புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம் மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம்
மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி
கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

கடந்த வாரம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 30 வீத மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்திபெற்று தீவக வலயப் பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வெட்டுப் புள்ளியைத் தாண்டி கூடிய வீதமான பிள்ளைகள் சித்தியடைந்த பாடசாலையாக பதிவாகியுள்ளது.

இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப் புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்த ஆறு மாணவர்களின் விபரம் வருமாறு

பரமேஸ்வரன் துவாரகா (181 புள்ளிகள்)
கம்சன் அபிசாலி (172 புள்ளிகள்)
சரவணபவன் அபிசாயினி (170 புள்ளிகள்)
சிவராசா ரஜீபன் (170 புள்ளிகள்)
திருநீலகண்டசிவம் றஜீவன் (169 புள்ளிகள்)
பூபாலசிங்கம் கபிலன் (157 புள்ளிகள்)

இருபது வருடங்களுக்குப் பின்னர் கடந்த ஜந்தாண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களினால் மீள ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தரம் ஒன்றுடன் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக ஏனைய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு முதற் தடவையாக கடந்த ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இவ்வாண்டு ஆறு மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.
அத்துடன் இப்பாடசாலை மாணவர்கள் தமிழ்த்தின மற்றும் ஆங்கிலப் போட்டிகளில் தீவக வலயத்தில் அதி கூடிய இடங்களைப் பெறுவதுடன் மாகாண மற்றும் தேசிய ரீதியிலும் பரிசில்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடசாலை மீள ஆரம்பிப்பதற்கு ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே.சதாசிவம்,அன்று வடமாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ப.விக்னேஸ்வரன்,அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் பாடசாலை சமூகம் இவர்களுக்கான நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

 

தெடர்ந்து மேலும் காரைநகர் கோட்டத்தில் சித்தியடைந்த 12 மாணவர்களின் விபரம் வருமாறு.

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லுரி கனிஸ்ட பிரிவில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு-

அருமைநாயகம் நேத்ரா (169 புள்ளிகள்)
யோகேஸ்வரன் கலையரசன் (167 புள்ளிகள்)
ராதாகிருஸ்ணன் கீர்த்திகன் (164 புள்ளிகள்)
கிருபானந்தன் டனுசா (162 புள்ளிகள்)
சிவபாலன் கிருத்திகா (160 புள்ளிகள்)
அருள்ராஐh கிறிஸ்ணவி (160 புள்ளிகள்)
பிரபாகரன் தனுசினி (159 புள்ளிகள்)
சிதம்பரநாதன் லக்சனா (157 புள்ளிகள்)

 

 

காரைநகர் ஊரி அ.மி.த.க பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்
மணியழகன் சஜீவன் (167 புள்ளிகள்)
நிசாந்தன் கோபிஷன் (164 புள்ளிகள்)

 

 

சுப்பிரமணிய வித்தியாலயம் மாணவன் எஸ்.பிரசன்னா 169 புள்ளிகள்

 

 

காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய மாணவன் சண்முகராசா பவித்திரன் 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

 

 

மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்ற நோக்குடனும் ஆரம்பப் பாடசாலைகளின் கற்பித்தல் தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கனடா காரை கலாசார மன்றத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் வைப்பிடப்பட்ட நிரந்தர வைப்பு நிதியின் வட்டிப்பணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகைப் பணம் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கும் பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மாணவர்கள் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தியதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வருடா வருடம் இந்தச் செயற்றிட்டத்தினை முன்னெடுத்து மாணவர்களின் கல்வித்தரத்தினை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிபர்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை, ஊரி அ.மி.த.க பாடசாலை, யாழ்ற்ரன் கல்லுரி மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் போற்றுதற்குரிய நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தீவகக் கல்வி வலயம்,வேலணை. காரைநகர் கோட்ட தரம் 5 புள்ளிப் பகுப்பாய்வு – 2010,2011,2012,2013,2014,2015,2016

 

GR 5

 

 

காரைநகர் பாடசாலைகளின் மாணவர்கள் விபரம் 2016

 

D.s education