சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்

 "காரைத் தென்றல் – 2014இல்" வெளியீட்டு வைக்கப்படவிருக்கின்ற "சுவிஸ் காரை தென்றல் மன்ற கீதம்", இறுவெட்டு வடிவில் ஒலிப்பதிவு செய்த யாழ்ப்பாணம், "ஸப்தமி" கலையகத்துக்கும், "பத்தாவது ஆண்டு சிறப்பு மலர் காரைநிலா-2014" வெகு சிறப்பாக வெளிவர உதவிய மலர் வெளியீட்டுக் குழுவிற்கும், அழகானமுறையில் வடிவமைத்த வவுனியா வாணி கணனிப் பதிப்பகத்தாருக்கும் எமது சபையின் மனநிறைவான வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
சுவிஸ் காரை தென்றல் எனும் மன்றம்
வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

மலையோடு நதியும் அழகொடு வளமும்
மலிந்திடு சுவிஸ் வள நாட்டின்
கலைமணங் கமழும் சுவிஸ் காரை தென்றல்
எனும் மன்றம் வாழியவே!

மண்ணுலகில் ஒரு சொர்க்கம் என்றே
புகழ் மாண்புமிகும் சுவிஸ் நாட்டின்
கண்ணெனத் திகழும் சுவிஸ் காரை தென்றல்
எனும் மன்றம் வாழியவே!

அலைகடல் சூழ்ந்தொழிர் முத்தெனத் திகழும்
அன்னை எம் ஈழத்தின் உயிரெனவே
நிலை கொள்ளும் காரை எம் ஆன்மா வாழிய
நீடிய பல்லாண்டு வாழியவே!                 

மருதமும் நெய்தலும் மயங்கி முயங்கியே
மகிழ்வுறும் காரை  நகரினிலே
இரதமோர் ஐந்தின் எழில்மிகு பவனி
என்றென்றும் வாழியவே!

புரவலர் புலவர் வர்த்தகர் அறிஞர்
புவிகாத்திடும் உழைப்பாளர்
விரவிய புகழின் விண்ணுலகென்றே
வியந்திட வாழியவே!

ஈழத்துச் சிதம்பரம் எனத் திகழ் கோவிலும்
எழிலுறு சுந்தரேஸ்வரனாரும்
கோளொத் திடும்இரு கோபுரம் உயர்ந்திடும்
கோநகர் வாழியவே!                       

தென்னை பனைமா சிறந்த நெல் நற்பயிர்
தேனென இனித்திடும் வாழையோடு
உன்ன அருங்கடல் வளமொடு கோவளம்
உறுபயன் ஈந்திடும் காரைநகர் வாழியவே!

கலங்கரை விளக்கம் துர்வாச சாகரம்
கவினுறு பலவளங் களெல்லாம்
இலங்கிடும் இராசாவின் தோட்டம் – சப்த
கன்னியர் கோவில் வாழியவே!      


சைவமும் தழிழும் கண்ணெனத் திகழும்
சரித்திரப் புகழ்பெறு காரைநகர்
வையமும் வானும் வாழ்ந்திட என்றும்
வாழிய வாழியவே! வாழிய பல்லாண்டு

காரைத் தென்றல் களியோடு வீசியே
காலமெல்லாம் சிறந்திட
ஊரைத் துறந்து பிற நாட்டினில் வாழ்வோர்
உறுதியுடனு ழைப்போம் வாழியவே!


  ஆக்கம்    கலாபூணம் கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
            இல.90, திருநாவற்குளம், வவுனியா
            31-01-2014
  வயலின்    திரு. அ.ஜெயராமன்
  கீபோட்     திரு.கோ.சத்தியன்(முரளி)
  நாதஸ்வரம்  திரு.இ.வசந்தன்
  மிருதங்கம்   திரு.இ.துரைராசா
  தபேலா,தவில் திரு.ச.விமல்சங்கர் 
  கீதம் பாடியவர்  இசைக்கலாமணி சங்கீதவித்தகர்  திருமதி தேவமனோகரி உருத்திரசிங்கம்  
  இசைக்குழு இயக்குநர் திரு.சத்தியன் கோபாலகிருஷ்ணன்
  ஒலிப்பதிவு   யாழ்ப்பாணம்,  'ஸப்தமி' கலையகம் 

                                                                                   நன்றி
                                                                                                                                                       இங்ஙனம்
                                                                                                                                   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                          செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                                   சித்திரை2014