Category: இலண்டன் காரை

“ காரை நூற்றின் தீபத்தி௫நாள்” விசேட சிறப்பு விழா.

 

காரை நூற்றின் தீபத்தி௫நாள்” விசேட சிறப்பு விழா.

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் பெ௫மையுடன் முன்னெடுக்கும் “காரை நூற்றின் தீபத்தி௫நாள்” இணைய வழியூடான விசேட சிறப்பு விழா.
காரைதீவு …. காரைநகர் என்ற நாமத்தை பெற்று நூற்றாண்டை காணும் இவ்வேளையில் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்வு.

காலம் :- ஞாயிற்றுக்கிழமை 19/11/2023.

நேரம் :- காலை 11:00 மணிமுதல்( U.K. time)

இணையவழி தொடர்பு :-

https://www.youtube.com/@user-hq7cu5jz6i

இந்த Youtube இணையத் தளத்தை இப்பொழுதே பதிவு (subscribe) செய்து கொள்ளுங்கள், அன்றையதினம் விழா ஆரம்பமானதும் உங்களுக்கு நினைவூட்டல் வந்து சே௫ம்.

உலகளாவிய ரீதியாக காரைமக்கள், இளையோர்கள் கலந்து சிறப்பிக்க இ௫க்கிறார்கள்.

உங்கள் உறவுகள், நண்பர்களுடன் இப்பதிவை பகிர்வமைக்கு நன்றிகள்.

மேலதிக தொடர்புகளுக்கு :-
1. நடா – 07538 092227
2. கஜன் – 07397 558392

நன்றி,
வணக்கம்.

நிர்வாகம்,
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 25.09.2021 சனிக்கிழமை அன்று நடைபெற்று புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.

KWS(UK) 2021-AGM Public message-3

திரு சபாபதி சபாநாயகம் அவர்களின் மறைவு குறித்து பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் வழங்கும் காரைக் கதம்பம் – 2020

காரை சங்கமம் 2019 விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல் (07.07.2019, ஞாயிற்றுக்கிழமை)

Letter to KS 2019

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம்’ 2019 கடந்த சனிக்கிழமை மாலை (26.01.2019) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.

 

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம்’ 2019 கடந்த சனிக்கிழமை மாலை (26.01.2019) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.

விழா குறிப்பிடப்பட்டது போல் மாலை 05:௦௦ மணிக்கு சரியாக ஆரம்பமானது. விழாவிற்க்கு வருகை தந்திருந்த திருமதி இராசநாயகம் பாலாம்பிகை மற்றும் திருமதி கலிஸ்டர் சாய்பாபா மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.தொடர்ந்து திருமதி யெகதாம்பிகை ஆனந்தராசா வழங்கிய இனிய தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் ஓசினி சிவகுமார் வழங்கிய வரவேற்புரையை தொடர்ந்து சிறுவர் நிகழ்சிகள் ஆரம்பமானது. பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாடகம், சினிமா நடனம், பேச்சு என்று பல இனிய நிகழ்வுகளை சிறுவர், சிறுமியர் மேடையேற்றினர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ஐ. தி. சம்பந்தன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். ஊடகவியளாளர் திரு இளையதம்பி தயானந்தா திரு. ஐ. தி. சம்பந்தன் பற்றிய பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும் பிரித்தானிய சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் போன்றோர் இவ்கௌரவிப்பில் கலந்து கொண்டனர். பிரதம விருந்தினர் திரு. ஐ. தி. சம்பந்தன் அவர்கள் தமது உரையில் காரை மண்ணின் பெருமைகளை எடுத்து இயம்பி, மேலும் காரை மக்கள் ஒற்றுமையாக மேலும் காரை மண்ணை மேம்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிருத்தானிய நலன் புரிச்சங்கத் தலைவர் திரு. முருகேசு யோகராஜா தலைமையுரை ஆற்றும்போது, காரை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, காரைமக்களை காரை மண்ணை மேலும் முன்னேற்ற ஒற்றுமையுடன் கூடுமாறு அழைப்பு விடுத்தார்.

விழாவில் காரை மண்ணில் இருந்து காணொளி மூலம் திருமதி வீரமங்கை வழங்கிய சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது. மேலும் காரை யாழ்ரன் கல்லூரி மாணவர்கள் நடித்து வழங்கிய நாடகம் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து விழாவில் பங்குபற்றிய சிறார்களும், அண்மையில் பல்கலையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

சங்கத்தின் விழா பொருளார் திரு தர்சன் இராஜேந்திரன் வழங்கிய நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அதன் பின்னர் மக்கள் அனைவரும் இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

நன்றி

நிர்வாகம்

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்

 

Press Release

 

 

 

காரைக்கதம்பம் 2019 புகைப்படங்கள்

 

 

 

பிரதம விருந்தினராக திரு. ஐ. தி. சம்பந்தன் உரை 

 

 

 

 

திருமதி வீரமங்கை வழங்கிய சிறப்புரை

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் வழங்கும் காரைக் கதம்பம் 2019

பிரித்தானிய காரை நலன்புரி சங்கத்தின் காரைக்கதம்பம் 2019 (26.01.2019 மாலை 4.30 மணிக்கு)

மேலதிக விபரங்களுக்கு

http://www.karainagar.org/

காரை மண்ணின் அழைப்புமணி ஓய்ந்தது.

காரை மண்ணின் அழைப்புமணி ஓய்ந்தது

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.

Committee Members list 2018-19

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 02-12-2018 / Annual General Meeting 02-12-2018

Web posting - AGM2018-V3

காரைக் கதம்பம் 2018

காரைக் கதம்பம் 2018

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான காரைக் கதம்பம் 2018 கடந்த சனிக்கிழமை 14ம் திகதி விளம்பி சித்திரைப் புத்தாண்டு நன்னாளில் இனிதே நிறைவேறியது. நிகழ்வுகள் நிரலில் குறிப்பிட்டதுபோல் மாலை 05:00 மணிக்கு ஆரம்பமாகி 10:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

திருமதி.புவனேஸ்வரி தனபாலன் மற்றும் திருமதி செல்வகுமாரி ஜெயசிங்கம் மங்கள விளக்கேற்ற, தொடர்ந்து திரு.பால்ராஜ் அவர்களின் தேவாரத்துடன் வழமையான சம்பிரதாய முறைப்படி நிகழ்வுகள் ஆரம்பமானது.

விழாவிற்கு பிரதம அதிதியாக திரு, திருமதி பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன்( நேரு மாஸ்டர்) அவர்களும், அப்ரா நிறுவன (ABRA ) உரிமையாளர் திரு. திருமதி. துரைச்சாமி தயானந்தன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வழமைபோல் பிரித்தானிய வாழ் காரை சிறார்கள், இளையோர்கள் தங்கள் கலை நிகழ்வுகள் மூலம் மேடையை அலங்கரித்தனர். இம்முறை கதம்பத்தில் முக்கிய நிகழ்வாக “எமது எதிர்காலம்”, எனும் நிகழ்வு சபையோரின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளிவந்த பிரித்தானிய வாழ் காரை பட்டதாரிகளை, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் அழைத்து கெளரவப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கமாக பிரித்தானிய வாழ் காரை இளையோரிடையே ஒரு பன்முகப்பட்ட அறிமுகப்படுத்தலை உருவாக்குதல், அவர்களுக்கும் எமது காரை மண்ணில் வளர்ந்துவரும் இளையோரிடையேயும் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தல் மற்றும் பிரித்தானியாவில் இவர்களை தொடர்ந்துவரும் இளையோர்களின் பல்கலைக்கழக கல்வி, சமூகவியல் , மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல் என்பனவற்றுக்காகும்.

“வாழ்வது வனமானாலும் சேர்வது இனமாகட்டும்”

நிகழ்வின் புகைப்படங்களை கீழுள்ள இணையத்தில் பார்வையிடலாம் :

http://www.karainagar.org/karai-kathambam-2018-event-report/

காணொளியுடன் மேலதிக செய்திகளையும், தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரையையும் எதிர்பாருங்கள்.

 

நன்றி,

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்.

காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) தனது வருடாந்த நிகழ்வான ‘காரை கதம்பம் 2018’ நிகழ்வினை 14/04/2018 (சனிக்கிழமை) அன்று Preston Manor School, Carlton Ave, Wembley, London, HA9 8NA எனுமிடத்தில் பிற்பகல் 4மணி முதல் நடத்தவுள்ளது. வழமைபோல் இந்நிகழ்வில் தங்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

18/03/2018

அன்பான எம் காரை உறவுகளே,

காரை கதம்பம் 2018′

 

காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) தனது வருடாந்த நிகழ்வான காரை கதம்பம் 2018‘ நிகழ்வினை 14/04/2018 (சனிக்கிழமை) அன்று Preston Manor School, Carlton Ave, Wembley, London, HA9 8NA எனுமிடத்தில் பிற்பகல் 4மணி முதல் நடத்தவுள்ளது. வழமைபோல் இந்நிகழ்வில் தங்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

முக்கிய குறிப்பு : மாலை 5 மணிக்கு முன்பாக சமூகமளிப்போருக்கு அனுமதி இலவசம்

 

எங்கள் எதிர்காலம்’,  ‘Our Future’

இம்முறை கதம்ப விழாவில்  எம் பிரித்தானிய வாழ் காரை இளம் சமூகத்தினரை கடந்த மூன்று ஆண்டுகளில் பல்கலைக்கழக பெறுபேறுகள் பெற்று வெளியேறிய எம் இளம் சந்ததியினரை எம் மன்றம் அழைத்து கெளரவிக்க உள்ளது, எனவே கடந்த மூன்று வருட காலத்தில் வெளியேறிய பல்கலைக்கழக பட்டதாரிகளின்  (தங்கள், தங்கள் உறவுகள்சார், நண்பர்கள்சார் பிள்ளைகளின் )     பெயர்ப் பட்டியலை தந்துதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

 

இதில் காரை இளையோர் அமைப்பின் பங்களிப்பினை மிகத்தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம்.

 

Kumar   – 07951950843  thavarajah@btinternet.com

Arunan  – 07791836281  arunan_tt@hotmail.com

 

அன்புடன்,

நிர்வாகக் குழு,

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

 

 

 

18/03/2018

 

Dear All,

Karai Kathambam 2018

 

Karai Welfare Society (UK) is pleased to invite to our first annual event, Karai Kathambam 2018, to be held on the 14th April 2018 at the Preston Manor School, Carlton Ave, Wembley, London, HA9 8NA from 4pm onwards. We would guarantee this would be an ideal day out with your family to celebrate the New Year.

NB: Entrance free until 5pm.

 

‘Our Future’

To make our celebrations special, we would like to commemorate youngsters of Karainagar who graduated from university over the last three years. If you, your child or a friend graduated over the last three years then please forward their details to the following two members.

Kumar   – 07951950843  thavarajah@btinternet.com

Arunan  – 07791836281  arunan_tt@hotmail.com

 

 

We look forward to seeing you soon.

KWS(UK) committee

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

 

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

வணக்கம்,
பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இரண்டு கிழமைகளில்! புதிய நிர்வாகம், புதுப் பொலிவு, அதிரடி மாற்றங்கள்!

திகதி: 18 மாசி 2018 (ஞாயிறு)
நேரம்: காலை 10:00
இடம்: KACHHIA SAMAJ (UK) LIMITED, Heather Park Community Centre, MOUNT PLEASANT, WEMBLEY, MIDDLESEX, HA0 1SH.

மேலதிக விபரங்களுக்கு:
http://www.karainagar.org/kwsuk-agm2017-notification2/

நாதன்: 07944232014
நந்தன்: 07737121187
மின்னஞ்சல்: info@karainagar.org

காரைநகர் மக்கள் எவரும் கலந்துகொள்ளலாம் (அங்கத்தவர் மட்டும் வாக்களிக்கலாம்)
அங்கத்துவ வருட சந்தா £60 ஐ அன்றைய தினம் (பணமாக மட்டும்) செலுத்தி அங்கத்தவராக இணையலாம்.

நன்றி,
பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கம்

Dear All,

Karai Welfare Society (UK)’s annual general meeting (AGM) in two weeks! NEW COMMITTEE, NEW IDEAS, DRAMATIC CHANGES!

Date: 18th February 2018 (Sunday)
Time: 10:00am
Venue: KACHHIA SAMAJ (UK) LIMITED, Heather Park Community Centre,
MOUNT PLEASANT, WEMBLEY,
MIDDLESEX, HA0 1SH.

For details please visit our website:
http://www.karainagar.org/kwsuk-agm2017-notification2/
Contact :
Nathan: 07944232014
Nanthan: 07737121187
E-mail: info@karainagar.org

All Karainagarians can attend this AGM (but only paid members can vote). If you are not a paid member you can pay by cash (£60 per year) ONLY on the day and join.

Thank you,
Karai Welfare Society (UK)

முத்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

சின்னர் இராமநாதர் அவர்களின் மறைவு குறித்து பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

காரைநகர் இடைப்பிட்டியை சேர்ந்த

சின்னர் இராமநாதர்

அவர்கள் இறைபதமடைந்துள்ளார்.

அன்னார் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிர்வாக உறுப்பினர் சிவசுப்ரமணியம் (Banker) அவர்களின் தந்தையார் ஆவார். அன்னாரின் தகனக்கிரியை காரைநகரில் 07/01/2018 (ஞாயிறு) அன்று நடைபெறுகிறது.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்ம சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர தில்லைக்கூத்தனை வேண்டுகிறோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

பிரிவில் துயர் பகிரும்,

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

 

காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

Dear KWS(UK) Members,

We are pleased to announce the date for our Karai Kathambam 2018 and please book this date on your calendar now.

                                        KARAI KATHAMBAM 2018     

 

Date: 27th January 2018 (Saturday)
Time: 5pm to 10:30pm
Venue: Preston Manor School, Carlton Avenue, Wembley, HA9 8NA

Please find the attached KK2018 participant application form. Please complete this form and return to the address on this form before 15th January 2018. This form can also be downloaded from our website using http://www.karainagar.org/wp-content/uploads/2017/12/Application_Form-KK2018-v3.pdf

Please visit our website http://www.karainagar.org/karai-kathambam-2018-notification/ for up to date details about this event.

We expect more programmes on this event so please do not hesitate to contact us on info@karainagar.org if you require further details about your or your children’s participation in this event.

Thank you,
KWS(UK)

 

காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

 

அன்பான பிரித்தானிய வாழ் காரை மக்களே,

 

காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

எமது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அங்கத்தவர்களின் வேண்டுகோளிற்கிணங்க எமது வருடாந்த நிகழ்வான காரைக் கதம்பம் (பொங்கல் விழா) குட்டி மழலைகளை உள்வாங்கி உற்சாகப்படுத்தும் முகமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைகளை ஊராருடனும் உற்றார் உறவினருடனும் பகிர்வதனால் நாம் எமது பிள்ளைகள் எமது ஊரவர்கள் என்ற அடையாளத்தையும் ஊரவர் ஒருவருடன் ஒருவர் உறவாடுவதற்கான உறவுப் பாலம்தான் எமது நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். ஆகவே, இம்முறை பார்வையாளர்களிற்கு தனி நபரிற்கு £5 மற்றும் பங்குபற்றும் பிள்ளைகளிற்கு £10. தனியாகவோ குழுவாகவோ ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியும் (எல்லா பிள்ளைகளிற்கும் இடமளிக்க வேண்டும் என்பதனால்). இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளின் பெற்றோர் தயவுசெய்து 15/01/2018 இற்கு முன்பாக பதிவுகளை ஏற்படுத்துமாறு வேண்டுகிறோம்.

முக்கிய குறிப்பு : மாலை 5 மணிக்கு முன்பாக சமூகமளிப்போருக்கு அனுமதி இலவசம்

திகதி: 27 தை (January) 2018

நேரம்: பிற்பகல் 5 மணி

இடம்: Preston Manor School, Carlton Avenue, Wembley, HA9 8NA

தொடர்புகளிற்கு:

சித்ரா (07828156008)

வதனா (07450863391)

ராஜரத்தினம் ( 07747640575)

நாதன் (07944232014)

மின்னஞ்சல்: info@karainagar.org

மேலதிக தகவல்கள் : http://www.karainagar.org/karai-kathambam-2018-notification/

நன்றி,
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 10-12-2017 / Annual General Meeting 10-12-2017

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 10-12-2017 

Annual General Meeting 10-12-2017

எதிர்வரும் மார்கழி (December) மாதம் 10ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணியளவில் KACHHIA SAMAJ (UK) LIMITED, Heather Park Community Centre, MOUNT PLEASANT, WEMBLEY, MIDDLESEX HA0 1SH எனும் மண்டபத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்திற்கு அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் எமது சங்க வளர்ச்சிக்கான ஆரோக்கியமான கருத்துக்கள், வினாக்களை தாங்கள் அளவளாவ விரும்பினால் தயவு செய்து அவற்றை நிர்வாக சபைக்கு 7 நாட்களுக்கு முன்னர் எழுத்து மூலமோ, அல்லது தொலைபேசி மூலமோ அறியத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எதிர்வர இருக்கும் புதிய நிர்வாகசபை தெரிவுக்குழுவில் தாங்களும் ஒரு சிறு மணித்துளிகளை சங்க முன்னேற்றத்தின் பயனுக்காக அர்ப்பணித்து பங்காற்ற விரும்பின் தயக்கமின்றி முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல் – Agenda

1) வரவேற்புரை – தலைவர்

Welcome speech – President

2) வருடாந்த அறிக்கை – செயலாளர்,

Annual Report – Secretary

3) தனாதிகாரி வருடாந்த அறிக்கை

Annual Report – Treasurer

4) புதிய நிர்வாக‌ குழு அங்கத்தவர்கள் தெரிவு

Election of New Committee

5) எதிர்கால திட்டங்கள் – அது பற்றிய நிதி ஒதுக்கீடுகள்

Future project and fund allocations

6 ) காரைக் கண்ணோட்டம் – கருத்து பரிமாற்றம்

Karai View and Question / Answer session

7) யாப்பு திருத்தங்கள்

Constitution Amendments

8) வேறு விடையங்கள் .

Any other business

பின்குறிப்பு:- இவ்வருடாந்த பொதுக் கூட்டத்தில் எமது அங்கத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். அங்கத்தவர் அல்லாதோர் பொதுக் கூட்டத்தில் பங்குபற்ற விரும்பின் தங்கள் அங்கத்துவ வருட சந்தா £60 ஐ (அறுபது பவுண்டுகள்) முன்கூட்டியே அல்லது அன்றைய தினமோ ( அன்றைய தினம் பணமாக மட்டும்) செலுத்தி அங்கத்துவத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

 

For further/up-to-date details please visit: http://www.karainagar.org/kwsuk-agm2017-notification/

இங்கனம்

செயலாளர்- Secretary

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

Karai Welfare Society (UK)

காரை சங்கமம் 2017-நிகழ்வறிக்கை-Karai Sangamam 2017 Event Report

காரைச் சங்கமம் 2017 புதிய இடத்தில் புதுப் பொலிவுடனும் புதியவர்களின் வருகையுடனும் சங்கமித்தது

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.org/karai-sangamam-2017-event-report/

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் வழங்கும் காரை சங்கமம் 2017

KS2017-FlyerDesign-V3

இளையோர் அமைப்பு ஒருங்கிணைக்கும் காரைச் சிறார்களின் சங்கமம் 2017

 

Karai Kutties 2017 Flyer

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் வழங்கும் காரை சங்கமம் 2017

KS2017-FlyerDesign-V3

பரமு கிருபாலரட்ணம் அவர்களின் மறைவு குறித்து பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

1 2 3 4

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான “காரைக் கதம்பம் 2017”

KK2017-FlyerDesign-V3

காரைச் சங்கமம் 2016 (தியாகச் சங்கமம்) புதுப் பொலிவுடனும் புதியவர்களின் வருகையுடனும் சங்கமித்தது!

UK LOGO

காரைச் சங்கமம் 2016 (தியாகச் சங்கமம்) புதுப் பொலிவுடனும் புதியவர்களின் வருகையுடனும் சங்கமித்தது

மனத்துடன் வந்து இனத்துடன் இணையுங்கள் என்றோம்…………… எம் மக்கள் இனத்துடன் வந்து மனத்துடன் மகிழ்ந்தார்கள்,!!!!!
 
இவ் அரியநிகழ்வுக்கு தாயகத்தில் இருந்து பிரதம அதிதியாக சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் நிகழ்விற்கு சமூகம் தர முடியவில்லை.
 
கெளரவ விருந்தினர்களாக , எமது பிரித்தானியா காரைநலன் புரிச் சங்கத்தின் நலன்விரும்பிகளான திரு. S . கமலநாதன், திரு. P . உதயகுமார், திரு. T . தனபாலன், திரு. க. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எமது ஊடகவியலாளர் திரு இ . தயானந்தாஅவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
 
ஜெர்மனியில் இருந்து திரு சாயி குடும்பத்தினர் வழமைபோல் குடும்ப சகிதம் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்……………………………………………


பிரித்தானியாவில்  முதன்  முறையாக பிழாவில் சுடச் சுட கூழ் குடித்து கொண்டாடப்பட்ட காரைச் சங்கமம் 2016 

இம்முறை நீங்கள் தவறவிட்டிருந்தால் காரைச் சங்கமம் 2017 இல் தவறாது இணையுங்கள்  

http://www.karainagar.org/karai-sangamam-2016/

1

காரைச் சங்கமம் 2016 இல்  தாச்சியில் (கிளித்தட்டில்) புகுந்து கலக்கிய காரை மக்கள்

http://www.karainagar.org/karai-sangamam-2016/

2

காரை மக்கள் சங்கமித்த இந்த விளையாட்டு விழாவின் மேலதிக படங்கள் கீழே…….

http://www.karainagar.org/karai-sangamam-2016/


 காணொளிகளை கீழே பார்வையிடலாம்

 

காரைநகர் இந்துக் கல்லூரி காணிக் கொள்வனவிற்கான நிதி திரட்டல்

காரைநகர் இந்துக் கல்லூரி காணிக் கொள்வனவிற்கான நிதி திரட்டல்

 
பூமிப்பந்தில் பரந்து வாழும் பெருந்தன்மையுள்ள காரை மக்களே வணக்கம் …
 
 
உலகெங்கும் பரந்து வாழுகின்ற இவ்வேளையிலும்  காரை மாதாவின் கல்விப்பணியில் கருணை உள்ளம் கொண்டவர்களே, காரை இந்து மாதாவின் மடியில் கற்று, தவழ்ந்து, நடந்து, ஓடி, பாய்ந்து, துள்ளி விளையாடி, பல துறைகளிலும் சாதனைகள் படைத்து புலம் பெயர் நாடுகளில் காரை புகழ் பரப்பும் கருணை உள்ளம் கொண்டவர்களே.!!
 
எமது எதிர்கால சிறார்கள் சமகால கல்வி மாற்றங்களிக்கேற்ப கல்வியினை பெற்றுக் கொள்வதிற்கு தங்களின் மேலான நிதியுதவியினை  நாடி  நிற்கின்றோம்.
அரசினால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அண்மித்த பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்திற்கு 230மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை இக் கல்லூரியில் அமுல் படுத்துவதற்கு கல்லூரியை அண்டியுள்ள 48 பரப்பளவுள்ள காணி கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகின்றது.

      இதில் :- 
                  1)  6 பரப்பளவு காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது 
                  2)  5 1/2 (ஐந்தரை பரப்பு ) காணி கொள்வனவை கொழும்பு மற்றும் கனடா பழைய 
                      மாணவர் சங்கம் பெற்று வழங்கியுள்ளது.

மிகுதி 36 பரப்பளவு காணி கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி தேவைப்படுகின்றது.  மிகுதியாக கொள்வனவு செய்யப்படவேண்டிய காணிகள்  முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, எனவே தங்களிடம் இக் காணிக்  கொள்வனவிற்கான தங்களின் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
      எங்கள் எதிர்கால சிறார்கள் சிறப்பான கல்வியைப் பெற்று நல்லதோர் சமூகம் நம் கிராமத்தில் உருவாக எமது மக்களாகிய உங்கள்  அனைவரினதும்  நிதிப்பங்களிப்பினை  பெருமனதுடன் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றோம்.
 
தங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும்  இணைப்பை அழுத்தவும் 

https://mydonate.bt.com/events/karaihinduland2016
   
                             ”சிறுதுளி பெருவெள்ளம்”
    தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு 
    காம்உறுவார் கற்றுஅறிந் தார்.
                                       குறள்-399
 
 
நன்றி
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம்.

 

பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம் பெருமையுடன் நடாத்தும் தியாக சங்கமம் (காரைச் சங்கமம் 2016) வருடாந்த விளையாட்டு நிகழ்வுடன் கூடிய ஒன்றுகூடல் ஜூலை மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை

New Flyer for Event on 24.07.2016 (Sunday)

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி

UK LOGO
அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிற்கு,
 
 அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா
 
 காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த ஓயாது உழைத்தவரும்,  காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமான அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்துவதையிட்டு நாம் எல்லோரும் பெருமிதம் அடைகிறோம்.
 
 அன்னாரின் பணியினை அனைத்து காரை மக்களும் தொடர்ந்து பேணுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இவரின் பணிகள் காரைநகரை எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கொண்டு சென்றதென்றால் அது மிகையாகாது. அன்னாரின் அளப்பெரிய பணிகளை இந்த நூற்றாண்டு விழா மூலம் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கு வழிசமைத்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நிர்வாகத்தினரின் இந்த முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியதே!
 
 இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொண்டு இந்த விழா சிறப்புற அமைய பிரித்தானிய வாழ் காரை மக்கள் மற்றும் காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
 
 நன்றி.
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்  

KWSUK-KaraiHinduCollege-OSA-Canada-100thAnniversary-of-Dr-Thijagaraja-07062016

 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.குலதாசன் பாராட்டு!

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.குலதாசன் பாராட்டு!

பிரித்தானிய காரைநலன் புரிச்சங்கத்திற்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பாராட்டு   தெரிவித்துள்ளார்.   பிரித்தானிய காரை   நலன்புரிச்சங்க   நிதியுதவியுடன் காரைநகர்   முன்பள்ளி   மாணவர்களிற்கான   இரும்புச்சத்தது   பாணி   மருந்தினை முன்பள்ளிஆசிரியர்களிடம்   வழங்கும்   வைபவத்தில்   கலந்து   கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நலன்புரிச்சங்க   நிதியுதவியுடன்   காரைநகர்   முன்பள்ளி மாணவர்களிற்கான   இரும்புச்சத்து   பாணி   மருந்துகள்   ஆசிரியர்களிடம்   வழங்கும் நிகழ்வு   இன்றைய   தினம்   20.05.2016   வெள்ளிக்கிழமை   காரைநகரில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில்   ஊர்காவற்றுறை   சுகாதார   வைத்திய   அதிகாரிஎஸ்.குகதாஸன், காரைநகர்   பொது   சுகாதார   வைத்திய   அதிகாரி, முன்பள்ளிஇணைப்பாளர்,   பிரித்தானிய காரைநலன்புரிச்சங்க   காரைநகர்   பிரதிநிதி   உட்பட முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சுகாதார   வைத்திய   அதிகாரி   மேலும்   உரையாற்றுகையில்   எமது   அரசின்   நிதி ஒதுக்கீட்டில்   கர்ப்பிணித்தாய்மாருக்கான   சத்துணவு, பாடசாலை   மாணவர்களிற்கான சத்துணவுத்திட்டம்   என்பனவற்றினை   நடைமுறைப்படுத்திய   போதிலும்   முன்பள்ளிமாணவர்களின்   போசாக்கு   திட்டத்தில்   எவருமே   அக்கறை  செலுத்துவதில்லை.   பொதுவாக இலங்கையில்   சிறுவர்களிற்கான   இரும்புச்சத்து   குறைபாடு   பெரும்   குறையாக காணப்படுகின்றது. இந் நிலையில் யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. காரைநகர் அபிவிருத்தியில் அக்கறை  உடைய பிரித்தானிய காரைநலன்புரிச்சங்கம் எனது   கோரிக்கையை ஏற்று   இதற்கான   நிதியுதவியை   வழங்கியுள்ளது.   பிரித்தானிய நலன்புரிச்சங்கத்தினரின்   2040ம்   ஆண்டு   காரைநகர்   எப்படி   இருக்கவேண்டும் என்ற   ஆதங்க   ஒளித்   தொகுப்பினை   இணையத்தளத்தில்   பார்த்தேன்.   அப்போதுதான் அவர்களின்   உணர்வுகளை மதிப்பட   முடிந்தது.   ஆனால்   அதற்கான   அடித்தளம்   இந்த   சத்துபாணி வழங்கும் நிகழ்வாகவும் இருக்கலாம். ஏனெனில் இச்சத்து பாணி வழங்குவதனுடாக சிறுவர்களின்   உடல்   ஆரோக்கியம்   என்பதனை   விட   அவர்கள்   கற்றல் செயற்பாட்டிலும் இலகுவாகவும் திறமையாகவும் ஈடுபடமுடியும். இதனூடாக இச்சிறுவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியலாளர்களாகவும் தேக ஆரோக்கியம் ஆனவர்களாகவும் உருவாக்கப்படுவதனூடாக   காரைநகர்   சிறந்த   அபிவிருத்தியடைய   வாய்ப்பு   ஏற்பட சர்ந்தர்ப்பம் உருவாகின்றது. ஆதலால் இந்த சத்து பாணி மருந்தினை தொடர்ந்து மூன்றுமாத   காலத்திற்கு   முன்பள்ளி   மாணவர்களிற்கு   ஒவ்வொரு   நாளும்   வழங்க   வேண்டும். இதற்கான   முன்னேற்றம்   சுகாதார   பரிசோதகரால்   அவதானிக்கப்பட்டு அறிக்கையிடப்படும்   என்று   தெரிவித்ததுடன்   இப்பணியில்   ஈடுபடும் ஆசிரியர்களிற்கு   பாராட்டு   தெரிவித்ததுடன்   இதற்கு   நிதியுதவி   வழங்கிய   பிரித்தானிய காரை   நலன்புரிச்சங்கத்தினரையும்   பாராட்டுகின்றேன்   என்றும் மேலும்தெரிவித்தார்.

 

இத்தருணத்தில் காரைநகர் நலன்புரிச்சங்க நிர்வாகத்திற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறது. 

 

 

நன்றி,

நிர்வாகம் 

காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா)

DSC06632 DSC06633 DSC06634 DSC06635 DSC06637 DSC06640 DSC06641 DSC06642 DSC06644 DSC06645 DSC06646 DSC06647