சிந்தனையில் சிறகடித்த காரைத்தென்றல் – 2014

Zürcher Gemeinschaftszentren,GZ Seebach, Hertensteinstrasse-20, 8052 Zürich இல் 08-06-2014, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கடந்து விட்ட நேரம். சூரிச் மாநகரில் 35 பாகையைத் தொட்டு விட்டிருந்தது வெயில் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது சுவிஸ் நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும், பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா, ஆஸ்திரேலியா என வௌ;வேறு நாடுகளில் இருந்தும் காரை மண்ணின் விழுதுகள் ஒன்றாகி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் வருடாந்தம் நடாத்தப்படும் காரைத்தென்றல்-2014 பத்தாவது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடத் தயாரா விட்டிருந்தனர்.
சின்னஞ் சிறுசுகளுக்கோ பெரும் கொண்டாட்டம். தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கம் வண்ண வண்ண ஆடைகளை அணிந்து பட்டாம் பூச்சிகளாய் சிறகு விரித்தனர். அவர்கள் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அந்த பிஞ்சுகளில் அநேகம் பேர் காரை மண்ணில் கால் பத்திருக்க மாட்டார்கள் ஆயினும் அந்த மண்ணின் வாசனையை நுகர்ந்தவர்களாய் காரைத் தென்றல் நிகழ்வில் பங்கெடுத்து தாமும் அரங்கேறப் போகின்றோம் என்ற பெருமையுடன் அவர்கள் உலா வந்தனர்.
இது ஒருபுறம் இருக்க வந்தோரை வரவேற்க வாசலிலேயே சுடச் சுட உணவு தயாராகி இருந்தது. எல்லோருமமே உணவுத் தட்டுக்களை கையில் ஏந்தியவாறு ஊர் புதினங்களை, ஊரவர்களின் சுக நலன்களை அறியும் ஆவலில் உறவுகளோடு சங்கமித்திருந்தனர். உள்ளே அரங்க நிகழ்வு தொடங்கு வதற்கான அறிவிப்பை ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்த அவர்களது இனிய குரலில் அறிவிப்பு ஒலிக்க எல்லோரும் நிகழ்வின் அரங்கை நிறைத்தனர். திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன், திருமதி வசந்தி உதயகுமார், திருமதி சியாமளா செல்வச்சந்திரன், திருமதி அருட்சோதி விமலநாதன், திருமதி மங்கையற்கரசி சிவராஜசேகரன், திருமதி வதனா லோகதாஸன், திருமதி கனகரூபா தயாபரன், திருமதி லோகேஸ்வரி பாலசுந்தரம் ஆகியோரது மங்கள விளக்கேற்றலுடனும், சின்னஞ் சிறுசுகளான செல்விகள் பைரவி லோகதாஸ், ஷராங்கி சற்குணராஜா, சுவிதா திருவருள்நாதன், கஜலக்ஷி உருத்திரர், ஷராங்கி லிங்கேஸ்வரன் ஆகியோரது கடவுள் வணக்கத்துடனும் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.
பொதுச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி காரை மண்ணின் வளர்ச்சிக்காய் உழைத்து அமரர்களான சுப்பிரமணியம் அம்பலவாணர்(அல்லின் ஏபிரகாம்),அருணாசல உபாத்தியார், கலாநிதி திரு ஆறுமுகம் தியாகராசா, கணக்காய்வாளர் திரு ஜெயசிங்கம் தில்லையம்பலவாணர், கலாநிதி சபாபதி சபாரத்தினம், கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன், கனகசுந்தரம் மோகனதாஸ் ஆகியோர்ரை நன்றியுடன் நினைவு கூர்ந்து பிரான்ஸ் நலன்புரிச் சங்க செயலாளர் திரு அருளானந்தம் செல்வச் சந்திரன், லண்டன் நலன்புரிச் சங்கத்தலைவர் திரு. பரமநாதர் தவராஜா, திரு உதயகுமார் (ஜேர்மனி) ஆகியோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
காரைத் தென்றலின் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்விலே முதன் முதலாக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக்கான கீதம் இயற்றப்பட்டு இசைத் தட்டாக வெளிவந்தும் இருந்தது. அந்தக் கீதத்தினை சிவஸ்ரீ.த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்களால் அரங்கில் ஒலிக்க விட்ட போது இசையால் வசமாக இதயமெது என எல்லோரும் தம்மை மறந்து எழுந்து நின்று அகமுருகி நின்றனர். இது மட்டும்மன்றி அன்றைய நிகழ்வுக்கு இன்னும் மகுடம் சூட்டுவதாய் பல நிகழ்வுகள் அரங்கேறின.
நிகழ்வு சிறப்புற அமைவதற்காய் காரை மண்ணின் வளர்ச்சியில் அதீத அக்கறையும் சமூகப் பணியில் தீவிரமும் கொண்ட காரை மண் தந்தவர்களான சிவஸ்ரீ.த. சரஹணபவானந்தகுருக்கள், திரு. ச. பற்குணராசா (யோகனந்தஅடிகள்) ஆகியோரது ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அவர்களது ஆசிச் செய்தியில் காரை மண்ணின் உறவுகள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்ற கருத்துப் பொதிந்திருந்தது. அடுத்து கண்ணுக்கு விருந்தாகியது வரவேற்பு நடனம். நிறத்தால், பல்வேறு பட்ட மொழியால், இனத்தால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகத்துக்கள் வாழ்ந்து கொண்டு, எங்கள் பாரம்பரியத்தையும் கலை கலாச்சாரங்களையும் மறந்து விடாமல் வாழத் துடிக்கும் அடுத்த தலைமுறையின் ‘தமிழன்’ என்ற தனித்துவம் எங்கள் குழந்தைகளின் நிகழ்வுகளின் மூலம் வெளிப்பட்டன.
திருக்குறளை மனனம் செய்து அரங்கில் சிறப்புற வெளிப்படுத்தியும் காரை மண்ணின் சிறார்கள் சுவாமி விபுலானந்தர், சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, எனது ஊர், தமிழர் தம் பண்பாடு என அழகுற மழலை சொட்டும் தமிழ் மொழியால் பேசயும், காவடி, நடனம், கோலட்டம், வினோதஉடை, என வேறுஉருவங்களில் தம் கலைத்திறன்களை மகிழ்வுடன் அரங்கேற்றினர். செல்வன் நவின் நகுலேஸ்வரன் எனது ஊர் என்ற தலைப்பிலும், செல்வன் ஆர்வலன் சரவணப்பெருமாள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பிலும் பேசியது எல்லோரதும் கவனத்தை ஈர்ந்தது.
நன்றி மறக்காத தமிழர் தம் பாரம்பரியத்தை எடுத்தியம்புவதாய் சரஸ்வதி வித்தியாலய அதிபர்(சுவிஸ்) சமூகசேவகர் குடும்ப நல ஆலோசகருமான திருமதி. தாரணி சிவசண்முகநாதசர்மாவுக்கு காரைத் தென்றல் நிகழ்வுக்காய் 2011 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டின் கல்வி, 2012 ஆம் ஆண்டு நூலகமும் நாமும்,2013 ஆம் ஆண்டு பிரத்தியேக கல்வி அவசியமா? அவசியமில்லையா என்ற தலைப்புகளிலும் கலந்துரையாடல்களையும் மனமாற்றம் என்ற நாடகத்தையும் காரை மண்ணின் சிறார்களுக்கு பயிற்சியளித்து ஊக்குவித்தமைக்காக ‘கலையரசி’ பட்டம் வழங்கி, மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டமை பெருமைக்குரிய நிகழ்வாகப் பதிவாகியது. இதன் மூலம் சுவிஸ் மண்ணில் இருந்து கொண்டு தமிழ் சமூகத்தை ஆற்றுகைப் படுத்தும் அவரது சமூகப் பணிகளுக்கு காரை அபிவிருத்தி சபையால் பெரும் கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.
கலை நிகழ்வுகளுக்கு இன்னும் மெருகூட்டுவதாய், சிகரம் வைத்தால் போல் செவிக்கும், கண்ணுக்கும் விருந்துட்டியது பிரான்ஸ் இருந்து காரைக் கலாமேதை கனகசுந்தரம் சிவராஜா தலைமையில் வருகைதந்த இளம் தளிர்களான செல்வி பிருந்தா நடராஜா, செல்வி பானுஜா நடராஜா, செல்வன் செல்வச்சந்திரன் நகுலன், செல்வி சிவராஜா மதுரா, செல்வன் சிவராஜா மதுஜன், செல்வி மயில்வாகனம் அபிராமி செல்வன் அதிகேஷன் மயில்வாகனம், செல்வன் மதுஜன் சிவயோகேஸ்வரன், செல்வன் பிரவின் தேவமனோகரன், செல்வன் பிரகாஷ் பகிரதன் ஆகியோர் வழங்கிய வாத்திய பிருந்தா.
காரை மண் தந்த சிட்டுக்களின் இன்னிசை வாத்திய விருந்து உண்மையிலேயே அன்றைய நிகழ்வுக்கு அது பெரும் விருந்தாகவே அமைந்தது. அட எங்கள் குழந்தைகளுக்கா இவ்வளவு திறமைகள் ஒருகணம் சபையில் இருந்தோh ;மெய்சிலிர்த்துப் போனார்கள். மேளம், மிருதங்கம், வயலின், ஒர்கன், உருத்திரவீணை, கிற்றார் என இசை வாத்தியங்கள் ஒலித்தபோது சபையில் இருந்து அதிர்ந்தது கைதட்டல்கள் போதும் அந்த நிகழ்வு எல்லோர் மனதிலும் உப்படி இடம் பிடித்து விட்டது என்பதைச் சொல்வதற்கு இக் கலைஞர்களை கௌரவிக்க S.K.T நிறுவனத்தின் ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.
இராகம், தாளம், பாவம், மூன்றின் சேர்கையாய் உருவான பரதக் கலையின் மூலம் தனது நடன ஆற்றகையை மிகச்சிறப்பாக தங்களது திறன்களால் வெளிப்படுத்தியிருந்தாhகள்; இலண்டனில் இருந்து வருகை தந்த காரை மண்ணின் புதல்வி செல்வி மதுரா அருள்பிரகாசம.; அது மட்டுமா சுவிஸ் நாட்டில் வதியும் மண்ணின் புதல்விகள் செல்வி பைரவி லோகதாஸ்ன், செல்வி சாம்பவி விவேகானந்தா, செல்வி கஜலக்ஷி சிவராஜசேகரன், செல்வி ஜெலக்சிகா சந்திரலிங்கம் ஆகியோரது பரதம் எல்லோரையும் கவர்ந்தது.
இப்படியாக கண்ணுக்கும் செவிக்கும் நல்ல விருந்தாக நிகழ்வுகள் அரங்கேற்றிக் கொண்டிருக்க இடையே வயிற்றுக்கு விருந்தாக தேநீர் விருந்தும் வந்து போனது.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பத்தாவது ஆண்டு சிறப்பு அம்சமாய் நூல் ஆசிரியர் செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் இலக்கண மரபுகளும் மொழி வரலாறும், காரை நிலா-2014 பத்தாவது அண்டு சிறப்பு மலர் வெயிட்டு வைபவம் ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்துர் தலைமையில் அரம்பமானது. முன்னரையை திரு. ச. பற்குணராசா (யோகனந்தஅடிகள்) அவர்களும் வாழ்த்துரை சிவஸ்ரீ.த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்களும், மதிப்பீட்டு உரைகளை சிவஸ்ரீ இராமகிருஷ்ணசர்மா திருமதி தாரணி சிவசண்முகநாதசர்மா திருமதி அம்பிகா இராஜலிங்கம் திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் ஆகியோர் வழங்கி இருந்தனர். சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் நூலை வெளியீட்டு வைக்க நூலின் முதல் பிரதிகளை S.K.T நாதன் கடை உரிமையாளர் திரு, திருமதி சுப்பிரமணியம் கதிர்காமநாதன் பெற்றக் கொள்ள திரு. திருமதி பூபாலபிள்ளை விவேகானந்தா ஆகியோரால் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். இரண்டாவது பிரதிகளை Siva Travel  திரு,திருமதி கனகசுந்தரம் சிவநேயன் உரிமையாளர் பெற்றக் கொள்ள திரு,திருமதி நல்லதம்பி சரவணப்பெருமாள் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். மூன்றாம் பிரதிகளை பிரான்ஸ் இருந்து வருகை தந்த திரு,திருமதி அருளானந்தம் செல்வச்சந்திரன் பெற்றுக்கொள்ள திரு,திருமதி சுப்பிரமணியம் விமலநாதன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் சபையில் இருந்தோர் சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள் அவர்களிடம் இறை பிரசாதம் பெற்று நூலின் பிரதிகளையும், மன்றத்தின் கீத இசை இறுவெட்டையும் பெற்றுச் சென்றனர்.
தாய் நாட்டில் இருந்தபடி புலம்பெயர் நாட்டில் வாழும் எங்கள் கனவுகளுக்கும் ஆசைகளுக்கம் செவிசாய்த்து காரை நிலா –2014 சிறப்பு மலரின் நூலாசிரியராக இருந்த இன்று எம் கைகளில் தவழும் மலரினைப் படைத்துத் தந்த ஆசிரியர் செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் (Skype) மூலம் திரையில் வந்த போது எல்லோரும் ஒரு கணம் அமைதியாகினர் அவர் தனது உரையில் “தமிழ் மெல்ல இனிச்சாகும்” என்ற வாக்கை புலம் பெயர் நாடுகளில் வாழும் எம் உறவுகள் பொய்த்துப் போகச் செய்துள்ளார்கள் செம்மொழியாகிய எம் தமிழ் மொழி அழிந்து விடுமோ என்ற அச்சம் இனித் தேவையில்லை எனப் பெருமையுடன் பேசி சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் இந்தக் காரை நிலா புத்தகமும் அதற்குள் பொதிந்திருக்கும் ஆக்கங்கள் காரைத் தென்றல் நிகழ்வு என இளைய தலைமுறைக்குள் பொதிந்திருக்கும் தமிழறிவு, கலையுணர்வு, இன உணர்வு என்பன நல்லதொரு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. என்றார். இதன் போது மன்றக்கீதத்தை தன் இன் குரலில் இசைத்துத் தந்த திருமதி தேவமனோகரி உருத்திரசிங்கம், காரை நிலா மலரின் அட்டைப்படத்தை வடிவமைத்த தந்த திருமதி மலர் குழந்தைவேலு மலர் குழு உறுப்பினராக இருந்து மலர்ஆக்கத்துக்காய் பெரும்பாடுபட்ட திரு அருணசலம் வரதராஜன் ஆகியோரும் (Skype) மூலம் திரையில் வந்து காரைத் தென்றல் நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.
தலைமையுரை உரை, பிரதமவிருந்தினர் உரை, சிறப்புவிருந்தினர் உரைகள் அரஙகில் உள்ளோரை சிந்திக்கவைத்தது. அதே நேரம் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த திரு.துரைராஜா ஈஸ்வரன், திரு.சக்திவேல் சத்தியரூபன் நடித்த விருந்து நாடகம் உண்மையிலேயே அருமைதான். இன்னுமொரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்டியே ஆக வேண்டும் துடிப்பு மிக்க எமது இளம் தலைமுறையினர் ஒன்றுபட்டு, தமது சுய முயற்சி இன்றைய சமூகப் பிரச்சனை ஒன்றை மிக எளிதாக புரியும்படி நகைச் சுவையுடன் நாடகமாக அவர்களின் உடனடித் தயாரிப்பாக வழங்கி தம் திறனை வெளிப்படுத்தியமையை பாராட்டமல் இருக்க முடியாது. அவர்களின் இந்தத் துணிச்சலும் சமூகம் சார்ந்த அக்கறையும் நாளைய தலைவர்கள் உருவாகி விட்டார்கள் என்பதைக் கட்டியம் கூறி நிற்கின்றது. திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்கள் நன்றியரை கூறினார். இலங்கை சென்ற வருவதற்கான விமான சீட்டு அதிஷ்டம் பார்க்கப்பட்டது. அதில்
அதிஷ்டம் பெற்ற செல்வி சாம்பவி சிவபாலன் அவர்கள் சீட்டு பெறுமதியை சபைக்கே அன்பளிப்பு செய்தமையை பாராட்டாமல் இருக்க முடியாது.
இறுதி நிகழ்வாக போட்டிகளில் பங்கெடுத்த மாணவர்களுக்கு நினைவு பரிசில்களையும், கலை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கியும் சிறார்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மொத்தத்தில் காரைத் தென்றல் –2014 மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தாலும் முழுதாக 12 மணிநேரத்தை தனதாகக்கி இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று காரைத்தென்றல் –2014 பத்தாவது ஆண்டு விழாவில் கலந்து சிறப்பித்த உலக சைவபேரவைத் தலைவர் திரு.ச.பற்குணராசா (யோகனந்தஅடிகள்), ஊடகவியலாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. இளையதம்பி தயானந்தா பிரான்ஸ் நலன்புரிச் சங்க செயலாளர், நிர்வாக உறுப்பினர்களுக்கும், பிரித்தானிய நலன்புரிச்சங்க தலைவர், நிர்வாக உறுப்பினர்களுக்கும் ஜேர்மன், ஆஸ்திரேலியா என வேறு நாடுகளில் வருகைதந்த அனைத்து உள்ளங்களுக்கும், விழாவுக்கு சகல வழிகளிலும் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகலந்த பாரட்டுதல்களும், வாழ்த்துக்களும்.
                                                                                      நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
சித்திரை – 2014