Tag: Karainagar Hindu

காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு

காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு

‘யாழ்-கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம’ என்று அலுவலக முறையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் பயன்படுத்தி வந்த பாடசாலையின் பெயரை ‘காரைநகர் இந்துக் கல்லூரி’ என்று பயன்படுத்துவதற்கு கல்வித்திணைக்களம் அனுமதி வழங்கியமையை அடுத்து இப்புதிய பெயரின் பெயர்ப் பலகையை சம்பிரதாய பூர்வமாகத் திரை நீக்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(04-01.2015) அன்று காலை11:00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக பாடசாலை வட்டாரம் எமது இணையத்தளத்திற்கு அறியத்தந்துள்ளது.

இந்நிகழ்விற்கு கல்விப்பகுதியைச் சேர்ந்த நிர்வாக அலுவலர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டடுள்ளனர்.

நிகழ்வு பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.

யாழ்/கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் காரைநகர்
காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு கல்லூரி வளாகத்தில் 4.01.2016 திங்கட்கிழமை முற்பகல் 11மணிக்கு தலைவர் திருமதி வாசுகி தவபாலன்(அதிபர்) தலைமையின்கீழ் நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினர்

கௌரவ செயலாளர் இ.ரவீந்திரன்(கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்),

சிறப்பு விருந்தினர்கள்

திரு.எஸ். உதயகுமார்(மாகாண கல்விப்பணியாளர் – வடமாகாணம்),

திரு.சு.சுந்தரசிவம்(வலய கல்விப்பணிப்பாளர் – தீவகம்),

கௌரவ விருந்தினர்கள்

திரு.ப.விக்னேஸ்வரன்(தலைவர் காரை அபிவிருத்திச்சபை),

திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்(கோட்டக்கல்விப் பணிப்பாளர்)

Name Board 1Name Board 2

 

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளார் ஓய்வு பெறுகின்றார்

காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளராக நீண்ட காலம் சேவையாற்றி வந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள்; எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஒய்வு பெற உள்ளார். 


காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) வளாகத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மார்கழி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலை மீண்டும் திறக்கப்படும்போது அவர் ஓய்வு பெற்றுச் சென்றுவிடுவார் என்ற காரணத்தினால் அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு கல்லூரி சார்பில் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் உரையாற்றினார். 


பாடசாலை சார்பில் ஆசிரியர் திரு.இராஜமோகன் அவர்கள் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA[/caption]

 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில்(காரைநகர் இந்து) தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) தொங்கு நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.செல்வகுமார் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டது. 


மாணவர்கள் இயற்கையான வெளிக்கள சூழலில் கல்வி கற்பதற்கான வாய்பாகவே இந்த நூலகம் அமைக்கப்பட்டது. அன்றை நிகழ்வில் மாணவர்களும் கலந்து கொண்டு நூல்களைப் பெற்ற வாசித்தனர். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்து) Yarl Geek Challenge Season-4 போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயத்தை பெற்று சாதனை!

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்து) Yarl Geek Challenge Season-4 போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயத்தை பெற்று சாதனை!  

தகவல் தொழில் நுட்ப உலகில் வடபுலத்தை ஒர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub இனால் நடத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge Competition நான்காவது ஆண்டாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி எனும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். 

இம்முறை வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய இளநிலைப் பிரிவினருக்கான போட்டி நடைபெற்றது.
பங்கு பற்றிய அணியினர் தமது தயாரிப்புகளை Mobile Apps, Web Application, Hardware Application எனும் வகைகளில் வடிவமைத்திருந்தனர். 

இந்த வகையில் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்ப, கலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களைக் கொண்ட மூன்று அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிக் கொண்டனர். 


பேருந்து ஒன்றின் மிதிபலகையில் பயணிஒருவர் நிற்கும் போது சாரதிக்கு சிவப்பு சமிக்ஞையும், அப்பயணி இரண்டாவது மிதிபடியைத் தாண்டும்போது மஞ்சள் சமிக்ஞையும், மூன்றாவது மிதிபடியைத் தாண்டியபின் பச்சைசமிக்ஞையும் காட்டும் வகையிலும், ஒவ்வொரு பயணியும் பேருந்துக்குள் உட்செல்லும்போது கணக்கெடுக்கக் கூடியவகையிலும் வன்பொருள் தீர்வை வடிவமைத்த மேற்படி கல்லூரி அணி வடமாகாணத்தின் மிகச்சிறந்த வன்பொருள் தீர்வு (Best Hardware Application) வடிவமைப்பாளர்களுக்கான வெற்றிக் கேடயத்தை தமதாக்கி இவ்வாண்டும் சாதனை படைத்துள்ளனர்.


மேலும் சிறந்த Web Application  வடிவமைப்பிற்காக மேற்படி கல்லூரியின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கே.டிலானி, ரி.றோமிலா, எஸ்.பிரசாலினி ஆகியோரின் அணியும், கலைத்துறையைச் சேர்ந்த பி.சஜிதா, என்.டினோஜா, ஏ.துஷியந்தினி ஆகியோரின் அணியும் சிறப்புச் சான்றிதழ்களை (Merit Certificate) பெற்றுக் கொண்டன. 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் தொழில்நுட்ப பாடத்துறை கடந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

கடந்த வருடம் நடைபெற்ற Yarl Geek Challenge Season-3 போட்டியிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு Best Hardware Application Team  எனும் சாதனையை கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தட்டிக் கொண்டமையும் இவ்வருடமும் அதே சாதனையை மேற்படி கல்லூரியே முறியடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Yarl Geek Challenge போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களும் பயிற்றுவித்த தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன் மற்றும் பௌதிக விஞ்ஞானத்துறை ஆசிரியர் திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோரும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்குமுரியவர்கள். 

இவ்வணியினருக்கான பரிசினை Yarl IT Hub  நிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வி.எஸ்.லித்தியா, செல்வன்.எஸ்.சுதர்சன், செல்வன்.எஸ்.விஜயதர்சன் ஆகியோரையும் ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன அவர்களுடன் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களையும் படத்தில் காணலாம். 

Yk01 Yk02 Yk03 Yk04 yk05 yk06 yk07 yk08 yk09 yk10 yk11 yk12

மேற்படி வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!

தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!


தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட உற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரைநகர் இந்துக் கல்லூரி) அரச மற்றும் தனியார் பாடசாலைகள் பிரிவில் பங்கு பற்றித் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


2013/2014ஆம் கல்வியாண்டிற்கான மேற்படி போட்டியில் எமது பாடசாலையின் 'பசுமைப்புரட்சி' (மாணவர்களின் தரவலையம்), 'ஜொலிக்கும் நட்சத்திரங்கள்', 'வெளிச்சவீடு;'(ஆசிரியர்களின் தரவலையம்) ஆகிய தரவலயங்கள் பங்குபற்றியிருந்தன. மூன்று தரவலயங்களும் முதலாம் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.


மூன்றாம் சுற்றுப்போட்டியில் வெளிச்சவீடு (Light House) என்று பெயரிடப்பட்ட கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர்களின் தரவலயம், "Kaizen இன் புதிய பாதை"  என்ற கருத்திட்டத்தின் கீழ் வெற்றியீட்டி தேசிய மட்டத் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


கல்விநிறுவனத்தை 5S முறைமைக்குட்படுத்தி பௌதிக, மனிதவளத்தை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி வினைத்திறன்மிக்க கல்விசார் வெளியீடுகளை உருவாக்குதல், குழுசார்; உணர்வுகளை மேம்படுத்துதல் என்பனவற்றின் மூலம் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு பாடசாலை ஆசிரியர்களால் இக் கருத்திட்டத் தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது. 


Kaizen என்பது நிறுவனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். இது"தொடர் முன்னேற்றம்" என்ற பொருளுடைய ஜப்பான் மொழிச் சொல்லாகும்.


இச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை ஆசிரியர்களின் சேவை, மாணவர்களின் திறன் மற்றும் பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபை உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் பங்களிப்பே காரணம் என அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தெரிவித்தார்.


தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் சிறப்பான பாராட்டிற்குரியவர்கள்


1.    திருமதி தயாளினி ஜெயக்குமார்
2.    திருமதி சிவந்தினி வாகீசன்
3.    திருமதி சகுந்தலா கேசவன்
4.    திரு தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன்
5.    திரு தெய்வேந்திரம் பிரபாகரன்
6.    திருமதி சிவாஜினி லக்ஸ்மன்
7.    திரு.இராசரத்தினம் ஜீவராஜ்
8.    திரு இராசரத்தினம் இராஜகோபால் 
9.    செல்வி சிவரூபி நமசிவாயம்
10.    திருமதி கலாசக்தி றொபேசன்
11.    திருமதி கலாநிதி சிவநேசன்
12.    திரு க. குலசேகரம்


இவர்களுடன் கல்வி சாரா ஊழியர்களான 


1.    செல்வி கு. சோபனா
2.    செல்வி த.கஜந்தினி
3.    திரு.மு.சிவனேஸ்வரன்  ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள். 


இதேவேளையில் இப்போட்டியில் தகுந்த முறையில் விண்ணப்பித்து பாடசாலையின் தரவலய செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்வைப்பதற்கு அறிவுறுத்தல்களை வழங்கி வழிநடத்திய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டிற்குரியவராவர். 


இப்போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமைச் சான்றிதழைப் பெற்ற தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் கல்லூhயில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீ.விக்கினேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 


OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் கலாசாரப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை

TE.20W

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் கலாசாரப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை


தேசிய விவகார அமைச்சினால் நடத்தபட்ட கலாசாரப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்திலிருந்து(காரைநகர் இந்துக் கல்லூரி) கலந்து கொண்ட மாணவர்கள் ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றுகின்ற தகமையைப்பெற்றுள்ளனர். 


இளம் பாடகருக்கான போட்டியில் செல்வி ஆ.அமிர்தாவும் சாஸ்திரிய நடனத்தில் செல்வி.ச.கவிதாவும் சித்திரத்தில் செல்வன் க.சசிதரனும் அறிவிப்பாளருக்கான போட்டியில் செல்வன் க.வினோதனும் கிராமிய நடனத்தில் பங்குகொண்ட குழுவும் என கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திலிருந்து கலந்து கொண்ட மாணவர்களே எதிர்வரும் 13ஆம் திகதி மகரகமவில் நடைபெறவுள்ள தேசியமட்ட போட்டியில் பங்குபற்றுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டவர்களாவர்.


இளம் பாடகர் தெரிவில் வெற்றிபெற்ற செல்வி அமிர்தாவை தயார்ப்படுத்திவிட்ட இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் சாஸ்திரிய நடன வெற்றியாளர் செல்வி கவிதாவையும் கிராமிய நடனத்தில் வெற்றிபெற்ற குழுவையும் தயார்ப்;படுத்திவிட்ட நடன ஆசிரியைகளான திருமதி தே.சந்திரதாசன் திருமதி அகிலவாணி இராஜ்குமார் சித்திரத்தில் வெற்றிபெற்ற செல்வன் சசிதரனை தயார்ப்;படுத்திவிட்ட சித்திர ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அறிவிப்பில் வெற்றிபெற்ற செல்வன் வினோதனை தயார்ப்படுத்திவிட்ட தமிழ் ஆசிரியர் திரு.இ.ராஜகோபால் ஆகியோர் வழங்கிய தீவிர பயிற்சிகளும் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் நேரிய வழிநடத்துதலும் மாணவர்களின் சாதனைக்கு வழிகோலியிருந்தன என்ற வகையில் அவர்களையும் வெற்றிபெற்ற மாணவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டுவதுடன் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளிலும் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமைசேர்க்வேண்டும் என வாழ்த்துகின்றது.


இதேவேளை போட்டியாளர்களும் பக்கவாத்தியக் கலைஞர்களும் ஆசிரியர்களும்  தேசியப் போட்டியில் கலந்துகொள்ள மகரகமவிற்கு சென்று வருவதற்கான செலவினை பொறுப்பேற்று உதவுமாறு தாய்ச் சங்கம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை 75000.00 ரூபாவினை (எழுபத்தையாயிரம) அனுப்பிவைத்து ஊக்கிவித்துள்ளது.

 

நட்பு உதைபந்தாட்டப் போட்டிகள் மூன்றில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி அணிகள் வெற்றிபெற்றன

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அராலி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுடனான நட்பான உதை பந்தாட்டப் போட்டிகள் நான்கில்  காரை இந்து அணிகள் மூன்றில் வெற்றி.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தினதும் (காரை இந்துக்கல்லூரி) சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியினதும் 17வயதுக்கு உட்பட்ட பிரிவு அணிகள் மோதிக்கொண்ட நட்பான உதை பந்தாட்டப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அணி சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணியை வெற்றிகொண்டது. 13 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகள் மோதிக்கொண்ட மற்றொரு போட்டியிலும் காரை இந்து அணியே  வெற்றிக் கனியைத் தனதாக்கியது.


அதே வேளை மேற்குறித்த இரு பிரிவு அணிகளும் அராலி இந்துக் கல்லூரி அணிகளுடனும் மோதிக்கொண்டதில் காரை இந்துவின் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு அணி அராலி இந்துக் கல்லூரி அணியை தோற்கடித்தது. 


13வயதுக்கு உட்பட்ட அணி அபாரமாக விளையாடியிருந்தபொழுதிலும் வெற்றி வாய்ப்பினை இழந்தது. இப்போட்டிகள் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்ததுடன் இரு பாடசாலைகளின் அதிபர்கள் விளையாட்டுத்தறை ஆசிரியர்கள் ஏனைய பல ஆசிரியர்கள் உட்பட திரளான ரசிகர்கள் இப்போட்டிகளைக்  கண்டு களித்தனர்.


பிரித்தனியாவில் வதியும் பாடசாலையின் பழைய மாணவரும் படசாலையின் விளையாட்டுத் துறை வளர்ச்சியில் அக்கறை கொண்டு விளங்குபவருமான திரு.சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்களின் உதவியுடன் உதை பந்தாட்ட அணிகளிற்கு யாழ் மாவட்டத்தின் சிறந்த பயிற்சியாளர்களுள் ஒருவரான திரு.கருணாகரன் அவர்களால் தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 


இதுவரை இவ்வணிகள் பெற்றுக்கொண்ட பயிற்சியினை பரீட்சித்துப்பார்க்கின்ற ஒரு நடவடிக்கையாக நடைபெற்றிருந்த இப்போட்டிகள் பார்க்கப்படுவதுடன் பாடசாலை அணிகள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பயிற்சியின் மூலமாக அணி வீரர்கள் தமது திறனை வளர்த்துக்கொண்டமையை நிரூபிப்பதாக அமைந்துள்ளது என கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தெரிவித்தார்.


அராலி இந்துக் கல்லூரியுடனான போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் 10.11.2015அன்று நடைபெற்ற தீபாவளி நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

அமரர். மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியில் 20 வருடங்களிற்கு மேலாக நல்லாசிரியையாக, செயற்றிறன்மிக்க நல்லதிபராக கடமையாற்றிய திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவர் திரு மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எம்கல்லூரிச் சமூகம் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில் தனது வேலைப் பழுவின் மத்தியிலும் திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியை திறம்பட நிர்வகிப்பதில் உறுதுணை புரிந்தவர். திருமதி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் மாத்திரமன்றி, செயற்றிறன்மிக்க துணிச்சலான அதிபர் என்றே கூறலாம். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும், சரளமாகவும் பேசும் பண்புமிக்கவர். அர்ப்பணிப்புமிக்க சேவையாளர். எமது கல்லூரி இடம்பெயர்ந்திருந்த மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கல்லூரியை மீளவும் சொந்த இடத்திற்குக் கொண்டுவந்து செயற்படுத்துவதில் அயராது உழைத்து வெற்றி கண்டவர். அவ்வகையில் அவருடைய சேவையை கல்லூரிச் சமூகத்தால் என்றென்றும் மறக்க முடியாது. பிற்காலத்தில் அவரது செயற்றிறமையால் பதவி உயர்வு பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக பரீட்சைத் திணைக்களத்தில் கடமையாற்றினார். ஓய்வின் பின்னரும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்வியியற் துறையில் நிபுணத்துவ ஆலோசகராக பணியாற்றுவது எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றது. இத்தகைய பெருமைமிகு எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் தனது அன்புக் கணவரை இழந்து துன்புற்றிருப்பது கண்டு நாமும் துயரடைகின்றோம்.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கல்லூரி சமூகம் சார்பாக கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்குவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

திருமதி வாசுகி தவபாலன்
அதிபர் 
(கல்லூரிச் சமூகம் சார்பாக)

முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.

Tribute from School Mr.Balasingam-page-001

 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி காணி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் நீண்ட நாள் முயற்சி கைகூடியுள்ளது

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக காரைநகர் பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை அலுவலக முறையில் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு காரைநகர் பொது மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை (14.03.2015) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன,; வடமாகாண சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திரு.ஏ.கேதீஸ்வரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.இ.தேவநேசன், காரைநகர் பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவகலாநிதி.கே.இந்திரமோகன், கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், ஒய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், பழைய மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் போசகருமான திரு.எஸ்.கே.சதாசிவம், மருத்துவமனைப் பணியாளர்கள்,  நோயாளர் நலன் புரிச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்; ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன் அவர்கள் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை பாடசாலையின் மைதான விரிவாக்கத்திற்காக பயன்படுத்த அலுவலக முறையில் அனுமதி அளித்தார்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில் மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இக்காணியானது பாடசாலை வளர்ச்சியின் ஒரு பகுதியான விளையாட்டு மைதான விரிவாக்கலுக்கு பேருதவியாகும் எனத் தெரிவித்தார்.

மகளிர் விவகார பிரதி அமைச்சரும் எமது பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி.விஐயகலா மகேஸ்வரன் அவர்கள்  இக் காணியை கல்லூரிக்கு வழங்குமாறு வடமாகாண ஆளுநர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைவாக இன்று இக்காணி எமது பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார். 

அதிபர் தனது உரையில் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினர், வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இக் காணியை பெற்றுக் கொள்வதற்கு தன்னாலான பெருமுயற்சி எடுத்த பழைய மாணவர் சங்க முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம்; அவர்களிற்கும் கல்லூரி சமுகம்  சார்பாக தமது நன்றியைத் தெரிவித்தார். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம். 

முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம். 

A ho7P A ho10P OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

 

 

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின்; (காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டிற்கான திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கு உதவி கோரும் விண்ணப்பம்

J Drபாடசாலைச் சமூகமும் புலம்பெயHந்து வாழும் பழைய மாணவHகளும் நலன் விரும்பிகளும் கல்லுhரியின் 125வது ஆண்டு நிறைவினை மிகுந்த உற்சாகத்துடனும் உணா;வோடும் கொண்டாடி கல்லுhரி அன்னையை பெருமைப்படுத்தி வருவதுடன் இக்கொண்டாட்டங்கள் ஊடாக கல்லுhரியின் மேம்பாட்டிற்கு தமது பங்களிப்பினையூம் செய்து வருகின்றனH. 

125வது ஆண்டு நிறைவினை நினைவூகூரும் வகையில்  மேம்பாட்டுத் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவூம் நிறைவூசெய்து வைக்கவூம்  பல முக்கியமான திட்டமுன்மொழிவூகள் பாடசாலைச் சமூகத்தினால் தயாரிக்கப்பட்டு நன்கொடையாளHகளின் உதவியை எதிh;பாh;த்து முன்வைக்கப்பட்டுள்ளன. 

தங்களின் அன்புக்குரியவHகளின் நினைவாகவோ அன்றி பொதுவாகவோ இத்திட்ட முன்மொழிவூகளில் ஒன்றைப் பொறுப்பெடுப்பதன் மூலமோ அல்லது தங்களால் இயன்ற அன்பளிப்பினை வழங்குவதன் மூலமோ இத்திட்ட முன்மொழிவூகளைச் செயற்படுத்த உதவூமாறு பழைய மாணவா;களையூம்  நலன் விரும்பிகளையூம் அன்போடு வேண்டுகின்றௌம்.

கனடியத் தொடா;புகளுக்கு: 
யா-கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் பழைய மாணவா; சங்கம் – கனடா
தலைவா;: திரு.சி.தம்பிராஜா (416)438 6735
செயலாளா;: திரு.கனக.சிவகுமாரன் (647)766 2522 
பொருளாளா;: திரு.ஆ.சோதிநாதன் (647)838 9323
மின்னஞ்சல்: karaihinducanada@gmail.com

காரைநகா; தொடா;பகளுக்கு:
யா-கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்-காரைநகா;
செயலாளர்: திரு.இ.திருப்புகழுர்சிங்கம் தொலைபேசி இல. 077-5128962 
திரு.எஸ்.கே.சதாசிவம் போசகர:; தொலைபேசி இல.077–5411722  அல்லது 
மின்னஞ்சல்:satha.sham@yahoo.com

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) பணியாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் உடனடி குடும்ப உறவினர்களுக்கான அறிவித்தல்

J Drமேற்குறித்த பாடசாலையின் 125வது ஆண்டு நிறைவுவிழா செப்ரெம்பர் 07ஆம் திகதி கனடாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. வட அமெரிக்காவில் வதியும் இக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் உடனடி குடும்ப உறவினர்கள் இவ்விழா அரங்கில் வைத்து கௌரவிக்கப்பட உள்ளனர்.

 

காரைநகரைச்சேர்ந்த வட-அமெரிக்காவல் வதியும் பல முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்களையும், அவர்தம் உறவினர்களையும் இனம் கண்டுள்ளோமாயினும் வெளியிடங்களிலிருந்து வந்து சேவையாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரயர்கள் உள்ளிட்ட இன்னும் பலர் வட-அமெரிக்காவில் வதியலாம் என நம்புகின்றோம்.

இவ்வறிவித்தலை பார்வையிடும் முன்னாள் ஆசிரியர்களோ அன்றி அவர்கள் இங்கு இருப்பது குறித்த தகவலை தெரிந்திருப்பவர்களோ பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையுடன் தொடர்பு கொண்டு அத்தகவலை எமக்கு அறியத்தந்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

யா-கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் – கனடா
தலைவர்: திரு.சி.தம்பிராஜா (416)438 6735
செயலாளர்: திரு.கனக.சிவகுமாரன் (647)766 2522
பொருளாளர்: திரு.ஆ.சோதிநாதன் (647)838 9323
மின்னஞ்சல்:karaihinducanada@gmail.com

கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்

J Drகோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்

காரைநகர் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் 63 முதல் இடங்கள் உட்பட 124 இடங்களைப் பெற்று காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) முன்னணி வகிக்கின்றது.

காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வலய மட்டப்போட்டிக்கு தெரிவாகி உள்ள 274 போட்டியாளர்களில் 124 போட்டியாளர்கள் தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) இருந்து தெரிவாகி காரைநகர் பாடசாலைகளிடையே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதன்நிலை வகிக்கின்றது.

55 இலட்ச ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நடராஜா மண்டபம் மீள்திறப்புவிழா

55 இலட்ச ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நடராஜா மண்டபம் மீள்திறப்புவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் 125வது ஆண்டு விளையாட்டு விழா தொடக்க நிகழ்வுகள் ஆரம்பம்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் 125வது ஆண்டு விளையாட்டு விழா தொடக்க நிகழ்வுகள் ஆரம்பம்

09.02.2013 அன்று ஆரம்பமான இந்நிகழ்வுகளில் காரைநகரைச் சுற்றிய ஆண்களுக்கான மரதன் ஓட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம் ஆகியன இடம்பெற்றன. இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

சைக்கிள் ஓட்டத்தில் வெற்றிபெற்ற முதல் மூன்று வீரர்கள்
1ம் இடம்    –    நா.விஜயகுமாரி        –    பாரதி இல்லம்
2ம் இடம்    –    செ.தேனுசா        –    பாரதி இல்லம்
3ம் இடம்    –    கி.லாவண்யா        –    சயம்பு இல்லம்

வீதி ஓட்டத்தில் வெற்றிபெற்ற முதல் மூன்று வீரர்கள்
1ம் இடம்    –    ம.பிரசாந்தன்        –    தியாகராஜா இல்லம்
2ம் இடம்    –    சி.கோகுலன்        –    தியாகராஜா இல்லம்
3ம் இடம்    –    பா.சிவதர்சன்        –    பாரதி இல்லம்

தியாகராஜா இல்லம் 230 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்திலும்
பாரதி இல்லம் 191 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்திலும்
நடராஜா இல்லம் 130 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்திலும்
சயம்பு இல்லம் 118 புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்திலும் உள்ளது.

125வது ஆண்டில் காலடி பதிக்கும் காரைநகர் இந்துக்கல்லூரி

125வது ஆண்டில் காலடி பதிக்கும் காரைநகர் இந்துக்கல்லூரி
முதல்நிகழ்வாக 2013 நாட்காட்டி வெளியீடும் புதிய அதிபர் பதவியேற்பும்

காரைநகர் இந்துக்கல்லூரி இவ்வாண்டான 2013இல் தனது 125வது ஆண்டில் கால்பதிக்கின்றது. இதனையொட்டி 18.01.2013இல் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வாக 2013ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழாவும் கல்லூரியின் புதிய அதிபராக காரைநகர், களபூமி, பாலாவோடையைச் சேர்ந்தரும்  தீவகவலய உதவி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவரும் காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவியுமாவர் திருமதி. வாசுகி தவபாலன் பதவியேற்பும் நடைபெற்றது. இவ்விழாவில் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு.ப.விக்னேஸ்வரன், தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ்,

திரு E.S.P. நாகரட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர். புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களுக்கு கனடா வாழ் காரை மக்களுடன் இணைந்து கனடா காரை கலாச்சார மன்றமும் வாழ்;த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கலாநிதி ஆ.தியாகராஜா ஞாபகார்த்த கல்வி ஊக்குவிப்பு அறக்கட்டளை (நிதியம்) (Dr.A.Thiyagarajah Educational Trust 2012)

காரைநகரில் கல்வி பயிலும் க.பொ.த.(சாதாரண தரம்), சக (உயர் தரம்) (G.C.E O/L AND A/L) ஆகிய மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் கல்வித் தேவைகளினதும் , தகமைகளினதும் அடிப்படையில் வருடா வருடம் நிதயுதவி வழங்கி ஊக்குவிப்பதற்காக, அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக இவ் அறக்கட்டளை அமைப்பு 16/12/2012 அன்று கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய சயம்பு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.