Tag: France karai

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் (இடைப்பிட்டி,காரைநகர்) அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையில் வருடா வருடம் நடைபெறும் காரைநகர் கோட்ட முன்பள்ளி சின்னஞ் சிறிய சிட்டுக்களின் கல்வி செயற்பாட்டை மேம்படுத்தும் செயற்த்திட்டம் 16.03.2021 செவ்வாய்க்கிழமை அன்று கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது!

திரு கே.கே.நடராஜா அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள விழிநீர் விசும்பல்!

திரு.பொன்னையா திரவியநாதன் அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது!

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சின்னத்துரை கோபாலகிருஸ்ணன்(சந்திரன்) அவர்கள் கலந்துகொண்டார்.

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகின்ற காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது நிறைவு விழாவிற்கு பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது நிறைவு விழாவிற்கு

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின்

வாழ்த்துச் செய்தி

களபூமியில் புதிய உத்வேகத்துடன் மீண்டும் சனசமூக நிலையம் தன் பணியை புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களையும் உள்வாங்கி சிறந்த முறையில் நடைபெறுகின்ற தங்களின் விழாவினை பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தங்கள் பணியானது சிறப்புடன் மீண்டும் மீண்டும் நடைபெற எல்லாம் வல்ல ஈழத்து தில்லைக் கூத்தனை பிரார்த்திப்போம்.

நன்றி

வாழ்க வளமுடன் என வாழ்த்திடும்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினர்

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் பற்றிய அறிவித்தல்

metting dec n

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரை நலன்புரிச்சங்கம் – பிரான்ஸ்

எமது மன்றத்தின் பன்னிரண்டாவது நிறைவையொட்டி இடம்பெறும் பன்னிரண்டாவது ஆண்டுவிழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை

SALLE JEANNE D ‘ARC
50, place de trocy
75018 paris métro – marx dormay linge 12

என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகசிறப்பான முறையில் திரு க.மயில்வாகனம் தலைமையில் காலை 10.00மணிமுதல் 11.00மணிவரை சகமன்ற உறுப்பினர்களிற்கிடையேயான (பிரான்ஸ், சுவீஸ், பிரித்தானியா, கனடா) கலந்துரையாடல் இடம்பெற்று தொடர்ந்து 11.30மணியிலிருந்து 12.30 மணிவரை மதியபோசனவிருந்துபசாரம் இடம் பெற்று சரியாக 12.30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் நிறைவு பெறும்.

இவ்விழாவிற்கு சிறப்பூட்டுவதற்கான பிரதமவிருந்தினராக கனடாவிலிருந்து கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு சபாரத்தினம் பாலச்சந்திரன்அவர்களும் லண்டனிலிருந்து கௌரவவிருந்தினராக திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் மற்றும் பிரித்தானியா மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் இவர்களுடன் சுவீஸ் மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் ஜேர்மனியிலிருந்து அமரர் விஐயரத்தினம் கென்னடி அவர்களின் நினைவலைகளை பகிர்வதற்காக அவரின் சகோதரரான திரு விஐயரத்தினம் சாயிபாபா அவர்களும், திரு சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்க இளையோர்கள்,சிறார்கள் ஆகியோரின் களிப்பூட்டும் பல்சுவை நிகழ்வுகளும் மற்றும் திரு இளையதம்பி தயானந்தா அவர்களுடனான சிறப்பு கருத்தாடு களமும் இனிதே நடைபெறவுள்ளன. மேலும் இந்நிகழ்விற்கு
அனுசரனையார்களும், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே மலர்ந்த இத்தமிழ்புத்தாண்டில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் இடம்பெறவிருக்கும் காரைஸ்வரங்கள் 2018 நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

 

பிரான்ஸ்
காரை நலன்புரிச்சங்க நிர்வாகம்

 

 

 

isvaram. 1pdf

 

 

காரை நலன்புரிச் சங்கம் – பிரான்ஸ் 12வது ஆண்டு விழா அழைப்பிதழ்

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரை நலன்புரிச்சங்கம் – பிரான்ஸ்

எமது மன்றத்தின் பன்னிரண்டாவது நிறைவையொட்டி இடம்பெறும் பன்னிரண்டாவது ஆண்டுவிழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை

SALLE JEANNE D ‘ARC
50, place de trocy
75018 paris métro – marx dormay linge 12

என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகசிறப்பான முறையில் திரு க.மயில்வாகனம் தலைமையில் காலை 10.00மணிமுதல் 11.00மணிவரை சகமன்ற உறுப்பினர்களிற்கிடையேயான (பிரான்ஸ், சுவீஸ், பிரித்தானியா, கனடா) கலந்துரையாடல் இடம்பெற்று தொடர்ந்து 11.30மணியிலிருந்து 12.30 மணிவரை மதியபோசனவிருந்துபசாரம் இடம் பெற்று சரியாக 12.30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் நிறைவு பெறும்.

இவ்விழாவிற்கு சிறப்பூட்டுவதற்கான பிரதமவிருந்தினராக கனடாவிலிருந்து கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு சபாரத்தினம் பாலச்சந்திரன்அவர்களும் லண்டனிலிருந்து கௌரவவிருந்தினராக திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் மற்றும் பிரித்தானியா மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் இவர்களுடன் சுவீஸ் மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் ஜேர்மனியிலிருந்து அமரர் விஐயரத்தினம் கென்னடி அவர்களின் நினைவலைகளை பகிர்வதற்காக அவரின் சகோதரரான திரு விஐயரத்தினம் சாயிபாபா அவர்களும், திரு சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்க இளையோர்கள்,சிறார்கள் ஆகியோரின் களிப்பூட்டும் பல்சுவை நிகழ்வுகளும் மற்றும் திரு இளையதம்பி தயானந்தா அவர்களுடனான சிறப்பு கருத்தாடு களமும் இனிதே நடைபெறவுள்ளன. மேலும் இந்நிகழ்விற்கு
அனுசரனையார்களும், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே மலர்ந்த இத்தமிழ்புத்தாண்டில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் இடம்பெறவிருக்கும் காரைஸ்வரங்கள் 2018 நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

 

பிரான்ஸ்
காரை நலன்புரிச்சங்க நிர்வாகம்

 

 

 

isvaram. 1pdf

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்

FRANCE KARAI LOGO

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்

எதிர்வரும் 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் 183 rue des chateau de rentier 75013 paris என்னும் இடத்தில் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு காரை அபிவிருத்திச்சபையின் தற்போதைய தலைவர் திரு T.சிவாமகேசன் அவர்கள் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளார். 

இந்நிகழ்வில் காரைநகரிற்கான தேவைகளும் மன்றங்களின் பணிகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்.

                                                                 நன்றி

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை

karai mai 16

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தின் பத்தாவது ஆண்டுவிழாவாகிய “காரை ஸ்வரங்கள் 2016” நிகழ்வு 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது

‘காரை ஸ்வரங்கள்-2016’ வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

CKCA logoFRANCE KARAI LOGO

'காரை ஸ்வரங்கள்-2016' வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

எமது சகோதர சங்கமான பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு சிறப்பு விழாவான 'காரை ஸ்வரங்கள்-2016' இற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது. 

புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் எமது காரை உறவுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரான்ஸ் – காரை நலன் புரிச் சங்கம்; ஒரு தசாப்தத்தைக் கடந்து அதன் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல் கல்லை அடைந்திருப்பதை அறிந்து எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

நாம் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகளை மீட்டவும், எமது கலை பண்பாட்டு அடையாளங்களை எமது அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும், எமது ஊர் வாழ் உறவுகளின் நலன்களுக்கு உதவிடவும் பல திட்டங்களை நிறைவேற்றி பத்தாவது ஆண்டில் வெற்றி நடைபோடும பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் பணிகளை கனடா வாழ் காரை உறவுகளின் சார்பில் கனடா – காரை கலாச்சார மன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.

உலகெங்கும் பரந்து வாழும் எமது உறவுகள் ஒன்றுகூடி மகிழ்வதற்கும், எமது இளம் தலைமுறையினர் தமது மொழி, கலைத் திறன்களை வெளிப்படுத்தி அரங்கேற்றுவதற்கும் இவ்வாறான விழாக்கள் உதவுகின்றன. 

அத்தகைய சிறப்புமிக்க விழாவான 'காரை ஸ்வரங்கள் – 2016' பொலிவு பெற்று வெற்றி விழாவாக விளங்க எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கம் நடாத்தும் பொதுக்கூட்டம் – 2015

FRANCE KARAI LOGO
 பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கம்              நடாத்தும் பொதுக்கூட்டம் – 2015
    
    பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் நடாத்தும் பொதுக்கூட்டம்  எதிர்வரும் மார்கழி மாதம் 25ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்று எமது மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள 10வது ஆண்டுவிழாவிற்கான  ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.  அத்தருணம் பிரான்ஸ் வாழ் காரை மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கின்றோம்.


        நேரம் : பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 7 மணிவரை

        இடம் : centre des 2 moins
               185, rue du château des rentier
              75013 Paris
              metro : place d'italie

 

தொடர்புகளுக்கு :                                                               காரைநலன்புரிச்சங்கம்
S. தவபாலன் – 06 15 33 46 36                                                             பிரான்ஸ்        
K. சுகிர்தராஐh 06 34 17 18 10          
                 

சென்ற ஞாயிற்றுக்கிழமை 31.03.2013 அன்று பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரால் கொண்டாடப்பட்ட புதிர் பொங்கல் நிகழ்வு

சென்ற ஞாயிற்றுக்கிழமை 31.03.2013 அன்று பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரால் கொண்டாடப்பட்ட புதிர் பொங்கல் நிகழ்வு

கண்ணீர் அஞ்சலி

as11-1

கண்ணீர் அஞ்சலி KWS-UK,CKCA,SKDB,KWS-FR,AKCA

கண்ணீர் அஞ்சலி

Dr.SabaDr.சபாபதி
சபாரத்தினம்(குஞ்சு)
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட னுச.சபாபதி சபாரத்தினம்
21.03.2013 வியாழக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் கடந்த இரண்டு சகாப்தங்களாக சிறப்பாக
இயங்கிவரும் காரை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின்
ஸ்தாபகரில் ஒருவரும், பிரான்சு காரை நலன்புரிச் சங்க
ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அன்னார் காரைநகரின் கல்வி, பொரளாதாரம், அபிவிருத்தி
தொடர்பாக இறுதி மூச்சுவரை அயராது செயற்பட்டுவந்தார்.
அன்னாரது இழப்பு எமக்கும் காரைநகர் மக்களுக்கும்
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்.
நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து
சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப்
பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

காரைநகர் அபிவிருத்தி சபை
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்

காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு .T .சிவாமகேசன் அவர்களுடனான கலந்துரையாடல்.

காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு .T .சிவாமகேசன் அவர்களுடனான கலந்துரையாடல்.
கடந்த 03/03/2013 அன்று பிரான்ஸ் பாரிஸ் மாநகரிலும் , (10/03/2013) அன்று பிருத்தானியா லண்டன் மாநகரிலும், தற்பொழுது ஐரோப்பா வருகை தந்திருந்த எமது காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு.T .சிவாமகேசன் அவர்களுடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பாரிஸில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல நல்ல முன்னேற்றமான விடயங்கள் ஆராயப்பட்டது . இவற்றில் குறிப்பிடத்தக்க விடயங்களாக
1.இணைப்பாளரின் மாதாந்த கொடுப்பனவை ரூபாய் 1000.00 ஆக அதிகரித்தல்.
2. முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கு போகும் ஆசிரியர்கட்கு பயிற்சிக் கட்டணத்தை (ரூபாய் 5000.00) பொறுப்பேற்றல். ஏற்கனவே காரை அபிவிருத்தி சபை தலைவர் அவர்கள் தனிப்பட்ட முறையில் 3 ஆசிரியர்களுக்கு இக்கட்டணத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மிகுதி 6 ஆசிரியர்களுக்கு பயிற்சி நிதியான ரூபாய் 30,000.00 தை (முப்பதுனாயிரம் ) எமது மன்றம் பொறுப்பேற்றுள்ளது .
4. காரை அபிவிருத்தி சபையின் வருடாந்த செலவுகளில் 10% தை எம் மன்றம் ஏற்றுள்ளது (ரூபாய் 26,000.00).
ஆகிய முக்கிய அம்சங்களில் பிரான்ஸ் நலன் புரிச் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது. பாரிஸ் வருகைதந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்பித்த காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு.T .சிவமகேசன் அவர்களுக்கு பிரான்ஸ் நலன்புரிச் சங்கம் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பிரான்ஸ் வாழ் காரை மக்கள் சார்பில் தெரிவிதுக்கொன்கின்றது.
[nggallery id=13]
10/03/2013 அன்று பிற்பகல் 03:00 மணியளவில் லண்டனில் நடைபெற்ற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தினுடனான கலந்துரையாடலிலும் மேலும் பல ஆரோக்கியமான, அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக எமது வைத்தியசாலை பிரசவ அறை (Maternity ward ), மற்றும் ஆண், பெண் நோயாளிகள் அறைகளை (Patient ward ) புனருத்தாரணம் செய்தல்(ரூபாய் 1,200,000.00 செலவில்). – பின்னர் கிடைத்த செய்திகளின்படி அரசாங்கம் எமது வைத்தியசாலை புனருத்தாரண மற்றும் மேலதிக நிர்மாணப்பணி வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறியப்பட்டுள்ளது . ஆகவே எமது இவ் வேலைப் பணிகள் நிர்வாகத்தின் மீழ் ஆராய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது.-
எதிர் காலத்தில் எம் மக்கள் எதிர்நோக்க இருக்கும் குடி தண்ணீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர்கொள்வது பற்றி ஆராயப்பட்டது. இதன்போது காரை அபிவிருத்தி சபைத் தலைவர் தான் எடுத்து வந்திருந்த உதயன் பத்திரிகையில் 03/01/2012 இல் வெளியாகியிருந்த ” தரைக்கு கீழ் உள்ள அடிமண் குடிநீரை எவ்வாறு பாதுகாத்தல்” என்ற தலையங்கத்தில் வெளியாகி இருந்த கட்டுரையின் பிரதியை நிர்வாகத்தின் பார்வைக்கு முன்வைத்தார்.
ஆலடி, களபூமி, காரைநகரில் பன்முகப்படுத்தப்பட்ட ஆன்மீக மனிதநேய நோக்கங்களுடன் கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கி வரும் ”ஓம் கிரியா பாபாஜி யோகா ஆரணியத்தின் ” கிளை 16/01/2013 அன்று ஆரப்பிக்கப்பட்டு சிறப்புற இயங்கி வருகின்றது. பன்னிரு திருமுறைகள் ஒழுங்குற ஓதப்பட்டு கிரியா யோக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் வகுப்பிலேயே 40 பிள்ளைகள் யோகா பயிற்சியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும், அத்துடன் எமது ஊரில் ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்த யோகா மையம் இலங்கையில் 5வது கிளை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமதி விமலா கிரிஷ்ணபிள்ளை அவர்கள் மேற்படி முகவரியில் உள்ள இல்லத்தை(சுந்தரமூர்த்தி வித்தியாலத்திற்கு முன்பாக) தமது மூதாதையர் நினைவாக யோகா ஆரண்ணியத்திற்கு பெருந்த்தன்மையுடன் மனமுவந்து அளித்துள்ளமை எமதூர் மக்களால் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.மேற்படி யோகா ஆரண்ணியம் நிலையத்திற்கு நீர் இறைக்கும் இயந்திரம் (Water Pump), குடிநீர் தாங்கி(Watrer Tank ) மேலும் சில அத்தியாவசிய உடனடித் தேவைகளுக்கு ரூபாய் ஒரு இலட்சம் (100000.00) தேவையென எமது சங்கத்திற்கு கோரிக்கை ஒன்றை கடிதமூலம் அனுப்பி வைத்துள்ளார்கள்.
இவ் கோரிக்கை கூட்டத்தில் ஆராயப்பட்டு எமது பிருத்தானியா நலன் புரிச் சங்கத்தால் ரூபாய் 50,000.00 யை வழங்குவதன முடிவு செய்யப்பட்டது. அத்துடன் நிர்வாகசபை உறுப்பினர் ஒருவர் முன்வந்து தானும் மனமுவந்து மிகுதியான ரூபாய் 50,000.00 ஐ இந்த நல்ல சேவைக்கு வழங்குவதாக தெரிவித்தார். ஆக மொத்தம் யோகா ஆரண்ணியத்தின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரை மாணவர் நூல் நிலையத்திற்கு ஒரு பகுதி தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்கு ரூபாய் 200,000.00 வழங்கப்படுள்ளது. (எழுத்து மூல வேண்டுகோளுக்கு இணங்க). நூல் நிலைய மேலதிக கட்டிட நிர்மாண வேலைகளுக்கு எவ்வாறு நிதி திரட்டுவது என்பது பற்றியும் ஆராயப்பட்டது. எமது சங்கத்தின் ஸ்தாபகரில் ஒருவரும் இன்றுவரை சங்கத்தின் வளர்ச்சியில் மடுமல்லாது காரை மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பெரிதும் உதவி வரும் Dr .S .சபாரட்ணம் அவர்கள் சகலகலா நூல் (Encyclopaedia ) முழு தொகுப்பினையும்
(32 Volumes) காரை மாணவர் நூல் நிலையதிற்கு அன்பளிப்பு செய்திருந்தார்.
Dr .ஆ.தியாகராஜா ம.ம.விதியாலயத்திற்கு உடனடி திருத்த வேலைகளுக்கு ரூபாய் 100,000.00 வழங்குவதன ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றும் கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவை June மாதம் 23ம் திகதி லண்டனில் கொண்டடுவதற்கு முடிவு செய்யப்படுள்ளது.
காரை அபிவிருத்தி சபையின் வருடாந்த செலவுத் தொகையில் 30% பங்களிப்பான ரூபாய் 78,000.00 தை பிருத்தானியா நலன் புரிச் சங்கம் பொறுப்பேற்றது.
மேலும் பல சிறு சிறு விடயங்கள் இந்த கலந்துரையாடலில் பரிசீலனை செய்யப்பட்டது.
இங்கு வருகைதந்து கலந்துரையாடலில் சங்கமித்து பல நல்ல ஆக்கபூர்வமான விடயங்களை மன்றங்களுடன்
பகிர்ந்து கொண்டமைக்காக மீண்டும் ஒருமுறை பிருத்தானிய நலன் புரிச் சங்கம் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு.T .சிவமகேசன் அவர்களுக்கு பிருத்தானிய வாழ் காரை மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றது.
[nggallery id=14]
நன்றி
 
நிர்வாகம்.
பிருத்தானியா & பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்கம்.

பிரான்ஸ் – காரைநகர் அப்புத்துரை பாடசாலை பழைய மாணவர்களின் அன்பளிப்பு

யா/வலந்தலை தெற்கு அ .மி .த .க.பாடசாலையின் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) பழைய மாணவர்சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க , இப் படாசாலையின் பிரான்ஸ் வாழ் பழைய மாணவர்கள் தங்கள் மனமுவர்ந்த பங்களிப்பினை (பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க ஆதரவுடன்) வழங்கி உள்ளார்கள்.

Continue reading