கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் ஆண்டுதோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா இம்முறை 21வது ஆண்டாக சென்ற டிசம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்று பலவகையிலும் வரலாறு படைத்து பெருவிழாக அமைந்துவிட்டது.

காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழா – காரைச் சிறார்களும் இளையோரும் தமது கலைப் படைப்புக்களினால் சபையோரை கட்டிப்போட்டிருந்த விழா – காரை.மண்ணுக்கு பெரும் புகழினைத் தேடித் தந்து கொண்டுள்ள காரை.மாதாவின் புதல்வனான முன்னாள் சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த விழா – கனடா-காரை கலாசார மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரை.உறவுகளின் நலன்பேணுகின்ற திட்டங்களுக்கு சிறப்பாக கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பேராதரவினை வழங்கிய விழா – காரை.மண்ணின் பெருமையினையும் மகிமையினையும் பிரபலிக்கின்ற இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆக்கங்கள், வரலாற்றுத் தகவல்கள், மண்ணின் நினைவுகளை சுமந்து வருகின்ற புகைப்படங்கள் உள்ளிட்ட மண் சார்ந்த பல்வேறு விடயங்களைத் தாங்கிய கனதியான சிறப்பு மலராக காரைவசந்தம் மலர் வெளியிடப்பெற்றிருந்த விழா – கலை உணர்வோடும் மண்ணின் உணர்வோடும் வருகைதந்த காரை.உறவகளினால் அரங்கம் நிரம்பி வழிந்த விழா – என அனைத்து அம்சங்களிலும் பொலிவுபெற்று வரலாறாகிய காரை.வசந்தத்தின் பெருவெற்றி குறித்து இவ்விழாவின் வெற்றிக்காக உழைத்த கனடா-காரை கலாசார மன்றமும் கனடா வாழ் காரை உறவுகளும் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் அடையமுடியும்.

இவ்விழாவின் சிறப்பினை இங்கே முன்னர் பதிவிடப்பட்டிருந்த காணொளி வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புவதுடன் தற்போது, விழாவின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்துகின்ற நூற்றுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/WmNefqfKeXyE7hST8