கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 24.09.2022 (Sep 24, 2022)

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு

உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 24.09.2022 (Sep 24, 2022)

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக  சபை / போஷகர்  சபை / கணக்காய்வாளர்

2022 – 2023 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்.

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  1. தலைவர்
  2. உப தலைவர்
  3. செயலாளர்
  4. உப செயலாளர்
  5. பொருளாளர்
  6. உப பொருளாளர்
  7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
  8. 6 தயார்நிலை உறுப்பினர்கள்

கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2021, 2022ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் 22.09.2022 (Sep 22, 2022) வியாழக்கிழமை  நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின் ( 24.09.2022)  போது நடைபெறும்.

இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2024 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.

பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு தேர்தல் மண்டபத்தில் வைத்தும் விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

குறிப்பு:

ஐந்து திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை 22.09.2022 (Sep 22, 2022) வியாழக்கிழமை  நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக ckcaelection2022@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

       திட்டமிடல் போசகர் சபை

கனடா காரை கலாச்சார மன்றம்

 

 விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/09/CKCA-ELECTION-APPLICATION-FORM-2022.pdf