Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி கலையக அத்திவாரக் கல்நாட்டு விழா 14.11.2018 புதன்கிழமை நடைபெற்றது.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவிலில் 13/11/2018 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:30 மணிக்கு இடம்பெற்ற சூரன்போர் உற்சவ காட்சிகள்!

காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 13.11.2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூரசங்காரம் காட்சிகள்!

களபூமி கலையகம் அத்திவாரக் கல்நாட்டு விழாவும் களபூமி கலையகத்திற்குக் கட்டிடம் அமைப்பதற்குத் தேவையான நிதி விடயமும்.

Invitation Card

 

Donors - Instruction re payment letter dated Nov 2018 - Canada

 

 

BLDG. Project - SUMMARYof R&P Account tamil 1 (3)

அமரர் கலாநிதி வைத்தீசுவரக்குருக்களிற்கான சமர்ப்பண நூல் வெளியீடு

அமரர் கலாநிதி வைத்தீசுவரக்குருக்களிற்கான சமர்ப்பண நூல் வெளியீடு

காரைநகர் மணிவாசகர் சபையின் நிறுவுநர் அமரர் கலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூல் வெளியீட்டு விழா 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா மண்டபத்தில் நடைபெற்றது.

சபைத்தலைவர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் குருக்கள் அவர்களின் நினைவுரையினை பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து சமர்ப்பண நூலாக திருவாதவூரடிகள் புராணம் (உரையுடன்) வெளியீட்டு வைக்கப்பட்டது.

முதற் பிரதியை “கொடைக் கோ” E.S.P நாகரட்ணம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூலிற்கான நயப்புரையினை சிவத்தமிழ் வித்தகர் சிவமாகலிங்கம் அவர்கள் வழங்கினார்.

வைத்தீசுவரக்குருக்கள் நினைவுதின போட்டியில் முதல் 5 இடங்களையும் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசில்களும், 75 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா 2018.11.02 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது!

Output

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய பரிசளிப்பும் கலைநிகழ்வும் 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காணொளி!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய பரிசளிப்பும் கலைநிகழ்வும் 28.10.2018 (பகுதி -1)

 

 

 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய பரிசளிப்பும் கலைநிகழ்வும் 28.10.2018 (பகுதி -2)

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய பரிசளிப்பும் கலைநிகழ்வும் 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நாடத்தும் பரிசளிப்பும் கலைநிகழ்வும் 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது!

காரைநகர் கசூரினா பீச் சுற்றுலாத் தலத்தில் வடமாகாணசபையின் பலமில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று 24.10.2018 புதன்கிழமை மாலை 4 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் கெளரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

காரைநகர் கசூரினா பீச் சுற்றுலாத் தலத்தில் வடமாகாணசபையின் பலமில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று 24.10.2018 புதன்கிழமை மாலை 4 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் கெளரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

 

காரைநகர் கசூரினாக் கடற்கரையில் சுமார் 11.43 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மாலை திறந்த வைத்தார்

இன்றைய தினம் இந்த அம்மாச்சி உணவகம் காரைநகர் பகுதியில் சிறப்பாகத் திறந்து வைக்கப்படுகின்றது. எமது பகுதிகளில் கிடைக்கக் கூடியதும் தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை பிரதி பலிக்கின்றதுமான உணவுகள் உடனேயே தயாரித்து சுடச்சுட வழங்கப்பட இருக்கின்றது. கசூரினாக் கடற்கரை சிறப்பாக இயங்கும் போது இப்பகுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் அதனால் அம்மாச்சி உணவகத்தின் விற்பனைகளும் அதிகரிக்கும் அத்தடன் எமது பாரம்பரிய உணவுகளை ஏனைய இனத்தைச் சார்ந்த மக்களும் உண்டு மகிழ்வதற்கு ஏற்ற வகையாக இந்த உணவகம் தமது சேவைகளை விஸ்தரிக்க இருக்கின்றது.

இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

நேற்று புதன்கிழமை மாலை காரைநகர் கசூரினாக் கடற்கரையில் அவரது அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் சுமார் 11.43 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து வழங்கக் கூடிய அம்மாச்சி உணவகத்தை திறந்த வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில்

இரண்டு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும் போது அவர்களின் சம்பாசனைகள் ஜேர்மன் மொழியில் இருக்கும் அதே போன்று இரண்டு ரஷ்யா நாட்டு நபர்கள் சந்திக்கும் போது ரஷ்ய மொழியில் பேசுவார்கள் இரண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் பேசுவார்கள் ஆனால் இரண்டு தமிழர்கள் ஒருவரை ஒருவர் வடகிழக்குக்கு வெளியே சந்திக்கும் போது தமிழில் பேசமாட்டார்கள். மாறாக ஆங்கிலத்திலோ அல்லது பிறிதொரு பாஷையிலோ தான் பெரும்பான்மையானோர் பேசுவார்கள்

அதே போன்று எம்மவர்களுக்கு அம்மாச்சி என்ற உரிமையுடன் கூடிய பாரம்பரிய தமிழ்ச் சொல்லை பயன்படுத்துவதில் சிலருக்கு இஷ்டம் இல்லை மாறாக ‘கெலபொஜின்’ என்ற சிங்களப் பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று துடியாகத் துடிக்கின்றனர். எமது அலுவலர்களும் பிரதி அமைச்சரைப் பகைக்கக் கூடாது என்ற அடிப்படையில் அம்மாச்சி என்பதற்குப் பதிலாக ‘கெலபொஜனுக்குப் பதில் பாரம்பரிய உணவகம் என மாற்றிவிட்டார்கள்.

தங்கள் அன்புத் தாயாராகிய இலட்சுமிப் பிள்ளையின் பெயரை சிங்கள ஆட்சியாளர்கள் கோவிப்பார்கள் என்ற காரணத்தினால் பொடிமெனிக்கே என்று மாற்றக்கூடிய சிந்தனையாளர்களே இன்று அம்மாச்சி என்ற பெயரை மெல்ல நீக்கி பாரம்பரிய உணவகம் என மாற்ற முனைந்திருக்கிறார்கள்.

நான் இறுக்கமாகக் கூறிவிட்டேன் அம்மாச்சி என்னும் பெயர் காணப்படின் மட்டும்தான் நான் இந்தத் திறப்ப விழாவிற்கு வருவேன் என்று. எமது பகுதியில் எமது மாகாண சபையின் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உணவகத்திற்கு அன்பு கலந்த அம்மாச்சி என்ற பெயரை வைப்பதற்கு இவ்வளவு தடைகள் எனின் ஏனைய விடயங்கள் பற்றிக் கூறத் தேவையில்லை ஒவ்வொரு தமிழ் அரசியல் வாதிகளும் மற்றும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்க திராணையற்றவர்களாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப் படுத்துகின்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. ஆழும் வர்க்கத்தின் செல்லப்பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாளேயே சிங்கள் ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கிறார்கள். நான் சிங்களச் சகோதரர்களைக் குறைகூற வரவில்லை என் தமிழ் சகோதர சகோதரிகளின் வருத்தத்திற்குரிய செயற்பாட்டையே கூற வருகின்றேன்.

இன்றைய தினம் இந்த அம்மாச்சி உணவகம் காரைநகர் பகுதியில் சிறப்பாகத் திறந்து வைக்கப்படுகின்றது. எமது பகுதிகளில் கிடைக்கக் கூடியதும் தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை பிரதி பலிக்கின்றதுமான உணவுகள் உடனேயே தயாரித்து சுடச்சுட வழங்கப்பட இருக்கின்றது. கசூரினாக் கடற்கரை சிறப்பாக இயங்கும் போது இப்பகுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் அதனால் அம்மாச்சி உணவகத்தின் விற்பனைகளும் அதிகரிக்கும் அத்தடன் எமது பாரம்பரிய உணவுகளை ஏனைய இனத்தைச் சார்ந்த மக்களும் உண்டு மகிழ்வதற்கு ஏற்ற வகையாக இந்த உணவகம் தமது சேவைகளை விஸ்தரிக்க இருக்கின்றது.

முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்த நல்லதொரு செயற்பாட்டிற்கு செயல்வடிவம் வழங்கவேண்டியது எமது அனைவரதும் கடமையாகும்.

நான் கடந்த ஐந்த வருடங்களாக வடபகுதியில் முதலமைச்சராகப் பணிபுரிந்து வருவது பலருக்கு மிக்க இடைஞ்சல்களைக் கொடுத்திருப்பதை நான் உணர்கின்றேன் ஒவ்வொருவரும் தாம் தாம் நினைத்த வகையில் செயற்படுவதற்கும் தமது நேர்வழியற்ற சிந்தனைகளை நடைமுறைப் படுத்துவதற்கும் எனது இருப்பு மிக்க இடைஞ்சல்களைக் கொடுத்திருப்பதாக உணர்கின்றேன்.வடமாகாண சபையின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால் இனி நினைத்தபடி செயலாற்ற முடியுமென தயவு செய்து ஒருவரும் எண்ண வேண்டாம் எமது பதவி நிறைவுறுத்தப்பட்டாலும் தழிழர்களின் விடயங்களில் நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்போம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முஸ்லீம் இனத்தைச் சார்ந்த மக்கள் தாம் பல்வேறு கட்சிகளாக அரசியல் முன்னெடுப்புக்களில் பிரிந்து நின்று செயற்படுகின்ற போதும் முஸ்லிம் இனத்தின் நலனுக்கெதிரான வகையில் ஏதாவது நிகழ்வுகள் அல்லது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது உரிமைக்கான ஏகோபித்த குரலைக் கொடுத்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். எம்மவர்களோ மற்றையவர்களின் குலம் கோத்திரத்தை ஆராய்வதில் பொழுதைக் கழிக்கிறார்கள்.என்றார்.

இன்று 24.10.2018 புதன்கிழமை மாலை 4 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் கெளரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

 

காரைநகர் ஈழத்துச்சிதம்பர மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபையின் கலந்துரையாடல் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

?

?

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 19/10/2018 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற வன்னி மர வாழை வெட்டு (மானம்பூ) திருவிழா.

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 19/10/2018 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழா நிகழ்வுக்கு பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து எம்பெருமாள் மதியம் 12:30 மணியளவில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பாலாவோடை பிரதான வீதி ஊடாக பொன்னாவளை வீதி வழியாக திக்கரை முருகப்பெருமான் ஆலயத்தில் வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழாவினை நிகழ்த்திவிட்டு மீண்டும் வளுப்போடை வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்த காட்சிகள்.

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலய மானம்பூ (வாழை வெட்டு ) திருவிழா 19.10.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தின் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 16.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் நடைபெற்றது.(காணொளி)

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தின் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு மாணவர் நூலகத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தின் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு மாணவர் நூலகத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ் பிரதம விருந்தினராகவும் காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரி சு.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு (164) மேல் பெற்றுச் சித்தியடைந்த காரைநகர் கோட்ட மாணவர்கள் பதினைந்து பேரும் கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத் தலைவர் கணேசப்பெருமாள் மயில்வாகனம்,பிரித்தானியக் காரை நலன்புரிச் சங்கப் போஷகர் ப.தவராசா மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகைதந்த பலரும் கலந்து சிறப்பித்ததுடன் காரை கிட்ஸ் பார்க் மழலைகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நூலகத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாசகர்களிடம் சேகரிக்கப்பட்ட விபரங்களுக்கமைய குழுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பத்துப் பேருக்குப் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாகயகர் ஆலயத்தில் 12/10/2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற சதுர்த்தி உற்சவம்.

கனடா  காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் குளங்கள் புனரமைப்பு பணி

 

கனடா  காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் குளங்கள் புனரமைப்பு பணி

நிலம்,  நீர் ,  நெருப்பு,  ஆகாயம்,  காற்று என்கின்ற ஐம்பூதங்களை   கொண்டியங்கும் பூமிப்பந்தில்  பெருமளவிலான பகுதியை நீர்ப்பரப்பு  கொண்டுள்ளது யாவரும் அறிந்ததாகும்.   மனித சமூக வளர்ச்சியில் நீரின்  வளத்தைக்  கொண்டு   விவசாயத்தை பெருக்ககூடியதாக அமைந்தது.  தொடக்ககால விவசாயம்  மழையை நம்பியதாகவும்,   உரியபருவத்தில் மழை பெய்யாவிடில் விவசாயம்  அழிவுக்குள்ளானதும் கருத்திற் கொள்ளப்பட்டது. அத்துடன் கால்நடைகளுக்கு நீர் பருகவும் முறையான நீர்நிலைகள் தேவைப்பட்டன.  இதனால் மழைபெய்யும் காலங்களில் மழை நீரைச் சேமிக்கும் எண்ணம் தோன்றியது.  இச்சிந்தனையில் இருந்தே குளங்கள் உருவாக்கம்  பெற்றன.  குளங்களின்  பயன்பாடாக  தண்ணீரைப் பாதுகாத்தல்,  வறட்சித் தடுப்பு, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல்,  சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் இருந்தது.

குளங்கள் மூலமாக  நீரைச் சேகரித்தல்,   தேக்கிவைத்தல்,  உபரிநீரை வெளியேற்றுதல்,   நீரை வழங்குதல் என்ற செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. மழைநீரைப் பெற்று நிரம்பும் இந்த   மானாவாரிக் குளங்கள்  நேரடியாகக் குளத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழையினால் மட்டுமின்றி,  குளத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிக்குத் தொலைவில் பெய்யும் மழையின் துணையாலும் இக்குளங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும்  நிலமை இருந்தது.

இத்தகைய குளங்கள் முன்னர்  மன்னர்களாலும்,  பின்னராக  அரசாங்கம்களினாலும் , செல்வந்தர்களாலும்,  சமூக  நிறுவனங்களாலும், அக்கறையுள்ள   ஊர்  மக்களாலும் மிகவும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டும்,   பராமரிக்கப்பட்டும்  வந்தன.  இதன்   காரணமாக  சூழலுக்கு  பாதிப்பு ஏற்படாமல்  இயற்கை சமநிலை பேணப்பட்டு  வந்தது.

கடந்த தசாப்த  காலங்களாக  நடைபெற்ற யுத்தத்தாலும்,  மக்களின்  இடப்பெயர்வுகளாலும் முறையாக குளங்கள் பராமரிப்பு மட்டுமின்றி    புனரமைப்பும்  செய்யமுடியாத  நிலையேற்பட்டது.   இதனால்   பிரதேசங்களின்   நுண்  காலநிலை  ( Micro  Climate ) பாதிக்கப்பட்டிருக்கின்றது.    சுற்றுப்புற காற்று  வெப்பநிலை  குறைவடையாமல் போயிருக்கின்றது.  அத்துடன் வறட்சியும், நன்னீர்  வளம் குன்றிப்போய்க்கொண்டிருக்கின்றதையும் காணக்கூடியதாக   இருக்கின்றது.

இத்தகைய  நிலையில்  குளங்களின் அடிப்பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மழைக்காலத்துக்கு  ஏற்ற வகையில் தயார்ப்படுத்தப்படல் வேண்டும்.   இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கை சமநிலையை  ஓரளவேனும் பேணக்கூடிய  நிலை ஏற்படும்.

கனடா  காரை கலாச்சார மன்றத்தின் கல்விப்பணி,   வாழ்வாதார மேம்படுத்தல் உதவி ,   மனிதாபிமான உதவி,   பொருளாதார மேம்பாடு,  சமயப்  பணி   என்கின்ற பல்வேறு இலக்குகளுடன் சுற்றுசூழல்  பாதுகாப்பையும் பேண வேண்டிய தேவையுள்ளது.  ஆகையால் காரைநகரில்  உள்ள குளங்கள் ஆழமாக்கப்பட்டு  புனரமைக்கப்படுகின்ற பணிக்கு அனுசரணை வழங் குகின்றது.  இங்கே காணப்படும் புகைப்படங்கள்   தற்போது  காரைநகரில்  உள்ள  பதின்நான்கு குளங்களில் ஒன்றாகிய  விக்காவில் குளம் தூர்வாரப்படும் போது எடுக்கப்படடவையாகும்.

காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மாணவர் நூலகத்தின் வாணி விழா 16.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று நூலக கேட்போர் கூடத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

 

 

காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மாணவர் நூலகத்தின் வாணி விழா 16.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று நூலக கேட்போர் கூடத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

நூலக குழுவினரும், காரை அபிவிருத்தி சபையினரும் இணைந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் நடைபெறும் கெளரவிப்பு விழாவிற்கான அனைவருக்குமான அழைப்பிதழ் தரப்படுகின்றது.

 

“காரைதீபம் தந்த ஞானதீபம்” சுவாமி முருகேசுப் பெருமான் (பேப்பர் சுவாமி) பற்றிய கட்டுரை.

KARAITHEEPAM

காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்தின் கோரிக்கையின் பேரில் காரை அபிவிருத்தி சபையின் நிதிப்பங்களிப்பில் மெலிஞ்சோடைக்குளம் தூர்வாரப்பட்டு விஸ்தரிக்கும் பணி 25.09.2018 ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்தின் கோரிக்கையின் பேரில் காரை அபிவிருத்தி சபையின் நிதிப்பங்களிப்பில் மெலிஞ்சோடைக்குளம் தூர்வாரப்பட்டு விஸ்தரிக்கும் பணி 25.09.2018 ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல குளங்கள் மழைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்பு தூர்வாரப்படவேண்டிய அவசியம் இருப்பதால் சகோதர மன்றங்களும் நலன்விரும்பிகளும் நிதிப்பங்களிப்பை வழங்க முன்வருமாறு காரை அபிவிருத்தி சபை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. 1990 ம் ஆண்டின் பின்பு பல குளங்கள் தூர்வாரப்படாமல் இருந்ததும் மழைநீர் உடனடியாகவே கடலுக்கு செல்வதுமே தற்பொழுது காரைநகரில் உள்ள கடும் வரட்சிக்கு காரணம் என பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆகவே இதனை ஒரு அவசர விடயமாக கருதி உதவிசெய்ய முன்வருமாறு வேண்டுகோளை விடுக்கின்றது காரை அபிவிருத்தி சபை.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையினரால் 10.10.2018 விக்காவில் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பமாகின.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையினரால் 10.10.2018 விக்காவில் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பமாகின. இப்பணிகளை மேற்பார்வை செய்ய ஆர்வத்துடன் முன்வந்த அப்பகுதியைச் சேர்ந்த திரு. சிவா, திரு. கதிரமலை ஆகியோரை காரை அபிவிருத்தி சபையினர் பாராட்டுகின்றனர்.

காரை அன்னை சைவ உலகிற்களித்த ஞானமுனி பேப்பர் சுவாமி என்றழைக்கப்படும் சுவாமி முருகேசுப் பெருமான்

 

காரை அன்னை சைவ உலகிற்களித்த ஞானமுனி  பேப்பர் சுவாமி என்றழைக்கப்படும் சுவாமி முருகேசுப் பெருமான்

அன்றும்,  இன்றும்,  தெய்வீக மணமும், ஆன்மீக சிந்தனையும், கலாச்சார  விழுமியங்களும் தவழ்கின்ற கிராமமாக திகழ்கின்றது காரைமண். காரணம் என்னவென்றால் இம்மண்ணில்  பழமையும்,  அற்புதங்கள்   நிறைந்த ஆலயங்களது அருளாட்சி ஒருபுறமும், மறுபுறத்தில் இம்மண்ணில் காலத்திற்குகாலம் அவதரித்த ஞானிகள், புலவர்கள், தலைசிறந்த  அறிவியலாளர்கள் போன்றோர் அளித்திட்ட  அருட்செயல்கள்  எனலாம்.

இந்த வகையில் சைவ சித்தாந்தம் எமக்களித்த மணிவாசகரைப் போன்று, காரை மண்ணுடைய  சுவாமி முருகேசுப் பெருமானும் சைவ சித்தாந்த ஞானியாவார். கோவளக் கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின்  அயற்பகுதியில் பர்ணசாலை அமைத்து பிறவிப் பெருங்கடலில் தத்தளித்து அலைந்துலையும் மானிடப்பிறவிகளைப் பிறவித் துயரிலிருந்து  கரையேற்றி,  சைவ சித்தாந்தம் என்னும் அருமருந்து ஊட்டி நின்றவர்  முருகேசு சுவாமிகள் ஆவார். எவ்வுயுறும் ஈ டேற வேண்டும் என்னும் இரங்கு கருணை கொண்டவராக திகழ்ந்திருக்கிறார்.

காரை மண்ணில் வாழ்ந்து,தன்னைஅண்டி வந்தோர்க்கு  உய்யும்  வழிகாட்டியாக மற்றும் அதிசயிக்கத்தக்க    அற்புதங்கள் செய்து  சமாதியடைந்த  சுவாமி முருகேசுப்  பெருமான் வணக்கத்துக்கு உரியவராகின்றார்.  அன்னாரின்    நினைவாக  2018 ஆவணி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆய்வு  மகாநாடும் ” காரை தீபம் தந்த ஞான தீபம்” நூல்  வெளியீடும் நடைபெற்றமை சிறப்பிற்குரியதொன்றாகும்.

இத்தகைய   மகானுக்கு கோவளப் பெருந்துறையை  சேர்ந்த  ஞான முனியின்  பகுதி புனிதபிரதேசமாக  பிரகடனம் செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர்  அன்னாரின் அறக்கட் டளையினர்.   அவர்களின்  அன்னாரைப் பற்றிய நினைவுகளும், வேண்டுகோள்களும்   உங்களுக்காக எடுத்து  வரப்படுகின்றது .

 

பேப்பர் சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள நண்டுப்பாழி

 

 

Swami Murukesanar (2)

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை, காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து நடத்தும் தியாகத்திறன் வேள்வி – 2018 நான்கு பரிவுகளுக்கமான திருக்குறள் போட்டியின் பெறுபேறுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை,

காரைநகர் அபிவிருத்திச்சபையுடன்

இணைந்து நடத்தும் தியாகத்திறன் வேள்வி – 2018

நான்கு பரிவுகளுக்கமான திருக்குறள் போட்டியின் பெறுபேறுகள்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் மொழி, கல்வி, கலை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக கடந்த நான்கு வருடங்களாக போட்டிகள் நடத்தப்பெற்று பரிசில் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வருடம் (2018) இப்போட்டிகளை மேலும் விரிவடையச் செய்துள்ளோம். தரம்-3 இல் இருந்து தரம்-13 வரையுள்ள மாணவர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என்னும் வகையில் வகைப்படுத்தி பேச்சு. கட்டுரை, திருக்குறள் மனனம், பொதுஅறிவு, தனிஇசை, குழுஇசை, ஆகிய துறைகளில் போட்டிகளை நடத்தியுள்ளோம்.

இவ் ஆண்டு போட்டிகள் என்று கருதாமல் மாணவர்களின் அறிவை விருத்தியடையச் செய்யும் வகையில் மாற்றியுள்ளோம். போட்டியாயின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் மாத்திரம் வெற்றி கொள்வர். இதனை விடுத்து இந்த ஐந்து மாணவர்களுடன் 75 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பரிசு வழங்க ஏற்பாடு செய்ததால் திறமையான மாணவர்கள் அனைவரும் பரிசுபெறும் வழியை ஏற்படுத்தியுள்ளோம். இதனை பாடசாலைகள், கல்லூரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுவார்களாயின் ஒவ்வொரு பிரிவிலும் இருபத்தைந்து(25) மாணவர்கள் வெற்றிபெறுவார்கள். இவ்வழியானது முதல்முறையாக ஆரம்பித்த காரணத்தால் பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் சென்ற வருடங்களைவிட அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான மாணவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

திருக்குறள் மனனம், பொதுஅறிவு வினாடிவினா, ஆகிய இரண்டு போட்டிகளும் முதலில் எழுத்துப்போட்டி மூலம் தேர்ந்தெடுத்த பின்னரே நேரடி வாய்மூலப் போட்டிக்கு பங்குபற்றியுள்ளனர்.

மூன்று பிரிவுகளிலும் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

 

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

10.10.2018

 

 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட முழுமையான புள்ளி விபர கையேடு – 2018

 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட முழுமையான  புள்ளி விபர கையேடு – 2018

இலங்கையின்  25 மாவட்டங்களிலும்  உள்ள மாவட்ட செயலகங்களினால் பூரணப்படுத்தப்பட்ட   தரவுகள்   சேகரிக்கப்படுகின்றன.  அத்தரவுகளின் அடிப்படையில்  அம்மக்களுடைய  பல்வேறுவகைப்பட்ட   தேவைகள்  மாவட்ட  அரச அதிபரின் வழிப்படுத்தலில் பூர்த்தி செய்யப்பட்டு  வருகின்றன .

அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய  டிசம்பர்  31, 2017 வரையான  காலப்பகுதிக்குரிய   முழுமையான விபர அறிக்கை   மாவட்ட செயலகத்தினால்   வெளியிடப்பட்டுள்ளது.  இவ்வறிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின்  புவியியல் அம்சம்கள்,  நிர்வாகப்  பிரிவுகள்,  சனத்தொகை மதிப்பீடு,  விவசாயம்,  கால்நடைகள்  மற்றும்  மீன்பிடி,  போக்குவரத்து மற்றும்  தபால்,  கல்வி,  சுகாதாரம்,  மீள் குடியேற்றம்,  சமூக   சேவைகள் அதிலும்  குழந்தைகள் மற்றும் மகளிர் விடயங்கள்,  வீடு   மற்றும்  பிற வசதிகள் பயன்பாடு,  வர்த்தகம் ,  தொழில்கள்  மற்றும் சுற்றுலா,  அபிவிருத்தி திட்டம்,  பொது  அமைப்பு  மற்றும்  பணியிடங்கள்  போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

யாழ் அரச அதிபரின் நேரடி கண்காணிப்பில் காரைநகர்  உள்ளிட்ட  15 உதவி அரச அதிபர் பிரிவுகள்  அடங்குகின்றன.  கீழ்வரும்  இக்கையேட்டை  வாசிப்பதனூடாக காரைநகர்  உதவி அரச அதிபர் பிரிவுக்குரிய  மேற்குறிப்பிடப்பட்ட  சகல விபரங்களையும்  தெரிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கும்.

 

 

Statistical Hand Book Jaffna District 2018

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையால் அல்லின் வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வீடு 05.10.2018 உத்தியோகபூர்வமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவரால் கையளிக்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையால் அல்லின் வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வீடு  05.10.2018 உத்தியோகபூர்வமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவரால் கையளிக்கப்பட்டது.

 

05.10.2018 அன்று காரைநகர் பிரதேச வைத்திய சாலைக்கு முன்பாக பொதுமக்களுக்கான பஸ் தரிப்பிடம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அமரர் வித்துவான் மு. சபாரத்தினம் நினைவாக அவரது மகன் திரு. ச.பாலச்சந்திரன் அவர்களால் காரை அபிவிருத்தி சபையின் ஊடாக அமைத்துக்கொடுக்கப்படுகின்றது.

காரைநகர் நியூ ஸ்ரார் அக்கடமியில் 06.10.2018 சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழா!

காரைநகர் கோவளம் விளையாட்டு கழக தீபாவளி மென்பந்து சுற்றுத்தொடர் 2018 இல் கோவளம் அணி சம்பியன்

 

காரைநகர் கோவளம் விளையாட்டு கழக தீபாவளி மென்பந்து சுற்றுத்தொடர் 2018 இல் கோவளம் அணி சம்பியன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக கோவளம் விளையாட்டு கழகம் நாடாத்தி வரும் மென்பந்து சுற்றுத்தொடரின் 2018 இல் கோவளம் விளையாட்டு கழகம் கிண்ணத்தினை கைப்பற்றியது.கடந்த மாதம் 22 23 24 29 30 திகதிகளில் காரைநகரில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

காரைநகரில் லீக்முறையில் நடைபெறும் ஒரே ஒரு போட்டித்தொடரான இவ் சுற்றுத்தொடரில் இம்முறை 11 அணிகள் பங்குபற்றியதுடன் இறுதிப்போட்டியில் காரைச்சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து கோவளம் விளையாட்டுகழகம் மோதியது.நாணய சுழற்சியில் கோவளம் விளையாட்டு கழக அணித்தலைவர் அருட்குமரன் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்ய கோவள விளையாட்டு கழகமானது நிர்ணயிக்கப்பட்ட பத்து பந்து பரிமாற்றங்களில் ஏழு இலக்குகளை இழந்து எழுபத்து நான்கு ஓட்டங்களை பெற்றது.அந்த அணி சார்பாக சயந்தன் இருபத்தொரு ஓட்டங்களையும் மயூரன் பதினேழு ஓட்டங்களை பெற காரைச்சலஞ்சஸ் அணி சார்பாக விநோதன் இரு இலக்குகளை கைப்பற்றியிருந்தார்.எழுபத்தைந்து ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய காரைச்சலஞ்சஸ் பத்து பந்துபரிமாற்றங்களில் எட்டு இலக்கினை இழந்து நாற்பத்தொன்பது ஓட்டங்களை மாத்திரமே பெற இருபத்தைந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்று கோவளம் விளையாட்டு கழகம் இந்த ஆண்டுக்கான தீபாவளி மென்பந்து சுற்றுத்தொடரினுடைய கிண்ணத்தை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக 4ஓட்டங்களிற்கு 3 இலக்குகளைக் கைப்பற்றிய கோவளம் விளையாட்டுகழக வீரர் சிவகுமார் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை தொடர் ஆட்ட நாயகனாக காரைச்சலஞ்சஸ் கழக அணித்தலைவர் விநோதன் தெரிவானார்.பிரதம விருந்தினராக காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் கலந்து கொண்டு கிண்ணத்தை வழங்கி வைத்தார் அத்துடன் கலாநிதி விளையாட்டு கழக வீரர் தர்சன் இந்த ஆண்டு தொடரில் அதிக ஓட்டங்களை பதிவு செய்த வீரராகவும் அதே கழகத்தை சேர்ந்த சயந்தன் அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரராகவும் தெரிவானதுடன் இப்போட்டித்தொடரில் மூன்றாம் இடத்தினை கலாநிதி விளையாட்டுக்கழகம் கைப்பற்றியது.இந்த ஆண்டு மென்பந்து சுற்றுதொடர் தொலைதொடர்பு அனுசரணையாளராகmobitel இணைந்திருந்ததுடன் கோவளம் விளையாட்டு கழக முன்னாள் வீரர்கள், தலைவர்கள்,காரை மண்ணை சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் அனுசரணையை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட நிர்வாக சபைக் கூட்டத்தில் கனடா காரை கலாசார மன்றத் தலைவர் கலந்துகொண்டு காரைநகர் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினார்.

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட நிர்வாக சபைக் கூட்டத்தில் கனடா காரை கலாசார மன்றத் தலைவர் கலந்துகொண்டு காரைநகர் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினார்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட நிர்வாக சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைமைச் செயலகத்தில் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கனடா காரை கலாசார மன்றத் தலைவர் சபாரத்தினம் பாலச்சந்திரன் கலந்துகொண்டு காரைநகர் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் காரைநகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த கனடா காரை கலாசார மன்றத் தலைவர் சபாரத்தினம் பாலச்சந்திரன் காரைநகரில் தமது மன்றத்தினால் செயற்படுத்துகின்ற எந்த உதவித் திட்டமாக இருந்தாலும் அவை காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் இங்கு மேற்கொள்ள வேண்டிய பொருத்தமான வேலைத்திட்டங்களை இனங்கண்டு காரைநகர் அபிவிருத்திச் சபையின் சிபார்சுடன் எமது மன்றத்திற்கு அனுப்பிவைத்தால் எமது மன்றக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனவும்

காரைநகரில் உள்ள எந்தப் பிள்ளையும் வறுமை காரணமாக நிதியின்றி தமது உயர்கல்வி வாய்ப்பபைத் தவறவிடக்கூடாது அவ்வாறானவர்களுக்கு உதவ நாம் எப்போதும் தயாராக உள்ளோம். அவர்கள் தாம் கற்ற கல்வியின் ஊடாக எதிர்காலத்தில் காரை மண்ணுக்குச் சேவையாற்ற முன்வர வேண்டும் என்றார்.

தற்போது பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர உள்ள மாணவி ஒருவருக்கு மாதாந்த உதவு தொகை வழங்க மன்றம் முன்வந்துள்ளதுடன் வீடின்றித் தவித்த வறிய குடும்பத்திற்கு வீடு ஒன்றும் அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காரைநகர் ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சிற்சபேசன் கேசவராம் 185 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.

காரைநகர் ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சிற்சபேசன் கேசவராம் 185 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.

இப்பாடசாலையிலிருந்து 10 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்களில் ஏனைய 9 பேரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பாடசாலை மிக அண்மையிலேயே மீள ஆரம்பிக்கப்பட்டது. மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக இவ்வாண்டே மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

திரு சுப்பிரமணியம் கதிரிகாமநாதன் இப்பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு பல்வேறு வழிகளில் உதவியதுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக இரு மாடிக் கட்டடம் அமைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.