Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மணவாள கோல கும்பாபிஷேக தினம்!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மணவாள கோல கும்பாபிஷேக தினம் காலை 9.00 மணிக்கு மூல மூர்த்திக்கு சங்காபிஷேகமும் பரிபாலன மூர்த்திகளுக்கு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம் பெற்றன.மாலை  விசேட பயனை நிகழ்வும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் மற்றும் விநாயகப்பெருமானுக்கு பொன்னூஞ்சல் பாடல் பாடப்பட்டு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் ஆலய அறநெறி மாணவர்களுக்கு பிரபல வர்த்தகர் அமரர் சதாசிவம் நவரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக பரிசில்களும் வழங்கப்பட்டன.

காரைநகர் சிவன்கோவிலடி மணிவாசகர் மடாலயத்தில் 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி காணொளி!

காரைநகர் சிவன்கோவிலடி மணிவாசகர் மடாலயத்தில் 01.09.2018 சனிக்கிழமை நடைபெற்ற இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி காணொளி!

காரைநகர் சிவன்கோவிலடி மணிவாசகர் மடாலயத்தில் 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வு!

காரைநகர் சிவன்கோவிலடி மணிவாசகர் மடாலயத்தில் 01.09.2018 சனிக்கிழமை நடைபெற்ற இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வு!

காரைநகர் பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்காலிகமாக இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று 17.08.2018 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

காரைநகர் பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்காலிகமாக இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று 17.08.2018 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதற்கான நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் வரை இவ்விடத்தில் இயங்கும் என சுகாதார வைத்திய அதிகாரி திரு. நந்தகுமார் தெரிவித்தார் . இதற்கான காணியை அன்பளிப்பு செய்த திரு. சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு வைத்திய அதிகாரி நன்றி தெரிவித்தார்.நிகழ்வில் பிரதேச செயலர்,பிரதேச சபை தவிசாளர் , உப தவிசாளர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைநகர் அபிவிருத்திச் சபையயும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த துவிச்சக்கரவண்டி போட்டி பரிசளிப்பு விழா 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காரை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

13/08/2018 திங்கட்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர பால்குட பவனி

 

 

13/08/2018 திங்கட்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர பால்குட பவனி

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி திக்கரை முருகன் ஆலயம் ஊடாக வழுப்போடை பாலாவோடை பிரதான வீதி வழியாக பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்த காட்சிகள்.

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 13.08.2018 திங்கட்கிழமை இரவு நடைபெற்ற ஆடிப்பூர திருவிழா காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவி பெருந்திருவிழாவில் 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவி பெருந்திருவிழாவில் இன்று 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தில் 11.08.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி!

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தில் இன்று 11.08.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காட்சிகள்!

இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி 25.08.2018 முதல் 02.09.2018 வரை, இடம்: மணிவாசகர் மடாலயம்,சிவன்கோவிலடி,காரைநகரில் நடைபெறவுள்ளது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவி பெருந்திருவிழாவில் 04.08.2018 சனிக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் பிரதேச சபையின் மூலம் பத்து லட்ச ரூபா செலவில் 50 வாட்ஸ் மின் விளக்குகள் 130 பொருத்தும் பணி 03.08.2018 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

காரைநகர் பிரதேச சபையின் மூலம் பத்து லட்ச ரூபா செலவில் 50 வாட்ஸ் மின் விளக்குகள் 130 பொருத்தும் பணி 03.08.2018 ஆரம்பித்து வைக்கப்பட்டது. சபையின் 11 உறுப்பினர்களும் தலா 11 மின்விளக்குகள் பொருத்தும் இடத்தை தெரிவு செய்வதற்கும் மிகுதி 9 மின்விளக்குகளை வலந்தலை தொடக்கம் பிரதான வீதியில் பொருத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. இதற்கான நிதியை வடமாகாண சபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் ஞாபகர்த்தமாக காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு! (02.08.2018)

2017 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் யா/யாழ்ற்ரன் கல்லூரியில் இருந்து தோற்றி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில்

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் இருந்து தோற்றி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

1. செல்வி. காயத்திரி ஆனந்தராஜா​- பௌதீக விஞ்ஞானம்
​​​​​​​ யாழ் பல்கலைக்கழகம்

2. செல்வி ஆரணி தர்மலிங்கம் ​​- தகவல் தொடர்பாடல்
தொழில் நுட்பம்
​ ராஐரட்டைப் பல்கலைக்கழகம்

3. செல்வி துர்சியா மோகநாதன் ​- முகாமைத்துவ பீடம்
​​​​​​​ தகவல் தொடர்பாடல்
தொழில் நுட்பம்
​ தென்கிழக்கு பல்கலைக்கழகம்

4. செல்வி நவனிலா மகாதேவன் ​- கலைப்பிரிவு
யாழ் பல்கலைக்கழகம்

 

பௌதீக விஞ்ஞானப்பிரிவு, வர்த்தகப்பிரிவு, கலைப்பிரிவு ஆகிய ஒவ்வொரு துறைகளிலுமிருந்து மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்

காரைநகரில் அமையவிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறக்கொடைச்செம்மல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் காணி அன்பளிப்பு!

காரைநகரில் அமையவிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறக்கொடைச்செம்மல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் வேம்படி பிரதேசத்தில் உள்ள 6.5 பரப்புக் காணியை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கனகராஜா நந்தகுமாரிடம் 02.08.2018 வியாழக்கிழமைஅன்று நன்கொடையாக கையளித்தார்.

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தில் 02.08.2018 வியாழக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் ஞாபகர்த்தமாக காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு 02.08.2018 வியாழக்கிழமை அன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நாங்கள் செயற்பாட்டு வலையமைப்பினரால் நடாத்தப்பட்டது!

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தில் 02.08.2018 வியாழக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

ஈழத்துச் சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் வருடாந்த தேவி மகோற்சவம் – 2018 (04.08.2018 சனிக்கிழமை கொடியேற்றம்)

காரைநகர் அரசடிக்காடு ஸ்ரீ கதிர்காம வேலாயுதசுவாமி ஆலயத்தில் 28.07.2018 சனிக்கிழமை நடைபெற்ற தீ மிதிப்பு திருவிழா காட்சிகள்!

காரைநகர் அரசடிக்காடு ஸ்ரீ கதிர்காம வேலாயுதசுவாமி ஆலயத்தில் 27.07.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் அரசடிக்காடு ஸ்ரீ கதிர்காம வேலாயுதசுவாமி ஆலயத்தில் 24.07.2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற 11ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்

 

சிறப்பாக நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும்

காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2018 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார்.  சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க இருந்த திருமதி சுமதி ஸ்ரீசுந்தரராஜா அவர்கள் சுகயீன காரணத்தினால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் நினைவுப் பேருரையை எமது பாடசாலை ஆசிரியர் திருமதி பிரபா பிரபாகரன் அவர்கள் நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக

தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான பொதுத் தகைமைத்திறன் விருதுகள்

  1. ஆங்கிலத் துறைசார் தேர்ச்சிக்கான விருதினை செல்வி பிரியா கிருபானந்தராஜா பெற்றுக் கொண்டார்.
  2. மாகாண மட்ட கணித பாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வன் ஏ. கோபிநாத் பெற்றுக் கொண்டார்.
  3. மாகாண மட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான விருதினை செல்வி க. அபினோசா பெற்றுக் கொண்டார்.
  4. 2017ம் ஆண்டு மாகாண மட்ட 100m ஓட்டத்தில் 4ம் இடத்தினையும் 13.9செக்கன்களில் ஓடி முடித்தமைக்கான வர்ணச் சான்றிதழையும் (Colors award) பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் கா. மயூரன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

மாகாண மட்ட Yarl Geek Challenge  போட்டியில் Best Hardware விருதினை பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்

  1. செல்வன் க. அனுசாந்
  2. செல்வன் க. கஜந்தன்
  3. செல்வன் சி. தூயவன்

சுவிஸ் காரை அபிவிருத்தச் சபையினால் நடாத்தப்பட்ட தியாகத்திறன் நாடகப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெற்றுக் கொண்டனர்

  1. செல்வன் சி. அறிவரசன்
  2. செல்வன் ர. சயுவண்ணன்
  3. செல்வன் ஏ. துஸ்யந்தன்
  4.  செல்வன் ச. யோன்
  5. செல்வன் த. சுகிர்தன்
  6. செல்வி க. டிலோசினி
  7. செல்வி தே. ஜென்சிகா
  8. செல்வி வ. பவீனா

பாடகர்கள்
1. செல்வி சி. புருசோத்தமி
2. செல்வி யோ. அஸ்மிலா
3. செல்வி கி. சர்மிளா

இப் போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய செல்வி யோ. விம்சியா விருதினைப் பெற்றுக் கொண்டார்
இப் போட்டிக்கான பயிற்றுவிப்பாளர் திருமதி வி. ரமணன் ஆசிரியர் விருதினைப் பெற்றுக் கொண்டார்

2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது

1. செல்வன் ஏ. கோபிநாத் 9A
2. செல்வி பா. சிவராஜினி 9A
3. செல்வன் அ. பிரணவரூபன் 8A, B
4. செல்வி ச. தாரணி 4A, 3B, C, S
5. செல்வன் அ. ஜீவரங்கன் 4A, B, 2 C, S
6. செல்வி ஆ. அமிர்தா 4A, 3B, C
7. செல்வி கோ. பிருந்தா 3A, 2B,  3C, S

2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது

1. செல்வி பே. சரண்யா 2 A, B கலைத்துறை
2. செல்வன் த. நாகரஞ்சன் 2 A, B வர்த்தகத்துறை
3. செல்வி யோ. யுசிதா A, B, C கலைத்துறை
4. செல்வன் கோ. பாலசயந்தன் A, C, S தொழில்நுட்பப் பிரிவு
5. செல்வி யோ. டர்மிதா 2B, C தொழில்நுட்பத்துறை
6. செல்வி வி. விதுசா B, 2S விஞ்ஞானத்துறை

2017 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருது

1. செல்வி கா. டிலானி வர்த்தகத்துறை
2. செல்வன் சி. கோகுலன் கலைத்துறை
3. செல்வி ந. யாழினி கலைத்துறை
4. செல்வன் ப. மகீபன் கலைத்துறை
5. செல்வன் க. வினோதன் கலைத்துறை

2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருது

1) செல்வி சிந்துயா பரமநாதன்
2) செல்வி டினோஜா நவரட்ணராஜா
3) செல்வி குயிலினி பேரானந்தம்

ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு :

அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவரும் கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்

1. செல்வன் ஏ. கோபிநாத்
2. செல்வி பா. சிவராஜினி

அமரர் வே. நடராசா ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணித பாட ஆசிரியர் திரு வே. நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவன் செல்வன் அ. பிரணவரூபன் பெற்றுக் கொண்டார்

அமரர் பொன்னம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியர் பொன்னம்பலவாணர் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு (A சித்தி) பெற்ற மாணவி செல்வி ச. தாரணி பெற்றுக் கொண்டார்

அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017ம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் சிறப்புச் சித்தி (A சித்தி)பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

  1. செல்வி ஆ. அமிர்தா
  2. செல்வி கோ. பிருந்தா
  3. செல்வி சி. சர்மிளா
  4. செல்வி ச. தாரணி

அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள்
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரியதந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசில்களை 2017 ஆம் ஆண்டின்
சிறந்தமெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் க. வசந்தரூபன் பெற்றுக் கொண்டார்
சிறந்தமெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி சு. சிந்துஜா பெற்றுக் கொண்டார்

அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. கஜந்தன் பெற்றுக் கொண்டார்

அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களால் மறைந்த தனது அன்புக்குரிய தந்தை அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானத் துறை, தொழில்நுட்பத் துறையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

  1. செல்வி வி. விதுசா – விஞ்ஞானத்துறை
  2. செல்வன் கோ. பாலசயந்தன் – தொழில்நுட்பத் துறை
  3. செல்வி யோ. டர்மிதா – தொழில்நுட்பத் துறை

அமரர் R. கந்தையா மாஸ்ரர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவபாக்கியம் நடராஜா அவர்களால் தனது அன்புக்குரிய தந்தை அமரர் சு. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை பின்வரும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

  1. திருமதி கலாநிதி சிவனேசன்
  2. திருமதி கலாசக்தி றொபேசன்
  3. திரு இராசரத்தினம் ஜீவராஜ்
  4. திருமதி சகுந்தலா கேசவன்
  5. திரு முத்துத்தம்பி ஜெயானந்தன்

மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, நாட்டிய நாடகம், நாடகம் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திருமதி சி. லக்ஸ்மன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.

விழா நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்

 

காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை

காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை
காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கலாமன்ற மணோன்மணி மண்டப வைத்தீசுவரக்குருக்கள் அரங்கில் இடம்பெற்றது.
மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகனின் திருவாசகம் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவும் கலா மன்ற ஆசிரியர்களின் திருவாசக இன்னிசை விருந்தும் தமிழருவி த.சிவகுமாரனின் தலைமையிலான பட்டிமண்டபமும் இடம்பெற்றன.

 

காரைநகர் பத்தர்கேணி திருவருள்மிகு வன்மீக விநாயகர் ஆலயத்தில் 14.07.2018 சனிக்கிழமை அன்று மண்டலாபிஷேக பூர்த்திற்கு முதல் நாள் நடைபெற்ற மண்டலாபிஷேக இரவு திருவிழா காணொளி!

காரைநகர் பத்தர்கேணி திருவருள்மிகு வன்மீக விநாயகர் ஆலயத்தில் 14.07.2018 சனிக்கிழமை அன்று மண்டலாபிஷேக பூர்த்திற்கு முதல் நாள் நடைபெற்ற மண்டலாபிஷேக இரவு திருவிழா காட்சிகள்!