சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் அனுசரணையில் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் அனுசரணையில் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள்.

சிவமயம்

 

குஞ்சி யழகுங் கொடுத்தானை கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

-நாலடியார்

 

எமது சபை மாணாக்கரின் தொழில்சார் நிபுணத்துவம், மொழித்திறன், கலை, கல்வி, விளையாட்டுத்துறை போன்ற விடயங்களை மேம்படுத்தும் முகமாகக் கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கி ஊக்கமளித்து வருகின்றது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகளது வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற வருடம் பங்குனிமாதம் 2023ஆம் ஆண்டு  நடைபெற இருக்கின்ற பதினொராம் ஆண்டு மாணவருக்கான க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள் யாழ் மாவட்ட கல்விவலய ஆங்கிலப்பாடத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. கோ. சுப்பிரமணியம் அவர்களால் 12.11.2022 சனிக்கிழமை  யாழ்ற்றன் கல்லூரயில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி,வியாவில் சைவமகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்பில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். காரை இந்துக்கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள் பிரிதொரு திகதியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

மாணவரின் ஆளுமை விருத்தியே காரைநகரின் வளர்ச்சியின் ஆதாரம் என்பதால் ஆங்கில மொழிப் பயிற்சி தொடர்பாக முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என கலாநிதி திருமதி. வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் மொழியியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்களும் கருத்துரை வழங்கியிருந்தார்கள். இறுதியாக மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வுக்கு உதவிபுரிந்த நிறைந்த உள்ளங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிழற்படங்களை கீழே காணலாம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

13.11.2022