நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

வடமாகாணக் கல்வி அமைச்சினால் மாகாணம் தழுவிய நிலையில் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதான ‘குரு பிரதீபா பிரபா-2017’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன், மாகாண மட்டத்தில் கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத், மாகாண மட்டத்தில் கோலம் போடுதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி செல்வி அபினோசா கருணாகரன் ஆகியோரைப் பாராட்டி மதிப்பளித்த வைபவம் சென்ற வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வைபவத்தில் கலந்துகொண்டு நல்லாசிரியர் அரவிந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதுடன் பாராட்டுக் கேடயத்தினையும் வழங்கி மதிப்பளித்தார். அதேவேளை கல்லூரியின் ஆசிரியர்கள்; நலன்புரிக் கழகத்தின் சார்பில் உப-அதிபர் திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களாலும் பாராட்டு விருது வழங்கப்பெற்று நல்லாசிரியர் திரு.அரவிந்தன் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். சாதனை மாணவர்களான செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகியோருக்கான பாராட்டு விருதுகளும் ஊக்குவிப்புப் பரிசிலாக தலா ஐயாயிரம் ரூபா ரொக்கமும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் திரு.கனகசபாபதி அவர்களினால் வழங்கப்பெற்றிருந்தது.

இவ்வைபவத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய அதபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆற்றி வருகின்ற பணிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். சிறப்பாக, சாதனை மாணவர்களுக்கு சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவே மதிப்பிடப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அதிபர், அடைவு மட்டத்திற்கு அண்மித்த தரத்திலுள்ள மாணவர்கள்; மேம்பட்டநிலையை அடைந்து பரிசிலைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற ஆர்வத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி; முயற்சியில் ஈடுபடுவதற்கான உந்துதலாக சங்கத்தினர் உதவி வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் அமைந்துள்ளன என மேலும் குறிப்பிட்டார். கல்லூரியின் தேவைகளை அறிந்து வழங்கி வருகின்ற அளப்பரிய உதவிகளுக்காக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இப்பாராட்டு வைபவத்தில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA