தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் 1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்க முடிவு.

தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின்

1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும்

தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்க முடிவு.

எதிர்வரும் நொவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் வெற்றியாளர்களிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தங்கப் பதக்கம் வழங்கும் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாற்றத்தின் பிரகாரம் பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் ஆகிய போட்டிகளிலும் பண்ணிசைப் போட்டியிலும் பங்குபற்றி ஒவ்வொரு பிரிவிலும் (ஆறு பிரிவுகள்) 1வது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வெற்றியாளர்களர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கத்தினை வழங்கி ஊக்குவிப்பது என மன்ற நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 2வது 3வது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் போட்டியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படவிருப்பதுடன் பங்குபற்றி வெற்றிபெறத் தவறிய அனைத்தப் போட்டியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நோக்கங்களுள் கனடாவாழ் காரைநகர் இளம் சமுதாயத்தின் மொழி, கலாசார மேம்பாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது முக்கியமானதாகும். இந்நோக்கம் மன்ற யாப்பில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போதய நிர்வாகம் இத்தகைய செயற்பாடுகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதெனத் தீர்மானித்ததன் அடிப்படையிலும் இளம் சமுதாயத்தின் மொழி கலாசார மேம்பாட்டில் அக்கறையுள்ள உறுப்பினர்களது கருத்துக்களின் அடிப்படையிலும் 1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கங்களை வழங்கி ஊக்குவிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படவுள்ள தங்கப் பதக்கங்களிற்கு அனுசரணை வழங்கி உதவ இளம் சமுதாயத்தின் மொழி கலாசார மேம்பாட்டில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட சில உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இதன்பொருட்டு அக்கறையுள்ள மேலும் அனுசரணையாளர்களின் உதவியை எதிர்பார்க்கின்றோம்.

இப்போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு போட்டியாளர்களதும் பெற்றோரதும் ஒத்துழைப்பினை மீண்டும் வேண்டிநிற்கின்றோம். அதாவது போட்டி தினம் வரை காத்திராது போட்டியிட விரும்பும் அனைவரும் karainagar@gmail.com என்கின்ற மன்ற மின்னஞ்சல் ஊடாக பின்வரும் விபரங்களை உடன் பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை ஆங்கிலத்தில் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name:

Last Name:

தொலைபேசி இலக்கம் :

சென்ற யூன் மாதம் கற்ற வகுப்பு:

பங்குபற்றும் பிரிவு:

பங்குபற்ற விரும்பும் போட்டிகள்:

 

             நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.