கனடா-காரை கலாசார மன்றத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்கினை எதிர்கொண்டு தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படும் கணிசமான செலவீனங்களை ஈடு செய்வதற்கு நன்கொடை வழங்கி உதவுமாறு அன்பான வேண்டுகோள்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்கினை எதிர்கொண்டு தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படும் கணிசமான செலவீனங்களை ஈடு செய்வதற்கு நன்கொடை வழங்கி உதவுமாறு அன்பான வேண்டுகோள்.

கனடா-காரை கலாசார மன்றமானது கடந்த 32 ஆண்டுகளாக காரை மண்ணின் உறவுகளின் நலன்களிற்காக தளராது பணியாற்றி வருவது மட்டுமல்லாது வரலாற்றுப் பெருமை மிக்க காரைநகரின் பெருமையினையும் புகழையும் நிலைநாட்டி வருகிறது. இந்த மன்றத்தின் நிர்வாகத்தில் அங்கம் வகித்து எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றியவர்கள் அனைவரும் போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்களாக விளங்குபவர்கள். அத்தகைய காரை. மண்ணின் சேவையாளர்கள் சிலருக்கு எதிராகவும், மன்றத்திற்கு எதிராகவும் திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் நஸ்டஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது துரதிஸ்டவசமானதாகும். மன்றத்தின் ஊடாக காரை.மண்ணின் உறவுகளினது நலன்களிற்காக தொண்டு அடிப்படையில் அயராது அர்ப்பணிப்புடன் உழைத்த – உழைத்து வருகின்ற மன்றத்தின் உறுப்பினர்களினது உரிமைகளை நிலைநாட்டி அவர்களையும் மன்றத்தையும் பாதுகாக்க உதவுகின்ற பொறுப்பும், கடமையும் காரைநகர் சமூகத்தைச் சார்ந்துள்ளது எனக் கருதுகின்றோம். மன்றத்தினதும் காரைநகர் சமூகத்தினதும் எதிர்கால நலன் சார்ந்து இந்த வழக்கினை எதிர்கொள்ளும் கனடா-காரை கலாசார மன்றமானது மண்ணின் பற்றாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி பணியாற்றக்கூடிய நிலையினை ஏற்படுத்த உதவுவது எனத் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் இவ்வழக்கிற்கு ஏற்படக்கூடிய கணிசமான செலவீனங்களை ஈடுசெய்வதற்கு உங்கள் நன்கொடைகளை எதிர்பார்க்கின்றோம். நன்கொடை வழங்குவதன் மூலம் நீங்கள் வழங்குகின்ற ஆதரவானது நேர்மையான முறையில் சமூகத்திற்காக உழைத்த – உழைத்து வருகின்ற – உழைக்கவுள்ள சேவையாளர்களிற்கு பாதிப்பு ஏற்படும்போது சமூகம் உதவத் தயங்காது என்கின்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அமையும். நிலைமையைப் புரிந்துகொண்டு சிறிதோ பெரிதோ தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி உதவுவீர்கள் என நம்புகின்றோம். பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு E-Transfer செய்வதன் ஊடாக உங்கள் நன்கொடைகளை வழங்கி உதவுமாறு அன்பாக வேண்டிநிற்கின்றோம்.

karainagar@gmail.com

             நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.