கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டிருந்த கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற காரை இந்துவின் மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் தேசிய மட்டத்திலும் பங்குபற்றியிருந்தார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சென்ற வாரம் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது செல்வன் கோபிநாத் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கோலம் போடும் மாகாண மட்டத்திலான போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற காரை. இந்துவின் மற்றொரு மாணவி செல்வி அபினோசா கருணாகரன் அவர்களும் இவ்விழாவின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகிய இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் இணைந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது.

அதேவேளையில் செல்வன் கோபிநாத்தின் வெற்றிக்கு வழிகாட்டி ஊக்குவித்த கணிதபாட ஆசிரியர் திரு.நாகரத்தினம் கேதாரநாதன் செல்வி அபினோசாவின் வெற்றிக்கு ஊக்குவித்த இசை ஆசிரியை திருமதி கலாசக்தி றொபேசன் அகியோரையும் பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றி கூறுகின்றது.

OLYMPUS DIGITAL CAMERA