சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் நிதி உதவியுடன் கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை 16 பேருக்கு 22.06.2020இல் யாழ் போதனா வைத்தியசாiயில் நிறைவுற்றது.

 

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் நிதி உதவியுடன் கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை 16 பேருக்கு 22.06.2020இல் யாழ் போதனா வைத்தியசாiயில் நிறைவுற்றது.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை அறிமுக நாளில் இருந்து எமது கிராமத்து உறவுகளின் சுகாதார சேவையை முன்னிலைப் படுத்தி வருகின்றது. காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அதிகாரி தங்கும் அறை, ஈ.சி.ஜி அறை நிர்மாணிப்பு, சீறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உதவி வேண்டி நின்றவர்களுக்கு நிதியுதவி, கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல். என தனது பல சேவையை செய்தமை யாவரும் அறிந்ததே.

மருத்தவ உதவி திட்டத்தின் கீழ் காரைநகரில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்ப அங்கத்தவர்களை எமது உப குழுவான காரை அபிவிருத்திச் சபையின் நெறிப்படுத்தலில்  17 பேர் தெரிவு செய்யப்பட்டு இவர்களில் 16 பேருக்கு கண்படர் (Cataract)  சிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் 22.06.2020 இல் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி மருத்துவ உதவித்திட்ட கண்படர் (Cataract)  சிகிச்சைக்கு எமது சபை கடந்த பல வருடங்களாக நிதியுதவி வழங்கி வருகின்றது. இவ்வாண்டும்  47600.00 ரூபாய் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்படர் (Cataract)  சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இச் சிகிச்சையை திறம்பட ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும், காரை அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

25.06.2020