Category: SKDB செய்திகள்

காரை நிலா நூல் அறிமுகவிழா, சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் பத்தாவது ஆண்டு சிறப்பு மலர்

cover_nila_fr    

 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் பத்தாவது ஆண்டு சிறப்புமலராகிய காரைநிலா – 2014 அறிமுகவிழாவும், நூலகப் பணி புரிந்தோருக்கான கௌரவிப்பும், காரைநகர் விளையாட்டுக்  கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்குதலும் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் திருவாளர் சிவா மகேசன் தலைமையில் நடைபெற்றது. ஆளுமை விருத்தியே அபிவிருத்தியின் அடிப்படை என்பதற்கிணங்க:

1.    எமது கிராமத்தில் நூலக விருத்தி, நூல்பதிப்பு, மாணவர் அறிவு சார் விருத்தி.
2.    இளையோரின் விளையாட்டுத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்கப்படுத்தல்.
3.    காரை நிலா –2014 சிறப்பு மலர் மற்றும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்றக் கீதம் இறுவெட்டு வடிவில் வெளிவர உழைத்தவர்களை கௌரவித்தல்.

    ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஓர் விழாவை காரைநகரில் ஏற்பாடு செய்ய சுவிஸ்- காரை அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது. 

   இதன் முதலாவது முன்னேற்பாட்டுக் கூட்டம் 10.08.2014 அன்று காரை அபிவருத்திச் சபை நூலகத்தில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் 14 பேர் அடங்கிய விழாக் குழு தெரிவு செய்யப்ட்டது:

1.    திரு. சிவா மகேசன்
இளைப்பாறிய அரசாங்கப் பரீட்சாதிகாரி
2.    பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்,
இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர் 
3.    பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, 
முன்னாள் பாடசாலை அதிபர்
4.    திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி
யாழ்ற்றன் கல்லூரி அதிபர் 
5.    கலாநிதி. கென்னடி விஐயரத்தினம், 
இணைப் பேராசிரியர், எதியோப்பியா
6.    திரு. இராஜசிங்கம் திருப்புகலூர்சிங்கம்
கிராம சேவையாளர், காரைநகர் 
7.    திரு.அருணாசலம் வரதராஐன் 
பிரதி அதிபர், சித்தி விநாயகர் வித்தியாலயம், கூமாங்குளம், வவுனியா 
8.    திரு. நல்லதம்பி கிருஷ்ணபவான் 
ஆசிரியர், யாழ்ற்றன் கல்லூரி
9.    திரு. வேலுப்பிள்ளை சபாலிங்கம் 
செயலாளர் கலாநிதி.ஆ.தியாகராஜா அறிவியல் அறக்கட்டளை
10.    திரு. கைலாசபிள்ளை நாகராஜா

 பதிவேட்டுக் காப்பாளர், சாவகச்சேரி

11.    திரு. சபாநடேசன் சிவரூபன் 
தபாலக ஊழியர், காரைநகர்  
12.    திரு. ப. ஐங்கரன், 
சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர், காரைநகர் பிரதேச செயலகம்
13.    திரு. நடராசா பாரதி
சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர், காரைநகர் பிரதேச செயலகம்
14.    திரு.நாகலிங்கம்  பாலகிருஷ்ணன் 
முன்னாள் பனை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர் 
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இரண்டாவது கூட்டம் 26.08.2014 மாலை 4.30 மணிக்கு யா.காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் திருவாளர். சிவா மகேசன் தலைமையில் இடம் பெற்றது.  மேற்படி விழாவை 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கலாநிதி ஆ. தி. ம. ம. வித்தியாலய நடராசா மண்டபத்தில் நடாத்துவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எமது கிராமத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கவும், அவர்கள் எமது கிராமத்தின் அபிவிருத்தியை, வரலாற்றை, புலம்பெயர்ந்தோர் வாழ்வை, கருத்துக்களை தெரிந்து கொள்ளு முகமாக, ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம், காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, சுந்தரமூர்த்தி வித்தியாலயம், வியாவில் சைவ வித்தியாலயம் அகிய பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களால் தெரிவு செய்யப்பட்ட 10ஆம் ஆண்டு, 11ஆம் ஆண்டு, 12ஆம் ஆண்டு வகுப்புக்களைச் சேர்ந்த தலா 5 மாணவர்கள் விகிதம்  40 பாடசாலை மாணவர்களுக்கு காரைநிலா-2014 புத்தகங்கள் வழங்குவதும், தெரிவு செய்யப்பட்ட காரைநகர் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

         எமது கிராமத்தில் பல நீண்ட காலமாக மாணவர்களுக்காக பணியாற்றிவருபவரும், பல நூல்களைப் பதிப்பித்ததன் மூலம் சைவத்திற்கும், தமிழிற்கும் உழைத்து வருபவருமாகிய மதிப்புக்குரிய கலாநிதி சிவஸ்ரீ  க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களையும், மாணவர்களின் சொத்தாகக் கருதப்படும் இரண்டு நூலகங்களை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் பங்கேற்றுப் பெரும் தொண்டாற்றி வரும்  ஓய்வு பெற்ற மருத்துவர் (RMP) சி. நடராசா அவர்களும், மகாராணி புடவையக உரிமையாளர் திரு. இ. சோமசேகரம் அவர்களும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.

   காரைநகர்                                         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை சார்பாக
29.08.2014                                             காரை நிலா நூலறிமுக விழாக் குழுவினர்.

 

 


காரை நிலா மலர் அறிமுகவிழா
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 
பத்தாவது ஆண்டுச் சிறப்பு மலர்

 இடம் 
நடராசா ஞாபகார்த்த மண்டபம்
கலாநிதி ஆ. தி. ம. ம. வித்தியாலயம், 
காரைநகர்

காலம்;
 2014- 09- 07 (ஞாயிற்றுக் கிழமை)
காலை 8;.30 மணி

தலைமை
பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் 
(இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்)
விருந்தினர்கள்
வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி
வே. தருமரத்தினம் மற்றும்
பேராசிரியர் கலாநிதி
வை. பரமேஸ்வரன் M.Sc, Ph. D
முன்னாள் மருத்துவ பீடாதிபதி, 
 யாழ்.பல்கலைக்கழகம்
தாங்களும் வருகை தந்து 
தாய் மண்ணைக் கௌரவிக்க வேண்டுகிறோம்
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே
நூலறிமுக விழாக் குழுவினர்

நிகழ்ச்சி நிரல்

     மங்கள விளக்கேற்றல்
     இறை வணக்கம்: செல்வி. லீலாவதி
     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக் கீதம் இசைத்தல்
     தமிழ் மொழி வாழ்த்து: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலய மாணவிகள்
     வரவேற்புரை: திரு. வேலுப்பிள்ளை முருகமூர்த்தி, அதிபர் 
     தலைமையுரை: பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் 
     சிறப்புப் பிரதி வழங்கல்
     நூலறிமுக உரை: கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
     நூற் திறனாய்வு: பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை
     பதிலுரை: திரு. அருணாசலம் வரதராஜன், ஆசிரியர் 
     காரை நிலா மற்றும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக் கீதம் இறுவெட்டு வடிவில் வெளிவர பணியாற்றியவர்களுக்கான கௌரவிப்பு
     நூலகத்துறையில் பணியாற்றியவர்களுக்கான கௌரவிப்பு
     ஏற்புரை: இளைப்பாறிய மருத்துவர் சுப்பிரமணியம் நடராசா 
     விருந்தினர் உரைகள்
     விளையாட்டுப் பொருட்கள் வழங்கல்
     பட்டிமன்றம்: காரைநகர் வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது பொருள் வளர்ச்சியா? ஆளுமை வளர்ச்சியா?
     நன்றியுரை: திரு. இ. திருப்புகலூர்சிங்கம்

 

 


நூலகத்துறையில் பணியாற்றியாற்றியமைக்காக
மாண்புறுவோர்:

                       1
பல அரிய நூற்களைச்
எழுதி, சேகரித்து, பதிப்பித்தமைக்காக

பண்டிதமணி கலாநிதி சிவ ஸ்ரீ. க. வைத்தீஸ்வரக் குருக்கள்

                           2

காரை அபிவிருத்திச் சபை
மாணவர் நூலக வளர்ச்சிக்குத்
தொண்டாற்றியமைக்காக

இளைப்பாறிய மருத்துவர் திருவாளர்
சுப்பிரமணியம் நடராசா (RMP)

3
கணபதீஸ்வரக் குருக்கள் நூலக
தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
தொண்டாற்றியமைக்காக

திருவாளர் க. சோமசேகரம்
மகாராணி புடவையக உரிமையாளர்

காரைநகர் இளையோரின்
நூல் வாசிப்புப் பழக்கத்தையும்
ஆளுமை வளர்ச்சியையும்
மேம்படுத்த மனங்கொண்டு
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் 
ஏற்பாட்டில் இடம்பெறும் 
இவ் விழாவிற் கலந்து சிறப்பிக்குமாறு
உளமார்ந்த அன்புடன்
அழைக்கின்றோம்.


காரைநகர்                                          சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மற்றும்
29-08-2014                                           காரைநிலா நூலறிமுக விழாக் குழுவினர்.

 

 

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் நிதி உதவியுடன் கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை 18 பேருக்கு 27.06.2014இல் மூளாய் வைத்தியசாலையில் நிறைவுற்றது.

                                "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

 

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை அறிமுக நாளில் இருந்து எமது கிராமத்து உறவுகளின் சுகாதார சேவையை முன்னிலைப் படுத்தி வருகின்றது. காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அதிகாரி தங்கும் அறை, ஈ.சி.ஜி அறை நிர்மாணிப்பு, சீறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உதவி வேண்டி நின்றவர்களுக்கு நிதியுதவி என தனது சேவையை செய்தமை யாவரும் அறிந்ததே.

மருத்தவ உதவி திட்டத்தின் கீழ் காரைநகரில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்ப அங்கத்தவர்களை எமது உப குழுவான காரை அபிவிருத்திச் சபையினால் 22 பேர் தெரிவு செய்யப்பட்டு இவர்களில் 18 பேருக்கு கண்படர் (Cataract) சிகிச்சை மூளாய் வைத்திய சாலையில் Dr.S.குகதாசன் அவர்களால் 27.06.2014இல் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி மருத்துவ உதவித்திட்ட கண்படர் (Cataract) சிகிச்சைக்கு நான்குலட்சம் ரூபாய்களும், காரைநகர் அரசினர் வைத்தியசாலை பிரசவஅறை, மகப்பேற்றுவிடுதி புனரமைப்புக்கு ஐந்துலட்சம் ரூபாய்களும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்படர் (Cataract) சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டோரின் பெயர் விபரமும் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இச் சிகிச்சையை திறம்பட ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த Dr.S.குகதாசன் அவர்களுக்கும், மூளாய் வைத்திய சாலை நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும், காரை அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                                       நன்றி

                                      "மக்கள் தேவையே எங்கள் சேவை"

 

                                                                                                                            இங்ஙனம்,

                                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை,

                                                                                                           செயற்குழு உறுப்பினர்கள்,

                                                                                                 சுவிஸ் வாழ் காரை மக்கள்.

                                                                                                                       ஆனி 2014

Co-op_catararact000110364160_644276235660751_6286632298641745773_n 10387691_644275665660808_6631499032771027925_n 10402933_644275792327462_4598233624866931303_n 10419589_644275555660819_3411938082847032885_n 10447724_644276062327435_519842306077349105_n 10457196_644276278994080_5292440415646818636_n 10458927_644275458994162_6440820459893578890_n 10478217_644275642327477_6835025676901653179_n 10481184_644276305660744_1505761974541056570_n 10492317_644275475660827_8272721187125503057_n 10511297_644275758994132_5936339595109677838_n

சிந்தனையில் சிறகடித்த காரைத்தென்றல் – 2014

Zürcher Gemeinschaftszentren,GZ Seebach, Hertensteinstrasse-20, 8052 Zürich இல் 08-06-2014, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கடந்து விட்ட நேரம். சூரிச் மாநகரில் 35 பாகையைத் தொட்டு விட்டிருந்தது வெயில் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது சுவிஸ் நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும், பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா, ஆஸ்திரேலியா என வௌ;வேறு நாடுகளில் இருந்தும் காரை மண்ணின் விழுதுகள் ஒன்றாகி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் வருடாந்தம் நடாத்தப்படும் காரைத்தென்றல்-2014 பத்தாவது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடத் தயாரா விட்டிருந்தனர்.
சின்னஞ் சிறுசுகளுக்கோ பெரும் கொண்டாட்டம். தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கம் வண்ண வண்ண ஆடைகளை அணிந்து பட்டாம் பூச்சிகளாய் சிறகு விரித்தனர். அவர்கள் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அந்த பிஞ்சுகளில் அநேகம் பேர் காரை மண்ணில் கால் பத்திருக்க மாட்டார்கள் ஆயினும் அந்த மண்ணின் வாசனையை நுகர்ந்தவர்களாய் காரைத் தென்றல் நிகழ்வில் பங்கெடுத்து தாமும் அரங்கேறப் போகின்றோம் என்ற பெருமையுடன் அவர்கள் உலா வந்தனர்.
இது ஒருபுறம் இருக்க வந்தோரை வரவேற்க வாசலிலேயே சுடச் சுட உணவு தயாராகி இருந்தது. எல்லோருமமே உணவுத் தட்டுக்களை கையில் ஏந்தியவாறு ஊர் புதினங்களை, ஊரவர்களின் சுக நலன்களை அறியும் ஆவலில் உறவுகளோடு சங்கமித்திருந்தனர். உள்ளே அரங்க நிகழ்வு தொடங்கு வதற்கான அறிவிப்பை ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்த அவர்களது இனிய குரலில் அறிவிப்பு ஒலிக்க எல்லோரும் நிகழ்வின் அரங்கை நிறைத்தனர். திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன், திருமதி வசந்தி உதயகுமார், திருமதி சியாமளா செல்வச்சந்திரன், திருமதி அருட்சோதி விமலநாதன், திருமதி மங்கையற்கரசி சிவராஜசேகரன், திருமதி வதனா லோகதாஸன், திருமதி கனகரூபா தயாபரன், திருமதி லோகேஸ்வரி பாலசுந்தரம் ஆகியோரது மங்கள விளக்கேற்றலுடனும், சின்னஞ் சிறுசுகளான செல்விகள் பைரவி லோகதாஸ், ஷராங்கி சற்குணராஜா, சுவிதா திருவருள்நாதன், கஜலக்ஷி உருத்திரர், ஷராங்கி லிங்கேஸ்வரன் ஆகியோரது கடவுள் வணக்கத்துடனும் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.
பொதுச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி காரை மண்ணின் வளர்ச்சிக்காய் உழைத்து அமரர்களான சுப்பிரமணியம் அம்பலவாணர்(அல்லின் ஏபிரகாம்),அருணாசல உபாத்தியார், கலாநிதி திரு ஆறுமுகம் தியாகராசா, கணக்காய்வாளர் திரு ஜெயசிங்கம் தில்லையம்பலவாணர், கலாநிதி சபாபதி சபாரத்தினம், கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன், கனகசுந்தரம் மோகனதாஸ் ஆகியோர்ரை நன்றியுடன் நினைவு கூர்ந்து பிரான்ஸ் நலன்புரிச் சங்க செயலாளர் திரு அருளானந்தம் செல்வச் சந்திரன், லண்டன் நலன்புரிச் சங்கத்தலைவர் திரு. பரமநாதர் தவராஜா, திரு உதயகுமார் (ஜேர்மனி) ஆகியோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
காரைத் தென்றலின் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்விலே முதன் முதலாக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக்கான கீதம் இயற்றப்பட்டு இசைத் தட்டாக வெளிவந்தும் இருந்தது. அந்தக் கீதத்தினை சிவஸ்ரீ.த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்களால் அரங்கில் ஒலிக்க விட்ட போது இசையால் வசமாக இதயமெது என எல்லோரும் தம்மை மறந்து எழுந்து நின்று அகமுருகி நின்றனர். இது மட்டும்மன்றி அன்றைய நிகழ்வுக்கு இன்னும் மகுடம் சூட்டுவதாய் பல நிகழ்வுகள் அரங்கேறின.
நிகழ்வு சிறப்புற அமைவதற்காய் காரை மண்ணின் வளர்ச்சியில் அதீத அக்கறையும் சமூகப் பணியில் தீவிரமும் கொண்ட காரை மண் தந்தவர்களான சிவஸ்ரீ.த. சரஹணபவானந்தகுருக்கள், திரு. ச. பற்குணராசா (யோகனந்தஅடிகள்) ஆகியோரது ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அவர்களது ஆசிச் செய்தியில் காரை மண்ணின் உறவுகள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்ற கருத்துப் பொதிந்திருந்தது. அடுத்து கண்ணுக்கு விருந்தாகியது வரவேற்பு நடனம். நிறத்தால், பல்வேறு பட்ட மொழியால், இனத்தால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகத்துக்கள் வாழ்ந்து கொண்டு, எங்கள் பாரம்பரியத்தையும் கலை கலாச்சாரங்களையும் மறந்து விடாமல் வாழத் துடிக்கும் அடுத்த தலைமுறையின் ‘தமிழன்’ என்ற தனித்துவம் எங்கள் குழந்தைகளின் நிகழ்வுகளின் மூலம் வெளிப்பட்டன.
திருக்குறளை மனனம் செய்து அரங்கில் சிறப்புற வெளிப்படுத்தியும் காரை மண்ணின் சிறார்கள் சுவாமி விபுலானந்தர், சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, எனது ஊர், தமிழர் தம் பண்பாடு என அழகுற மழலை சொட்டும் தமிழ் மொழியால் பேசயும், காவடி, நடனம், கோலட்டம், வினோதஉடை, என வேறுஉருவங்களில் தம் கலைத்திறன்களை மகிழ்வுடன் அரங்கேற்றினர். செல்வன் நவின் நகுலேஸ்வரன் எனது ஊர் என்ற தலைப்பிலும், செல்வன் ஆர்வலன் சரவணப்பெருமாள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பிலும் பேசியது எல்லோரதும் கவனத்தை ஈர்ந்தது.
நன்றி மறக்காத தமிழர் தம் பாரம்பரியத்தை எடுத்தியம்புவதாய் சரஸ்வதி வித்தியாலய அதிபர்(சுவிஸ்) சமூகசேவகர் குடும்ப நல ஆலோசகருமான திருமதி. தாரணி சிவசண்முகநாதசர்மாவுக்கு காரைத் தென்றல் நிகழ்வுக்காய் 2011 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டின் கல்வி, 2012 ஆம் ஆண்டு நூலகமும் நாமும்,2013 ஆம் ஆண்டு பிரத்தியேக கல்வி அவசியமா? அவசியமில்லையா என்ற தலைப்புகளிலும் கலந்துரையாடல்களையும் மனமாற்றம் என்ற நாடகத்தையும் காரை மண்ணின் சிறார்களுக்கு பயிற்சியளித்து ஊக்குவித்தமைக்காக ‘கலையரசி’ பட்டம் வழங்கி, மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டமை பெருமைக்குரிய நிகழ்வாகப் பதிவாகியது. இதன் மூலம் சுவிஸ் மண்ணில் இருந்து கொண்டு தமிழ் சமூகத்தை ஆற்றுகைப் படுத்தும் அவரது சமூகப் பணிகளுக்கு காரை அபிவிருத்தி சபையால் பெரும் கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.
கலை நிகழ்வுகளுக்கு இன்னும் மெருகூட்டுவதாய், சிகரம் வைத்தால் போல் செவிக்கும், கண்ணுக்கும் விருந்துட்டியது பிரான்ஸ் இருந்து காரைக் கலாமேதை கனகசுந்தரம் சிவராஜா தலைமையில் வருகைதந்த இளம் தளிர்களான செல்வி பிருந்தா நடராஜா, செல்வி பானுஜா நடராஜா, செல்வன் செல்வச்சந்திரன் நகுலன், செல்வி சிவராஜா மதுரா, செல்வன் சிவராஜா மதுஜன், செல்வி மயில்வாகனம் அபிராமி செல்வன் அதிகேஷன் மயில்வாகனம், செல்வன் மதுஜன் சிவயோகேஸ்வரன், செல்வன் பிரவின் தேவமனோகரன், செல்வன் பிரகாஷ் பகிரதன் ஆகியோர் வழங்கிய வாத்திய பிருந்தா.
காரை மண் தந்த சிட்டுக்களின் இன்னிசை வாத்திய விருந்து உண்மையிலேயே அன்றைய நிகழ்வுக்கு அது பெரும் விருந்தாகவே அமைந்தது. அட எங்கள் குழந்தைகளுக்கா இவ்வளவு திறமைகள் ஒருகணம் சபையில் இருந்தோh ;மெய்சிலிர்த்துப் போனார்கள். மேளம், மிருதங்கம், வயலின், ஒர்கன், உருத்திரவீணை, கிற்றார் என இசை வாத்தியங்கள் ஒலித்தபோது சபையில் இருந்து அதிர்ந்தது கைதட்டல்கள் போதும் அந்த நிகழ்வு எல்லோர் மனதிலும் உப்படி இடம் பிடித்து விட்டது என்பதைச் சொல்வதற்கு இக் கலைஞர்களை கௌரவிக்க S.K.T நிறுவனத்தின் ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.
இராகம், தாளம், பாவம், மூன்றின் சேர்கையாய் உருவான பரதக் கலையின் மூலம் தனது நடன ஆற்றகையை மிகச்சிறப்பாக தங்களது திறன்களால் வெளிப்படுத்தியிருந்தாhகள்; இலண்டனில் இருந்து வருகை தந்த காரை மண்ணின் புதல்வி செல்வி மதுரா அருள்பிரகாசம.; அது மட்டுமா சுவிஸ் நாட்டில் வதியும் மண்ணின் புதல்விகள் செல்வி பைரவி லோகதாஸ்ன், செல்வி சாம்பவி விவேகானந்தா, செல்வி கஜலக்ஷி சிவராஜசேகரன், செல்வி ஜெலக்சிகா சந்திரலிங்கம் ஆகியோரது பரதம் எல்லோரையும் கவர்ந்தது.
இப்படியாக கண்ணுக்கும் செவிக்கும் நல்ல விருந்தாக நிகழ்வுகள் அரங்கேற்றிக் கொண்டிருக்க இடையே வயிற்றுக்கு விருந்தாக தேநீர் விருந்தும் வந்து போனது.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பத்தாவது ஆண்டு சிறப்பு அம்சமாய் நூல் ஆசிரியர் செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் இலக்கண மரபுகளும் மொழி வரலாறும், காரை நிலா-2014 பத்தாவது அண்டு சிறப்பு மலர் வெயிட்டு வைபவம் ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்துர் தலைமையில் அரம்பமானது. முன்னரையை திரு. ச. பற்குணராசா (யோகனந்தஅடிகள்) அவர்களும் வாழ்த்துரை சிவஸ்ரீ.த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்களும், மதிப்பீட்டு உரைகளை சிவஸ்ரீ இராமகிருஷ்ணசர்மா திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா திருமதி அம்பிகா இராஜலிங்கம் திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் ஆகியோர் வழங்கி இருந்தனர். சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் நூலை வெளியீட்டு வைக்க நூலின் முதல் பிரதிகளை S.K.T நாதன் கடை உரிமையாளர் திரு, திருமதி சுப்பிரமணியம் கதிர்காமநாதன் பெற்றக் கொள்ள திரு. திருமதி பூபாலபிள்ளை விவேகானந்தா ஆகியோரால் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். இரண்டாவது பிரதிகளை Siva Travel  திரு,திருமதி கனகசுந்தரம் சிவநேயன் உரிமையாளர் பெற்றக் கொள்ள திரு,திருமதி நல்லதம்பி சரவணப்பெருமாள் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். மூன்றாம் பிரதிகளை பிரான்ஸ் இருந்து வருகை தந்த திரு,திருமதி அருளானந்தம் செல்வச்சந்திரன் பெற்றுக்கொள்ள திரு,திருமதி சுப்பிரமணியம் விமலநாதன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் சபையில் இருந்தோர் சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்களிடம் இறை பிரசாதம் பெற்று நூலின் பிரதிகளையும், மன்றத்தின் கீத இசை இறுவெட்டையும் பெற்றுச் சென்றனர்.
தாய் நாட்டில் இருந்தபடி புலம்பெயர் நாட்டில் வாழும் எங்கள் கனவுகளுக்கும் ஆசைகளுக்கம் செவிசாய்த்து காரை நிலா –2014 சிறப்பு மலரின் நூலாசிரியராக இருந்த இன்று எம் கைகளில் தவழும் மலரினைப் படைத்துத் தந்த ஆசிரியர் செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் (Skype) மூலம் திரையில் வந்த போது எல்லோரும் ஒரு கணம் அமைதியாகினர் அவர் தனது உரையில் “தமிழ் மெல்ல இனிச்சாகும்” என்ற வாக்கை புலம் பெயர் நாடுகளில் வாழும் எம் உறவுகள் பொய்த்துப் போகச் செய்துள்ளார்கள் செம்மொழியாகிய எம் தமிழ் மொழி அழிந்து விடுமோ என்ற அச்சம் இனித் தேவையில்லை எனப் பெருமையுடன் பேசி சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் இந்தக் காரை நிலா புத்தகமும் அதற்குள் பொதிந்திருக்கும் ஆக்கங்கள் காரைத் தென்றல் நிகழ்வு என இளைய தலைமுறைக்குள் பொதிந்திருக்கும் தமிழறிவு, கலையுணர்வு, இன உணர்வு என்பன நல்லதொரு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. என்றார். இதன் போது மன்றக்கீதத்தை தன் இன் குரலில் இசைத்துத் தந்த திருமதி தேவமனோகரி உருத்திரசிங்கம், காரை நிலா மலரின் அட்டைப்படத்தை வடிவமைத்த தந்த திருமதி மலர் குழந்தைவேலு மலர் குழு உறுப்பினராக இருந்து மலர்ஆக்கத்துக்காய் பெரும்பாடுபட்ட திரு அருணசலம் வரதராஜன் ஆகியோரும் (Skype) மூலம் திரையில் வந்து காரைத் தென்றல் நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.
தலைமையுரை உரை, பிரதமவிருந்தினர் உரை, சிறப்புவிருந்தினர் உரைகள் அரஙகில் உள்ளோரை சிந்திக்கவைத்தது. அதே நேரம் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த திரு.துரைராஜா ஈஸ்வரன், திரு.சக்திவேல் சத்தியரூபன் நடித்த விருந்து நாடகம் உண்மையிலேயே அருமைதான். இன்னுமொரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்டியே ஆக வேண்டும் துடிப்பு மிக்க எமது இளம் தலைமுறையினர் ஒன்றுபட்டு, தமது சுய முயற்சி இன்றைய சமூகப் பிரச்சனை ஒன்றை மிக எளிதாக புரியும்படி நகைச் சுவையுடன் நாடகமாக அவர்களின் உடனடித் தயாரிப்பாக வழங்கி தம் திறனை வெளிப்படுத்தியமையை பாராட்டமல் இருக்க முடியாது. அவர்களின் இந்தத் துணிச்சலும் சமூகம் சார்ந்த அக்கறையும் நாளைய தலைவர்கள் உருவாகி விட்டார்கள் என்பதைக் கட்டியம் கூறி நிற்கின்றது. திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்கள் நன்றியரை கூறினார். இலங்கை சென்ற வருவதற்கான விமான சீட்டு அதிஷ்டம் பார்க்கப்பட்டது. அதில்
அதிஷ்டம் பெற்ற செல்வி சாம்பவி சிவபாலன் அவர்கள் சீட்டு பெறுமதியை சபைக்கே அன்பளிப்பு செய்தமையை பாராட்டாமல் இருக்க முடியாது.
இறுதி நிகழ்வாக போட்டிகளில் பங்கெடுத்த மாணவர்களுக்கு நினைவு பரிசில்களையும், கலை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கியும் சிறார்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மொத்தத்தில் காரைத் தென்றல் –2014 மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தாலும் முழுதாக 12 மணிநேரத்தை தனதாகக்கி இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று காரைத்தென்றல் –2014 பத்தாவது ஆண்டு விழாவில் கலந்து சிறப்பித்த உலக சைவபேரவைத் தலைவர் திரு.ச.பற்குணராசா (யோகனந்தஅடிகள்), ஊடகவியலாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. இளையதம்பி தயானந்தா பிரான்ஸ் நலன்புரிச் சங்க செயலாளர், நிர்வாக உறுப்பினர்களுக்கும், பிரித்தானிய நலன்புரிச்சங்க தலைவர், நிர்வாக உறுப்பினர்களுக்கும் ஜேர்மன், ஆஸ்திரேலியா என வேறு நாடுகளில் வருகைதந்த அனைத்து உள்ளங்களுக்கும், விழாவுக்கு சகல வழிகளிலும் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகலந்த பாரட்டுதல்களும், வாழ்த்துக்களும்.
                                                                                      நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
சித்திரை – 2014

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பெருமையுடன் வழங்கும் காரைத் தென்றல் 2014

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பெருமையுடன் வழங்கும்       காரைத் தென்றல் 2014

KT-Flyer-NEW-SWISSபத்தாவது ஆண்டு சிறப்பு விழாவை முன்னிட்டு சுவிஸ் காரை தென்றல் மன்ற கீதம் இறுவெட்டு வெளியீடு

CD_Karai_Label_copy_1

பத்தாவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு காரைநிலா-2014

cover_nila_fr

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்

 "காரைத் தென்றல் – 2014இல்" வெளியீட்டு வைக்கப்படவிருக்கின்ற "சுவிஸ் காரை தென்றல் மன்ற கீதம்", இறுவெட்டு வடிவில் ஒலிப்பதிவு செய்த யாழ்ப்பாணம், "ஸப்தமி" கலையகத்துக்கும், "பத்தாவது ஆண்டு சிறப்பு மலர் காரைநிலா-2014" வெகு சிறப்பாக வெளிவர உதவிய மலர் வெளியீட்டுக் குழுவிற்கும், அழகானமுறையில் வடிவமைத்த வவுனியா வாணி கணனிப் பதிப்பகத்தாருக்கும் எமது சபையின் மனநிறைவான வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
சுவிஸ் காரை தென்றல் எனும் மன்றம்
வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

மலையோடு நதியும் அழகொடு வளமும்
மலிந்திடு சுவிஸ் வள நாட்டின்
கலைமணங் கமழும் சுவிஸ் காரை தென்றல்
எனும் மன்றம் வாழியவே!

மண்ணுலகில் ஒரு சொர்க்கம் என்றே
புகழ் மாண்புமிகும் சுவிஸ் நாட்டின்
கண்ணெனத் திகழும் சுவிஸ் காரை தென்றல்
எனும் மன்றம் வாழியவே!

அலைகடல் சூழ்ந்தொழிர் முத்தெனத் திகழும்
அன்னை எம் ஈழத்தின் உயிரெனவே
நிலை கொள்ளும் காரை எம் ஆன்மா வாழிய
நீடிய பல்லாண்டு வாழியவே!                 

மருதமும் நெய்தலும் மயங்கி முயங்கியே
மகிழ்வுறும் காரை  நகரினிலே
இரதமோர் ஐந்தின் எழில்மிகு பவனி
என்றென்றும் வாழியவே!

புரவலர் புலவர் வர்த்தகர் அறிஞர்
புவிகாத்திடும் உழைப்பாளர்
விரவிய புகழின் விண்ணுலகென்றே
வியந்திட வாழியவே!

ஈழத்துச் சிதம்பரம் எனத் திகழ் கோவிலும்
எழிலுறு சுந்தரேஸ்வரனாரும்
கோளொத் திடும்இரு கோபுரம் உயர்ந்திடும்
கோநகர் வாழியவே!                       

தென்னை பனைமா சிறந்த நெல் நற்பயிர்
தேனென இனித்திடும் வாழையோடு
உன்ன அருங்கடல் வளமொடு கோவளம்
உறுபயன் ஈந்திடும் காரைநகர் வாழியவே!

கலங்கரை விளக்கம் துர்வாச சாகரம்
கவினுறு பலவளங் களெல்லாம்
இலங்கிடும் இராசாவின் தோட்டம் – சப்த
கன்னியர் கோவில் வாழியவே!      


சைவமும் தழிழும் கண்ணெனத் திகழும்
சரித்திரப் புகழ்பெறு காரைநகர்
வையமும் வானும் வாழ்ந்திட என்றும்
வாழிய வாழியவே! வாழிய பல்லாண்டு

காரைத் தென்றல் களியோடு வீசியே
காலமெல்லாம் சிறந்திட
ஊரைத் துறந்து பிற நாட்டினில் வாழ்வோர்
உறுதியுடனு ழைப்போம் வாழியவே!


  ஆக்கம்    கலாபூணம் கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
            இல.90, திருநாவற்குளம், வவுனியா
            31-01-2014
  வயலின்    திரு. அ.ஜெயராமன்
  கீபோட்     திரு.கோ.சத்தியன்(முரளி)
  நாதஸ்வரம்  திரு.இ.வசந்தன்
  மிருதங்கம்   திரு.இ.துரைராசா
  தபேலா,தவில் திரு.ச.விமல்சங்கர் 
  கீதம் பாடியவர்  இசைக்கலாமணி சங்கீதவித்தகர்  திருமதி தேவமனோகரி உருத்திரசிங்கம்  
  இசைக்குழு இயக்குநர் திரு.சத்தியன் கோபாலகிருஷ்ணன்
  ஒலிப்பதிவு   யாழ்ப்பாணம்,  'ஸப்தமி' கலையகம் 

                                                                                   நன்றி
                                                                                                                                                       இங்ஙனம்
                                                                                                                                   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                          செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                                   சித்திரை2014

           

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பெருமையுடன் வழங்கும் பத்தாவது ஆண்டு சிறப்பு விழா காரைத் தென்றல் -2014

 காரைநகர் மருதடி விநாயகர் துணைநிற்க! ''பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே' காரைமாதாவின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள இளையோரின் தமிழறிவையும், கலையுணர்வுகளையும் வளர்க்கவும் கடந்த பல ஆண்டுகளாக ''காரைத் தென்றல்' நிகழ்வுகளை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நடாத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே!!

                          சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பத்தாவது ஆண்டு சிறப்பு விழாவை முன்னிட்டு சபைக்கான கீத இசை ஓன்றை இயற்றி அதனை இறுவெட்டு வடிவிலும், சபையின் கடந்தகால செயற்திட்டங்களை எழுத்துருவாக்கியும், 30 மேற்பட்ட ஆன்மிகம், கிராம அபிவிருத்தி, சமூகநலம், அறிவியல், என பல ஆய்வுக்கட்டுரைகள், புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது கிராமத்து சபைகளினதும், பாடசாலை அதிபர்களினதும், கோவில் நிர்வாகத்தினரினதும், அறிஞர்களது 20 மேற்பட்ட வாழ்த்து செய்திகளுடனும், சிறுவர்களது ஆக்கங்களுடனும்  காரை தென்றல் பத்தாவது ஆண்டு சிறப்புமலர்  காரை நிலா – 2014ஐயும் உங்கள் முன் செயற்குழுஉறுப்பினர்கள் சமர்ப்பிக்க இருக்கின்றார்கள்.

                   இடம்:-  Zürcher Gemeinschaftszentren, GZ Seebach, 
                                                      Hertensteinstrasse 20, 8052 Zürich

                        காலம்:-   08-06-2014 ஞாயிற்றுக்கிழமை.
                                நேரம்:-  13.00 மணி

          சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று காரைத் தென்றல் பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்க பிரதமவிருந்தினராக பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் King’s College London  அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா குடும்பத்தினர், இலண்டன் நலன்பரிச் சங்கத் தலைவர் திரு. பரமநாதர் தவராசா குடும்பத்தினர், பிரான்ஸ நலன்புரிச் சங்தக் தலைவர் திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் குடும்பத்தினர்.

          சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினர் பத்தாவது ஆண்டு சிறப்பு விழாவை முன்னிட்டு கலை நிகழ்வுகளை வெகு சிறப்பாக ஓழுங்கு படுத்தியிருக்கிறார்கள். மங்களவிளக்கேற்றல், தேவாரம், சபைக் கீத இசை, ஆசியுரை, வரவேற்புரை, வரவேற்பு நடனம், காரைநிலா சிறப்பு மலர் விமர்சனஉரை, சிறுவர்களுக்கான விநோதஉடை, பரதநாட்டியம், காவடி, கோலாட்டம், வாத்தியஇசை, பேச்சு, பாட்டு, சமூக நாடகம், அறிவியல் அரங்கம் என பல நிகழ்வுகள் காத்திருக்கின்றன சுவிஸ் காரை வாழ் உறவுகள் அனைவரையும் வருக, வருகவென அன்புடன் அழைக்கின்றோம்.

                                                                                                 நன்றி
                                                                                                                                                                  இங்ஙனம்
                                                                                                                                        சுவிஸ்  காரை அபிவிருத்தி சபை
                                                                                                                                                 செயற்குழு உறுப்பினர்கள்.
                                                                                                                                                  சுவிஸ் வாழ் காரை மக்கள்


 

சுவிஸ் காரை தென்றல் மன்ற கீதம்

                                                       

சுவிஸ் காரை தென்றல் மன்ற கீதம்
வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
சுவிஸ் காரை தென்றல் எனும் மன்றம்
வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

மலையோடு நதியும் அழகொடு வளமும்
மலிந்திடு சுவிஸ்வள நாட்டின்
கலைமணங் கமழும் சுவிஸ் காரை தென்றல் எனும்
மன்றம் வாழிய வாழியவே!                    (வாழிய)

மண்ணுலகில் ஒரு சொர்க்கம் என்றே புகழ்
மாண்பு மிகும் சுவிஸ் நாட்டின்
கண்ணெனத் திகழும் இலங்கை காரை
அபிவிருத்திச் சங்கம் வாழிய வாழியவே!          (வாழிய)

அலைகடல் சூழ்ந்தொளிர் முத்தெனத் திகழும்
அன்னைஎம் ஈழத்தின் உயிரெனவே
நிலைகொள்ளும் காரைஎம் ஆன்மா வாழிய
நீடிய பல்லாண்டு வாழியவே!                  

மருதமும் நெய்தலும் மயங்கி முயங்கியே
மகிழ்வுறும் காரை  நகரினிலே
இரதமோர் ஐந்தின் எழில்மிகு பவனி
என்றென்றும் வாழியவே!

புரவலர் புலவர் வர்த்தகர் அறிஞர்
புவிகாத்திடும் உழைப்பாளர்
விரவிய புகழின் விண்ணுலகென்றே
வியந்திட வாழியவே!

ஈழத்துச் சிதம்பரம்எனத் திகழ் கோவிலும்
எழிலுறு சுந்தரேஸ்  வரனாரும்
கோளொத் திடும்இரு கோபுரம் உயர்ந்திடும்
கோநகர் வாழியவே!                          (வாழிய)

தென்னை பனைமா சிறந்தநெல் நற்பயிர்
தேனென இனித்திடும் வாழையொடு
உன்ன அருங்கடல் வளமொடு கோவளம்
உறுபயன் ஈந்திடும் காரைநகர் வாழியவே! 

கலங்கரை விளக்கம் கசுறினா பீச்சும்
கடற்படைத் தலைமை யகத்தோடும்
இலங்கிடும் இராசாவின் தோட்டம் எழிலோடு
இனையறு சப்த கன்னியர் கோவில் வாழியவே!        (வாழிய)

சைவமும் தழிழும் கண்ணெனத் திகழும்
சரித்திரப் புகழ்பெறு காரைநகர்
வையமும் வானும் வாழ்ந்திட என்றும்
வாழிய வாழியவே!

காரைத் தென்றல் கவியோடு வீசியே
கால மெல்லாம் சிறக்க
ஊரைத் துறந்துயர் நாட்டினில் வாழ்வோர்
உறுதியுடன் உழைப்போம் வாழியவே!               (வாழிய)

ஆக்கம் :- கலாபூஷணம் கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
        இல.90, திருநாவற்குளம், வவுனியா
        31-01-2014

          

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பத்தாவது அண்டு நிறைவை முன்னிட்டு மன்றத்திற்கான கீதம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கான பாடகர், இசை அமைப்பாளர்கள் சபையால்  பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் எதிர்வரும்  31-03-2014 முன்னதாக சபையுடன் தொடர்பு கொண்டு கீதம் இறுவெட்டு வடிவில் வெளிவர உதவி செய்வீர்கள் என நம்புகின்றோம்.

                                                                                                                                                       இங்ஙனம்
                                                                                                                                        சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                            சுவிஸ் வாழ் காரை மக்கள்

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்; பத்தாவது ஆண்டு சிறப்புமலர்

' பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே'


என்ற கூற்றிற்கிணங்க காரைமாதாவின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள இளையோரின் தமிழறிவு, கலையுணர்வுகளை வளர்க்கவும் 04.12.2004 அன்று சுவிஸ்வாழ் காரைநகர் மக்களினால் ஒன்றகூடல்  நடாத்தப்பெற்று 'சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை' என்ற சமூக நலஅமைப்பு உருவாக்கப்பட்டது யாவரும் அறிந்ததே!

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை அகத்தில் நலிவுற்றோர் சாதல் கண்டு சிந்தையிரங்கி சில பணிகளையும், சேவைகளையும் உங்களின் பேராதரவுடன் செய்துவருகின்றது. அந்தவகையில் வைத்தியசாலைக்கு கட்டிடவசதி, மாணவர் நூலக கட்டிடத்திற்கு நிதியுதவி, நோயாளருக்கு மருத்துவ உதவிகள், பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு நிதியுதவி, குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கல் என தனது அறிமுக நாளிலிருந்து செயலாற்றிவருகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையானது  புலத்திலும் சிறுவர்களின் கலை உணர்வுகளை வெளிக்கொணரவும், சிறுவர்களிடையே எமது கிராமத்தின் மகிமையை தெரியப்படுத்தவும், இளையோர் கலந்துரையாடல் மூலம் அறிவுபூர்வமான கருத்து பரிமாறவும்  இரண்டு ஆண்டுகள் தீபாவளி ஒன்றுகூடலையும், ஐந்து காரைத்தென்றல் முத்தமிழ் விழாக்களையும் வெகு சிறப்பாக நடாத்தியும் வருக்கின்றது. இன் நிகழ்வுகளின் உந்து சக்தியாக மாணவர்களின் பேச்சாற்றலையும், அறிவாற்றலையும் வளர்க்கவும், செயலாற்றிவருகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை தனது பத்தாவது ஆண்டு நிறைவின் அடையாளமாக 'காரைத்தென்றல் – 2014' நிகழ்வை வெகு சிறப்பாக ஒருங்கமைக்கவிருக்கின்றது. இந் நிகழ்வு 08-06-2014 ஞாயிற்றக்கிழமை Zürcher Gemeinschaftszentren, GZ Seebach, Hertensteinstrasse-20, 8052 zürich இல் நடைபெறவிருக்கின்றது. இச் சபையானது கடந்த இரண்டு வருடங்களாக நாட்காட்டி வெளியிட்டு வருகின்றது. இவ் வருடம் 12-01-2014இல் நடைபெற்ற நாட்காட்டி வெளியீடும், மக்கள் சந்திப்பும் நிகழ்வில் கலந்துரையாடல் மூலம் சில வேலைத்திட்டங்களை; நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தவகையில் சபையின் பத்தாவது அகவையை அடையாளப்படுத்த நூல் ஒன்று வெளியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. நூல் வெளியீட்டுக் குழு ஒன்றும் நிர்ணையிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு

நூல்:- காரை நிலா – 2014
நூலின் தன்மை:- சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை பத்தாவது ஆண்டு சிறப்புமலர்
நூலாசிரியர்:- பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் B.A. Dip.- in.- Education    
  வைரவபுளியங்குளம் வவுனியா அவர்கள்.

 

ஆலோசனையாளர்கள்:-
 சிவஸ்ரீ.த.சரஹணபவானந்தகுருக்கள்:-  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை  அம்மன் ஆலய   பிரதமகுரு, சபையின் நீண்ட கால போசகர் அவர்கள்.
திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள்:-  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                          ஆரம்ப காலத் தலைவர், சூரிச் சிவன் கோவில்          சைவத் தமிழ் சங்க ஆரம்ப கால செலயாளர்  அவர்கள்.
திருமதி. அம்பிகா இராஜலிங்கம்:-    ஆசிரியை அவர்கள்.
திரு. தம்பையா தயாபரன்;:-    ஆசிரியர் காரை ஆதித்தியன், சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை ஆரம்ப கால செயலாளர் அவர்கள்.
திரு சிதம்பரப்பிள்ளை யோகேந்திரன்:- சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை ஆரம்ப கால நிர்வாக உறுப்பினர் அவர்கள்.
நூலின் படக்கலை வரைவு:-
திருமதி மலர் குழந்தைவேலு:-   கனடா காரை கலாச்சார மன்றம் முன்னைநாள்  தலைவர், செயலாளர் அவர்கள்.
உள்ளக வெளியக தொடர்புகள்;:-
திரு அருணாசலம் வரதராஜன்:-   ஆசிரியர்  ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், ஸ்ரீ முத்தமாரியம்மன் ஆலயம் திருப்பணிச்சபை பொருளாளர் கூமாங்குளம் வவுனியா அவர்கள்.
      காரைத்தென்றல்- 2014 நூலின் உருவாக்கத்திற்கு எல்லோரிடமும் இருந்து ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. உங்கள் ஆக்கங்கள் இளைய சமுதாயத்தினருக்கு பயன் தரக்கூடியனவாகவும் எமது ஊரின் அபிவிருத்திக்கு பயன்பாடு உள்ளதாகவும் அமையவேண்டும். உங்களுடைய ஆக்கங்கள் புகைப்படத்துடன் கூடியதாக 31-03-2014 முன்னதாக தபால்மூலம் அனுப்பி வைக்கலாம் அனுப்ப வேண்டிய முகவரி:- 
Mrs Yogaluxmi Somasundram  B.A. Dip.- in.- Education
30/2 10th Lane
Vairavapuliyankulam
Vavuniya
Sri-Lanka.
T.P.024 222 16 05

மின் அஞ்சல் முகவரி:- karaithenral2014@gmail.com
குறிப்பு:- உங்கள் ஆக்கம் பிரசுரிக்கும் இறுதி முடிவு நூல் வெளியீட்டுக்குழுவுக்கே உரியது.
நன்றி
இங்ஙனம்.
              சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

         
     

 

காரைத்தென்றல்-2013

               இளம்கீற்றுடன்  காரைத்தென்றல்-2013

“திக்கெட்டும் தமிழ் முழக்கம் செய்வோம” எனும் எட்டயபுரத்துப் புலவர் சொற்படி புலம்பெயர் தேசங்களில் இளையோர் கன்னித்தமிழ்லையும், கலையையும் வளர்த்து வருகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு காரைத்தென்றல்-2013. 19-05-2013இல் 

Zürcher Gemeinschaftszentren GZ    LoogartenSalzweg 1, 8048Zürich        மண்டபத்தில் மாலை 14.00 மணியிலிருந்து இரவு 24.00 மணிவரை வெகுசிறப்பாக இளையோரால் நடாத்தப்பட்டது.

காரைத்தென்றல்-2013இன் தொடக்க நிகழ்வாக மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்களவிளக்கினை திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன், திருமதி சந்திரமலர் யோகேந்திரன், திருமதி nஐயராணி யோகேஸ்வரன், திருமதி வாசுகி திரவியபவன், திருமதி சொர்ணம் சண்முகநாதன், திருமதி கமலநாயகி சிவநேயன் ஆகியோரின் மங்களவிள்கேற்றலுடனும் அதனைத்தொடர்ந்து. செல்வி சாம்பவி யோகேந்திரன், செல்வி கஜவதனா உருத்திரர், செல்வி நிதாஞ்சலி லிங்கேஸ்வரன், செல்வி சாம்பவி சிவபாலன், செல்வி கீர்த்தனா இராசலிங்கம். ஆகியோரின் தேவாரத்துடனும்;, ஆரம்பமானது.

சமூக சேவையாளரும், லண்டன் நலன்புரிச்சங்க ஸ்தாபகரும்மான  அமரர் கலாநிதி சபாபதி சபாரத்தினம் அவர்களுக்கும், சமயப்பற்றும், கிராமப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட Bern ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் ஆலய  முன்னைநாள்  பொருளாளரும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் முன்னைநாள் செயலாளரும் ஆகிய அமரர் கனகசுந்தரம் மோகனதாஸ் அவர்களுக்கும் நாட்டின் போர்சுழல்காரணமாக அமரத்துவம் அடைந்த அனைவருக்கும் இரணடு நிமிட பிராத்தனை செய்யப்பட்டது. திரு முருகேசு பாலசுந்தரம் அவர்கள் அமரர் கனகசுந்தரம் மோகனதாஸ் திருவுருவப்படத்திற்கு சந்தனமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருமதி கமலேஸ்வரி உருத்திரர் அவர்கள் வந்தோரை வரவேற்பது தமிழர் பண்பாட்டுக்கேற்ப  வரவேற்புரை ஆற்றினார்.

கலை என்பது கருத்தின் உறைவிடமாகவும் அழகின் சிறப்பிடமாகவும் உள்ளது. விழாவுக்கு வருகை தந்தோரை வரவேற்று செல்வி சாம்பவி விவேகானந்தா, செல்வி சாருவிகா அருணகிரிநாதன் ஆகியோர் அழகான வரவேற்பு நடனம் புரிந்தார்கள். “யாழ்இனிது, குழல்இனிது அதனிலும் இனிது மலழைச்சொல” என்ற வாக்கியத்துக்கு இசைவாக குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அது தவிரவும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் திட்டமிடல் ஒருங்கிணைப்பாளர் திரு சிவஸ்ரீ.த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்கள் விழா சிறப்பாக நடைபெறவேண்டியும், குழந்தைகளின் கல்வியின் கட்டாயத்தைப்பற்றியும் மிக அழகான கருத்துக்களை கூறியிருந்தார்.

வருடா வருடம் காரைத்தென்றல் நிகழ்வில் நூல்வெளியீடு நடபெறுவது வழமை இம்முறை காரைநகர் அருளாந்தப் பிள்ளையார் கோயில், புளியங்குளம், வெளியிட்ட நூல் சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த உலக சைவசமயத்தலைவர் யோகானந்த அடிகளார் திரு. சுடாச்சரம் பற்குணராஜா அவர்களால்  தொகுப்புரை வழங்கப்பட்டது. அவர் தனது தொகுப்புரையில் நூலின் செயீட்டுரையில் உள்ள முதல் பந்தியை வாசித்துக்காட்டியும் இக் காலகட்டத்தில் இன்றைய இளம் சமுதாயத்தினர் தீய சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும்  தீய பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாகி செய்வதறியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வாழும் காலம் சிறிது. வாழும் முறையே பெரிது. சோதனை வரினும் வேதனை தரினும் நற்போதனைப்படி நடந்து சாதனை புரிபவனே பாக்கியவான். ஷஷ மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்|| என்று அருளினார் திருமூலர். என்றும் தனது ஆன்மீக கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபைத் தலைவர் பூபாலபிள்ளை விவேகானந்தா தனது தலைமை உரையில் தற்கால செயற்திட்டங்கள் பற்றியும், மாணவர்களின் கல்வியின் கட்டாயத்தையும், காரைநகர் அருளாந்தப் பிள்ளையார் கோயில், புளியங்குளம், வெளியிட்ட நூல் இங்கு வந்துள்ளோருக்கு சபையால் அன்பளிப்பாக வழங்கப்படும் என்றும் சபைக்கு எல்லோரும் ஒற்றுமையாக ஓத்துழைத்து கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்றும் காரைநகர் கலாநிதி தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 ஆண்டு விழா பற்றியும் கூறியிருந்தார்.லண்டன் நலன்புரிச்சங்கத்தின் வாழ்த்து செய்தியினையும் வாசித்தார்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பிரான்ஸ் நலன்புரிச்சங்த்தலைவர் அருளானந்தம் செல்வச்சந்திரன் இவர் வருடா வருடம் காரைத்தென்றல் நிகழ்வில் கலந்துகொள்பவர் என்பது கூறிப்பிடத்தக்கது. அவர்தனதுரையில் குழந்தைகளின் கலைநிகழ்வை பாராட்டியும் அண்மையில் அமரத்தவம் அடைந்த அமரர் கலாநிதி சபாபதி சபாரத்தினம கலாநிதி சபாபதி சபாரத்தினம், அமரர் கனகசுந்தரம் மோகனதாஸ் ஆகியோரின் சமூக சேவைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறியிரந்தார் இவர்ருடன் பிரான்ஸ் இருந்து இராசையா சந்திரலிங்கம், சண்முகம் இன்னும் இருவர் வந்து கலந்து சிறப்பித்திருந்தனர்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த திரு,திருமதி ஆறுமுகம் சிவசுப்பிரமணியம் அவர்கள் தனதுரையில் தமிழர்களின் ஒற்றுமையின் உண்மைத்தன்மையை மிக சிறப்பான முறையில் எடுத்துக்கூறியிருந்தார். மாணவர்களின கல்வி பற்றி கூறுகையில் இக் காலகட்டத்தில் கணனிமுறையின் கல்வி அதன்மூலம் ஏற்படும் நன்மை தீமைபற்றியும் சம காலத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு என்ன பங்கு செலுத்தவேண்டும் என்று அழமான கருத்துக்களை சொல்லியிருந்தார்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த சிவஸ்ரீ திரு மு. சிவசண்முகநாதக்குருக்கள் தனது வாழ்துரையில் காரைநகரின் சைவமும் தமிழும் அதனோடு கல்வியின் சிறப்பைபற்றியும், அதுதவிர வியாபாரத்துறையில் வடமாகணத்தின்  காரைநகரின்பங்குபற்றியும் சிறப்பாக கூறியிருந்தார்.
சரஸ்வதி வித்தியாலய அதிபர். திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்களின் வழிநடத்தலில் மனமாற்றம் என்ற சமூக நாடகமும், புலம்பெயர் தேசங்களில் பிரத்தியேககல்வி நன்மையா?தீமையா? என்ற விவாத அரங்கமும் இவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவாத அரங்கில் பெற்றோரும், மாணவரும் கலந்து கொண்டு ஆக்கபூர்பமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் இன் நிகழ்வு 1.30மணிவரை நடைபெற்றது என்பது கூறிப்பிடதக்கது.

காரைத்தென்றல்-2013 இம்முறை இளையோரால் வெகுசிறப்பாக ஒருங்கமைத்து நடாத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. கண்கவர் அம்மன்நடனக்காட்சிகள், கண்னன் நடனம், சமூகநாடகம், சினிமா பாடலுக்கு மாணவர்களின் அபிநயம் என பலநிகழ்வுகள் ஊடாக இளையோர் தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். செல்வி சிவலக்ஷிகா சிவராசசேகரன் அவர்களின் நன்றியுடனும், இரவு 23.30 மணியளவில் பரிசளிப்புடனும் காரைத்தென்றல்-2013 இனிதே நிறைவுபெற்றது.

காரைத்தென்றல்-2013 வெகு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், சிறப்புவிருந்தினர்கள். அனைத்து உள்ளங்கள் அனைவருக்கும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

“என் கடன் பணிசெய்து கிடப்பதே”

நன்றி

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

              

காரைத்தென்றல் – 2013

Visa 256காரைத்தென்றல் – 2013 

 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் விழாவான காரைத்தென்றல் -2013 வெகுசிறப்பாக நடைபெற இருக்கின்றது.
எமது கிராமத்தின் கலையின் சிறப்பை வெளிக்கொணரும் இயல், இசை, நாடகம், என பல நிகழ்வுகள் இம்முறை சுவிஸ் வாழ் காரை இளையோரால்   நடாத்தப்படவிருக்கின்றது.

Publikation19

       இடம்:-     Zürcher Gemeinschaftszentren GZ    LoogartenSalzweg 1, 8048 Zürich
              காலம்:-     19-05-2013 ஞாயிற்றுக்கிழமை.
              நேரம்:-   13.00 மணி

காரைத்தென்றல்-2013இன் பிரதமவிருந்தினராக ஆறுமுகம் சிவசுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். சுவிஸ் வாழ்  காரைமக்களையும் அனைத்துலக காரைமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

      நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

Nitha 001

கண்ணீர் அஞ்சலி சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

கனகசுந்தரம் மோகனதாஸ் அவர்களின்  கண்ணீர் அஞ்சலி  சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

Moganasuntharam

கண்ணீர் அஞ்சலி சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

கண்ணீர் அஞ்சலி

Njhw1-1

காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி

காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி

 

புலம்பெயர் காரை அமைப்பின் ஆரம்ப நிறுவுனர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி சபாபதி சபாரட்ணம் அவர்களின் மறைவு குறித்து

பிரித்தானிய காரை நல்ன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலிப் பூக்கள்.

 

மேற்குலகிற்கான எம் புலம்பெயர் வாழ்வில், எமது தாய்க் கிராமமான காரைநகர் மண்ணின் வளர்ச்சி குறித்துச் சிந்தித்த மாமனிதரின் பேரிழப்பு இதுவாகும். 1980 களின் பின்னரான புலப்பெயர்வில் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட மூத்த சங்கமான இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர் சபா அண்ணா. இச்சங்கம் 1990ஆம் ஆண்டு மேமாதம் தோற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாக அதன் செல்திசையை தோற்றுவித்தவர். அடுத்த வந்த 12 ஆண்டுகளாக அதன் செயலாளராக எம் சங்கத்தைச் செயற்படுத்திய பெருமகன். தன் இறுதிநாள்வரை காரைநகரின் வளர்ச்சிக்காக உள்ளன்போடு செயற்பட்டவர். காரைநலன்புரிச் சங்கத்தின் தோற்றம் முதல் கடந்த 23 ஆண்டுகளாக அதன் செயற்பாடுகள் அனைத்தையும் நெறிப்படுத்திய பெருமைக்குரியவர். அவரின் நேர்மையும் கண்ணியமும் அளப்பரிய சகிப்புத்தன்மையும் என்றென்றும் போற்றுதற்குரியவை. கால் நூற்றாணடை அண்மிக்கும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் சாதனைகளாக கருதப்பட்டவை அனைத்தும் அவரின் எண்ணக் கருவூலத்தில் தோற்றம் பெற்றவை. அஞ்சலிகள் தெரிவிக்கும் இன்றைய நாளில் அவரின் செயற்திட்டங்களில் முக்கியமானவையாய் கருதப்படும் மூன்றினை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

 

முதன்மையானதும் முக்கியமானதும் காரைநகருக்கான நன்னீர் வழங்கல் செயற்திட்டம். இலண்டன் காரை மக்களின் நிதிப் பங்களிப்போடு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயற்படும் இத்திட்டம் சபா அண்ணாவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயலாற்றுமையிலும் முன்னெடுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு யூன் மாதம் நன்னீர் விநியோக கொள்கலன் இலண்டனிலிருந்து காரைநகருக்கு அனுப்பப்பட்டதன் மூலம் இச்செயற் திட்டம் ஒழுங்கு முறையாக நடத்தப்படுவதற்கான மூல்காரணியாய் இருந்தவர் சபா அண்ணா!

 

காரைநகரில் வாழும் மக்களின் சுகாதார நலன் குறித்த அத்தியாவசிய மருத்துவ செயற் திட்டங்களில் சபா அண்ணா ஓர் வழிகாட்டியாய் திகழ்ந்தவர். காரைநகர் எல்லைக்கு அப்பால் யாழ் போதனா வைத்தியசாலைக்கான புற்றுநோய் மருத்துவ செயற்பாடுகளுக்கும் தனிப்பட்ட முறையில் நிதி உதவிகளை வழங்கிய புரவலர் சபா அண்ணா. காரைநகர் வைத்தியசாலையின் தேவைக்கேற்ப மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தன் தனிப்பட்ட தொடர்புகளின் மூலம் செயற்படுத்தியவர்.

 

காரைநகர் வாழ் மாணவச் செல்வங்களின் மீதான சபா அண்ணாவின் அன்பும் ஆதரவும் அளப்பரிய ஒன்றாக இறுதிவரை இருந்து வந்துள்ளது. காரைநகரில் செயற்படும் அனைத்து பாடசாலைகளின் வளர்சியிலும் எவ்வித பாகுபாடுகளுமற்ற நலத் திட்டங்களை செயற்படுத்திய கண்ணியத்திக்குரியவர் சபா அண்ணா. சபா அண்ணா கல்வி கற்றதும் முதன்மைமிக்க காரைநகர் கல்விச்சாலையுமான காரை இந்துக்கல்லூரியை மையமாகக் கொண்ட அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து வைத்தவர். அண்மையில் உருப்பெற்ற இந்த அறக்கட்டளை சபா அண்ணாவின் மாமனாரும், கல்லூரியின் சரித்திர முக்கியத்துவமுடைய அதிபரும், காரை மக்களின் அரசியல் தலைவராகவும் இருந்த அமரர் ஆ.தியாகராசாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை என்ற பெயரில் அமைந்த இத்திட்டமானது சபா அண்ணாவின் தனிப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகும். இத்திட்டம் காரை மாணவர்களிற்கான புலமைப் பரிசில் நிதியை காலந்தோறும் வழங்கும் வகையில் நிரந்தர நிதி வைப்பீட்டைக் கொண்டதாகும். இற்றை வரையான காரை கல்வி நலத்திட்டங்களில் அளப்பரியதோர் திட்டத்தை உருவாக்கிய பொன்மனத்தின் சொந்தக்காரர் எங்கள் சபா அண்ணா.

 

புலம்பெயர் நாடுகளில் உள்ள காரை நலன்புரி அமைப்புக்களில் அறக்கட்டளை அமைப்பாக பதிவாகிய அமைப்பு, பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கமாகும். 2007 ஆம் ஆண்டு எமது சங்கத்தை ஓர் அறக்கட்டளை ஆக்கிய பெருமைக்குரியவர் சபா அண்ணா. காரைநகரில் அமைந்துவரும் காரை அபிவிருத்திச் சபை நூலகத்தின் உருவாக்கத்திற்கு ஆரம்ப காலம் முதல் பேருதவிகளை நல்கியவர். அண்மையில் மிகுந்த பெறுமதி மிக்க 32 தொகுதிகள் அடங்கிய கலைக்களஞ்சியத்தை அவர் நூலகத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத எழுத தொடரும் எல்லைகளுக்கு அப்பாலான அர்ப்பணிப்பாளன் எங்கள் சபா அண்ணா! தன் புலமை, கல்விப் பெருமை, சமூக மேன்நிலை ஆகிய அனைத்தையும் புறம்தள்ளி ஒர் அன்புமிக்க எளிய நண்பானாய் எம்மோடு ஊடாடிய ஓர் உயரிய மனிதனை இழந்து எம் சங்கம் வருந்துகிறது. அன்புடன் எம்மை அரவணைத்து வழிநடத்திய ஒரு மேய்ப்பனை நாம் இழந்திருக்கிறோம். ஒரு பிதா மகனை இழந்த பிள்ளைகளாக நாம் வருந்துகிறோம். விடைபெறும் சபா அண்ணாவை ‘பிதாமகன்’ என்றே போற்றி மனதிருத்தி, அன்னாரின் மறுவாழ்வின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேதா சுந்தரேஸ்வர பெருமானை வேண்டி! அன்னாரின் பிரிவால் துயருறும் காரை மக்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி

S8

கண்ணீர் அஞ்சலி

as11-1

கண்ணீர் அஞ்சலி சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

Dr.Sabaகண்ணீர் அஞ்சலி
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி சபாபதி சபாரத்தினம் 21.03.2013இல் வியாழக்கிழமை சிவபதமடைந்தார் என்ற செய்தியை கேட்டு சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஆழ்ந்த துயர் பகிர்ந்து கொள்கின்றது!
அன்னார் சமூகஆர்வலரும், எமது ஊரின் புலம்பெயர் மன்றங்களின் ஆலோசகரும், பாடசாலைக் கல்வியின் வளர்ச்சிக்கு முன்நின்று உழைத்தவரும், 2007;;ஆம் ஆண்டு எமது சபையின் ஓன்று கூடலில் கலந்து கொண்டு பல ஆலோசனைகள் வழங்கியவருமாகிய அமரர் கலாநிதி சபாபதி சபாரத்தினம் அவர்களின் இழப்பு எமக்கும், மாணவர்களுக்கும், காரைநகருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்!!
அன்னாரது இழப்பால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர், மாணவர்கள், நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து துயர் பகிர்ந்து கொள்கின்றோம்!!!
அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர சௌந்தாரம்பிகா சமேத சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்!!!!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள

கண்ணீர் அஞ்சலி KWS-UK,CKCA,SKDB,KWS-FR,AKCA

கண்ணீர் அஞ்சலி

Dr.SabaDr.சபாபதி
சபாரத்தினம்(குஞ்சு)
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட னுச.சபாபதி சபாரத்தினம்
21.03.2013 வியாழக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் கடந்த இரண்டு சகாப்தங்களாக சிறப்பாக
இயங்கிவரும் காரை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின்
ஸ்தாபகரில் ஒருவரும், பிரான்சு காரை நலன்புரிச் சங்க
ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அன்னார் காரைநகரின் கல்வி, பொரளாதாரம், அபிவிருத்தி
தொடர்பாக இறுதி மூச்சுவரை அயராது செயற்பட்டுவந்தார்.
அன்னாரது இழப்பு எமக்கும் காரைநகர் மக்களுக்கும்
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்.
நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து
சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப்
பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

காரைநகர் அபிவிருத்தி சபை
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை – 2013 பணிகளும், சேவைகளும்.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை – 2013
பணிகளும், சேவைகளும்.

அன்புடையீர் வணக்கம்!

சுவிஸ் வாழ் காரை மக்களுக்கு எங்கள் சபை சார்பாக 2013 ஆண்டிற்கான நல்வாழ்த்துக்கள். நீங்கள் இதுவih காலமும் சபையுடன் உறுதுணையுடன் நின்று பங்காற்றியமைக்கு பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் சபைக்கு பங்களிப்பு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையானது 11-09-2011இல் இருந்து இன்று வரை கீழ் வரும் செயல்திட்டங்களுக்கு தன்னாலான உதவிகளைச்செய்துள்ளது.

  • மாணவர் நூல் நிலையத்திற்கு நிதிப்பங்களிப்பு
  • ஆதார வைத்தியசாலைக்கு தொலைநகல் கருவியும், அச்சுப்பிரதி இயந்திரமும் கையளிப்பு.
  • ஊரி அ.மி.த.க பாடசாலைக்கு மாணவர் கற்பதற்கான அகண்டதிரை எலக்றோனிக்கருவி கையளிப்பு.
  • காரைநகரைச்சேர்ந்த யுவதிக்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு  நிதி உதவியமை.
  • போரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்குளுக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கும் ஒழுங்கு.
  • யாழ்நகர் கலாசாலைக்கும், காரைஅபிவிருத்திச்சபை அலுவலகத்திற்கும் இரு அச்சுப்பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டமை.
  • காரைநகர் விவசாயிகளுக்கு சிறுபோக பயிர்ச்செய்கைக்கு ஊக்குவிப்பாக தானியம் வழங்க முடிவெடுத்திருக்கின்றமை.
  • 2013ஆம்ஆண்டிற்கானநாட்காட்டி,சுவிசிலும்,காரைநகரிலும் வெளியிட்டமை.
  • காரைத்தென்றல்-2011,2012 இங்கு கல்வி பயிலும் மாணவர் நன்மை கருதி வெகு சிறப்பாக நடத்தியமை.

அன்பான சுவிஸ் வாழ் காரை மக்களே!
மேற்குறிப்பிட்ட செயல்திட்டங்களை எமது சபை நடைமுறைப்படுத்தி வந்தள்ளது. மேலும் வேலைதிட்டங்களைச் செய்வதற்கு உங்கள் ஆதரவு தேவை. சபைக்கு மாதசந்தா SFr.20.00 செலுத்தாதவர்கள் தயவுகூர்ந்து அதனை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

2013ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி பெற்றுக்கொண்டவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தாதவர்கள் அதனை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காரைத்தென்றல்-19-05-2013ஆம்திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். மாணவர் நிகழ்சிகளில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பபடிவம் இதனுடன் இணைத்து அனுப்புகின்றோம். அதனை பூர்த்தி செய்து  31-03-2013ஆம் திகதிக்கு முன்னர் சபைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந் நிகழ்ச்சிகளுக்கான கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்கின்றோம்.
சுவிஸ் காரை அபிவிருத்தி சபைக்கு ஊரின் முன்னேற்றத்திற்காக நீங்கள் வழங்கும்  நன்கொடைக்களுக்கு சபை சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களும்.
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013
புலம்பெயர் காரை அமைப்புக்களால் கூட்டாக திட்டமிடப்பட்டிருக்கும்இ ‘முதுசங்களைத் தேடி’ வருடாந்த நூல் வெளியீட்டுக் கருத்திட்டத்தின்  இரண்டாம் ஆண்டாகிய 2013 இல்  1967 ஆம் ஆண்டு வெளியான சைவமகாசபைப் பொன்விழா மலர் மீள்பதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இத்தகவலை பலரும் அறிந்திருப்பீர்கள் என நாம் நம்புகிறோம். பொன்விழா மலரின் முதலாம் பதிப்பில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளம்பரங்கள் குறித்த மலரில் இடம் பெற்றிருந்தன. முதல் பதிப்பில் இடம்பெற்ற விளம்பரங்களின் பக்கங்களில் தற்போது புதிய விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள நலன்விரும்பிகளும் புரவலர்களும் விளம்பரங்களை குறித்த நாட்டின் காரை அமைப்புக்களுக்கு தற்போது வழங்கி வருகிறார்கள். இவ்வறிவித்தல் விளம்பரம் தர விரும்பும் ஏனைய அனைவர்க்குமான பகிரங்க கோரிக்கையாக முன் வைக்கப் படுகிறது. விளம்பரம் தர விரும்பும் அன்பர்களில் இலங்கையில் இருப்பவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபைக்கும்  காரை சங்கங்கள் செயற்படும் நாடுகளில் இருப்போர் குறித்த சங்கங்களுக்கும் இது குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனைய நாடுகளில் இருப்போர் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தை அல்லது காரைநகர் இணையத்தினை  416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
நன்றிகளுடன்
முதுசங்களைத் தேடி நூல் வெளியீட்டுக் குழு.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்
வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண்டு அனைத்தஇவ் உலகு.’

25-02-2013

கனடா காரை கலாச்சாரமன்றம்
தலைவர்,செயலாளர், நிர்வாகசபை உறுப்பினர்கள்.

அன்புடையீர் வணக்கம்.

கனடா வாழ் காரைமக்களால் ஐனநாயகமுறைப்படி உங்கள்
மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளீர்கள். எமது
சபைசார்பாக நன்றிகளும், பாராட்டுதல்களும். அன்பான கனடா வாழ் காரை
மக்களே! நிர்வாக தெரிவோடு நின்றுவிடாது. அவர்களோடு பக்கபலமாக நின்று
மன்றத்தையும், எமது கிராமத்தையும் வளர்ப்பதற்கு ஒன்றுபடுதல் வேண்டும்.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் ஆண்டு விழாவான காரைத்தென்றல்-
2011,2012 எமது சபை உறுப்பினர்களுடன் ஒன்று சேர்ந்து காரைத்தென்றல்
வெகு சிறப்பாக நடைபெறவும், எமது சபை சார்பாக இவ் வருடத்திற்கான நாட்காட்டி
தயாரிப்பதற்கு முன்நின்று பலவழிகளிலும் உதவிபுரிந்த திருமதி மலர்
குழந்தைவேலு அவர்கள் தலைவராக தெரிவு செய்ப்பட்டதற்கு நன்றிகளும்,
பாராட்டுதல்களும்.

கனடா காரை கலாச்சாரமன்றத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக
சபை உறுப்பினர்கள் அனைவருக்கும். சுவிஸ் வாழ் காரைமக்கள் சார்பாகவும்,
செயற்குழு உறுப்பினர் சார்பாகவும் உங்கள் மன்றம் வரும் நான்கு வருடங்களில்
பல வழிகளிலும் பணிபுரிந்து மன்றமும், எமது கிராமமும் வளர்ச்சி பாதையில்
செல்ல வேண்டும் என்று. ஈழத்து சிதம்பர சிவகாமி உடனுறை நடராசப்பெருமானை
வாழ்த்தி வணங்குகின்றோம்.

நன்றி

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்.
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் விவசாயத்திற்கு உதவிக்கரம்

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் விவசாயத்திற்கு உதவிக்கரம்

விவசாயத்துறையில் முன்னணியில் இருக்கும் எமது ஆழகிய கிராமாகிய காரைநகர் பெரும்போக நெற்செய்கையில் வருடத்திற்கு 8லட்சம் புசல்நெல் விளைச்சலை தரக்கூடிய விளைநிலத்தைக்கொண்டது. வானம்பார்த்த மழையை நம்பி விவசாயம் செய்யும் எமது விவசாயிகளுக்கு இம்முறை பருவம் கடந்து பெய்த சீரற்ற காலநிலை காரணமாக கடும்மழையால் நெல் அறுவடை பாதிப்பு அடைந்துள்ளது. இப் பாதிப்பின் நிவாத்;தியாக விளைநிலத்தின் ஈரலிப்புத்தன்மை மூன்று மாதங்களுக்கு நன்மைதரக்கூடியது இதன் பயனாக எமது சிறுபோக செய்கையை விரிவுபடுத்தலாம்.

காரைநகர் விளைநிலம்  அன்றுதொட்டு இன்றுவரை பெரும்போக நெல்லிலும், சிறுபோக விளைச்சலில் பயறு,எள்ளு,குரக்கன்,சணல்,மிளகாய்,வெங்காயம்,காய்கறிகளில் தன்னிறைவு கண்ட நிலம். நாட்டில் ஏற்பட்ட போர்சுழலில் மக்களின் இடம்பெயர்வு காரணமாக விவசாயத்துறை மிகவும் பாதிப்பு அடைந்தது. எமது கிராமத்தின் நன்னீர் ஊற்றும் குறைவடைந்துள்ளது.

அன்பான காரைநகர் வாழ் மக்களே!
தற்பொழுது பருவம் கடந்து பெய்த மழைகாரணமாக சிறுபோக செய்கை நன்மைதரக்கூடியது. இதனை ஊக்குவிக்கும் முகமாக இவ் விளைச்சலுக்கு தேவையான தாநியம் வகைகளை வேண்டுவதற்கு மிகவும் வசதியில்லாத விவசாயிகளுக்கு சுவிஸ் காரை அபிவிருத்தி சபை கொடுத்துதவ முன்வந்துள்ளது. இதனுடைய வேலைதிட்டத்தினை காரைநகர் அபிவிருத்தி சபையூடாகவும், காரைநகர் கமநலச்சேவை அலுவலகத்துடாகவும் செய்து வருகின்றோம். எனவே அன்பான விவசாயிகளே,மக்களே! உங்கள் கால்நடைகளை இப்பொழுது நடைமுறையில் இருக்கின்ற மாதிரி இன்னும் மூன்று மாதங்களுக்கு விவசாயநிலங்களுக்கு செல்லாதவாறு பாதுகாத்துக்கொள்ளவும்.
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

காரைக் கதம்பம் போற்றிடும் தைத் திருநாள்-2013

காரைக் கதம்பம் போற்றிடும்
தைத் திருநாள்-2013
02-02-2013
அன்புடையீர் வணக்கம்!
தலைவர்,செயலாளர்,நிர்வாகசபை,பிருத்தானியா

‘தழிழர் போற்றும் நன்னாள்
உழவர் போற்றும் பொன்னாள்’

என்று சிறப்பிக்கப்படும் தைத்திருநாள், சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் தமிழர்திருநாளாகும். பிருத்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் ‘காரைக்கதம்பம்-2013 16வது  பொங்கல் விழா திக்கெட்டும் பரவி எமது ஊரின் பெருமைசேர்க்க வாழ்த்துகின்றோம்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப அன்று தமிழர் வாழும் தேசங்களில் கொண்டாடப்படும் பொங்கல்விழா. இன்று உலகின் எம் இனத்தின் புலம்பெயர் நாடுகளிலுள்ள கிராம நலனபுரிசங்களால் வெகு சிறப்பாக தமிழிசையை முதன்மைப்படுத்தி கொண்டாடுகின்றார்கள். அதன் வெளிப்பாடே காரைக் கதம்பம்-2013
வெந்தழல் நீராகும்;;;; வெள்ளெலும்பு பெண்ணாகும்;
வந்தமத வேழம் வணங்கிடுமே; சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்?

எமது ஊரின் கலை வடிவங்களை நினைவுபடுத்தி இளையவர்களுக்கு கல்வியறிவை மேம்படுத்தவும், பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் ஒன்றினையும் இடமாகவும், காரைக் கதம்பம்- 2013 கலைவிழா பொலிவு பெற்று விளங்க வேண்டும் எனவும்,  ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப் பெருமானையும் ஆண்டிகேணி ஐயனாரையும் பிரார்த்தித்து ஆசிகூறி அமைகின்றோம்.

நன்றி

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இரண்டு குடும்பம்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வருகின்றது

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இரண்டு குடும்பம்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வருகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை தலைவர்  2011 ஆண்டு புரட்டாதிமாதம்  காரைநகருக்கு சென்றபொழுது அங்குள்ள சில குடும்பங்களின் வாழ்கைமுறையை கண்டறிந்து அதில் சிதம்பராமூர்த்தி கேணியடியை சேர்ந்த குடும்பதலைவனை இழந்த 5பெண்பிள்ளைகளின் தாயார் சக்திவேல் நகுலேஸ்வரி அவர்களுக்கும், எமது தாயகத்தில் நடந்த கொடியபோரினால் ஒரு காலை இழந்த சடையாளி பெரியமணலை சேர்ந்த  செல்லையா சிவகுமார் அவர்களுக்கும் உதவிகள் தேவையென கிராமசேவகர் மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னர்  எமது நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வரு குடும்பத்திற்கும்   மாதாந்தம் 5000 ரூபாவும்,   செல்லையா சிவகுமாருக்கு சுயதொழில் ஊக்கிவிப்பு தொகையாக 50000 ரூபாவும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நிர்வாக சபை எடுத்த முடிவுகளுக்கு அமைய வியாவில் ஐயனார் கோயில் தேவஸ்தானம் ஊடாக கடந்த வருடம் தைமாதம் (1-01-2012)இல் இருந்து  மாதாந்த ஊக்குவிப்ப தொகையை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

Karainagar.com இணையத்தளத்தினை வாழ்த்துகின்றோம்.

Karainagar.com  இணையத்தளத்தினை வாழ்த்துகின்றோம்.
தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற தமிழர் பண்பாட்டிற்கு ஏற்ப தைப்பொங்கலுடன் புதுபொலிவுடன் அலங்கரித்துக்கொண்டிருக்கும் Karainagar.com   இணையத்தளத்திற்கு எமது  முதல் வணக்கம்.
      இன்றைய நவநாகரிக உலகின் முதல் தகவல் தொடர்பு சாதனம் இணையத்தளமே. ஊரின் தேவையறிந்து நிலத்திலுள்ள ஆலயங்கள், பாடசாலைகள், சமூகமன்றங்கள், புலத்திலுள்ள கலைவடிவங்கள், சமூகமன்றங்களின் செய்திகளையும் ஒன்றிணைத்து ஒரு முற்றத்தில் சிந்திக்கவைத்துக்கொண்டிருக்கும் Karainagar.com   நிர்வாகிகளை வாழ்த்துகின்றோம் பாராட்டுகின்றோம்.
            நற்றமிழின் அர்ச்சனையை நாடியருள் நாதர்
            உற்றவுமை யோடுமகிழ்ந் தாடுமொரு கூத்தர்
            முற்றுகனி போன்றசுவை முத்திதர வல்லார்
            கற்றவர்கள் வாழுதிருக் காரைநகராரே.

      எமது கிராம முன்னேற்றத்திற்காக உழைக்கின்ற அமைப்புக்கள்;;, மன்றங்கள், சமூகஆர்வலர்களுக்கு ஓரு அன்பான வேண்டுகோள் நீங்கள் பார்வையிடுவதோடு நின்றுவிடாது உங்கள் கருத்துக்களையும், ஆலோசணைகளையும் எழுதி அனுப்புங்கள் அப்பொழுதான் இவ்இணையத்தினை மேலும் அலங்கரிக்கலாம் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
      
            நம் தமிழர் பண்பாட்டின்  இன்பம், துன்பம் ஆகியசெய்திகளை தாங்கிவருகின்ற  Karainagar.com  கடந்த நான்குவருடங்களாக பலசேவைகள் செய்துவருகின்றது என்பது நாம் அறிந்ததே! இவ்இணையத்தள நிர்வாகிகள் செயல்திறன் மிக்கவர்களாக செயல்படுகிறார்கள். எனவே தொடர்ந்தும் இவ்நிர்வாககுழுவை தெரிவு செய்து மேலும் நவீன முறையில் வடிவமைக்க உதவுமாறு கனடாவாழ் காரைமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

புலம்பெயர் தேசத்தில் பல வேலைப்பளுக்களுகு மத்தியில் Karainagar.com  இணையத்தளத்தினை வடிவமைத்த தொழில்நுட்பவியளார்களுக்கும், காரை-கனடா கலாச்சார மன்றநிர்வாகிகளுக்கும். எமது சபை சார்பாக நன்றிகளும், பாராட்டுதல்களும்.
 
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
 செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திசபையினால் சில உதவிப்பொருட்கள் காரைநகருக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன

சுவிஸ் காரை அபிவிருத்திசபையினால் சில உதவிப்பொருட்கள் காரைநகருக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை கடந்தவருடம் (30-09-2012)ல் நடைபெற்ற மக்கள் சந்திப்பும், ஆலோசனைக்கூட்டத்தில் காரைநகர் ஆதாரவைத்தியசாலைக்கு சில உதவிகள் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எமது சபையின் தலைவர் திரு பூபாலபிள்ளை விவேகானந்தா வைத்தியசாலை அதிகாரி திரு டாக்டர் Majumudeen அவர்களுடன் தொடர்புகொண்டு அங்குள்ள குறைநிறைவுகளை கேட்டறிந்தார்.  டாக்டர் Majumudeen நோயாளர் பாவிப்பதற்கான  சக்கரநாற்காலிகள் தேவை எனக்கேட்டிருந்தார் அதற்குகிணங்க தற்பொழுது 4 சக்கரநாற்காலிகளை அனுப்புவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.  அத்துடன் மாணவர் நூல்நிலயத்திற்கு தேவையான எமது சபையால் சேகரிக்கப்பட்ட நூல்களும் அனுப்பி வைக்கப்பட விருக்கின்றன.
அன்பார்ந்த சுவிஸ்வாழ் காரைமக்களே! காரைநகர் அபிவிருத்தி சபைக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்ற அனைத்து பொருட்களும் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றவை. நீங்களும் உங்களால் இயன்ற பொருட்களை எமது சபைக்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஒரு பொதி அனுப்புவதற்கான செலவு 150.00Sfr. இந்த செலவினை ஏற்றக்கொளும் அன்பர்கள் சபையுடன் தொடர்பு கொள்ளவும். அனுப்பிவைக்கப்படவிருக்கின்ற பொருட்களின் நிழற்படங்களை கிழேகாணலாம்.
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

035 036 037 068

 

 

 

‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம்

‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம்
அனைத்து காரை மன்றங்களும் முதன்முறையாக ‘முதுசங்களைத்தேடி’எனும் முத்தாரக் குடையின்கீழ் இணைந்து தேடும் முதல் மழை. Continue reading

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை பெருமையுடன் வெளியிடும் நாட்காட்டி வெளியீட்டு வைபவம்

‘பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே’

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை பெருமையுடன் வெளியிடும்

நாட்காட்டி வெளியீட்டு வைபவம்

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையால் (2-12-2012)ல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நாட்காட்டி இன்று (27-12-2012)ல் வியாழக்கிழமை  ஈழத்து சிதம்பரம் என்று அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலில் ரதோற்சவதினத்தில் மணிவாசகர் அன்னதானசபையில் காரைநகர் அபிவிருத்தி சபைத்தலைவர் திரு க. சோமசேகரம் அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

Continue reading