Category: KDB செய்திகள்

வன்னி யுத்தத்தின் போது தனது இரண்டு கண்பார்வைகளையும் இழந்த கந்தசாமி ஐங்கரன் அவர்களிற்கு காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக வழங்கிய நிதி

Ainkaran donation letter page 1Ainkaran's Donation Letter page 2Ainkaran's letter of thanks

காரை அபிவிருத்திச்சபையினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாணவர் நூலகத்தின் இதுவரை முடிந்த கட்டிடப்பணிகள்

காரை அபிவிருத்திச்சபையினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாணவர் நூலகத்தின் இதுவரை முடிந்த கட்டிடப்பணிகளின் படங்களை இங்கே காணலாம்.




காரைநகரில் அனைவருக்கும் சுகவாழ்வு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

doc moolaiகாரைநகரில் அனைவருக்கும் சுகவாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமொன்று காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெறவுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலை அதிகாரிகள் பிரிவும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைப் பிரிவும் காரைநகர் அபிவிருத்திச்சபையும் இணைந்து இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்வில் உயர் இரத்த அழுத்தம், சலரோகம், காசநோய், புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை, சக வயதினர்களுக்கான பரிசோதனைகள், போசாக்கு குறைவு தொடர்பான பரிசோதனைகள் போன்ற பலநோய்கள் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இங்கே கொலஸ்ரோல், சலரோகம் ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை 8மணிக்கு முன்னதாகவும் மதியம் 12மணிக்குள் உணவுகளையோ நீராகாரங்களையோ அருந்தாது வருகைதருமாறு வைத்திய அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

மேற்படி மருத்துவ முகாம் அண்மையில் இலண்டனில் அமரரான காரை நலன்புரிச்சங்கத்தின் முக்கிய ஸ்தாபர்களின் ஒருவரும் சங்கத்தின் கடந்த கால தலைவரும் சங்கத்தின் கடந்த 23வருட கால வளர்ச்சியில் தனது இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவருமான டாக்டர் சபாபதி சபாரட்ணம் அவர்களின் ஞாபகார்த்தமாக சங்கத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்படுகின்றது.

இதேவேளை ஊரிக்கிராமத்திலும் ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு இலவச வைத்தியசேவை முகாம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் காரைநகர் சுகாதார அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று அன்றைய தினம் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் காரைநகர் பிரதேசசபைச் செயலகம், காரை அபிவிருத்திச்சபை, சுகாதார வைத்திய அதிகாரிகள், மூளாய் கூட்டுறவு வைத்திய அதிகாரிகள், காரைநகர் சமூகமட்ட அமைப்புக்கள் ஆகியவற்றைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அமரர் சபாபதி சபாரத்தினத்துக்கு காரைநகரில் அஞ்சலி

அமரர் சபாபதி சபாரத்தினத்துக்கு காரைநகரில் அஞ்சலி

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டு இறைபதம் அடைந்த அமரர் டாக்டர் சபாபதி சபாரத்தினம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று 26.03.2013 கலாநிதி ஆ.தியாகராசா மத்தியமகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. காரைநகர் அபிவிருத்திச்சபைத் தலைவர் திரு.சிவாமகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சின் பிரதிச்செயலாளர் பி.விக்னேஸ்வரன் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் லண்டன் காரைநலன்புரிச்சங்கத்தலைவர் ப.தவராஜா காரை அபிவிருத்திச்சபையின் முன்னாள் தலைவர் க.சோமசேகரம் உட்பட பலரும் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி

காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி

 

புலம்பெயர் காரை அமைப்பின் ஆரம்ப நிறுவுனர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி சபாபதி சபாரட்ணம் அவர்களின் மறைவு குறித்து

பிரித்தானிய காரை நல்ன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலிப் பூக்கள்.

 

மேற்குலகிற்கான எம் புலம்பெயர் வாழ்வில், எமது தாய்க் கிராமமான காரைநகர் மண்ணின் வளர்ச்சி குறித்துச் சிந்தித்த மாமனிதரின் பேரிழப்பு இதுவாகும். 1980 களின் பின்னரான புலப்பெயர்வில் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட மூத்த சங்கமான இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர் சபா அண்ணா. இச்சங்கம் 1990ஆம் ஆண்டு மேமாதம் தோற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாக அதன் செல்திசையை தோற்றுவித்தவர். அடுத்த வந்த 12 ஆண்டுகளாக அதன் செயலாளராக எம் சங்கத்தைச் செயற்படுத்திய பெருமகன். தன் இறுதிநாள்வரை காரைநகரின் வளர்ச்சிக்காக உள்ளன்போடு செயற்பட்டவர். காரைநலன்புரிச் சங்கத்தின் தோற்றம் முதல் கடந்த 23 ஆண்டுகளாக அதன் செயற்பாடுகள் அனைத்தையும் நெறிப்படுத்திய பெருமைக்குரியவர். அவரின் நேர்மையும் கண்ணியமும் அளப்பரிய சகிப்புத்தன்மையும் என்றென்றும் போற்றுதற்குரியவை. கால் நூற்றாணடை அண்மிக்கும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் சாதனைகளாக கருதப்பட்டவை அனைத்தும் அவரின் எண்ணக் கருவூலத்தில் தோற்றம் பெற்றவை. அஞ்சலிகள் தெரிவிக்கும் இன்றைய நாளில் அவரின் செயற்திட்டங்களில் முக்கியமானவையாய் கருதப்படும் மூன்றினை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

 

முதன்மையானதும் முக்கியமானதும் காரைநகருக்கான நன்னீர் வழங்கல் செயற்திட்டம். இலண்டன் காரை மக்களின் நிதிப் பங்களிப்போடு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயற்படும் இத்திட்டம் சபா அண்ணாவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயலாற்றுமையிலும் முன்னெடுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு யூன் மாதம் நன்னீர் விநியோக கொள்கலன் இலண்டனிலிருந்து காரைநகருக்கு அனுப்பப்பட்டதன் மூலம் இச்செயற் திட்டம் ஒழுங்கு முறையாக நடத்தப்படுவதற்கான மூல்காரணியாய் இருந்தவர் சபா அண்ணா!

 

காரைநகரில் வாழும் மக்களின் சுகாதார நலன் குறித்த அத்தியாவசிய மருத்துவ செயற் திட்டங்களில் சபா அண்ணா ஓர் வழிகாட்டியாய் திகழ்ந்தவர். காரைநகர் எல்லைக்கு அப்பால் யாழ் போதனா வைத்தியசாலைக்கான புற்றுநோய் மருத்துவ செயற்பாடுகளுக்கும் தனிப்பட்ட முறையில் நிதி உதவிகளை வழங்கிய புரவலர் சபா அண்ணா. காரைநகர் வைத்தியசாலையின் தேவைக்கேற்ப மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தன் தனிப்பட்ட தொடர்புகளின் மூலம் செயற்படுத்தியவர்.

 

காரைநகர் வாழ் மாணவச் செல்வங்களின் மீதான சபா அண்ணாவின் அன்பும் ஆதரவும் அளப்பரிய ஒன்றாக இறுதிவரை இருந்து வந்துள்ளது. காரைநகரில் செயற்படும் அனைத்து பாடசாலைகளின் வளர்சியிலும் எவ்வித பாகுபாடுகளுமற்ற நலத் திட்டங்களை செயற்படுத்திய கண்ணியத்திக்குரியவர் சபா அண்ணா. சபா அண்ணா கல்வி கற்றதும் முதன்மைமிக்க காரைநகர் கல்விச்சாலையுமான காரை இந்துக்கல்லூரியை மையமாகக் கொண்ட அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து வைத்தவர். அண்மையில் உருப்பெற்ற இந்த அறக்கட்டளை சபா அண்ணாவின் மாமனாரும், கல்லூரியின் சரித்திர முக்கியத்துவமுடைய அதிபரும், காரை மக்களின் அரசியல் தலைவராகவும் இருந்த அமரர் ஆ.தியாகராசாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை என்ற பெயரில் அமைந்த இத்திட்டமானது சபா அண்ணாவின் தனிப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகும். இத்திட்டம் காரை மாணவர்களிற்கான புலமைப் பரிசில் நிதியை காலந்தோறும் வழங்கும் வகையில் நிரந்தர நிதி வைப்பீட்டைக் கொண்டதாகும். இற்றை வரையான காரை கல்வி நலத்திட்டங்களில் அளப்பரியதோர் திட்டத்தை உருவாக்கிய பொன்மனத்தின் சொந்தக்காரர் எங்கள் சபா அண்ணா.

 

புலம்பெயர் நாடுகளில் உள்ள காரை நலன்புரி அமைப்புக்களில் அறக்கட்டளை அமைப்பாக பதிவாகிய அமைப்பு, பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கமாகும். 2007 ஆம் ஆண்டு எமது சங்கத்தை ஓர் அறக்கட்டளை ஆக்கிய பெருமைக்குரியவர் சபா அண்ணா. காரைநகரில் அமைந்துவரும் காரை அபிவிருத்திச் சபை நூலகத்தின் உருவாக்கத்திற்கு ஆரம்ப காலம் முதல் பேருதவிகளை நல்கியவர். அண்மையில் மிகுந்த பெறுமதி மிக்க 32 தொகுதிகள் அடங்கிய கலைக்களஞ்சியத்தை அவர் நூலகத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத எழுத தொடரும் எல்லைகளுக்கு அப்பாலான அர்ப்பணிப்பாளன் எங்கள் சபா அண்ணா! தன் புலமை, கல்விப் பெருமை, சமூக மேன்நிலை ஆகிய அனைத்தையும் புறம்தள்ளி ஒர் அன்புமிக்க எளிய நண்பானாய் எம்மோடு ஊடாடிய ஓர் உயரிய மனிதனை இழந்து எம் சங்கம் வருந்துகிறது. அன்புடன் எம்மை அரவணைத்து வழிநடத்திய ஒரு மேய்ப்பனை நாம் இழந்திருக்கிறோம். ஒரு பிதா மகனை இழந்த பிள்ளைகளாக நாம் வருந்துகிறோம். விடைபெறும் சபா அண்ணாவை ‘பிதாமகன்’ என்றே போற்றி மனதிருத்தி, அன்னாரின் மறுவாழ்வின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேதா சுந்தரேஸ்வர பெருமானை வேண்டி! அன்னாரின் பிரிவால் துயருறும் காரை மக்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி

S8

கண்ணீர் அஞ்சலி

as11-1

கண்ணீர் அஞ்சலி KWS-UK,CKCA,SKDB,KWS-FR,AKCA

கண்ணீர் அஞ்சலி

Dr.SabaDr.சபாபதி
சபாரத்தினம்(குஞ்சு)
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட னுச.சபாபதி சபாரத்தினம்
21.03.2013 வியாழக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் கடந்த இரண்டு சகாப்தங்களாக சிறப்பாக
இயங்கிவரும் காரை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின்
ஸ்தாபகரில் ஒருவரும், பிரான்சு காரை நலன்புரிச் சங்க
ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அன்னார் காரைநகரின் கல்வி, பொரளாதாரம், அபிவிருத்தி
தொடர்பாக இறுதி மூச்சுவரை அயராது செயற்பட்டுவந்தார்.
அன்னாரது இழப்பு எமக்கும் காரைநகர் மக்களுக்கும்
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்.
நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து
சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப்
பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

காரைநகர் அபிவிருத்தி சபை
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013
புலம்பெயர் காரை அமைப்புக்களால் கூட்டாக திட்டமிடப்பட்டிருக்கும்இ ‘முதுசங்களைத் தேடி’ வருடாந்த நூல் வெளியீட்டுக் கருத்திட்டத்தின்  இரண்டாம் ஆண்டாகிய 2013 இல்  1967 ஆம் ஆண்டு வெளியான சைவமகாசபைப் பொன்விழா மலர் மீள்பதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இத்தகவலை பலரும் அறிந்திருப்பீர்கள் என நாம் நம்புகிறோம். பொன்விழா மலரின் முதலாம் பதிப்பில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளம்பரங்கள் குறித்த மலரில் இடம் பெற்றிருந்தன. முதல் பதிப்பில் இடம்பெற்ற விளம்பரங்களின் பக்கங்களில் தற்போது புதிய விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள நலன்விரும்பிகளும் புரவலர்களும் விளம்பரங்களை குறித்த நாட்டின் காரை அமைப்புக்களுக்கு தற்போது வழங்கி வருகிறார்கள். இவ்வறிவித்தல் விளம்பரம் தர விரும்பும் ஏனைய அனைவர்க்குமான பகிரங்க கோரிக்கையாக முன் வைக்கப் படுகிறது. விளம்பரம் தர விரும்பும் அன்பர்களில் இலங்கையில் இருப்பவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபைக்கும்  காரை சங்கங்கள் செயற்படும் நாடுகளில் இருப்போர் குறித்த சங்கங்களுக்கும் இது குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனைய நாடுகளில் இருப்போர் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தை அல்லது காரைநகர் இணையத்தினை  416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
நன்றிகளுடன்
முதுசங்களைத் தேடி நூல் வெளியீட்டுக் குழு.

Congratula​tions

Congratulations to the new Executive Committee. May you all work for the betterment of our people’s lives in Karainagr. You can bet on the full support of the Committee(2013) of Karainagar Development Society
 
God Bless you
 
WR
Siva T M

Broad Appeal to the Karai Diaspora including the Members of the various Karai Societies

Broad Appeal to the Karai Diaspora including the Members of the various Karai Societies

Dear All

As the current incumbent of the Presidency of Karainagar Abiviruthi Sabai aka Karainagar
Development Society (KDS) I spent most part of the year in my home village( changing into
a town by thick and fast). In this capacity I observe a few things which are heart bleeding.
Those of you who are lucky enough to uproot your elderly folks to foreign soils may not
know the fact that there are still many weak and old souls some of whom are suffering
from mental depressions. A tiny fraction of these people resort to suicide because they
don’t have any one to go to for medical and other help. Yes friends, I could observe this as I
spend a great part of my time in that environment. Nevertheless there are some scrupulous
individuals who approach various people and organisations abroad with the pretension of
helping the island and the islanders. These individuals are a minority and whilst accepting
the fact that they do some good deeds but their main motive is to help themselves as
well. So friends, in future if you want to help your folks including your old schools or other
establishments back home, first establish that they in fact need your help and then do it
yourselves without going through the self- appointed middle men. Alternatively there are
our Karai Socities around the world who have come up with a brilliant idea of working
under one roof with KDS at home as the co-ordinator of the various projects, whether
helping an individual or an establishment and they publish all their good deeds on the Karai
Websites.

Incidentally, as I mentioned earlier we need to pay some attention to the old and the sick.
As an immediate concern, Dr Swaminathan approached me the other day and asked if KDS
could assist in providing some accommodation for the mentally disturbed people so that
they could get clinical treatment locally. These are the old and the sick people who are left
behind because they don’t have any one to look to or neglected by their folks abroad.

You and your children are doing a fantastic job in raising the funds for the needy back home.
In this respect your children take active part in staging cultural programs etc. During my
sojourn as secretary of Karai Welfare society (UK) I observed that some of our youth may
not be good at taking part in the cultural activities but they possess immense administrative
and other talents which are yet to be tapped. So why don’t we organise a “Grand Parents
Day” and get these youngsters organise funds and help you to undertake such projects.

So friends, this is an idea only and to implement I am here to devote my time (not all of it as
KDS takes substantial part of it). I take full responsibility for all of the contents in this article
and if anyone out there is offended I apologise in advance.

Yours truly

Siva. T. M

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்களுக்கு

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்களுக்கு

24-02-2013 அன்று தங்கள் மன்றத்தின்; நிர்வாகக் குழுவினைத் தெரிவு செய்யவுள்ளீர்கள். வேட்பாளர்கள் பட்டியலைப் பார்க்கும் பொழுது அனைவரும் தகுதியும் பொறுப்புணர்ச்சியும்; உள்ளவர்களாக அறியக்கூடியதாகவுள்ளது. அவர்களில் தாங்கள் தெரிவு செய்பவர்கள் நமது ஊர் செழிக்க, நம்மவர்கள் நலமுடன் வாழக் கனடா காரை கலாச்சார மன்றம் மூலமாக தத்தம் சேவைகளை வழங்க வேண்டும் என வாழ்த்தி வரவேற்கவுள்ளோம்.

இங்ஙனம்
காரைநகர் அபிவிருத்திச் சபை சார்பாக
அதன் நிர்வாக சபை(2013)

காரைஅமெரிக்கர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

காரைஅமெரிக்கர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

KA

Karainagar (also) Needs You

அன்புடையீர்
தங்கள் தாய் மண்ணில் வசிப்பவர்கள் கடந்த கால    சூழ்நிலையிலிருந்து தலைநிமிர்நது வாழத்தொடஙிகியுள்ளனர். ஆனாலும் அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம் தண்ணீர் வசதி போன்றவற்றில் இன்னும் பல அடிப்படைத் தேவைகளில் பற்றாக் குறைகள் உள்ளன. அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு தங்களைப் போன்ற புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களின் ஆதரவும் உதவியும் அத்தியாவசமாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் காரை நலன் கருதி ஒரு சங்கம் தொடங்கியிருந்தீர்கள். ஆனால் அது வளராமல் முளையிலேயே படுத்துள்ளது. அதற்குப் பத்துயிர் ஊட்டி நமது ஊருக்குச் சேவை செய்யும் வண்ணம் செயற்படுமாறு வேண்டுகின்றேன்.
தற்சமயம் இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, பிரானஸ், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் நம்மூரவர்கள் காரை நலன்புரிச் சங்கங்கள் அமைத்துப் பல அளப்பரிய சேவைகள் புரிந்து வருகின்றனர.; இச்சங்கங்கள் மூலமாக ஊருக்கு உதவுவது மட்டுமன்றி புலத்தில் வாழும் எமது வருங்காலச் சந்ததியினருககுக்; கலை கலாச்சாரம் போன்றவற்றையும் ஊக்குவித்து வருகின்றனர். தாங்களும் இவ்வழியினைப் பின்பற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
மேற்கூறிய சங்கங்கள் ஊரில் இயங்கும் காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் தொடர்பு கொண்டு அவ்வப்பொழுது வேண்டிய உதவிகளை வழங்குகின்றனர். ஆகவே உலகில் பலம் பொருந்தியுதும் வளம் படைத்துள்ளதுமான நாட்டில் வதியும் தாங்களும் இம்முயற்சியில் பங்கு பற்ற வேண்டுகின்றேன். நாற்பது வருடங்களுக்கு மேலாக வெளி நாட்டில் வசித்தபின் தற்சமயம் வாய்மண்ணின் வாசனையினை நுகரும் இன்ப அனுபவத்தில் இம்மடலை வரைகின்றேன்.
அன்புடன்
சிவா தி மகேசன்;
காரை அபிவிருத்திச் சபை

காரைக் கதம்பம் 2013 – காரை அபிவிருத்திச்சபையின் வாழ்த்துக்கள்

இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் நடாத்தும் காரைக் கதம்பம் – 2013ற்குக் காரை அபிவிருத்திச் சபையின்   சார்பாக அதன் நிர்வாக சபையின் வாழ்த்துக்களும் வேண்டுகோள்களும்

இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த கதம்ப நிகழ்ச்சி பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெறுவதையிட்டு காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக சபை தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது. இவ்விழாவிற்குத் திருமதி வீரமங்கையினைப் பிரதம விருந்தினராக அழைத்ததையிட்டும் மகிழ்ச்சி அடைகின்றது. அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகள் வருடாவருடம் தொடரந்து நடைபெறுவதையிட்டும் பூரிப்படைகின்றது.

06.01.2013 அன்று தெரிவு செய்யப்பட்ட எமது நிர்வாக சபையினை வாழ்த்தி வரவேற்ற. எமது சகோதர சங்கங்களுக்கும் தனி அன்பர்களுக்கும் இத்தால் எமது நன்றியினை அறியத் தருகின்றோம்.

அடுத்ததாகப் புலம் பெயர்ந்துள்ள நம் காரை மக்களுக்குச் சில தாழ்மையான வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம். இதுவரை தாங்கள் செய்த உதவிகளுக்கும் தான தர்மங்களுக்கும் தலைவணங்குகின்றோம். கடந்த மூன்று சகாப்தங்களாக நமது ஊர்மக்களில் பலர் பிற ஊர்மக்களைப் போன்று பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள். அவர்களில் சிலர் தன்னம்பிக்கையுடனும்  சுயமுயற்சியினாலும் வாழ்க்கையில் முன்னேறியது மட்டுமன்றி தங்களைச் சார்ந்தவர்களுக்கும் தாம் பிறந்த மண்ணிற்கும் தம்மாலியன்றவரை உதவி செய்து வருகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ  எவ்வளவு முயற்சி செய்தும் முன்னேற வழி தெரியாமல் தவிக்கின்றனர். இவர்களை ஆங்கிலத்தில் கூறுவதாயிருந்தால் ‘Those who can not help themselves’ என்று கூறலாம். இவர்கள் இங்குள்ள வசதி படைத்தவர்கள் மூலமாகவும் புலம் பெயர்ந்த உங்கள் மூலமாகவும் தங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புகளுடனுள்ளார்கள், அவர்களின் நிலை அவர்களால் உருவாக்கப் பட்டதல்ல. சூழ்நிலை காரணமாக அவர்கள் அந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வதுதான் எமது சங்கங்களின்  தலையாய கடமை என்று தாழ்மையுடன் கூற விரும்புகின்றோம்.

இவ்விடத்தில் வீரத்துறவி விவேகானந்தரினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியினதும் வார்த்தைகளை நினைவு கூறுவது நல்லது என்று கருதுகின்றேன்.. விவேகானந்தர்  ‘நான்கு தகுதியுள்ள இளைஞர்களைத் தாருங்கள் நவீன இந்தியாவை உருவாக்குவேன்’ என்றார். நான்கு இளைஞர்களல்ல நாற்பது இளைஞர்களை மனம் வைத்தால் நமது சங்கங்கள் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் உருவாக்க முடியும். இதற்காகத்தான் கென்னடியின் வாரத்தைகளையும் நாம் உட்கொள்ள வேண்டும். அதாவது ‘Ask not what the country can do for you, ask what you can do for the country’ இவ்வார்த்தையினை எமது ஊருக்குப்பயன்படுத்தி ‘காரைநகர் உங்களுக்கு என்ன செய்யும் என்று கேட்காதீர்கள், நீங்கள் காரைநகருக்கு என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள். இந்தக் கேள்விக்கு நீங்கள் வழங்கப்போகும் நல்ல பதிலில் தான் காரைநகரை மீண்டும் ஒரு சிறந்த ஊராக உருவாகமுடியும்.

ஆகவே அன்புள்ளங்களே விவேகானந்தர் விரும்பிய இளைஞர்கள் நம்மிடையே நம் சிறுவர் சிறுமிகளில் உள்ளார்கள். நாம் செய்யப்போகும் உதவிகள் மூலமாக அவர்களை வெளிக்கொணர முடியும். ஆகவே கல்விக்கு முக்கியத்துவம் தந்து இளம் சமுதாயத்தினை ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றேன். எமது சங்கங்கள் மூலமாக உதவி செய்யாவிட்டாலும் ஒருவர் தான் கற்ற பாடசாலைக்கு நேரடியாக உதவி செய்ய விரும்பினால் அதற்கேற்ற ஒழுங்குகளை நாம் இங்கிருந்து செய்து தருவோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

காரை நலன்புரிச் சங்கம் கல்விக்கோட்டத்தினூடாக மாணவ மாணவிகளுக்குத் தேவையான சில பதிப்புக்களை  இலவசமாக வழங்குகின்றனர். அதற்குரிய செலவினை நமது சங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதனை அறிவீர்கள். இதற்காகத்  தொடர்ந்து பணம் கொடுப்பதிலும் பார்க்கத் தேவையான Duplex Printing Machine ஒன்று கல்விக் கோட்டத்திற்கு வழங்கினால் அவர்கள் மூலமாக நம் மாணவர் சமுதாயம் மேன்மேலும் பயனடையும் என்பது நிச்சயம். இதுவிடயமாகக் கல்விக்கோட்ட அதிகாரிகள் இருவருடன் கலந்தாலோசித்த பொழுது அவர்கள் குறிப்பிட்ட Machine ரூபா ஐந்து இலட்சம் மட்டில் முடியுமென்று கூறினார்கள். இந்த உதவியினைத் தனி நபரோ அல்லது சகோதர சங்கங்களுடன் சேர்ந்து உங்கள் சங்கமோ அவசியமெனக் கருதி அன்பளித்தால் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி முழங்கினான். காரைநகரைப் பொறுத்த வரையில் உணவுப் பஞ்சம் முன்னணியில் இல்லை. ஆனால் கோடைகாலத்தில் நம்மக்கள் எதிர்கொள்ளும்  தண்ணீர்ப் பிரச்சினையோ தாங்கமுடியாததாகவுள்ளது. இதனை நான் நேரில் அனுபவித்தவன் என்ற வகையில் கூறுகின்றேன். மக்களின் தவிப்பினைக் கண்கூடாகச் சென்ற கோடையில் கண்டிருக்கின்றேன்.  இந்நிலையினை ஓரளவு தணிப்பதற்கு இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் அளப்பரிய பங்களித்துள்ளது என்பதனை அனைவரும் அறிவர். இதற்காகத் திரு நடராஜா அவர்களின் ஈடுபாட்டினையும் வழிநடத்தலையும் ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியாது. அவர் தண்ணீர் விநியோகப் பொறுப்பினைத் தன்னந்தனியாகத் தன் தோழ்களில் சுமந்து மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடாத்தியுள்ளார். அவரது பணிகளுக்குக் காரை அபிவிருத்திச் சபை மனதார நன்றி தெரிவிப்பதுடன் உலகிலுள்ள நமது அனைத்து மன்றங்களும் நன்றிக்கடன் பட்டுள்ளன என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் விநியோகத்தினைப் பொறுத்த வரையில் திரு. நடராஜா அவர்கள் வகுத்த வழியினைப் பின் பற்றி ஓரளவில் வெளியுதவியின்றி எமது நிர்வாக சபை மேற்கொள்ளும் என்று கருதுகின்றேன்.
அடுத்ததாக சுகாதாரம் சம்பந்தமாக ஆஸ்பத்திரிக்குத் தேவையான வசதிகளை தனித்துவமாகவும் சங்கங்களுடாகவும் பல உதவிகளைச் செய்துள்ளீர்கள். அவற்றின் பயன்களை மக்கள் அனுபவித்து வருகின்றார்கள என்பதை மகிழ்ச்சியுடன தெரிவித்துக் கொள்கின்றோம். தற்சமயம் தாங்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க 15 தகுதியுள்ள மக்களுக்கு cataract operation மற்றும் ஆஸ்பத்திரிக்கு tiles பதிக்கும் வேலைகள் சம்பந்தமாக ஒழுங்குகள் நடைபெறுகின்றன.
இங்குள்ள வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள சிலர் அத்தியாவசியமான உதவிகளைக் கேட்டு வருகின்றார்கள். நாம் பொறுப்பேற்ற பொழுது கஜானாவில் நிதியிருக்கவில்லை. அதன் காரணமாக அவர்களுக்குத் தற்சமயம் உதவி செய்ய முடியாமல் இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளோம். ஊதாரணமாக ஒரு பெண்மணி தனது கணவர்  dialysis treatment  பெறுவதாகவும் அவரைப் பராமதிப்பதற்கு உதவமுடியுமா என்றும் கேட்டிருந்தார். மேற்கூறிய காரணத்தினைச் சொல்லி அவருக்கு உதவி செய்ய முடியாமல் இருப்பதைத் தெரிவித்துள்ளோம். இப்படியான ஜீவன்களுக்கு அன்புள்ளங்கள் தனிப்பட்ட முறையில் உதவ முன்வந்தால் தெரிவிக்கவும். நாமும் எம்மால் இயன்ற ஒத்துழைப்பினை நல்குவோம்.

அடுத்ததாக நூலகம் அமைந்து வருவதை அறிவீர்கள். அதற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் நிலை வருவதை உணருகின்றேன். இப்பணியில் நேரடியாக ஈடுபட்டிருக்கும் தங்கள் பொருளாளர் திரு ரவீந்திரன் நடராஜா போன்றவர்கள் மேல் நாடுகளில் சற்று கூடுதலாக முயற்சி செய்து நிதி திரட்டினால் வரவேற்கப்படும். உள் நாட்டிலுள்ள வர்த்தகத் தனவந்தர்களையும் அணுகுவதாகவுள்ளோம் இத்திட்டத்தினை மிகவரைவில் நிறைவேற்ற எம்மால் இயன்ற அளவு ஒத்துழைப்பினை வழங்கவுள்ளோம்..

சுருங்கச் சொல்லின் எமது சகோதர சங்கங்களின் ஆதரவுடன் முக்கியமான இவ்வருடச் செயல் திட்டம் மூன்ற வகையானது:

1.    கல்வி சம்பந்தமாக எமது சக்திக்கேற்ப உதவிகளை வழங்குதல்
2.    தண்ணீர் பிரச்சினையினைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது
3.    சுகாதாரம் வைத்தியசாலை சம்பந்தமான பணிகளைத் தொடர்ந்து செய்வது
4.    சங்கங்கள் ஊடாக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் ஊருக்கு உதவ முன்வருபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்

United we stand என்ற வாக்கியத்திற்கிணங்க நாமெல்லோரும் சேர்ந்து எமது சிறிய ஆனால் சிறப்புமிக்க பிரதேசத்தினைக் கட்டியெழுப்புவோம் என்று கூறி எமது நிர்வாக சபைக்கு இச்சந்தர்ப்பத்தினை வழங்கியதற்கு நன்றிகூறி மீண்டும் தங்கள் விழா வெற்றிகரமாக நிறைவேற திண்ணபுரத்தான் முதல் திக்கரையான் வரை வணங்கி வாழ்த்துகின்றோம்.

காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக சபை 2013 சார்பாக சிவா தி. மகேசன்

வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம்.

வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம்.
 
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காரைநகர் காரை அபிவிருத்தி சபையை வழிநடத்தி நாம் முன்னெடுத்த பல வேலைத் திட்டங்களிலும் முன்னின்று உதவிய
எமது கடந்த கால நிர்வாகத்தினருக்கு எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் புதிதாக பதவி ஏற்றிருக்கும் திரு.சிவா மகேசன் தலமையில்லான புதிய நிர்வாகக் குளுவிற்க்கும்
எமது மனமார்ந் வாழ்த்துக்களை கூறி வரவேற்கின்றோம்.
 
பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்கம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்
[contact-form-7 id=”165″ title=”Contact form 1″]

 

காரைநகர் – காரை அபிவிருத்தி சபை வருருடாந்தபொதுக் கூட்டம் இனிதே நிறைவேறியது

காரைநகர் – காரை அபிவிருத்தி சபை வருருடாந்தபொதுக் கூட்டம் இனிதே நிறைவேறியது
இன்று பிற்பகல் காரை அபிவிருத்திசபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 70 க்கும் மேற்ப்பட்ட மக்களுடன் இனிதே நிறைவேறியது.
மேற்படி கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.
விபரங்கள் பின்வருமாறு :-
தலைவர் : திரு.த.சிவாமகேசன்( இளைப்பாறிய கணக்காளர் – பெரிய பிருத்தானியா )
உப தலைவர் திரு. V .முருகமூர்த்தி (அதிபர், யா-யாழ்டன் கல்லூரி அதிபர் )
செயலாளர் : திரு . திருப்புகலூர்சிங்கம்(காரை வட கிழக்கு கிராமசேவகர் )
உப செயலாளர் : திரு.வே.சபாலிங்கம்
பொருளாளர் : திரு. ந .பாரதி (காரை பிரேதேச சபை சமுகத்தி அலுவலக உத்தியோகஸ்தர்)
நிர்வாசபை உறப்பினர்கள்
1) Dr .S .நடராஜா
2) திரு.க . நேத்திரேநந்தம்
3) திரு. நா .பாலகிருஷ்ணன்
4) திரு. இ .சண்முகராஜா
5) திரு.இ.ஜெயராமன்
6) திரு வி.வைகுந்தவாசன்
7) திரு.வை. நாகராஜா
8) திரு. யோ.கேதீஸ்வரன்
9) திரு. சா. சிவருபன்
10) திரு. சோமசுந்தர குருக்கள்

காரைநகர் அபிவிருத்திச் சபையின் மாணவர் கௌரவிப்பு விழா – 2012

கனடா காரை கலாசார மன்றம், இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றும் காரைநகர் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா.

Continue reading

காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012

காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012
காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 9.00மணிக்கு நடைபெறவுள்ளது. க.சோமசேகரம் தலமையில் நடைபெறும் இன்நிகழ்வில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளதால் அனைத்து அங்கத்தவர்களையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு காரைநகர் அபிவிருத்திச்சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்