சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை, காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து நடத்தும் தியாகத்திறன் வேள்வி – 2018 நான்கு பரிவுகளுக்கமான திருக்குறள் போட்டியின் பெறுபேறுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை,

காரைநகர் அபிவிருத்திச்சபையுடன்

இணைந்து நடத்தும் தியாகத்திறன் வேள்வி – 2018

நான்கு பரிவுகளுக்கமான திருக்குறள் போட்டியின் பெறுபேறுகள்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் மொழி, கல்வி, கலை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக கடந்த நான்கு வருடங்களாக போட்டிகள் நடத்தப்பெற்று பரிசில் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வருடம் (2018) இப்போட்டிகளை மேலும் விரிவடையச் செய்துள்ளோம். தரம்-3 இல் இருந்து தரம்-13 வரையுள்ள மாணவர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என்னும் வகையில் வகைப்படுத்தி பேச்சு. கட்டுரை, திருக்குறள் மனனம், பொதுஅறிவு, தனிஇசை, குழுஇசை, ஆகிய துறைகளில் போட்டிகளை நடத்தியுள்ளோம்.

இவ் ஆண்டு போட்டிகள் என்று கருதாமல் மாணவர்களின் அறிவை விருத்தியடையச் செய்யும் வகையில் மாற்றியுள்ளோம். போட்டியாயின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் மாத்திரம் வெற்றி கொள்வர். இதனை விடுத்து இந்த ஐந்து மாணவர்களுடன் 75 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பரிசு வழங்க ஏற்பாடு செய்ததால் திறமையான மாணவர்கள் அனைவரும் பரிசுபெறும் வழியை ஏற்படுத்தியுள்ளோம். இதனை பாடசாலைகள், கல்லூரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுவார்களாயின் ஒவ்வொரு பிரிவிலும் இருபத்தைந்து(25) மாணவர்கள் வெற்றிபெறுவார்கள். இவ்வழியானது முதல்முறையாக ஆரம்பித்த காரணத்தால் பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் சென்ற வருடங்களைவிட அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான மாணவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

திருக்குறள் மனனம், பொதுஅறிவு வினாடிவினா, ஆகிய இரண்டு போட்டிகளும் முதலில் எழுத்துப்போட்டி மூலம் தேர்ந்தெடுத்த பின்னரே நேரடி வாய்மூலப் போட்டிக்கு பங்குபற்றியுள்ளனர்.

மூன்று பிரிவுகளிலும் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

 

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

10.10.2018