Category: CKCA செய்திகள்

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2022″

தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் 1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்க முடிவு.

தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின்

1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும்

தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்க முடிவு.

எதிர்வரும் நொவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் வெற்றியாளர்களிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தங்கப் பதக்கம் வழங்கும் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாற்றத்தின் பிரகாரம் பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் ஆகிய போட்டிகளிலும் பண்ணிசைப் போட்டியிலும் பங்குபற்றி ஒவ்வொரு பிரிவிலும் (ஆறு பிரிவுகள்) 1வது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வெற்றியாளர்களர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கத்தினை வழங்கி ஊக்குவிப்பது என மன்ற நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 2வது 3வது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் போட்டியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படவிருப்பதுடன் பங்குபற்றி வெற்றிபெறத் தவறிய அனைத்தப் போட்டியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நோக்கங்களுள் கனடாவாழ் காரைநகர் இளம் சமுதாயத்தின் மொழி, கலாசார மேம்பாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது முக்கியமானதாகும். இந்நோக்கம் மன்ற யாப்பில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போதய நிர்வாகம் இத்தகைய செயற்பாடுகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதெனத் தீர்மானித்ததன் அடிப்படையிலும் இளம் சமுதாயத்தின் மொழி கலாசார மேம்பாட்டில் அக்கறையுள்ள உறுப்பினர்களது கருத்துக்களின் அடிப்படையிலும் 1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கங்களை வழங்கி ஊக்குவிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படவுள்ள தங்கப் பதக்கங்களிற்கு அனுசரணை வழங்கி உதவ இளம் சமுதாயத்தின் மொழி கலாசார மேம்பாட்டில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட சில உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இதன்பொருட்டு அக்கறையுள்ள மேலும் அனுசரணையாளர்களின் உதவியை எதிர்பார்க்கின்றோம்.

இப்போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு போட்டியாளர்களதும் பெற்றோரதும் ஒத்துழைப்பினை மீண்டும் வேண்டிநிற்கின்றோம். அதாவது போட்டி தினம் வரை காத்திராது போட்டியிட விரும்பும் அனைவரும் karainagar@gmail.com என்கின்ற மன்ற மின்னஞ்சல் ஊடாக பின்வரும் விபரங்களை உடன் பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை ஆங்கிலத்தில் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name:

Last Name:

தொலைபேசி இலக்கம் :

சென்ற யூன் மாதம் கற்ற வகுப்பு:

பங்குபற்றும் பிரிவு:

பங்குபற்ற விரும்பும் போட்டிகள்:

 

             நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

தமிழ்த்திறன் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்கள் “காரை வசந்தம்” அரங்கில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

தமிழ்த்திறன் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியவற்றின்

வெற்றியாளர்கள் “காரை வசந்தம்” அரங்கில்

தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு முதலாக நடாத்தப்பட்டு வருகின்ற தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆண்டுதோறும் காரைநகரைச் சேர்ந்த சாராசரியாக ஐம்பது வரையான பிள்ளைகளே பங்குகொண்டு வருகின்றனர். தரமான முறையில் நடாத்தப்பட்டு வரும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு காரை வசந்தம் அரங்கில் வைத்து பரிசல்கள் வழங்கி ஊக்குவித்து வருகின்றமை சிறப்பானது என்பதுடன் தமிழ்மொழி ஆர்வலர்களது பாராட்டினையும் பெற்று விளங்குகின்றது. பேச்சுப் போட்டியின் முதலாவது வெற்றியாளர் காரை வசந்தம் அரங்கில் தமது பேச்சினை நிகழ்த்த வாய்ப்பளித்து வருவது அப்போட்டியாளர்களிற்கு பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு இப்போட்டியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தங்கப் பதக்கம் வழங்குவதென கனடா-காரை கலாசார மன்றம் தீர்மானித்துள்ளது.

ஆறு பிரிவுகளையும் சேர்ந்த பின்வரும் தகைமையை உடையோர் தங்கப் பதக்கத்தினை பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வர்.

பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் ஆகிய போட்டிகள் மூன்றிலும் பங்குபற்றியவர்களாக இருத்தல் வேண்டும்.

மூன்று போட்டிகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்களுள் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்ற போட்டியாளர் தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொள்வார்.

பண்ணிசைப் போட்டியாளர்களிற்கான தங்கப் பதக்கம்.

பண்ணிசைப் போட்டியாளர்களுள் ஒவ்வொரு பிரிவிலும் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்று முதலாவதாக வரும் போட்டியாளர் தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதுடன் 2வது 3வது வெற்றியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும்.

அதேபோன்று பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் 1வது 2வது 3வது வெற்றியாளர்களிற்கு பரிசல்கள் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்குபற்றி வெற்றியாளர்களாக வரத் தவறியிருப்பனும் அவர்கள் அனைவருக்கும் பங்குபற்றுதல் பரிசல்கள் வழங்கப்படும்.

இன்றே karainagar@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் வழியாக கேட்கப்பட்ட  விபரங்களைப் பதிவுசெய்து போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தினையும் பரிசில்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.

                   நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்

தமிழ்மொழித் திறன், பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோரை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தமிழ்மொழித் திறன், பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோரை முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

எதிர்வரும் நொவம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்றுவோரின் அசௌகரியங்களைத் தவிர்க்கவும் போட்டிகளை சிறப்பாக ஒழுங்கமைப்பதற்கான திட்டமிடலிற்கு ஏதுவாகவும் பங்குபற்ற விரும்புவோர் போட்டி தினம் வரை காத்திராது முற்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பின்வரும் விபரங்களை karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து ஒத்துழைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம். முதற் பெயர், கடைசிப் பெயர் என்பவற்றை மட்டும் ஆங்கலத்தில் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name:

Last Name:

தொலைபேசி இலக்கம்:

சென்ற யூன் மாதத்தில் கற்ற வகுப்பு:

பங்குபற்றும் பிரிவு:

பங்குபற்றவுள்ள போட்டிகள்:

 

                நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

கனடா-காரை கலாசார மன்றம் தமிழ்மொழித் திறன் போட்டி – 2022 வாசிப்பு – பாலர் பிரிவு Junior/Senior Kindergarden Students (திருத்தம்) (புதிது)

கனடா-காரை கலாசார மன்றம்

தமிழ்மொழித் திறன் போட்டி – 2022

வாசிப்பு – பாலர் பிரிவு Junior/Senior Kindergarden Students (திருத்தம்) (புதிது)

 

உங்கள் போட்டிக்கான பிரதி பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Reading-Junior-Senior-Kindergarden-Students-1.pdf

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2022

கனடா – காரை கலாச்சார மன்றம்

நடாத்தும் தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2022

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் November 13, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்தப்படவுள்ளன.

இடம்: Scarborough Civic Centre

காலம்: November 13, 2022 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9.30மணி

தமிழ் திறன் போட்டிகள் 6 பிரிவுகளாக நடைபெறும்.
1. பாலர் பிரிவு (JK,SK)
2. கீழ்ப் பிரிவு (தரம் 1, தரம் 2)
3. மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4. மேற் பிரிவு (தரம் 5, தரம் 6)
5. அதிமேற் பிரிவு (தரம் 7, தரம் 8, தரம் 9)
6. உயர் பிரிவு (தரம் 10, தரம் 11, தரம் 12)

ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும்.

நடைபெறும் போட்டிகள்:
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதுதல்)

பண்ணிசை:
பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
கீழ்ப் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
மேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
அதிமேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்
உயர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்

பேச்சு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள பேச்சுக்குரிய விடயங்களை மனப்பாடம் செய்து பேசுதல் வேண்டும்.

வாசிப்பு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ள வாசிப்புக்கு தரப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வாசித்தல் வேண்டும்.

எழுத்து (சொல்வதெழுதுதல்):
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள எழுத்துக்குரிய விடயங்களை தயார் படுத்திக் கொண்டு வருதல் வேண்டும். போட்டியின் போது சொல்வதெழுதுதல் போன்று கேட்டு மட்டும் எழுதுதல் வேண்டும்.

 

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

பங்குபற்றும் பிள்ளைகள் சரியாக காலை 9.30 மணிக்கு தவறாது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

இப் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை அன்றைய தினம் காலையில் பதிந்து , சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம். பதிவுகள் காலை 9.30 –10.00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் “காரை வசந்தம் – 2022” இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

                   நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

பிரிவுகள்

 

பாலர் பிரிவு: Junior/Senior Kindergarden students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Speech-Junior-Senior-Kindergarden.pdf

 

வாசிப்பு: (திருத்தம்) (புதிது)

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Reading-Junior-Senior-Kindergarden-Students-2.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Spelling-JuniorSenior-Kindergarden-Students.pdf

 

கீழ்ப் பிரிவு: Gr 1 / Gr 2 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Speech-Grade-1-2-Students.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Reading-Grade-1-2-Students.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Spelling-Grade-1-2-Students.pdf

 

மத்திய பிரிவு: Gr 3 / Gr 4 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Speech-Grade-3-4-Students.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Reading-Grade-3-4-Students.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Spelling-3-4-Students.pdf

 

மேற் பிரிவு: Gr 5 / Gr 6 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Speech-Grade-56-docx.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Reading-Grade-5-6-Students.pdf

 

எழுத்து (சொல்வதெழுதுதல்):

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Spelling-Grade-5-6-Students.pdf

 

அதிமேற் பிரிவு: Gr 7 / Gr 8 / Gr 9 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Speech-Grade-7-8-9-Students.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Reading-Grade-789-Students.pdf

 

எழுத்து (சொல்வதெழுதுதல்):

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Spelling-Grade-789-Students.pdf

 

உயர் பிரிவு: Gr 10 / Gr 11 / Gr 12 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Speech-101112-Students.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Reading-101112-Students.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/10/Spelling-10-11.12-Students.pdf

 

காரை வசந்தம் 2022 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காரை வசந்தம் 2022

மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு

சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள்

எதிர்பார்க்கப்படுகின்றன.

பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீயமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் Oct 31, 2022ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 418 5697 / 647 973 4507 / 416 833 3900 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மின்னஞ்சல் விரும்பத்தக்கது.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் Oct 31, 2022ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 418 5697 / 647 973 4507 / 416 833 3900 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2022″

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும்

“காரை வசந்தம் 2022″

கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2022” DEC 10, 2022 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

20வது ஆண்டாக வீசவுள்ள காரை வசந்தம் சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம்.

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் – 2022 பற்றிய அறிவித்தல்.

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும்

தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் – 2022 பற்றிய அறிவித்தல்.

கனடா காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் கார்த்திகை மாதம் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்தில் நடாத்தப்படவுள்ளன.

இடம், காலம், விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

                நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 8வது தடவையாக 05.05.2019 அன்று 8ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

9வது தடவையாக 05.11.2019 அன்று 9ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

10வது தடவையாக 05.05.2020 அன்று 10ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 44,150.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11வது தடவையாக 05.11.2020 அன்று 11ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 37,500.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

12வது தடவையாக 05.05.2021 அன்று 12ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

Karaingar School Interest Report

 

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2021/08/Karaingar-School-Interest-Report.pdf

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் சங்கத்தின் உப- தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. செயற்பாட்டு அறிக்கை, வரவு-செலவு அறிக்கை என்பன முறையே செயலாளர் திரு.ஆறுமுகம் சின்னத்தம்பி, பொருளாளர் திருமதி இந்திரா ஜெயானந்தன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டு பொதுச் சபையினால் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து சங்கத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் ஆகியன தொடர்பில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்றன. மன்றத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழங்குத் தொடர்பில் தலைவர் விளக்கமளித்ததுடன் இவ்வழக்கினை கையாள்வதற்கு திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன், திரு.கந்தையா கனகராசா, திரு.தம்பிஐயா பரமானந்தராசா ஆகியோர் பொதுச் சபையினால் நியமனம் செய்யப்பட்டனர். நடைமுறையில் நிர்வாகரீதியாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சங்கத்தின் யாப்பினை மறுசீரமைத்து தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு; பொதுச் சபை அங்கீகாரமளித்தது.

புதிய நிர்வாக சபைத் தெரிவினை திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர் திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை அவர்கள் நடாத்தி வைத்தார். தலைவர், பொருளாளர், உதவிச் செயலாளர், ஆகிய பதவிகளிற்கு தலா ஒவ்வொருவரிடமிருந்தும் செயலாளர் பதவிக்கு இருவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக திரு.கணேசபிள்ளை அறிவித்தார். தலைவராக திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களும், பொருளாளராக திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம் அவர்களும் உதவிச் செயலாளராக திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பின்னர் செயலாளர் பதிவிக்கான தெரிவினை வாக்கெடுப்பு மூலமாக நடாத்த முற்பட்டவேளை இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் தனது விண்ணப்பத்தினை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த நிலையில் விண்ணப்பித்த திருமதி நாகேஸ்வரி சிவகுமார் செயலாளராக ஏகமனதாகத் தெரிவானார். நிர்வாக சபையிலுள்ள ஏனைய பதவிகளிற்கான தெரிவுகள் சமூகமளித்திருந்த உறுப்பினர்கள் மத்தியிலிருந்து நடைபெற்றன. அனைத்துத் தெரிவுகளும் போட்டியின்றி ஏகமனதாகவே நடைபெற்றிருந்தன.

இளையோரை ஒருங்கிணைத்து செயற்பட முன்வந்த பல்கலைக்கழக மாணவியான செல்வி சகானா குணரத்தினம் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பொதுச் சபை அந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அங்கீகாரமளித்தது.

தெரிவுசெய்யப்பட்ட முழுமையான நிர்வாக சபை விபரம்:

தலைவர்: திரு.சிவசம்பு சிவநாதன்
உப-தலைவர்: கனக சிவகுமாரன்
செயலாளர்: திருமதி நாகேஸ்வரி சிவகுமார்
உதவிச் செயலாளர்: திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன்
பொருளாளர்: திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம்
நிர்வாக உறுப்பினர்கள்:
திரு.தம்பிஐயா பரமானந்தராசா
திருமதி ஞானாம்பிகை குணரத்தினம்
திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன்
திரு.மனோகரன் அரியரத்தினம்

செல்வி சகானா குணரத்தினம் (இளையோர் ஒருங்கிணைப்பாளர்)

கணக்காய்வாளர்: திரு.பஞ்சலிங்கம் கந்தையா.

திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களாக பினவருவோர் தெரிவானார்கள்:

திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன்
திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை
திரு.நற்குணம் பாலேந்திரன்

தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டு உரையாற்றிய திரு.சிவநாதன் அவர்கள் தற்போது கனடா-காரை கலாசார மன்றத்தின் உறுப்பினர்கள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகளைத் தீர்த்து வைத்து அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் தலைவர் பதவியை ஏற்க முன் வந்ததாகவும் புதிய நிர்வாகம் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை அளித்துச் செயலாற்றும் எனவும் குறிப்பிட்டதுடன் தமது முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

 

20.08.2022 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் கோடைகால ஒன்றுகூடல் காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (2022) வாகனத் தரிப்பிடம் பற்றிய முக்கிய அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2022

இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre)
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

காலம்: 24.09.2022 (Sep 24, 2022) சனிக்கிழமை

நேரம்: காலை 9.00 மணிக்கு

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 24.09.2022 (Sep 24, 2022) சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre) மண்டபத்தில் நடைபெற உள்ளது.

வாகனங்களில் வருபவர்கள் ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டப வாகனத் தரிப்பிடங்களில் இலவசமாக உங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும் என்பதனை அறியத் தருகின்றோம்.

CKCA’s Annual General Meeting 24.09.2022
Scarborough Civic Centre – Parking Arrangement
Town Centre Court Entrance
Go To the Gate
Level One
Press the Buzzer – Security will allow us to park (as our meeting schedule has been notified to the security.

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 24.09.2022 (Sep 24, 2022)

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு

உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 24.09.2022 (Sep 24, 2022)

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக  சபை / போஷகர்  சபை / கணக்காய்வாளர்

2022 – 2023 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்.

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  1. தலைவர்
  2. உப தலைவர்
  3. செயலாளர்
  4. உப செயலாளர்
  5. பொருளாளர்
  6. உப பொருளாளர்
  7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
  8. 6 தயார்நிலை உறுப்பினர்கள்

கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2021, 2022ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் 22.09.2022 (Sep 22, 2022) வியாழக்கிழமை  நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின் ( 24.09.2022)  போது நடைபெறும்.

இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2024 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.

பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு தேர்தல் மண்டபத்தில் வைத்தும் விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

குறிப்பு:

ஐந்து திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை 22.09.2022 (Sep 22, 2022) வியாழக்கிழமை  நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக ckcaelection2022@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

       திட்டமிடல் போசகர் சபை

கனடா காரை கலாச்சார மன்றம்

 

 விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/09/CKCA-ELECTION-APPLICATION-FORM-2022.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (நிகழ்ச்சி நிரல்) Sep 24, 2022 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2022

இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre)
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

காலம்: 24.09.2022 (Sep 24, 2022) சனிக்கிழமை

நேரம்: காலை 9.00 மணிக்கு

நிகழ்ச்சி நிரல்

1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும்.

2. கடவுள் வணக்கம்

3. அகவணக்கம்

4. உப தலைவர் உரை

5. செயலாளர் அறிக்கைகள்(சென்ற பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை)

6. பொருளாளர் அறிக்கை

7. புதிய நிர்வாக சபை தெரிவு

தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், உபபொருளாளர், 13 நிர்வாக சபை உறுப்பினர்கள், 6 தயார்நிலை உறுப்பினர்கள், 5 திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள், கணக்காய்வாளர்.

8. 1. நிர்வாக சபையின் பதவிக்காலத்தில் மன்றத்தின் அங்கத்தவர்கள் நிர்வாகத்தில் தலையீடு செய்து நிர்வாகத்தினை குழப்ப முயற்சி செய்தலை முற்றாக தவிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

     2. மன்றத்திற்கு எதிராகவும், மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராகவும் திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் நஸ்டஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் ( Ontario Superior Court Justice) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மன்ற நிர்வாகத்தால் மன்ற அங்கத்தவர்களுக்கு விளங்கப்படுத்தலும் தீர்மானம் நிறைவேற்றுதலும் மற்றும் உபகுழு நியமித்தல்.

9. அங்கத்தவர்கள் கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் வேறு பிரேரணைகளும் தீர்மானம் நிறைவேற்றுதலும்

10. அங்கத்தவர் வருட சந்தா மற்றும் ஆயுள் சந்தா பணம் தீர்மானித்தல்

11. புதிய நிர்வாக சபைத் தலைவர் உரை

12. புதிய நிர்வாக சபையின் எதிர்கால திட்டங்கள்

13. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல்

14. நன்றியுரை

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்!

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2022/2023 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2021ம், 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவிற்கான அறிவித்தல் (காலம், இடம்) கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர்மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும்கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் மூன்று தினங்களிற்குமுன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

குறிப்பு : அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

CANADA KARAI CULTURAL ASSOCIATION APPLICATION FOR MEMBERSHIP 2022

 

Verification

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 20.08.2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்

20.08.2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. வழமைபோல இந்தவருடமும் 20.08.2022 சனிக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை 7.00 மணி வரை கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் Morningside பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

பல நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரை மக்கள் ஒன்று கூடலில் கலந்து சிறப்பித்து ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தும் காரை மண்ணை பெருமைப்படுத்தினர். அத்துடன் எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு வழியேற்படுத்திக்கொடுத்துள்ளது.

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன் கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும், தொண்டர்களும், இளையோரும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் செயலாற்றினர்.

பாணும் பருப்பும் அதனை தொடர்ந்து BBQ, ஊர் சுவையுடன் கூடிய சைவ மற்றும் அசைவ கூழ், மாலையில் சுவை மிக்க இனிய கனடிய சோளம், கொத்து றொட்டி இவற்றுடன் சிறுவர்களிற்கு Frezee மற்றும் குளிர் பானங்களுடன் நாள் முழுவதும் வழங்கப்பட்டன.

சிறியோர், இளையோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற கவர்ச்சி மிகு விளையாட்டுக்களுடன் குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி போட்டிகளும் நடைபெற்றது.

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் தாய்ச்சி போட்டி, தாம்பிழுவைப் போர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள் செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை), அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது.

இளைய தலை முறையினரின் சிறப்பான பங்களிப்பும், நெறியாள்கையும் மிகவும் பிரமிக்கவைத்தது. அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்ற இந்த வருட ஒன்றுகூடல் கலந்து கொண்டவர்களை பெருமையடையச்செய்துள்ளதுடன் மண்ணின் புகழை நிலை நிறுத்தியுள்ளது.

இவ்வருட ஒன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்கு ஒத்துழைத்த இளைய தலைமுறையினர், நிர்வாகசபை உறுப்பினர்கள், தொண்டர்கள், அனுசரணையாளர்கள், பல விதமான உதவிகள் புரிந்த நல்லுள்ளம்கள், பங்கு பற்றியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

காரைஒன்றுகூடல் காணொளி கூடிய விரைவில் எடுத்து வரப்படும்.

காரை ஒன்றுகூடல் முழுமையான புகைப்படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/J9FvvVgVdjGu97R67

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் சனிக்கிழமை (20.08.2022) காலை 8.00 மணி முதல்!

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்!

  கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 20.08.2022 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2017ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்

Under 7 – 2015, 2016ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
3. 100M – ஆண்கள்
4. 100M – பெண்கள்

Under 9 – 2013, 2014ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்

Under 11 – 2011, 2012ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
7. 100M – ஆண்கள்
8. 100M – பெண்கள்

Under 13 – 2009, 2010ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
 9. 200M – ஆண்கள்
10. 200M – பெண்கள்
11. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2004 முதல் 2008ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
12. 200M – ஆண்கள்
13. 200M – பெண்கள்

Over 19  – 2003 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
14. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
15. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 60
16. முதியோர் மெதுநடை – ஆண்கள்
17. முதியோர் மெதுநடை – பெண்கள்

 

 குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர்தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

RED – Mississauga, Brampton, Cambridge – WEST

BLUE- Scarborough, Etobicoke – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 20.08.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 18.08.2022 வியாழக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

18.08.2022 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

 

 

CKCA GET TOGETHER 2022 VOLUNTEER REGISTRATION

 

Verification

காரை ஒன்றுகூடல் – 2022 அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

காரை ஒன்றுகூடல் – 2022

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது

கனடா காரை கலாச்சார மன்றம்

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஆவலோடு நோக்கப்பட்டு வந்த கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி மாதம் 20, 2022 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் Morningside Park, Area 8,9 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: karainagar@gmail.com

 

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய சித்திரை வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்!

கனடா-காரை கலாசார மன்றத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்கினை எதிர்கொண்டு தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படும் கணிசமான செலவீனங்களை ஈடு செய்வதற்கு நன்கொடை வழங்கி உதவுமாறு அன்பான வேண்டுகோள்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்கினை எதிர்கொண்டு தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படும் கணிசமான செலவீனங்களை ஈடு செய்வதற்கு நன்கொடை வழங்கி உதவுமாறு அன்பான வேண்டுகோள்.

கனடா-காரை கலாசார மன்றமானது கடந்த 32 ஆண்டுகளாக காரை மண்ணின் உறவுகளின் நலன்களிற்காக தளராது பணியாற்றி வருவது மட்டுமல்லாது வரலாற்றுப் பெருமை மிக்க காரைநகரின் பெருமையினையும் புகழையும் நிலைநாட்டி வருகிறது. இந்த மன்றத்தின் நிர்வாகத்தில் அங்கம் வகித்து எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றியவர்கள் அனைவரும் போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்களாக விளங்குபவர்கள். அத்தகைய காரை. மண்ணின் சேவையாளர்கள் சிலருக்கு எதிராகவும், மன்றத்திற்கு எதிராகவும் திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் நஸ்டஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது துரதிஸ்டவசமானதாகும். மன்றத்தின் ஊடாக காரை.மண்ணின் உறவுகளினது நலன்களிற்காக தொண்டு அடிப்படையில் அயராது அர்ப்பணிப்புடன் உழைத்த – உழைத்து வருகின்ற மன்றத்தின் உறுப்பினர்களினது உரிமைகளை நிலைநாட்டி அவர்களையும் மன்றத்தையும் பாதுகாக்க உதவுகின்ற பொறுப்பும், கடமையும் காரைநகர் சமூகத்தைச் சார்ந்துள்ளது எனக் கருதுகின்றோம். மன்றத்தினதும் காரைநகர் சமூகத்தினதும் எதிர்கால நலன் சார்ந்து இந்த வழக்கினை எதிர்கொள்ளும் கனடா-காரை கலாசார மன்றமானது மண்ணின் பற்றாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி பணியாற்றக்கூடிய நிலையினை ஏற்படுத்த உதவுவது எனத் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் இவ்வழக்கிற்கு ஏற்படக்கூடிய கணிசமான செலவீனங்களை ஈடுசெய்வதற்கு உங்கள் நன்கொடைகளை எதிர்பார்க்கின்றோம். நன்கொடை வழங்குவதன் மூலம் நீங்கள் வழங்குகின்ற ஆதரவானது நேர்மையான முறையில் சமூகத்திற்காக உழைத்த – உழைத்து வருகின்ற – உழைக்கவுள்ள சேவையாளர்களிற்கு பாதிப்பு ஏற்படும்போது சமூகம் உதவத் தயங்காது என்கின்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அமையும். நிலைமையைப் புரிந்துகொண்டு சிறிதோ பெரிதோ தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி உதவுவீர்கள் என நம்புகின்றோம். பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு E-Transfer செய்வதன் ஊடாக உங்கள் நன்கொடைகளை வழங்கி உதவுமாறு அன்பாக வேண்டிநிற்கின்றோம்.

karainagar@gmail.com

             நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் 20.12.2021 திங்கட்கிழமை நடாத்தப்பட்ட ஆருத்திரா தரிசனம் அன்று இடம்பெற்ற காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி! (காணொளி)

20.12.2021 திங்கட்கிழமை அன்று றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆருத்திரா தரிசனம் காட்சிகள்! (புதிது)

 

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/aLjo4dEojNX4k6G76

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் இன்று திங்கட்கிழமை (20.12.2021) அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் இன்று திங்கட்கிழமை (20.12.2021) அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

 

 

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/7A9xmveA1MUdKiFZ7

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (20.12.2021- திங்கட்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) எதிர்வரும் 20ஆம் திகதி(20.12.2021) திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 20ஆம் திகதி(20.12.2021) திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4..45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு : பொருளாளர் – 647 339 5481, செயலாளர் – 416 418 7497

மின்னஞ்சல்: karainagar@gmail.com

           நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்