Category: News Latest

News From karainagar

மரண அறிவித்தல், திரு.முருகேசு காசிப்பிள்ளை (உரிமையாளர், M.Kasippillai & Sons)(ஆயிலி, காரைநகர்) (வவுனியா) (கனடா)

Obituary Notice – M. Kasippillai

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும்  காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும்.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும்

அதன் செயற்பாட்டாளர்களுக்கும்  

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்

எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான

கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும்.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்  எதிராக நஸ்டஈடு கோரி திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் ஒன்ராறியயோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு மன்றத்தினதும் காரைநகர் மக்களினதும் நலன்களை நிலைநாட்டும் வகையில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்குத் தொடர்பில் தெளிவான புரிதலை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதும் அதற்குச் செலவு செய்யப்படும் நிதி தொடர்பில் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலை குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டியதும் மன்றத்தின் பொறுப்பும் கடமையுமாகும். கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டத்தில் இவ்வழக்குத் தொடர்பிலான உறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டியுள்ளது.

எனவே மேற்குறித்த அனைத்து விடயங்களுக்காகவும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தினையும் கலந்துரையாடலையும் நடாத்தி நடைபெறவுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது மன்றத்தினதும் அதன் செயற்பாட்டாளர்களினதும் நலன்களை மட்டுமல்லாது  காரைநகர் மக்களினதும் நலன்களை பாதிப்பதாகவுள்ளதால் கனடா வாழ் காரை மக்களை இதில் கலந்துகொண்டு மன்றத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்க உதவுவதுடன் மண்ணின் செயற்பாட்டாளர்கள் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி மண்ணுக்கான பணியில் ஈடுபடுகின்ற நிலையினை ஏற்படுத்த ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலமும் நேரமும்: 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

                              நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2024/2025 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2023ம், 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவிற்கான அறிவித்தல் (காலம், இடம்) கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                             நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி அதில் உள்ள படிவத்தை நிரப்பி Karainagar@gmail.com என்ற மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/02/CKCA-MEMBERSHIP-FORM-.pdf

 

 

மரண அறிவித்தல், திரு பாலசுந்தரம் சீவரத்தினம் (காரைநகர்) (உருத்திரபுரம்,கிளிநொச்சி) (Markham,Canada)

மரண அறிவித்தல்

திரு பாலசுந்தரம் சீவரத்தினம்

பிறப்பு : 04 MAR 1938                                                                                                       இறப்பு : 23 FEB 2024

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சீவரத்தினம் அவர்கள் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீவரத்தினம்(அதிபர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

MAK கந்தையா(தொழிலதிபர்), மீனாச்சி கந்தையா, யுகனேஸ்வரி கந்தையா தம்பதிகளின் அன்புமருமகனும்,

சந்திரதேவி பாலசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ்பாலசுந்தரம், பிரகாஷ் பாலசுந்தரம்(Honda Tech Businessman, Coffeetime Storeowner), காலஞ்சென்ற ஜெகதீஸ் பாலசுந்தரம், குமுதினி பாலசுந்தரம்(ஆசிரியை)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தினி ரமேஷ், சுகந்தி பிரகாஷ், கோகுலானந்தன் பசுபதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களானபாலசிங்கம், லீலாவதி(ஆசிரியை), ஜீவமணி(ஆசிரியர்), ஜெயமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்ற சந்திரேஷ்வேரி, சந்திரகுமார், சந்திரகுமாரி, சந்திரசூரியகுமாரி, சந்திரசூரியகாந்தி, சந்திரசூரியகுமார்(தொழிலதிபர்), சந்திரசூரியஇந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபா, பிரவீணா, ஆபிஷா, அதித்தியன், ஆஷா, சாருஜென், அனிஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 25 Feb 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:
Monday, 26 Feb 2024 6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Monday, 26 Feb 2024 7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Monday, 26 Feb 2024 10:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
சந்திரதேவி – மனைவி Mobile : +19055544386
ரமேஷ் பாலசுந்தரம் – மகன் Mobile : +16478712337
பிரகாஷ் பாலசுந்தரம் – மகன் Mobile : +14168981039
குமுதினி பாலசுந்தரம் – மகள் Mobile : +16479786011

 

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி அவர்களினால் கனடா-காரை கலாசார மன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைத் திருத்திக்கொடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருள்மொழியைத் தொடர்ந்து வந்த அதிபர் திரு.நல்லதம்பி கிஸ்ணபவன் அவர்களுடன் கனடா-காரை கலாசார மன்றம் தொடர்புகொண்டு திருத்த வேலைகளை முன்னெடுக்கவிருந்த தருணத்தில் அவர் இடமாற்றலாகிச் செல்ல புதிய அதிபராக திரு.கே.துஸ்யந்தன் பதவியேற்றிருந்தார். துஸ்யந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக காரை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் சமையலறையின் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரமம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இப்பணிக்கு சில அன்பர்களும் முன்வந்து நன்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு உதவிசெய்த கனடா-காரை கலாசார மன்றத்துக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிபர் திரு.துஸ்யந்தன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தினை கீழே பார்வையிடலாம்.

வவுனியா ஸ்ரீ சைவபிரகாச மகளிர் பாடசரலையில் பதினொராம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியும், காரைநகர் மணற்பிட்டியைச் சேர்ந்து திரு, திருமதி கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி தம்பதிகளின் புதல்வி செல்வி அபிராமி அவர்கள் இலங்கை லயன்ஸ் கழகத்தினால் நடாத்தப்பட்ட முப்பதாவது வருடாந்த கட்டுரைப் போட்டியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர் குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள். என்ற தலைபில் கட்டுரை எழுதி போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றமைக்கான பரிசளிப்பு நிகழ்வின்  நிழற்படத் தொகுப்பு.

போதைப்பொருள் துஷ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர்

குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள்.

போதைப்பொருள் பாவனை என்பது அவற்றை தினமும் பயன்படுத்தும் போது அவற்றிற்கு அடிமையாகும் நிலையினை குறிப்பதாகும். நாளடைவில் இப் பழக்கத்திற்கு அடிமையாகும் போது அவை இன்றி வாழமுடியாத நிலையை உருவாக்கும். இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில்  மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம் பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனால் ஒரு சமூகம் மொத்தமாக இழந்து போகக்கூடிய நிலைமை உருவாகின்றது.

போதைப்பொருள் மூலம் இளவயதில் அதன் தாக்கம் விளைவுகள் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றார்கள். எமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய சவாலாகவும் ஒரு சமூகம் மொத்தமாக இழந்து போகக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்துகின்றன. திரைப்படங்களில் மது பாவனையை மேற்கொள்ளுவது போல் சித்தரிக்கின்ற காட்சிகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று தாமும் அதேபோல் போதைப் பாவனையில் ஈடுபடுகின்றார்கள். போதைப்பொருள் என்ற வகைக்குள் அடங்குவன மதுபான வகைகள் (சாராயம், விஸ்கி, கள், வைன்), புகையிலை, கஞ்சா, அபின், சிகரட் போன்றவற்றை குறிப்பிடலாம். பஞ்சமா பாதகங்களுள் ஒன்றாக மதுவினை முன்னோர்கள் குறிபிட்டுள்ளனர்.

மாணவர்கள் இலகுவாக குறைந்த விலையில் கிடைக்கும் ஆபத்தான போதைப்பொருட்களை சிறு வயதில் நட்புவட்டாரத்தின் மூலம் பழகி பின்பு அதற்கு நிரந்தர அடிமையாகின்றார்கள். சமூக வறுமையுடன் கூடிய வாழ்க்கையை மறக்க குடி ஒரு தீர்வாக கையாளப்படுகின்றது. மது நாடு, சமூகம், குடும்பம் போன்றவற்றிற்கு பிரச்சினைக்கு வடிகாலாகின்றது. போதைப்பாவனை நீடித்தால் மாணவர்களின் கல்வி வாழ்க்கை மட்டுமன்றி எதிர்கால வாழ்கை மட்டுமல்லாமல் குடும்ப சூழலையும் சீர்கழிக்கும் சக்தி வாய்ந்த ஆபாத்தாக விளங்குகிறது. போதைப் பாவனையால் உடல் மட்டுமல்ல மனமும் பாதிக்கப்படுகின்றது சுயமரியாதை, சுயமதிப்பு உள்ள மனிதனாக வாழாமல் போகின்றார்கள். இது பயன்படுத்துபவர்களை மட்டுமல்ல அவர்களை சார்நத குடும்பத்தையும் பாதிக்கின்றது. இறுதியில் மது அருந்துபவர்களை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றது.

இளம் சமுதாயம் என்பது எதிர்கால சந்ததியினரைக் குறிக்கின்றது இப் பிரிவுக்குள் பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் கற்கையினை மேற்கொள்வோர், பகுதி நேர வேலைகளிலும், அல்லது முழு நேர வேலைகளில் ஈடுபடும் பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்கள் உட்பட பதினெட்டு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுப் பிரிவினர்களை குறிப்பிடலாம். நாட்டைக் கட்டியெழுப்பும் மிக முக்கிய பங்களிப்பு இன்றைய இளம் தலைமுறைக்கே உள்ள மிக முக்கிய கடமையாகும். அந்தவகையில் இன்றைய தலைமுறையினர் போதைப்பொருட்களானவை பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன் அவற்றினால் ஏற்படும் விளைவுகள் சமூக கட்டமைப்பை சீர்குலைப்பதிலும் முக்கிய பங்குவகித்து வருகின்றது. இளைஞர்களே சமூகத்தின் ஏதிர் காலத்தினை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதனால் போதைப்பொருள் பாவனையை வெற்றி கொள்வதில் அவர்களுடைய பங்களிப்பு இன்றியமையதாக உள்ளது.

இன்றைய இளம் தலைமுறைபோதைப்பொருள் பயன்படுத்துவதன்      அவசியம் என்ன? அல்லது காரணம் என்ன? என்று நோக்குவோமேயானால் பொழுது போக்கிற்காகவும், நண்பர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காகவும், நாகரீகமோகத்தாலும், சமூக ரீதியாக தங்களுடைய செல்வச் செழிப்பை அந்தஸ்தை காட்டிக்கொள்வதற்காகவும் குடும்ப சூழ்நிலை, வறுமைவற்புறுத்தல், சமூதாய பிரச்சினைகள், போர் இடம்பெயர்வு—–), போட்டிச்சூழலை எதிர்கொள்வதில் உள்ள பயம், தகாத நட்புகள், அதிக பணப்புழக்கம், காதல் தோல்வி, மற்றும் கவனிப்பாரற்றநிலை ஆகியவையே இளம் பருவத்தினரை போதைப் பொருட்களை நோக்கி இழுத்துச்செல்கின்றன.

தற்போது இளம் தலைமுறையாகக் கருதப்படுகின்றது மணவர்கள்  போதைப்பாவனைக்கு அடிமையாக மாறி வருவது பேசுபொருளாக மாறியுள்ளது மாணவர்கள் போதைவஸ்துக்களுடன் கைது செய்யப்படுவதும் போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் பத்திரிகைகளில் அன்றாட செய்திகளாக மாறிவிட்டன.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை”  என்ற பழமொழியும் ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையுமா? ”  இப் பழமொழிகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதாவது ஒருவரின் சிறுவயதில் பழகி வரும் பழக்கத்தினை மாற்றுவது என்பது கடினமான செயல்களாகும் அதாவது இதை பற்றி பெருந்தகையுடன் வள்ளுவர் கூறுகின்றார்    

                               “களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

                                குளித்தானைத் தீத்துரீஇ பற்று

அதாவது போதைக்கு அடிமையானவனை திருத்த முயல்வது குளத்தில் விழுந்தவனை விளக்கு கொண்டு தேடுதல் போலாகும். மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதற்கான பிரதான காரணமாக அமைவது அவர்களின் வீட்டுச்சூழல் வீட்டில் வசிக்கும் யாராவது ஒருவர் மதுபானம், புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவோராக இருந்தால் அவ்வீட்டில் வசிக்கும் சிறுவர்களும் அதனை பயன்படுத்த தூண்டப்படுவர் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே எவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள், யார் யாருடன் நட்பு கொள்கின்றார்கள் என கண்காணிக்க தவறி விடுகின்றார்கள் இதனால் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர்  இளம் வதான இளைஞர்களை இலக்கு வைத்து தமது வியாபாரத்தை மேற்கொள்ள இலகுவாக உள்ளது. இலங்கை புள்ளி விபரத்தினைக்களத்தின் தரவின்படி வடக்கு மாகாணத்திலேயே அதிகரித்த போதைப்பொருள் பாவனை குறித்து நிற்கின்றது இதற்கு காரணம் யுத்தம் வெளிநாட்டு பண அனுப்பல்கள் மற்றும் நாகரீகம் என்பனவாகும்.

  போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது உலகம் முழுவதும் 2.30கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக ஜக்கிய நாடுகளின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. நகர்ப்புறங்களில் போதைப்பொருள் பழக்கமானது ஆண்கள் மட்டுமன்றி பெண்களிடத்திலும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளான, சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்து கொள்வது, பிறரைத்துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.                            

உணவு உட்கொள்ள முடியாமல் வயிற்றுல் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது மூளையில் ஏற்படும் பாதிப்புக்களால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு,சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றது. உடலிலுள்ள விற்றமின்கள் அழிவடையச் செய்யும் கல்லீரல், இதயம் சார்ந்த பிரச்சினை, கொலஸ்ரோல், நீரிழிவு, இரத்த அழுத்தம்,சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றது.

போதைப்பாவனை நஞ்சுக்கு ஒப்பானதாகும் என்பதையும் வள்ளுவர் எடுத்துக் கூறியுள்ளார்.

                         “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்; எஞ்ஞான்றும்

                           நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

போதை பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே பாதிக்கப்படுகின்றனர். இதனால்  சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப்புறக்கணிப்பு என்பவற்றை சந்திக்க நேரிடும். இதனையே வள்ளுவர் கள்ளுண்ணாமை எனும் அதிகாரத்தில் உள்ள பின்வரும் குறட்பா விளக்குகிறது.

                        உட்கப்படா அர்; ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

                         கட்காதல் கொண்டொழுகு வார்

அதாவது என்றும் கள்ளின் மீது விருப்பமுடன் இருப்பவர் பிறர் முன் மதிப்பை இழப்பார் இழிவான செயலுக்கு வெட்கப்படவு மாட்டார்.

முன்னோரு காலத்தில் போதைப்பொருட்களை காணக்கிடைப்பது அரிதாக காணப்பட்டது. ஆனால தற்போது வீதிகளில் காணப்படும் சிறு கடைகள் தொடங்கி அனைத்து கடைகளிலும் மதுபானங்களும், சிகரட், புகையிலை போன்ற புகைத்தல் பொருட்களும் விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டத்திட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும் அதனை கட்டுப்படுத்துவது என்பது சவாலாக ஒன்றாகவே காணப்படுகின்றது.

பொது இடங்களில் மதுபானம் அருந்துவதோ சிகரட் புகைப்பதோ கூடாது என்பது பரவலாக கடைப்பிடிக்கப்படும் விதிமுறை ஆனால் அதனை புறக்கணித்து சமூக அக்கறையற்று பொது மக்கள் கூடும் இடங்களில் இத்தகைய தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை காணலாம். இதற்கெல்லாம் முதற்காரணமாக போதைப் பொருட்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்தினால் மாத்திரமே போதையற்ற சமூதாயத்தை உருவாக்க முடியும் சாதாரண மக்களின் வாழ்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது சினிமா சிலர் திரைப்படங்களில் குடிபோதை காட்சிகளை நாகரீகமாக கருதி போதைக்கு அடிமையாகின்றனர் படங்களில் அவ்வாறான காட்சிகளும் வைக்காது சமூக அக்கறையோடு நடந்து கொள்ளல் அவசியமாகும். போதைப்பொருட்களுக்கு அதிக வரியை விதித்தல், சட்டத்திட்டங்கள் கடுமையாக்குதல்  போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான வழியாகும்.

போதைப் பழக்கத்திற்கு ஒருவர் அடிமையாகிவிட்டராயின் அவர் நினைத்தால் அப் பழக்கத்திலிருந்து மீள எழுந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். பெற்றோர்கள் தம் பிள்ளைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் என அறிந்து கொண்டால் அவர்களை குற்றம் சொல்வதோ தண்டிப்பது கூடாது மாறாக அரவணைத்து இதனால் ஏற்படும் பின் விளைவுகளை எடுத்து கூறி அவர்களை அப்பழக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக வெளி கொண்டு வரவேண்டும் மறுவாழ்வு மையங்கள் ஊடாக முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் போதையிலிருந்து மீண்டுவர முடியும்.

நாடடிற்கும்; குடும்பத்திற்கும் கேடு விளைவிற்கும் போதைப் பொருட்களின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு அவற்றை முழுதாக ஒழக்க வேண்டும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்போருக்கு சிறை தண்டனை வழங்குவதோடு பதினெட்டு வயதிற்கு குறைவானோர்க்கு மதுபானம், சிகரட் போன்றவற்றை விற்பனை செய்வோருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் இவ்வாறு அரசோடு சேர்ந்து இளம் சமூதாயமாகிய நாமும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு போதைப் பாவனையற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்.

நாளைய தலைவர்களாக துறைசார் நிபுணர்களாக சமூதாயத்தையும் தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள மாணவர்கள் போதையின் பிடிக்குள் சிக்குவதற்கு சமூகத்திற்கு ஆபத்தானது எனவே மக்களை பாதுகாக்க வேண்டும். நமது வாழ்வு இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை இதை பாதுகாத்து பல வித நல்ல செயல்களை செய்து இறைவனுக்கும் நம்முடன் வாழும் மற்றவர்களுக்கும் பெருமை சேர்ப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேணடும்.

மரண அறிவித்தல், திரு.திருவாதர் கந்தசாமி (முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) (கருங்காலி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.திருவாதர் கந்தசாமி

அன்னை மடியில்: 01-04-1935                             ஆண்டவன் அடியில்: 02-02-2024

(முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்)

கருங்காலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.திருவாதர் கந்தசாமி(முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) அவர்கள் வெள்ளிக்கிழமை (02-02-2024)அன்று யாழ் மருத்துவமனையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திருவாதர் (முன்னாள் உரிமையாளர் திருவாதர் & Sons, K.K.S.றோட், யாழ்ப்பாணம்) -அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,

காரைநகர், ஆலடியைச் சேர்ந்த முன்னாள் நொச்சிகாமம் வர்த்தகர் காலஞ்சென்ற பொன்னுத்துரை-சரசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, மகாதேவன், யோகேஸ்வரன், மற்றும் சரோஜினிதேவி, தர்மராஜா(முன்னாள் உரிமையாளர் ராஜா குறோசரிஸ், கண்டி றோட், வவுனியா), புஸ்பதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(இளைப்பாறிய பிரதம கணக்காளர்), தவமணி, பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்), மற்றும் தனலட்சுமி, வேலுப்பிள்ளை(இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்), ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அன்னாரின் கருங்காலி இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை(04-02-2024) அன்று காலை 7:00 மணிக்கு கிரியைகள் தொடங்கி நடைபெற்று நீலங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
தர்மராஜா (தம்பி) 94(76) 332 6896
சறோஜினிதேவி(தங்கை) (613) 434 6404
புஸ்பதேவி (தங்கை) 94(77) 116 4674

 

காரைநகர் களபூமி கல்வி அபிவிருத்திக் கழகத்தின் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும் 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு களபூமி கலையகத்தில் நடைபெறவுள்ளது!

மரண அறிவித்தல், திரு அனோஜன் ஞானேஸ்வரன் (லண்டன்,பிரித்தானியா)

 

மரண அறிவித்தல்

திரு அனோஜன் ஞானேஸ்வரன்

தோற்றம் : 27 NOV 2002                                                                         மறைவு : 09 JAN 2024

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனோஜன் ஞானேஸ்வரன் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா மாணிக்கம் தம்பதிகள், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஞானேஸ்வரன்(நேசன்) நிறைமதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

அஸ்வின், அரவின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன்(முன்னாள் யாழ்/கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர்), விஜகலா – மகேஸ்வரன், பரமேஸ்வரன் – சுதர்சினி, விக்னேஸ்வரன் ஜெயசங்கரி, துவாரகேஸ்வரன் – சிவமலர், விநோதன் – வளர்மதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

திருமகள் – சுரேந்திரன், ராகுலன் – மாதங்கி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பவதாரணி, பவித்ரா, பிரணவன், நிலூக்சன், நீபன், நிதுரன், கோகுலன், நேத்திரா, லஷ்மி, சஜீவன், சரண் ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்டச் சகோதரரும்,

சேயோன், சயன், சகி, அருணன், செந்தூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:
Thursday, 01 Feb 2024 6:30 AM – 9:30 AM
Home 460 Staines RdTwickenham TW2 5JD, UK (Reserved car park at home base TW136EZ)

தகனம்:
Thursday, 01 Feb 2024 11:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:
நேசன் – தந்தை Mobile : +447984608971

அமரர்.ஞானேஸ்வரன் அனோஜன் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் காணிக்கை.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அமரர் கார்த்திகேயன் நாராயணன் (லவன்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

 

1ST

திரு.சபாரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

மரண அறிவித்தல் திரு.சபாரத்தினம் பாலசுப்பிரமணியம் (சயம்பு வீதி,வலந்தலை,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) (நாகம்மா கோவிலடி,தங்கோடை,காரைநகர்) (பிரான்ஸ்) (லண்டன்)

 

 

மரண அறிவித்தல்

திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்)

காரைநகர் தங்கோடை நாகம்மா கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்- லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று லன்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் விசுவலிங்கம் பாக்கியம் அவர்களின் அன்பு மகனும்,

நவரத்தினம் (தபால் உத்தியோகத்தர் ) நேசம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

உதயமாலா அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரமிலா,சபேசன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

தேவநாயகி (கெங்கா) (இலங்கை ), புஸ்பராணி (கிளி ) ( பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மனோக்குமார் (பிரான்ஸ்), குணம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 11.00மணி தொடக்கம் 13.30 வரை நடைபெறும்.
தகனம் செய்யப்படும் முகவரி Funeral Adress:
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd
London
NW7 1NB
Date: Tuesday 9th January 2024
Time: 11:00 – 13:30

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மாலா (மனைவி) லண்டன் 00447861715530
கிளி (சகோதரி) பிரான்ஸ் 0033-143785277 , – 0614017654
கெங்கா (சகோதரி) இலங்கை 0094770800970
தர்மன் (மைத்துனர்) லண்டன் 00447477 574494

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 27.12.2023 புதன்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 27.12.2023 புதன்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி மற்றும் புல்லாங்குழல் இசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/EQS5su7tXkdQSXct5

கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் ஆண்டுதோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா இம்முறை 21வது ஆண்டாக சென்ற டிசம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்று பலவகையிலும் வரலாறு படைத்து பெருவிழாக அமைந்துவிட்டது.

காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழா – காரைச் சிறார்களும் இளையோரும் தமது கலைப் படைப்புக்களினால் சபையோரை கட்டிப்போட்டிருந்த விழா – காரை.மண்ணுக்கு பெரும் புகழினைத் தேடித் தந்து கொண்டுள்ள காரை.மாதாவின் புதல்வனான முன்னாள் சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த விழா – கனடா-காரை கலாசார மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரை.உறவுகளின் நலன்பேணுகின்ற திட்டங்களுக்கு சிறப்பாக கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பேராதரவினை வழங்கிய விழா – காரை.மண்ணின் பெருமையினையும் மகிமையினையும் பிரபலிக்கின்ற இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆக்கங்கள், வரலாற்றுத் தகவல்கள், மண்ணின் நினைவுகளை சுமந்து வருகின்ற புகைப்படங்கள் உள்ளிட்ட மண் சார்ந்த பல்வேறு விடயங்களைத் தாங்கிய கனதியான சிறப்பு மலராக காரைவசந்தம் மலர் வெளியிடப்பெற்றிருந்த விழா – கலை உணர்வோடும் மண்ணின் உணர்வோடும் வருகைதந்த காரை.உறவகளினால் அரங்கம் நிரம்பி வழிந்த விழா – என அனைத்து அம்சங்களிலும் பொலிவுபெற்று வரலாறாகிய காரை.வசந்தத்தின் பெருவெற்றி குறித்து இவ்விழாவின் வெற்றிக்காக உழைத்த கனடா-காரை கலாசார மன்றமும் கனடா வாழ் காரை உறவுகளும் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் அடையமுடியும்.

இவ்விழாவின் சிறப்பினை இங்கே முன்னர் பதிவிடப்பட்டிருந்த காணொளி வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புவதுடன் தற்போது, விழாவின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்துகின்ற நூற்றுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/WmNefqfKeXyE7hST8

 

 

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்) காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம்.

 

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்)

காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும்

மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம்.

பகுதி 01ல் ஆங்கில மருத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இக் கட்டுரையில் ஆயள்வேத மருத்துவம் பற்றியும், ஆயுள்வேத மருத்துவர்கள் பற்றியும் கூறலாமென நினைக்கின்றேன். 1970க்கு முன்னர் காரைநகரில் ஆயுள்வேத மருத்துவமே முன்னிலை பெற்றிருந்தது எனக் கூறினால் மிகையாகாது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பரம்பரை வைத்தியர்களும் அவர்களிடம் இம் மருத்துவத்தைப் பற்றி நன்கு கற்று சேவை செய்தவர்களும், பிற்காலத்தில் சேவையாற்றியவர்களுமேயாகும். பிற்காலத்தில் சேவையாற்றியவர்கள் தம் மருத்துவ பரம்பரையினரை வளர்த்தெடுக்காததன் விளைவே இன்று மருத்துவ பரம்பரையினர் காரைநகரில் அருகி வருவதற்கு காரணமாயிற்று. இருப்பினும் 1970க்கு முன்னர் காலத்திற்குக் காலம் பல மருத்துவர்கள் தோன்றிச் சிறந்த சேவையாற்றி மறைந்துள்ளனர். அவர்களைப் பற்றியும் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இக் கட்டுரை வரையப்படுகின்றது. அவர்கள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றேன்.

01. கே. வி.ஸ்வநாதன் – ஆயுள்வேத மருத்துவர்
இவர் கிறீன் மருத்துக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். யாழ்குடாநாட்டில் பிரசித்தி பெற்ற மருத்துவராக இருந்த காரணத்தினால் பலரும் இவரது மருத்துவ சேவையைப் பெற்றதாக அறியப்படுகின்றது. வசதி குறைந்தவர்களுக்கு இவர் இலவச மருத்துவ சேவையை வழங்கினார். காரைநகர் தபாற்கந்தோருக்கு அருகாமையில் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார். இக் காலப்பகுதியில் பிறப்பு, இறப்புப் பதிவாளராகவும் பணிபுரிந்தார். மேலும் இவர் 1905 ம் ஆண்டு கல்லினால் ஆன முதலாவது கட்டிடத்தை காரைநகர் திருஞானசம்பந்தர் ஆங்கில வித்தியாலயத்துக்கு (தற்போதைய இந்துக்கல்லூரி) கட்டிக் கொடுத்தார் என முன்னாள் அதிபரும் ஆசிரியருமான ளு.மு. சதாசிவம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய விபரங்களை வைத்துப் பார்க்கும் போது இவர் 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆயள்வேத மருத்துவ சேவையை ஆரம்பி;த்துவிட்டார் என எண்ணத் தோன்றுகின்றது.

02. சுப்பிரமணியம் இராசசேகரம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் வலந்தலை புதுவீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வராக 07-08-1928 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பித்து அங்கேயே 1943ம் ஆண்டு தமிழில் சிரேஷ்டபாடசாலைத் தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைந்து பின்னர் காரைநகர் இந்துக்கல்லூரில் சேர்ந்து ஆங்கிலத்தில் கற்று சிரேஷ்ட தராதரப்பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்தார். அதன்பின்னர் தந்தையின் பரம்பரைத் தொழிலான ஆயுள்வேதத்தை அவரிடமிருந்து கசடறக்கற்று தேர்ந்தார். அத்துடன் நின்றுவிடாது தந்தையின் வைத்தியத்துறைக்கு உதவியும் புரிந்தார். இத் தொழிலில் நாட்டம் கொண்ட இவர் வேறு ஏடுகளையும், நூல்களையும் கற்று வைத்திய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
இந் நிலையில் 1956ம் ஆண்டு தனது மைத்துனியான சிவபாக்கியம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர் எப்பொழுதும் மற்றவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் தன்மை கொண்டவர். தனது அரவணைப்பு முறையினாலும்; சிறந்த வைத்தியமுறையினாலும் வாடிக்கையாளர் பலரைத் தன்னகத்தே கவர்ந்து கொண்டார். இதன் காரணமாகத் தனது மருத்துவத் தொழிலைக் காலையில் தனது இல்லத்திலும், மாலையில் மேற்கு வீதியிலுள்ள ஆலடியிலும் நடாத்தித் தனது வைத்திய சேவையை விஸ்தரித்துக் கொண்டது மட்டுமல்லாது அவசர நோயாளர்களை இரவு பகல் எனப் பாராமல் அவர்களின் இல்லங்களுக்கு சென்றும் பார்வையிட்டுக் குணப்படுத்தினார். மேலும் பிறப்பு, இறப்பு பதிவுச்சேவையையும் செய்த இவர் பொதுமக்கள் நன்மை கருதி முற்றிலும் இலவசமாகவே செய்து கொடுத்தார். இதனால் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் இவரின் உதவி நாடி வந்தனர். 1966ம் ஆண்டு இவர் சமாதான நீதவான் பதவி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சித்தமருத்துவ சங்க செயற்குழு உறுப்பினாராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், இவர் பல்லாண்டு காலம் காரைநகர் கிராமசபை அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அச் சங்கத்தின் உபதலைவராகப் பலமுறை தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் நின்றுவி.டாது சைவமகாசபை, ஈழத்துச் சிதம்பரம் அன்னதான சபை போன்ற பல சபைகளிலும் அங்கத்தவராக இருந்துள்ளார்.
(நன்றி கலங்கரை சிறப்பு மலர்)

03. கந்தப்பர் ஞானப்பிரகாசம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் 1912ம் ஆண்டு சின்னத்தம்பி கந்தப்பருக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய வதிவிடம் பெரியமணல் பகுதியாகும். இவரை காரைநகர் மக்கள் பரியாரி கந்தப்பொடி என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் இவர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்குச் சென்று 2 வருடங்கள் கல்விபயின்று வந்து ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். தனது தந்தை ஆயுள்வேத வைத்தியத்தில் ஈடுபட்டதன் காரணத்தால் தானும் அத்தொழிலையே செய்ய விரும்பி இத்தொழிலில் நன்கு பண்டித்தியம் பெற்றவரும், காரைநகர் களபூமியைச் சேர்ந்தவருமான ஆயுள்வேத வைத்தியர் சின்னப்பர் (செட்டி சின்னப்பர்) அவர்களி;டம் சென்று ஆயுள்வேத நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். 1932ம் ஆண்டிலிருந்து மேற்படி தொழிலை ஆரம்பித்து நடாத்தத் தொடங்கினார். முதலில் சிறிய கொட்டிலில் இத் தொழிலை நடாத்தி வந்தார் என அறியப்படுகின்றது. சிறுபிள்ளை வைத்தியத்தில் கைதேர்ந்தவர் என்பதுடன் வாதம், சலரோகம் என்பவற்றைக் குணமாக்கும் வல்லமையையும் கொண்டிருந்தார் எனவும் அறிய வந்துள்ளது. அவசர நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக இரவு, பகல் என்று பாராமல் பல குறிச்சிகளுக்கும் சென்று சேவையாற்றினார்.

04. கனகரத்தினம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் யாழ்ப்பாணம் கைக்குளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காரைநகர் ஆயிலிப் பகுதியில் தங்கியிருந்து வைத்திய சேவையில் ஈடுபட்டார். இவரும் அனுபவம் மிக்க வைத்தியராக இருந்த காரணத்தினால் வேதர்அடைப்பு முதல் பலகாடு வரையில் வசித்த மக்கள் இவரின் மருத்துவசேவையைப் பெற்றனர்.

05. இராமுப்பிள்ளை வேலுப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். இவருடைய தகப்பனார் இராமுப்பிள்ளையும் ஆயுள்வேத மருத்துவராக இருந்த காரணத்தினால் இவ் வைத்திய நுணுக்கங்களை ஐயந்திரிபுறக் கற்றுக்கொள்ள வசதியாக இருந்தது. களபூமி பொன்னாவளைப் பகுதியில் இவ்வைத்தியத் துறை இருந்த காரணத்தினால் களபூமி மக்கள் இவரி;டம் சென்று தமக்கான சேவையைப் பெற்றனர் செங்கமாரி வைத்தியத்தைக் குணப்படுத்துவதில் இவர் வல்லவராகக் காணப்பட்டார் எனக் கேள்விப்பட்டேன்.

06. பரியாரி செல்லர் (ஆயுள்வேத வைத்தியர்)
இவருடைய இயற்பெயர் செல்லர் என்பதாகும். இதனால் மக்கள் இவரைப் பரியாரி செல்லர் எனச் செல்லமாக அழைத்தனர். இவர் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவாளராகவும் கடமையாற்றினார். இருந்தாலும் இவரைப் பரியாரி என்றே எம்மக்கள் அழைத்தனர். இவரால் கட்டுகளுக்குப் போடப்படும் சேர்வை தனித்துவமானது. சிரங்கிற்குப் பூசப்படும் கெந்தக எண்ணெய் இவரின் பாரம்பரியச் சொத்து எனக்; கூறப்படுகின்றது. இவ் விபரங்கள் யாவும் காரைமான்மியம் என்னும் நூலில் வெளிவந்துள்ளது.
(நன்றி காரைமான்மியம்)

07. தியானேஸ்வரன் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர். இளவயதினராகக் காணப்பட்டாலும் ஆயுள்;வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவர். வாதநோயைக் குணப்படுத்துபவர். இவர் தோப்புக்காடு உட்பட அண்டியுள்ள பிரதேச மக்களுக்கு வைத்திய சேவையை வழங்கியவர்.

08. சண்முகம் (முறிவு நெரிவு வைத்தியர்)
இவர் காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். காரைநகரில் 50 வருடங்களுக்கு முன்னர் இவரைத் தெரியாதவர்கள் மிகக்குறைவு என்றே கூற வேண்டும். நீண்ட தாடி வைத்திருந்தார். எல்லோருடனும் சுமூகமாகப் பழகும் தன்மை கொண்டவர.; கள்ளங்கபடமற்றவர். இவர் முறிவு, நெரிவு வைத்தியத்தில் கைதேர்ந்வராகக் காணப்பட்டார். ஆரம்பகாலங்களில் இவர் வீடுகளுக்குச் சென்றே முறிவு, நெரிவு வைத்தியத்தைச் செய்து வந்தார்.
காலம் செல்லச்செல்ல இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தமையினால் தனக்கென ஒர் நிரந்தர இடம்தேடி இறுதியில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கட்டிடத்தொகுதயில் ஒருபகுதியைப் பெற்று அங்கிருந்து தனது வைத்திய சேவையைத் தொடர்ந்தார். மூளாய், சுழிபுரம், சித்தங்கேணி, வட்டுக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்தும் காரைநகர், பொன்னாலை போன்ற இடங்களிலிருந்தும் பெரும்பாலோனோர் வந்து இவரிடம் சேவையைப் பெற்றனர்.

09. பேரம்பலம் (மாடுகளுக்கான வைத்தியர்)
இவர் காரைநகர் பாலாவோடையைச் சேர்ந்தவர். இவரை காரைநகர் மக்கள் மாட்டுப்பரிகாரியார் என்றே அழைப்பர். நோயுற்ற மாடுகளின் நோயை இனங்கண்டு அதற்கேற்றவாறு வைத்தியம் செய்யும் வல்லமை படைத்தவர். இதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

10. நாகலிங்கம் கந்தையா (பரிகாரி குஞ்சர); – (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களவிலிப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இயற்பெயரை விட பரிகாரி குஞ்சர் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டில் இருந்தே வைத்தியத்தொழிலை செய்து வந்தார். மருத்துக் குளிசைகளையும், சூரணங்களையும் நோயின் தன்மையறிந்து நோயாளர்களுக்கு கொடுத்து வந்தார். அத்துடன் நின்றுவி;டாது குழந்தைகளுக்கான மாதாளம்பழச்சாற்று எண்ணெய், கிரந்தி எண்ணெய் என்பனவற்றையும் வழங்கி வந்தார். இவருடைய சமூகத்தொண்டுகள் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். உதாரணமாக திருவிழாக்காலங்களில் செடில் காவடியாடுபவரை தனது திறமை மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், பொது இடங்களில் அமைதியை நிலைநாட்டல் போன்ற விடயங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.

11. சோமநாதர் முருகேசம்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் செம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர். ஆயுள்வேத வைத்தியம் பற்றிக் கற்பதற்காக இ;ந்தியா சென்று அங்குள்ள மற்றாஸ் பகுதியில் 3 வருடங்கள் கற்றுத்தேர்ந்தார். பின்னர் இலங்கை திரும்பி வந்து 1932 ல் குருநாகல் நகரப்பகுதியில் ஆரம்பித்து அங்;கு 25 வருடங்களுக்கும் மேலாக தனது சேவையைத் தொடர்ந்தார். பின்னர்1960ம் ஆண்டு அச்சேவையை முடிவுக்கு கொண்டுவந்து பரந்தன் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டார். அத்துடன் ஒறியன்ற் இன்சூரன்ஸ் முகவராகவும் செயற்பட்டார் என அறியப்படுகின்றது.

12. பரிகாரி சின்னப்பு (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் திக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். 1890-1944 காலப்பகுதியில் காரைநகர், வேலணை, ஊர்காவற்றுறை தீவுப்பகுதியில் பிரசித்திபெற்ற ஆயுள்வேத வைத்தியராகக் காணப்பட்டார். பத்திய முறைகளுடனும் பக்கவிளைவற்றதுமான வைத்திய முறையையே இவர் கையாண்டு வந்தார். பத்தியமுறையில் இருவகைகள் இருந்தது.
(அ) மருத்துடன் கூடிய பத்தியமுறை
(ஆ) மருந்து முடிந்தவுடன் வரும் விடுபத்திய முறை
இவர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் கோவிலுக்கு வடக்குப்புறமாகவுள்ள காணியில் சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்திருந்தார். மற்றையது அவரது திக்கரை வீட்டில் அமைந்திருந்தது. இரு இடங்களிலும் ஓலையால் வேயப்பட்ட கொட்டில்களிலேயை வைத்திய சேவையை நடாத்தி வந்தார். நடக்கமுடியாத நோயாளிகள் பல்லக்கிலேயே காவி வரப்பட்டனர். தூர இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் மாட்டுவண்டில்களிலேயே வருகை தந்தனர். காலை வேளைகளில் இவரது வீட்டுப்படலையில் மாட்டுவண்டில்கள் நிரையாக நிற்குமாம். பரியாரி சின்னப்பர் வெளியில் யாராவது நோயாளிகளைப் பார்க்க செல்வதானால் குதிரை வண்டியிலேயே செல்வாராம் இவர்.
1. பொதுப்பரியாரி
2. முறிவு, நெரிவு வைத்தியம்
3. சித்தப்பிரமை வைத்தியம் என்பனவற்றை குணப்படுத்துவதிலும் வல்லவராகக் காணப்பட்டார்.
இவரிடம் இவரது மகன் மயில்வாகனம் ஆயுள்வேத வைத்தியம் கற்றுக் கொண்டிருந்தவேளை துர்அதிஷ்டவசமாக மரணமடைந்தார் பின்னர்; தனது மருமகனான(மகளின் கணவர்) வேலாயுதர் காசிப்பிள்ளைக்கு ஆயுள்வேத நூணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். இன்னொருவரான கந்தப்பர் ஞானப்பிரகாசம் அவர்களும் இவரிடமே ஆயுள்வேத வைத்தியம் பற்றிக் கற்றறிந்தார் என வேறு தகவல்கள் மூலம் அறியப்படுகின்றது.
(நன்றி நினைவுமலர் காசிப்பிள்ளை அம்பிகைபாகன்)

13. வேலாயுதர் காசிப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர் – ஆசிரியர்)
இவர் காரைநகர் களபூமி பொன்னாவளை கிராமத்தைச் சேர்ந்தவர். வேலாயுதர் சின்னக்குட்டி தம்பதியினருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் இவர் நான்காவது மகனாவார். 1926ம் ஆண்டு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்ட பொழுது கோவளத்தைச் சேர்ந்த பேப்பர் முருகேசு சுவாமிகளால் ஆசிரயராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தவர் எனக் கூறப்படுகின்றது. மேலும் பரிகாரி சின்னப்பர் அவர்களின் மகளான அன்னம்மாவை திருமணம் செய்து இல்லறம் நடாத்தினார். புரிகாரி சின்னப்பர் தனது வாரிசை உருவாக்கும் வகையில் மகனான மயில்வாகனம் அவர்களுக்கு ஆயுள்வேத நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்த துர்அதி;ஸ்டமாக அவர் மரணமடைந்தார். அதனால் கவலையடைந்த பரிகாரி சின்னப்பர் தனது மருமகனான காசிப்பிள்ளை அவர்களுக்கு ஆயுள்வேத நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார் என அறியப்படுகின்றது. திரு.காசிப்பிள்ளை அவர்கள் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் ஆயுள்வேதத்தொழிலைச் செய்து வந்தவேளை 1946ம் ஆண்டு மரணமடைந்தார்.

14. மகப்பேற்று மருத்துவிச்சி சின்னம்மா
இவர் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகக் கொண்டவர். காரைநகரில் ஆங்கில வைத்தியம் விருத்தியடையாத காலத்தில மகப்பேற்று வைத்தியரும் இல்லாத நிலையில் அவ்வூர் மக்கள் அல்லற்ப்பட்ட வேளையில் மருத்துவிச்சி சின்னம்மா அவர்களே அம்மக்களுக்குக் கைகொடுத்து உதவினார் என்றால் மிகையாகாது. இப்பொழுது உள்ளவர்களைப் போல குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சென்று இவ் வேலைக்காகப் படித்து பட்டம் பெற்றவரல்லர். மாறாகத் தனது சொந்த அனுபவத்தைக் கொண்டே மருத்துவிச்சி வேலையைச் செய்து வந்தார். தூய தமிழில் கூறுவதாக இருந்தால் இவர் ஒரு படிக்காத மேதை என்;றே கூற வேண்டும். 1940 களின் முற்பகுதியிலேயே இத் தொழிலை ஆரம்பித்திருப்பார் போல் தெரிகிறது. 1960 நடுப்பகுதி வரை இவரது சேவை நீண்டு சென்றது. வேதரடைப்பு மற்றும் கோவளம் முதல் பலகாடு வரை இவரின் சேவை வியாபித்திருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ வேதனை ஆரம்பித்ததுமே எம்மவர்கள் மருத்துவிச்சி சின்னம்மாவுக்கே முதலில் ஆள் அனுப்புவார்கள் அங்கு சென்றவர்கள் சின்னம்மாவுக்கு தகவல் கொடுத்ததும் உடனேயே அவர்கள் சென்ற சைக்கிளிலோ அல்லது மாட்டுவண்டியிலோ ஏறி வந்துவிடுவார். அக் காலத்தில் வேறு போக்குவரத்துச்சேவை எதுவும் இருக்கவில்லை.
குறித்த வீட்டுக்கு வந்ததும் பிரசவ வேதனையால் அவதியுறும் பெண்ணின் சுகப் பிசவத்திற்கான வழிமுறைகளைக் கையாள்வார். இவரின் கனிவான பேச்சால் அனைவரையும் கவரும் தன்மை கொண்டவர். இவர் முன்னெடுத்த பிரசவங்களில் பெரும்பாலானவை சுகப்பிரசவங்களாகவே காணப்பட்டன. வசதிபடைத்தவர்களில் சிலர் கரைநகருக்கு வெளியேயுள்ள மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை போன்ற தனியார் வைத்தியசாலைகளை நாடினர்.
குழந்தை பிறந்ததும் மருத்துவிச்சி பின்வருமாறு பாடிக் குழந்தையை வாழ்த்துவார் இதனை மருத்துவிச்சி வாழ்த்து என்பர்.

மருத்துவிச்சி வாழ்த்து
அரிசிப் பொரியோடும் வந்தீரோ தம்பி
அரிசிமலை நாடுங் கண்டீரோ தம்பி
நெல்லுப்பொதியோடும் வந்தீரோ தம்பி
நெல்லுமலை நாடுங் கண்டீரோ தம்பி
மிளகுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
மிளகு மலைநாடுங் கண்டீரோ தங்கம்
இஞ்சிப்பொதியோடும் வந்தீரோ தங்கம்
இஞ்சிமலை நாடுங் கண்டீரோ தங்கம்
உள்ளிப்பொதியோடும் வந்தீரோ தம்பி
உள்ளி மலைநாடுங் கண்டீரோ தம்பி
மஞ்சள் பொதியோடும் வந்தீரோ தம்பி
மஞ்சள் மலைநாடுங் கண்டீரோ தம்பி
உப்புப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
உப்பு மலை நாடுங் கண்டீரோ தங்கம்
காசுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
காசுமலை நாடுங் கண்டீரோ தங்கம்
கோச்சிவாழ கொப்பர் வாழ
பேத்தி வாழ பேரன்வாழ
பூட்டி வாழ பூட்டன் வாழ
கொம்மான் வாழ மாமி வாழ
குஞ்சியாச்சி வாழ குஞ்சியப்பு வாழ
பெரியாச்சி வாழ பெரியப்பு வாழ
ஊர் வாழ தேசம் வாழ
குருவுக்கும் சிவனுக்கும் நல்ல பிள்ளையாயிரு அயலும் புடையும் வாழவேண்டும். அன்னமும் சுற்றமும் வாழ வேண்டும் ஆய்ச்சியும் அப்புவும் வாழ வேண்டும். அம்மானும் மாமியும் வாழவேண்டும்
இப்படிப் பாடி முடிந்ததும் பிறந்தது ஆண்குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட வெளியில் நிற்கும் ஒருவர் காத்திரமான தடி ஒன்றை எடுத்து சத்தம் எழுமாறு வீட்டுக்கூரையில் தட்டுவார். இது அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை அறிவிப்பதாகும். இதனையே அக் காலத்தில் அவன் கூரைதட்டிப் பிறந்தவன் எனக் கூறுவர் பெண் பிள்ளை பிறந்தால் அப்படித் தட்டுவதில்லை.

கொத்திப்பேய் கலைத்தல் நிகழ்வு
குழந்தை பிறந்து 5ம் நாள் மாலைப் பொழுதில் கொத்திப்பேய் கலைத்தல் நிகழ்வு நடைபெறும். அன்று சோறும் கறிகளும் சமைத்து குழந்தை பிரசவித்த பெண்ணின் அறையில் படைப்பர். அதைத் தொடர்ந்து மருத்துவிச்சி சூள் ஒன்றைக் கொளுத்தி தாய் மற்றும் குழந்தையைச் சுற்றி தாயும் பிள்ளையும் சுகம் சுகம் என்னும் பாடலைப் பாடி அவர்களை வாழ்த்தி விட்டு அறையின் மூலைமுடுக்கெல்லாம் சூளுடன் சுற்றி செத்தைக்க பத்தைக்க நில்லாதை கொத்தியாத்தை என்னும் பாடலைப் பாடிக் கொண்டு மருத்துவிச்சி வெளியேறுவார். பிரசவம் நடந்த அறையில் இருந்து பாய் தலையணை முதலியவற்றை சுருட்டிக்கொண்டு அத்துடன் கொத்தி படையல்களையும் மருத்துவிச்சி வெளியேறுவார். போகும் வழியில் கொத்திக்கு விருப்பமான பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று பாய், தலையணை முதலியவற்றை ஒரு பாழடைந்த தனியான இடத்தில் எறிந்துவிட்டுச் செல்வார். கொத்திக்குப் படைத்த உணவுகளையும் அவ்விடத்திலேயே விட்டுவிடடுச் செல்வார். கொத்திப்பேய் வந்து குழந்தையை தூக்கிச் சென்றுவிடுமென அக்காலமக்கள் நம்பியதனாலேயே இக்கொத்திப்பேய் அகற்றல் நிகழ்வு நடைபெறக் காரணமாயிற்று.
மேற்கூறிய இக் கஷ்டமான சேவையை புரிந்த மருத்துவிச்சி சின்னம்மாவை எம் சமூகம் மறப்பதற்கில்லை.
மேலும் களபூமி மதவடியில் முத்தி என்ற ஒருவரும் பழைய கண்டிப்பகுதியில் வேறொருவரும் இச் சேவையில் ஈடுபட்டார்கள் என அறியமுடிந்தாலும் அவர்கள் பற்றிய முழு விபரமும் கிடைக்கவில்லை.

15. குமாரவேலு கந்தையா (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களபூமி வழுப்போடையைச் சேர்ந்தவர். மேலதிக விபரம் கிடைக்கவில்லை.

16. இராமநாதர் முத்துகுமாரு (ஆயுள்வேத வைத்தியர்)

இவர் விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாக கொண்ட இராமநாதர் பொன்னுப்பிள்ளை தம்பதியினரின்மூத்த புதல்வர் ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி பிறந்தார். இவர் பாடசாலை கல்வியினை முடித்து விட்டு ஆயுள் வேத மருத்துவ கல்வியை , மருத்துவ துறையில் இருந்த பருத்தித்துறை பொன்னுச்சாமி செட்டியாரிடமும் பின் கந்தர்மடத்திலும் , காரைநகர் களபூமி சின்னப்பு பரியாரியிடமும் திறம்படக் கற்றார். அகில இலங்கை சித்த மருத்துவ சங்கத்தில் சித்த வைத்தியராக 1941ல்அங்கீகரிக்கப்பட்டார். மேலும் சித்த வைத்திய மருந்து தயாரிப்பதற்க்கான அனுமதிப் பத்திரமும் பெற்றிருந்தார்.

இவர் பொது வைத்தியம், விஷகட்டு வைத்தியம், குழந்தை வைத்தியம் மற்றும் வாத நோயை குணப்படுத்துவதில் மிகவும் கைதேர்ந்த சித்த மருத்துவராகவிளங்கினார்.

கைநாடி பிடித்து பார்த்தும் கண்ணை பார்த்தும் நோயினை இனங்கண்டு அதற்கேற்ற வைத்தியம் செய்வதில் வல்லுனர். அத்துடன் ஒருவர் நோய் வந்து படுக்கையில் இருக்கும் போது அவர்களின் கைநாடி பிடித்து பார்த்துஆயுளை மிக துல்லியமாக கணித்து சொல்லுவதிலும் திறமையானவராக இருந்தார்.

இவர் பேதி மருந்து தயாரித்தல் , கிரந்தி எண்ணெய், மாதளம்பழ சாறு எண்ணெய் , தாளங்காய் போன்ற பலஎண்ணெய்களை தனது வீட்டிலேயே தாயாரிப்பார்.

இவரது வீட்டில் மருத்துவ ஓலைச்சுவடிகள், அகத்தியர் சித்த வைத்திய மாத இதழ்கள், வைத்திய அகராதி, மற்றம்ஆயுள் வேத சித்த மருந்துகள் தாயாரிக்கும் உபகரணங்களும் சில மூலிகைகளும் நாட்டின் அசாதாரண சூழல்இடப்பெயர்வு வரை காணப்பட்டது. இவர் 1970 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 19ஆம் திகதி இறைவனடிசேர்ந்தார்.

17. வேலாயுதப்பிள்ளை சபாபதிப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)

இவர் காரைநகர் செம்பாடு பகுதியைச் சேர்ந்தவர். 1950 முற்பகுதிக்கு முன்னர் அப்பகுதி மக்களுக்கும் அயல் கிராம மக்களுக்கும் ஆயுள்வேத வைத்தியம் செய்து பிரபல்யம் பெற்றிருந்தார். கைநாடி பிடித்து பார்த்து ஏற்பட்ட நோய் இதுதான் என்பதை கூறுவதில் வல்லவராகக் காணப்பட்டதுடன், அதற்கேற்ற மருந்துகளையும் கொடுத்து சுகப்படுத்தினார் எனச் சொல்லப்படுகின்றது. மருந்துகளை வீட்டிலேயே தயாரித்ததாகவும் அதற்கான உரல் போன்ற தளபாடங்கள் அவரது வீட்டில் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் மூலம் அறிய வந்துள்ளது.

18. அண்ணவி கணபதி (பாம்புக்கடி வைத்தியர்)
இவர் காரைநகர் விக்காவிலைச் சேர்ந்தவர். மேலும் 1950 களில் இருந்து பலருக்குப் பாம்புக்கடி வைத்தியம் செய்திருக்கிறார். இவரைப் பற்றிய மேலதிக விபரம் எடுக்க முடியவில்லை.

 

மக்களினதும் ஆயுள்வேத மருத்துவர்களின் தேவைக்காகப் பாவிக்கப்பட்டதும், காரைநகரில் காணப்பட்டவையுமான மருத்துவக் குணங்கள் அடங்கிய மூலிகைகள், மரங்கள் பற்றிய விபரம்:

                                மூலிகைகள்:
1. அறுகம்புல்                                    2. துளசி
3. தூதுவளை                                     4. ஆவாரம் பூ
5. நெருஞ்சில்                                    6. முடக்கொத்தான்
7. சாறணை                                      8. குப்பைக்கீரை
9. திருநீற்றுப் பச்சிலை                10. கரு ஊமத்தை
11. மூக்கிரட்டை                              12. எருக்கு
13. காரை                                          14. கற்றாழை
15. கொவ்வை                                  16. சீந்தில்கொடி
17. கற்பூரவல்லி                               18. நாயுருவி
19. சிறுகீரை                                     20. சிறுகுறிஞ்சான
21. குப்பைமேனி                             22. வட்டத்துருத்திக்கீரை
23. கீழ்க்காய் நெல்லி                    24. பிரண்டை
25. கையான் தகரை                      26. மொசுமொசுக்கை
27. இக்கீரி                                         28. கஞ்சாங்கோரை
29. காஞ்சோன்றி                             30. தொட்டாற்சுருங்கி
31. தேங்காய்ப்பூக்கீரை                32. நீர்முள்ளி
33. முசுட்டை                                     34. வாதமடக்கி
35. விடத்தல் இலை                         36. பச்சைப்பயறு
37. பருத்தி                                          38. வெள்ளரி
39. கத்தரிக்காய                              40. பூசணி
41. பாவல்                                           42. கொத்தவரை
43. கண்டங்கத்தரிக்காய்              44. சுண்டைக்காய்
45. வெங்காயப்பூ                             46. நந்தியாவட்டை
47. புதினா கீரை                              48. தயிர்வளை
49. வெண்டி                                       50. கோரைக்கிழங்கு
51. காட்டாமணக்கு                         52. குரக்கன்
53. நாகதாளி
இன்னும் சில இருக்கலாம்.

 

                மருத்துவகுணமுள்ள மரங்கள்:
1. ஆடாதோடை                                          2. பனை
3. எலுமிச்சை                                              4. நாவல்
5. கடம்பரம்                                                 6. மாதுளை
7. கருங்காலி                                               8. முள்முருக்கு
9. மரவள்ளி                                                 10. ஆலமரம்
11. நெல்லி                                                   12. முருங்கை
13. அகத்தி மரம்                                        14. வேம்பு
15. கருவேப்பிலை மரம்                          16. வாழை
17. அத்தி                                                      18. புளியமரம்
19. மாமரம்                                                  20. பப்பாளி மரம்
21. விளாமரம்                                             22. வில்வமரம்
23. கொய்யா மரம்                                    24. இலுப்பை மரம்
25. ஓதியமரம்                                             26. தென்னை
27. அரச மரம்                                              28. பூவரசு
29. இலந்தை மரம்                                      30. சண்டி
31. நொச்சி                                                   32. மாவிலங்கம் மரம்
33. கறிமுல்லை                                           34. குமிழ மரம்
35. செம்பரத்தை                                         36. ஆமணக்கு
37. சீதா பழம்
இன்னும் சில இருக்கலாம்.

 

மேற்குறிப்பிட்ட சில மரங்களின் பெயரடங்கிய இடங்கள் காரைநகரில் உள்ளன. அவையாவன:

1. இலுப்பையடி                       2. ஆலடி                 3. வேம்படி                      4. அரசடி
5. நாவலடிக்கேணி                6. கருங்காலி         7. ஆலங்கன்றடி            8. கள்ளித் தெரு
9. நாவற்கண்டி                       10. புளியடி            11. புளியங்குளம்           12. சந்தம்புளியடி
13. இலந்தைச்சாலை போன்றவையாகும்.

ஆரம்பகால ஆயுள்வேத வைத்தியர்கள் தத்தம் வாரிசுகளை உருவாக்கி மேற்படி வைத்தியத்தை வளர்த்தெடுத்தனர். பிற்காலத்தில் வந்தவர்கள் அவ்வாறு உருவாக்கத் தவறிவிட்டனர். அதன் விளைவாக இன்று காரைநகரில் ஆயுள்வேத மருத்துவம் நலிவடைந்து விட்டதென்றே கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மூலிகைகளும் மருத்துவ குணமுள்ள மரங்களும் அருகி வருகின்றன. இதற்குக் காரணம் புதுப்புது கட்டடங்கள் கட்டுபவர்களும் மூலிகைகள் பற்றி பட்டறிவு அற்றவர்களுமேயாகும்.

ஆயுள்வேத மருத்துவத்தை மேலோங்கச் செய்வது எம் ஒவ்வொருவரினதும் கடமை என்பதே எனது கருத்தாகும்.

தொகுத்தவர்:
தம்பையா நடராசா
கருங்காலி
காரைநகர்.

 

 

மரண அறிவித்தல், திரு.சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் (கரப்பிட்டியந்தனை, களபூமி, காரைநகர்) (மருதநகர் பரந்தன்)

 

மரண அறிவித்தல்

திரு.சங்கரப்பிள்ளை தர்மலிங்கம்

கரப்பிட்டியந்தனை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் மருதநகர் பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னமுத்து (பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நல்லம்மாவின் அன்புக் கணவரும்,

சிந்தியா,விஜயகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரத்தனதீபக் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்,அமிர்தலிங்கம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுந்தரி,ரஞ்சினிதேவி,காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற மகாலிங்கம்,சௌந்தரநாயகி,பரமேஸ்வரி,நல்லலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

காயத்திரி,சசிகரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

யோகேஸ்வரியின் அன்பு மாமனாரும்,

அஸ்வினின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 11.12.2023 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது பரந்தன்,கிளிநொச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநகர் கிளிநொச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை)

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்

திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 27ஆம் திகதி(27.12.2023) புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4..30 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) ஊடாக அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மின்னஞ்சல்: karainagar@gmail.com

            நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“காரை வசந்தம் 2023” (DEC 02, 2023)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- நமது வாழ்வும் வளமும் – பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

நமது வாழ்வும் வளமும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- காரைதீவு – பேராசிரியர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி

காரை தீவு

மரண அறிவித்தல், திருமதி மீனாட்சி சிவபாதசுந்தரம் (மலேசியா) (ஆயிலி,காரைநகர்) (வெள்ளவத்தை)

மரண அறிவித்தல், திருமதி.சோமசுந்தரம் அற்புதம் (விளானை,களபூமி,காரைநகர்)

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 21 வது காரை வசந்தம் எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது.

இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.

 

 

மரண அறிவித்தல், திருமதி நற்குணம் கனகமலர் (நீலிப்பந்தனை,காரைநகர்) ( Scarborough,கனடா) (நல்லூர்)

 

மரண அறிவித்தல்

திருமதி நற்குணம் கனகமலர்

பிறப்பு : 22 APR 1942                                                                              இறப்பு : 28 NOV 2023

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும், நல்லூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நற்குணம் கனகமலர் அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கந்தையாபிள்ளை(பிரபல வர்த்தகர் கந்தானைக் கந்தையா) நேசரத்தினம் தம்பதிகளின் சிரேஷ் புதல்வியும்,

காலஞ்சென்ற சரவணமுத்து நற்குணம்(முன்னைநாள் கந்தானை பிரபல வர்த்தகர்(Wimalendra Brothers)) அவர்களின் அன்பு மனைவியும்,

தனநாயகி, முத்துராசா, காலஞ்சென்ற தங்கராசா, தனலக்சுமி, புனிதவதி, சுந்தராம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலேந்திரன்(லண்டன்), மகேந்திரன்(கனடா), பாலேந்திரன்(கனடா), சிவபாக்கியம் ஆறுமுகம்(பெறாமகள்-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயலட்சுமி(லண்டன்), ரேணுகா(கனடா), குமுதினி(கனடா) ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,

ஜெயன்(லண்டன்), சுகந்த்(லண்டன்), ஆரனி(கனடா), அசான்(கனடா), தர்மியா-சாய்கஜன்(கனடா), ஸ்ரீரங்கா-பிருந்தா(கனடா), சரண்யா- சௌமியன்(கனடா), கேசியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது 396, காேயில் வீதி, நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
விமலேந்திரன் – மகன் Mobile : +447956206709
மகேந்திரன் – மகன் Mobile : +16473811573
பாலேந்திரன் – மகன் Mobile : +16479963991
சிவபாக்கியம் ஆறுமுகம் – பெறாமகள் Mobile : +94755304625

மரண அறிவித்தல், செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி) (தங்கோடை, காரைநகர்) (நீர்கொழும்பு)

 

மரண அறிவித்தல்

செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி)

தோற்றம் : 15/10/1956                                                                              மறைவு : 30/11/2023

தங்கோடை காரைநகரை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி) அவர்கள் 30-11-2023 அன்று காலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற செல்லத்துரை செல்லம்மா அவர்களின் மகளும்,

காலம் சென்ற கணேசபாக்கியம், மற்றும் கணேசன் , Dr.ஆனைமுகன்(நியூசிலாந்து) பராசக்தி(பேபி), நாகரத்தினம் (மணி), கங்காதேவி(கங்கா), மஹேஸ்வரி(மகேஷ்), ஞானேஸ்வரி (ஞானி), சிவனேஸ்வரி (சிவலி-கனடா), யோகேஸ்வரி (குஞ்சு-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 01/12/2023 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் W.S.Fernando & Son Funeral Directors 136 Chilaw Rd, Negombo 11500, Sri Lanka எனும் முகவரியில் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் பூதவுடல் தகனகிரியைக்காக நீர்கொழும்பு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

தகவல் : குடுமப்த்தினர்

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2023”

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற

நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

“காரை வசந்தம் 2023”

கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம்” எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக “காரை வசந்தம் 2023” கலை விழா பல்சுவைக் கலை நிகழ்வுகளைத் தாங்கி வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விழா அமைப்புக் குழுவினால் செய்யப்பட்டுள்ளது.

காரை வசந்தம் விழாவில் காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக இம்முறை காரை மண்ணின் பெருமையினை எடுத்தியம்பும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

21வது ஆண்டாக வீசவுள்ள காரை வசந்தம் சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம்.

                நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்