Tag: காரைச் செய்திகள்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 27.12.2017 புதன்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 4ம் நாள் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 26.12.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 3ம் நாள் காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 26.12.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 3ம் நாள் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 25.12.2017 திங்கட்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 2ம் நாள் காணொளி!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 24/12/2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிள்ளையார் கதை இறுதி நாள் பெருங்கதை காலை 10.00 மணிக்கு விசேட அபிஷேகத்துடன் ஆரம்பமாகி தன்னை விநாயகப்பெருமானுக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பிள்ளையார் கதை படிப்பு இடம்பெற்று விநாயகப்பெருமான் வெளி வீதிஉலா வரும் காட்சியும் நடைபெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 25.12.2017 திங்கட்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 2ம் நாள் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 25.12.2017 திங்கட்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 2ம் நாள் இடம்பெற்ற காவடி நிகழ்வு!


காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 24.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 1ம் நாள் காணொளி!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் தெய்வீகக் கலையரங்கு 27.12.2017 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 22/12/2017 வெள்ளிக்கிழமை இடம் பெற்ற மார்கழிமாத சதுர்த்தி திருவிழா நிகழ்வு காலை 10.00 மணிக்கு அபிஷேகமும் மாலை 7.00 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனை நிகழ்வுகளும் மற்றும் அறநெறி மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன அதனை தொடர்ந்து சாமி வீதியுலாவரும் காட்சியும் இடம்பெற்றன.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் திண்ணபுரம் சிவனடியார் மடம் திறப்புவிழா இன்று 24.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 24.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 1ம் நாள் காட்சிகள்!

காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் இன்று 23.12.2017 சனிக்கிழமை நடைபெற்ற மகரஜோதிப் பெருவிழா நிகழ்வு!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் திண்ணபுரம் சிவனடியார் மடம் திறப்புவிழா 24.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் திண்ணபுரம் சிவனடியார் மட பொங்கல் நிகழ்வு!

காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். பாடசாலையை சூழவுள்ள பொருத்தமான காணிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பாடசாலைச் சமூகம் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. மடத்துக்கரை அம்பாள் ஆலயத்திற்கு எதிர்ப்புறமாக பிரதான வீதியுடன் அமைந்துள்ள இரண்டு பரப்புக் காணியை சென்ற ஆண்டு கொள்வனவு செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியிருந்தது. இக்காணியுடன்; இணைந்த மூன்று பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை உதவியிருந்தது. பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் பிரதான வீதியுடன் அமைந்திருக்கும் ஐந்தரைப் பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பெரிய பிரித்தானியா-காரை நலன் புரிச் சங்கத்தினர் உதவியிருந்தனர். குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டம் எமது கல்லூரிக்குக் கிடைத்ததில் முன்னைநாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் பங்களிப்பு பாராட்டப்படக்கூடியது என்பதுடன் இத்திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது முதலாக அதற்குரிய காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு மேற்குறித்த காணிகள் பாடசாலைக்கு கிடைக்கச் செய்திருந்தார். காணிக் கொள்வனவு தொடர்பில் வாசுகி தவபாலன் விட்டுச் சென்ற பணியினை தற்போதய அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அக்கறையோடு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

தற்போது ஏழு பரப்பு பரப்பளவுடைய மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் சென்ற வாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காணிக்குரிய பெறுமதி பதினேழரை இலட்சம் ரூபாவும் முத்திரைச் செலவு அறுபத்தொன்பதாயிரம் ரூபாவும் ஆக மொத்தம் பதினெட்டு இலட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது. வலந்தலைச் சந்திக்கு அண்மையாக மேற்கு பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக இக்காணி; அமைந்துள்ளது.

பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயலாற்றி வருகின்ற பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவரும் பிரபல தொழிலதிபருமான திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரம் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அதிபருக்கும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்திற்கும் உறுதுணையாகவிருந்து செயற்பட்டு வருபவர். அத்துடன் கொள்முதல் செய்யப்பட்ட காணிகளை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் துப்புரவு செய்வதற்கு தனது பக்கோ இயந்திரத்தின் சேவையை இலவசமாக வழங்கி உதவி வருகின்றார். இவரது பெரு முயற்சியே குறிப்பிட்ட ஏழு பரப்புக் காணியையும் பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு உதவியுள்ளது.

இக்காணிக்குரிய சட்ட ஆவணத்தினை (உறுதி) பாடசாலையின் பெயரில் எழுதிய பணி கல்லூரியின் பழைய மாணவியும் சட்டத்தரணியுமாகிய திருமதி சாந்தி சிவபாதம் அவர்களின் யாழ்ப்பாணத்திலுள்ள பணிமனையில் இடம்பெற்றிருந்த சமயம் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், திரு.நேசேந்திரம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி, தாய்ச் சங்கத்தின் செயலாளர் திரு.நடராசா பாரதி, பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், உதவிச் செயலாளர் திரு.நாகராசா, நிர்வாக சபை உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அகிலன், பழைய மாணவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் ஆகியோருடன் காணி உரிமையாளர்களினால் சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டவரும் சமூகமளித்திருந்தனர். சட்டத்தரணி திருமதி சாந்தி சிவபாதம் காணிக்குரிய சட்ட ஆவணங்களை(உறுதி) எழுதும் பணியை இலவசமாகவே செய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணிக்குரிய பெறுமதியின் கொடுப்பனவிற்கான காசோலையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் திரு.கனகசபாபதி காணிக்குரிய சட்டரீதியான அதிகாரத்தினை கொண்டுள்ளவரிடம் வழங்குவதையும் சட்டத்தரணியின் காரியாலயத்தில் சமூகமளித்திருந்த அதிபரையும் ஏனையோரையும் கீழேயுள்ள படங்களில் பார்க்கலாம்.

 

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 16/12/2017 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற 13ம் நாள் பிள்ளையார் கதை மற்றும் மார்கழி தமிழ் மாதப்பிறப்பு பூசை நிகழ்வுகள்.

நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

வடமாகாணக் கல்வி அமைச்சினால் மாகாணம் தழுவிய நிலையில் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதான ‘குரு பிரதீபா பிரபா-2017’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன், மாகாண மட்டத்தில் கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத், மாகாண மட்டத்தில் கோலம் போடுதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி செல்வி அபினோசா கருணாகரன் ஆகியோரைப் பாராட்டி மதிப்பளித்த வைபவம் சென்ற வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வைபவத்தில் கலந்துகொண்டு நல்லாசிரியர் அரவிந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதுடன் பாராட்டுக் கேடயத்தினையும் வழங்கி மதிப்பளித்தார். அதேவேளை கல்லூரியின் ஆசிரியர்கள்; நலன்புரிக் கழகத்தின் சார்பில் உப-அதிபர் திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களாலும் பாராட்டு விருது வழங்கப்பெற்று நல்லாசிரியர் திரு.அரவிந்தன் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். சாதனை மாணவர்களான செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகியோருக்கான பாராட்டு விருதுகளும் ஊக்குவிப்புப் பரிசிலாக தலா ஐயாயிரம் ரூபா ரொக்கமும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் திரு.கனகசபாபதி அவர்களினால் வழங்கப்பெற்றிருந்தது.

இவ்வைபவத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய அதபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆற்றி வருகின்ற பணிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். சிறப்பாக, சாதனை மாணவர்களுக்கு சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவே மதிப்பிடப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அதிபர், அடைவு மட்டத்திற்கு அண்மித்த தரத்திலுள்ள மாணவர்கள்; மேம்பட்டநிலையை அடைந்து பரிசிலைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற ஆர்வத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி; முயற்சியில் ஈடுபடுவதற்கான உந்துதலாக சங்கத்தினர் உதவி வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் அமைந்துள்ளன என மேலும் குறிப்பிட்டார். கல்லூரியின் தேவைகளை அறிந்து வழங்கி வருகின்ற அளப்பரிய உதவிகளுக்காக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இப்பாராட்டு வைபவத்தில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

யாழ்ற்ரன் கல்லூரிக்கு பதில் அதிபர் நியமனம்

 

யாழ்ற்ரன் கல்லூரிக்கு

பதில் அதிபர் நியமனம்

 

 

 

 

 

 

யாழ்ற்ரன் கல்லூரியில் அதிபராகச் சேவையாற்றிய திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் 08.12.2017 ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அக் கல்லூரியின் பிரதி அதிபராகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் திருமதி.கலைவாணி அருள்மாறன் அவர்கள் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சங்கானையைச் சேர்ந்த திரு திருமதி சிவானந்தன் (முன்னாள் மாவட்டக்கல்விப்பணிப்பாளர்) தம்பதிகளின் மகளும் திரு.ச.அருள்மாறன் (பொதுச்சுகாதார உத்தியோகத்தர்) அவர்களின் துணைவியும் ஆவார்.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் சிவன் கோயில் வருடாந்த மார்கழி திருவெம்பா திருவிழாக்களை www.karainagar.com மன்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் சிவன் கோயில் வருடாந்த மார்கழி திருவெம்பா திருவிழாக்களை www.karainagar.com மன்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும்,கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா 2017

காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும்,கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா 2017 நேற்று 11/12/2017 திங்கட்கிழமை மாலை 2 .00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தலைவர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்(பிரதேச செயலர் ,தலைவர்-கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை, பிரதேச செயலகம்,காரைநகர்) பிரதம விருந்தினர் திருமதி. சுகுணரதி தெய்வேந்திரன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாணம்) சிறப்பு விருந்தினர் திரு.கந்தையா இரட்ணசிங்கம் (வைத்திய அதிகாரி பிரதேச வைத்தியசாலை காரைநகர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இன் நிகழ்வில் களபூமி முத்தமிழ் பேரவையின், சக்தி கல்வி மேம்பாட்டு நிலையம் ஆகியோரின் மற்றும் பல கலைநிகழ்வுகளும். கலைஞான சுடர் விருதுகள் வழங்கப்பட்டு. பிரதேச கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் இந்து சாதனம் மார்கழி மாத இதழ் திருவாதிரை மலராக வெளிவந்துள்ளது . இதில் தொன்மையும்,சிறப்புமுடைய ஈழத்து சிதம்பரமும் அடங்கி உள்ளது. இதனை மார்கழி மாத திருவெம்பாவை நெருங்கி வரும் இந்நன்நாட்களில் அனைவரும் வாசித்து பயன்பெறுவோமாக .

inthusathanam 5_split_1 inthusathanam 5_split_2 inthusathanam 5_split_3 inthusathanam 5_split_4 inthusathanam 5_split_5 inthusathanam 5_split_6 inthusathanam 5_split_7 inthusathanam 5_split_8 inthusathanam 5_split_9 inthusathanam 5_split_10 inthusathanam 5_split_11 inthusathanam 5_split_12 inthusathanam 5_split_13 inthusathanam 5_split_14 inthusathanam 5_split_15 inthusathanam 5_split_16 inthusathanam 5_split_17 inthusathanam 5_split_18 inthusathanam 5_split_19 inthusathanam 5_split_20

காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகம் இடம் மாறியுள்ளது

Scanned Notice re relocation20171208

யாழ்ற்ரன் கல்லுரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதையிட்டு நன்றி பாராட்டும் செய்தி

யாழ்ற்ரன் கல்லுரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதையிட்டு நன்றி பாராட்டும் செய்தி

அன்பார்ந்த
யாழ்ற்ரன் கல்லூரியின் பழைய மாணவர்களே
புலம் பெயர் காரை மக்களே

07.09.2011 ஆம் ஆண்டில் இருந்து 07.12.2017 ஆம் ஆண்டு வரை சரியாக 75 மாதங்கள் (6 ¼ வருடங்கள்) நான் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிபராக சேவையாற்றியுள்ளேன். 08.12.2017 இருந்து ஓய்வு பெறுகின்றேன். இவ் 6 ¼ வருட காலப்பகுதியில்

1. கல்லூரியின் வளர்ச்சிக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்த கல்லூரியின் பழைய மாணவர்கள்

2. கல்லூரி வளர்ச்சிக்கு உதவி செய்த உள்ளூர் வர்தகப் பெருமக்கள்

3. கல்லூரி வளர்ச்சிக்கு உதவிய என்னிடம் கல்வி கற்ற காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள்

4. மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு உதவி செய்கின்ற கல்லூரியின் பழைய மாணவர்கள்

5. கல்லூரியின் வளர்ச்சிக்கு அக்கறையுடன் செயற்பட்டு உதவி செய்த
1. லண்டன் காரை நலன் புரிச்சங்கம்
2. கனடா காரை கலாச்சார மன்றம்
3. சுவிஸ் காரை நலன்புரிச்சங்கம்
4. அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்
5. பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்

ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.

6. பூரணமான ஒத்துழைப்பினை வழங்கிய பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

7. மேலும் கல்லூரியின் செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகின்ற கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கும் காரைநகர் சார்ந்த இணையத்தளங்களான
1. www.karainagar.com
2. www. karainews.com
3. www. karainagar.co

ஆகிய இணையத்தள உரிமையாளர்களுக்கும் எனது நன்றிகள். மேலும் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்கள் யாழ்ற்ரன் கல்லூரிக்கு தொடர வேண்டும் என்றும் உங்களை அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

நன்றி
வணக்கம்

 

வே.முருகமூர்த்தி
அதிபர்
யா/யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து பெருமையுடன் வழங்கிய முத்தமிழ் விழா-2017 காணொளி!

காரைநகர் அபிவிருத்திச் சபையின் அறிவித்தல்!

Scanned Letter(Notice) to Karai Societies20171205

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற “சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற
“சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

வரவேற்பு

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகளுடன் மேற்படி விழா ஆரம்பமானது. கல்லூரி மாணவர்களின் பான்ட் இசைக்குழு மற்றும் தமிழ்ப் பாரம்பரிய இசைக்குழுவினரின் வரவேற்புடன் விழா நாயகர் தம்பதிகள் அவரது குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் கல்லூரி வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப் பட்டனர்.

விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இதற்கென அமைக்கப்பட்ட விசேடமான பந்தல் மற்றும் சிறப்பு மிக்க மேடை அலங்காரங்கள் ஆகியவற்றுடன் விழா நடைபெற்றது. விருந்தினர்கள் மற்றும் விழா நாயகத் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது.

விழா நிகழ்வுகள்

கடவுள் வணக்கத்துடன் விழா ஆரம்பமாகி விருந்தினர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் சாதனையாளன் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருந்தன.

“முருகோதயம்” மலர் வெளியீடு

அதிபரினது சேவைகளையும் கற்பித்தல் பணிகளையும் பாராட்டி உள்ளடக்கியதும் மற்றும் கல்லூரியில் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பௌதீக வள வளர்ச்சிகள் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுகள் கல்லூரியின் கற்றல் அலகுகள் ஆகியவற்றின் படங்களை உள்ளடக்கியதாக இம்மலர் உள்ளது.
இம்மலருக்கான கௌரவப் பிரதி விழாவின் அனுசரணையாளரான காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு (சுவிஸ்நாதன்) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழா நாயகரின் (அதிபர்) ஏற்புரை

அதிபர் தனது ஏற்புரையில் தனது காலத்தில் கல்லூரியில் ஏற்பட்ட வளர்ச்சி,மாணவர்களின் கல்வி சார் சாதனைகள் என்பவற்றை துல்லியமாக எடுத்துக்காட்டினார்.தனது காலத்தில் பௌதீக வள வளர்ச்சியில் ஈடுபாடுகளைக் காட்டிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் விசேடமாக கல்லூரிக்கு காணிகளை வாங்கி நன்கொடையாகக் கொடுத்துதவிய திரு.சு.கதிர்காமநாதன்( பிரபல வர்த்தகர் சுவிஸ்) திரு.சு.கணநாதன் (உரிமையாளர் Quency distributers Colombo) திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) திரு.க விமலச்சந்திரன் (கனடா)ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

விழா நாயகர் இறுதியாக தனக்கு வாழ்த்துரைகள்,ஆசியுரைகள் வழங்கியவர்களுக்கும் இவ்விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கிய திரு.சு.கதிர்காமநாதன் (சுவிஸ்நாதன்) அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் விழாக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் திரு.வே.சிற்சபேசன், செயலாளர் திரு.வே.சிவனேசன் ஆகியோருக்கும் தனது நன்றிப் பெருக்கினைத் தெரிவித்தார்.மற்றும் விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு உதவிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து பெருமையுடன் வழங்கிய முத்தமிழ் விழா-2017 நிகழ்வு!

காரைநகர் காட்சிகள்!

02.12.2017 சனிக்கிழமை அன்று சங்கானை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா 2017 வின் போது விக்காவில் காரைநகரை சேர்ந்த மூத்த கலைஞர் திரு.சின்னையா சோமசேகரம்பிள்ளை அவர்களுக்கு நாடகத்துறைக்கு “யாழ் முத்து” விருது 2017 எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

02.12.2017 சனிக்கிழமை அன்று சங்கானை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா 2017 வின் போது விக்காவில் காரைநகரை சேர்ந்த மூத்த கலைஞர் திரு.சின்னையா சோமசேகரம்பிள்ளை அவர்களுக்கு நாடகத்துறைக்கு “யாழ் முத்து” விருது 2017 எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விக்காவில் காரைநகரை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட இக் கலைஞர் நாடகத் துறையில் மட்டுமல்ல கைவினைத் துறையிலும் வல்லமை கொண்டவர். ஐந்து அடி விட்டமுடைய மிகப்பெரிய பேரிகையை உருவாக்கி சாதனை படைத்தவர்.

1967 ஆம் ஆண்டு சேக்ஸ்பியரின் ” வெனிஸ் நகர வணிகன்” ஆங்கில மொழி நாடகத்தில் நடித்ததன் மூலம் நாடகக் கலையுலகில் காலடி பதித்த இக் கலைஞர் பல்வேறு நாடகங்களையும், இசை நாடகங்களையும் நடித்து புகழ் பெற்றவர்.

இவரின் ” பூதத்தம்பி”என்னும் இசை நாடகம் 15 தடைவைகளுக்கு மேல் அரங்கம் கண்டது. நாடகக் கலையுலக ஜாம்பவான்”கலையரசு சொர்ணலிங்கம்” அவர்களால் பாராட்டுப் பெற்ற இவரின் கலைப்பணியைப் பாராட்டி காரைநகர் பிரதேச கலாசாரப் பேரவை இவருக்கு ” கலை ஞானச் சுடர்” எனும் விருதினை 2016 ஆம் ஆண்டு வழங்கி கெளரவித்தது.

மேலும் காரைநகர் கங்கை மதி சனசமூக நிலையம் இவரின் கலைச்சேவை, சமூகத் தொண்டு ஆகியவற்றைப் பாராட்டி பாராட்டு மடல் வழங்கி பெருமைப்படுத்தியது. இவரது இத்தகைய கலைச்சேவையைப் பாராட்டி யாழ். மாவட்ட கலை, கலாசாரப் பேரவை 2017 ஆம் ஆண்டு (2017. 12. 02) யாழ். மாவட்ட பண்பாட்டு விழாவில் ” யாழ் முத்து” விருது வழங்கி கெளரவித்துள்ளது.