Category: CKCA MEETING

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 21.05.2017

CKCA logo  கனடா காரை கலாச்சார மன்றம்
 பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 21.05.2017


 இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர்

 காலம்: 21.05.2017  ஞாயிற்றுக்கிழமை  

 நேரம்: காலை 8.30


மண்டபநேரம் மட்டுப்படுத்தப்பட்ட கால இடைவெளியாக மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம்  இருப்பதால் மன்ற அங்கத்தவர்களை சரியாக காலை 8:30 க்கே மண்டபத்தில் கூடும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். கூட்டம்  சரியாக காலை 9:00 க்கு ஆரம்பமாகும். கூட்டத்திற்கு  வரும் அனைவரும் ஒன்று சேர்ந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரோக்கியமான எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் தடங்கலின்றி கூட்டத்தினை நடாத்த எல்லோருடைய அன்பான ஒத்துழைப்பினை  எதிர்பார்க்கின்றோம்.

பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் கூடிய விரைவில் இணையத்தளத்தில் அறியத்தரப்படும்.


                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் நிகழ்ச்சி நிரல்

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்
 பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 23.04.2017
கனடா ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய மண்டபம்
01 Golden Gate, Unit # 1, Scarborough, On.(Brimley & Ellesmere)

காலம்: 23.04.2017, மாலை 2.00 மணி

 


                                                  நிகழ்ச்சி நிரல்


1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும்.
2. கடவுள் வணக்கம் (2.15 P.M)
3. அகவணக்கம்
4. தலைவர் உரை (2.20 P.M)
5. செயலாளர் அறிக்கைகள்(சென்ற பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை) (2.30 P.M)
6. பொருளாளர் அறிக்கை (2.45 P.M)


7. கல்விக்கான செயற்பாடுகளிற்காக ‘காரை வசந்தம் 2016’ மூலம் திரட்டப்பட்ட நிதி வைப்பில் இடுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றுதல். (3.00 P.M)
– ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைக்காக 5 இலட்சம் மன்றத்தின் நிதியில் இருந்து வைப்பில் இட்டதன் காரணமாக ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பில் உள்ள நிதி முறையே ஒரு இலட்சம் மற்றும் ஒன்றரை இலட்சம் மன்றத்தின் நடப்பு நிதியாக சேர்த்துக்கொள்ளப்படவேண்டியுள்ளது. அதனை அதன் அடுத்த முதிர்வுக்காலத்தில் இடைநிறுத்தி அனைத்து நிதிகளையும் ஒன்றிணைத்து ஒரே வைப்பாக வைப்பில் இடுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுதல்.
ஒரு இலட்சம் முதிர்வு திகதி ஹட்டன் நாஷனல் வங்கி: 26.05.2017
ஒன்றரை இலட்சம் முதிர்வு திகதி ஹட்டன் நாஷனல் வங்கி: 06.07.2017


8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகளிற்கு தடையாக இருந்த இருக்கும் காரணிகள் தொடர்பாக விளக்கம் பெறுதலும், தீர்மானம் நிறைவேற்றுதலும். (3.30 P.M)
    1. மன்றத்தின் வங்கிக்கணக்கு தொடர்பானது
    2. மன்றத்தின் தொலைந்து போன சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பானவை
    3. மன்றத்தின் வழமையான செயற்பாடுகளை இடைநிறுத்தும் நோக்கில்                  முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த செயற்பாடுகள் தொடர்பானவை.
   4. Chartered Professional Accountant(CPA)  அமைப்பிற்கு அனுப்பப்பட்ட போலி முறைப்பாடுகள் தொடர்பானவை.
   5. நிர்வாக சபை உறுப்பினர்களிற்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் மற்றும் மிரட்டல் கடிதங்கள் தொடர்பானவை.

 


9.  1. நிர்வாக சபையின் பதவிக்காலத்தில் மன்றத்தின் அங்கத்தவர்கள் நிர்வாகத்தில் தலையீடு செய்து நிர்வாகத்தினை குழப்ப முயற்சி செய்தலை முற்றாக தவிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல். 
     2. அங்கத்தவர் வருட சந்தா மற்றும் ஆயுள் சந்தா பணம் தீர்மானித்தல். 
     3. மன்ற நிர்வாக அலுவலகம் தீர்மானித்தல்.
     4. மன்றத்தின் தேவையற்ற இருப்புக்கள் குப்பையிலிடுதல். (4.15 P.M)


10. அங்கத்தவர்கள் கேள்வி நேரம் (4.30 P.M)
11. புதிய நிர்வாக சபை தெரிவு (5.00 P.M)
தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், உபபொருளாளர், 13 நிர்வாக சபை உறுப்பினர்கள், 6 தயார்நிலை உறுப்பினர்கள், 5 திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள், கணக்காய்வாளர்.

12. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல்
13. புதிய நிர்வாக சபையின் எதிர்கால திட்டங்கள்
14. நன்றியுரை (6.00 P.M)

 


குறிப்பு: 1. பொதுக்கூட்டம் அமைதியாகவும், மன்றத்தின் இறைமையினை பேணும் வகையிலும் நடாத்துவதற்கு அனைத்து அங்கத்தவர்களின் ஒத்துழைப்பினையும் வேண்டிக்கொள்வதோடு, வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலும் முன்வைக்கப்படும் பிரேரணைகள் அனைத்தும் இரகசிய வாக்கெடுப்புக்கள் மூலம் நிறைவேற்றப்படும்.

குறிப்பு: 2. போதியளவு அங்கத்தவர்கள் புதிய நிர்வாக தெரிவில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் மன்றத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதற்காக Ontario Not-for-Profit Corporations Act பிரகாரம் குறைந்த பட்சம் 3 முதல் 5 இயக்குனர்கள் மன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 23.04.2017 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுச்சபை அங்கத்தவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்.

 


                 நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்

       

கனடா-காரை கலாச்சார மன்றம் புதிய நிர்வாக சபை தெரிவும் பொதுக்கூட்டமும்..!

CKCA logo

                                     கனடா-காரை கலாச்சார  மன்றம்

                புதிய நிர்வாக சபை தெரிவும் பொதுக்கூட்டமும்


கனடா காரை கலாச்சார  மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவும் பொதுக்கூட்டமும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் 2016ம், 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.


தற்போதைய திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையின் செயலாளர் அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கை என்பன பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக அங்கத்தவர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.


பொதுக்கூட்டத்திற்கான காலம், இடம், நேரம் என்பன கூடிய விரையில் அறியத்தரப்படும்.


                  இங்ஙனம்
                 நிர்வாகம்
  கனடா காரை கலாச்சார  மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் மூலம் மேலதிகமான நிர்வாக சபை உறுப்பினர்கள்,போஷகர் சபை உறுப்பினர்கள்,கணக்காய்வாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்

CKCA logoகனடா காரை கலாச்சார மன்றத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் மூலம் மேலதிகமான நிர்வாக சபை உறுப்பினர்கள்,போஷகர் சபை உறுப்பினர்கள்,கணக்காய்வாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

17.12.2016 கடந்த  சனிக்கிழமை அன்று நடைபெற்ற மன்றத்தின் விசேட பொதுக்கூட்டத்திற்கு  காலநிலை காரணமாக குறைந்தளவில் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  மன்றத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் மூலம் தற்போதைய  நிர்வாக சபைக்கு மேலதிகமாக நிர்வாகசபை உறுப்பினர்கள், கணக்காய்வாளர் ஆகியோருடன் போஷகர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு முழுமைபெற்ற நிர்வாக அமைப்பைக் கொண்ட நிர்வாக சபையாக பூர்த்தி அடைந்துள்ளது.

அது மட்டுமன்றி 28.05.2016 முதல் 17.12.2016 வரையான இடைக்கால செயற்பாட்டு அறிக்கை மற்றும் இடைக்கால கணக்கறிக்கை என்பனவும் தெரியப்படுத்தப்பட்டதுடன், 28.05.2016 அன்று நடைபெற்ற நிர்வாக தெரிவுகள் அடங்கிய பொதுக்கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு கலந்து கொண்ட மன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியினையும் முறையான செயற்பாடுகளையும் முன்னெடுத்து செல்லவும் கனடா வாழ் காரை மக்களின் அபிலாஷைகளிற்கும் மன்றத்தின் அங்கத்தவர்களின் விருப்பத்திற்கும் இணங்க செயற்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகளை முறையே நிர்வாக சபையினரால் முன்னெடுத்து செல்ல தற்காலிக நிர்வாக சபையாக இயங்கி வந்த தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை முழுமையான நிர்வாக அந்தஸ்தினைக் கொண்ட நிர்வாக சபையாக செயற்பட ஆரம்பித்துள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வழமையான செயற்பாடுகளில் ஒன்றான ஆருத்திரா தரிசன திருவிழா ஜனவரி 11,2017 அன்று நடைபெறவுள்ளதாலும், மன்றத்தின் வங்கி கணக்குகள் ஊடாக மன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லவும் மன்றத்தின் இறைமை மற்றும் கனடா வாழ் காரை மக்களின் நல்லெண்ணங்களிற்கு உட்பட்டு மன்றத்தின் நிர்வாகத்தினை முன்னெடுத்து செல்ல தற்போதைய நிர்வாக சபையினர் பெரிதும் முயன்று வருகின்றனர்.

கடந்த கால நிர்வாக சபை உறுப்பினர்கள், மன்றத்தின் அங்கத்தவர்கள், கனடா வாழ் காரை மக்கள் மற்றும் அனுசரணையாளர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் வழமைபோன்று தமது பங்களிப்புக்களை வழங்கி மன்றத்தின் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் பங்கேற்றுக்கொள்ளமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


17.12.2016 சனிக்கிழமை  அன்று நடைபெற்ற மன்றத்தின் விசேட பொதுக்கூட்டத்தில்   முழுமைபெற்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு:

தலைவர்: திரு. பரமானந்தராஜா தம்பிஐயா 
செயலாளர்: திரு. ஜெயச்சந்திரன் தம்பிராசா
உபசெயலாளர் :திரு. தீசன் திரவியநாதன்
பொருளாளர்: திரு. பேரின்பராசா  திருநாவுக்கரசு
உபபொருளாளர் : திரு. உமைபாகன் கனகேந்திரம்
 
நிர்வாகசபை உறுப்பினர்கள்:
திரு. குமரேசன் கனகசபை​
திரு. அரி மனோகரன்
திரு. உருத்திரலிங்கம் தம்பையா
திரு. சோதிலிங்கம் கணேசபிள்ளை 

திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள்:
திரு. கந்தையா கனகராஜா
திரு. சிவபாலன் சிவசோதி 

கணக்காய்வாளர் :
திரு.சிவராமலிங்கம் சிவசுப்பிரமணியம்

இணையத்தள தொழில்நுட்ப ஆலோசகர்:
 திரு. குலசேகரம் விமலராசா

 
 
img_1878 img_1879 img_1880 img_1881 img_1882 img_1884 img_1886 img_1888 img_1890 img_1893 img_1895 img_1896 img_1897 img_1898 img_1899 img_1900 img_1901 img_1902 img_1903 img_1904 img_1905 img_1906 img_1907 img_1911 img_1912 img_1914 img_1915
 
   

கனடா காரை கலாச்சார மன்றம் விசேட பொதுக் கூட்ட அறிவித்தல்

    CKCA logo     

  கனடா காரை கலாச்சார மன்றம் விசேட

             பொதுக் கூட்ட அறிவித்தல்


இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர்

 காலம்: 17.12.2016 சனிக்கிழமை 

 நேரம்: காலை 8.30


 

                                                                 நிகழ்ச்சி நிரல்

1. கடவுள் வணக்கம்

2. அக வணக்கம்

3. தலைவர் முன்னுரை

4. இடைக்கால செயலாளர் அறிக்கை

5.இடைக்கால  பொருளார் வரவு செலவு அறிக்கை

6. கனடா காரை கலாச்சார மன்ற செயற்பாடுகளிற்கு தடையாக இருந்த,இருக்கும் காரணிகள் தொடர்பாக நிர்வாக சபையின் பிரேரணைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானித்தல் 

7.நிர்வாக சபைக்கு தேவையான மேலதிக நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு:
    1.உப  தலைவர் தெரிவு
    2.உப செயலாளர் தெரிவு
    3. உப பொருளாளர் தெரிவு
    4.நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு
    5.தயார்நிலை உறுப்பினர்கள் தெரிவு
    6.போசகர் சபை உறுப்பினர்கள் தெரிவு
    7.கணக்காய்வாளர் தெரிவு

8.மன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான உறுப்பினர்கள் பிரேரணைகள்
மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிசம்பர் 10ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற வேண்டுகோளின் அடிப்படையில் உறுப்பினர்கள் நிறைகுறைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானித்தல்.

9.புதிய முழுமையான நிர்வாக சபை புகைப்படம் எடுத்தல்

10.நன்றியுரை 


                    நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்
                   Nov 24,2016

 

                                         "WORKING TOGETHER IS SUCCESS"

 

 

%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் விசேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் விசேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்!


கனடா காரை கலாச்சார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபைக்கு மன்றத்தின் யாப்பு விதிகளிற்கு அமைய முழுமையான நிர்வாக சபை அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுக்கூட்டம்.


இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர்
 காலம்: 17.12.2016 சனிக்கிழமை 
 நேரம்: காலை 8.30


நிகழ்ச்சி நிரல்: 
யாப்பு விதிமுறைகளிற்கு அமைய 25.11.2016 எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அறியத்தரப்படும்.
2016ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர் மட்டும் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணம் செலுத்தியவர்கள் மட்டும் பொதுக்கூட்டத்தின் போது வாக்கு அளிக்கும் உரிமையினை கொண்டிருப்பர் என்பது ஞாபகத்தில் கொள்ளத்தக்கது.

 

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் 28-05-2016 அன்று சனிக்கிழமை பிற்பகல் 6:00 மணிக்கு நடைபெற்றது.

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில்  28-05-2016 அன்று சனிக்கிழமை பிற்பகல் 6:00 மணிக்கு நடைபெற்றது.

பொதுக் கூட்டடத்தில்  தற்காலிக புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது.

தற்காலிக நிர்வாக சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

தலைவர்: திரு. பரமானந்தராஜா தம்பிஐயா 

செயலாளர்: திரு. ஜெயச்சந்திரன் தம்பிராசா

பொருளாளர்: திரு. பேரின்பராசா  திருநாவுக்கரசு

நிர்வாகசபை உறுப்பினர்கள்:

திரு. குமரேசன் கனகசபை​

திரு. அரி மனோகரன்

திரு. உருத்திரலிங்கம் தம்பையா

திரு. சோதிலிங்கம் கணேசபிள்ளை 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்ட அறிவித்தல். மே 28, 2016

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்ட அறிவித்தல்.  மே 28, 2016

 

அன்புடையீர்!

இடம்:    கனடா ஸ்ரீ செல்வச் சந்நதி முருகன் ஆலய திருமண மண்டபம்

                     01, Golden Gate, Unit # 01 Scarborough  (Brimley & Ellesmere)

காலமும் நேரமும்: 2016 மே 28ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.30 மணி

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் (28-05-2016) சனிக்கிழமை அன்று கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இதுவரை இவ்வருடத்திற்கான அங்கத்துவ பணத்தினை செலுத்தி இணைந்து கொள்ளாதவர்கள் 25.05.2016 ( புதன்கிழமை) க்கு முன்னர் அங்கத்தவர்களாக இணைந்து இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

                  

                                                             நன்றி

கனடா  காரை கலாச்சார மன்றம்

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கணக்கறிக்கை  2015/2016

            (FROM OCTOBER 11, 2015 TO MAY 28, 2016)

 

 கணக்கறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/05/கனடா-காரை-கலாச்சார-மன்றத்தின்-கணக்கறிக்கை-2015-2016-FROM-OCTOBER-11-2015-TO-MAY-28-2016.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் (2015-2016) ) புதிய நிர்வாகசபை 11-10-2015 திகதி நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

CKCA logo
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா  காரை கலாச்சார மன்றத்தின் (2015-2016) புதிய நிர்வாகசபை 11-10-2015 திகதி  நடை பெற்ற பொதுக்கூட்டத்தில்  தெரிவு செய்யப்பட்டது.

கனடா – காரை கலாச்சார மன்ற யாப்பு இலக்கம் 2015-003 (மீளமைக்கப்பட்டது) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பிரசன்னமாயிருந்த  2/3 பெரும்பான்மையான அங்கத்தவர்களால் நிறைவேற்றப்பட்டது. புதிய தலைவர் தமது உரையில் பழைய நிர்வாகசபையின் சேவைகளைப் பாராட்டியதுடன் மன்றத்தின் நற்பணிகளை புதிய நிர்வாகசபை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.

 

 

கனடா  காரை கலாச்சார மன்றம் நிர்வாகசபை  2015-2016

 

தலைவர் :

 திரு. இராசதுரை இரவீந்திரன்

 

உபதலைவர் :

திரு. கனகசபை குமரேசன்

 

 செயலாளர் :

திரு. பாலசுப்பிரமணியம் கணேசன்(பாலன்)

 

உபசெயலாளர் :

திரு. தவராஜா சங்கரப்பிள்ளை

 

பொருளாளர் :

திரு. தர்மலிங்கம் பரமசிவம்(துரை)

 

உபபொருளாளர் :

திருமதி. மலர் குழந்தைவேலு

 

நிர்வாக சபை உறுப்பினர்கள் :

 

திரு. பேரின்பராஜா திருநாவுக்கரசு

திரு. நடனசபேசன் பொன்னம்பலம்(ரூபன்)

திரு. மயூரன் வேலாயுதம்பிள்ளை

திரு. அரி மனோகரன்

திரு. உருத்திரலிங்கம் தம்பையா

   

திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள்:

திரு. சிவராஜா மயில்வாகனம்

திரு. திருக்குமரன் கணேசன்

திரு. அம்பலவாணர் கந்தப்பு

 

கணக்காய்வாளர் :

திரு. திருவாதர் தர்மராஜா

 

இணையத்தள தொழில்நுட்ப ஆலோசகர்:

 திரு. குலசேகரம் விமலராசா

 

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்

     CKCA logo
                          
                
  கனடா காரை கலாச்சார மன்றம்
                          Canada – Karai Cultural Association
              A non-profit corporate body in Ontario-Reg. No: 1100492
        P O BOX 32057 MILLIKEN CROSSING PO MARKHAM, ON, M1V 0E1
 .
  E-mail: karainagar@gmail.com     www.karainagar.com     Tel: 416-642-4912

 

                          விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்

கடந்த  மே மாதம்  10ம் திகதி  நடை பெற்ற  பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக  ஒரு விஷேட பொதுக்கூட்டம்  நடைபெறும் என்பதனை கனடா காரை  கலாச்சார மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களூக்கும்  தெரியபடுத்துகின்றோம்.  இக் கூட்டம்  பின்வரும் இடத்தில் நடைபெறும்.

இடம் :     Scarborough Civic Centre    அறை இலக்கம் 1

காலம்:    October 11,2015 9:00 AM to 12 :00 Noon.

                                                     நிகழ்வு அட்டவணை.

1.    கடவுள் வணக்கம் / அக வணக்கம்

2.    தலைவர் உரை

3.    கடந்த இரண்டு பொதுக்கூட்ட அறிக்கைகள் வாசித்தல்

4.    கடந்த நிர்வாக சபையியின் செயலாளர்அறிக்கை சமர்ப்பித்தல்

5.    கணக்காய்வாளரின் அறிக்கை சமர்ப்பித்தல்

6.    புதிய யாப்பினை பொது சபை அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல்.

7.    2013 – 2015 ஆண்டு கால வரவு செலவு கணக்கு அறிக்கையினையும், கணக்காய்வாளர் அறிக்கையினையும் பரிசீலணை செய்தலும் அது பற்றிய கலந்துரையாடலும்.

8.    அங்கத்தவர்கள் வருட சந்தா , நிர்வாக சபை / போஷகர் சபை  அங்கத்தவ்ர்களின் எண்ணிக்கை பற்றிய தீர்மானம் எடுத்தல்.

9.    வேறு பிரேரணைகளும், கேள்வி பதில் நேரமும்.

10.    புதிய நிர்வாக சபைத் தலைவர் தெரிவு

                                                                    இடை வேளை

11.    நிர்வாக சபை அங்கத்தவர்கள் / வெற்றிடமாகும் போஷகர் சபை அங்கத்தவர்கள் / கணக்காய்வாளர்  தெரிவு.

12.    புதிய நிர்வாக சபைத்தலைவர் உரை.

13.    நன்றி உரை.

இக் கூட்டத்தில் 2013 / 2014 / 2015 ம் வருடங்களில் ஏதாவது ஒரு வருட சந்தா செலுத்தியவர்களும் , ஆயுள் கால உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம். மண்டப வாயலிலும் வருட சந்தா பணம் செலுத்தி அங்கத்துவ தகைமையினை பெற்றுக் கொள்ளலாம் அல்லது புதுப்பித்துக் கொள்ளலாம். 

நிகழ்வு அட்டவணையில் மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் வேறு ஏதாவது விடயங்கள் சேர்க்கப்பட வேண்டுமென அபிப்பிராயப்பட்டால், அந்த விடயம் சம்பந்தமான விபரங்களை ஒக்டோபர் 6 ம் திகதி நள்ளிரவு 12:00 க்கு முன்பு karainagar@gmail  என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். இந்த வேண்டுகோள் போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபையினால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவை நிகழ்வு அட்டவணையில் சேர்க்கப்படும். 

நிர்வாக சபை / போஷகர் சபை அங்கத்தவர்களுக்கான கணக்காய்வாளருக்கான தேர்தல்.

யாப்பின்படி அனைத்து வெற்றிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும். அதற்கான விண்ணப்ப படிவங்களை மண்டப வாசலில் பெற்று பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இரகசிய வாக்கெடுப்பு முறை மூலமே அங்கத்தவர்கள் தேர்ந்து எடுக்கப் படுவார்கள். 

மீளாய்வு செய்யப்ப்ட்ட யாப்பு மீண்டும் எமது இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பொதுமக்களின் பார்வைக்கும் / கருத்து பரிமாற்றத்துக்கும்  உட்படுத்தப்பட்டது. இதனால் யாப்பு பொது சபை உறுப்பினர்களின் சம்பிரதாய வாக்கெடுப்பிற்கு நேரடியாக விடப்படும்.

கடந்த நிர்வாக சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையும் பொது மக்களின் பார்வைக்காக இணைய தளத்தில் பிரசுரிக்கப்ப்ட்டுள்ளது. இதனை கணக்காய்வாளர் சிபார்சு செய்யவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவும்

மண்டபநேரம் மட்டுப் படுத்தப்பட்ட கால இடைவெளியாக ( மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் ) இருப்பதால் பொது மக்ககளை சரியாக காலை 9:00 க்கே மண்டபத்தில் கூடும்படி அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். கூட்ட நடவடிக்கைகள்  சரியாக காலை 9:30 க்கு ஆரம்மமாகும். கூட்டதுக்கு வரும் அனைவரும் ஒன்று சேர்ந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரோக்கியமான எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு அமைதியான முறையில்இ தடங்கலின்றி கூட்டத்தினை நடாத்த எல்லோருடைய அன்பான ஒத்துழைப்பினை  எதிர்பார்க்கின்றோம்.


தொடர்ந்து விபரங்கள்  இதே  இணையத்தளத்தில் எடுத்து வரப்படும் என தெரிவித்து கொள்கின்றோம் இக்கூட்டம் சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படின்
  
Tel: 416-642-4912 ல்  அல்லது   karainagar@gmail 
 
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.


இவ்வண்ணம்

போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபை.

Gen_Meeting _03- Final Notice0001Gen_Meeting _03- Final Notice0002Gen_Meeting _03- Final Notice0003

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்

CKCA logo

 

விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்

கடந்த  மே மாதம்  10ம் திகதி  நடை பெற்ற  பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக  ஒரு விஷேட பொதுக்கூட்டம்  வெகு விரைவில் நடைபெறும் என்பதனை கனடா காரை  கலாச்சார மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களூக்கும்  தெரியபடுத்துகின்றோம். எமக்கு கணக்காய்வாளரின் 10 பக்கங்கள் அடங்கிய அறிக்கை 09/10/2015 ல் கிடைத்தது என்பதனை இங்கு உறுதி செய்து கொள்கின்றோம். 


இக் கூட்டம் நடை பெறுவதற்கான  கால நேரம், இடம் என்பன உறுதி செய்யப்பட்டவுடன் அவைபற்றிய விபரங்களும், நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்களும் இதே  இணையத்தளத்தில் விரைவில் எடுத்து வரப்படும் என தெரிவித்து கொள்கின்றோம்

இவ்வண்ணம்
போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபை.

Gen_Meeting _03- notice0001

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டத்திற்கான அறிவித்தலும் அழைப்பும். ஜூன் 21, 2015

GenMeetingTime andLocation30001

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டத்திற்கான , இடம் காலத்திற்கான மாற்றம் பற்றிய அறிவித்தலும் அழைப்பும். ஜூன் 21, 2015

GenMeetingTime andLocation20001

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்ட ஒத்திவைப்பு அறிவித்தல்.

meeting Postponed0001

கனடா காரை கலாச்சார மன்றம். பொதுக்கூட்ட அறிவித்தலும் அழைப்பும். ஜூன் 14, 2015

ckcagenmeeting_14-06-2015-page-NEW

கனடா-காரை கலாசார மன்றம் ஈராண்டு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் பற்றிய அறிவித்தலும் அழைப்பிதழும்!

CKCA LOGO (Copy)
கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 10.05.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு 150 Borough Drive, Scarborough இல் அமைந்துள்ள Scarborough Civic Centre  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
புதிய நிர்வாக சபை தெரிவு தேர்தல் முறையில் போஷகர் சபையினரால் நடாத்தப்படும். தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிர்வாக சபையின் அனைத்து பதவிகளிற்குமான விண்ணப்ப படிவம் என்பவற்றை கனடா காரை கலாசார மன்றத்தின் உத்தியோகபூர்வமான இணையத்தளமான www.karainagar.com என்ற இணையத்தளத்தில் 30.04.2015க்கு முன்னர் எதிர்பாருங்கள்.
 
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளிற்கு அங்கத்தவ பணம் செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்கள் மட்டும் நிர்வாக சபை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி பெற்றவர்களாவார்கள் அத்துடன் பொதுக்கூட்டத்தின் போது வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களாவார்கள்.
 
கனடா காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு நிதியத்திற்கான நிதி சேகரிப்பு மற்றும் அவை தொடர்பான செயற்பாடுகள் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருப்பதால் முழுமையான அறிக்கைகளை தற்பொழுது எடுத்து வரமுடியவில்லை. ஆனாலும் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் அவை அங்கத்வர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும்.
 
கனடா காரை கலாசார மன்றத்தின் மேலதிக செய்திகள் தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாத அங்கத்தவர்கள் 416 642 4912 என்ற மன்றத்தின் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியத்தருவதன் மூலம் தங்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
 
எதிர்வரும் பொதுக்கூட்டத்தின் போது தற்போது யாப்பு திருத்த குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திருத்திய யாப்பு அறிமுகம் செய்யப்பட்டு பொதுச்சபையின் அங்கீகாரத்திற்காக விடப்படும். புதிய திருத்திய யாப்பு 14.04.2015 அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் இணையத்தளமான www.karainagar.com என்ற இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்டுள்ள இத்திருத்திய யாப்பு பிரதியினை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மன்றத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 
பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்: 10.05.2015
 
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி
 
இடம்: 150 Borough Drive, Scarborough, On. M1P 4N7
 
நிகழ்ச்சி நிரல்:
 
 கடவுள் வணக்கம் (9.00 மணி)
 
 மௌனஅஞ்சலி
 
 தலைவர் உரை
 
 சென்ற பொதுக்கூட்ட அறிக்கை வாசித்தல்(செயலாளர்)
 
 2013- 2014 மற்றும் 2015 ஏப்ரல் வரையான செயற்பாட்டு அறிக்கை விளக்கம் (செயலாளர்)
 
 பொருளாளர் அறிக்கை விளக்கம்
 
 போஷகர் சபை நேரம் (30 நிமிடம்)
 
 யாப்பு திருத்தம், விளக்கம், அங்கீகாரம்
 
 ஆயுட்கால சந்தா, வருட சந்தா தீர்மானம்.
 
 புதிய நிர்வாக சபை தெரிவு
 
குறிப்பு: பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் அங்கத்தவர்களினால் 08.05.2015 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். 08.05.2015 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பொதுக்கூட்டத்தின் போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 
பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் மிகவும் அமைதியான முறையிலும், உத்தியோகபூர்வமாகவும் நடைபெறுவதற்குரிய அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
 
பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டபம் மதியம் 12 மணிவரை மட்டுமே அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே பொதுக்கூட்டம் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படும். அனைத்து மன்றத்தின் அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
                                                                            நன்றி!
 
கனடா காரை கலாசார மன்றம்
நிர்வாகம்

கனடா- காரை கலாசார மன்றம் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவு பற்றிய அறிவித்தல்!

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 10.05.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு Scarborough Civic Centre  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் யாப்பு விதிகளுக்கமைய தற்போதைய நிர்வாக சபையினரால் யாப்பு திருத்தம் தொடர்பான பணிகள் இடம்பெற்று வருவதாலும், காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான 10 இலட்சம் ரூபா நிரந்தர வைப்பு திட்டத்திற்கான நிதி சேகரிப்பு பூர்த்தியாத காரணத்தினாலும் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இவ்வருட தொடக்கத்தில் நடாத்த முடியவில்லை.

தற்போதைய நிர்வாக சபையினருக்கும் போஷகர் சபையினருக்கும் இடையே இது பற்றிய புரிந்துணர்வின் அடிப்படையில் தற்போதைய நிர்வாக சபையினாரால் 2014ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகள் அனைத்திற்கும் பாரியளவில் நிதி வழங்கப்பட்டு பலவித செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ள காரணத்தினால் அச்செயற்பாடுகளின் பலாபலன்கள் மற்றும் நிதி அறிக்கை என்பவற்றை பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தினாலும் வருட ஆரம்பத்தில் நடைபெறவேண்டிய பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் காலதாமதம் ஆகியுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பும், தற்போதைய நிர்வாக சபையினரின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை என்பனவும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

புதிய நிர்வாக சபை தெரிவிற்கான நடைமுறை மற்றும் விளக்கம் என்பனவும் போஷகர் சபையின் சார்பாக வெளியிடப்படும்.

மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு: கனடா-காரை கலாசார மன்றம் 416 642 4912

 

கனடா-காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டம் பற்றிய அறிவித்தல் மற்றும் நிகழ்ச்சி நிரல்!

  CKCA LOGO (Copy)

                 கனடா-காரை கலாச்சார மன்றம்

                பொதுக்கூட்ட அறிவித்தல் – 2014

இடம்: பெரிய சிவன் ஆலய மண்டபம்
    1150 Bellamy Road (Bellamy & Ellessmere)
    Scarborough, Ont.

காலம்: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 07, 2014  மாலை 3.00

தலைமை: திரு.தம்பிஐயா பரமானந்தராஜா, மன்றத் தலைவர்

நிகழ்ச்சி நிரல்

1. கடவுள் வணக்கம் 

2. அக வணக்கம்

3. தலைவர் முன்னுரை (மாலை 3.10)

4. செயலாளர் இடைக்கால செயற்பாட்டு அறிக்கை

5. பொருளாளர் இடைக்கால வரவு செலவு அறிக்கை

6. காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் 12க்கும் தலா பத்து இலட்சம் வரை அத்தியாவசிய தேவைகளை வருடந்தோறும் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்படவுள்ள நிதியத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிரந்தர வைப்பு கணக்கில் உள்ள நிதியினையும் சேர்த்துக் கொள்வதற்கான அனுமதியை பெறுவதற்கான வாக்கெடுப்பு

7. யாப்பு திருத்த பிரேரணைகள் தொடர்பான தீர்மானம் எடுத்தல்

8. உறுப்பினர்களின் கருத்துரைகள்

9. தலைவர் நிறைவுரை

10. நன்றியுரை!

2014ம் ஆண்டு மன்றத்தின் உறுப்பினராக 04.12.2014 வரை சேர்ந்த அனைத்து அங்கத்தவர்களும் கூட்டத்தில் பங்கு பற்ற முடியும்.

பொதுக்கூட்டத்தினை அமைதியான முறையில் நடாத்துவதற்கும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மன்றத்தினால் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தயவு செய்து அனைத்து மன்றத்தின் அங்கத்தவர்களும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நிர்வாக சபை

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

 

கனடா-காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டத்திற்கான நேர மாற்றம் பற்றிய அறிவித்தல்!

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07.12.2014 அன்று நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டம் 1150 Bellamy Road  இல் அமைந்துள்ள(Bellamy and Ellessmerre) பெரிய சிவன் ஆலயத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இதுவரை இவ்வருடத்திற்கான அங்கத்துவ பணத்தினை செலுத்தி இணைந்து கொள்ளாதவர்கள் வியாழக்கிழமை 04.12.2014 க்கு முன்னர் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டால் மட்டுமே இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

இப்பொதுக்கூட்டத்திற்கான நேரம் முன்னர் காலை 10 மணி என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறந்து விடாதீர்கள் Bellamy and Ellesmere  சந்திப்பில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயத்தில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் எதிர்வரும் புதன்கிழமை இணையத்தளம் ஊடாகவும், இதுவரை அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்களிற்கு நேரடியாகவும் அறியத்தரப்படும்.

நன்றி!

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

கனடா-காரை கலாச்சார மன்றம் விடுக்கும் பொதுக்கூட்டம் பற்றிய அறிவித்தல்! 07.12.2014

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதி (07.12.2014) நடைபெறவுள்ளது. கனடா காரை கலாச்சார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையின் செயற்பாடுகள் பற்றி விளக்கம் அளிப்பதற்காகவும், தற்போதைய நிர்வாக சபையினரால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் வருடாந்த அத்தியாவசிய, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிரந்தர வைப்பு நிதியத்தில் தலா 10 இலட்சம் வரையான நிதி இட்டு வழங்குவது தொடர்பாக பொதுச்சபைக்கு அறியப்படுத்தி அனுமதி பெறுவதற்காகவும் பொதுக்கூட்டம் கூட்டப்படுகின்றது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தில் இதுவரை அங்கத்தவராக இணைந்து கொண்டவர்கள் அனைவரும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். அத்துடன் இதுவரை இவ்வருட அங்கத்துவ பணத்தை செலுத்தி அங்கத்தவராக இணைந்து கொள்ளாதவர்கள் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னராக 04.12.2014 வியாழக்கிழமைக்கு முன்னர் அங்கத்தவர் பணத்தினை செலுத்தியவர்கள் மன்றத்தின் யாப்பின் பிரகாரம் அனைத்து உரிமைகளும் பெற்ற மன்றத்தின் அங்கத்தவராக கருதப்படுவார்கள். இதுவரை அங்கத்துவ பணம் செலுத்தி அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களிற்கான பொதுக்கூட்ட அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் விபரங்கள் கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காலம்: 07.12.2014 (டிசம்பர் 07, 2014)

நேரம்:மாலை 3 மணி

இடம்: பெரிய சிவன் ஆலயம்

1150 Bellamy Road. Scarborough

(Bellamy & Ellesmere)

-கனடா காரை கலாச்சார மன்றம்

நிர்வாகம்

 

கனடா காரை கலாச்சார மன்றம் கலந்துரையாடலும் விருந்துபசாரமும்…!

கனடா-காரை கலாச்சார மன்றம் தயாகத்திலிருந்து கனடாவிற்கு விடுமுறையில் வந்திருந்த காரைநகர் தொழிலதிபரும், சமூக சேவையாளரும், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மண்ணின் மைந்தன் தியாகராசா மகேஸ்வரனின் அன்புத் தம்பியுமான திரு.தியாகராசா பரமேஸ்வரன் அவர்களை வரவேற்று 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் கலந்துரையாடல் ஒன்றினை நிர்வாக சபை உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்திருந்தது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் வரவேற்கவும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையாளரும், திரு.தி.பரமேஸ்வரனின் நீண்டகால நண்பருமான திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கவும் நிகழ்வுகள் ஆரம்பமானது. கனடாவிற்கு வருகை தரும் காரைநகர் சேவையாளர்களை கனடா காரை கலாச்சார மன்றம் கடந்த காலங்களிலும் இப்போதும் கௌரவித்து வருவதையும் அதற்கான காரணங்களையும் மன்றத்தின் பதில் செயலாளர் காரணங்களுடன் விளக்கியதுடன், திரு.தியாகராசா பரமேஸ்வரன் முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் விட்டுச்சென்ற பணிகளில் ஒன்றான சிவப்பணியினை முன்னின்று செயற்படுத்தி வருவதும், காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேக செலவுகளான 35 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியினை காரைநகர் வர்த்தகர்களை ஒன்றிணைத்து அதன் மூலம் நிவர்த்தி செய்தமையினையும், அடியார் சபை, திருப்பணி சபை பிணக்குகளின் போது இலட்சக்கணக்கான நிதியினை நீதி மன்ற வழக்குகளிற்காக செலவு செய்தமையினையும் சுட்டிக்காட்டிதுடன், கடந்த காலங்களில் காரைநகர் சேவை அமைப்புக்களில் ஏற்பட்ட பிணக்குகளை சுமூகமான முறையில் தீர்த்து வைக்க எடுத்த நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியதுடன், காரைநகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும், காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக திட்டத்திற்கு காரைநகர் வர்;த்தகர்களின் உதவியினை பெற்று வழங்குவதற்கும் திரு.தியாகராசா பரமேஸ்வரன் முயற்சிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

திரு.தியாகராசா பரமேஸ்வரன் தனது உரையில் காரைநகர் மக்களின் ஒற்றுமையினை முன்னிறுத்தி உரை நிகழ்த்தியிருந்தார். வெளிநாடுகளில் ஒவ்வொரு நாடுகளிலும் காரைநகர் மண்ணின் பெயரால் ஒரே ஒரு அமைப்பு மட்டுமே இயங்க வேண்டும் என்றும், அந்த அமைப்பினை வலுப்படுத்த அனைத்து இடம் பெயர்ந்த மக்களும் முன்வந்து உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அது மட்டுமல்லாது இடம் பெயர்ந்த நாடுகளில் உள்ள காரை மன்றங்கள் காரைநகரில் செயற்படுத்தும் திட்டங்களை காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக மட்டுமே நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் ஆளாளுக்கு ஒவ்வொரு திட்டங்களாக செயற்படுத்த முனைந்து பல திட்டங்கள் முற்றுப்பெறாமல் இருப்பதற்கான காரணம் இதுவே என்றும் தெரிவித்தார்.

அத்துடன் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைகளிற்காக கனடா காரை கலாச்சார மன்றம் கனடவில் காரைநகர் மக்களை ஒன்று திரட்டி தினம் ஒரு அடியவராக 300 அடியவர்களை ஈழத்து சிதம்பர ஆதீனகர்தாக்களுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் தனது வேண்டுகோளினை முன்வைத்திருந்தார்.

காரைநகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வெளிநாடுகளில் உள்ள காரைநகர் மக்களினால் மட்டுமே அறிவும், திறமையும், ஊர்ப்பற்றும் நிறைந்த பொயியலாளர்களின் உதவிகளை பெற்று காரைநகர் மண்ணின் தன்மையும், நிலத்தடி நீரின் ஆழம், மற்றும் மழை வீழ்ச்சி, நீர் நிலைகளின் தன்மை என்பவற்றை ஆராய்ந்து திட்டம் தீட்டப்பட வேண்டும் எனவும் இந்த பாரிய முழுமையான திட்டத்தை வெளிநாடுகளில் இயங்கும் காரை அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொறியியலாளரை வரவழைத்து முழுமையான திட்டத்தை தயாரித்து வழங்கினால் அதனை தற்போது வடமாகாண சபையில் தமிழ் மக்களின் வோட்டுக்களைப் பெற்று பதவியில் அமர்ந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக நிறைவேற்ற காரைநகர் வர்த்தகர்களுடன் இணைந்து முழுமையான முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் உறுதியளித்தார்.

அதுபோன்று காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக திட்டத்திற்கு காரைநகர் வர்த்தகர்கள் நிச்சயமாக உதவ முன்வருவார்கள் எனவும் காரைநகர் மாணவர் நூலக திட்டத்தின் முழுமையான திட்டத்தினை வழங்குமாறும், காரைநகர் அபிவிருத்தி சபை காரைநகர் வர்த்தகர்களை நம்பி முழுமையாக அப்பணியினை வழங்கினால் காரைநகர் வர்த்தகர்களினால் தலா ஒருவர்க்கு 10 இலட்சம் வழங்கி ஆறுமாத காலத்தினுள் முழுமை பெற்ற மாணவர் நூலகமாக அமைத்துக் கொடுக்கலாம் எனவும், காரைநகர் கோயில்களிற்கு காரைநகர் வர்த்தகர்கள் பலர் 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகையினை வழங்கி வந்துள்ளார்கள் என்றும் நிச்சயமாக காரைநகர் பாடசாலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்றும் ஆனாலும் காரைநகர் அபிவிருத்தி சபை இதுவரை முழுமையான திட்டங்களுடன் காரைநகர் வர்த்தகர்களை அனுகவில்லையெனவும் தெரிவித்தார்.

திரு.தியாகராசா பரமேஸ்வரன் அவர்கள் பிரான்ஸ், லண்டன், அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளிற்கு நேரடியாக சென்று காரைநகர் மக்களின் வாழ்க்கை நிலமையினை நன்கு அறிந்து கொண்டவர். அந்த வகையில் வெளிநாடுகளில் வாழும் காரைநகர் மக்கள் தமது சொந்த வாழ்க்கைத் தரத்தினை சுமூகமாக கொண்டு செல்வதற்கே உழைத்து வரும் வேளையில் வேலைப்பழுவிற்கு மத்தியிலும் ஊர் நினைவுடன் தம்மால் சிறியளவு தொகையினையே வழங்க முடியும் என்பதனையும்  தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், ஆனாலும் காரைநகரின் அபிவிருத்தியும் புனரமைப்பும் வெளிநாடுகளில் வதியும் காநைரகர் மக்களின் ஒற்றுமையிலே தங்கியுள்ளதாகவும், வெளிநாடுகளில் வதியும் ஒவ்வொரு காரைநகர் மக்களும் சிறு தொகையாகினும் தம்மால் முடிந்த ஒரு டொலராகினும் பொது அமைப்புக்களுக்கு வழங்கினால் அவர்களது பங்களிப்பின் மூலம் ஒற்றுமையினை புலப்படுத்த முடியும் எனவும், உதாரணமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் வரவு செலவு அறிக்கையில் கனடாவில் வதியும் அனைத்து காரைநகர் மக்களின் பெயர்களும் ஒரு டொலர் வழங்கினாலும் வரவேண்டும் எனவும் அதன் மூலமே கனடாவில் காரைநகர் மக்கள் ஒற்றுமையுடன் செயலாற்றுகின்றார்கள் என்ற கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமை காரைநகர் மக்களிற்கும் காரைநகர் வர்த்தகர்களிற்கும் பலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பயனுள்ள இக்கலந்துரையாடல் கனடா காரை கலாச்சார மன்றம் அடுத்து எடுக்கவுள்ள முயற்சிகளிலும், வெளிநாடுகளில் உள்ள காரை அமைப்புக்கள்  இக்கலந்துரையாடலின் மூலம் உள்வாங்கிக் கொள்ளும் செய்திகள் மூலமாகவும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள முடியும்.
கலந்துரையாடலின் முடிவில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபையினரால் இராப்போசன விருந்தும் வழங்கப்பட்டது.

IMG_2845 IMG_2846 IMG_2847 IMG_2849 IMG_2853 IMG_2857 IMG_2858 IMG_2859 IMG_2861 IMG_2862 IMG_2863

 

கனடா வாழ் காரைநகர் மக்கள், கனடா காரை கலாச்சார மன்றம், கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இணைந்து நடாத்திய தொழிலதிபர் திரு.E.S.P நாகரத்தினம் அவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு!


மேற்படி நிகழ்வு 27.07.2014 அன்று கனடா ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் கனடா காரை கலாச்சா மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.சண்முகம் கந்தசாமி(ஓய்வு பெற்ற M.L.T) தலைமையில் நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் விழா திருமதி.நாகேஸ்வரி சிறிவர்ணசூர்யா அவர்களின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து திரு. தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது. திருமதி ஞானாம்பிகை குணரத்தினம் அவர்கள் மலர் செண்டு கொடுக்கவும், திரு.கனக சிவகுமரன் அவர்கள் மாலை அணிவித்து விழா நாயகன் திரு.பேரம்பலம் நாகரத்தினம் அவர்களை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து விழா தலைவர் திரு.சண்முகம் கந்தசாமி அவர்களின் வரவேற்புரையினை தொடர்ந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.தம்பையா பரமானந்தராசா, போஷகர் சபை உறுப்பினர் திரு.ரவி ரவீந்திரன் ஆகியோரது கொளரவ உரைகளை தொடர்ந்து கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன அதிபர் திரு.கந்தையா சிவசோதி(இளையபாரதி) அவர்களின் உரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து திரு.வேலாயுதம்பிள்ளை முருகேசம்பிள்ளை, திரு.சிவா கந்தையா, ஆகியோரது உரைகளை தொடர்ந்து பிரபல் பல் வைத்தியர் ஆதிகணபதி சோமசுந்தரம் அவர்கள் மலர் மாலை அணிவித்து கௌரவித்ததுடன் சிற்றுரையாற்றினார். தொடர்ந்து திரு.சிவகுரு கந்தையா(மதவாச்சி) அவர்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி விழா நாயகன் திரு.பேரம்பலம் நாகரத்தினம் அவர்களை கௌரவித்தார். தொடர்ந்து திரு.இளையபாரதி அவர்கள் நினைவு கேடயத்தினை வழங்கி கௌரவிக்க, மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.குமரேசன் கனகசபை அவர்களும், போஷகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராஜேந்திரம் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து விழா நாயகன் கனடா காரை கலாச்சார மன்றம், கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இணைந்து வழங்கிக கௌரவத்தினை ஏற்றுக்கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையிலே தனது கனடாவிற்கான வருகை சொந்த முயற்சியின் பயனாக கைகூடியது என்றும், ஆரம்ப மேற்படிப்பு கல்வி எதனையும் தான் கற்றிராத போதிலும், தனது தொழில் முயற்சியால் முன்னேறி இற்றைக்கு யாழ்நகரில் முன்னணி தொழிலதிபராக விளங்கினாலும், தன்னை காரைநகர் சமூகத்தினராலும், யாழ்ப்பாண சமூகத்தினராலும் இனம் காணப்பட்டு 'கல்விக்காருண்யன்' என்ற சிறப்பு கௌரவத்தினை கொடுத்தது கல்வி வளர்ச்சியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பாடசாலைகளிற்கு தன்னால் வழங்கப்பட்ட சிறு உதவிகளே என்றும், அந்த வகையில் கனடா காரை கலாச்சார மன்றமும் தம்மால் ஆன கல்விக்கான உதவிகளை என்றென்று தொடர்ந்து வழங்கி வரவேண்டும் எனவும், காரைநகர் மக்களிற்கு முதல் தேவை அதுவே என்றும் தனது உரையில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா இனிதே நடைபெற்றது. விழா முடிவில் மதியபோசனம் உணவுசாலை ஒன்றில் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டார் கௌரவத்தினை பெற்றுக்கொண்ட திரு.பேரம்பலம் நாகரத்தினம் அவர்கள்.

 

 

கனடா-காரை கலாச்சார மன்றம் – கலந்துரையாடல்

      கனடா-காரை கலாச்சார மன்றம் – கலந்துரையாடல்

 


காலம்: 01.06.2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30
இடம்: Scarborough Civic Center  மண்டபம்
நிகழ்ச்சி நிரல்:
1. கடவுள் வணக்கம்
2. மௌன அஞ்சலி
3. தலைவர் உரை
4. போசகர் சபை இணைப்பாளர் உரை
5. அங்கத்தவர் தொடர்பான கலந்துரையாடல்


மேற்படி கலந்துரையாடலில் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், போசகர் சபை உறுப்பினர்கள் மற்றும் மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் பங்கு பற்றலாம்.

 கலந்துரையாடலில் பங்குபற்றும் அங்கத்தவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான அங்கத்தவர் பணம் செலுத்தி அங்கத்தவராக இணைந்திருக்க வேண்டும். இதுவரை இவ்வாண்டுக்கான அங்கத்தவர் பணம் செலுத்தாதவர்கள் மண்டப வாயிலில் இவ்வருடத்திற்கான அங்கத்தவர் பணத்தினை செலுத்திய பின்னர் பங்குபற்றலாம்.

கலந்துரையாடலில் அங்கத்தவர்கள் எவரேனும் தமது கருத்துக்களை மன்றத்திடம் முன்வைக்கவோ அன்றி தமது கருத்துக்களைப் பற்றி கலந்துரையாடவோ விரும்பின் 30.05.2014 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மன்றத்திற்கு எழுத்து மூலம் அறியத்தருமாறும், எழுத்து மூலம் அறியத்தரப்படும் அங்கத்தவர்களிற்கு மட்டுமே கலந்துரையாடலில் நேரம் ஒதுக்கப்படும். karainagar@gmail.com இமெயில் ஊடாகவோ, அல்லது தபால் மூலமாக ஆங்கிலம், தமிழ் இவற்றுள் எந்த மொழியிலும் மன்றத்திற்கு அறியத்தந்து உங்களிற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். ஏற்கெனவே 30 அங்கத்தவர்கள் நிர்வாக சபைக்கு எழுதியனுப்பிய கருத்துக்கள் கலந்துரையாடலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 

                                                                            நன்றி!

கனடா- காரை காலச்சார மன்றம்


 


 

கனடா – காரை கலாச்சார மன்றம் விசேட நிர்வாக சபை கூட்டம் 19.05.2014

19.05.2014 திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் ஆதி சிவன் ஆலய மண்டபத்தில் மேற்படி நிர்வாக சபை கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. 13 நிர்வாக அங்கத்தவர்கள் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். கடந்த நிர்வாக சபை கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஒரு சிலரால் அதிருப்தி தெரிவித்து அனுப்பப்பட்ட வேண்டுகோள் நிர்வாக சபையினரால் மூன்று மணிநேரமாக பரிசீலிக்கப்பட்டது. மன்றத்தின் நற்பெயர், நிர்வாக அங்கத்தவர்களின் ஒற்றுமை, மன்ற அங்கத்தவர்களின் நல்லெண்ணம் என்பவற்றை கருத்திற் கொண்டு நிர்வாக அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க போதிய நேர அவகாசம் கொடுக்கப்பட்டது.


மன்றத்தின் யாப்பு விதிகளை பாதிக்காத வகையிலும், நிர்வாக சபையினரின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையிலும் எதிர்வரும் யூன் மாதம் 1ம் திகதி, நிர்வாக அங்கத்தவர்கள், போசகர் சபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பும் மன்றத்தின் பொது அங்கத்தவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மன்றத்தின் செயலாளராக கடமையாற்றிய திரு.மார்க்கண்டு செந்தில்நாதன் அவர்கள் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், தொடர்ந்தும் நிர்வாக சபையில் அங்கம் வகிக்க விரும்புவதாகவும் தெரிவித்து தனது செயலாளர் இராஜினாமா கடிதத்தை தலைவரிடம் கையளித்தார். அத்துடன் உப தலைவராக பதவி வகித்த திரு.சங்கரப்பிள்ளை தவராஜா அவர்களும் தனது உப தலைவர் பதவியை இராஜினாமா செய்து தொடர்ந்தும் நிர்வாக சபையில் அங்கம் வகிக்க விரும்புவதாக தெரிவித்து தனது உபதலைவர் பதவி இராஜினாமா கடிதத்தை தலைவரிடம் கையளித்தார். இவை தொடர்பாக நிர்வாக சபையில் கலந்தாலோசிக்கப்பட்டு  செயலாளர் இராஜினாமா, உபதலவர் இராஜினாமா தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புதிய செயலாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு நிர்வாக சபையில் பிரசன்னமாகியிருந்த 12 அங்கத்தவர்களும் ஏகமனதாக திரு.தீசன் திரவியநாதன் அவர்களை பதில் செயலாளராக தெரிவு செய்தனர். தொடர்ந்து உபதலைவர் தெரிவு செய்யப்பட்டார். கலந்து கொண்ட நிர்வாக சபையினர் ஏகமனதாக திரு.பொன்னம்பலம் தவக்குமார் அவர்களை உபதலைவராக தெரிவு செய்தனர்.


திரு.மார்க்கண்டு செந்தில்நாதன், திரு.சங்கரப்பிள்ளை தவராஜா ஆகியோர் தாம் வகித்த பதவிகளில் போதியளவு நேரத்தை செலவிட முடியாத நிலையில் வேலைப்பழு காரணமாகவே தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறியப்படுத்தியிருந்தனர்.


இன்றைய அவசர விசேட நிர்வாக சபை கூட்டம் 3 மணிநேரத்திற்கும் மேற்பட்ட சுமூகமான கலந்துரையாடல் மற்றும் நட்பு ரீதியாக பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு மன்றத்தின் யாப்பு விதிகளிற்கு அமைவாக நடைபெற்று மாலை 6.30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபைக் கூட்டம் மன்ற வரலாற்றில் நீண்ட காலத்திற்கு பின் ஏற்பட்ட வரலாற்றுப் பதிவான தீர்மானங்கள்

காரைநகரில் கல்வி வளர்ச்சி, மற்றும் மனிதநேய உதவிக்காக 24 இலட்சம் ரூபாய்கள்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை(27.04.2014) அன்று மாலை 3:00 மணிக்கு ஸ்காபுரோ Sun City Plaza  இல் அமைந்துள்ள நடன வகுப்பறை மண்டபத்தில் மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

உப-தலைவர், செயலாளார், பொருளாளர், உப-பொருளாளர் உட்பட்ட 15 நிர்வாக சபை உறுப்பினர் கலந்து கொண்ட இக்கூட்டத்தினை திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் கடவுள் வணக்கத்துடன் தொடக்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் மன்ற நிர்வாக நடைமுறைகள், தமிழ், சமய, பிரெஞ்ச், யோகா வகுப்புகள், மன்றத்தின் வரிப்பத்திரம் அரச வருமான வரித்திணைக்களத்தில் சமர்ப்பித்தல், மன்றத்தின் அரச பதிவினைப் புதுப்பித்தல் மற்றும் காரைநகரில் கல்வி வளர்ச்சி, மனிதநேயத்திற்கான உதவி உள்ளிட்ட ஆக்கபூர்வமான பல விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராயப்பட்டிருந்தன.

மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த விவாதங்களின் பின்னர் மன்ற வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையாக அமைந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு:

1) வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட செல்வராசா நிலாமதியின் காது கேட்பதற்கான சிகிச்சைக்கான நிதியுதவியாக இதுவரை 1,535 கனடிய டொலர்கள் மற்றும் 400 அமெரிக்க டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மே 15 வரை சேகரிக்கப்படும் நிதியுடன் அமரர். செல்வி.எஸ்.சிறி நினைவாக மன்றத்தின் பங்களிப்பாக 100 டொலர்களும் மற்றும் அமரர்.பொன். பஞ்சாட்சரக் குருக்கள்; நினைவாக மன்றத்தின் பங்களிப்பாக 100 டொலர்களும் சேர்த்து அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


2) காரை அபிவிருத்தி சபையினால் நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில்  கருத்தரங்கிற்கு ரூ109, 000 நிதி ஒதுக்கப்பட்டது.


3) திரு.தம்பையா அம்பிகைபாகன் (கொழும்பு வலய முன்னாள் ஆசிரிய ஆலோசகர்) அவர்களினால் நடத்தப்படும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக் கருத்தரங்கிற்கு ரூ 43,150 ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.


4) காரைநகர் பிரதேச மருத்துவ மனைக்குத் தேவையான 5 நோயாளர் படுக்கைகள் (Bed with mattress Stainless Steel)கொள்வனவுக்கான நிதியுதவியாக ரூ150,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.


5) வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி) பாடசாலை கணனி அறிவை விருத்தி செய்தல் ரூ68,000 ரூபாவும் ஆங்கில அறிவை விருத்தி செய்தலுக்கு ரூ30,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டது.


6) வியாவில் சைவ வித்தியாலயம் பிரதி எடுக்கும் இயந்திரம் (Photo Copier) கொள்வனவுக்கான நிதியுதவியாக ரூ 56,000 ரூபா ஒதுக்கப்பட்டது.


7) யா-ஊரி அ.மி.த.க பாடசாலைக்கு பொருளாதாரத்தில் பின் தங்கிய கற்றலில் இடர்படும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டத்திற்காக ரூ214,810 ரூபா ஒதுக்கப்பட்டது.


8) பாலாவோடை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ஆங்கில பாட விருத்திக்கான உதவியாக ரூ40,000 ரூபா ஒதுக்கப்பட்டது.


9) தொடக்கப் பாடசாலைகள் ஐந்தின் கற்றல் உபகரணம் (Pin Boards) கொள்வனவிற்காக ரூ60,000 ரூபா ஒதுக்கப்பட்டது.


10) யாழ்ற்றன் கல்லூரி ஆங்கில பாட விருத்திக்கான உதவியாக ரூ200,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


11) கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பல்லூடக அறையை மேம்படுத்தலும், தகவல் தொழில் நுட்பக் கல்வியை அபிவிருத்தி செய்தலுக்குமான திட்டத்திற்கு ரூ13,60,000 ரூபாவிற்கு உள்ளான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   
 
மேற்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் எழுத்தில் பதிவு செய்து ஆவணப்படுத்தப்பட்டதுடன் தீர்மானத்தை உறுதிப்படுத்தி நிர்வாக சபை உறுப்பினர் ஒவ்வொருவரினதும் கையொப்பமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இத்தீர்மானங்கள் மிக விரைவில் நிர்வாக சபையினால் காரை அபிவிருத்தி சபைக்கு ஊடாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டங்கள் அமுல் படுத்தப்படும் பட்சத்தில் காரைநகரில் கல்வித்தர மேம்பாட்டிலும் மனிதநேய உதவிகளிலும் கணசமான பங்கினை வகித்த பெருமை கனடா-காரை கலாச்சார மன்றத்திற்கு உண்டு என்பதோடு கனடா வாழ் காரைநகர் மக்களின் நம்பிக்கையையும் பெற்று மன்றம் வளர்ச்சிப் பாதையில் முன்நோக்கி நகரும் என்பதில் ஐயமில்லை.

 

 

 

 

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம் நேற்று (பெப்.2.2014) அன்று நடைபெற்றது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆண்டுப்  பொதுக் கூட்டம் நேற்று(பெப்.2.2014) அன்று காரை 10:30 மணிக்கு North York Civic Centre  இல் நடைபெற்றது. காலநிலை, மண்டபம் அமைந்துள்ள இடம் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவில் மன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.


தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தனது உரையில் குறுகிய கால தமது நிர்வாக சபைச் செயற்பாடுகளுக்கு உதவிய வணிகப் பெருமக்களுக்கும் மற்றும் உறுப்பினர்கள், நலன்விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மன்றத்தின் நிகழ்வுகள், செயற்பாடுகளில் அனைவரும் பங்குபற்றி ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


செயலாளர் திரு.மார்க்கண்டு செந்தில்நாதன், பொருளாளர் திரு.திருநாவுக்கரசு பேரின்பராஜா ஆகியோர் முறையே 2013 ஆம் ஆண்டிற்கான தமது செயற்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிககை என்பவற்றைச் சமர்ப்பித்த அவை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 


கனடா-காரை கலாச்சார மன்றம் காரைநகரில் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்ற அடிப்படையில் இவ்வாண்டு காரைநகரில் உள்ள பாடசாலைகளின் தேவையை அறிய முற்பட்டபோது, காரைநகரில் உள்ள ஆறு பாடசாலைகளின் கோரிக்கைகள் எமக்குக் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் அவற்றை கடந்த நிர்வாக சபையில்  ஆராய்ந்து அத்திட்டங்களுக்கு உதவுவது என்று தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.


அதன் பின்னர், தாம் காரை அபிவிருத்தி சபையுடன் தொடர்பு கொண்ட போது அத்திட்டங்கள் மேலும் பரீசிலனை செய்யப்பட வேண்டும் எனவும் அதற்காக ஒரு குழுவை நியமித்து அக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் இத்திட்டங்களை நிறைவேற்றலாம் என்றும் சபையில் தெரிவித்தார். 


மன்றத்தில் உறுப்பினாரக விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவருக்கு உறுப்பினர் ஆண்டு சந்தாப்பணம் இருபது டொலர்களாக ($20.00) இருக்கும். உறுப்பினர் பதிவுத்திருமணம் செய்திருப்பின் அவர் மன்ற உறுப்பினராக இருக்கின்ற வரைக்கும் அவருடைய வாழக்கைத் துணையும் எவ்வித கட்டணமுமின்றி எல்லாவித உரிமைகளுடனும் உறுப்பினாராக இருப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.


மன்றத்தின் ஆயட்கால சந்தாப்பணம், யாப்புத்திருத்தப் பிரேரணைகள் விவாதிக்கபட்டன எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இன்னொரு பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கலாம் என்று தலைவரினால் தெரிவிக்கப்பட்டது.


நிர்வாகசபை, போசகர் சபை என்பவற்றில் உள்ள வெற்றிடங்களுக்கான தெரிவும் இடம்பெற்றது. நிர்வாக சபை உறுப்பினராக திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதனும், போசகர் சபை உறுப்பினரர்களாக திரு.ஆறுமுகம் கோடீஸ்வரன், திரு.இராசதுரை இரவீந்திரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


இத்துடன் இப்பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது.    

 

 

கனடா-காரை கலாச்சார மன்றம் பொதுக் கூட்ட அறிவித்தல்

இடம்: North York Civic Centre (Yong & /Sheppard Ave)
 5100 Yong Street, North York, ON M2N 5W4

காலம்: ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 2, 2014 காலை 9:00–12:00 மணி
தலைமை: திரு.தம்பிஐயா பரமானந்தராஜா, மன்றத் தலைவர்

                                                                      நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வணக்கம்
2. அக வணக்கம்
3. தலைவர் முன்னுரை
4. செயலாளர் செயற்பாட்டு அறிக்கை
5. பொருளார் வரவு செலவு அறிக்கை
6. தற்போதய நிர்வாக சபை தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு பொதுச் சபையின் அங்கீகாரம் பெறுதல்
7. மன்ற உறுப்பினர்களின் பிரேரணைகள்
1)யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள் 2)வேறு பிரேரணைகள்
8. மன்றத்தின் எதிர்காலத் திட்டங்கள்
9. வேறு விடயங்கள்
10. உறுப்பினர்களின் கருத்துரைகள்
11. தலைவர் நிறைவுரை
12. நன்றியுரை

முக்கிய குறிப்பு: 29-01-2014ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் யாப்பிற்கான திருத்த பிரேரணைகளும் வேறு பிரேரணைகளும் மட்டுமே பொதுச் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும்

அஞ்சல் முகவரி: P O BOX 32057 MILLIKEN CROSSING PO MARKHAM, ON, M1V 0E1
மின்அஞ்சல் முகவரி: karainagar@gmail.com
தொலைபேசி இலக்கம்: (416)642-4912

2013 ஆம் ஆண்டு மன்றத்தில் உறுப்பினராக இணைந்த அனைவரும் கூட்டத்தில் பங்கு பற்ற முடியும்.

நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

வாகனத் தரிப்பிடம்: ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1:00 மணிவரை மண்டபத்திற்கு வெளயே உள்ள வீதியோர வாகனத் தரிப்பிடங்களில் இலவசமாக உங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும் என்பதனை அறியத் தருகின்றோம்.

குறிப்பு 1: நிலக்கீழ் தொடரூந்தில் வருபவர்களும் North York Centre  நிலையத்திலிருந்து இலகுவாக மண்டபத்தை வந்தடைய முடியும்.

குறிப்பு 2: பிரம்டன், மிசிசாகா ஆகிய நகரங்களுக்கும் ஸ்காபுரோ, மார்க்கம் ஆகிய நகரங்களுக்கும் மத்தியில் இம்மண்டபம் அமைந்துள்ளது.

வாகனத் தரிப்பிடம் பற்றிய முக்கிய அறிவித்தல்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெப்.2,2014 அன்று காலை 9:00 மணிக்கு North York Civic Centre  மண்டபத்தில் நடைபெற உள்ளது.


ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1:00 மணிவரை மண்டபத்திற்கு வெளியே உள்ள வீதியோர வாகனத் தரிப்பிடங்களில் மட்டுமே இலவசமாக உங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும் என்பதனை அறியத் தருகின்றோம்.

 

மண்டபத்திற்கு பின்னால் உள்ள நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்தில் கட்டணம் செலுத்தியே வாகனத்தை நிறுத்தி வைக்க முடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.

 

SUNDAY, FEBRUARY 2nd, 2014 – ANNUAL GENERAL MEETING CKCA – Welcomes Everyone to Participate this Years New Projects, Ideas and Contributions!

 SUNDAY, FEBRUARY 2nd, 2014 – ANNUAL GENERAL MEETING CKCA at the NORTH YORK CIVIC CENTRE – Welcomes Everyone to Participate this Years New Projects, Ideas and Contributions!

northyork

CKCA Updated News

Thank you for staying tuned into Karainagar.com. Our team really appreciates it and you are all most welcome to seeing this website in a more modern and more different style. As of June 23rd, 2013, our newly elected:
President for the CKCA is Mr. Thambyayah Paramanantharajah
Secretary for the CKCA is Mr. Senthilnathan Markandu
Treasurer for the CKCA is Mr. Thirunavakarasu Perinparajah

Our Annual Summer Get Together is going to be held on Saturday, July 20th, 2013 at the Morningside Park in Lot # 7. A lot of fun games, activities and sports for kids and lots of entertainment is planned for you.
In preparation for this event our members will be calling your homes for giving you more information and details regarding our spectacular event that is to be held. Please do help our CKCA members by providing them with the information that they seek for helping us coordinate this event. Your cooperation for this is greatly appreciated. You can now also give your comments and opinions here at karainagar@gmail.com, so please do come forward and share your comments so we can grow as a team. Thanking you all once again from our entire CKCA team!
Thank you.