Category: CKCA அங்கத்துவம்

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்!

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2022/2023 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2021ம், 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவிற்கான அறிவித்தல் (காலம், இடம்) கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர்மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும்கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் மூன்று தினங்களிற்குமுன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

குறிப்பு : அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

CANADA KARAI CULTURAL ASSOCIATION APPLICATION FOR MEMBERSHIP 2022

 

Verification

பொது அறிவித்தல்

பொது அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்ற பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறவிருப்பதால் 2020, 2021ம் ஆண்டுகளுக்கான மன்ற அங்கத்துவ சந்தாப்பணம் செலுத்தாதோர் உடனடியாக karainagar@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் அனுப்பவும்.

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

இதுவரை இவ்வருடத்திற்கான (2016)அங்கத்துவ பணத்தினை செலுத்தாதவர்கள் தயவுசெய்து அங்கத்துவ பணத்தினை செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

TD Canada Trust Bank மற்றும் PAYPAL மூலம் அங்கத்துவ பணத்தினை செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வங்கி கணக்கு வருமாறு:

Bank: TD Canada Trust Account Number: 0000711 Transit Number: 1029

 

 

PAYPAL


வங்கிக் கணக்கில் வைப்பில் இட்ட பின்னர் தயவு செய்து மன்றத்தின் தொலைபேசி இலக்கமான 416 642 4912 என்ற இலக்கத்தில் அழைத்து அறியத்தரவும்.

 

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்

CKCA Membership