Tag: காரைச் செய்திகள்

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தில் நடைபெற்ற இன்னிசை கச்சேரி 2016-02-12

யா/காரை ஊரி அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் வித்தியாலயம் உயர்திரு.இராமசாமி சிறீதரன் அவர்களின் சேவைநயப்பு விழா 18.02.2016 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி

URI SCHOOL

பாலாவோடை அம்மன்கோவில் கும்பாபிஷேக ஒரு வருட பூர்த்தி1008 சங்காபிசஷேகமும் மணவாள கோல திருவிழாவும் 09.02.2016 அன்று நடைபெற்றது

A1 2 3 4 5 6 7 8

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக காணொளி-PART 2

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன்கோவில் கொடியேற்றம் 12.02.2016 அன்று நடைபெற்றது.

கோவளம் விளையாட்டுக்கழக புதிய கட்டட திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 13.02.2016 சனிக்கிழமை இன்று நடைபெற்றது

KOVALAM SPORTS CLUB LOGO

இன்றைய திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக தெய்வீக திருப்பணி அரசு தர்மசொரூபி திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தமிழருவி.த.சிவகுமாரன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.க.பாலச்சந்திரன்,திரு.க.சிவபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கு தர்மசொரூபி எனும் பட்டம் எமது கழகத்தால் வழங்கப்பட்டது.

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக காணொளி-PART-1

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக காட்சிகள்

 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70

71 72 73 74

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு நிகழ்வு காணொளி

கோவளம் விளையாட்டுக்கழக புதிய கட்டட திறப்பு விழா

KSC0

KSC1KSC2 KSC3

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக சிறப்பிதழ்-12.02.2016

1234

காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவில் மகாகும்பாபிஷேக தினத்தில் தென்னிந்திய பாடகர்களின் இன்னிசை கச்சேரி

photo (1)

வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் காணவிருக்கின்ற வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

va3 va4 va5 va6 va7 va8 va9 va10 va11 va12 va13

காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிஷேகம் பெப்ரவரி 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

V1

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் 08.02.2016 இன்று நடைபெற்ற கும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி

YARLTON COLLEGE LOGO

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 06.02.2016 சனிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடக்கு மாகாண, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.தர்மலிங்கம் (YARLTONIAN) அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONIAN) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க.அருள்நேசன் (YARLTONIAN) அவர்களும், காரைநகர் இலங்கைவங்கி முகாமையாளர் திரு.ப.செல்வகுமார் அவர்களும் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.க.சிவபாலன் (YARLTONIAN) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரியின் பான்ட் இசைக் குழு மற்றும் இன்னியம் குழு, மாணவத் தலைவர் குழு ஆகியோர் சகிதம் விருந்தினர்கள் அழைத்து வந்த காட்சியும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், இடைவேளையின் போது நடைபெற்ற மாணவிகளின் இசையும் அசையும் உடற் பயிற்சிக் கண்காட்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தனது உரையில்

        விளையாட்டுப் போட்டியின் அனுசரணையாளர் திரு.க.அருள்நேசன் (உரிமையாளர் சிவகணேசன் புடைவையகம்)

        கல்லூரியின் முதல் அதிபர் அமரர் கருணானந்தம் ஞாபகார்தமான வெற்றிக் கேடயங்கள் அளித்த திரு.அ.யோகராசா (சின்னாலடி காரைநகர்)

        மேலும் வெற்றிக் கேடயங்களைத் தந்துதவிய கல்லூரின் ஆசிரியர்கள் திருமதி.மனோரஞ்சிதமலர் இராதாகிருஸ்ணன்,திருமதி கவிதா பிரதீஸ்வரன்

        சைக்கிள் ஓட்டப் போட்டியில்(பெண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.சண்முகம் குகதாசன் (வர்த்தகர் கருங்காலி)

        சைக்கிள் ஓட்டப் போட்டியில்(ஆண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.S.நிமலன் (கருங்காலி)

        அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வெற்றிக் கேடயங்களை வழங்கிய திரு.வே.சிற்சபேசன் (சின்னாலடி)

        பரிசுப் பொருட்களை வழங்கிய திரு.சி.தயாளன் (சின்னாலடி)

 

ஆகியோர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் 07.02.2016 இன்று நடைபெற்ற சற்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 169வது ஆராதனை விழா காணொளி

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் 05.02.2016 நடைபெற்ற கும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள்

யா/யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2016

IMG_0001IMG

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்ற நிறுவுனர் தினமும் தேசிய மட்ட, மாகாண மட்ட சாதனையாளர் கௌரவிப்பும்.

மேற்படி விழா 02.02.2016 காலை 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்p தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதமவிருந்தினர் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் (தலைவர் காரை அபிவிருத்திச் சபை) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியர் திரு.V. ஏகாம்பரநாதன் அவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் திரு. V.சிற்சபேசன் அவர்களும், கொழும்பு Quency Distributors  உரிமையாளர் திரு. S.கணநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். “சைவப் பாரம்பரியமூடான ஆங்கிலக் கல்வி” என்ற நினைவுப் பேருரையை கல்வி அமைச்சின் சமய விழுமியப் பிரிவு நிபுணத்துவ ஆலோசகர் திரு.பா.தனபாலன் அவர்களும் ஆற்றினார்.

இந் நிகழ்வில் கல்லூரி அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த காரை வித்தியா பரிபாலன சபையினரின் (Kari Board Of Education) கல்லூரி முகாமையாளர்களான திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா), திரு.K.S.வேலுப்பிள்ளை, திரு.K.S.சோமசுந்தரம், திரு.A.T.ஆறுமுகம் ஆகியோரின் படங்கள் திரை நீக்கம் செய்யப்பட்டன.

                கல்லூரி ஆரம்பிப்பதற்கு காணியை நன்கொடையாக வழங்கியவரும் முகாமையாளருமாகிய அமரர் திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா) அவரின் படத்தை திரு. S.கணநாதன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.K.S.வேலுப்பிள்ளை அவரின் படத்தை அவரின் மகன் திரு. V.சிற்சபேசன் அவர்களும், முகாமையாளர் அமரர் திருK.S.சோமசுந்தரம் அவரின் படத்தை திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.A.T .ஆறுமுகம் அவரின் படத்தை திரு.V. ஏகாம்பரநாதன் அவர்களும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

தேசிய மட்டம், மாகாண மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

DSC00890 DSC00891 DSC00894 DSC00897 DSC00898 DSC00899 DSC00900 DSC00901 DSC00902 DSC00904 DSC00905 DSC00907 DSC00909 DSC00910 DSC00914 DSC00916 DSC00919 DSC00920 DSC00922 DSC00926 DSC00927 DSC00928 DSC00929 DSC00930 DSC00931 DSC00932 DSC00933 DSC00934 DSC00937 DSC00941 DSC00942 DSC00943 DSC00944 DSC00946 DSC00947 DSC00948 DSC00950 DSC00952 DSC00953 DSC00954 DSC00956 DSC00957 DSC00958 DSC00959 DSC00960 DSC00961 DSC00962 DSC00964 DSC00966 DSC00968 DSC00971 DSC00975 DSC00977 DSC00980 DSC00981 DSC00985 DSC00989 DSC00992 DSC01002 DSC01005 DSC01007 DSC01008 DSC01010 DSC01011 DSC01015 DSC01016 DSC01018 DSC01021 DSC01023 DSC01025 DSC01050 DSC01051 DSC01054 DSC01056

 

யா/யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016

மேற்படி போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பி.ப. 1.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்விப் பிரிவு) திரு.வி.தனிநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை கிராம சேவகர் திரு.தி.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்த சிறப்பித்தனர்.

அதிபர் தனது உரையில் இவ் ஆரம்பப் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டு வரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

DSC00700 DSC00702 DSC00704 DSC00705 DSC00706 DSC00708 DSC00718 DSC00719 DSC00724 DSC00725 DSC00726 DSC00727 DSC00728 DSC00730 DSC00734 DSC00736 DSC00737 DSC00742 DSC00743 DSC00744 DSC00745 DSC00750 DSC00751 DSC00772 DSC00778 DSC00786 DSC00802 DSC00803 DSC00804 DSC00811 DSC00820 DSC00822 DSC00827 DSC00830 DSC00838 DSC00846 DSC00852 DSC00858 DSC00868 DSC00870 DSC00877

 

S K நாதன் நற்பணிமன்றத்தின் காரை மக்களுக்கான 4ம் கட்ட உலா் உணவு விநியோகம்

S K நாதன் நற்பணிமன்றத்தின் காரை மக்களுக்கான 4ம் கட்ட உலா் உணவு விநியோகம் இன்று 02.02.2016 மாலை 3 மணிக்கு சைவமகாசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்று தொிவுசெய்யப்பட்ட 160 பயனாளிகளுக்கு உலா்உணவுப்பொதி வழங்கப்பட்டது.அதன் பணிப்பாளா் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் பணிப்புரைக்கமைய சென்ற முறையைவிட மேலதிகமாக 50 பயனாளிகள் தொிவு செய்யப்பட்டு இம்முறை மொத்தமாக 160 பயனாளிகளுக்கு இவ்வுதவி வழங்கப்பட்டமையை பயனாளிகளும் காரைவாழ் சமூக ஆா்வலா்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனா்.

DSC_0981 DSC_0983 DSC_0985 DSC_0987 DSC_0991 DSC_0993 DSC_1005 DSC_1007 DSC_1008 DSC_1011 DSC_1013

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு –2016

DSC_1882 (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு கடந்த சனிக்கிழமை(30.01.2016) அன்று பிற்பகல் 1:30 இற்கு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் தலைமையிலும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் ஒருங்கமைப்பிலும் நடைபெற்றது. கற்கைநெறிக்கான விடுமுறையில் சென்றிருந்த அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் நிகழ்விற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடக்க சிறப்பாகும்.

பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விரிவுரையாளரும் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவருமான திரு.M.இளம்பிறையன் அவர்களும் அவர்தம் பாரியார் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி.S.இளம்பிறையன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.S.பாஸ்கரன் அவர்களும், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை ஆங்கிலத்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.மு.கதிரேசம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர்.

ஓய்வுநிலை ஆங்கிலத்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சிவபாக்கியம் நடராஜா, யாழ்ற்றன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.ந.பரமசிவம், களபூமி முத்தமிழ் பேரவை தலைவர் திருமதி.இராசமலர் நடராஜா, மற்றும் உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பழையமாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா கொடியை பிரதமவிருந்தினரும் கல்லூரிக் கொடியை கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசனும் ஏற்றி வைத்த பின்னர் ஒலிம்பிக் கொடி, இல்லங்களிற்கான கொடிகள், சிறப்பு குழுக்களிற்கான கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் தொடங்கின.

மாணவர்களின் பல்வேறு அணிகள் அணிநடையில் பங்குகொண்டிருந்தமை மைதானத்தில் மாணவர்களின் பங்குபற்றலை அதிகரித்திருந்தது. இடைவேளையின்போது மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி(Gymnastics Show) பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. இல்லங்களுக்கிடையேயான மைதான தடகளப் போட்டிகளைத் தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றன.

பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசனின் தலைமையுரையினைத் தொடர்ந்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலனும் உரைநிகழ்த்தினார். விருந்தினர்களின் உரையினைத் தொடர்ந்து பரிசில் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரியின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

 

 

 

 

View all

 

காரைநகர் கற்பக விநாயகர் நூற்றாண்டு மலர் மற்றும் இறுவெட்டு ” விநாயகர் நூற்றாண்டு ஒளி ” சிறப்பு வெளியீடு

யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினமும் தேசியமட்ட மாகாணமட்ட சாதனையாளர் கௌரவிப்பும்

Y-1Y-2

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி–2016 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி வரும் சனிக்கிழமை(30.01.2016) அன்று பிற்பகல் 1:30 இற்கு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் தலைமையிலும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் வழிநடத்தலிலும் நடைபெற உள்ளது. 


பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விரிவுரையாளரும் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவருமான திரு.M.இளம்பிறையன் அவர்களும் அவர்தம் பாரியார் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி.S.இளம்பிறையன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். 


சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.S.பாஸ்கரன் அவர்களும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை ஆங்கிலத்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.மு.கதிரேசம்பிள்ளை அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 


அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.


முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.  

Sports Meet Invitation

 

காரைநகர் விருந்தாளி சஞ்சிகையின் நாட்காட்டி யாழ்ரன் கல்லூரியில் வெளியீடு!

காரைநகர் விருந்தாளி சஞ்சிகையின் நாட்காட்டி அண்மையில் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் வெளியீட்டுவைக்கப்பட்டது.

ஆசிரியர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சங்கானை மக்கள் வங்கி முகாமையாளர், காரைநகர் வங்கிகளைச் சேர்ந்த முகாமையாளர்கள்,தீவக வலய  உதவிக்கல்விப்பணிப்பாளர், காரைநகர் புதிய கோட்டக்கல்விப்பணிப்பாளர்,கல்லூரி அதிபர் உட்பட பலர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நாட்காட்டியினை காரைநகர் சமூர்த்திவங்கியின் உதவி முகாமையாளர் ப.ஐங்கரன் வெளியீட்டுரை நிகழ்த்தி வெளியிட்டு வைத்தார்.

DSCF0203 (Copy) DSCF0207 (Copy) DSCF0208 (Copy) DSCF0209 (Copy) DSCF0210 (Copy) DSCF0211 (Copy) DSCF0212 (Copy) DSCF0213 (Copy) DSCF0214 (Copy) DSCF0215 (Copy) DSCF0217 (Copy) DSCF0220 (Copy) DSCF0235 (1) (Copy) DSCF0237 (Copy) DSCF0239 (Copy) DSCF0243 (Copy) DSCF0251 (Copy)

 

காரைநகர் கற்பக விநாயகர் நூற்றாண்டு மலர் மற்றும் இறுவெட்டு ” விநாயகர் நூற்றாண்டு ஒளி ” சிறப்பு வெளியீடு

card

முன்னாள் அதிபர் அமரர் எஸ். பத்மநாதனின் மறைவிற்கு இந்துக் கல்லூரி சமூகம் அனுதாபம்

patmanathan

 

காரைநகர் இந்துக் கல்லூரியின் நல் ஆசிரியர்கள் வரிசையில் மட்டுமன்றி கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற அதிபர்கள் வரிசையிலும் இடம்பெற்று விளங்கும் திரு. செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பாடசாலைச் சமூகம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் வழங்கிய அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
உயிரியல் பாடத்தைக் கற்பித்து பல மாணவர்கள் மனதிலும் இடம்பெற்றுள்ள இவர் ஆறு ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் பாடசாலையின் வளர்ச்சியை திட்டமிட்டு முன்னேற்றிய வகையில் செயற் திறனும் ஆளுமையும் மிக்க  அதிபர் என்ற பெயரைப் பெற்றவர். கல்வித் தரத்தையும் பௌதிக வளங்களையும் உயர்த்த உழைத்ததுடன் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பின்பற்றவும் கல்லூரியின் பாரம்பரியத்தைப் பேணவும் அக்கறையுடன் செயலாற்றியவர். பாடசாலையில் உள்ள கலைமகள் கோயிலில் அழகிய வடிவில் அமைந்துள்ள தூபி முகப்பு இவரது காலப் பகுதியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கதாகும்.  
அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவதாக திருமதி வாசுகி தவபாலனின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பாற்குட பவனியும் சங்காபிஷேக நிகழ்வும் மறுஒளிபரப்பு