Category: கனடா காரை

காரை வசந்தம் 2013 Video

மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆதிரை அபிசேகமும் ஆருத்திரா தரிசனமும்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று டிச.18.2013 புதன்கிழமை செல்வமலைப் பிள்ளையார் கோவிலில்(Richmond Hill Hindu Temple)  மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5:30 இற்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது. காலை 7:30 அளவில் ஸ்ரீமதி.நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமியின் மாணவி செல்வி.காயத்திரி பரமேஸ்வரனின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது. பெரும் திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.
இன்றைய திருவிழாக் காட்சிகளை இங்கே காணலாம்

 

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 10ம்நாள் ஆருத்ரா தரிசனம் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(18.12.2013)

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவாதிரை உற்சவ ஆருத்திரா  அபிசேகம் ஈழத்து,இந்திய தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கானமழை பொழிய இன்று அதிகாலை 2.00மணி முதல் மிகவும் பத்திபூர்வமாக இடம்பெற்றது. ஆதனைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு ஆரத்திராதரிசனமும் இடம்பெற்றது.இந்த உற்சவத்திலும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து காலைமுதல் தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு அடியவர்கள் பலர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகைதந்து தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.காரைநகரின் பல்வேறு ஆலயங்களிலிருந்தும் பத்திற்குமேற்பட்ட காவடிகள் ஆலயத்தை வந்தடைந்தன.தொடர்ந்து மாலை ஊடலும் தீர்த்த உற்சவமும் இடம்பெற்றன.

செல்வமலைப் பிள்ளையார் கோயில் (Richmond Hill Hindu Temple) திருவாதிரைத் திருவிழா

OLYMPUS DIGITAL CAMERA

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 18ஆம் திகதி(18.12.2013) புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
காலை 6.30 மணி – இன்னிசைக் கச்சேரி

பாட்டு: ஸ்ரீமதி நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமி அவர்களின் மாணவி செல்வி காயத்திரி பரமேஸ்வரன்;
 
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் அமல்நாத் பரமேஸ்வரன்
 
வயலின்: சங்கீத வித்துவான் திருமதி. தனதேவி மித்திரதேவாவின் மாணவன் செல்வன் மிதுரன் மனோகரன்

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 5.00 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
 
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது
Canada-Karai Cultural Association
T.D.Bank A/C No. 711 Branch No. 1029


நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

 

 

 

 

மனமார்ந்த நன்றிகள்

காரை வசந்தம்-2013 விழாவிற்கு பிரதான அனுசரணை வழங்கிய குழந்தைகள் மருத்துவ நிபுணர் Dr.வி.விஜயரத்தினம், பல் மருத்துவ நிபுணர் Dr.ஆதிகணபதி சோமசுந்தரம், Doubleseal Insulting Glass Inc. நிறுவன அதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன், Woodside Cinema  நிறுவனத்திற்கும்

கலைநிகழ்வுகளைத் தயாரித்து வழங்கிய அனைத்துக் கலைஞர் பெருமக்களுக்கும்

விழாவிற்குரிய அநுமதிச் சீட்டுகளைப் பெற்று விழாவிற்க வருககை தந்த ரசிகர் பெருமக்களுக்கும்

தமிழ்மொழித் திறன், பண்ணிசைப்போட்டிகள், கலைஞர்கள், ஆகியோருக்கான பரிசுகளுக்கு அனுசரணை வழங்கிய CTBC அதிபர் திரு.இளையபாரதி

பண்ணிசைப் போட்டியில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வி.தாரணி தேவகுமாருக்குரிய 'மனேரஞ்சனா கனகசபாபதி ஞாபாகார்த்த பரிசாக' தங்கப்பதக்கத்தை வழங்கிய திரு.கனகசபாபதி குடும்பத்தினர்

மண்டபத்தினுள் நேரத்திற்கு நுழைவோருக்குரிய நல்வாய்ப்புப் பரிசாக “Apple I Pad”    ஒன்றினை வழங்கி அனுசரணை வழங்கிய Archanas & Co  நிறுவன அதிபர் திரு.P.S.சுதாகரன்

மிருதங்கஷேத்திரா அதிபர் மிருதங்க ஞானவாரிதி திரு.வாசுதேவன் இராஜலிங்கம் அவர்கள் தயாரித்து வழங்கிய 'வாத்திய நடன இசை' நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா

கலைவேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய 'அவனுக்கு என்று ஒரு மனம்' நாடகத்திற்கு அனுசரணை வழங்கிய திரு.துரைரத்தினம் சோமசுந்தரம்

நல்வாய்புச் சீட்டிழுப்பு முதலாம் பரிசுக்குரிய Cruise பயணத்திற்கான அனுமதிச் சீட்டு வழங்கி உதவிய திரு.பொன்னம்பலம் தவக்குமார், இரண்டாம் பரிசுக்குரிய $500 பெறுமதியான பல் மருத்துவ சேவை வழங்கி உதவிய Dr.ஆதிகணபதி சோமசுந்தரம், மூன்றாம் பரிசுக்குரிய Grace Gift Basket  வழங்கி உதவிய Grace விற்பனை முகவர் திரு.S.இராமச்சந்திரன்

சிற்றுண்டிச்சாலைக்கு Pizza வழங்கி உதவிய Double Double Pizza  நிறுவனத்தைச் சேர்ந்த திரு.கணபதிப்பிள்ளை ஜெயரத்தினம்

சிற்றுண்டிச்சாலைக்கு குளிர்பானம் வழங்கி உதவிய திரு.திரவியநாதன் பிரமேந்திரதீசன்

காரை வசந்தம் சிறப்பு மலருக்கு விளம்பரங்களைத் தந்து உதவிய விளம்பரதாரர்களுக்கும், வாழ்த்துச் செய்திகளை வழங்கி உதவிய அரசியல்வாதிகளுக்கும் அறிஞர்களுக்கும் கட்டுரைகளை வழங்கி உதவிய அறிஞர்களுக்கும் காரைநகர் தொடர்பாளர் திரு.நடராஜா பாரதி அவர்களுக்கும்,
மலருக்குரிய விளம்பரங்களை வடிவமைத்து உதவிய திரு. திருமாறன் கணேசன், திருமதி.தில்லைராணி யோகராஜா ஆகியோருக்கும்

ஒலியமைப்பு வழங்கிய திரு.குசேல், காணொளிப்பதிவு செய்த Sooriyan Video, நிழற்படங்கள் எடுத்து உதவிய Bharath Studio  உரிமையாளர் திரு.சோமாஸ்கந்தன்

உதவிபுரிந்த அனைத்துத் தொண்டர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

வெற்றி விழாவாகிய நடந்தேறிய காரை வசந்தம்-2013

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் பதின்மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட காரை வசந்தம்-2013 பல நூற்றுக் கணக்கான ரசிகர்களுடன் வெற்றி விழாவாக நேற்று சனிக்கிழமை, டிச.7.2013 அன்று Sir John Macdonald  கல்லூரிக் கலை அரங்கில் நடந்தேறியது.
விழாவிற்கு பிரதம விருந்தினராக கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவரும், அன்பு நெறி ஆசிரியரும், கனடா-காரை கலாச்சார மன்றத்தை ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கமாக நிறுவியர்களுள் ஒருவருமாகிய சிவநெறிச் செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களும் பாரியாரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக காரைநகர் தந்த கனடாவில் பொன்விழாக் கண்ட பேராசிரியர் தி.சிவகுமாரன் Ph.D.. FCACB,DABCC  அவர்களும் கௌரவ விருந்தினராக பல் மருத்துவ நிபுணர் Dr.ஜெயபாலன் நமசிவாயம் அவர்களும் பாரியாரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர் Dr.வி.விஜயரத்தினம், கனடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிபர் திரு.இளையபாரதி, Double Seal Insulations Inc. அதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன், வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா ஆகியோரும் மன்றத்தின் முன்னாள் தலைவர்களாகிய திரு.சண்முகம் கந்தசாமி, திரு.வேலுப்பிள்ளை இராஜேந்திரம், திரு.கோபால் மயில்வாகனம், திரு.ரவி ரவீந்தரன், முன்னாள் போசகர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை, தற்போதய போசகர் திரு.கந்தப்பு அம்பலவாணர், முன்னாள் உப-தலைவர் திரு.தர்மலிங்கம் பரமசிவம், முன்னாள் செயலாளர்களாகிய திரு.கனக.சிவகுமாரன், திரு.சேகர் கந்தையா, முன்னாள் பொருளாளர் திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்க அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 
இயல் இசை, நடனம் என முத்தமிழ் கலைகளையும் கொண்டதாக நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. மிருதங்க ஞானவாரிதி வாசுதேவன் இராஜலிங்கம் தயாரித்து ஆடலரசி திருமதி.ரஜனி சத்திரூபன் நடனம் அமைத்து வழங்கிய 'வாத்திய நடன இசை', கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் தயாரித்து வழங்கிய 'அவனுக் என்று ஒரு மனம்' நாடகம், ஸ்ரீஅபிராமி நடனக் கல்லூரி அதிபர் ஆடல் அரசி திருமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய 'ஆடும் சதங்கைகள்'. பால விமல நர்த்தனாலய அதிபர் பரதகலாவித்தகர் திருமதி. சித்திரா தர்மலிங்கத்தின் மாணவர்கள் வழங்கிய 'சரவணபவ', பரதாலயா நடனக் கல்லூரி அதிபர் கலைமணி செல்வி நிவேதா இராமலிங்கம் தனது மாணவிகளுடன் இணைந்து வழங்கிய 'கிருஷ்ண அர்ப்பணம்', 'நட்சத்திரா இசைக் குழுவின் 'மெல்லிசை கானங்கள்' திருமதி.கனகமலர் நற்குணம் வழங்கிய 'சாதலிங்கம்' நகைச் சுவை நாடகம், திரு. திரவியநாதன் பிரமேந்திரதீசன் வழங்கிய கவிதை என்பன நிகழ்ச்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருந்தன.

விழாவில் 'காரை வசந்தம-2013;' சிறப்பு மலரும் வெளியிடப்பட்டிருந்தது. இம்மலரின் அழகிய வர்ண அட்டைப்படம் கனடாவில் காரை வசந்தத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. மலரில் வாழ்த்துச் செய்திகளுடன் காரைநகர் செய்திகளும் காரைநகர் சார்ந்த கட்டுரைகளும் மன்றத்தின் செய்திகளும் விளம்பரங்களும் இடம்பெற்றிருந்தன.

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்பட்ட பண்ணிசை, தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும், பங்குபற்றியவர்களுக்கான ஆறுதல் பரிசுகளும், கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளுக்கான அனுசரணையை CTBC அதிபர் திரு.இளையபாரதி வழங்கியிருந்தார்.

பண்ணிசைப் போட்டியில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி.தாரணி தேவகுமாருக்கு ' அமரர்.மனோரஞ்சனா கனகசபாபதி ஞாபாகார்த்த பரிசாக' தங்கப்பதக்கம் கனகசபாபதி குடும்பத்தினரின் அனுசரணையில் வழங்கப்பட்டது.

தரமான கலைப் படைப்புகளைத் தாங்கியதாக நிகழ்ச்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.


 

நல்வாய்ப்புச் சீட்டு குலுக்கலில் நல்வாய்பினை வென்ற இலக்கங்கள்

நல்வாய்ப்புச் சீட்டு குலுக்கலில் நல்வாய்பினை வென்ற இலக்கங்கள்
1 ஆம் பரிசு  சீட்டு இல.1017
2 ஆம் பரிசு சீட்டு இல.0555
3ஆம் பரிசு சீட்டு இல.0735
மேற்குறிப்பிட்ட சீட்டு இலக்கங்களை வைத்திருப்போர் எம்முடன் தொடர்பு கொண்டு உங்களுக்குரிய பரிசுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு: (416) 642-4912

நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

‘காரை வசந்தம்’ விழா மண்டபத்தினுள் மாலை 5:30 இற்கு முன்னர் நுழையும் ஒருவருக்கு ‘I Pad’ பரிசு

'காரை வசந்தம்' விழா மண்டபத்தினுள் மாலை 5:30 இற்கு முன்னர் நுழையும் ஒருவருக்கு ‘I Pad’    பரிசு
'காரை வசந்தம் – 2013' பல்சுவைக் கலை விழா பல சுவையான கலைப் படைப்புகளைத் தாங்கியதாக  நாளை சனிக்கிழமைஇ டிசம்பர் 7இ 2013 அன்று மாலை 5:00 மணிக்கு 2300 Pharmacy Ave  இல் அமைந்துள்ள ளுசை துழாn யு.ஆயஉனழயெடன Sir John A.Macdonald Collegiate Institute  இல் நடைபெறகின்றது.
மேற்படி விழா மண்டபத்தினுள் மாலை 5:30 இற்கு முன்னர் நுழைவோரின் அனுமதிச் சீட்டுகள் மட்டுமே நல்வாய்ப்புச் சீட்டிழுப்பிற்காகப் பயன்படுத்தப்படும். சீட்டிழுப்பில் நல்வாய்ப்பினைப் பெறும் ஒருவருக்கு ஒரு '‘I Pad’    பரிசாக வழங்கப்படும்.
இப்பரிசிற்கான அநுசரணை: திரு. P.S. சுதாகரன், அர்ச்சனாஸ் அன் கோ. 

 

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2013

                                                                               கனடா-காரை கலாச்சார மன்றம்
                                                                                     பெருமையுடன் வழங்கும்

                                                                                          காரை வசந்தம்-2013

Sir John A.Macdonald C.I  கலையரங்கில்  சனி,டிச.07, 2013 மாலை 5:00மணி

                                                  பிரதம விருந்தினர்
                             சிவநெறிச் செல்வர் திரு. தில்லையம்பலம் விசுவலிங்கம் B.Sc.
                                               தலைவர், கனடா சைவசித்தாந்த மன்றம்
                                                        நிர்வாக ஆசிரியர், 'அன்பு நெறி'

                                                  சிறப்பு விருந்தினர்
                              பேராசிரியர் தில்லைநாதன் சிவகுமாரன் Ph.D.. FCACB,DABCC
                           மக்மாஸ்டர் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர்(ஓய்வுநிலை)

                                                  கௌரவ விருந்தினர்
                               பல் மருத்துவ நிபுணர் Dr.ஜெயபாலன் நமசிவாயம்

மிருதங்க ஷேஸ்திராலயா அதிபர் மிருதங்க ஞானவாருதி திரு வாசுதேவன் இராஜலிஙகம் தயாரித்து வழங்கும்                                                                       வாத்திய நடன இசை

                          கலைவேந்தன் கணபதி இரவீந்திரன் நெறியாள்கையில்
                                                                நாடகம்
                                                அவனுக்கு என்று ஒரு மனம்

                   ரவி அமிர்தன் ஆக்கத்தில் நற்குணம் கனகமலர் நெறியாள்கையில்
                                                     நகைச் சுவை நாடகம்
                                                              சாதலிங்கம்

                                                  நட்சத்திரா இசைக் குழு வழங்கும்
                                                             இன்னிசை கானங்கள்

                    ரொன்ரோவின் முன்னணி பரதநாட்டிய ஆசிரியர்களின் மாணவர்கள் வழங்கும்
                                                                          நடனங்கள்

                                                   காரை வசந்தம் சிறப்பு மலர் வெளியீடு
                                                                         சிறுவர் பேச்சு
                                                                             பரிசளிப்பு

 

                                                   அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

 

 

காரை வசந்தம் – 2013 விழாவிற்கு தொண்டர்கள் தேவை

காரை வசந்தம் – 2013 விழாவிற்கு தொண்டர்கள் தேவை
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் எதிர் வரும் டிச.7,2013 அன்று Sir John Macdonald Collegiate Institute இல் நடத்தப்படவிருக்கும் 'காரை வசந்தம்-2013' விழாவில் தொண்டராகப் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ள தரம் 11, தரம் 12 இல் பயிலும் மாணவர்கள் வேண்டப்படுகின்றனர்.
ஆர்வமுள்ள தரம் 11, தரம் 12 இல் பயிலும் மாணவர்கள் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை எமக்கு அறியத்தருமாறு வேண்டுகின்றோம்.
எம்முடன் தொடர்பு கொள்ளும் முதல் 15 மாணவர்களுக்கு மட்டுமே மேற்படி விழாவில் தொண்டராகப் பணிபுரிவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல் முகவரி:  karainagar@gmail.com
தொலைபேசி இலக்கம்: (416)642-4912


 

காரை வசந்தம் – 2013 அநுசரணையாளர்கள்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி, Sir John A. Macdonald Collegiate Institute இல் மாலை 5.00 மணிக்கு நடத்தப்படவிருக்கும் 'காரை வசந்தம் – 2013' விழாவிற்கு

  • ஒலியமைப்பு
  • ஒளியமைப்பு சாதனங்கள்
  • காணொளிப் பதிவு சேவை
  • புகைப் படப்பிடிப்பு சேவை
  • மேடை அலங்காரம்
  • வெற்றிக் கிண்ணங்கள் 
  • நினைவுப் பரிசுகள் (Trophies) 
  • சிற்றுண்டிகள்,கோப்பி,பானங்கள்

என்பனவற்றிற்கு அநுசரணை வழங்கவோ அல்லது பொருட்களை அன்பளிப்பு செய்யவோ விரும்பும் வர்த்தகப் பெருமக்கள், நலன்விரும்பிகள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

அநுசரணையாளர்கள் மற்றும் பொருட்களை அன்பளிப்புச் செய்வோரின் பெயர் விபரங்கள் 'காரை வசந்தம்-2013' விழா அரங்கில் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு:
கனடா-காரை கலாச்சார மன்றம் (416)642-4912

  1. தமிழ் திறன் போட்டியின் பரிசுகள் : CTBC
  2. Ticket Printing : Archanas & Co
  3. Lotto Ticket Pritning : ஆதிகணபதி  சோமசுந்தரம் 
  4. நாடகம் :  துரைரத்தினம் சோமசுந்தரம்   
  5. நாகேந்திரம் நடராஜா (ராஜ்) (HOME LIFE)
  6. தீசன் திரவியநாதன் : குளிர்பானம்                                                                                            

காரை வசந்தம் அனுமதிச் சீட்டுகள் பற்றிய அன்பான வேண்டுகோள்

காரை வசந்தம் அனுமதிச் சீட்டுகள் பற்றிய அன்பான வேண்டுகோள்
எமது அன்பிற்குரிய கனடா வாழ் காரை உறவுகளே!
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் எதிர் வரும் டிச.7,2013 அன்று Sir John Macdonald Collegiate Institute இல் நடத்தப்படவிருக்கும் காரை வசந்தம் விழாவிற்கான அனுமதிச் சீட்டுகள் எமது மன்ற நிர்வாக சபை உறுப்பினர்களால் விற்பனை செய்யப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே.
ஒரு குடும்பத்திற்குரிய அனுமதிச் சீட்டினைக் கொள்வனவு செய்த குடும்பதினருடன் அவர்களின் தாய் தந்தையரும் இவ்விழாவிற்கு அனுமதிக்கப்படுவர்.  ஆனால் அவர்களின் சகோதரரோ அல்லது உறவினரோ அக்குடும்பத்தினருடன் சேர்ந்து அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை அறியத் தருகின்றோம்.
அத்துடன் ஒருவர் கொள்வனவு செய்த அனுமதிச் சீட்டினை இன்னொருவர் மாற்றிப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு அனுமதிச் சீட்டுக்கான கட்டணமும் உங்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினரின் அன்பளிப்பாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
நன்றி
நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

 

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இரண்டாவது கட்ட கண்சத்திரசிகிச்சைபத்துப் பேர் பயன் பெற்றனர்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இரண்டாவது கட்டமாக கற்றாக் நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிக வறுமையில் வாடும் தாங்கள் கண் பார்வைக்குறைவினால் அவதிப்படுவதாகவும் தமக்கான கண் சத்திரசிகிச்சைக்கு உதவுமாறு கோரி காரைநகர் அபிவிருத்திச் சபையிடம் சுமார் இருபதிற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் குகதாசன் அவர்களினால் பரிசோதிக்கப்பட்டு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய பத்துப்பேருக்கு கடந்த வாரம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைத்து கண்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இருபது பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக் கட்ட கண் பரிசோதணை இடம்பெறுவதையும் சத்திர சிகிச்சைமேற்கொள்ளப்படுவதனையும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களையும் படங்களில் காணலாம

SAM_1890

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவி

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 260 பிள்ளைகள் தாய். தந்தையர் அல்லது இருவரையும் இழந்தவர்களாகவும் தந்தையர்கள் தொழில் செய்யக்கூடிய ஆற்றல் அற்றவர்களாகவும் கணக்கிடப்பட்ள்ளனர்.

அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக கரைநகர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின விழாவில் தலா 500ரூபா வீதம் ஒரு இலட்சத்து முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியானஅப்பியாசப் புத்தகங்களும் பால்மாப் பைக்கற்றும் 260 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இச்சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,சீருடைகள்,பாதணிகள்,பிரத்தியேக வகுப்புகளுக்கான கட்டணங்கள்,போக்குவரத்திற்கான கட்டண செலவினங்கள் என்பவற்றை நிதிரீதியாக  அன்றிப் பொருள்ரீதியாக வழங்க சில அன்பர்கள் முன்வந்துள்ளனர் எனவும் இந்நடவடிக்கை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் எனவும் சமுக சேவையாளரும் ஒய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமான எஸ்.கே.சதாசிவம் தெரிவித்துள்ளார்.மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் மங்கள விளக்கேற்றுகதனையும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் பால்மா அடங்கிய பொதிகையினை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதனையும் படங்களில் காணலாம்.

DSC08655DSC08655_1DSC08654

களபூமிக் கலையகத்தில் விஜயதசமி விழா

களபூமி கலையகத்தினால் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் களபூமி கலையகத்தில் பயிலும் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறான கலைநிகழ்வுகள் ஒழுங்கான கால அவகாசத்தில் அடிக்கடி நடத்படும் அதேவேளையில் கலையகமும் மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என காரை அபிவிருத்திசபைத் தலைவர் திரு.சிவா.தி.மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

மன்ற யாப்பு புனரமைப்பு

கனடா காரை கலாச்சாரமன்ற யாப்பு மீளமைக்கப்பட்டு (கடைசியாக 2003 ம் ஆண்டு)  பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மன்ற யாப்பினை மீண்டும் பரிசீலணை செய்து தற்கால சூழலுக்கு ஏற்பவும், கடந்த கால அநுபங்களுக்கு ஏற்பவும் புனரமைப்பு செய்ய நிர்வாக சபை முடிவெடுத்துள்ளது. இதன் படி இந்த பணியினை நிறைவேற்ற பின்வரும் அங்கத்தவர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திரு இராசேந்திரம் இக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு, யாப்பின் புனரமைப்பு செய்யப்பட்ட பிரதியினை சபையின் நிருவாகத்திற்கும் அவர்கள்  மூலமாக பொது சபைக்கும் சமர்ப்பிப்பார்

1.   திரு. பரமானந்தம்.                   416-400-3198

2.   திரு. இராசேந்திரம்.                  416-887-5351

3.   திரு. வேலாயுதம்பிள்ளை.      416-743-4914

4.   திரு. அம்பலவாணர்.                647-710-8224

5.   திரு. அம்பிகைபாகன்.              647-766-7133

யாப்பு புனரமைப்புக்கான உங்கள் சிபார்சுகளை எழுத்து மூலமாக 12/15/2013 ம் திகதிக்கு முன்பாக Karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் வசதி இல்லாவிடின் மன்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். தொடர்புகள் ஆங்கிலம் / தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்று கொள்ளப்படும்.

புனரமைக்கப்பட்ட யாப்பின் பிரதி நிர்வாக சபையினால் ஏற்றுக்கொள்ள பட்ட பின்பு 01/15/2014 திகதி பொது சபையின் அவதானத்திற்காகவும், அபிப்பிராயத்திற்காவும் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும். இறுதி அபிப்பிராயம் 30/01/2014 திகதிக்கு முன் சமர்பிக்கப்பட வேண்டும்.

யாப்பு குழுவினரால் தயார் செய்யப்பட்ட புதிய யாப்பு 02/15/2014 ல் மீண்டும் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டு பின் விரைவில் பொது சபையின் அங்கீகாரம் பெறப்படும்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தமிழ்த் திறன் போட்டிகள் 2013

இடம் : Scarborough Civic Center

காலம் : Sunday, oct 20 th, 2013

நேரம் : காலை 8 மணி முதல் 1 மணி வரை 

 

இப் போட்டிகளுக்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான திருத்தப்பட்ட ஆவணங்களைக் கீழ் வரும் link இல் அழுத்தித் தரவிறக்கம் செய்யவும்

  

தமிழ் திறன் போட்டி விண்ணப்பம் 2013

  எழுத்து 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

வாசிப்பு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பேச்சு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பண்ணிசை

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

தொடர்புகளுக்கு: 

திரு. தம்பையா ​ அம்பிகைபாகன் (BA Dip in Ed) – (647) 766 7133

முன்னாள் ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி

Karainagar Summer Get Together 2013 – Video Coverage

This is the video coverage of the Canada Karai Cultural Association's 2013 Summer Get Together. 

Enjoy!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2013 வரவு செலவு அறிக்கை

கோடை கால 2013 ஒன்று கூடலுக்கு நன்கொடை,உதவி  வழங்கியோர் பெயர்கள் தவறவிடப்பட்டால் தயவு செய்து கனடா காரை கலாச்சார மன்றத்துடன் தொடர்புகொள்ளுமாறு  கேட்டுக்   கொள்கிறோம் 

Click to access Karai_onrukudal_2013_-Income_Expense.pdf

காரைக் கொண்டாட்டம் 2013

Summer Annual Get Together – 2013 ( புதிது )

கனடா  காரை  கலாச்சார  மன்றத்தின்  ஒன்றுகூடல்  நிகழ்ச்சி  நிரல்.

 

 

08:00 – 09:00                            காலை  உணவு  

                                                   சதுரங்க போட்டி(Chess) ஆரம்பம்  புதிது 

09:00 – 11:00                            விளையாட்டுப் போட்டிகள் 
11:30 – 12:30                            சிறுவர்  மதிய  உணவு 
12:00 – 13:00                            ஆரம்பச்  சதுரங்கப்  போட்டிகளில்  
                                                   பங்கு பற்றியவர்களின் சதுரங்க போட்டி. புதிது
12:30 – 01:30                            பெரியவர்கள்  மதிய  உணவு 
12:00 – 01:30                            சிறுவர்  தகமை  காண்  நிகழ்வுகள்  (Talent Show)
13:30 – 15:30                            இளைஞர்  விளையாட்டு  போட்டிகள்
13:30 – 14:30                            கூழ்  குடிப்போம் 
14:30 – 15:30                            முதியோர் நிகழ்ச்சி 
15:30 – 16:30                            கொத்து  ரொட்டி 
16:30 – 17:30                            பரிசு வழங்குதல் 
 
முக்கிய  அறிவுப்புகள்:
குளிர்பானங்கள், தண்ணீர், Corn, Watermelon, மற்றும் உணவு வகைகளுக்கான அன்பளிப்பை  வழங்கவுள்ளோர் மன்ற நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்பு இலக்கங்கள் 
Paramanantharajah – (416) 400-3198
Senthilnathan – (647) 289-2256 
Perinparajah – (416) 258-5365
  •  உணவு  யாவும்  நேர  அட்டவணையின்  படி  வழங்கப்படும் 
  •  நேரத்துக்கு  சமுகமளிக்கும்  மக்களுக்கு  காலை உணவாக   பால் அப்பம்  வழங்கப்படும் 
  •  இந்நிகழ்வில்  நடைபெறும்  நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர்  தங்கள்  பதிவுகளை  08:00 – 09:00க்கு  முன்   பதிவு  செய்யும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • சதுரங்கப்  போட்டிகளில் கலந்துகொள்ள  விரும்புவர்கள்  CKCAயில் முன் கூட்டிப்  பதிவு செய்யப் பட வேண்டும். பதிவு செய்யப் படாதோர் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிது
  •  Talent  Show வில்  பங்குபற்றுவோர்  முன்கூட்டியே  விபரங்களை  பதிவு செய்தால்  உரிய  வசதிகள்  செய்து  கொடுக்கப்படும்.
  •   Volunteer  சேவை  செய்பவர்களுக்கு  அவர்களது  பாடசாலை Volunteer Sheets  பூர்த்தி  செய்து  கொடுக்கப்படும். இவர்கள்  தங்கள்  பெயர்,முகவரியை முன்கூட்டியே  பதிவு  செய்தால்  மன்றத்தின்  சான்றிதழ்    வழங்கப்படும்.
 
உங்கள் பதிவுகள்  மற்றும்  கருத்துகளை  karainagar@gmail.com 'ல்  தயவு செய்து  தரவும்.
 
 நன்றி.

பொதுச்சபைக் கூட்டம்

பொதுச்சபைக் கூட்டம்

காலம்: ஜீன் 23, 2013 காலை 9மணி – 12மணி(குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பமாகி குறிப்பிட்ட நேரத்திற்கு முடிவுறும்)
இடம்: Scarborough Civic Centre

கனடா காரை கலாச்சார மன்றத்தின் போஷகர் சபையினால் கூட்டப்படும் முக்கியமான பொதுச்சபைக் கூட்டம்.
இக்கூட்டம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் எதிர்கால நலன் கருதி பொதுச்சபையினரின் ஒத்துழைப்புடன் மிக முக்கியமான விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தப்படும். எனவே கனடா வாழ் காரை மக்கள் அனைவரையும் இக்கூட்டத்திற்கு வருகை தந்து தங்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
போஷகர்சபை,
கனடா காரை கலாச்சார மன்றம்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

பத்து மாதம் சுமந்து பத்தியம் இருந்து..
உள்ளிருந்து உதைத்த உதைகளை
வெளியில் சொல்லி வெக்கப்பட்டு..
மகிழ்ந்தவளே….மனம் குளிர்ந்தவளே…

கருவறையில் இருந்தபோதே
தலைகோதி விளையாடிய தாய் என்ற
தோழி நீ..

தோள் மீது தூங்கவைத்துத் தோழியாகிறாய்
தஞ்சமெனப் புகும் போது தாயாகிறாய்
கேளாமலேயே வரம் தந்து கடவுளாகிறாய்

மலம் அள்ளி மடி மீது கிடத்தி
மார்பிலே அணைத்த கரங்கள்
முடி கோதி  முகம் துடைத்து
குளிக்க வைத்த கரங்கள்

வாழ்க்கைப் பாதையில்..
படிக் கல்லாகி படிந்து
ஏற வைத்த ஏற்றி விட்ட
நான் ஏறி வந்த படிக் கட்டுகள்!

கனடா காரை கலாச்சார மன்றம்

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

திரு. கே.கே.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் (பாலாவோடை, களபூமி, காரைநகர்)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் பொருளாளரும்  நீண்டகால அங்கத்தவரும் தற்போது போசகராகவும் கடமையாற்றிவரும் திரு. சிவசுப்பிரமணியம் குகநேசபவான் அவர்களின்  தந்தையார் திரு.கே.கே. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம்  அவர்களின் மறைவையொட்டி   அன்னாரது பிரிவால் துயருறும் அவர்களின்   பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரது  புனித ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல  ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத  சுந்தரேசப் பெருமானை  நினைந்து பிரார்த்திக்கின்றோம்.  ஓம் சாந்தி. ஓம் சாந்தி, ஓம் சாந்தி.                                                          கனடா – காரை கலாச்சார மன்றம்.
KKVS

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011-2012 நிதி அறிக்கை(Updated)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011-2012 நிதி அறிக்கை(Updated)

கனடா காரை கலாச்சார மன்றத்தில் கடந்த 4ஆண்டுகளாக கடமையாற்றிய நிர்வாகத்தினருக்கு பல வழிகளிலும் உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இங்கே 2011-2012இற்கான நிதியறிக்கையை மக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம். இந்நிதியறிக்கையினை இணையத்தளத்திற்கு எடுத்து வருவதற்கு தாமதமானதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிர்வாகசபை.
2009-2012
கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011 – 2012இற்கான நிதி அறிக்கையினைப் பார்வையிட இங்கே அழுத்துக.

ஆருத்திரா தரிசனம் 01.08.2012 இல் நிதி அன்பளிப்புச் செய்தோர் விபரம்
இங்கே அழுத்துக.

ஆருத்திரா தரிசனம் 28.12.2012 இல் நிதி அன்பளிப்புச் செய்தோர் விபரம்
இங்கே அழுத்துக.

காரை ஒன்றுகூடல் 2012இல் நிதி அன்பளிப்புச் செயதோர் விபரம்
இங்கே அழுத்துக.

காரை ஒன்றுகூடல் 2011இல் நிதி அன்பளிப்புச் செயதோர் விபரம்
இங்கே அழுத்துக.

காரைவசந்தம் 2012 விளம்பரதாரர் விபரம்
இங்கே அழுத்துக.

காரைவசந்தம் 2011 விளம்பரதாரர் விபரம்
இங்கே அழுத்துக

காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி

காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி

 

புலம்பெயர் காரை அமைப்பின் ஆரம்ப நிறுவுனர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி சபாபதி சபாரட்ணம் அவர்களின் மறைவு குறித்து

பிரித்தானிய காரை நல்ன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலிப் பூக்கள்.

 

மேற்குலகிற்கான எம் புலம்பெயர் வாழ்வில், எமது தாய்க் கிராமமான காரைநகர் மண்ணின் வளர்ச்சி குறித்துச் சிந்தித்த மாமனிதரின் பேரிழப்பு இதுவாகும். 1980 களின் பின்னரான புலப்பெயர்வில் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட மூத்த சங்கமான இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர் சபா அண்ணா. இச்சங்கம் 1990ஆம் ஆண்டு மேமாதம் தோற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாக அதன் செல்திசையை தோற்றுவித்தவர். அடுத்த வந்த 12 ஆண்டுகளாக அதன் செயலாளராக எம் சங்கத்தைச் செயற்படுத்திய பெருமகன். தன் இறுதிநாள்வரை காரைநகரின் வளர்ச்சிக்காக உள்ளன்போடு செயற்பட்டவர். காரைநலன்புரிச் சங்கத்தின் தோற்றம் முதல் கடந்த 23 ஆண்டுகளாக அதன் செயற்பாடுகள் அனைத்தையும் நெறிப்படுத்திய பெருமைக்குரியவர். அவரின் நேர்மையும் கண்ணியமும் அளப்பரிய சகிப்புத்தன்மையும் என்றென்றும் போற்றுதற்குரியவை. கால் நூற்றாணடை அண்மிக்கும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் சாதனைகளாக கருதப்பட்டவை அனைத்தும் அவரின் எண்ணக் கருவூலத்தில் தோற்றம் பெற்றவை. அஞ்சலிகள் தெரிவிக்கும் இன்றைய நாளில் அவரின் செயற்திட்டங்களில் முக்கியமானவையாய் கருதப்படும் மூன்றினை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

 

முதன்மையானதும் முக்கியமானதும் காரைநகருக்கான நன்னீர் வழங்கல் செயற்திட்டம். இலண்டன் காரை மக்களின் நிதிப் பங்களிப்போடு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயற்படும் இத்திட்டம் சபா அண்ணாவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயலாற்றுமையிலும் முன்னெடுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு யூன் மாதம் நன்னீர் விநியோக கொள்கலன் இலண்டனிலிருந்து காரைநகருக்கு அனுப்பப்பட்டதன் மூலம் இச்செயற் திட்டம் ஒழுங்கு முறையாக நடத்தப்படுவதற்கான மூல்காரணியாய் இருந்தவர் சபா அண்ணா!

 

காரைநகரில் வாழும் மக்களின் சுகாதார நலன் குறித்த அத்தியாவசிய மருத்துவ செயற் திட்டங்களில் சபா அண்ணா ஓர் வழிகாட்டியாய் திகழ்ந்தவர். காரைநகர் எல்லைக்கு அப்பால் யாழ் போதனா வைத்தியசாலைக்கான புற்றுநோய் மருத்துவ செயற்பாடுகளுக்கும் தனிப்பட்ட முறையில் நிதி உதவிகளை வழங்கிய புரவலர் சபா அண்ணா. காரைநகர் வைத்தியசாலையின் தேவைக்கேற்ப மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தன் தனிப்பட்ட தொடர்புகளின் மூலம் செயற்படுத்தியவர்.

 

காரைநகர் வாழ் மாணவச் செல்வங்களின் மீதான சபா அண்ணாவின் அன்பும் ஆதரவும் அளப்பரிய ஒன்றாக இறுதிவரை இருந்து வந்துள்ளது. காரைநகரில் செயற்படும் அனைத்து பாடசாலைகளின் வளர்சியிலும் எவ்வித பாகுபாடுகளுமற்ற நலத் திட்டங்களை செயற்படுத்திய கண்ணியத்திக்குரியவர் சபா அண்ணா. சபா அண்ணா கல்வி கற்றதும் முதன்மைமிக்க காரைநகர் கல்விச்சாலையுமான காரை இந்துக்கல்லூரியை மையமாகக் கொண்ட அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து வைத்தவர். அண்மையில் உருப்பெற்ற இந்த அறக்கட்டளை சபா அண்ணாவின் மாமனாரும், கல்லூரியின் சரித்திர முக்கியத்துவமுடைய அதிபரும், காரை மக்களின் அரசியல் தலைவராகவும் இருந்த அமரர் ஆ.தியாகராசாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை என்ற பெயரில் அமைந்த இத்திட்டமானது சபா அண்ணாவின் தனிப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகும். இத்திட்டம் காரை மாணவர்களிற்கான புலமைப் பரிசில் நிதியை காலந்தோறும் வழங்கும் வகையில் நிரந்தர நிதி வைப்பீட்டைக் கொண்டதாகும். இற்றை வரையான காரை கல்வி நலத்திட்டங்களில் அளப்பரியதோர் திட்டத்தை உருவாக்கிய பொன்மனத்தின் சொந்தக்காரர் எங்கள் சபா அண்ணா.

 

புலம்பெயர் நாடுகளில் உள்ள காரை நலன்புரி அமைப்புக்களில் அறக்கட்டளை அமைப்பாக பதிவாகிய அமைப்பு, பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கமாகும். 2007 ஆம் ஆண்டு எமது சங்கத்தை ஓர் அறக்கட்டளை ஆக்கிய பெருமைக்குரியவர் சபா அண்ணா. காரைநகரில் அமைந்துவரும் காரை அபிவிருத்திச் சபை நூலகத்தின் உருவாக்கத்திற்கு ஆரம்ப காலம் முதல் பேருதவிகளை நல்கியவர். அண்மையில் மிகுந்த பெறுமதி மிக்க 32 தொகுதிகள் அடங்கிய கலைக்களஞ்சியத்தை அவர் நூலகத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத எழுத தொடரும் எல்லைகளுக்கு அப்பாலான அர்ப்பணிப்பாளன் எங்கள் சபா அண்ணா! தன் புலமை, கல்விப் பெருமை, சமூக மேன்நிலை ஆகிய அனைத்தையும் புறம்தள்ளி ஒர் அன்புமிக்க எளிய நண்பானாய் எம்மோடு ஊடாடிய ஓர் உயரிய மனிதனை இழந்து எம் சங்கம் வருந்துகிறது. அன்புடன் எம்மை அரவணைத்து வழிநடத்திய ஒரு மேய்ப்பனை நாம் இழந்திருக்கிறோம். ஒரு பிதா மகனை இழந்த பிள்ளைகளாக நாம் வருந்துகிறோம். விடைபெறும் சபா அண்ணாவை ‘பிதாமகன்’ என்றே போற்றி மனதிருத்தி, அன்னாரின் மறுவாழ்வின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேதா சுந்தரேஸ்வர பெருமானை வேண்டி! அன்னாரின் பிரிவால் துயருறும் காரை மக்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி

S8

கண்ணீர் அஞ்சலி

as11-1

கண்ணீர் அஞ்சலி KWS-UK,CKCA,SKDB,KWS-FR,AKCA

கண்ணீர் அஞ்சலி

Dr.SabaDr.சபாபதி
சபாரத்தினம்(குஞ்சு)
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட னுச.சபாபதி சபாரத்தினம்
21.03.2013 வியாழக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் கடந்த இரண்டு சகாப்தங்களாக சிறப்பாக
இயங்கிவரும் காரை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின்
ஸ்தாபகரில் ஒருவரும், பிரான்சு காரை நலன்புரிச் சங்க
ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அன்னார் காரைநகரின் கல்வி, பொரளாதாரம், அபிவிருத்தி
தொடர்பாக இறுதி மூச்சுவரை அயராது செயற்பட்டுவந்தார்.
அன்னாரது இழப்பு எமக்கும் காரைநகர் மக்களுக்கும்
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்.
நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து
சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப்
பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

காரைநகர் அபிவிருத்தி சபை
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013
புலம்பெயர் காரை அமைப்புக்களால் கூட்டாக திட்டமிடப்பட்டிருக்கும்இ ‘முதுசங்களைத் தேடி’ வருடாந்த நூல் வெளியீட்டுக் கருத்திட்டத்தின்  இரண்டாம் ஆண்டாகிய 2013 இல்  1967 ஆம் ஆண்டு வெளியான சைவமகாசபைப் பொன்விழா மலர் மீள்பதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இத்தகவலை பலரும் அறிந்திருப்பீர்கள் என நாம் நம்புகிறோம். பொன்விழா மலரின் முதலாம் பதிப்பில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளம்பரங்கள் குறித்த மலரில் இடம் பெற்றிருந்தன. முதல் பதிப்பில் இடம்பெற்ற விளம்பரங்களின் பக்கங்களில் தற்போது புதிய விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள நலன்விரும்பிகளும் புரவலர்களும் விளம்பரங்களை குறித்த நாட்டின் காரை அமைப்புக்களுக்கு தற்போது வழங்கி வருகிறார்கள். இவ்வறிவித்தல் விளம்பரம் தர விரும்பும் ஏனைய அனைவர்க்குமான பகிரங்க கோரிக்கையாக முன் வைக்கப் படுகிறது. விளம்பரம் தர விரும்பும் அன்பர்களில் இலங்கையில் இருப்பவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபைக்கும்  காரை சங்கங்கள் செயற்படும் நாடுகளில் இருப்போர் குறித்த சங்கங்களுக்கும் இது குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனைய நாடுகளில் இருப்போர் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தை அல்லது காரைநகர் இணையத்தினை  416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
நன்றிகளுடன்
முதுசங்களைத் தேடி நூல் வெளியீட்டுக் குழு.

காரைநகர் யாழ்ரன் கல்லூரியின் வாழ்த்துச் செய்தி

காரைநகர் யாழ்ரன் கல்லூரியின் வாழ்த்துச் செய்தி

ah/aho;w;ud; fy;Y}up> fhiuefh;