்புகலூர்சிங்கம்
     தலைவர்                                                                                                                                   செயலாளர்                   
         


 

யா/யாழ்ற்ரன் கல்லூரி – காரைநகர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா


          யா/யாழ்ற்ரன் கல்லூரி – காரைநகர்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்
சித்திபெற்ற மாணவர்களுக்கான

                                   பாராட்டு விழா  
காலம் : 04.12.2013 புதன்கிழமை மு.ப 8.30 மணி
இடம் : கல்லூரி பிரதான மண்டபம்
தலைவர் : திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் (அதிபர்)
பிரதம விருந்தினர்
   திரு. வி.தனிநாயகம் அவர்கள்
ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர்தீவக வலயம்
சிறப்பு விருந்தினர்
திரு.சிவா.தி.மகேசன் அவர்கள்
தலைவர்,காரைஅபிவிருத்திச்சபை காரைநகர்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

      அதிபர்,ஆசிரியர்கள்,
மாணவர்கள்,கல்விசாரா ஊழியர்கள்                                                                                                                                                     யாழ்ற்ரன் கல்லூரி
 காரைநகர்.

பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச்செயற்றிட்டம்.

பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச்செயற்றிட்டம்.
தீவக வலயத்திற்கான பாடசாலை சுகாதார மேம்பாட்டுச் செயற்றிட்டம் (2013)
2013/10/25 ம் திகதி காலை 8.30 மணிக்கு தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன் குயின்ரஸ் அவர்களின் தலைமையில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.
பிரதமவிருந்தினராக வட மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இராசேந்திரம் அவர்களும் சிறப்பு  விருந்தினராக காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தேவநந்தினி பாபு அவர்களும் பிரதேச வைத்திய பொது அதிகாரி திருமதி ஜான்சி ஆனந்தராயா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
1.      சிகிச்சை முகாம்கள்
2.      கண்காட்சிகள்
3.      பாடசாலை மாதிரி சிற்றுண்டிச்சாலை
4.      கலைநிகழ்ச்சிகள்
என்றவாறு மிகச்சிறப்பான முறையில் முகாம் நடைபெற்றது.தீவக வலயத்திற்கான இச்சுகாதார மேம்பாட்டு முகாமினை நல்ல முறையில் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திய தீவக வலயத்தின் கல்விப்பணிப்பாளர் மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரி வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் தனது பாராட்டுக்களைத்தெரிவித்திருந்தார்.

DSC06521 DSC06526 DSC06536 DSC06541

யாழ்ற்ரன் கல்லூரி சாரண மாணவர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ற்ரன் கல்லூரி சாரண மாணவர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

 

யாழ்ற்ரன் கல்லூரி சாரண இயக்கத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் தங்களின் அடுத்த தரமான மாவட்ட ஆணையாளர் விருதினைப் ( District Commissioner code) பெற்றுள்ளனர். இவர்கள் இன்னும் சிறிது காலத்தில் ஜனாதிபதி விருதினைப்பெறத் தகைமை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆணையாளர் விருது பெற்ற சாரணர்களுக்கும்; நெறிப்படுத்திய சாரண ஆசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்.

 

நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்ட யாழ்ற்ரன் கல்லூரியின் சாரண இயக்கம் புதிய உத்வேகம் கொண்டு வருவது மட்டுமன்றி காரைநகரில் உள்ள பல ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களிலும் பொது நிறுவனங்களிலும் தமது சேவையைச் செய்து பாராட்டைப்பெற்றுள்ளனர். குறிப்பாக காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவத்தின் போது மாணிக்கவாசகர் மடாலயத்தில் நடைபெறும் அன்னதானப் பணிகளில் இவர்களின் சேவை அவ் அன்னதான சபையினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மாவட்ட ஆணையாளர் விருது பெற்ற சாரணர்கள்

 

1.   செல்வன்.க.கஜந்தன்

2.   செல்வன்.வி.தர்ஷன்

3.   செல்வன்.சி.சசிதரன்

4.   செல்வன்.பொ.ஜெயக்குமார்

5.   செல்வன்.சி.நவநீதன்

6.   செல்வன்.சி.ராகுலன்

7.   செல்வன்.க.காண்டீபன்

8.   செல்வன்.செ.நிறோசன்

9.   செல்வன்.ச.திருக்குமரன்

விஞ்ஞான நாடகப்போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம் பெற்றது.

விஞ்ஞான நாடகப்போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம் பெற்றது.
உலக விஞ்ஞான தினம் 2013 இனை முன்னிட்டு இலங்கைத்தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான நாடகப்போட்டியில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் வடமாகாணத்திலே முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

வாழ்வும் சுகாதாரமும் என்ற இத்தலைப்பிலான இந்நாடகம் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி கடந்த வாரம் கொழும்பு மருதானை மகாபோதி மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றினர். இந்நாடகத்தில் கலந்து கொண்ட மாணவிகளையும் நாடகத்தை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திரு.பா.பாலமுரளி திரு.கு.பிரதீபன் செல்வி.யோ.விம்சிகா ஆகியோரைக் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார்.

இவ் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் தேசிய மட்ட நிகழ்வுகளில் கொழும்பில் இரண்டாவது தடவையும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொழும்பு சுயாதீன நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொண்டமையையும் இவ் இணையத்தளத்தில் தெரிவித்திருந்தோம்.

கடந்த 2012ம் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் மூன்று நிகழ்வுகளில்; கலந்து கொண்டமையை இவ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

 

நாடகத்தில் பங்கு பற்றிய மாணவிகள்

 

1.   செல்வி. த. திருமகள்

2.   செல்வி.ம.நவநிலா

3.   செல்வி.மோ.கிர்ஷிகா

4.   செல்வி.ச.ரோகிணி

5.   செல்வி.செ.கமலேஸ்வரி

6.   செல்வி.பா.கவிதா

7.   செல்வி.வி.வேதாரணி

8.   செல்வி.கு.கோபிதா

பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச் செயற்திட்டம் யாழ்ற்ரன் கல்லூரியில்

வடமாகாணக் கல்வி,சுகாதார அமைச்சுக்களுடன் தீவக வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச் செயற்திட்டம் 25.10.2013 வெள்ளிக்கிழமை கலை 8.30 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஆ.இராசேந்திரனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு,ஊர்காவற்றுறை பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ஜான்சி ஆனந்தராசா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சுகாதார மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு அறிமுகம்,மருத்துவ முகாம்,காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள்,மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இச்செயற்றிட்டத்தில் இடம்பெற உள்ளது.  
                

யாழ்ற்ரன் கல்லூரி ஆசிரியை செல்வி சுபத்திராதேவி இராஜசிங்கம் அவர்கள் இலங்கை குடியரசின் கல்வி அமைச்சினால் சிறந்த ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

DSC00086காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆசிரியை செல்வி சுபத்திராதேவி இராஜசிங்கம் அவர்கள் இலங்கை குடியரசின் கல்வி அமைச்சினால் சிறந்த ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரைக் கௌரவித்து இதற்கான விருதும் சான்றிதழும் 2013.10.05 ம் திகதி சனிக்கிழமை மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் இலங்கைக் குடியரசின் பிரதம மந்திரி கௌரவ தி.மு.ஜயரத்ன அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருது வழங்கும் விழாவில் கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

ஆசிரியர் செல்வி.சுபத்திராதேவி இராஜசிங்கம் அவர்கள் மேலும் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற யாழ்ற்ரன் கல்லூரிச்சமூகம் வாழ்த்துகின்றது. (ஆசிரியை காரைநகர் சந்தம்புளியடியைச்சேர்ந்த காலம் சென்ற ஆசிரியர் இராஜசிங்கம் தம்பதிகளின் புதல்வி ஆவார்) மேற்படி ஆசிரியை யாழ்ற்ரன் கல்லூரியில் 09.10.2013 ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பொன்னாடை போர்த்திக் கல்லூரிச் சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

 

DSC00085

DSC00086 

 

DSC00087DSC00088

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 2013

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் 2013 ம் ஆண்டின் புதிய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 2013.09.25 ம் திகதி கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு.செ.இராமுப்பிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற அரசாங்க அச்சக அலுவலர் திரு.அ.யோகேந்திரா அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய உப அதிபர் திருமதி க.லிங்கேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிரேஸ்ட மாணவ தலைவன் செல்வன் இ.தனுசாந்திற்கான சிரேஷ்ட மாணவ தலைவர் சின்னத்தை கல்லூரி அதிபர் அவர்கள் சூட்டினார். செல்வி.ப.கணேஸ்குமாரிக்கு சிரேஷ்ட மாணவ தலைவிக்கான சின்னத்தை கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியரும் ஆரம்பப் பிரிவுத்தலைவருமான செல்வி.ந.சகுந்தலாதேவி அவர்கள் சூட்டினார்;. தொடர்ந்து பிரதம விருந்தினர் ,சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர் ,சிரேஷ்ட ஆசிரியர்களும் மாணவ தலைவருக்கான சின்னத்தை சூட்டினார்கள்

இவற்றுக்கு முன்னதாக கல்லூரி அதிபரினதும் விருந்தினர்களினதும் உரை இடம்பெற்றது. மாணவ முதல்வர் சபையின் பொறுப்பாசிரியர் திரு.ந.கிருஷ்ணபவன்; அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.

DSC00129

DSC00130

DSC00131DSC00132DSC00133DSC00134

தீவக வலய மட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான திருக்குறள் மனனப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி பல்வேறு இடங்களைப் பெற்றுக்கொண்டது.

தரம்    மாணவர் பெயர்                   நிலை 
    1       பிரபாகரன் தனுசினி                2
    2       லிங்கராசன் சர்ண்யா              3
    3       ஜெயக்குமார் புவியரசன்        1
    4       பிரபாகரன் தேந்தினி               1
 
துரித கணிதச்  செய்கைப் போட்டியில் தரம் 5 வகுப்பைச் சேர்ந்த தியாகராசா சசிகரன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். முதலாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் மூவரும் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி உள்ளனர். இம்மாணவர்களையும் இம்மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அதிபர் பாராட்டுகிறார்.