Tag: காரைச் செய்திகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் விழா -2017

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழா வைபவம்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5

புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின்

கௌரவிப்பு விழா வைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கட்கான கௌரவிப்பு வைபவம் 17-11-2017 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் பிரதேச செயலாளர் திரு.E.தயாரூபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.P.புவனேந்திரராஜா அவர்களும், தீவகக்கல்வி வலய விசேட கல்விக்கான சேவைக்கால ஆலோசகர் திரு.S.மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர், விருந்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர் கல்லூரி மாணவத் தலைவர்கள் அணி, பாண்ட் இசை குழுவினர், தமிழ் பாரம்பரிய இசை நடன குழுவினரால் அழைத்து வரப்பட்டமை மிகவும் தனித்துவம் மிக்கதாகக் காணப்பட்டது.

பிரதம விருந்தினரால் தேசியக்கொடியும் கல்லூரி அதிபரால் கல்லூரிக் கொடியும், பாண்ட் வாத்தியம் முழங்க, சங்குநாதம் ஒலிக்க, மாணவர்களின் பலத்த கரகோசங்களின் மத்தியில் மரியாதை பூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டு விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கடவுள் வணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன நிகழ்வில் ஆரம்ப நிகழ்வுகளாக இருந்தன.

அதிபரின் தலைமையுரை

அதிபர் தனது தலைமை உரையில் தான் 08-12-2017 உடன் ஓய்வு பெறுவதால் தனது 40 வருட கால பாடசாலை கல்லூரியின் சேவையில் இறுதியாக நடைபெறும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு என்ற பிடிகையுடன் உரையை ஆரம்பித்தார்.

கல்லூரி மீதான சமூகத்தின் மதிப்பு ஏற்படுவது மாணவர்களின் பெற்றோர்களினால் ஆகும். எமது கல்லூரி தேசிய பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மை பெறுபேறுகளாக இருப்பதை அதிபர் சுட்டிக் காட்டினார். 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவக வலயத்தில் அதிகூடிய மாணவர் எண்ணிக்கை மாணவர்கள் சித்தி அடைந்த பாடசாலை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12 மாணவர் சித்தி அடைந்து கல்லூரி தீவகவலயத்தில் 1ஆம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டமையும் அதிபர் நினைவு கூர்ந்தார். இந்தளவு வெற்றிக்கும் காரணகர்த்தாவாக விளங்குபவர் எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியப் பெருந்தகை திரு.மு.சுகந்தன் அவர்கள் என மிகவும் உணர்வு பூர்வமாக அதிபர் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார். 2011-2017 காலப்பகுதியில் கல்லூரியில் 47 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியில் தேசிய பரீட்சைப் பெறுபேறுகள் முன்னிலையில் இருப்பதை அதிபர் குறிப்பிட்டார்.

மாணவர் ஆசிரியரின் விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து சித்தியடைந்த மாணவர்கட்கு பெறுமதி மிக்க நினைவுப் பட்டயம் பிரதம விருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களுக்கு சித்தி அடைந்த மாணவர்களின் பெற்றோர்களால் மனமுவந்து அளிகக்கப்பட்ட தங்கப்பதக்கத்தினை துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். மேலும் ஆசிரியர் சுகந்தன் அவர்கட்கு கல்லூரிச் சமூகத்தினர் சார்பாக நினைவுப்பட்டயம், மற்றும் கடந்த காலங்களில் கற்ற மாணவர்களால் வழங்கப்பட்ட வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக அதிபர் தனது உரையில் தான் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இக்கௌரவிப்பு நிகழ்வினை காரைநகர் வாரிவளவு (தேர்க்கார) கந்தையா கணேசன் (கனடா) அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றது. அவர் சிவபதம் அடைந்த பின்னர் அவரது பிள்ளைகளினால் தொடர்ந்து அனுசரணை வழங்கிக் கொண்டு வருகிறார்கள். இதனால் ‘அமரர் கந்தையா கணேசன் ஞாபகார்த்த பாராட்டு வைபவம்’ என ஆக்கப்பட்டது. எனவே இந்நிகழ்வுகளுக்கு அனுசரணையாளர்களாக இருக்கும் அமரர் கந்தையா கணேசன் அவர்களின் பின்ளைக்கு அதிபர் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.

ஆசிரியர் திரு மு.சுகந்தன் அவர்களின் தனது ஏற்புரையில் அதிபர் எவ்விடயத்திலும் மிகுந்த அக்கறையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். மாணவர் கல்வி அடைவு மட்டத்தினை உயர்த்துவதில் தானும் பாடுபட்டு ஆசிரியர்களை அதிபர் பாடுபட வைப்பார். பல விடயங்களில் தன்னை ஊக்கபடுத்தி இவ் வெற்றியின் பங்குதாரர்களில் அதிபரும் குறிப்பிடத்தக்கவர். மேலும் தனக்கு தரப்பட்ட கௌரவிப்பிற்காக தனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்தார். அவரிடம் கல்வி கற்று சித்தியடைந்த மாணவர் எல்லோரும் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பாராட்டுப்பத்திரம், பரிசுகள் வழங்கி தமது நன்றி உணர்வினை வெளிப்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிது நிறைவேறியது.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட / வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்

Scan_circular re mtgs – 24-11-17

காரைநகரில் பனைவளவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

காரைநகரில் பனைவளவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சென்ற கிழமை பிரதேச செயலகர் திரு தயாரூபன் அவர்களால் அரம்பிக்கப்பட்ட பனை விதைகள் நடும பணியினைத் தெடர்ந்து காரைநகர் அபிவிருத்திச்சபையும் தன் பங்கினை வழங்கியுள்ளது. எமது உபசெயலாளர்/பிரதி செயலாளர் திரு நாகராஜா அவர்களின் விடாமுயற்சியினால் (19.11.2017, ஞாயிற்றுக்கிழமை) அவரால் அழைத்துவரப்பட்டவர்கள் சுமார் பிரதேச செயலகர் நட்டு முடித்த இடத்திலிருந்து தீர்த்தக் கரையோரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட விதைகளை நட்டனர். திரு நாகராசா அவர்களுடன் ஒத்துழைத்தவர்களில் சிவகௌரி ஜனசமூக நிலையத் தலைவர் திரு சிவபாலன் அவர்களை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும் அவரும் அவருடன் சேர்நத மூன்று அன்பர்களும் காலை 7.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணி வரை எடுத்த காரியத்தினை நிறைவுற்றி முடித்தனர். திரு சிவபாலன் அவர்களுக்கும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய மற்றையோருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் இக்குழுவினரை ஒன்றிணைத்து வழிநடத்தியதுடன் உடனிருந்து பணியினை நிறைவேற்றிய திரு நாகராஜா அவரகளது கடமையுணர்வினை மெச்சிப் பாராட்டாமல் இருக்க முடியாது. காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொருளாளர் பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்கள் முதல் விதையினை நட்டுப் பணியினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் காரைநகர் அபிவிருத்திச்சபையின் நிரவாக உறுப்பினர் திரு செந்தூரன் அவர்களும் முன்னாள் நிர்வாக உறுப்பினர் திரு வேலுப்பிள்ளை சபாலிங்கம் அவர்களும் அவரது பாரியாரும் இப்பணியில் பங்கு பற்றினர். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பனைவளம் மீண்டும் தளைத்தோங்க காரைநகரிலுள்ள பிற அமைப்புக்களையும் முன்வருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். வீட்டுத் திட்டங்களின் கீழ் அமைக்கும் கட்டிடங்கள் மற்றும் அத்தியாவசமான தேவைகளுக்காகப்பனைகளைத் தறிப்பது தவிர்க்க முடியாததாகும். அதேவேளையில் வருடாவருடம் விதைகளை நட்டு எமது பலவித தேவைகளைப் பூர்த்தி செய்யும் கற்பகதருக்கள் முற்றிலும் அழியாமல் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.

அன்புடன்
சிவா தி மகேசன்.

 

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 22/11/2017 புதன்கிழமை அன்று இடம்பெற்ற சதுர்த்தி பகல் அபிஷேகமும் இரவு வசந்த மண்டப பூசை நிகழ்வுகளும்!

காரைநகர் தொழிற் பயிற்சி நிலையம்

காரைநகர் தொழிற் பயிற்சி நிலையம்

நன்றி IBC Tamil TV

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17/11/2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கார்த்திகை தமிழ் மாதப்பிறப்பு பூஜை நிகழ்வுகள்!

அமெரிக்கா Boston நகரத்தில் வசிக்கும் சிவகாமி அம்மன் வீதியை சேர்ந்த திரு.தர்மலிங்கம் விக்கினேஸ்வரன் குடும்பத்தினரின் நிதி ஆதரவில் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட மதிப்பளித்தல் நிகழ்வும் ஊக்குவிப்பு வைபவமும் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

அமெரிக்கா Boston நகரத்தில் வசிக்கும் சிவகாமி அம்மன் வீதியை சேர்ந்த திரு.தர்மலிங்கம் விக்கினேஸ்வரன் குடும்பத்தினரின் நிதி ஆதரவில் காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் அனைத்திலும் கல்வி பயிலும் தரம் 4, தரம் 5ம் வகுப்பு மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் ஊக்குவிக்கும் முகமாகவும், இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் இரண்டும் பாடங்களிலும் மொத்தம் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி ஊக்குவிப்பும், புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தியடைந்த 20 காரைநகரை சேர்ந்த மாணவர்களிற்கு தலா 3,000 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

1958.03.01 இல் ஆரம்பிக்கப்பட்டு இற்றைவரை சிறப்புற சமூகப்பணியாற்றிவரும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சனசமூக நிலலையத்தினரால் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நிலைய தலைவர் திரு.க.விஜயகாந் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுகளிற்கு முதன்மை அதிதியாக காரை கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.அ.குமரேசமூர்த்தி அவர்களும், சிறப்பு அதிதிகளாக கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம், யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, காரை மத்தி கிராம அலுவலர் செல்வி மு.அருந்தசா, ஒளி அரசி சஞ்சிகை துணை ஆசிரியர் திருமதி சூரியகுமாரி சிவரூபன், மன்றத்தின் ஆதரவாளர் திரு.தி.பிரபாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுகளை சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலய பிரதம ஆலய குரு மங்களேஸ்வரக்குருக்கள் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

2017ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயின்று வெட்டுப்புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தியடைந்த 18 மாணவர்கள் மற்றும் அயல்கிராம பாடசாலைகளில் கல்வி கற்று சித்தியடைந்த மேலும் 2 மாணவர்கள் உட்பட 20 மாணவர்களிற்கு தலா 3,000 ரூபா ரொக்க பணமும் தலா ஒரு மாணவருக்கு 250 ரூபாய்கள் மதிப்புள்ள கற்றல் உபகரணங்களும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

அத்துடன் காரைநகர் அனைத்து பாடசாலைகளிலும் அடுத்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளிற்கு தயாராகும் தரம் 4 இல் கல்வி கற்கும் மொத்தம் 161 மாணவர்களுக்கும் தலா 390 ரூபாய்கள் மதிப்புள்ள கற்றல் உபகரங்கள், பரீட்சை வழிகாட்டி புத்தகங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

அத்துடன் வருடந்தோறும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார் செய்யும் நோக்குடன் வருடந்தோறும் தரம் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்களிற்கு தலா 70 ரூபாய்கள் மதிப்புள்ள மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய அறிவு பொது அறிவு வளர்க்கும் மாணவர் புத்தகங்கள் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளதாக அனுசரணையாளர் திரு.விக்கினேஸ்வரன் தர்மலிங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் மாதாந்தம் வெளியாகும் ‘ஒளி அரசி’ குடும்ப சஞ்சிகை இதழ் வழங்கப்பட்டது, இம்மாத இதழானது பாடசாலை சிறுவர்களின் பொது அறிவினை வளர்க்கும் நோக்குடன் வெளிவருவதுடன் பரீட்சை கருத்தரங்குகள் மாதிரி வினாத்தாள்களை கொண்டும் மாதாந்தம் வெளிவருகின்றது. இத்திட்டத்திற்கு இச்சஞ்சிகை சார்பாக ஊடக அனுசரணை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளிற்கு பெற்றோர்கள், நிலைய நலன்விரும்பிகள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்து விழாவினை சிறப்படைய வைத்ததுடன் இந்நிகழ்விற்கு நிதி முழுமையான நிதி அனுசரணை வழங்கி இந்நிகழ்வினை நடாத்துவதற்கு உதவி புரிந்த அமெரிக்கா பொஸ்ரன் நகரில் வதியும் சிவகாமி அம்மன் வீதியை சேர்ந்த திரு.விக்கினேஸ்வரன் தர்மலிங்கம் குடும்பத்தினரை வாழ்த்தியதுடன் இந்நிகழ்வினை சிறப்புற ஒழுங்கமைப்பு செய்த சேவையாளர்களையும் வாழத்திச்சென்றனர்.
இந்நிகழ்வு மூலம் பயனடைந்த பாடசாலைகள் மாணவர்கள் விபரம் வருமாறு:

2017 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 20 பேர்களிற்கு தலா 3,000 ரூபாய்கள் பணப்பரிசுடன் 350 ரூபாய்கள் பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1. யாழ்ற்ரன் கல்லூரி 8 மாணவர்கள்
2. வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை 6 மாணவர்கள்
3. சுப்பிரமணியம் வித்தியாசாலை 1 மாணவர்
4. ஊரி அ.மி.த.க.பாடசாலை 2 மாணவர்கள்
5. மெய்கண்டான் வித்தியாலயம் 1 மாணவர்
6. காரை மத்தியை சேர்ந்த அயலூர் பாடசாலை மாணவர்கள் 2

அத்துடன் 2017ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்ற 100 மாணவர்களுக்கு தலா 250 ரூபாய்கள் மதிப்புள்ள கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1. யாழ்ற்ரன் கல்லூரி 19 மாணவர்கள்
2. சுப்பிரமணியம் வித்தியாசாலை 17 மாணவர்கள்
3. மெய்கண்டான் வித்தியாசாலை 8 மாணவர்கள்
4. வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை 13 மாணவர்கள்
5. ஊரி அ.மி.த.க.பாடசாலை 16 மாணவர்கள்
6. தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம் 9 மாணவர்கள்
7. வியாவில் சைவ வித்தியாலயம் 1 மாணவர்
8. வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை 10 மாணவர்கள்
9. வேரப்பிட்டி கணேசா வித்தியாசாலை 6 மாணவர்கள்
10. பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை 1 மாணவர்

அடுத்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் தரம் 4 மாணவர்கள் மொத்தம் 161 பேர்களிற்கு தலா 390 ரூபாய்கள் பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

1. யாழ்ற்ரன் கல்லூரி 30 மாணவர்கள்
2. சுப்பிரமணியம் வித்தியாசாலை 17 மாணவர்கள்
3. ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயம் 10 மாணவர்கள்
4. மெய்கண்டான் வித்தியாலயம் 08 மாணவர்கள்
5. வலந்தல தெற்கு அ.மி.த.க.பாடசாலை 21 மாணவர்கள்
6. வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை 14 மாணவர்கள்
7. ஊரி அ.மி.த.க.பாடசாலை 22 மாணவர்கள்
8. தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம் 8 மாணவர்கள்
9. சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் 8 மாணவர்கள்
10. வியாவில் சைவவித்தியாலயம் 5 மாணவர்கள்
11. பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை 3 மாணவர்கள்
12. வேரப்பிட்டி கணேசா வித்தியாலயம் 15 மாணவர்கள்

 

மேலும் ஒவ்வொரு மாதமும் ‘ஒளி அரசி’ மாதாந்த குடும்ப சஞ்சிகை காரைநகரில் உள்ள அனைத்து சனசமூக நிலையங்கள் மற்றும் நூல் நிலையங்கள் உட்பட 20 இடங்களிற்கு மாதாந்தம் வழங்குவுதற்கும் அனுசரணையாளர் ஏற்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் இளைஞர் சமுதாயத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தோழமை அறக்கட்டளையின் ஆரம்ப வைபவமாக 2017 ஆம் ஆண்டிற்கான தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது.

காரைநகர் இளைஞர் சமுதாயத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தோழமை அறக்கட்டளையின் ஆரம்ப வைபவமாக 2017 ஆம் ஆண்டிற்கான தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழகத்தின் கணித புள்ளிவிபரவியல் பேராசிரியரும் தகவல் தொழிநுட்பவியல் பீடாதிபதியுமான சிவகொழுந்து சிறி சற்குணராசா கலந்து சிறப்பித்தார்.

காரைநகர் தங்கோடை புளியங்குளம் திருவருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 09.11.2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்வுகள்!

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

‘குரு பிரதீபாபிரபா’ என அழைக்கப்படுகின்ற நல்லாசிரியர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தெரிவில் காரை இந்துவில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.சண்முகம் அரவிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு மேற்குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றதுடன் தாம் பணியாற்றிவருகின்ற காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையை சேர்த்துக்கொண்டவராக விளங்குகின்றார்.

பாடவிதானம், இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் ஆசிரியரது செயற்பாடுகள் மற்றும் வரவு இஒழுக்கம் ஆகியன உள்ளிட்ட பல விடயங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வலய மட்டத்தில் முதற்கட்டத் தெரிவுகள் இடம்பெற்றதுடன் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாகாண மட்டத்திலான இறுதித் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் 28-10-2017இல் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது திரு.அரவிந்தனுக்கான நல்லாசிரியர் விருது (குரு பிரதீபாபிரபா) வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு திரு.சண்முகம் அரவிந்தன் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அயற்கிராமமான மூளாயைச் சேர்ந்த திரு.சண்முகம் அரவிந்தன் விஞ்ஞானப் பட்டதாரி என்பதுடன் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா சான்றிதழும் பெற்றுக்கொண்டவர். விஞ்ஞான பாடத்துடன் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரசாயனவியல் பாடத்தையும் சிறப்பாக கற்பித்து மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக விளங்குபவர். இக்கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றி புகழ்பெற்ற ஆசிரியர்களாக விளங்குகின்ற அமரர் ஆறுமுகசாமி அமரர் நாகபூசணி தியாகராசா, திருமதி. சிவபாக்கியம் அருமைநாயகம் ஆகியவர்கள் மூளாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

திரு.அரவிந்தன் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றமை குறித்து கல்லூரிச் சமூகம் பெருமகிழ்ச்சியடைவதுடன் திரு.அரவிந்தனை பாராட்டி வாழ்த்துகிறது. திரு.அரவிந்தனின் சிறந்த கல்விச் சேவையினால் மாணவர்கள் அடைந்துவரும் பயன்குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், விருது பெற்ற சாதனை மாணவர்கள் ஆகியோருடன் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.ச. அரவிந்தன் அவர்களும் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டிருந்த கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற காரை இந்துவின் மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் தேசிய மட்டத்திலும் பங்குபற்றியிருந்தார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சென்ற வாரம் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது செல்வன் கோபிநாத் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கோலம் போடும் மாகாண மட்டத்திலான போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற காரை. இந்துவின் மற்றொரு மாணவி செல்வி அபினோசா கருணாகரன் அவர்களும் இவ்விழாவின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகிய இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் இணைந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது.

அதேவேளையில் செல்வன் கோபிநாத்தின் வெற்றிக்கு வழிகாட்டி ஊக்குவித்த கணிதபாட ஆசிரியர் திரு.நாகரத்தினம் கேதாரநாதன் செல்வி அபினோசாவின் வெற்றிக்கு ஊக்குவித்த இசை ஆசிரியை திருமதி கலாசக்தி றொபேசன் அகியோரையும் பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றி கூறுகின்றது.

OLYMPUS DIGITAL CAMERA

 

காரைநகர் களபூமி சத்திரந்தை ஞானவைரவர் ஆலயத்தில் 04.11.2017 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற ஐப்பசி பரணி திருவிழா நிகழ்வுகள்!

காரைநகர் புளியங்குளம் திருவருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் தேவஸ்தானம் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 09.11.2017 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது!

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆங்கில தின விழா 31.10.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய திரு கா. குமாரவேலு அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆங்கில பாடத்துறைக்கான தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு ந. பத்மராஜா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், பேச்சு, வினாடி வினா, நாடகம் போன்ற பல நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. அத்துடன் வலய மட்ட ஆங்கில தினப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழெ காணலாம்.

 

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 25.10.2017 நடைபெற்ற சூரன்போர் காட்சிகள்!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 23/10/2017 அன்று இடம்பெற்ற ஐப்பசி மாத விநாயகர் சதுர்த்தி திருவிழா நிகழ்வுகள்!

காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆறாம் தரம் தொடக்கம் பதின்மூன்றாம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுடைய மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறை அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களை அறிவுறுத்தியிருந்தது.

இதற்கமைய இக்கண்காட்சி காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இத்துறை சார்ந்த ஆசிரியர்களினதும் வலயக் கல்வி அலுவலர்களினதும் முழுமையான ஒத்துழைப்புடனும்; வெகு சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

சென்ற 17-10-2017 செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கணித விஞ்ஞான ஆய்வுகூடத்தில் காலை 9.00மணிக்கு அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்த இக்கண்காட்சி நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியையும் ஊட்டப்பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளிப் பள்ளிக்கூடம்)பாடசாலையின் அதிபருமாகிய செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

கல்லூரி மாணவர்களின் மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறைத் திறமையினை வெளிக்கொணர்ந்ததுடன் அவர்களின் செய்முறை அறிவினையும் மேம்படுத்த உதவிய இக்கண்காட்சியை அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு பயன்பெற்றனர்.

இக்கண்காட்சி நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக 48ம் தின பூர்த்தி பெருவிழா நிகழ்வுகள்!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக 48ம் தின பூர்த்தி பெருவிழா நிகழ்வுகள் மற்றும் முத்தமிழ் பேரவையின் கலை நிகழ்வுகளும் தன்னை சித்தி விநாயகர் ஆலய அறநெறி மாணவர்களுக்கு அமரர் சதாசிவம் நவரத்தினம் அவர்களின் ஞாபகமாக பரிசில்களும் வழங்கப்பட்டன.

 

 

 

புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம் மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம்
மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி
கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

கடந்த வாரம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 30 வீத மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்திபெற்று தீவக வலயப் பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வெட்டுப் புள்ளியைத் தாண்டி கூடிய வீதமான பிள்ளைகள் சித்தியடைந்த பாடசாலையாக பதிவாகியுள்ளது.

இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப் புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்த ஆறு மாணவர்களின் விபரம் வருமாறு

பரமேஸ்வரன் துவாரகா (181 புள்ளிகள்)
கம்சன் அபிசாலி (172 புள்ளிகள்)
சரவணபவன் அபிசாயினி (170 புள்ளிகள்)
சிவராசா ரஜீபன் (170 புள்ளிகள்)
திருநீலகண்டசிவம் றஜீவன் (169 புள்ளிகள்)
பூபாலசிங்கம் கபிலன் (157 புள்ளிகள்)

இருபது வருடங்களுக்குப் பின்னர் கடந்த ஜந்தாண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களினால் மீள ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தரம் ஒன்றுடன் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக ஏனைய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு முதற் தடவையாக கடந்த ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இவ்வாண்டு ஆறு மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.
அத்துடன் இப்பாடசாலை மாணவர்கள் தமிழ்த்தின மற்றும் ஆங்கிலப் போட்டிகளில் தீவக வலயத்தில் அதி கூடிய இடங்களைப் பெறுவதுடன் மாகாண மற்றும் தேசிய ரீதியிலும் பரிசில்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடசாலை மீள ஆரம்பிப்பதற்கு ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே.சதாசிவம்,அன்று வடமாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ப.விக்னேஸ்வரன்,அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் பாடசாலை சமூகம் இவர்களுக்கான நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

 

தெடர்ந்து மேலும் காரைநகர் கோட்டத்தில் சித்தியடைந்த 12 மாணவர்களின் விபரம் வருமாறு.

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லுரி கனிஸ்ட பிரிவில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு-

அருமைநாயகம் நேத்ரா (169 புள்ளிகள்)
யோகேஸ்வரன் கலையரசன் (167 புள்ளிகள்)
ராதாகிருஸ்ணன் கீர்த்திகன் (164 புள்ளிகள்)
கிருபானந்தன் டனுசா (162 புள்ளிகள்)
சிவபாலன் கிருத்திகா (160 புள்ளிகள்)
அருள்ராஐh கிறிஸ்ணவி (160 புள்ளிகள்)
பிரபாகரன் தனுசினி (159 புள்ளிகள்)
சிதம்பரநாதன் லக்சனா (157 புள்ளிகள்)

 

 

காரைநகர் ஊரி அ.மி.த.க பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்
மணியழகன் சஜீவன் (167 புள்ளிகள்)
நிசாந்தன் கோபிஷன் (164 புள்ளிகள்)

 

 

சுப்பிரமணிய வித்தியாலயம் மாணவன் எஸ்.பிரசன்னா 169 புள்ளிகள்

 

 

காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய மாணவன் சண்முகராசா பவித்திரன் 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

 

 

மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்ற நோக்குடனும் ஆரம்பப் பாடசாலைகளின் கற்பித்தல் தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கனடா காரை கலாசார மன்றத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் வைப்பிடப்பட்ட நிரந்தர வைப்பு நிதியின் வட்டிப்பணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகைப் பணம் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கும் பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மாணவர்கள் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தியதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வருடா வருடம் இந்தச் செயற்றிட்டத்தினை முன்னெடுத்து மாணவர்களின் கல்வித்தரத்தினை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிபர்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை, ஊரி அ.மி.த.க பாடசாலை, யாழ்ற்ரன் கல்லுரி மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் போற்றுதற்குரிய நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தீவகக் கல்வி வலயம்,வேலணை. காரைநகர் கோட்ட தரம் 5 புள்ளிப் பகுப்பாய்வு – 2010,2011,2012,2013,2014,2015,2016

 

GR 5

 

 

காரைநகர் பாடசாலைகளின் மாணவர்கள் விபரம் 2016

 

D.s education

 

காரைநகர் களபூமி அருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17.10.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக 48ம் தினம் பூர்த்தி பெருவிழா காணொளி!

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா

2017 ஆம் ஆண்டிற்கான யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2017.10.15 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.பிரதம விருந்தினராக இலங்கை மத்திய கல்வி அமைச்சின் செயற்றிட்டப் பணிப்பாளர் YARLTONIAN க.பத்மநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கொழும்பு Quency Distributers உரிமையாளர் YARLTONIAN சு.கணநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் செல்லப்பா ஸ்ரோஸ் நிறுவன உரிமையாளர் YARLTONIAN வே. சிற்சபேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் இ.போ.ச வின் ஓய்வு நிலை முகாரி YARLTONIAN தி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முதலில் விருந்தினர் கல்லூரியின் மாணவத்தலைவரகள்; அணி ,பான்ட் இசைக்குழு, தமிழ்ப்பாரம்பரிய இசை,நடன குழு ஆகியவற்றுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பரவசமூட்டியது.

தேசியக்கொடி, கல்லூரிக்கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில்

1. கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த உ.த வர்த்தகப் பிரிவில் 3 பாடங்களில் A சித்திகளைப் மாணவி சுப்பிரமணியம் மனோகரி பெற்றமை

2. மாணவி.அ.சசிகலா க.பொ.த உ.த பிரிவில் கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு (IIT) ஊவாவெலச பல்கலைக்கழக அனுமதி பெற்றமை

3. 2017 ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்களாக 8 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை அவர்களைக் கற்பித்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களின் சாதனைகள் ஆகியவை மகுடம் வைத்தமை போன்று காணப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.

மேலும் அதிபர் தான் 08.12.2017 அன்று ஓய்வு பெற இருப்பதைத் தெரிவித்து தனது சேவைக்காலத்தில் மாணவர்களின் வெற்றிகள்,பௌதீகவள முன்னேற்றங்கள் என்பவற்றை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

அதிபர் மேலும் அறிக்கையில் பிரதம விருந்தினர் க.பத்மநாதன் (YARLTONIAN) அவர்களின் வருகை கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்பதாகவும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் சு.கணநாதன் (YARLTONIAN) அவர்கள் கல்லூரியின் பௌதீக வள வளர்ச்சிக்கு தனக்கு பெரிதும் பங்காற்றி செயற்பட்டமையையும் தெளிவு படுத்தினார்.

கௌரவ விருந்தினர் வே.சிற்சபேசன் (YARLTONIAN) தனது சேவைக்காலத்தில் கல்லூரி முன்னேற்றம் அபிவிருத்தி என்பவற்றில் காட்டிய அக்கறையினை கோடிட்டுக் காட்டினார்.கௌரவ விருந்தினர் தி.ஏகாம்பரநாதன் (YARLTONIAN) அவர்களின் உறவினர்கள் பரிசுத்தினத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பினையும் பாராட்டிப்பேசினார்.

மேற்படி விருந்தினர்கள் கல்லூரிக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்து நினைவுப் பட்டயம் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அதிபர் தனது உரையில் கல்லூரியின் பரிசுத்தின அனுசரணையாளர் (திருமதி) வைத்தியகலாநிதி ஸ்ரீதாரணி விமலன் குடுபம்பத்தினர் (கனடா) 13 ஆண்டு காலமாக பரிசுத்தினத்திற்கு அனுசரணையாளராக இருந்து அவரது பேரனார் திரு.வை காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக செய்து வரும் இப்பரிசளிப்பு விழாக் கைங்கரியத்திற்கு அதிபர் தனது பாராட்டுக்களையும் மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்தார்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவேறியது.

இத்துடன் கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

 

 

கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கை

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று புத்தகவடிவில்- காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று புத்தகவடிவில்-

காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு

 

காரைநகரிலுள்ள மிகப் பழைய கோயில்களில் ஒன்றான களபூமி தன்னைப் பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான் மீது இரு நூற்றாண்டுகளுக்குமுன்னர் பாடப்பெற்ற நூல் தன்னை யமக அந்தாதி ஆகும். இந்நூல் இயற்றியவர்கள் மேருகிரி ஐயர் மரபில் வந்த முத்தமிழ் வித்தகராக விளங்கிய முருகேசுஐயர் அவர்களும், அவரின் புதல்வர் கார்த்திகேயப் புலவர் ஆவர்களும் ஆவர். சிறந்த புலவராகிய முருகேசுஐயர் நாவலரின் ஆசிரியராகிய இருபாலை சேனாதிராய முதலியாரின் நண்பர். ஆறுமுகநாவலர் காலத்தில் வாழ்ந்த கார்திகேயப் புலவர் காரைநகரில் சைவமும் தமிழும் வளர்த்த பெரும் புலவர்.

 

ஓல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் காரைநகரில் வாழ்ந்த முருகேசையரின் பாட்டனரான சங்கீத சுப்பையரினால் காரைநகரில் சைவத் தமிழ் இலக்கிய மரபு தொடங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இவரது சந்ததியினரான முருகேசையரையும் கார்த்திகேயப் புலவரையும் தன்னை யமக அந்தாதி பாடவைத்து இந்த இலக்கிய மரபை தொடரச் செய்ததினால் காரைநகரில் சைவத் தமிழ் இலக்கிய மரபு தழைத்தோங்கச் செய்தவர் தன்னையம்பதியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் என்றால் மிகையாகாது. தமிழ் நாட்டில் வெளிவந்த அந்தாதி இலக்கியம் என்னும் நூலில் தன்னை யமக அந்தாதி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளமை, இதன் சிறப்பை நன்கு எடுத்துக் காட்டும்.

 

மிக நீண்டகாலமாக ஏட்டுச் சுவடியிலிருந்த தன்னை யமக அந்தாதியை உரையுடன் வெளியிடவேண்டும் என்றுகார்த்திகேயப் புலவரின் வழித்தோன்றலும் காரைநகரில் தோன்றிய பழைய இலக்கிய நூல்கள் புத்தகவடிவில் காண்பதற்குக் காரணமாக இருந்தவரும் ஆகிய சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் விழைந்தார்கள். இவரது பெருமுயற்சியினால் பண்டிதமணி க. மயில்வாகனனாரின் உரையுடன் 2004 ஆம் ஆண்டு இந்நூல் அச்சிடப் பெற்றது. இந்நூல் வெளியிடுவதற்கான சகலவசதிகளையும் தன்னை பிள்ளையார் ஆலய அன்பரான அமரர் சி. தம்பிராசா (முன்னாள் உபஅதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி) அவர்கள் செய்து உதவினார்கள்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்ற தன்னைப் பிள்ளையார் ஆலயமுன்றலில் 15-10-2017 அன்று இந்நூல் அறிமுகம் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது.

 

 

தன்னை யமக அந்தாதியை அறிமுகம் செய்து யாழ் உதயன் பத்திரிகையில் நூல்வரிசை என்ற பகுதியில் சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதிய கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.

 

தன்னையமகஅந்தாதி
கலாபூஷணம் சைவப் புலவர் சு. செல்லத்துரை

களபூமி காரைநகர்தன்னையம்பதிவிநாயகப் பெருமான் மீது இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்டது இந்நூல். சிவத்திரு முருகேசையரால் தொடங்கப் பெற்றுக் குறையாயிருந்த இந்நூலை அவர்மகன் கார்த்திகேயப்புலவர் தனது பதினெட்டாவது வயதில் பூர்த்தி செய்தார் என அறியமுடிகிறது. இதுவரை காலமும் ஏட்டில் கையெழுத்துப் பிரதியாயிருந்த இந்நூல், காரைநகர் களபூமியைச் சேர்ந்த தம்பிராசா தம்பதியினரால் அச்சேற்றி வெளியிடப் பெற்றிருக்கிறது.

இந்நூலுக்குப் புலவர்மணி பண்டிதர் கலாபூஷணம் வட்டுக்கோட்டையூர் க. மயில்வாகனனார் உரையெழுதியுள்ளார். வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் கனதியான அணிந்துரை வரைந்துள்ளார். உரையாசிரியரின் முன்னுரையும், இவ்வணிந்துரையும் நூலைப் படிப்போரை நூலின்பால் வழிப்படுத்தவல்லனவாக அமைந்துள்ளன.

மொழியைச் சாணக்கியத்துடன் கையாளும் ஆளுமையும், ஆற்றலும் வாய்ந்த வித்துவம் நிறைந்த புலவர்களால் பாடப்படுவது “யமகஅந்தாதி”. இது மடக்கு எனவும் சொல்லப்பபடும்.

அந்தாதி என்பது தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். அது ஒரு செய்யுளின் இறுதியில் நின்றசீராவது, சீரின் உறுப்பாவது அடுத்துவரும் செய்யுளுக்கு முதலாகவரச் செய்யப்படுவதாகும். (முதற் பாடலின் அந்தம் அடுத்தபாடலில் வருவதாகும்)

யமகஅந்தாதி என்பதுமுதல் எழுத்துத் தொடங்கி அடுத்துவரும் பத்தெழுத்து ஈறாக ஓர் அடிபோல் நான்குஅடிகளும் பாடப்படுவதாகும். ஓர் அடியில் வந்தபொருள் மற்றோர்அடியில் வருதலும் கூடாது. ஒவ்வோர் அடியிலும் பொருள் வேறுபட்டு இருத்தல் வேண்டும்.

நமது ஈழத்திலக்கிய பாரம்பரியத்திலே மரபுவழிப் பாடல்களைப் புலமையாக்கம் எனவும் இக்காலப் பாடல்களை எளிமையாக்கம் எனவும், இலக்கிய ஆய்வாளர்கள் கூறுவர். புலமையாக்கத்தின் பண்புக் கூறுகளாக வித்துவம், சமக்காரம், புலமை, இலக்கணம், கொள்கைப் பிடிப்பு, மரபுமீறாமை, பண்பாடுணர்வு என்பன இடம் பெறுகின்றனஎன்பதற்கு இந்நூல் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

பாட்டுடைத் தலைவராகிய தன்னைவிநாயகப் பெருமானின் மூர்த்தி,தல, தீர்த்த விசேடங்களைக் கருப்பொருளாக்கி ஆலயவரலாற்றுப் பெருமையை அகப்பொருள் துறையில் வைத்து, மரபு வழிதவறாது பாடப்பட்ட இந்நூல் புலமைக்கு அணிகலனாகும்.

இத்தகு புலமை வாய்ந்தோர் இன்றும் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்நூலின் உரையாசிரியர் புலவர்மணி மயில்வாகனனார் வகுத்துள்ள உரையே சான்றாகும். அவர்கள், மூலபாடம், சந்திபிரிப்பு, கொண்டு கூட்டுபதவுரை, குறிப்புரை என ஐவகைப்பட்ட நோக்குநிலைநின்று விளங்கக் கூறியுள்ளமை படிப்போர்க்கு உபகாரமாயுள்ளது.

தமிழ் இலக்கியமரபுவழிச் செழுமைக்கும்,தமிழ்ப் புலவர்களின் அளவிடற்கரிய புலமைக்கும், பக்திமேன்மைக்கும் வளந்தரும் இந்நூலை ஏட்டுருவிலிருந்து அச்சேற்றிய வெளியீட்டாளர்களின் பணியும் போற்றுதற்குரியது.

 

காரைநகர் களபூமி அருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலய மண்டலாபிஷேக 48ம் தினம் பூர்த்தி பெருவிழா 17.10.2017 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது!

காரைநகர் களபூமி அருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு மலர் தன்னை யமக அந்தாதி வெளியீட்டு விழா 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மனிதனை மனிதனாக மாற்றுகின்ற சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள், உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகின்றனர். அத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியர்களை நினைவு கூரும் வகையிலும் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்ற வகையிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தினம் சென்ற ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் அனுசரணையுடன் உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் பெருங்காப்பாளரும் அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.

உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் கதிர்காமநாதன் கஐந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திரு.கார்த்திகேசு குமாரவேலு அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பொன்னம்பலம் ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்திருந்தனர்.

மாணவர்களுக்கு அறிவு என்னும் ஞானச் சுடரினை ஏற்றி வைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பா மூலமாக வாழ்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்ததுடன் பசுமையை நிலைநாட்டும் முகமாக மரக் கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் அதிபரும் ஆசிரியர்களும் விருந்தினர்களுடன் கலந்துகொண்டு அகமகிழ்ந்திருந்தனர். இந் நிகழ்விற்கான முழுமையான அனுசரணையை வழங்கிய கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு மனமார்நத நன்றியை அதிபர் தமது உரையின்போது தெரிவித்திருந்தார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பழைய மாணவர் சங்கம் அனுசரணை வழங்க வேண்டும் என்ற சங்கத்தின் கொள்கைக்கு அமைவாக 4வது ஆண்டாக ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்கான அனுசரணையினை இவ்வாண்டும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

புலமைப்பரீட்சை பெறுபேறுகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

புலமைப்பரீட்சை பெறுபேறுகளில்
தீவக வலயத்தில்
யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 8 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். தீவகக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகூடிய எண்ணிக்கை மாணவர் சித்தி அடைந்த பாடசாலையாக யாழ்ற்ரன் கல்லூரி திகழ்கின்றது. இம் மாணவர்களையும், இம் மாணவருக்கு கற்பித்த ஆசிரியர் திரு. முருகையா சுகந்தன், மற்றும் ஆரம்பப்பிரிவுத் தலைவர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார்.

சித்தியடைந்த மாணவர் பெயர்                                            புள்ளிகள்

1. அருமைநாயகம் நேத்ரா                                                                                        169

2. யோகேஸ்வரன் கலையரசன்                                                                               167

3. ராதாகிருஸ்ணன் கீர்த்திகன்                                                                                164

4. கிருபானந்தன் டனுஷா                                                                                          162

5. சிவபாலன் கிருத்திகா                                                                                            160

6. அருள்ராஜா கிறிஸ்ணவி                                                                                        160

7. பிரபாகரன் தனுசினி                                                                                               159

8 .சிதம்பரநாதன் லக்ஷனா                                                                                         157

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட தியாகத்திறன் வேள்வி – 2017 நாடகப் போட்டியில் காரை இந்து 2ஆம் இடம் பெற்றுள்ளது

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட தியாகத்திறன் வேள்வி – 2017 நாடகப் போட்டியில் காரை இந்து 2ஆம் இடம் பெற்றுள்ளது

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் 16.09.2017 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நாடகப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் “வெல்க மானுடம் ” எனும் தலைப்பிலான நாடகத்தை திருமதி வி. ரமணன் ஆசிரியரின் இயக்கத்தில் செல்வி யோ. விம்சியா அவர்களின் உதவியுடன் மேடைறே;றி 2ம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றனர்.

இப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவிகளாக:
1. சி. அறிவரசன்
2. ர. சயுவண்ணன்
3. ஏ. துசியந்தன்
4. த. சுகிர்தன்
5. ச. யோன்
6. க. டிலோசினி
7. தே. ஜென்சிகா
8. வ. பவீனா
9. யோ. அஸ்மிலா
10. சி. விதுசா
11. கி. சர்மிளா
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியைகளான திருமதி வி. ரமணன், செல்வி யோ. விம்சியா ஆகியோரையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

 

திக்கரை முருகப்பெருமான் ஆலயத்தில் நடைபெற்ற வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 30/09/2017 சனிக்கிழமை மாலை 2.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பாலாவோடை பிரதான வீதி ஊடாக பொன்னாவளை வீதி வழியாக திக்கரை முருகப்பெருமான் ஆலயத்தில் வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழாவும் மற்றும் திக்கரை அறநெறி மாணவர்களுக்கு கடந்த நல்லூர் கந்தசுவாமி ஆலய உட்சவ காலத்தில் இடம்பெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கழகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களும் மற்றும் பிரபல வர்த்தகர் S.V.M நிறுவனத்தினால் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அம்மன் தனது ஆலயத்தை வளுப்போடை வீதி வழியாக வந்தடைந்தன.

காரைநகர் மணிவாசகர் சபை பத்தி பூர்வமாக நடைபெற்ற அமரர் கலாநிதி,சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூல் வெளியீடு

 

 


சிவமயம்

காரைநகர் மணிவாசகர் சபை

பத்தி பூர்வமாக நடைபெற்ற
அமரர் கலாநிதி,சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள்
                                                 அவர்களின்
                                                            இரண்டாவது ஆண்டு நினைவிற்கான
                                                          சமர்ப்பண நூல் வெளியீடு

அமரர் கலாநிதி,சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூலாக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட “திருவாசக மணிகள்” என்ற நூல் காரைநகர் மணிவாசகர் சபையினரால் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வானது 24.09.2017 பி.ப 3.00 மணிக்கு குருக்கள் அவர்கள் கல்வி கற்ற பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் சபையின் காப்பாளர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

முதல் நிகழ்வாக குருக்கள் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது மகள் செல்வி இராணி வைத்தீஸ்வரக்குருக்கள் அஞ்சலி விளக்கினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சபையின் காப்பாளர், சபைத்தலைவர் ஆகியோர் சுடர்கள் ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து ஈழத்துச்சிதம்பர பிரதம குரு சிவஸ்ரீ வி. ஈஸ்வரக்குருக்கள் அவர்கள் தீபாரதனை நிகழ்த்தினார்.
யாழ்ற்ரன் கல்லூரியின் சங்கீதத்துறை ஆசிரியர் செல்வி லீலாவதி இராசரத்தினம் அவர்களினால் பஞ்சபுராணம் ஓதல் இடம்பெற்றது.

சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் 1939 ஆம் ஆண்டு மணிவாசகர் சபையை ஆரம்பிக்க யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளிடம் சென்று ஆசி வேண்டியபோது அவர் “வேண்டத்தக்கது அறிவோய் நீ ” என்ற திருவாசகத்தை பாடி அன்று தனது ஆசியை குருக்கள் அவர்களுக்கு வழங்கினார். இதனை சித்தரிக்கும் காட்சி யோகர் சுவாமிகள் அருள் பெற்ற யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி ஓவியர் திரு.சு.பத்மநாதன் அவர்களால் வரையப்பட்டது. இத்திருவுருவப் படத்தைச் செய்ய அரிய பிரயத்தனங்களைச் செய்து ஒப்பேற்றியவர் காரைநகர் சடையாளி ச.வே.சிவகுருநாதன் அவர்களைச் சாரும்.
இப்படம் குருக்கள் அவர்களின் மகளினால் திரைநீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவஸ்ரீ ஈஸ்வரக்குருக்கள் அவர்களின் தீபாராதனா இடம்பெற்றது. மணிவாசகர் சபையின் வரலாற்று நிகழ்வாகிய இப்படத்தில் யோகர் சுவாமிகள் அபயம் அளிக்கும் திருக்கரமும் கடைக்கண்பார்வையும் படத்தில் அற்புதமாக இருக்கின்றமை குறிப்படத்தக்கது.

பின்னர் மணிவாசகர் சபைத்தலைவர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றது.

நினைவுரையினை அதி.வண கலாநிதி S.ஜெபநேசன் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் குருக்கள் அவர்கள் புத்தகங்களில் இருந்த ஈடுபாட்டினை மிகவும் துல்லியமாக எடுத்துக்காட்டினார். மேலும் நினைவுரை ஆற்றிய சிவஸ்ரீ ப. சிவானந்த சர்மா அவர்கள் குருக்கள் அவர்களின் சைவப்பணி, தமிழ்ப்பணி ,நூல் வெளியீட்டுப் பணி என்பவற்றினை கோடிட்டுக் காட்டி உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து திருவாசக மணிகள் நூல் வெளியீடு செய்யப்பட்டு நூலிற்கான நயப்புரையினை சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எடுத்துக்கூறினார். திருவாசக மணிகள் நூல் திருவாசகத்திற்கு ஓர் ஆரம்ப நூல் இதனை நன்கு படித்தால் திருவாசகத்தின் ஒவ்வோர் அதிகாரத்தினையும் பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் குறிப்பிட்டார். நூலில் குருக்கள் அவர்களின் திருவாசம் பற்றிய கட்டுரை, சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு ஆகியவை இடம்பெறுகின்றமை நூலினை மேலும் அணி செய்வதாக சைவப்புலவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கௌரவப் பிரதி , முதற்பிரதி , சிறப்புப் பிரதி என்பன வழங்கப்பட்டன. விழாவிற்கு வருகை தந்த அனைவரும் நூற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக சபையின் செயலாளர் திரு.பா.இராமகிருஷ்ணன் அவர்களால் நன்றியுரை கூறப்பட்டு விழா இனிதே நிறைவேறியது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????