வெகு சிறப்பாக நடைபெற்ற மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும்

வெகு சிறப்பாக  நடைபெற்ற  மாணவர்கள் கௌரவிப்பும்,

தொழில் வழிகாட்டலும்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் மாணவர்களின் ஆளுமைத்திறன்களை வளர்க்கும்  “தியாகத்திறன் வேள்வி”-2022   செயற்திட்டத்தின்கீழ் கடந்த 2021ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் மற்றும் தொழிற்கல்விக்கான சந்தர்பங்களை வழங்கும் திறந்த பல்கலைக்கழகம்,தொழில்நுட்ப கல்லூரிகள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் தமது தொழில் கல்வியை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் மடத்துக்கரை அம்மன் கோவில் பிரதமகுரு அவர்களால் சரஸ்வதி பூசை வழிபாடுகளுடனும், தேவாரத்துடனும்  காலை 9.15மணிக்கு ஆரம்பமாகிய விழாவில் முன்னாள்  மாகாணகல்விப் பணிப்பாளர்                திரு.ப.விக்கினேஸ்வரன், ஆணையாளர் நிலஅளவைத் வடமாகாணம்            திரு அ. சோதிநாதன், ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ற்ரன் கல்லூரி                             திரு. வே. முருகமூர்த்தி, இந்துக்கல்லூரி அதிபர் அ. ஜெகதீஸ்வரன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன், தவிசாளர், பிரதேச சபை,                                          திரு. க. பாலச்சந்திரன், ஆகியோரால் மங்களவிளக்கினை ஏற்றியும் அதனைத்தொடர்ந்து ஒலிநடாவில் சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபையின் மன்றக்கீதம் இசைத்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

காரைநகரின் இருபெரும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் ஓத்துழைப்புடனும் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் அ. ஜெகதீஸ்வரன், தவிசாளர், பிரதேச சபை,      திரு. க. பாலச்சந்திரன்,    ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ற்ரன் கல்லூரி திரு. வே. முருகமூர்த்தி, ஆணையாளர் நிலஅளவைத் திணைக்களம்,வடமாகாணம் திரு அ. சோதிநாதன், ஓய்வு பெற்ற பிரதிச்செயலாளர் மாகாணகல்விப்பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன் சமாதான நீதவான் ஆசிரியர் யாழ்ற்ரன் கல்லூரி சி.கிருபாகரன், ஆசிரியர் தொழில்நுட்ப கல்லூரி வி. பிரேம்தாஸ்குமாரஸ்ரீ ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் வரவேற்புரையினையும், தலைமையுரையினையும் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன்  அவர்களும்,அறிமுக உரையினை முன்னாள் மாகாணகல்விப்பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்களும், விழாவின் பிரதமவிருந்தினர் நிலஅளவைத் திணைக்களம், வடமாகாணம் திருஅ.சோதிநாதன் அவர்களும் உரையாற்றியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான கௌரவிப்பு,  நன்றியுரையுடனும் மதியம் 11.30  நிகழ்வு  இனிதே நிறைவுபெற்றது.

காரைநகர் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்விற்கு ஓத்துழைப்பு நல்கிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் சுவிஸ் காரை அவிருத்திச்சபையினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

நிகழ்வின் நிழற்படத்தொகுப்பினை கீழே காணலாம்

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

11.09.2022