தமிழ்த்திறன் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்கள் “காரை வசந்தம்” அரங்கில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

தமிழ்த்திறன் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியவற்றின்

வெற்றியாளர்கள் “காரை வசந்தம்” அரங்கில்

தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு முதலாக நடாத்தப்பட்டு வருகின்ற தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆண்டுதோறும் காரைநகரைச் சேர்ந்த சாராசரியாக ஐம்பது வரையான பிள்ளைகளே பங்குகொண்டு வருகின்றனர். தரமான முறையில் நடாத்தப்பட்டு வரும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு காரை வசந்தம் அரங்கில் வைத்து பரிசல்கள் வழங்கி ஊக்குவித்து வருகின்றமை சிறப்பானது என்பதுடன் தமிழ்மொழி ஆர்வலர்களது பாராட்டினையும் பெற்று விளங்குகின்றது. பேச்சுப் போட்டியின் முதலாவது வெற்றியாளர் காரை வசந்தம் அரங்கில் தமது பேச்சினை நிகழ்த்த வாய்ப்பளித்து வருவது அப்போட்டியாளர்களிற்கு பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு இப்போட்டியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தங்கப் பதக்கம் வழங்குவதென கனடா-காரை கலாசார மன்றம் தீர்மானித்துள்ளது.

ஆறு பிரிவுகளையும் சேர்ந்த பின்வரும் தகைமையை உடையோர் தங்கப் பதக்கத்தினை பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வர்.

பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் ஆகிய போட்டிகள் மூன்றிலும் பங்குபற்றியவர்களாக இருத்தல் வேண்டும்.

மூன்று போட்டிகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்களுள் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்ற போட்டியாளர் தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொள்வார்.

பண்ணிசைப் போட்டியாளர்களிற்கான தங்கப் பதக்கம்.

பண்ணிசைப் போட்டியாளர்களுள் ஒவ்வொரு பிரிவிலும் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்று முதலாவதாக வரும் போட்டியாளர் தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதுடன் 2வது 3வது வெற்றியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும்.

அதேபோன்று பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் 1வது 2வது 3வது வெற்றியாளர்களிற்கு பரிசல்கள் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்குபற்றி வெற்றியாளர்களாக வரத் தவறியிருப்பனும் அவர்கள் அனைவருக்கும் பங்குபற்றுதல் பரிசல்கள் வழங்கப்படும்.

இன்றே karainagar@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் வழியாக கேட்கப்பட்ட  விபரங்களைப் பதிவுசெய்து போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தினையும் பரிசில்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.

                   நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்