Tag: அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர்

பரிஸ் பிரான்சில் ”சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச. அருணாசலம்” என்ற நூலின் அறிமுக விழா

                                           பரிஸ் பிரான்சில் 
                       ''சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த 
             திரு.ச. அருணாசலம்'' என்ற நூலின் அறிமுக விழா

    மேற்படி நூல் அறிமுகவிழா 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை 3.00 மணியளவில் விழா பரிஸ் அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.  

    TRT தமிழ்ஒலி வானொலி அறிவிப்பாளர் திரு. சிறீஸ்கந்தராசா அரசரட்ணம்  அவர்கள் நிகழ்ச்சிகளை கொண்டு நடத்தி சிறப்புரையும் வழங்கினார். TPR உரிமையாளர் திரு. திருமதி தேவமனோகரன் அவர்களும்  மற்றும் பல பெரியார்களும்; மங்கல விளக்கேற்றினார்கள். செல்வி தீபினி மதன்ராஜ் அவர்கள் பஞ்சபுராணம் ஓதினார்.  செல்வி கரிகரணி தெய்வேந்திரம் தமிழ்மொழி வாழ்த்து பாடினார். பிரான்ஸ் தேசீய கீதத்தை செல்வன் பிரவீன் தேவமனோகரன் பியானோவில் வாசிக்க, செல்வன் பவித்திரன் இராசரத்தினம் வயலினில் வாசித்துச் சிறப்பித்தனர்.  திரு. தேவமனோகரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. செல்வி புளோரா மகேஸ்வரன், செல்வி ஹம்சாயினி பாஸ்கரன் ஆகியோர் அதனை வழங்கினார்கள்.  பரிஸிலுள்ள லாகோனா சிவன்கோயில் பிரதம குருக்கள் சிவத்திரு சுதன் சர்மா அவர்கள் ஆசியுரை வழங்கினார் 

    நூலை மீள்பதிப்புச் செய்த கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச்செல்வர் தி. விசுவலிங்கம் அவர்கள் தலைமை உரையையும், நூல் அறிமுகத்தையும், செய்து வைத்தார்.  தமிழ் ஆர்வலர், வானொலி அறிவிப்பாளர் திரு, இளையதம்பி தயானந்தா அவர்களும், பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கப் போஷகர் திரு. தவராசா பரமனாதர் அவர்களும் லண்டனில் இருந்து வருகை தந்து கருத்துரை வழங்கினார்கள். திரு. இலங்கையர் கனகசபை அரியரத்தினம், பேராசிரியர் முனைவர் சச்சிதானந்தம் ஆகியோர் நூல் ஆய்வுரை செய்தனர்.  தமிழ்மணி செல்லையா தேவன் அவர்கள் கருத்துரை வழங்கினார். அருணாசல உபாத்தியாயர் பற்றி கவிதை ஒன்றினை ஆசிரியை திருமதி செல்வநாயகி துரைராசசிங்கம்  அவர்கள் எழுதினார்.  அதனை செல்வி மதன்ராஜ் அவர்கள் பண்ணோடு பாடினார். திருமதி செல்வநாயகி துரைராசசிங்கம் அவர்கள் பாவினை தலைவரிடம் கையளித்தார். ஸ்வரங்கள் பாடசாலை மாணவிகள் அமைதி நடனம் வழங்கினார்கள்.  நூல் வழங்குதலும் கௌரவிப்புகளும் இடம் பெற்றன.  நூலின் முதற் பிரதியை திரு. திருமதி திரவியநாதன் அவர்கள் பெற்றுச் சிறப்பித்தனர். மற்றும்  விழாவிற்கு வருகை தந்த அன்பர்கள் பலரும் நூலினைப் பெற்று ஆதரவு வழங்கினர். "புலம்பெயர் நாடுகளில் ஈழத்து அறிஞர்களின் அறிவு வலுவடைகின்றதா? அல்லது நலிவடைகின்றதா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற்றது.  திருமதி லினோதினி சிறீ, ஆசிரியை திருமதி வாணி தியாகராசா இருவரும் வலுவடைகின்றது எனவும், திருமதி கேமமாலினி, செல்வி தேன்மொழி ஆகிய இருவரும் நலிவடைகிறது எனவும் வாதிட்டனர்.  அம்மன் கோயில் பிரதம குரு. பிரேம் குருக்கள் அவர்கள் தலைமை வகித்து பட்டிமன்றத்தை நடத்தினார்.  திருமதி வ. விசுவலிங்கம் அவர்கள் நன்றி உரை கூறினார். வாழ்த்து, மங்களம் பாடி 8:00 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.  இரவு உணவு வழங்கப் பெற்றது..

 

 படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/karainagar-s-arunasalam-upathiyar-book-release-france

காரைநகரில்”சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு. ச. அருணாசலம்” என்ற நூலின் அறிமுக விழா

    காரைநகரில்"சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த 
    திரு. ச. அருணாசலம்" என்ற நூலின் அறிமுக விழா

    மேற்படி நூல் அறிமுகவிழா 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை 2.30 மணியளவில் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகாவித்தியாலய நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடு நடைபெற்று மகான் அருணாசலம் அவர்களின் திருவுருவப்படம் மேள தாளத்துடன் அன்பர்கள் புடைசூழ நடராசா ஞாபகார்த்த மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டு  நிகழ்வுகள் ஆரம்பமானது.  இந் நிகழ்வுகளுக்கு ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருமான   திரு. ப. விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். திரு. ச. அருணாசலம்  அவர்களின் பேத்தி திருமதி சிவநாயகி சுப்பிரமணியம் அவர்களும், பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களும் மற்றும் பலபெரியார்களும் மங்கல விளக்கேற்றினார்கள்.  வித்தியாலய மாணவிகள் பன்னிரு திருமுறை ஓதினார்கள்.  பேராசிரியர் வே. தர்மரத்தினம் அவர்கள் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து தலைவர் உரை இடம் பெற்றது.  யாழ்ற்றன் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. ந. பரமசிவம், தற்போதைய அதிபர் திரு. வே. முருகமூர்த்தி, மகாவித்திலாலய ஆசிரியர் திரு. இ. இராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் வே. குமாரசுவாமி அவர்கள் வாழ்த்துப்பா வழங்கினார்.

    நூல் அறிமுகத்தை, நூலை மீள்பதிப்புச் செய்த கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் தி. விசுவலிங்கம் அவர்கள் செய்து வைத்தார். செஞ்சொற் செல்வர் திரு. ஆறு. திருமுருகன் அவர்கள் நூல் ஆய்வுரை செய்தார். முன்னாள் அதிபரும் மணிவாசகர் சபைத் தலைவருமான பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களும், யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு. அ. மனோகரன் அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள்.  சித்தாந்தரத்தினம் திரு. க. பத்மானந்தன் அவர்கள் கருத்துரை வழங்கினார். இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தினர் கையளித்த  திரு. எஸ். கே. சதாசிவம் அவர்களுக்கான விருதினை, திரு. தி. விசுவலிங்கம் அவர்கள் வழங்கினார்.   திரு. எஸ். கே. சதாசிவம் அவர்கள் நன்றி உரை கூறினார்.  மாலை 5:30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது. 

அவுஸ்ரேலியா சிட்னி நகரில் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் அறிமுக விழா

Arunasala-CoverSTAKCA

அவுஸ்ரேலியா சிட்னி நகரில் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் அறிமுக விழா


அன்புடையீர்,
உங்கள் அனைவரையும் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


இடம்: Reg Byrne Community Center, Cnr Fyall Avenue & Darcy Road, Wentworthville, NSW.
காலம்: Sunday 6th March, from 6pm to 7:30pm


மேலதிக விபரங்களிற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பத்திரத்தைப் பார்க்கவும்.


அன்புடன்
செயற்குழு
அவுஸ்திரேலியா காரை கலாச்சார சங்கம்

கல்வி என்னும் கருவி மூலம் சைவப்பயிர் வளர்த்த ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (1864-1920) அவர்களின் சரிதம் அடங்கிய "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்" என்ற நூல் அறிமுகவிழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெற உள்ளது. 


இவ்விழாவினை அவுஸ்ரேலியா காரை கலாச்சாரச் சங்கம், கனடா சைவசித்;தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.


இவ்விழாவில் வரவேற்புரையை திரு.வனதேவா அவர்களும் அறிமுகவுரையை சிவநெறிச் செல்வர் திரு. தி.விசுவலிங்கம் அவர்களும் ஆய்வுரைகளை திரு.கணேசன் செல்வராஜா, சித்தாந்தரத்தினம் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன், திரு.பஞ்;சாட்சரம் ஆகியோரும் இலங்கையில் சைவத்தமிழர்களின் வரலாறு பற்றிய சிறப்புரையை கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களும் நிகழ்த்த உள்ளனர். 


விழாபற்றி அவுஸ்ரேலியா காரை கலாச்சார சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழத்திருநாட்டிலே கல்வி வளர்ச்சிக்கு  வித்திட்டும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் சைவ உணர்வாளர்களை இணைத்துச் சைவச் சூழல்சார் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நினைவாகவும், 


நமது கலாச்சாரம் வேற்றுமதத்தவரால் சிதையுண்டபோது அதை சிதையவிடாது போராடிய ஓர் உத்தமரின் நினைவாகவும், 


நாடு கடந்து நிற்கும் நாம், நமது கலை, கலாச்சாரம் எவ்வாறு நாம் வாழும் நாட்டில் காப்பாற்றப்படவேண்டும் என்பதை சிந்திக்கும் முகமாகவும், 


வேற்று நாட்டவர் நம்மை ஆண்ட காலத்தில் நமது மதம், மொழி, கலை, கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தை ஓரு மீள்பார்வை செய்வதற்காகவும்;, இந்நூல் அறிமுக விழா அவுஸ்ரேலியாவில் நடைபெற உள்ளது. 


கலை, கலாச்சார சமய ஆர்வலர்கள், வேற்று நாட்டவரின் ஆட்சியில் நமது மொழி, சமயம், கலாச்சாரத்தின் தாக்கத்தை உணர்ந்தவர்கள், தமிழ் அபிமானிகள் அனைவரையும் இந்நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.


பணிவன்புடன், 
நிர்வாகக் குழு
அவுஸ்ரேலியா காரை கலாச்சாரச் சங்கம்


விழாபற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.

Book release in Sydney_Flyer (1)-page-001

கொழும்பு மாநகரில் நடைபெற்ற காரைநகர் மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும்

Arunasala-CoverST

கொழும்பு மாநகரில் நடைபெற்ற காரைநகர் மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும் 


கல்வியாளர்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும் மிக முன்னோடியான காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (1864-1920) அவர்களின் சரிதம் அடங்கிய "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்" என்ற நூல் அறிமுகவிழா 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அன்றைய தினம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் அமரத்துவம் அடைந்த 96ஆவது நினைவு தினமும் என்பது சிறப்பானதாகும்.

 


இந்த நூல் வெளியீடு பற்றி வீரகேசரி ஞாயிறு சிறப்பிதழிலில் இடம் பெற்ற சிறப்புக் கட்டுரையை இங்கே தருகின்றோம். 

சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்
நூல் வெளியீட்டு விழா ஒரு கண்ணோட்டம்

                                                                                                                        – ஆ.முருகேசு – 


சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூலை 2ஆவது பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் வெளியிட்டு வைத்தார். 


இந்நூலின் முதற் பிரதியை காரைநகர் சைவ மகா சபையினர் 1971ஆம் ஆண்டு வெளியிட்டு இருந்தனர். இந்த நூல் ஆசிரியர் அல்வாயைச் சேர்ந்த சி.கணபதிப்பிள்ளை ஐயர். இவர் அல்வாய் வாசர் வல்வைச் சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியர் ஆவார். 


ஆறுமுகநாவலருக்கு அடுத்ததாக சைவத்திற்கும் தமிழுக்கும் பல தொண்டுகள் புரிந்து பல சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த பெருமை அருணாசலத்திற்கு உண்டு என்றால் மிகையாகாது. 


அரங்கம் நிறைந்த அறிஞர்களாக தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மங்கள விளக்கை குணரத்தினம் தம்பதியினரும் மற்றும் பல சைவப் பெரியார்களும் ஏற்றிவைத்து விழாவை ஆரம்பித்தனர். 


முதலில் பஞ்சபுராணம் ஓதலினை வை.கணேசலிங்கம், சங்கீத ஆசிரிய ஆலோசகர் மிகவும் பக்தி பூர்வமாக நடத்தினார். பின்பு உயிர்நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வரவேற்புரையை திருமதி.வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அன்புநெறி திங்கள் இதழாசிரியர் நடத்தினார். 


தலைமை உரையை கலாபூசணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை, கொழும்பு திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மைய பேராசிரியர் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் நடத்தினார். 


நூலின் அறிமுகவுரையை பதிப்பாசிரியர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம், கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சுவாரஷ்யமாக நிகழ்த்தினார். அன்றைய காலத்தில் சைவ மாணவர்கள் தங்கள் உயர் கல்வியைக் கற்பதற்கு மிகவும் கஷ்டங்களை அநுபவித்தபோது அருணாசலம் ஊக்கமும் சகலவிதமான உதவிகளையும் செய்து அம்மாணவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்கினார் என மிகவும் சிறப்பாக விசுவலிங்கம் விளக்கினார். 


நூலாய்வை வவுனியா தமிழ்ச்சங்கத் தலைவரும் காரைநகர் கம்பன் கழகத் தலைவருமான தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்தினார். 17.01.1920 இல் இறைவனடி சேர்ந்த அருணாசலத்தைப் பற்றி 17.01.2016 இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா இடம் பெறுவதும் ஒரு வரலாற்றில் போற்றப்படக்கூடிய விடயமாகும் எனவும் இவர் காரைநகருக்கும் காரைநகர் மக்களுக்கும் அக்காலத்திலேயே புகழையும் பெருமையையும் ஈட்டிக் கொடுத்தவர் என தமிழருவி த.சிவகுமாரன் குறிப்பிட்டிருந்தார். 
நூலாய்வின் ஒரு பகுதியை கோப்பாய் ஆசிரிய கலாசாலை உப-அதிபர் திரு.ச.லலீசன், எளிய தமிழில் விளக்கினார். அருணாசலம் கிறிஸ்தவ ஆசிரிய கலாசாலையில் பரீட்சை முடிவுற்றதும் அவர்களின் சட்டதிட்டங்களை மீறி நடு இரவிலேயே வெளியேறி ஒரு புரட்சியை நிகழ்த்தியவர்.


அருள்மொழி அரசி வசந்தா வைத்தியநாதன் உரையாற்றுகையில் ஆறுமுகநாவலர், அருணாசலம், க.இராசரத்தினம்(இந்துபோட்) இவர்கள் மூவரும் யாழ்ப்பாண இந்து மக்களின் மூன்று கண்கள் என்று பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வர்ணித்ததாகக் கூறினார். அத்துடன் மனத்துணிவுடன் இவர் இக்காரியங்கசை; செய்வதற்கு ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சௌந்தராம்பிகை அம்பாள் சமேத சுந்தரேஸ்வரப் பெருமானின் கருணையே ஆகும் என தனது உரையில் கூறினார். 


இந்நூலின் முதற்பிரதியை எஸ்.வி.முருகேசு, குணரத்தினம் தொழிலதிபர், இ.கணேசமூர்த்தி, திருமதி. இரத்தினேஸ்வரி திருவாதிரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பத்திலே தானே வந்து எய்தும் பராபரமே இது தாயுமானவர்களின் கூற்று. இதற்கிணங்க இந்த நூலின் இரண்டாம் பதிப்பை செய்த கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவர் விசுவலிங்கத்தின் பணிகள் மேலும் தொடர இறைவன் துணைபுரிவாராக.  

Colombo Book Release Virakesari Feb.142016Web

 


விழாவில் எடுக்கப்பட்ட படங்களையும் கீழே காணலாம்

சிட்னியில் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுகம்

Arunasala CoverST

சிட்னியில் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுகம்

 

அன்புடையீர்,

உங்கள் அனைவரையும் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இடம்: Reg Byrne Community Center, Cnr Fyall Avenue & Darcy Road, Wentworthville, NSW.
காலம்: Sunday 6th March, from 6pm to 7:30pm

மேலதிக விபரங்களிற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பத்திரத்தைப் பார்க்கவும்.

அன்புடன்
செயற்குழு
அவுஸ்திரேலியா காரை கலாச்சார சங்கம்

Book-release-in-Sydney

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/02/Book-release-in-Sydney.pdf

 

 

கொழும்புத் தமிழ்ச் சங்க மகாமண்டபத்தில் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த காரைநகர் மகான் திரு ச. அருணாசலம் ஆசிரியரின் நூல் வெளியீடும் நினைவு தினமும்

கொழும்பு மாநகரில் காரைநகர் மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும்

Arunasala-CoverST

கொழும்பு மாநகரில் காரைநகர் மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும் 


கல்வியாளர்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும் மிக முன்னோடியான காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (1864-1920) அவர்களின் சரிதம் அடங்கிய "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்" என்ற நூல் அறிமுகவிழா 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் அமரத்துவம் அடைந்த 96ஆவது நினைவு தினமும் ஆகும். 


இவ்விழாவில் வாழ்த்துரையை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உயர்திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களும் அறிமுகவுரையை சிவநெறிச் செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களும் ஆய்வுரைகளை அருள் மொழி அரசி திருமதி.வசந்தா வைத்தியநாதன் அவர்களும் காரைநகர் கம்பன் கழக அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை உபஅதிபர் திரு.ச.லலீசன் அவர்களும் சிறப்புரையை சித்தாந்தரத்தினம் க.பத்மானந்தம் அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.  


நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்பட வேண்டியவர் என நாவலர் பெருமானின் தமையனார் மகன் திரு.த. கயிலாயபிள்ளை அவர்களால் பெருமையுடன் பேசப்பட்டவர் எமது காரைநகர் தந்த பெருமகன் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் ஆவார். 


இவர் காரைநகரில் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் ஆங்கிலப் பாடசாலை(பின்னாளில் காரைநகர் இந்துக்கல்லூரி, கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயம்) வியாவில் சைவ வித்தியாசாலை போன்ற பாடசாலைகளின் தோற்றத்திற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள பல ஊர்களில் சைவப் பாடசாலைகளின் தோற்றத்திற்கும், கோப்பாயில் முதல் சைவ ஆசிரியர் கலாசாலையின் தோற்றத்திற்கும் காரணமானவர். 


இவரின் தூண்டுதலின் பேரிலேயே "இந்துபோட்" இராசரத்தினம் அவர்கள் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தை தோற்றுவித்து, நாவலரினதும் அருணாசலம் உபாத்தியாயரினதும் சைவத்தமிழ்க் கல்விப் பணிகளைத் தொடர்ந்தார். 


இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தவத்திரு ஆறுமுகநாவலர் (1822-1879), திரு.ச.அருணாசலம்(1864-1920) திரு.சு.இராசரத்தினம் (1884-1970) ஆகிய மூவரையும் யாழ்ப்பாணத்தின் மூன்று சைவசமயக் கண்கள் எனப் பெருமையுடன் போற்றிக் கூறியுள்ளார். 


இத்தகைய காரைநகர் பெரியாரின் வரலாற்றினை அவரது மாணவராகிய திரு.சி.கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் எழுதினார்கள். இந்நூல் காரைநகர் சைவமகா சபையின் வெளியீடாக 1971 இல் வெளியிடப் பெற்றது. இந்நூலின் மறுபதிப்பு காரைநகரைச் சேர்ந்த கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச் செல்வர்.சிவத்திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் பெருமுயற்சியில், கனடாவில் 25.07.2015 இலும், சுவிற்சலாந்தில் 13.09.2015 இலும், இலண்டனில் 22.11.2015 இலும், காரைநகரில் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் 20.12.2015 இலும் சிறப்பாக வெளியிடப் பெற்றது. 


கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நினைவு தினத்தில் நடைபெற உள்ள இந்த நூல் அறிமுக விழாவில் சைவத்தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு ஒவ்வொருவரும் சிறப்புப் பிரதியைப் பெற்று ஆதரவு நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றனர் கொழும்பு நூல் வெளியீட்டுக் குழுவினர். 


விழாவின் நிகழ்ச்சி நிரல் அடங்கிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.  

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/01/Colombo-Book-Release-Notices.pdf

 

Colombo Book Release Notices-page-001Colombo-Book-Release-Notices0002
 

 

 

மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு காரைநகரில் கல்வியாளர்கள் எடுத்த பெருவிழா

Arunasala CoverST

மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு காரைநகரில் கல்வியாளர்கள் எடுத்த பெருவிழா

காரைநகர் மண்ணில் பிறந்த தியாகச்செம்மல் கல்விப்புரட்சி செய்த கருமவீரர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளை அர்பணித்து தனது சொத்துக்கள் அனைத்தையும் எம் சமூகத்திற்காக தானம் செய்து எல்லாத் தானங்களிலும் சிறந்த தானமாககிய வித்தியாதானத்தை எமக்களித்த உத்தமராவார். ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மாமனிதரை நினைவுகூர்ந்து வணங்கி வாழ்த்தி நன்றி செலுத்தும் விழா காரைநகரில் நடைபெற்றிருக்கிறது. 

மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதம் அடங்கிய "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த மகான் ச.அருணாசலம் அவர்கள்" என்ற நூல் வெளியீட்டு விழா கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் 20.12.2015; ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள், நலன்விரும்பிகள். மற்றும் காரைநகர் மக்கள் என 150 இற்கு மேற்;பட்டோர் விழாவிற்கு சமூகமளித்திருந்தனர். 

மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டினை தொடர்ந்து மகான் திரு ச.அருணாசலம் அவர்களின் திருவுருவப்படம் மங்கல வாத்தியத்துடன் நடராசா ஞாபகார்த்த மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மங்கல விளக்கினை அருணாசல உபாத்தியாயர் அவர்களின் பேத்தியார் திருமதி.சிவநாயகி சுப்பிரமணியம் அவர்களும,; பண்டிதை.செல்வி யோகலக்சுமி சோமசுந்தரம் அவர்களும், விழாவில் கலந்து கொண்ட பெரியோர்களும் ஏற்றி வைத்தனர். வித்தியாலய மாணவிகள் பன்னிரு திருமுறைகள் ஓதினார்கள்.

பேராசிரியர் வே.தர்மரத்தினம் அவர்கள் தனது ஆசியுரையில் வசதிகள் வாய்ப்புகள் இல்லாத காலத்தில் சவால்களுக்கு மத்தியில் சலியாது துணிச்சலுடன் பணியாற்றிய பெருமைக்குரியவர் பெரியார் ச.அருணாசலம் அவர்கள் எனக் குறிப்பிட்டார். காரைநகரில் வாழ்ந்த பெரியார்களின் பணி சமூகத்திற்கு விடுத்த செய்தியை இன்றைய தலைமுறையினருக்கு அறியப்படுத்துவது அவசியம். இப் பெரியார்களின் தியாகம் மிக்க பணியின் வரலாறு வெளிக்கொணரப்பட்டு இப் பெரியார்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அருணாசல உபாத்தியாயர் காட்டிய பாதையில் சமகால மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படல் அவசியம் என எடுத்துரைத்தார்.

தலைவர் திரு ப.விக்னேஸ்வரன் தனது தலைமையுரையில் காரைநகரில் 5 சைவப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கியதுடன் சைவப்பாரம்பரியம் மிக்க கல்விமான்களை காரைநகருக்கு அழைத்து வந்து  ஆலோசனை வழங்கி அவர்களுடன் தாமும் சேர்ந்தியங்கியவர் அருணாசல உபாத்தியாயர் எனக் குறிப்பிட்டார். அனலைதீவு, வடமராட்சி, தென்மராட்சி போன்ற பல ஊர்களிற்கு சென்று முயற்சித்து அங்கும் பாடசாலைகளை ஆரம்பித்தவர். இன்றைய சமூகம் அருணாசல உபாத்தியாயரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை அறிந்து கொள்ள இந்நூல் வெளியீடு உதவியுள்ளமையால் இந்நூலை வெளியிட பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியர்கள் எனக் குறிப்பிட்டார்.

யாழ்ற்றன் கல்லூரி முன்னாள் அதிபர் திரு ந.பரமசிவம், தற்போதயை அதிபர் திரு வே.முருகமூர்த்தி, கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் திரு இ.இராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் வே.குமாரசுவாமி வாழ்த்துப்பா வழங்கினார்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் நூல் ஆய்வுரை வழங்கினார். சைவ ஆசிரிய கலாசாலையை காரைநகரில் ஆரம்பித்து கீரிமலை, கோப்பாய், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இயக்கி சைவ ஆசிரியர்களை தமிழ் சமூகத்துக்கு வழங்கிய பெருமைக்குரியவர். அருணாசல உபாத்தியாயர் எனக் குறிப்பிட்டார். கீர்த்திமிகு பணிகள் காரணமாக உலகத்தின் பார்வையை காரைநகரின் பால் ஈர்த்தவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கில மொழியில் கல்வி கற்று ஆங்கில உடை, நடை, பாவனை போன்றவற்றில் மூழ்கிக் கிடந்த ஆங்கில கல்வி கற்றவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு திறவு கோலாக விளங்கியவர். இப்பணி ஆங்கிலம் கற்றவர்களை தமிழ்ப் பாரம்பரிய உடைக்கு மாற்றி சமூக மாற்றத்திற்கான சிந்தனை விதைகளை அவர்கள் மனதில் விதைத்தவர். வசதியான வாழ்வு காத்திருந்தும் அதனை விடுத்து சமயத்தினதும் சமூகத்தினதும் மேன்மைக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்த உன்னத மனிதர் அருணாசலம் உபாத்தியாயர். அருணாசல உபாத்தியாயர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களும் அவர்களின் பின் வந்த சமூகத்தின் மேல் கரிசனை உள்ள அனைவரும் அருணாசல உபாத்தியாயரின் பணிகளை பாராட்டியுள்ளனர். அருணாசல உபாத்தியாயரது வரலாற்றை வெளிக்கொணர்வதில் அரும் பாடுபட்ட சைவசித்தாந்த மன்ற தலைவர் திரு தி.விசுவலிங்கம் அவர்கள் காரைநகர் மக்களால் மதித்து பாராட்டப்பட வேண்டியவர் என குறிப்பிட்டார்.

வெளியீட்டுரையை சைவசித்தாந்த மன்ற தலைவர் திரு தி.விசுவலிங்கம் ஆற்றினார். இந்நூலை மீள்பிரசுரம் செய்வதில் என்னை ஈடுபடவைத்து ஊக்குவித்த பெருமை மூதறிஞர் கலாநிதி ச.வைத்தீஸ்வரக்குருக்களுக்கே உரியது. இந்நூலின் நகல் பிரதியை வழங்கி உதவிய திரு எஸ்.கே.சதாசிவம். இதனை ஒப்பு நோக்கி சரிபார்த்த பேராசிரியர் சிவபாதம் பரமசிவம், ஆகியோருடன் இப்பணியில் என்னுடன் உழைத்த திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதனுக்கும் எனது பாரியார் வடிவழகாம்பாள் அவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன். அருணாசல உபாத்தியாயரை அறிந்தவர்கள் நேரில் பார்த்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் திரு அருணாசலம் அவர்களின் உருவப்படம் வரையப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூல் கனடா, சுவிற்சலாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அவர் வாழ்ந்த மண்ணில் இந்நூல் வெளியிடுவதானது பெருமைக்குரிய விடயமாகும். தை மாதம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலும் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்தார். 

இந்நூல் வெளியீட்டின் சிறப்புரையினை கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலய முன்னாள் அதிபரும் மணிவாசகர் சபை தலைவருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு அ.மனோகரன் ஆகியோர் நிகழ்த்தினர். கருத்துரையின் போது சித்தாந்தரத்தினம் திரு.க.பத்மானந்தன் அவர்கள் அருணாசல உபாத்தியாயர் சைவசமய மக்கள் சைவ சமய சூழலில் தம் கலை,கலாசாரங்களை கைவிடாது தம் கல்வியை மேற்கொள்ள வேண்டுமென்று வேணவா கொண்டிருந்த சைவமக்களின் எண்ணத்தை ஈடேற்றிய பெருமகன் எனக் குறிப்பிட்டார். அருணாசல உபாத்தியாயர் காலத்தின் தேவையறிந்து மக்களின் பணிகளை நிறைவேற்றிய கருமவீரன் என்பதால் தான் அவர் மறைந்தும் 100 ஆண்டுகள் அண்மிக்கின்ற இவ்வேளையிலும் நினைவுகொள்ளப்படுகின்றார். அருணாசலத்தார் பணி சைவத்தையும் தமிழையும் வாழவைத்தவாறு கல்விப்பயிர் வளர்த்தது. மதத்தைப்பற்றியும், சமூகத்தைப்பற்றியும் சிந்திக்கின்ற சமூக செயற்பாட்டாளர்கள் அருணாசலம் வழியில் செயற்பட்டால் இன்றைய சமூகமும் வாழ்ந்து இன்றைய சமூக செயற்பாட்டாளர்களும் நாளைய உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆலயங்கள் சமூக நிறுவனங்களாக மாறி அப்பிரதேச மக்களுக்கு பணியாற்றுவதன் மூலம்; மதமாற்றம் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன் சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனக்குறிப்பிட்டார்.


இந்நூலை மட்டுமல்ல “காரைநகர் மான்மியம்” என்ற நூலையும் “முதுசகங்களைத்தேடி” என்ற திட்டத்தின் கீழ் மீள்பதிப்பு செய்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி உதவிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களுக்கு பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் வழங்கிய பாரட்டு விருதினை சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் வழங்கினார். 

ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ்.கே.சதாசிவம் இந்நூல் வெளியீடு தொடர்பான அனைத்து பணிகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மங்களம், வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்வு நிறைவு இனிதே பெற்றது.

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

DSC_0157 DSC_0161 DSC_0167 DSC_0171 DSC_0172 DSC_0174 S1060004 S1060068 S1060069 S1060070

காரைநகரில் 20.12.2015 அன்று மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு பெருவிழா

        Arunasala-CoverST           

         காரைநகரில் 20.12.2015 அன்று 
மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு பெருவிழா


காரைநகரின் கண்ணே அருணாசலம் என்கின்ற நடமாடும் சைவத் திருமலை ஒன்று 1864 ஆம் ஆண்டிலே தோன்றலாயிற்று. 56 ஆண்டுகள் ஒளி விரித்து உயர்ந்து விளங்கிய அருணாசலம் 1920 ஆம் ஆண்டிலே மறைந்து விட்ட போதிலும் அதன் பேரொளியின் சாயல் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாண நன்னகரில் படிந்து புதுமை செய்து நிற்பதை நாம் காணலாம். 


இந்த நிலையிலேதான் நம் காரைநகர் மக்களைப் பார்த்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் கேள்வி எழுப்பினார்.  


"காரைநகரமே! உனக்கு ஒரு குறையும் இல்லையே! நீ நல்ல செல்வப் பிரபு. உனது கருத்து என்ன?" என்று திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைப் பேராசான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் 1945 ஆம் ஆண்டளவில் காரைநகர் இந்துக் கல்லூரி வெளியீடாகிய சயம்பு மலரில் எழுதியிருந்தார். 


சைவ உலகமே! செல்வப் பிரபுவே காரைநகரமே! நீ அந்த மகானை மறந்துவிட்டாயா? என்று மீண்டும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களே 1967 ஆம் ஆண்டில் காரைநகர் சைவ மகாசபையினால் வெளியிடப்பட்ட பொன் விழா மலரில் சற்று உரத்த தொனியில் கேள்வி எழுப்பினார். 


இந்த வினாக்களுக்கு விடையாக காரைநகர் சைவ மகாசபை திரு.சி.கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய மகான் அருணாசலம் அவர்களின் சரிதத்தையும் அவரின் அளப்பரிய பணிகளையும் உள்ளடக்கிய "சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்" என்ற நூலை 1971 ஆம் ஆண்டில் வெளியிட்டது. 


இந்நூலின் மூலப்படியுடன் மகான் ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தது. 


மேற்படி நூலின் வெளியீட்டு விழா காரைநகரில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.12.2015) அன்று பிற்பகல் 2:30 இற்கு ஓய்வுநிலை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. 


இவ்விழாவில் கல்வியாளர்கள், சைவத்தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்று சிறப்பிக்குமாறு காரைநகர் நூல் வெளியீட்டுக் குழு வேண்டுகோள் விடுக்கின்றது. 


விழாவின் நிகழ்ச்சி நிரலினைக் கீழே காணலாம். 

Arun 2-page-001

 

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920) நூல் வெளியீடு

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம்  உபாத்தியாயர் (1864- 1920).
(மீழ்பதிப்பு 2015) நூல் வெளியீடு நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை (22/11/2015) ஞாயிற்றுக்கிழமை ,04:30மணியளவில் ஆச்வே முருகன் ஆலய மண்டபத்தில் (ighgatehill Murugan Temple Hall, 200A Archway Rd, London N6 5BA.) இன் நூல் வெளியீடு பல அறிஞர் பெருமக்கள் மத்தியில்,120 க்கும்  மேற்பட்ட சபையோர் சூழ வெளியீடு செய்யப்பட்டது. பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கமும் , இலண்டன் திரிசக்தி இலக்கிய மன்றமும் இணைந்து இந்நூல் வெளியீட்டை ஏற்பாடு செய்திருந்தது.

   நிகழ்வு  திரு இளயதம்பி தயானந்தா அவர்கள் தலைமையில், ஆசான் ச.அருணாசலம் அவர்களின் பூட்டன் திரு. சிவானந்தரட்ணம் சிவஞானேஸ்வரன்,  திருமதி ரஞ்சினிதேவி வஞானேஸ்வரன், மற்றும் பல சுமங்கலிகள் மங்கள விளக்கேற்றலுடனும் , திரு க.ஒப்பிலாமணி அவர்களின் தேவாரத்துடனும் விழா ஆரம்பமானது.

        உயர்வாசற்குன்று முருகன் ஆலய சிவாச்சாரியார் அவர்கள் ஆசியுரை வழங்க,   ஆலய  கலாச்சார பிரிவு பொறுப்பாளர் திரு. மாணிக்கவாசகர் ஸ்ரீகாந்தா அவர்களும் , திரு ஐ.தி. சம்பந்தன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
 
                 நூல் அறிமுகத்தை , நூலை மீள்பதிப்பு செய்த சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் தி.விஸ்வலிங்கம் அவர்கள் செய்துவைத்தார்.  நூல் ஆய்வுரையை பேராசிரியர் மு நித்தியானந்தன்  அவர்கள் சிறப்புற ஆய்வு செய்தார். 
                                            புதினம் பத்திரிகை ஆசிரியர் திரு இ.கே.இராஜகோபால் சிறப்புரை வழங்கியிருந்தார். நூல் முதற்பிரதியை கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் திரு.க .இரட்ணசிங்கம் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

 

  இந்த அரிய நூலை மீள்பதிப்பு செய்த கனடா சைவசித்தாந்த மன்றத்தலைவர் சிவநெறிச் செல்வர் தி.விஸ்வலிங்கம் அவர்களுக்கு  பேராசிரியர் இரட்ணம் நித்தியானந்தன் இலண்டன் திரிசக்தி இலக்கிய மன்றம் சார்பில்  '' சிவநெறிச் சாதனையாளன் '' எனும் விருதினை வழங்கி கௌரவித்தது. பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கமும் விருதினை வழங்கி திரு. திருமதி விஸ்வலிங்கத்தை கௌரவித்தனர். அத்துடன் இந்நூல் மட்டுமல்ல , இதற்கு முதல் நாம் வெளியிட்ட ''காரை மான்மியம் '' நூல் வெளிவர மிகவும் உறுதுணையும் ஒத்தாசையும் வழங்கிய திரு எஸ். கே .சதாசிவம் அவர்களுக்கான  விருதினை, திரு விஸ்வலிங்கம் அவர்களிடம் கையளித்து , வரும் மாதம் 20ம் திகதி காரைநகரில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டில் அவரிடம் கையளிக்கும்படி வேண்டிக்கொள்ளப்பட்டது.  இந்நூல் மீள்பதிப்பிற்கு பலவையிலும் உதவிபுரிந்த திருமதி .கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களுக்கும் மன்றத்தினர் தங்கள் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

                      
நிகழ்வு மற்றும்பல கலை நிகழ்வுகளுடனும், இராப்போசன விருந்துடனும் இனிதே நிறைவுற்றது.


நன்றி வணக்கம்.

முதுசங்களைத்தேடி – நூல் வெளியீட்டுக் குழு 
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
23/11/2015

L1IMG_5696 IMG_5697 IMG_5698 IMG_5699 IMG_5700 IMG_5701 IMG_5702 IMG_5703 L2 L3

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துச் செய்தி

 CKCA LOGO (Copy)

நாவலப் பெருமான் மறைவுக்கு பின்னர் அவர் பணியை முழுமூச்சாய் முன்னெடுத்து வெற்றி கண்டவர் எம் அருமை ஆசான் அருணாசலம் ஐயா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழையும் சைவத்தையும், பேசியும் பூசியும் போராடி தக்க வைத்தவர்.

எமது சைவ மகா சபையால் 29.09.1971 அன்று வெளியிடப்பட்ட "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ஐயா அருணாசலம்" அவர்களின் நூலின் மீள்பதிப்பு (இரண்டாம் பதிப்பு) கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டது. இது எமக்கு பெரு மகிழ்ச்சியை தருவதுடன், எமது மண்ணுக்கு விலைமதிப்பற்ற மதிப்பையும் கொடுக்கின்றது

இந்நூல் மீள்வெளியீட்டு விழா செய்து வெளியிட இருக்கும் பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு எமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் , இந்நூல் மீள்வெளியீட்டு விழா சிறப்புற வெற்றி பெற கனடா – காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது.

நன்றி,

நிர்வாகம்,

கனடா-காரை கலாச்சார மன்றம்

நூல் வெளியீடு . சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920). (மீழ்பதிப்பு 2015)

   Arunasala-CoverSTKWS-UK LOGO

          நூல் வெளியீடு .

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம்  உபாத்தியாயர் (1864- 1920).
(மீழ்பதிப்பு 2015)

காலம் :- 22/11/2015 ஞாயிற்றுக்கிழமை , மாலை 04:30மணியளவில் 
இடம் :-Highgatehill Murugan Temple Hall
             200A Archway Rd, London N6 5BA.
             

காரைமண் பெற்றெடுத்த மகான் சங்கரப்பிள்ளை அருணாசலம்.

யாழ்ப்பாணத்தின் மூன்று தமிழ் சார்ந்த சமயக் கண்கள், அதில் ஒருவர் எம் அருமை அருணாசல உபாத்தியாயர். மற்றிருவர் தவத்திரு  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலப் பெருமான்( 1822- 1879) மற்றும் திரு.சு .இராசரத்தினம்(1884-1970) ஆவர் .
               நாவலப் பெருமான் மறைவுக்கு பின்னர் அவர் பணியை முழுமூச்சாய் முன்னெடுத்து வெற்றி கண்டவர் எம் அருமை ஆசான் அருணாசலம் ஐயா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழையும் சைவைத்தையும் , பேசியும் பூசியும் போராடி தக்க வைத்தவர்கள் இவர்கள்.
                                                                                                   காரைநகர் வடக்கில் மல்லிகை குறிச்சியை சேர்ந்த சிற்றம்பலம் சங்கரப்பிளைக்கும் , அவரின் பண்புமிக்க  பாரியார் பத்மினியம்மாவுக்கும் 1864ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி   புத்திரராக அவதரித்தார் திரு.அருணாசலம் ஐயா அவர்கள்.  எமது அல்லின் ஏபிரகாம் காலத்தில் வாழ்ந்த சமகால சரித்திர நாயகன் இவர்.  அல்லின் ஏபிரகாம் அவர்கள் கற்பகதருவினூடே வால்வெள்ளியை வயப்படுத்த , ஐயா அருணாசலம் அவர்கள் தமிழ் மொழியை காக்கவும், சைவசமயத்தை பேணவும் அரும்பாடுபட்டார்.  ஆறுமுக நாவலர் மறைவுக்கு பின்  சைவ ஆசிரியர்களை தோற்றுவிப்பதிலும், சைவ தமிழ் பாடசாலைகளை உருவாக்குவதிலும் அரும்பாடுபட்டார்.  தனது பூர்வீக சொத்துக்களை விற்று இவற்றை நிர்வகிக்க போராடினார்.

10/04/1970 இல் வெளிவந்த இந்துசாதனத்தில் நூலாசிரியர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார் —


நாவலர் மறைந்தது 1879 இறுதியில். 1880இக்கு பின் தெல்லிப்பளையில்  கிறிஸ்தவ ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஒன்று தோன்றியது. ஆங்கிலம் படிக்க பணமில்லாத வறிய  மீன்கள் அங்கே அகப்பட்டன . ஒரு மீன் மட்டும் ஞானஸ்தானத் தீட்சைக்கு அகப்படாமல் நீண்டகாலந் தப்பித்துக்கொண்டிருந்தது. 1885இல் ஆசிரிய பயிற்சிப் பத்திரம் பெறுங்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.    '' இதோ பிடி ஞானஸ்நானம் ! ஓ ! அஞ்ஞானியே !" என்ற நெருக்கமிருந்தது.


      1885இல் ஒரு நாள் இரவு அந்த அஞ்ஞான மீனுக்கு நித்திரை வரவில்லை. கோழி கூவும் நேரத்தில் அந்த அஞ்ஞான மீனின் உள்ளத்தில் ஒரு சேவல் கூவியது. அந்தச் சேவல் , சேவலும் மயிலும் என்ற இடத்தில் வரும் சேவலுக்கினமான சேவல் போலும்!!  அந்த ஞானமீன் துடிதுடித்துத் துள்ளி எழுந்தது. வலையைப் பீறிட்டுக் கொண்டு, மதிலைக் கடந்து விடிகிற சமயம் தெல்லிப்பளைத் தெருவில் குதித்தது. அது காரைதீவு மீன், ''அருணாசலம் '' என்பது அந்த மீனின் திவ்விய திருநாமம்.

                               அருணாசலத்திற்கு திருநீறு பூசுகிறவர்களும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக வேண்டுமென்ற பைத்தியம் உண்டானது. முப்பது வருடம் ஊண் , உறக்கம் செவ்வனே இன்றித் தெருத்தெருவாய் அலைந்தார் அந்த மகான் அருணாசலம். ஒருமுறை கால் நடையிற் கொழும்புக்கு போய்,   சேர் .அருணாசலத்தைக் கண்டவர் காரைதீவு அருணாசலம் என்ற கதையும் உண்டு.  

   இப்படியான பலபல பெரும் மகான்களை பெற்றெடுத்த எமது காரை மண்ணில் நாமும் அவதரித்துள்ளோம்  என்று பெருமை கொள்வதுடன் நின்றுவிடாது, அவர்களின் பணிகளையும் , அவர்கள் வரலாறுகளையும்  முன்னெடுத்து பேணிப் பாதுகாக்க எம் அடுத்த சந்ததிக்கு தாரை வாருங்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர். 

 

ப.தவராஜா,

முதுசங்களைத் தேடி,   நூல் வெளியீட்டுக்  குழு,
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

arunasalam_book_221120150001

சுவிற்சலாந்தில் நடைபெற்ற ‘சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்அவர்கள்’ நூல் அறிமுகம்

சுவிற்சலாந்து காரை அபிவிருத்தி சபையின் பதினோராவது ஆண்டு கலை விழாவாகிய "காரை தென்றல் – 2015" கடந்த செப்டம்பர் 13, 2015 அன்று சுவிற்சலாந்தில் வாழும் காரை குடும்பங்களின் பேராதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

காரை தென்றல்-2015 விழாவிற்கு பிரதம விருந்தினராக காரைநகரிலிருந்து வருகை தந்திருந்த எதியோப்பியா பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கலாநிதி.ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். நிகழ்வில் சுவிஸ் வாழ் வளர்ந்து வரும் இளம் சிறார்களின் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன. காரை தவில், நாதஸ்வர கலைஞர்கள் மங்கள இசை வழங்கி சிறப்பித்திருந்தனர்.  

இவ்விழாவில் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்கள் பற்றிய சரித்திர நூலாகிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்'என்ற நூலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருந்தது. 

காரைநகர் சைவ மகா சபையினால் 1971 ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட இந்நூல் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜூலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நூல் பற்றிய அறிமுக உரையை காரைநகர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான முன்னாள் ஆசிரியரும், விளையாட்டு ஆர்வலரும், சமூகத் தொண்டரும், பிரான்ஸ் காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமாகிய திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்ரர்) அவர்கள் நிகழ்த்தியிருந்தார். 

அவர் தனது உரையில் காரைநகரில் சைவ மகா சபையின் முதல் வெளியீட்டுக்கு பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் அரும்பணியாற்றினார். தற்பொழுது கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்களின் அதீத உழைப்பினால் இந்நூல் மறுபிரசுரமாக வெளிவந்துள்ளது. அருணாசலம் உபாத்தியார் வடமாகாணத்தில் சைவத் தமிழ் பாடசாலைகளை நிறுவுவதற்கு அரும்பணியாற்றினார், அவர்கள் இல்லாதவிடத்து காரைநகரில் சைவமும் தமிழும் தளைத்தோங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பணியை அவருக்குப் பின் அருணாசலம் உபாத்தியார் முன்னெடுத்து வந்தார். இந்நூலினை அவருடைய பேரனார் பேராசிரியர் சிவபாதம் பரமசிவம் அவர்கள் கனடாவில் வெளியிட்டு வைத்தார். அருணாசலம் உபாத்தியார் சைவத்திற்கும் தமிழுக்கும் செய்த அரும்பணிகள் நிறையவே உண்டு. நேரத்தினை கருத்தில் கொண்டு நிறைவு செய்கின்றேன் எனவும் இந் நூல் எல்லோர் இல்லங்களிலும் இருக்கவேண்டிய அரும் காப்பியம் என்றும் குறிப்பிட்டார். 

நூலினை சூரிச் விஸ்ணு துர்க்கை அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ . த. சரவணபவானந்த குருக்கள் அவர்கள் வெளியிட்டு வைத்தார். நூலின் முதல் பிரதியை சைவசமய ஆர்வலரும், சமூகத் தொண்டரும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமாகிய திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

தொடர்ந்து பிரதிகளை சூரிச் நகரிலிருந்து தொலைதூரம் வாழ்ந்தாலும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபைக்கு தொடர்ச்சியாக தனது ஆதரவினை வழங்கி வரும் திரு. சிவசுப்பிரமணியம் திரவியபவான் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

அடுத்து சைவத் தமிழ் பாரம்பரியத்தை காத்த எமது ஊர்ப் பெருமகன் அருணாசலம் அவர்களின் சரிதத்தை எமது அடுத்த தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவி செல்வி சுபாஜினி சற்குணராஜா அவர்கள் நூலின் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 

ஈழமணித்திருநாட்டின் சைவக் கல்விப் பாரம்பரியத்தை அந்திய சக்திகளின் ஆதிக்கத்தில் அழிந்து போகாமல் பாதுகாத்த கடமை வீரர் காரைநகர் மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களுக்கு தமது நன்றிக் கடனைச் செலுத்தி இவ்வாண்டு சூரிச் நகரில் வீசிய காரைத் தென்றலை சுவிற்சலாந்து வாழ் காரை மக்கள் அர்த்தமுள்ளதாக்கியிருந்தனர் என்று கூறலாம். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

karaithenral 2015 01 154 (Copy) karaithenral 2015 01 162 (Copy) karaithenral 2015 01 163a (Copy) karaithenral 2015 01 166 (Copy) karaithenral 2015 01 168 (Copy) karaithenral 2015 01 238 (Copy) karaithenral 2015 01 241 (Copy)

 

சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் நூல் வெளியீட்டு விழா காணொளி

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் நூல் வெளியீட்டு விழாவை கனடா சைவ சித்தாந்த மன்றம் 25.07.2015 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணிக்கு Scarborough Civic Centre இல் நடத்தியிருந்தது.

கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர்.திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் கல்வியாளர்கள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் காரைநகர் மக்கள் எனப் பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவின் தொகுப்பினைக் கீழே காணலாம்.

நாவலர் வழிவந்த மகான் அருணாசலம் உபாத்தியார் – ஆறுமுகநாவலர் சபைத் துணைத் தலைவர் வாழ்த்து

IT Sampanthan

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கனடாவில் நடைபெற்றிருந்த நிலையில் நீண்ட நெடுநாள் சமூகத் தொண்டரும், ஆறுமுகநாவலர் சபைத் துணைத் தலைவருமாகிய திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாகக் கிடைக்கப் பெற்ற போதிலும் நாவலர் சபையின் சார்பில் வழங்கப்பட்ட செய்தி என்பதனால் அதன் முக்கியத்துவம் கருதி இங்கே எடுத்துவரப்படுகின்றது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை வாழ்த்துச் செய்தி
நாவலர் வழிவந்த மகான் அருணாசலம் உபாத்தியார் காரைநகருக்குப் பெருமை தேடியவர்

இருள் சூழ்ந்த காலத்தில் சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்கத் தமது வாழ்க்கையை முழுமையாகத் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான் அவர்கள். அவர் காலத்தில பல சீடர்களும், கல்விமான்களும் அறிஞர்களும் உருவாகினா.; அவரது கொள்கையினாலும் கல்விப்பணியினாலும்; பலர் ஈர்க்கப்பட்டனர். அவ்வழிவந்தவரே மகான் அருணாசலம் உபாத்தியார் அவர்கள். நாவலர் அருணாசலம் என்று அறிஞர் உலகினால் அழைக்கப்பட்டு வந்தவர். இவர் நாவலர் பெருமானின் சைவத் தமிழை வளர்ப்பதில் தம்மை முழுமையாக அர்பணித்து செயலாற்றி வந்தவர் தமது சொத்துக்களையும் முதலீடு செய்தவர். பிறமதத்தவர்களின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு சைவத் தமிழ்க் கல்வியை மக்களிடையே பரப்புவதற்கும் மேற்கொண்ட முயற்சியே சைவப் பாடசாலைகளின் தோற்றமாகும்.

வண்ணார் பண்ணையில் ஆரம்பித்த சைவப் பிரகாச வித்தியாசாலை போன்று ஊர்தோறும் அமைக்கப்படவேண்டும் என்பதே நாவலர் பெருமானின் நோக்கமாகும். அவருடைய நோக்கத்தின் அடிப்படைலேயே மகான் அருணாசலம் உபாத்தியாரும் அதன்பின்பு இந்துபோட் இராசரத்தினம் அவர்களும் செயற்பட்டு வந்தனர்.

காரைநகரில் மூன்று தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர் மகான் அருனாசலம் உபாத்தியாயர். பிறந்த மண்ணிற்கு செய்த பெரும் கல்விப் பணியாகும். நூறு ஆண்டுகள் சென்றாலும் அவரை நினைவுகூர வைப்பது அப்பாடசாலைகளே. அயல் கிராமங்;களிலும் சைவப்பாடசாலைகளை உருவாக்கி சகலமக்களினதும் மதிப்புக்குரியவரானார். காரைநகரில் பிறந்தவரானாலும் வண்ணர்பண்ணையில் வாழ்ந்து கொண்டே சைவத் தமிழ்ப் பணியை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பரந்த உள்ளம் கொண்டவர்களின் பணி அவ்வாறே அமையும். அதுவும் காரைநகருக்கே பெருமை.

1969ல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையை உருவாக்கவும் நாவலருக்கு பெருவிழா. சிலைநாட்டுவிழா. தேசபவனியோடு மகாநாட்டு மலர் ஒன்று வெளியிடப்பட்டது அதிலும்; நான் முக்கிபங்கு வகுக்கும் வாய்புக்கிடைத்தது. மலர்க் குழு அசிரியர் மதிப்புக்குரிய இலட்சுமண ஐயா காரைநகர் நாவலர் அருணாசல உபாத்தியாயர் பற்றி ஒரு கட்டுரை எழுதும்படி என்னைக் கேட்டார். பலரிடம் தொடர்பு கொண்டேன் போதிய தகவல் கிடைக்கவில்லை. அந்த வரலாற்று மலரில் இத்கைய பெருமைக்குரிய மகான் அருணாசலம் உபாத்தியாரின் வரலாறு இடம்பெறவில்லையென்று கவலையடைகின்றேன்.

நாவலர் வழிநின்று சைவத்தையும் தமிழையும் வளர்த்த மகான் அருணாசலம் உபாத்தியாயர் அவர்கள் பற்றி திரு.சி கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் இந்நூலை எழுதியதற்கும் அந்நூலை சிறந்த முறையில் வெளியிட முன்வந்த கனடா சைவசித்தாந்த மன்ற தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம்; அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றோம்

இரண்டாம் பதிப்பு நூல்வெளியீடு காரைநகரில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பாடசாலைகளிலும் அறிஞர்களிடமும் இருந்து குவியும் வாழ்த்துச் செய்திகளிலிருந்து அறியக்கூடியதாகவிருக்கின்றது. இச்செய்திகளை கனடா காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அதன் இணையத்தளத்தில் சிறப்பாக வெளியிட்டு சிறந்த பரப்புரை செய்து வருகின்றனர்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் சார்பில் நாவலர் வழிவந்த மகான் அருணாசலம்; உபாத்தியார் பற்றிய நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்;துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

திரு.தி.விசுவலிங்கம் திருமதி வடிவழகாம்பிகை அவர்களும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சைவத் தமிழ்ப் பணியாற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் சார்பில் வாழ்த்துன்றோம்.

வணக்கம்

ஐ.தி.சம்பந்தன்
துணைத் தலைவர்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை
22-07-2015

arunlasamp1arunasalam2

 

கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழா கனடாவில் ஒரு வரலாற்றுப் பதிவு

Arunasala CoverST

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் நூல் வெளியீட்டு விழாவை கனடா சைவ சித்தாந்த மன்றம் கடந்த சனிக்கிழமை (25.07.2015) அன்று பிற்பகல் 2:00 மணிக்கு Scarborough Civic Centre  இல் நடத்தியிருந்தது. 

அருணாசல உபாத்தியாயர் அவர்களின் மாணவர் அல்வாய் வாசர் வல்வைச் சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியர் திரு.சி.கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய இந்நூலின் முதற்பதிப்பு காரைநகர் சைவ மகா சபையினால் 1971 ஆம ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர்.திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் கல்வியாளர்கள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் காரைநகர் மக்கள் எனப் பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நூல் வெளியீட்டு விழாவினை முன்னிட்டு காரைநகரில் இருந்தும் வெளியிலிருந்தும் கல்வி சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், தற்போதய அதிபர்கள் ஓய்வுநிலை ஆசிரியர்கள் ஆகியோரும் மற்றும் புலம் பெயர் காரை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நூல் வெளியீட்டு விழா சிறப்புற அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்திகளின் தொகுப்பும் விழா நிகழ்ச்சி நிரலும் அடங்கிய கையேடு விழாவிற்கு வருகை தந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் சைவசமய குரவர் பாடசாலை மாணவர்கள் பன்னிரு திருமுறை ஓதல் வழிபாடு செய்த பின்னர் கனடா பண், தமிழ்ப் பண் ஆகியனவற்றையும் இசைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து உப-தலைவர் திருமதி.வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அவர்கள் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.

சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தமது தலைமையுரையில், இந்நூலை வெளியீடு செய்வதற்கு மிகவும் தூண்டு கோலாக இருந்தவர் மூதறிஞர் க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் இந்நூலில் அடங்கியுள்ள பெறுமதிமிக்க கட்டுரைகள் பற்றியும், அருணாசலம் அவர்களின் உருவப்படம் அமைக்கப்பட்டமை பற்றிய விளக்கத்தையும் குறிப்பிட்டு இளம் சந்ததியினர் சைவப் பாரம்பரியத்தையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் இந்நூலின் மூலம் அறிந்து பயன் பெற வேண்டும் என்றும கேட்டுக் கொண்டார்.

கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் தனது வெளியீட்டுரையில், இந்நூலின் பதிப்பாசிரியர் அருணாசலம் என்ற மகானை மீண்டும உயிர்ப்பித்திருக்கிறார் என்று கூறி சேர்.பொன் இராமநாதன், இந்துபோட் இராசரத்தினம் போன்றவர்களின் பணிகளுக்கே கால் கோள் இட்டவர் இந்த அருணசலம் அவர்கள் என்றும் மதம் மாற்றம் என்ற சத்திய சோதனையை உறுதியுடன் கடந்து பல ஊர்களில் சைவப் பாடசாலைகளையும் சைவ ஆசிரிய கலாசாலைகளையும் உருவாக்கத் தன்னை அர்ப்பணித்த மகான் பற்றிய நூலை நீங்கள் எல்லோரும வாங்கிப்படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நூலின் முதற்பிரதியை பதிப்பாசிரியர் அன்னாரின் பேரனார் இளைப்பாறிய ஆசிரியர் திரு.சிவப்பிரகாசம் சிவானந்தரத்தினம் அவர்களுக்கு வழங்கிய பின்னர் சபையோர் அனைவரும் வரிசையில் வந்து அன்னாரின் பேரனார் பேராசிரியர்.சிவபாதம் பரமசிவம் அவர்களின் கரங்களினால் நூலின் பிரதியைப் பெற்றுக் கொண்டனர். 

கலாசூரி.திரு.சிவநேசச்செல்வன் அவர்கள் தனது நூல் ஆய்வுரையில், இந்நூல் என்னை நூறு ஆண்டுகள் பின்னால் நோக்க வைத்திருக்கின்றது. இலங்கை வரலாறு பற்றிய நிறைந்த தரவுகள் கொண்ட மிகப்பெரிய தொகுப்பாகிய இந்நூல் நிச்சயமாக திரும்பவும் இலங்கைக்குச் சென்று சேர வேண்டும் எனவும் காரைநகர் மண்ணின் செழுமை இந்நூல் ஊடாக வெளிவந்திருக்கின்றது எனவும் எதிர்காலத்தில் ஒரு பாரிய எழுச்சிக்கும் ஆய்வுக்கும் இந்நூல் வழி வகுக்கும் எனவும் தெரிவித்தார்.

அடுத்து காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் பணிகளின் தொகுப்பு அடங்கிய வரலாற்று நூலை பதிப்பித்து வெளியிட்ட சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் அதன் முன்னாள் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தியும் போசகர் சபை உறுப்பினர் திரு.ரவி ரவீந்தரன் அவர்கள் பாராட்டு விருது வழங்கியும் கௌரவித்தனர்.  கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் அதன் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்நூலின் மூலப்பிரதியை ஆக்க ஊக்குவித்தவரும் அருணாசலம் அவர்களின் பணிகள் பற்றி கட்டுரை எழுதியவரும் அன்னாரின் பேரனுமாகிய இளைப்பாறிய ஆசிரியர் திரு.சிவப்பிரகாசம் சிவானந்தரத்தினம் அவர்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் அதன் போசகர் சபை உறுப்பினர் திரு.கந்தப்பு அம்பலவாணர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்நூலின் இரண்டாம் பதிப்பினை ஆக்குவதற்கு உறுதுணை புரிந்த பெரியார் அருணாசலம் அவர்களின் பேரனார் பேராசிரியர் சிவபாதம் பரமசிவம் அவர்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் போசகர் சபை உறுப்பினர் திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

அடுத்து கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் அவர்கள் தனது நூல் ஆய்வுரையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளப்பரிய சேவை செய்த அருணாசல உபாத்தியாயர் என்ற இந்த மகான் பற்றிய தகவல் அடங்கிய இந்நூலை 1971 ஆம் ஆண்டு காரைநகர் சைவ மகா சபை அன்னாரை நேரில் அறிந்திருந்தவர்கள் அருகிக் கொண்டிருந்த காலத்தில் கடைசிச் சந்தர்ப்பமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கூறி இரண்டாம் பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டவற்றையும் நூலின் உள்ளடக்கத்தையும் விரிவாக எடுத்துக் கூறினார். தனது தந்தையார் அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள் அருணாசல உபாத்தியாயர் மீது பேரபிமானம் கொண்டவர் என்பதையும் அதற்கான காரணங்களையும் விளக்கி அவர் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மகான் பற்றிய கட்டுரையை சயம்பு மலரில் எழுதியிருந்தமையையும் நினைவுபடுத்தினார்.

‘என் பாட்டனார் காட்டிய வழி எனது பார்வையில்’ என்ற தலைப்பில் அருணாசலம் அவர்களின் பேரனார் பேராசிரியர்.சிவபாதம் பரமசிவம் அவர்கள் உரையாற்றினார். காலனித்துவ காலத்திலிருந்து இன்று வரை ஆட்சியாளர்கள் ஒர் இனத்தின் சமய பண்பாட்டு விழுமியங்களைச் சூறையாடும் வழிமுறைகளையே கையாளுகின்றனர். ஆனால் வளங்களும் வசதிகளும் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எனது பாட்டனார் உறுதியான முடிவெடுத்தார். தனி ஒரு மனிதனாக கிட்டத்தட்ட 10 சைவப் பாடசாலைகளை உருவாக்குவதற்கு உரியவர்களைச் சந்தித்து அவர்களைத் தம்வசப்படுத்தி காணி, வகுப்பறைகள், ஆசிரியர்கள் என்பனவற்றைப் பெற்று பாடசாலைகளைத் தொடங்கினார். இவற்றுள் சுப்பிரமணிய வித்தியாசாலை, வியாவில் சைவ வித்தியாசாலை, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை(இந்து ஆங்கிலப்பாடசாலை) ஆகியன காரைநகரில் தொடங்கியனவாகும். நானே எனது பாட்டனாரைப்பற்றிப் பெருமையாக கூறுவது எனக்குச் சரியாகப்படவில்லை எனினும் இதுவே உண்மை எனவும் கூறினார். 1915 இல் எனது பாட்டனாரின் வீட்டுத் திண்ணையில் தொடங்கப்பட்ட முதலாவது ஆசிரியகலாசாலையே இன்று நூற்றுக்கணக்கான பயிற்றுப்பட்ட ஆசிரியர்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தது எனவும் கூறினார்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் உரையாற்றும் போது எமது பாடசாலை ஸ்தாபிக்கப்படுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் எமது ஊர் தந்த ச.அருணாசலம் அவர்களே எனவும் அவர் அன்று ஆரம்பித்த பாடசாலைகளில் கல்வி கற்ற நானும் எமது ஊரவர்களும் அவரின் செயற்பாடுகளை மறந்தால் நாம் நன்றிக்கடன் மறந்தவர்களாவோம் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் சைவத்தமிழ்ப் பாரம்பரியம் எங்கள் இனத்தின் இருப்பு என்ற நெருப்பை அருணாசலம் அவர்கள் நெஞ்சில் சுமந்தாலும் பிற மதத்தையோ பிற மொழியையோ வெறுப்புடன் நோக்கியவர் அல்லர் எனவும் கிறிஸ்தவர்களுடன் இணைந்து நடத்திய கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலை அவரின் மனிதநேயத்திற்;கும் சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரில் அமைக்க வேண்டும் என்ற அவரின் வேட்கையினால் உருவான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை (காரைநகர் இந்துக்கல்லூரி) அவரின் தீர்க்கதரிசனத்திற்கும் எடுத்துக்காட்டு எனக் கூறினார். தன்னை முழுமையாகத் தியாகம் செய்து ஈழமணித்திருநாட்டின் சைவக் கல்விப் பாரம்பரியத்தை பாதுகாத்தவர் பேராசான் அருணசலம் அவர்கள் எனவும் நாவலரினால் நல்லூர் பெருமை பெற்றது மகான் அருணாசலம் அவர்களால் காரைநகர் பெருமை பெறுகிறது எனவும் குறிப்பிட்டார்.

கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்கள் உரையாற்றும் போது இந்த விழா ஒரு புதுமையான விழா என்றும் விழா நாயகனுக்கு நூற்றாண்டு விழா நடத்தி அதற்கு பின் பல ஆண்டு விழாக்களையும் கண்டிருக்க வேண்டிய நிலையில் இப்போது தான் ஒர் அறிமுகவிழா நடத்திக் கொண்டிருக்கின்றோம் எனவும் எமது சமூக விழிப்புணர்வு, பொறுப்புணர்வு பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்றும் கூறி இந்த மாமனிதர் உண்மையான ஈடுபாட்டுடன் பெயர் புகழ் விரும்பாமல் இதயசுத்தியுடன் செயலாற்றியமையினாலேயே வெற்றி அடைந்தார் எனவும் கூறினார். மேலும் “அருணாசலம் விருது”, “ சயம்பு விருது “ ஆகிய இரு ஞாபகார்த்த விருதுகளை கனடா காரை கலாச்சார மன்றத்தினூடாக வழங்குவதற்கு தமது சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்;து நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளித்தார். மெய்ப்பொருளான கல்வியின் மகத்துவம் காண எமக்கு நல்வழி காட்டிய அந்த ஞான சற்குரு அருணாசலம் அவர்களைப் போற்றுவோம் எனவும் கூறினார்.

ஊடகவியலாளர் சிவஸ்ரீ சுதாகரன் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்கள் உரையாற்றும் போது சைவ சமய பாரம்பரியத்தைப் பாதுகாத்த மகான் அருணாசலம் அவர்களின் நூலை வெளியி;ட்ட கனடா சைவ சித்தாந்த மன்றத்தைiயும் அவர்கள் மாதாந்தம் வெளியிடும் அன்பு நெறி இதழின் சிறப்பு பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

கனடா சைவ சித்தாந்த மன்ற செயலாளர் திருமதி.அநிதா திருமுருகா அவர்களின் நன்றி உரையைத் தொடர்ந்து எல்லோரும் சேர்ந்து மங்களம் பாடியமையைத் தொடர்ந்து விழா இனிதே நிறைவு பெற்றது. 

விழாவின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்

 

1 2 3 4 5 6 7 8 9 10

 

 

11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 2526 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 Dsc_0001 Dsc_0002 Dsc_0003 Dsc_0004 Dsc_0005 Dsc_0006 Dsc_0007 Dsc_0008 Dsc_0009 Dsc_0010 Dsc_0011 Dsc_0012 Dsc_0013 Dsc_0014 Dsc_0015 Dsc_0016 Dsc_0017 Dsc_0018 Dsc_0019 Dsc_0020 Dsc_0021 Dsc_0022 Dsc_0023 Dsc_0024 Dsc_0025 Dsc_0026 Dsc_0027 Dsc_0028 Dsc_0029 Dsc_0030 Dsc_0031 Dsc_0032 Dsc_0033 Dsc_0034 Dsc_0035 Dsc_0036 Dsc_0037 Dsc_0038 Dsc_0039 Dsc_0040 Dsc_0041 Dsc_0042 Dsc_0043 Dsc_0044 Dsc_0045 Dsc_0046 Dsc_0047 Dsc_0048 Dsc_0049 Dsc_0050 Dsc_0051 Dsc_0052 Dsc_0053 Dsc_0054 Dsc_0055 Dsc_0056 Dsc_0057 Dsc_0058 Dsc_0059 Dsc_0060 Dsc_0061 Dsc_0062 Dsc_0063 Dsc_0064 Dsc_0065 Dsc_0066 Dsc_0068 Dsc_0069 Dsc_0070 Dsc_0071 Dsc_0072 Dsc_0073 Dsc_0074 Dsc_0075 Dsc_0076 Dsc_0077 Dsc_0078 Dsc_0079 Dsc_0080 Dsc_0081 Dsc_0082 Dsc_0083 Dsc_0085 Dsc_0086 Dsc_0087 Dsc_0088 Dsc_0089 Dsc_0090 Dsc_0091 Dsc_0091A Dsc_0092 Dsc_0093 Dsc_0094 Dsc_0095 Dsc_0096 Dsc_0097 Dsc_0098 Dsc_0099 Dsc_0100

Cover 2

நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளை இன்றிரவு 7:30 இற்கு Tamil One தொலைக்காட்சியில் காணலாம்

Tamil_One

ஈழத்து கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (25.07.2015) அன்று Scarborough Civic Centreமண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இவ்விழா நிகழ்வுகள் பற்றிய செய்தி ஒளிபரப்பினை tamil Oneதொலைக்காட்சியில் “கனடிய பதிவுகள்” என்னும் நிகழ்ச்சியில் இன்று திங்கட்கிழமை (27.07.2015) அன்று இரவு 7:30 இற்கு பார்த்து மகிழலாம் என்பதனை அறியத் தருகின்றோம்.
Bell இணைப்பு உள்ளவர்கள் 844 இலும் Rogers இணைப்பு உள்ளவர்கள் 868 இலும் Tamil One தொலைக்காட்சியைப் பார்க்கலாம்.
இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பினை வரும் வெள்ளிக்கிழமை (31.07.2015) காலை 10:00மணிக்கும் பார்க்கலாம்.

 

“சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்” அவர்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரல்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவப்பாடசாலைகளை அமைத்தும், சைவ ஆசிரியர்களை உருவாக்கியும் சைவ சமயத்தின் காவலராக அயராமல் அரும்பணியாற்றிய எமது காரைநகர் ஆசான் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள் “ என்ற நூல் வெளியீட்டு விழா கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் சனிக்கிழமை(25.07.2015 அன்று பி.ப 2:00 மணிக்கு Scarborough Civic Centre இல் நடைபெற உள்ளது.

இவ்விழாவின் நூல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நிரலைக் கீழே காணலாம்.

Arunasala Master-book-Relese  programme- new-page-001Arunasala Master-book-Relese  programme- new-page-002

 

திரு.சி. கணபதிப்பிள்ளை ஐயர் எழுதிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு ச. அருணாசலம் அவர்கள்” (இரண்டாம் பதிப்பு) நூல் வெளியீட்டு விழா

Arunasalam_Book_Release_Flyer

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துச் செய்தி

CKCA LOGO

“சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த சிவத்திரு ச. அருணாசலம் ” என்கின்ற நூலின் இரண்டாம் பதிப்பு புதுப்பொலிவுடனும், அநேகமான தகவல்களுடனும் வருவது கண்டு மகான், சிவத்திரு ச. அருணாசலம் என்கின்ற மாமனிதன் பிறந்த கிராமத்தின் ஒரு வாரிசு என்கின்ற நிலையில் என் உள்ளம் புளகாங்கிதம் அடைகின்றது. அந்த மாமனிதன் தன் நலம் கருதாது தமிழையும், சைவத்தையும் வளர்க்க பாடுபட்டதோடு அல்லாது, தொலை நோக்கோடு சிந்தித்து ஆங்கில அறிவிலும் புலமை பெற அன்றைய சந்ததிக்கு அடித்தளம் இட்டார் என்னும் போது அவரின் சிந்தனை, சமூக பொறுப்புணர்வு, கடின உழைப்பு எல்லாவற்றையும் எண்ணி இன்றைய சமுதாயத்தின்  சார்பில் அந்த ஆசிரியப் பெருமகனின், சமூக சேவை செய்த பெருமகனின் பாதக் கமலங்களினை தூய அன்போடு பணிகின்றேன்.


1989/90 களில் யாழ்பாணத்தின் அநேகமான கிராமங்களுக்கு நேரில் சென்ற  “வீக் என்ட்“ (Week End)  பத்திரிகைக் குழு அன்றைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தின் நிலைமை பற்றி ஒரு பெரிய ஆய்வுரை எழுதி இருந்தது. அந்த ஆய்வுரையில், முதல் பக்கத்தில் சிறப்பு விடயமாக ஒரு தனி சதுர அடைப்புக்குள் “Little England in Jaffna” என்று காரைநகரை சுட்டி காட்டி சிறு விமர்சனம் போட்டிருந்தார்கள். அந்த விமர்சனத்திற்கு மூல வித்து சிவத்திரு ச. அருணாசலம் உபாத்தியாரின் சிந்தனைகள் என்றால் மிகையாகாது.


பெரு மதிப்பிற்குரிய இந்த சிந்தனையாளனின் வாழ்க்கையினை, அவர் தான் நினைத்த விடயங்களினை நிறைவேற்றுவதில் பட்ட சிரமங்களை எல்லாம் உற்று நோக்கும் கால், தமிழ் நாட்டில் தமிழுக்கு என தம்மை அர்பணித்த “தமிழ்த் தாத்தா” உ. வே. சாமிநாதையரின் வாழ்க்கை வரலாறு தான் என் மனத்திரையில் ஓடுகின்றது.


அவர்கள் பாடசாலைகளினை நிறுவுவதுடன் தன் பணியினை நிறுத்தி விடாது நல்ல ஆசான்களையும் உருவாக்க முயன்றார். நல்லாசான்களை தேடி பாடசாலைகளுக்கு நியமித்தார். அந்த வகையில் அவர் அப்போது இருந்த சமூக சேவகர்களுடன் இணைந்து (தற்போதைய கலாநிதி ஆ .தியாகராசா மத்திய மகா வித்தியாலத்திற்கு) தேடி கொண்டு வந்த நல் முத்தே, முத்து சயம்பு உபாத்தியாயர் ஆவார். முத்து சயம்பு உபாத்தியாயர் அவர்களின் கடமை உணர்வு, சேவை மனப்பான்மை, மாணவர்களுக்கான அவரின் தியாகம் என்பனவற்றை நாம் கோடிட்டு காட்ட வேண்டியது இல்லை. அந்த மாசு, மறுவற்ற ஆசானின் தகைமை பாடசாலைக்கு பல, பல பெயர் மாற்றங்கள் வந்தபோதும்  இன்னமும் நம் முதியவர்களின் மனதில் “சயம்பற்றை பள்ளிக்கூடம்” என்ற பெயர் நிலைத்து நிற்பதில் இருந்தும், அவ் ஆசானின் மாணவர்கள் வழியாக வந்த கதைகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.


திரு ச. அருணாசலம் அவர்களின் மகிமையினை அவரின் சீடனான திரு. சி. கணபதிபிள்ளை ஐயர் அவர்கள் முதல் பதிப்பாக “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு ச. அருணாசலம் அவர்கள்” என வெளியிட்டு இருந்தார்கள்.


அதனை மேலதிக விபரங்ககளுடன் சிவநெறிசெல்வர் திரு தி. விசுவலிங்கம் (சைவ சித்தாந்த மன்ற அதிபர் – கனடா) அவர்கள் பெரு முயற்சி செய்து இரண்டாவது பதிப்பாக  வெளியீடு செய்வது கண்டு பெரு மகிழ்வடைகின்றோம். முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்து  சிவகாமி அம்மை சமேத சுந்தரேசப் பெருமான் பாதமலர் பணிந்து வேண்டுகின்றோம். இந்த முயற்சியில் பெரு மகனாரின் குடும்ப வாரிசுகளும் இணைந்து கொண்டமை போற்றுதற்குரியது.


 கனடா காரை கலாச்சார மன்றம்


 வே. இராசேந்திரம்
போஷகர் சபை இணைப்பாளர்

Greetings from CKCA-page-001Greetings from CKCA-page-002

 

“உண்மையான விடிவெள்ளியாய் வீறுநடை போட்டவர் அருணசலம்” பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்

UK LOGO

"உண்மையான விடிவெள்ளியாய் வீறுநடை போட்டவர் அருணசலம்" பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்
 

சைவ சித்தாந்த மன்றம்,
கனடா.
நூல் வெளியீடு – மீள் பதிப்பு 
25.07.2015


யாழ்பாணத்தின் மூன்று தமிழ் சார்ந்த சமயக் கண்ணகள் அதில் ஒன்று எம் அருமை அருணாசல உபாத்தியாயர். (மற்றிருவர் ஆறுமுக நாவலர், இராசரத்தினம்) சரித்திர நாயகர்களின் சொத்துக்களை மீளசைவு செய்வதென்பது விலை மதிப்பற்ற ஒன்று. காரைநகர் குட்டிப்புலத்தில் தோன்றி, தன் கோட்டையாக தங்கோடையில் வாழ்ந்தவர் ஐயா அருணாசலம். எமது அல்லின் ஏபிரகாம் காலத்தில் வாழ்ந்த சமகால சரித்திர நாயகன் இவர். அல்லின் ஏபிரகாம் அவர்கள் எமது மண்ணின் கற்பகதருவினூடே வால்வெள்ளியை வயப்படுத்தினார், ஆனால் ஐயா அருணாசலம் அவர்கள் எமது ஊரின் கல்வியின் கண்களாக உண்மையான விடிவெள்ளியாய் நின்று வீறு நடை போட்டவர்.


உண்மையில் இதைத்தான் ஐய்யன் வள்ளுவன் தனது முதற் குறளில்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
என்று கூறியுள்ளானோ என்று எண்ணவைக்கின்றது……. காரணம்
அல்லின் – அருணா, உண்மையில் ஆழமாக நோக்குங்கள் ……………..
அல்லின் விண்ணை நோக்கினார், ஐயா அருணா மண்ணை நோக்கினார் 
இரண்டுமே இந்த பிரபஞ்சத்தின் சொத்துத்தான், இருந்தும் இது எம் மண்ணின் முதுசம் எனும் பொழுது எம்மையெல்லாம் முழிக்க வைக்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் அருணாசலம் ஓர் காந்திய ஆயுதம் என்றால் மிகையாகாது. அடிமைக்காலத்தில் அவர்களை எதிர்த்து சைவைத்தையும் தமிழையும் தனித்துவமாய் தக்கவைப்பது என்பது தன்னிகரற்ற செயல். நாவலர் வழி நின்று திண்ணைப் பாடசாகளை துணிவுடன் அன்று அருணாசலம் ஐயா இட்ட வித்துத்தான் இன்று நம் வித்தியாலயங்களாக வியாபித்து விருட்சமாக வேரூன்றியுள்ளன.


2011ம் ஆண்டு பிருத்தானியா காரை நலன் புரிச் சங்க நிர்வாகத்தின் தொலைநோக்கு கண்களின் பட்டு, அதில் பரிணமித்ததுதான் "முதுசங்களைத் தேடி". இதன் நோக்கமே எமது மண் சார் முதாதையரின் முக்கியமான நூல்களை மூழ்க விடாது மீள் கொண்டு வருவதென்பது. இதன் முதற் குழந்தை FXC அவர்களின் "காரை மான்மியம்", இரண்டாவது செல்வம் மூன்று ஆண்டு தாண்டியும், முக்கியம் பெற முடியவில்லை அது "சைவமகாசபை பொன்விழா மலர்" (இன்னமும் பதிப்பில் உள்ளது), ஆனால் இன்று கனடா சைவ சித்தாந்த மன்றம் இந்த எமது சைவ மகா சபையால் 29.09.1971 அன்று வெளியிடப்பட்ட "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ஐயா அருணாசலம்" அவர்களின் நூலை மீள்பதிப்பு செய்வது என்பது எமக்கு பெரு மகிழ்ச்சியை தருவதுடன், எமது மண்ணுக்கு விலைமதிப்பற்ற மதிப்பையும் கொடுக்கின்றது. சைவ சித்தாந்த மன்றத்துடன் எமது கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் கைகோத்துள்ளமையும் எமக்கு களிப்புத்தான்.


தங்கள் இந்த நூல் மீள் பதிப்பு கனடாவில் மட்டுமல்ல காரை மக்கள் வாழ் அனைத்து நாடுகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், இதற்கான அனைத்து உதவிகளையும் எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்க "முதுசங்களைத் தேடி" நிர்வாக இணைப்பாளர்கள் இணைந்து செயற்பட காத்திருக்கின்றார்கள் என்று கூறி, மேலும் தங்கள் நிகழ்வும் இனிதாய் நிறைவுற இறைவனை வேண்டுகின்றோம்.


                              யாதானும் நாடாமால், ஊர்ஆமால், என்ஒருவன் 
                                சாந்துணையும் கல்லாத வாறு. – குறள் 397


                                                                             நன்றி.


வணக்கம்.
நிர்வாகம்,
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்.

Letter KWS UK 01Letter to Book UK 02

திரு.ச. அருணாசலம் அவர்களின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்புற சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் வாழ்த்துரை

swiss logo
 
                                                   உ
                                            சிவமயம்
"தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி"

SWISS
சைவசித்தாந்த மன்றம் கனடா
தலைவர்: சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம்


அன்புடையீர் வணக்கம்


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வானொடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடியாகும். அப்பெருங்குடியினர் பண்பாட்டுடன் சமயச் செந்நெறியிலும் சிறந்து விளங்கினர். இவர்கள் மேற்கொண்ட சமயநெறி சிவநெறியாகும். 
ஈழமணித்திருநாட்டின் யாழ்ப்பாணத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் பின்பற்றிய வழியில் கிராமங்கள் தோறும் கால்நடையாக சென்றும்இ அரிக்கன் லாம்புடன் மாட்டுவணடியிலும் சென்று அர்ததமுள்ள வைசவசித்தாந்த கருத்துக்களையும், சமயச்சொற்பொழிவுகளையும் பரப்புரை செய்து அதில் வெற்றியும் கண்டவர் காரைநகரைச் சேர்ந்த அருணாசல உபாத்தியார் என்ற மகான் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.


வைசமும் தமிழும் கண்ணெனக் கொண்டு அருளியல், வாழ்வியல் வழிபாடுகள் சிறக்கவும், எமது கிராமத்திலும், யாழ்ப்பாணத்திலும் பல பாடசாலைகள் உருவாகுவதற்கும் தனது செல்வங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அயராது தொண்டாற்றிய பெரிய மகான் என்பதில் பூரிப்படைகின்றோம்.


                     "அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்
                          தோற்றிய திதியே ஓடுங்கி மலத்தளதாம்
                                   அந்தமாதி என்மனார் புலவர்"


சைவப் பாடசாலைகளை நிறுவவும், சைவ ஆசிரிய கலாசாலையை உருவாக்கவும், சைவ ஆசிரியர்களை தோற்றிவிக்கவும் அயாரது தொண்டாற்றிய பெரிய மகான் திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் மீளவும் வெளிவருவதையிட்டு பெருமகிழ்ச்சயடைகின்றோம்.


சைவசித்தாந்த மன்றம் கனடா எடுத்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும். இவர்கள் இதனோடு நின்றுவிடாது புலம்பெயர் தேசத்து இளம் சமூதாயத்திற்கு தேவையான சைவசமயத்தவரின் உணவுப் பயன்பாடுகள், சமயஅறிவு போன்ற நூல்கள் தொடர்ந்து வெளிவருதல் வேண்டும் என்றும், திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ்த்துகின்றோம்.


                     "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"


                                                                   நன்றி


                                                                                                         இங்ஙனம்.
                                                                                 சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                          செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                        சுவிஸ் வாழ் காரை மக்கள்

                                                                                                        24.07.2015

swisskarai24-07-2015-page-001

நூல் வெளியீட்டு விழா சிறப்புற ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் வாழ்த்து செய்தி

'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூலின் இரண்டாம் பதிப்பினை கனடா சைவ சித்தாந்த மன்றம் வரும் சனிக்கிழமை (25.07.2015) அன்று கனடாவில் வெளியிடவுள்ள நிலையில், ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும், காரைநசர் அபிவிருத்தி சபைத் தலைவருமாகிய திரு. பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழா சிறப்புறவும் சைவ உலகம் எழுச்சி பெற்று விளங்கவும் வழங்கிய வாழ்த்துச் செய்தியை இங்கே எடுத்து வருகின்றோம்.

vigneswaran
நூல் வெளியீட்டு விழா சிறப்புற ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் வாழ்த்து செய்தி


சிவநெறிச்செல்வர்.திரு.தி.விசுவலிங்கம்
தலைவர்
சைவசித்தாந்த மன்றம், கனடா

பேரன்புடையீர்,

ஆறுமுகநாவலருக்குப் பின் சைவத்தின் காவலராகவும் அர்த்தமுள்ள வகையில் சைவ சமயம் நிலை பெறுவதற்கும் உழைத்த உத்தமர்களில் அருணாசலம் உபாத்தியாயர் முதன்மையானவர். இவர் பாடசாலைகள் பலவற்றை அமைப்பதற்கு மூலகாரணமாக இருந்ததுடன் அப்பாடசாலைகளில் தமிழையும், சைவதத்துவங்களையும் உரிய முறையில் போதிக்கக் கூடிய ஆசிரியர்களை உருவாக்குவதற்காக ஆசிரிய கலாசாலையையும் பல சிரமங்களின் மத்தியில உருவாக்கினார். 

கடந்த வாரம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக நான் சென்ற போது அங்கு உரையாற்றிய ஒருவர் இக்கலாசாலை ஆரம்ப கர்த்தா அருணாசலம் உபாததியாயர் என்று பெருமைப்படுத்திய போது நானும் எனது ஊரைச் சேர்ந்த மகான் என்பதில் சந்தோஷப்பட்டேன். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல சமய, தமிழ் நிகழ்வுகளின் அருணாசலம் என்ற பெரியாரின் அர்ப்பணிப்பான சேவைகள் நினைவு கூரப்படுவதைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன். 

வியாவில் சைவ வித்தியாசாலையைத் தோற்றுவிப்பதற்கு அமரர் உயர்திரு வே.நாகலிங்கம் அவர்களை உற்சாகப்படுத்திய பெரியார் அருணாசலம் அவர்கள் இவருடன் இணைந்து ஒரு காந்தியவாதியாகவும் திகழ்ந்தார். 
சிவப்பணியும் தமிழ்பணியும் ஆற்றிய அருணாசலம் மகான் சைவப்பெருமக்களால் போற்றி வணங்கக்கூடியவர். அவருடைய பணிகள் அடங்கிய வரலாற்றுத் தொகுப்பினை மீள் பதிப்புச் செய்து அகிலமெல்லாம் அவர் புகழைப் பரப்பும் தங்கள் பணி சிறப்புற வாழ்த்துகின்றேன். 

பெரியார் வாழ்ந்து காட்டிய வழியில் நாம் வாழவும் அவர் ஆற்றிய பணிகளில் ஒரு பகுதியையாவது நாமும் செய்து எமது அடுத்த சந்ததியினருக்கு வழிகாட்டவும் இந்நூல் வெளியீடு உதவும் என எதிர்பார்கிறேன். எனது அன்புக்குரிய மாணவி திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் அருணாசல மகானின் பணியையும் புகழையும் மேன்மைப்படுத்துவதில் எடுக்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன். 

காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவர் என்ற முறையில் இப்புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெறவும், அதன் மூலம் சைவ உலகம் எழுச்சி பெறவும் திண்ணபுரத்தில் உறையும் சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன். 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

ப.விக்கினேஸ்வரன்
தலைவர் 
காரை அபிவிருத்தி சபை

மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களின் புகழ் எண்திசையும் ஒலிக்க காரை இந்துவின் வாழ்த்துக்கள்

Vasuki.T

புண்ணிய பூமியாம் காரையம்பதியின் மைந்தனாகவும், சைவத்தின் விடி வெள்ளியாகவும் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகள் முன் அவதரித்த அருணாசல உபாத்தியாயர் (1864) அவர்கள் சைவத்திற்கும், தமிழிற்கும் ஆற்றிய பணி மகத்தானது என்பதற்கு இன்றும் அவரது சேவை மக்களால் மதிக்கப்படுகின்றது, போற்றப்படுகின்றது என்பது மட்டுமன்றி அவரது பணி காலத்தால் மறையாத அளப்பெரும் சேவையாகக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றையும், மாண்புமிகு சேவைகளின் பெருமைகளையும் தாங்கிய அல்வாய் திரு. சி. கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு. ச அருணாசலம் அவர்கள்” எனும் நூலின் இரண்டாம் பதிப்பை புலம்பெயர் தேசங்களில் வாழும் காரை மக்கள் ஒன்று கூடி கனடா சைவ சித்தாந்த மன்றத்தால் வெளியிடுவதனூடாக அறியக் கூடியதாக உள்ளது.

இன்று எமது சைவமும் தமிழும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தென்றால் எம் மக்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த நாவலர் பெருமானின் மகத்தான சேவையாகக் கருதலாம். அதனால் சமயகுரவர்கள் நால்வர்களுக்கு மேலாக ஜந்தாவது குரவராக நாவலர் பெருமான் போற்றப்படுகின்றார். அவ்வகையில் நாவலர் பெருமானின் வாழ்வியல் நெறிப்படுத்தலினாலும், அவரின் மேற்கொண்டுள்ள அளவிலாப் பக்தியினாலும் கவரப்பெற்ற காரையூர் அருணாசல உபாத்தியாயர் நாவலரின் பணியை தன்வாழ்நாளில் தொடர்ந்தார். தனது இளம் வயதிலேயே (இருபதுகளில்) தன்னலம் கருதாது சைவத்திற்கும், தமிழிற்கும் ஏற்படும் பாதிப்பு கண்டு விழித்தெழுந்தார். அந்நியராட்சிக் காலத்தில் மக்கள் ஆங்கிலக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக் காரணமாக மதம் மாற்றப்படுவதை எதிர்த்தார். தாய் மொழியாம் செம்மொழியாகிய தமிழிற்கு ஏற்படும் அநீதி கண்டு மனம் கொதித்தார்.

அருணாசல உபாத்தியாயர் என்ற மாமனிதரின் அன்றைய விழிப்பு, பல பிரதேசங்களிலும் சைவப் பாடசாலைகள் தோற்றம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததுடன், சைவம் தழைத்தோங்கவும் வழிசமைத்தது எனலாம். இதற்காக அவர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். கால் நடையாக ஊர் ஊராகச் சென்று கிராமங்கள் தோறும் சைவப் பள்ளிகளைத் தோற்றுவிப்பதிலும், சைவ ஆசிரியர்களை உருவாக்குவதற்காக ஆசிரிய கலாசாலையை நிறுவுவதிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அவர் பெரும் பொருள் படைத்த செல்வந்தர் அல்ல. அவருடைய மனஉறுதி, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு என்பன, தான் கொண்ட குறிக்கோளை அடைவதற்கு காரணமாகியது.

அவரது மகத்தான சேவைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பல சைவப் பாடசாலைகளில் எம் கிராமத்தின் மத்தியில் நூற்றாண்டுகள் கடந்து தலைநிமிர்ந்து நிற்கும் பாடசாலைகளைக் குறிப்பிடலாம். வியாவில் சைவ வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியன சைவத்தையும், தமிழையும் போதிக்கும் பாடசாலைகளாகவும், திருஞானசம்பந்தர் வித்தியாலயம் என அழைக்கப்பட்ட இன்றைய கலாநிதி ஆ. தியாகராசா ம.ம.வி.(காரைநகர் இந்துக் கல்லூரி) சைவத்தையும், ஆங்கிலக் கல்வியையும் போதிக்கும் பாடசாலையாகவும் உருப்பெற்றது.

இத்தகைய மகத்தான சேவையாளன் காரை மண்ணின் மைந்தனாக அவதரித்தமை எமது மண்ணிற்கு பெருமை சேர்க்கின்றது. 1864-1920 காலப்பகுதியில் வாழ்ந்த இவரது சேவைகளைப் போற்றி எமது மக்கள் இரண்டாம் பதிப்பாக இந்நூலை வெளியிடுவது கண்டு மனமகிழ்வடைகின்றேன். ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல அவர் எப்படி வாழ்ந்தார், அவர் சமூகத்திற்கு விட்டுச் சென்றவை எவை என சிந்திக்கும் போது மகான் அருணாசலம் அவர்களின் சேவை ஞாலத்தில் மாணப் பெரிது என்பதைப் பறைசாற்றுவதாக இந்நூல் வெளியீடு அமைந்துள்ளது. இந்ந}ல் வெளியீடானது அவருடைய சேவையைப் போற்றுவது மட்டுமன்றி, இன்றைய சமூகத்தினருக்கு வாழும் வழியைக் காட்டும் மகத்தான நூலாகக் கருதுகின்றேன். 

அவ்வகையில் இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல் சிறப்புற வாழ்த்துகின்றேன். இந்நூலை வெளியிட சிந்தித்த கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் சிந்தனை, செயல்வடிவம் போற்றுதற்குரியது. இந்நூல் வெளியீட்டினூடாக பெருமகன் அருணாசலம் அவர்கள் இன்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை உணர வைத்துள்ளது. அவ்வகையில் சைவ சித்தாந்த மன்றத்தினருக்கு மாமனிதர் சிவத்திரு.அருணாசலம் அவர்களின் எண்ணக்கருவுலத்தினூடாகத் தோற்றம் பெற்ற பாடசாலையான காரை இந்துக் கல்லூரியின் அதிபர் என்ற வகையில் மன நிறைவான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். இந்நூல் வெளியீடு சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர தில்லைக் கூத்தனின் அருளாசியை வேண்டி வாழ்த்துகின்றேன்.


                                                                            நன்றி

திருமதி வா.தவபாலன்

அதிபர்

யா/கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

“தியாகசொரூபி அருணாசலம்” – புலவர் திருமதி.பூரணம் ஏனாதிநாதன்

Pooranam Teacher

நூல் வெளியீடு வாழ்த்துச் செய்தி

கனடா சைவ சித்தாந்த மன்றம் 25.07.2015 சனிக்கிழமை “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட உள்ளது. இப்பெரும்பணி பாராட்டிற்கு உரியது. செந்தமிழும் சிவநெறியும் தழைத்து ஓங்க தளராது பணி ஆற்றிய இப்பெரியாரின் செயற்கரிய செயலை சைவ உலகம் அறிய இப்பதிப்பு வகை செய்யும்.

முல்லை, மருதம், நெய்தல் சூழு;ந்த இயற்கை வளம் கொழிக்கும் காரைநகரில் வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத்துறை விளங்க சரித்திர நாயகன் அருணாசலம் தோன்றினார். தோன்றின் புகழொடு தோன்றிய அருணாசலப் பெரியார் நாவலரின் பரந்து பட்ட ஆளுமையினால் ஈர்க்கப்பட்டார். நாவலர் வழி நின்று அவரது மரபு வழுவாத சமயக் கொள்கைகளையும், பணிகளையும் பேணும் கடமையில் ஈடுபட்டார். நாவலரது இலட்சியங்களை பூர்த்தி செய்வதில் அயராது உழைத்தார். “ஈழத்திருநாட்டில் சைவத்தமிழ் பாடசாலைகளை நிறுவினார். தான் பிறந்த காரைநகராம் பொன்னாட்டில் சைவப் பெரியோரின் உதவியுடன் சுப்பிரமணிய பாடசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவில் சைவபரிபாலன சபை வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளை நிறுவினார்.

“எழுத்தறிவித்தவன் இறைவன்” எனவும் “எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” எனப் போற்றப்படும் கல்விச் செல்வத்தை வாரி வழங்க பாடசாலைகளையும் ஆசிரியர்களையும் உருவாக்கினார். சைவத்தமிழ் வாழ உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தியாக சொரூபி அருணாசலம் உபாத்தியாயரின் பொதுநலப் பணிகள் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலைப் படித்து அறிந்து கொள்வோம். 
இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீடு சிறப்பாக நடைபெற இறை ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்.

புலவர் திருமதி.பூரணம் ஏனாதிநாதன்
சின்னாலடி, காரைநகர்

 

நூல் வெளியீட்டு விழா சிறப்புற வியாவில் சைவ வித்தியாலய அதிபர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

Viyavil

திரு.ச.அருணாசலம் அவர்கள் குமிழங்குளி காரைநகரைப் பிறப்பிடமாகவும் தங்கோடை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஒரு கல்விச் சேவையாளர் மட்டுமன்றி சமூகச் செயற்பாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த முதன்மையானவர். "மக்களோடு மக்களாக மக்களுக்கு மகத்தான பணியாற்றியமையினால்" மக்களின் சொத்தாகப் போற்றப்படுகின்றார். 


யா-வியாவில் சைவ வித்தியாலயமே காரைநகரில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சைவ பாடசாலையாகும். அதுமட்டுமன்றி சைவ சமயத்ததை வளர்க்கும் நிறுவனமாகவும் இப்பாடசாலை விளங்குகின்றது. திரு.ச.அருணாசலம் அவர்கள் ஆசிரியர்களது வாண்மை விருத்திக்கும் வித்திட்டவராகத் திகழ்ந்தது மட்டுமன்றி இவரது செயற்பாட்டினைத் தொடர்ந்தே ஆசிரியர் பயிற்சிக கலாசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. இவரது மகத்தான பணி என்றென்றும் போற்றப்பட வேண்டி ஒன்றாகும். 


கல்வியைப் புகட்டுவதில் முனைப்பாகத் திகழ்ந்து சிறந்த கல்விமான்களை இக்கிராமத்தில் உருவாக்கிய பெருமைக்குரியவராவார். இவ்வாறான இவரது பணி என்றென்றும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாணவர்களில் ஆரம்பித்து கிராமம், சமூகம், நகரம், நாடு என்ற அளவிற்கு இவரது பணியும் சேவையும் வளர்ச்சியடைந்தமையை முன்னிட்டு எமது பாடசாலை சமூகம் பெருமையடைவதுடன் நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகின்றோம். 


திரு.க.சுந்தரலிங்கம்
அதிபர்
யா-வியாவில் சைவ வித்தியாலயம்
காரைநகர்

 

மேலும்பணியாற்றி மிக்குயர்ந்து வாழி – கவிஞர் இராசையா குகதாசன் –

Kugathas (1)

சிவத்திரு தி.விசுவலிங்கம்
தலைவர்இ கனடா சைவ சித்தாந்தமன்றம்      
பெருமதிப்புக்குரியீர்!
மேலும்பணியாற்றி மிக்குயர்ந்து வாழி.
             
உலகளாவிய  ரீதியில் சைவநெறி முறைகளைப் பரப்புவதிலும்,
பாதுகாப்பதிலும் பணியாற்றிவரும் கனடா சைவசித்தாந்த மன்றத்தினரதும், அதன் ஸ்தாபகத்தலைவரும்,பதிப்பாசிரியருமான சிவத்திரு தி.விசுவலிங்கம் அவர்களதும்
பெருமுயற்சியால் வெளிவரும்  'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு ச.அருணாசலம் அவர்கள்'என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.

திரு ச.அருணாசலம் அவர்களின் சைவத்தமிழ்ப் பணிகளின் வீச்சினால் திருநெல வேலியில் உருவாக்கப்பெற்ற சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் ஏறக்குறைய ஒன்பது வருடங்கள் பணிப்பாளர் சபை உறுப்பினராகஇசமயத்திட்டப் பணிப்பாளராகஇ கொடிநாட் குழுத்தலைவராக பணியாற்றியிருக்கின்றேன்.  அக்கால கட்டத்தில்தான் சைவப்பெரியார்சிவத்திரு ச.அருணாசலம் அவர்கள் சைவத்தமிழ் உலகிற்கு ஆற் றியபணிகள் பற்றிவிரிவாக அறிய முடிந்தது. விபரங்களை அறிந்து வியப்படைந்த எனக்கு இத்துணைபணியாற்றிய  ஒருவரை  இந்த சமூகம் கௌரவிக்கவும்இ நினைவு கூரவும் தவறவிட்டுவிட்டது என்ற நியாயமான கோபமும் ஏற்பட்டதுண்டு.

              மேலை நாடுகளில் எல்லாம் தத்தமது மொழிக்கு,சமயத்திற்கு தொண்டுசெய்தவர்கள் பற்றிய தெளிவான சரித்திரச்சான்றுகளை, பணிகளை என்றும் நினைவு கூரத்தக்கதாக, எதிர்காலச் சந்ததிகள் அறியக்கூடியதான வழிவகைகளைச் செய்திருக்கின்றார்கள், அழியாமல் பேணிப் பாதுகாத்தும் வைத்திருப்பார்கள்.  ஆனால் நம்மவர்கள் எவற்றையும்  இலகுவில் மறந்துவிடுவதையிட்டும் வருந்தியதுண்டு.  நம்மவர்களின் அந்தக்குறையை இன்று இச் சைவசித்தாந்த மன்றம் போக்கிய தையிட்டு சைவத்தமிழ் உலகு சார்பாக அவர்தம் பணிக்கு வாழ்த்தைத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றேன்.

                  மேதகு ச.அருணாசலம் போன்ற தியாகிகளின் எண்ணற்ற செயற்பாடுகளின் விளைவாகவே இன்னும் சைவமுந் தமிழும் இங்கு நீடு வளர்ச்சி பெற்றது என்றால் மிகையாகாது.கிடைத்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்று சிந்திக்காது ஊண் கொடுத்து,  உடை கொடுத்து, கற்க நூல் கொடுத்து, சைவ ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் உருவாக்க தன் சொத்தையே கொடுத்த ஒரு பெருந்தகை இவர். இவற்றை ஒரு தொண்டாகவே செய்து வந்த
பெருமகன்.

             பலவரலாறுகள் மறைக்கப்பெற்றும் ,  மறக்கப் பெற்றும் வருகின்ற
இன்றைய காலச்சூழலில் இப்பெரியாரின் பணிபற்றிய விரிவானவிபரங்கள் அடங்கிய
நூலை வெளியிட்டுவைக்கும் மன்றத்தினரும், பதிப்பாசிரியரினதும் பணிகள் பெரும் பாராட்டுக்குரியவை மட்டுமன்றி சைவ உலகின் நன்றிக்குமுரியதாகும்.

          காரைநகர்ப் பிறந்தோர் மட்டுமல்ல சைவத்தமிழ் உலகோர் யாபேரும்
பெருமைப்படக்கூடிய இவ்வரலாற்று நூலை வாங்கிப் பேணுவதும் பாதுகாப்பதும் ஒவ்வொரு சைவ சமயியின் கடமையுமாகும். 

           நூல் வெளியீட்டு விழா சிறக்கவும்இமன்றத்தின் பணிகள் செழிக்கவும்
எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரன் தாளை மனமொழி மெய்களால்
வழுத்துகின்றேன்.

                                                                                                              அன்புடன்
கொழும்பு. 11                                                                            தெய்வத்தமிழிசைக்கவிஞர்
நாயன்மார்கட்டு                                                                                                                                                                                                                                       இராசையா குகதாசன்.  

 

 

ஈழத்தமிழ் கல்வியாளர் பற்றிய நூல் மீள்பதிப்பாக கனடாவில் வெளியிடப்படுகின்றது – தமிழ்நெற் –

tnlogo

ஈழத்தமிழ் கல்வியாளர் திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் மீள்பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் வரும் சனிக்கிழமை (25.07.2015) அன்று வெளியிடப்பட இருப்பது குறித்து தமிழ்நெற் (www.tamilnet.com) இணையத்தளம் ஆய்வுக்கட்டுரை ஒன்றை நேற்று (22.07.2015) அன்று வெளியிட்டுள்ளது.

இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன் யாழ் குடாநாட்டிற்கு வெளியே உள்ள காரைதீவு(காரைநகர்) என்னும் கிராமத்தில் பிறந்த தனித்துவமான ஒரு கல்வியாளர் பற்றி 45 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட பெறுமதி மிக்க வெளியீட்டையே கனடா சைவ சித்தாந்த மன்றம் மீள்பதிப்புச் செய்து வெளியிடுகின்றது.  

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நூலின் மீள்பதிப்பு வெளியீடு இளைய தலைமுறையினருக்கும், கல்வியாளர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான கட்டுரையை கீழே காணலாம். 

Book On Eezham Tamil Educationalist Reproduced In Canada

[TamilNet, Wednesday, 22 July 2015, 16:49 GMT]

The Toronto-based Saiva Siddhanta Manram in Canada has reproduced a valuable old publication on a unique Eezham Tamil educationalist, Aru’naasala Upaaththiyaayar, born 150 years ago at Kaarai-theevu (Kaarainakar), an island off Jaffna Peninsula. The reprint, which will be released on Saturday at Scarborough Civic Centre, is of much historical importance to today’s younger generation of Eezham Tamils as well as to academics studying the affairs of the island of Ilangkai/ Lanka, to understand the discourse of the struggle for self-respect waged by the nation of Eezham Tamils in the times of British colonialism. The teacher devoted his entire life in challenging and edifying the then British and American ‘educational imperialism,’ which demanded that one has to become a Christian in order to become a teacher in any of the government recognised schools. 

Commenting further on the book on Kaarai-theevu Aru’naasala Upaaththiyaayar, a student of History coming from the same island said that in the 19th century, Kaarainakar has produced two great educationalists, Subramaniar Ampalavaa’nar alias Allen Abraham (1865–1922) and Sankarappi’l’lai Aru’naasalam (1864–1920). But their lives made a sharp contrast in responding to the times and in contributing to the educational needs of the people.

Ampalavaa’nar born at Payirik-koodal and Aru’naasalam born at Kuddip-pulam of the same island went together in 1881 to the teacher training facility of the American Mission institution at Thellippazhai (which was in the complex of today’s Union College that will be celebrating its bicentenary in 2016).

Ampalavaa’nar who had lost both his parents to the cholera epidemic of 1876, got converted to Protestant Christianity on joining the Teacher Training School and became Allen Abraham. But Aru’naasalam delayed the process by saying that he would do it after writing the final exams. When the demand for conversion pressed him after the exams, Aru’naasalam, taking his bags on one night, ran away from the institution. He didn’t receive his academic or teacher qualification certificates. 

Allen Abraham, later getting university education at the Jaffna College of the American Mission and receiving a degree from the Culcutta University, became a Professor of Mathematics and world recognized Astronomer. He was the first native of Ceylon to get Fellow of the Royal Astronomical Society (FRAS) recognition from the British in 1911, for correctly calculating the transit of the Halley’s Comet. However, at Jaffna College, he could become only a ‘functioning’ Vice Principal, as such posts were then not conferred on natives. It is said that a top person of the college once threw his research papers into pouring rain.

Aru’naasala Upaaththiyaayar on the other hand decided to devote his life to fight against the injustice of colonialism. He started his own school at his birthplace Kuddip-pulam in 1885. Another was started at Viyaavil in the island. He was behind the formation of yet another school at Kaarai-theevu in 1889, which later became Kaarainakar Hindu College. Around 10 more schools were started in different parts of Jaffna Peninsula through his inspiration. 

With a simple Veaddi and shawl, and without any footwear, the teacher walked the length and breadth of the peninsula seeking people’s support for his educational mission.

The life obsession of Aru’naasala Upaaththiyaayar was liberating teacher training. He started the first native teacher training school at Kaarai-theevu with free boarding and lodging facilities. But it had to be closed down due to missionary opposition and non-recognition of the colonial government. 

He made a second attempt of starting a teacher training school at Keerimalai. Again the government refused recognition, citing ‘lack of facilities’. Relentlessly, in 1915, he made a third attempt of running a training school in the premises of the Arumuga Navalar School at Va’n’naar-pa’n’nai. Great scholars like Chunnaakam Kumaraswamip Pulavar were guest lecturers at the training school. Yet, the colonial education department didn’t want to give recognition to a native initiative. 

Aru’naasala Upaaththiyaayar fought the case at the Legislative Council, through Mr. Rajaratnam and Tamil political stalwarts of that time. Finally in 1916, the colonial administration said that a non-Protestant section could be created for Saiva teachers at the Government Teacher Training School at Koappaay. (Catholic Church was already running its own teacher training school). This section, headed by Aru’naasala Upaaththiyaayar, was started with just 7 students.

Upaaththiyaayar passed away in 1920, after making his point heard and justified. Later, when certain attitudinal issues cropped up at Koappaay, Mr. Rajaratnam, who continued the educational mission of Upaaththiyaayar through Hindu Board of Education, started a teacher training school for Saiva teachers at Thirunelveali. This was handed over in good faith to Colombo government after ‘independence,’ only to see its shutdown. 

Eezham Tamil scholar, the late Pa’ndithama’ni Ka’napathippi’l’lai, once wrote that Naavalar, Aru’naasala Upaaththiyaayar and Rajaratnam were the “Three Eyes” (as that of God Siva).

Looking back, religion or caste, as some would try to project, was not the ultimate underlying issue. Actually the local discourse was taking place mainly between two formations of the same caste. The struggle of larger dimension was a dialectical process set against the backdrop of the paradigm of colonialism and imperialism. Post 1920s show the synthesis of both the Saiva and missionary school products joining hands in social reformation, nationalism and in anti-imperialist struggle, led by movements like the Jaffna Youth Congress. 

The paradigm set by colonialism is yet to be over. It has only taken new forms with added actors. As an occupied nation facing structural genocide, Eezham Tamils are yet to see the power to decide their education.

Jaffna College has documented Allen Abraham to English readers in a miscellany brought out in 1985. The documentation is presented in PDF along with this feature. This has to be read together with the book on Aru’naasala Upaaththiyaayar for the historiographical purposes of understanding the dialectical process of the past, in order to grasp and synthesise the spirit and enlightenment that are needed to shape and spearhead the struggle for future. 

Appreciably, the Saiva Siddhantha Manram in Canada has chosen to reprint the book on Aru’naasala Upaaththiyaayar, for that spirit of self-respect in him for his nation, and his determination for struggle, have to be introduced to today’s generation. As a humble and selfless person, not on the side of any establishment, he was easily forgotten. 

Another significant person who needs revisit today is Mr. K. Chooran, who had the same spirit of self-respect in starting a Saiva school for the oppressed sections of people at Theavaraiyaa’li in Vadamaraadchi, a hundred years ago.

Related Articles:

12.06.14   Navalar documents: Tamils should work for own revival of cul.. 

 Courtesy: TamilNet.com

 

நாவலர் வழியில் மகான் அருணாசல உபாத்தியாயர் -ஒய்வுநிலை அதிபர் திரு.ந.பரமசிவம்-

      Paramasivam master   

                           வாழ்த்துச் செய்தி


        நாவலர் வழியில் மகான் அருணாசல உபாத்தியாயர்.
                                     (கி. பி 1864 – 1920)


'நாவலருக்கு பின் அருணாசலம் தான் இந்நாட்டில் ஒரே ஒரு மனிதர்' என்று குறிப்பிட்டுள்ளார் தம்பு கைலாய பிள்ளை அவர்கள். (தம்புகைபிலாய பிள்ளை ஆறுமுக நாவலாரின் தமையனார் மகன்)


நாவலருக்கு பின் இலட்சிய வேட்கையுடன் வாழ்ந்தவர் அருணாசல உபாத்தியாயர். காரைநகரில் மட்டுமல்ல யாழ்குடாநாடு முழுவதும் கல்வி வளர்ச்சி பணியை மேற்கொண்டு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இவர் வாழ்ந்த காலம் இலங்கையின் சமய மறுமலர்ச்சி காலம் என்பது ஈண்டு குறுப்பிடத்தக்கது. சமய மறுமலர்ச்சியில் காரைநகர் தம்பங்கையாற்ற முன்னெடுத்து சென்றவர் ஆவார்.


அருணாசல உபாத்தியாயர் ஒரு பொது நலவாதி ஆவார். தம் சொத்துக்களை விற்று கல்விப் பணியாற்றியதுடன் மாணவர்களுக்கு உண்டி உறையுள் கொடுத்து தமிழ் மொழிப்பற்றும் சைவப்பற்றும் உடைய சமூகம் ஒன்றை கட்டிஎழுப்பினார். இவர் பற்றி தம்புகையிலாய பிள்ளை 1936 பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


'பரோபகாரிகள் என்று யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களுள் இரண்டாவதாக நான் மதித்து இருப்பது அருணாசல வாத்தியாரையே' என்று உயர்வாக குறிப்பிட்டிருப்பது மனங்கொள்ளத்தக்கது.


அருணாசல உபாத்தியாயர் தரும சிந்தனையாளன் தருமத்தின் வழியில் நம்பணியை மேற்கொண்டு சைவ உலகொன்றை கட்டி காத்த பெருமை அவரையே சாரும்.


இவரின் முயற்சியினால் யாழ்குடாநாடு முழுவதும் பத்திற்கு மேற்பட்ட பாடசாலைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டதுடன் சைவ ஆசிரிய கலாசாலை ஒன்றையும் நிறுவி சைவ ஆசிரியர்களை தோற்றுவிக்கும் பணிக்கு முன்னோடியாக திகழ்ந்தார். சைவ பாடசாலையை நிர்வகிப்பதற்கு இந்து வித்தியா சங்கம் ஒன்றை ஆரம்பித்தார். இதுவே பின்னர் யாழ்ப்பாணம் இந்துசபை என அழைக்கப்படலாயிற்று. ஆன்ம சக்தியுடன் சைவசமய பணியை முன்னெடுத்துச் சென்ற மகான்.


இவ்வாறான பொது நலவாதிகளை இன்று நம்மிடையே காண்பது அரிதினும் அரிது காலம் கடந்தேனும் அவரை நினைவு கூர்ந்து நூல்வெளியிடும் கனடா சைவசித்தாந்த சபையின் பணி என்றும் போற்றத்தக்கதாகும். இவர்கள் பணி சிறக்க மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகும்.


வணக்கம்


திரு. ந. பரமசிவம் B. A, PGDE, S.L.E.A.S
ஓய்வு நிலை அதிபர்.

 

‘காரைநகரின் கல்வி ஊற்று’ சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் திருமதி.கௌ.அருள்மொழி அவர்களின் வாழ்த்துச் செய்தி

    Gowry

                 காரைநகரின் கல்வி ஊற்று


காரைநகர் மக்களின் கல்விக்கான ஊற்றாக விளங்கியவர் திரு.ச.அருணாசலம் அவர்கள். இவர் அக்காலத்தில் சைவ சமயத்தை நிலைநாட்டுவதற்காக எமது பாடசாலையை உருவாக்குவதில் ஊன்றுகோலாக அமைந்தவர். 


அத்துடன் ஆசிரியத்துவத்திற்கு இலக்கணமாக தம் உடல்இ பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முதல் ஆசிரியராகக் கடமையாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் ச.அருணாசலம் அவர்கள் தனது சிந்தனைப்படி சைவ ஆசிரியர் கலாசாலையை முதன்முதலாக இப்பாடசாலையுடன் இணைந்து ஆரம்பித்தார் என்ற பெருமைக்கும் உரியவர். 


இப் பெருமகனாரின் நூல் வெளியீட்டில் ஆசியுரை வழங்குவதில் பெருமை கொள்வதுடன் அன்னாரின் பணியை பாடசாலை சமூகம் என்றும் நன்றியுடன் நினைவு கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 

திருமதி. கௌ.அருள்மொழி
அதிபர்
யா-சுப்பிரமணிய வித்தியாசாலை
காரைநகர்

Greetings Subramaniaya